Wednesday, July 22, 2009

ஒரு மேட்டர் ஜோக்கும் பதிவுலக விடைபெறுதலும்!!!

ஒரு தம்பதியனருக்கு இரு பசங்க, இருவரும் எப்பொழுதும் வீட்டுக்குள்ளேயே இருக்க அவுங்க அப்பா அம்மாவால் குஜாலாக இருக்க முடியவில்லை. அப்பா பெரியவனை கூப்பிட்டு 50 பைசாவும் சின்னவனை கூப்பிட்டு 50 பைசாவும் கொடுத்து போய் மிட்டாய் வாங்கி தின்னுட்டு மெதுவா வாங்கன்னு சொன்னாராம். இருவரும் வெளியில் வந்ததும் பெரியவன் சின்னவனிடம் இங்க வா என்று ஜன்னல் பக்கம் கூட்டிக்கிட்டு போய், பாரேன் இப்ப அப்பா அம்மாவுக்கு முத்தம் கொடுப்பார் என்று 5 பைசா பெட் கட்டினான், சின்னவன் இல்லை என்று பெட் கட்ட ஆனால் நடந்தது பெரியவன் சொன்னது போல்....அப்புறம் இதுபோல் ஒன்று ஒன்றாக பெரியவன் சொல்லிக்கிட்டே வர சின்னவனிடம் இருந்தது மீதி 5 பைசா அதுக்கும் பெரியவன் ஒன்னு சொல்லி பெட் கட்ட அவன் சொன்னது போல நடக்கும் என்று தெரிஞ்சதும் சின்னவன் ஜன்னலுக்கு வெளியில் இருந்து அப்பா அப்பா இருங்க ஒன்னும் செய்யாதீங்க அண்ணன் எல்லா காசையும் புடுங்கிக்கிட்டான் மீதி 5 பைசா தான் இருக்கு இதையும் புடுங்கிடுவான் என்று கத்தி காரியத்தை கெடுத்தானாம். அதுபோல்...

பதிவுலகில் யாராவது விடைபெறுகிறேன் என்று பதிவு போட்டால் நாமும் பெட் கட்டலாம்...

பாரேன் இப்ப ஒரு இருவது முப்பது பேர் ஐயா போவாதீங்கன்னு,அம்மா போவாதீங்கன்னு கண்ணீர் விட்டு கதறுவாங்க... இது முதல் ஸ்டெப்

பாரேன் இன்னும் பாதி பேர் தங்கள் முடிவை மறு பரீசிலனை செய்யனும் என்று சொல்லுவாங்க...இது ரெண்டாவது ஸ்டெப்

உங்கள் அன்புக்கு நன்றி, ஆனால் மிகுந்த மனவுளைச்சலில் இருக்கிறேன் என்று ரிப்ளே வரும் பாரேன்-- இது மூன்றாவது ஸ்டெப்

நீங்கள் இல்லை என்றால் பதிவுலகமே இல்லை--- இது நான்காவது ஸ்டெப்

யோசிக்கிறேன் அல்லது மறு பரீசலனை செய்கிறேன், தங்கள் அன்புக்கு கட்டுப்படுகிறேன்,விரைவில் முடிவை அறிவிப்பேன் --- இது ஐந்தாவது ஸ்டெப்

மறுநாள் அல்லது அதே நாள் ஜப்பானில் ஜாக்கிஜான் கூப்பிட்டாக, அமெரிக்காவில் மைக்கேல் ஜாக்சன் கூப்பிட்டாக என்று ரீதியில் இவர் இவர்கள் எல்லாம் கூப்பிட்டாங்க அதனால் திரும்ப வருகிறேன் எப்பொழுதும் போல் இயங்குவேன் --- இது கடைசி ஸ்டெப்.

*** சில சமயம் சிலபேருக்கு அழுது கண்ணீர் விட்டு கூப்பிட ஆள் இல்லாமல் ஒருசில நாட்களில் முக்காடு போட்டுக்கிட்டு நைசா அப்படியே பதிவுலக ஜோதியில் ஐக்கியமான ஆட்களும் உண்டு அவர்களை நம்பி பெட் கட்டமுடியாது.

*************************

அதுமாதிரியே பிளாக் ஹேக்கிங், இதுக்கு என்ன என்ன ஸ்டெப்ஸ் என்று சரியா சொல்பவர்களுக்கு எலி புலுக்கை முட்டாய்!


முதல் ஸ்டெப் காக்கா தூக்கிக்கினு போச்சு:)

அடுத்து பதிவுகள் மீட்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றன!--விமானம் காணமல் போனா கூட மீட்க நாள் கணக்கில் ஆவும்:)

அடுத்து நண்பர்கள் உதவியால் பதிவுகள் திரும்ப கிடைத்தன என்று செய்தி வரும்.

(இதுக்கு நடுவில் ஹேக்கிங் செய்தி கேட்டு பல பேர் சாப்பிட மனசு இல்லாமல் தூங்காமல் இருப்பது போல் துக்கம் விசாரிப்பார்கள்)

மீண்டும் அனைத்தும் கிடைத்தது! இது அடுத்த ஸ்டெப்! எல்லாம் சுபம்!

இப்பொழுதுதான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் --இது கடைசி ஸ்டெப்பன்ஞ் டயலாக்: சொன்னவன் எவனும் போனது இல்ல, போனவன் எவனும் சொன்னது இல்ல!

72 comments:

said...

அசல் குசும்பன் ஸ்டைல். ஹேக்கிங் பற்றிய அறிவு அவ்வளவு இல்லை.

said...

வட போச்சே.. :(

said...

//அதுமாதிரியே பிளாக் ஹேக்கிங் இதுக்கு என்ன என்ன ஸ்டெப்ஸ் என்று சரியா சொல்பவர்களுக்கு எலி புலுக்கை முட்டாய்!//

ஏன்..? எதுக்கு..? எபப்டி..?

said...

//அதுமாதிரியே பிளாக் ஹேக்கிங் இதுக்கு என்ன என்ன ஸ்டெப்ஸ் என்று சரியா சொல்பவர்களுக்கு எலி புலுக்கை முட்டாய்! //

ஆணியே புடுங்க வேணாம். அப்புறம் ஸ்வீடன், நார்வே, துபாய்ல இருந்து என் ப்ளாகும் ஹேக் பண்ண கிளம்பிடுவாங்க.. :(

said...

அண்ணே... .குசும்பண்ணே..... இப்பிடியெல்லாம் தடால்னு முடிவு பண்ணாதீங்க.... மறு பரிசீலனை பண்ணுங்க.... நீங்க இல்லாம பதிவுலகம் ஸ்தம்பிச்சு போயிடும்... சீகிரம் ஒரு நல்ல முடிவு சொல்லுங்க.....அவ்வ்வ்வ்வ்வ்..

said...

கலக்கல் :))))

said...

:))

said...

கடைசி ரெண்டு கதையை விட முதல் கதை தான் செம குஜால்!

said...

//இது கடைசி ஸ்டெப்//

:)

said...

திடீர் வேகத்துல பெரியாளு ஆவனும்னா பை பதிவு தான் போல.

நான் வேணும்ணா வடை பெறுகிறேன்னு ஒரு பதிவு எழுதட்டுமா மாப்பி ?
( போயி தொலைடான்னுல நீ முதல் பதிவு எழுதுவ? அதான் யோசிக்க வேண்டியிருக்கு).

அப்ப how about hacking? ஒரு நல்ல யோசனை சொல்லு மாப்பி. நானும் எப்பதான் பிரபலமாகிறது?

said...

//
அப்பா அப்பா இருங்க ஒன்னும் செய்யாதீங்க அண்ணன் எல்லா காசையும் புடுங்கிக்கிட்டான் மீதி 5 பைசா தான் இருக்கு இதையும் புடுங்கிடுவான் என்று கத்தி காரியத்தை கெடுத்தானாம்
//

எந்த காரியத்தை’னு சொல்லலியே தல.. கொஞசம் விளக்கி சொன்னீங்கன்னா.. என்ன மாதிரி அப்பாவி சனம் புரிஞ்சுக்குமில்லையா.. :)

said...

//how about hacking? ஒரு நல்ல யோசனை சொல்லு மாப்பி. நானும் எப்பதான் பிரபலமாகிறது? //

நான் சொல்ற மாதிரி கேளுங்க!

உங்களை நீங்களே மகா மட்டமா திட்டி ஒரு பதிவு உங்க ப்ளாக்குல போடுங்க! பின் ஒரு நாள் கழிச்சு அது நான் எழுதியதல்ல, யாரோ ஹேக் பண்ணி போட்டாங்க சொல்லுங்க! அடுத்த உலகம் முழுவதும் கவனிக்கப்படும் பதிவர் நீங்க தான்!


(சும்மா லுலுலாயிக்கு)

said...

குசும்பா, இந்தப் பதிவை எப்போ நீக்கப் போற?

said...

Office la irukurathala satham pottu sirikka mudiyala... :)
By the way neegha yeppo vidai pera poreengannu aavala kathutu iruken... :)

said...

அது சரி, கிளம்புகிறேன் எனச் சொல்லிச் சென்றவர்களைப் போல நீங்க எழுதியதையும் நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளலாம்.

பதிவுகள் எழுதும் பலர் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள் என்பதை மறுக்க இயலாது. எந்த ஒரு விசயத்தையும் யோசிக்காமல் நடந்த ஒரு நிகழ்வை வைத்தே அவர்கள் முடிவுக்கு வந்து விடுகிறார்கள். இதற்கு எத்தனை பேர் ஆதரவு, எத்தனைப் பேர் எதிர்ப்பு என்பதெல்லாம் பிரச்சினையில்லை. மனம் புண்பட்டுவிட்டது, உடனே அதை வெளிப்படுத்த வேண்டும். எனவே ஒரு பதிவு. நாமும் படிக்கிறோம், நமக்குள் ஒரு உணர்வு உடனே ஒரு பின்னூட்டம்.

சக மனிதனுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் எனும் குறைந்த பட்ச ஆசைதான் ஒவ்வொருவருக்கும். பல நேரங்களில் அட என்ன விளையாட்டு இது என்றுதான் இருக்கும்.

நீங்கள் எழுதியிருக்கும் அந்த கடைசி வரிகள் அசத்தல். பதிவர்கள் கவனத்திற்கு என போட்டுவிடலாம்.

said...

எப்பண்ணே சீரியசா எழுத ஆரம்பிச்சீங்க?

மிடில் ஒன் ஜூப்பரு!!

said...

ஹா.ஹா.ஹா.

இனிமே யாராவது ‘விடை பெறுகிறேன்' பதிவு போடறதுக்கு முன்னாடி, ஒரு வினாடியாவது யோசிப்பாங்க. :)

said...

ஓஹோ..அப்படியா செய்தி..

said...

அப்பாடா...இதில் எந்த லிஸ்டிலும் நான் இல்லை.

:))

said...

// எம்.எம்.அப்துல்லா said...

அப்பாடா...இதில் எந்த லிஸ்டிலும் நான் இல்லை.//


நீங்க சினிமா பிரபலம்ணே, நாங்க பொடி பயலுக கண்டுக்காதிங்க, சினிமருது, திரைசித்ராவுல உங்களை பத்தி கிசுகிசு வந்துருக்கான்னு பாருங்க!

said...

// எம்.எம்.அப்துல்லா said...

அப்பாடா...இதில் எந்த லிஸ்டிலும் நான் இல்லை.//

மாமா.. பதிவை எழுதி அழிச்சி விளையாடறதையும் இதுல சேர்த்துடு மாமா.. ரொம்ப ஆசைப்படறார்.. ;))

said...

எம்.எம்.அப்துல்லா said...

அப்பாடா...இதில் எந்த லிஸ்டிலும் நான் இல்லை.
//பதிவு போட்டுட்டு தூக்குற வேலையெல்லாம் விட்டுடனும் இல்லையா அதுக்கும் ஒரு பதிவு வரும் :)

said...

புத்திசாலிகள் ஒரே மாதிரி சிந்திப்பாங்களாம்

ஹி ஹி ஹி

சன்செய் மச்சான்ஸ்

said...

பன்ஞ் டயலாக்: சொன்னவன் எவனும் போனது இல்ல, போனவன் எவனும் சொன்னது இல்ல!
//

செல்லம்
இந்த சினிமாகராங்கதான் பன்ஞ்சர் டயலாக் சொல்லி சாவடிக்கிறாங்கன்னா நீனுமா செல்லம்

:(

said...

நமி டார்லிங்.. நாம தான் ஒன்னுக்குள்ள ஒன்னாச்சேடி செல்லம்.. உன் அகில ஒலக ரசிகர் மன்றத்தின் ஒரே தலைவன் நான் தானே.. இது கூட ஒத்து போகலைனா எப்டி? :)

said...

அக்க.. எலுப்புலுக்கை மிட்டாயோட சேர்த்து குரங்குப்... லேகியத்தையும் சேர்த்துக்கங்க :))

அக்மார்க் குசும்பு :))

said...

ஐயா போவாதீங்க,அம்மா போவாதீங்க

said...

:)))))))))

said...

Protocol and Formalities are optimised.

Nice!

said...

குசும்புன்னா இது குசும்பு :))

said...

அருமை, உண்மை, நேர்மை கருமை எருமை
:)

said...

குசும்பன் அப்டீங்கற பேருக்கு யேத்த அழும்புதான் பண்றீங்க..!

said...

// வரவனையான் said...

அருமை, உண்மை, நேர்மை கருமை எருமை//

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜோதியில் குதித்த அண்ணன் வரவனையானை 58வது வட்டம் சார்பில் வரவேற்கிறோம்

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
said...

வடை பெற்ற நீங்கள் எப்ப விடை பெறுவீங்க...

said...

கொஞ்சம் ஓவரா கலாய்ச்ச மாதிரித் தோணுது. Gtalk ல் இன்வைட் பண்ணிருக்கேன். பார்த்து சேர்த்துக்குங்க.

ஸ்ரீ....

நமிதா..! said...

கீழை ராஸா said...

வடை பெற்ற நீங்கள் எப்ப விடை பெறுவீங்க...
//


வடை பெற்ற நீங்க எல்லாம் விடை பெற்ற பிறகு..!!


குசும்பன் வீட்டிலிருந்து நமிதா குசும்பனுக்காக :)

said...

அண்ணே நான் ஏதோ சாதா காபி , டீ அடிப்பேன்... நீங்க காப்பசினோ அது இதுன்னு எங்கோயோ போய்ட்டீங்க !!!!!!!!

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
said...

//பன்ஞ் டயலாக்: சொன்னவன் எவனும் போனது இல்ல, போனவன் எவனும் சொன்னது இல்ல!//
:-)))))))))

said...

\\வால்பையன் said...

// எம்.எம்.அப்துல்லா said...

அப்பாடா...இதில் எந்த லிஸ்டிலும் நான் இல்லை.//


நீங்க சினிமா பிரபலம்ணே, நாங்க பொடி பயலுக கண்டுக்காதிங்க, சினிமருது, திரைசித்ராவுல உங்களை பத்தி கிசுகிசு வந்துருக்கான்னு பாருங்க!\\

:))))))))

said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

அப்ப வால்பையன் தான் ’அவரா’..?

said...

//Anonymous said...
அப்ப வால்பையன் தான் ’அவரா’..?//


அண்ணே நான் வால்பையன் மட்டும் தான்!
எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை!

said...

;)))

கருத்துள்ள கதைகள் ;)

தொடர்ந்து எழுதுங்கள்...!!

said...

அய்யா அனானிங்களா உங்கள் ஆசையை தனிக்க இடம் இதுவல்ல, உங்களுக்கு யார் மேல் காண்டோ அவர் பதிவில் போய் கமெண்ட் போட்டுக்கொள்ளுங்கள்!

கமெண்ட் மாடுரேசன் போடப்படுகிறது!

said...

ஹய்யோ! ஹய்யோ!!
இனி யாராவது பதிவுக்கு டா டா காட்டுவாங்க? ஹி ஹி

said...

நெசமாவே நீங்க போகலையா ...


ரொம்ப ஆசைய வந்தேனே

அய்யா போகாதீங்கன்னு சொல்றதுக்கு


ஒரு பொய் சொல்லும் வாய்ப்பு போயிடிச்சே ...

said...

you can delete those 'deleted' comments permanently ...


(assuming you may not know)

said...

அனானிங்க, கொசுத் தொல்லை ஜாச்தியாயிடுச்சு போல!

நானும் பிரபல பதிவராகுரதுக்கு வழி சொல்லுங்கண்ணே!
(புண்ணாக்கு விக்கிறவனெல்லாம் தொழிலதிபராம் என்ற கவுண்டமணி ஜோக்குக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல)

said...

:)
;)
குசும்பன் touch..

said...

இது பிரபல....பதிவர்களுக்கு மட்டுந்தானே?

said...

கலக்கல் தலைவா...

said...

பதிவுலகில் யாராவது திறமையாக எழுதினால் நாமும் பெட் கட்டலாம்...

பாரேன் இப்ப இவ்வளவு நாளா வெறும் மொக்கை மட்டும் எழுதி, சரக்கு ஒன்றும் இல்லாத வெத்து தோட்டாக்களின் வயிற்றில் பொறாமையால் அதிக அமிலம் சுரக்கும்.. இது முதல் ஸ்டெப்

முதலில் அவர் பதிவை கண்டுகொள்ளாமல் மறுமொழி போடாமல் உதாசீனப்படுத்தப்பார்ப்பார்கள்... இது ரெண்டாவது ஸ்டெப்

அவரை சீண்டி அவர் வலையில் எழுதுவை நிறுத்துவாரா என்று பார்பார்கள்-- இது மூன்றாவது ஸ்டெப். பலர் இதிலேயே மிரண்டு ஓடி விடுவார்கள்

அப்படியும் ஓட வில்லை என்றால் அவரது பெயரில் போலி கமெண்ட்கள் வரும்... இதில் மிரண்டு போய் ஓடு விடுவார் --- இது நான்காவது ஸ்டெப்

அப்படியும் ஓட வில்லை என்றால் எவண்டா இவன் என்று ஒரு போலிப்பதிவு ஆரம்பிக்கப்படும் --- இது ஐந்தாவது ஸ்டெப். அந்த பதிவர் ஓடியே விடுவார்

ஆனால் அவர் ஓடாமல் சைபர் கிரைமில் புகார் அளித்தால் அந்த பதிவு அழிக்கப்படும். இது ஆறாவது ஸ்டெப்

said...

அது சரி - 5 பைசாவுக்காக காரியத்த நிறுத்தணுமா - ஒர் 50 பைசாவத் தூக்கி சன்னல் வழியாப் போடலாமே

said...

//cheena (சீனா) said...
அது சரி - 5 பைசாவுக்காக காரியத்த நிறுத்தணுமா - ஒர் 50 பைசாவத் தூக்கி சன்னல் வழியாப் போடலாமே
//

அதானே

:)))))))))))))))))))))
:)))))))))))))))))))))
:)))))))))))))))))))))
:)))))))))))))))))))))
:)))))))))))))))))))))
:)))))))))))))))))))))
:)))))))))))))))))))))
:)))))))))))))))))))))
:)))))))))))))))))))))
:)))))))))))))))))))))
:)))))))))))))))))))))
:)))))))))))))))))))))
:)))))))))))))))))))))
:)))))))))))))))))))))

said...

விடை பெறுவதற்கும் மீண்டும் வருவதற்குமான இடுகை டெம்ப்ளேட்டுக்கள் விற்றால் நல்லா வியாபாரம் நடக்கும்ன்னு நினைக்குறேன்....
:P

said...

Intha Joke chinna vayasulae school padikkum pothae therincha joke ethachum puthusa solluvinga nu partha ;) illai same old joke... Kaalam mari pochu thalaiva youtha puthusa solunga

puthusa oruthan elutha arambichana avan group a pottu thakkuvom athu,eppadiyachu avan odidanum ;)

;) ithula unga kusumbu illamala

Tamil font illai..

said...

அய்யய்யோ என்னாச்சு?? என்னால ரெண்டு நாளா சாப்பிட முடியல... பதிவ விட்டு போய்டாதிங்க.

said...

வயித்த வலிக்குது குசும்பா... முடியலை..

தோழமையுடன்
பைத்தியக்காரன்

said...

mudiyalla

said...

இந்த கதைகள்ல நீங்க இப்போ எந்த ஸ்டெப்ல இருக்கீங்க?

said...

:)))

said...

:--)))

said...

கொஞ்சம் குசும்பு அதிகம்தான் உங்களுக்கு...

---இரவுப்பறவை

said...

:)))))))))))))))))))))
:)))))))))))))))))))))
:)))))))))))))))))))))
:)))))))))))))))))))))
:)))))))))))))))))))))
:)))))))))))))))))))))
:)))))))))))))))))))))
:)))))))))))))))))))))
:)))))))))))))))))))))
:)))))))))))))))))))))
:)))))))))))))))))))))
:)))))))))))))))))))))
:)))))))))))))))))))))
:)))))))))))))))))))))

said...

சோக்கு !! பன்ச் தலீவா , நா கூட அடிக்கடி இந்த மேரி கதைய
கேக்கிறேன் !! போனா , போய்க்கினே இரு அதுக்கு கூட ஒரு பதிவு போட்டு , வடை , சீ , விடை
பெறுவியா நீ ? சூப்பர் பா !! அட கொய்யாலே ( ^ _ ^ )

said...

அடங்கொப்பா.....
இது உலக நடிப்புடா சாமி....(கவுண்டமணி)
ஓவர் குசும்பால இருக்கு.....

said...

வந்தியத்தேவன் நன்றி

சஞ்சய் நன்றி

நாடோடி இலக்கியன் நன்றி

மகேஷ் அண்ணாச்சி கிளப்பிவிட்டுவிடுவீங்க போல

நன்றி ஆயில்

நன்றி சிபி

நன்றி வால்

நன்றி கோவி

சோசப்பு பை மஞ்ச பையா? இல்ல சாக்கு பையா?

ஆளவந்தான் நன்றி சின்ன பையன்களை கெடுக்கவிரும்பவில்லை!

நன்றி UM, ரொம்ப நல்ல மனசு உங்களுக்கு நற நற!

நன்றி இராதகிருஷ்ணன் நீங்க சொல்வதும் சரிதான்:)

நன்றி கலை

நன்றி வீரா

நன்றி வினோத்

அப்துல்லா நீங்க எல்லாம் பெரும் பிரபலம் இதில் வரமாட்டீங்க:)

நன்றி நமிதா

நன்றி செந்தில்வேலன்

நான் ஆதவன் நன்றி

நன்றி ஜோதிபாரதி

வரவனை அண்ணா ஏன் இப்படி திட்டுறீங்க:)

நன்றி மங்களூர்

நன்றி நேசமித்ரன்

நன்றி சென்ஷி

நன்றி கீழைராஸா

நன்றி ஸ்ரீ

நன்றி சுந்தர்

நன்றி ஜோ

நன்றி நிகழ்காலத்தில்

நன்றி கோபி

நன்றி அபு அஃப்ஸர்

என்ன ஒரு நல்ல எண்ணம் உங்களுக்கு ஜமால்?

நன்றி பப்பு

நன்றி லோசப்

நன்றி Vipoosh

நன்றி நர்சிம்

நன்றி எலி

நன்றி சீனா

நன்றி சுப்பு

நன்றி நாஞ்சில் நாதம்

நன்றி ஜெகதீசன்

புதுபதிவர்கள் அசோசியேசன் தலைவர், பாலூட்டி சோறுட்டி புதுபதிவர்களுக்காக தாங்கள் வாழ்வை அர்பனித்த சுரேஷ் தாங்கள் வருகையால் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்!நீங்க எது சொன்னாலும் அது சரியாகதான் இருக்கும். நன்றி!


நன்றி விக்கி

நன் பைத்தியக்காரன் அண்ணாச்சி

நன்றி தமிழ் காதல்

நன்றி பீர்

நன்றி Annam

நன்றி கும்க்கி

நன்றி இரவுப்பறவை

நன்றி கார்த்திக்

நன்றி டவுசர் பாண்டி

நன்றி பிரவின் குமார்

said...

நன்றி துணை தலைவரே

said...

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

said...

நன்றி செல்வேந்திரன்