Sunday, September 28, 2008

இவர்களுக்கு மரணதண்டனை கொடுக்க கூடாது!

மரண தண்டனை கூடாது என்றும் இல்லை இன்னும் தண்டனை கடுமையாக வேண்டும் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள், இங்கு(அமீரகத்தில்) குற்றங்களே நடக்கவில்லை என்று சொல்லமுடியாவிட்டாலும் தண்டனைக்கு பயந்து குற்றங்கள் குறைந்த அளவிலே நடக்கின்றன.

இரு தினங்களுக்கு முன் ஒரு செய்தியை காண நேர்ந்தது, இருவயது குழந்தையை ஒரு ***மகன் பணத்துக்காக கடத்தி அந்த குழுந்தையை கால்களை பிடித்து ரெயில் தண்டவாளத்தில் தலையை அடித்து கொன்று இருக்கிறான். குழந்தை மூளை சிதறி இறந்து இருக்கிறது, தலை முகம் என்று உரு தெரியாத அளவுக்கு மாறி இருந்து இருக்கிறது, மனதில் வன்மம் எத்தனை இருந்தால் இப்படிப்பட்ட செயலை செய்ய அவனுக்கு மனது வரும்?


நேற்று டெல்லியில் பைக்கில் வந்த இருவர் பையை கீழே விட்டு செல்வதை கண்ட சிறுவன் எடுத்து அவர்களிடம் கொடுக்க ஓடும்பொழுது குண்டு வெடித்து பலியாகி இருக்கிறான். இப்படி எல்லாம் செய்பவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்.

ஒரு சாரார் சொல்வது போல் இதுபோல் செயல்களுக்கு மரண தண்டனை கொடுக்க கூடாது. ஒரு நொடியில் செத்துவிட்டால் அவனுக்கு மற்றவர்களின் வலி தெரியாது. கையை கட்டி விட்டு கொஞ்சமாக ஆண் குறியை வெட்டி விட்டவேண்டும். புண் ஆறுவதற்கு எந்த மருந்தும் தரவும் கூடாது . வேண்டும் என்றால் அதில் மிளாகய் தூளை வேண்டும் என்றால் கூட தடவி விடலாம், தினம் தினம் அந்த வலியாலே அவன் சாகவேண்டும் அப்பொழுதுதான் தவம் இருந்து பெற்ற குழந்தையை இழந்த தாயின் வலி புரியும்.

யார் எங்கு குண்டு வைத்தால் என்ன எவன் எந்த ஏசு சிலையை இடித்தால் என்ன, எவன் கோயிலில் சிலைகளை உடைத்தால் என்ன, இரு மத மக்களும் அடிச்சுக்கிட்டு, வெட்டிக்கிட்டு செத்தால் எவனுக்கு என்ன நஷ்டமாபோச்சு, நமக்கு பதவியும், நாளை அணு ஆயுதஒப்பந்தமும் கையெழுத்து ஆனால் போதும்.

34 comments:

said...

மீ த ஃபர்ஸ்ட்டு

said...

என்ன சொல்றது தல.. அசிங்கமாத்தான் வருது..

said...

///யார் எங்கு குண்டு வைத்தால் என்ன எவன் எந்த ஏசு சிலையை இடித்தால் என்ன, எவன் கோயிலில் சிலைகளை உடைத்தால் என்ன, இரு மத மக்களும் அடிச்சுக்கிட்டு, வெட்டிக்கிட்டு செத்தால் எவனுக்கு என்ன நஷ்டமாபோச்சு, நமக்கு பதவியும், நாளை அணு ஆயுதஒப்பந்தமும் கையெழுத்து ஆனால் போதும்.////
:(

said...

பணக்காரர்களுக்கு ஒரு சட்டம், ஏழைகளுக்கு ஒரு சட்டம் என்பதும், தண்டனையைப் பற்றிய பயம் இல்லாமல் போனதுமே இதற்குக் காரணம்.. திருத்த முடியும் என்று தோன்றவில்லை... :(( எங்கே சென்று முடியும் என்று கவலையாக இருக்கிறது.

said...

//நமக்கு பதவியும், நாளை அணு ஆயுதஒப்பந்தமும் கையெழுத்து ஆனால் போதும்//

:(

said...

கையை கட்டி விட்டு கொஞ்சமாக ஆண் குறியை வெட்டி விட்டவேண்டும். புண் ஆறுவதற்கு எந்த மருந்தும் தரவும் கூடாது .
//

அத படிச்சப்போ இதேதான்யா நானும் நினைச்சேன்

said...

நான் அந்த செய்தியின் தலைப்பை மட்டுமே படித்தேன். டீடெல்ய்ஸ் படிக்க மனம் இட தரவில்லை :(

தலைப்பைப் படித்தவுடனே என்னால் முடிந்தது எனக்குத் தெரிந்த கேவலமான கெட்ட வார்த்தைகளால் அவனை திட்டுவதுதான். திட்டினேன்.

said...

குசும்பன் கோபமாக பதிவு எழுதுவதை இப்பதான் படிக்கிறேன். :(

ஞாயமான கோபம் தான்

said...

:(

என்ன சொல்வது அண்ணன்.... வாழ்வதற்கும் கொண்டாடுவதற்கும் எவ்வளவோ இருக்கிறது பூமியில் ஆனால் மனிதர்கள் ஏனிப்படி இருக்கிறார்கள்... எங்கடை நாட்டைப்பற்றி யோசித்தாலும் இதுதான் தோன்றுகிறது...

said...

\\

யார் எங்கு குண்டு வைத்தால் என்ன எவன் எந்த ஏசு சிலையை இடித்தால் என்ன, எவன் கோயிலில் சிலைகளை உடைத்தால் என்ன, இரு மத மக்களும் அடிச்சுக்கிட்டு, வெட்டிக்கிட்டு செத்தால் எவனுக்கு என்ன நஷ்டமாபோச்சு, நமக்கு பதவியும், நாளை அணு ஆயுதஒப்பந்தமும் கையெழுத்து ஆனால் போதும்.
\\

இதுதான் ஆகக்கொடுமை...:(

said...

நண்பா,
உனது கோபத்தை நானும் வழிமொழிகிறேன். உடம்பு முழுக்க கொஞ்சம் கொஞ்சமாய் கத்தியால் கீறி மிளகாய் தூளை போடுவது, கொதிக்கும் எண்ணெய்யை சிறிய துவாரம் வழியாக நடு நெற்றியில் சொட்டு சொட்டாக விழ செய்வது போன்ற தண்டணைகளை கொடுக்கலாம்.

said...

:-((((((

Anonymous said...

குசும்பா,

உன் அறச்சீற்றம் புரிகிறது. ஏதும் செய்ய லாயக்கற்றவர்களாக இருக்கிறோம். என்ன செய்ய.

said...

உண்மைதான்...
நீங்கள் வெகுண்டெழுந்தது நியாயம்தான்!

பீகாரைப்போல தப்பு செய்பவர்களை
ஊர்க்காரர்களே கொன்னால்தான் சரியா வருமோ?
சட்டமாவது....? ஒண்ணாவது!

said...

உங்கள் கோபம் மிகவும் நியாயமானது !

said...

மரண தண்டனை கூடாது என்றும் இல்லை இன்னும் தண்டனை கடுமையாக வேண்டும் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள், இங்கு(அமீரகத்தில்) குற்றங்களே நடக்கவில்லை என்று சொல்லமுடியாவிட்டாலும் தண்டனைக்கு பயந்து குற்றங்கள் குறைந்த அளவிலே நடக்கின்றன.
//


இங்கே நகை கடையெல்லாம் கண்ணாடியிலேயே இருந்தும் உடைக்க முடியாவில்லை என்றால் பயம் தவிர வேறு காரணம் இருக்கமுடியாது

அங்க எத்துனை லாக்கர் போட்டாலும் பயத்தோட தான் தூங்கனும்

சட்டம் கடுமையாக இருக்கனும்

முக்கியாமா நேர்மையாகவும் அரசியல் தலையீடு இல்லாமலும் இருக்கனும்


வெண்பூ சொல்வதையே இங்கே ரிப்பிட்டிக்கிரேன் படிக்க முடியல :(


(ரொம்ப நாளு கழிச்சு சொந்த பெயரில் :))

said...

புண் ஆறுவதற்கு எந்த மருந்தும் தரவும் கூடாது . வேண்டும் என்றால் அதில் மிளாகய் தூளை வேண்டும் என்றால் கூட தடவி விடலாம், தினம் தினம் அந்த வலியாலே அவன் சாகவேண்டும் அப்பொழுதுதான் தவம் இருந்து பெற்ற குழந்தையை இழந்த தாயின் வலி புரியும்.ஃஃஃ

யாரங்கே...இந்த தீர்ப்பை சட்டப்புத்தகத்தில் ஏற்றுங்கள்...

said...

:(

காவாலிப் பசங்க.

பிடிச்சுட்டாங்களா அந்த பொறம்போக்கை? எந்தக் காவல் நிலையத்தில் வச்சிருக்காங்களோ, அங்க இருக்கர போலீஸ்காரருக்கு, இந்தப் பதிவை ப்ரிண்ட் போட்டு அனுப்பி வைக்கணும்.

ஆனா, அந்த நாய்ப்பயலை என்ன அடிச்சு என்ன ஆகப் போவுது இனி?
அட்லீஸ்ட், உடனே தீர விசாரித்து, குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை உடனே கொடுத்து, மீடீயால அதை விளம்பரப் படுத்தணும்.

இதப் பாத்தாவது, ஷார்ட்-கட்ல துட்டு சேக்க நினைக்கும், மத்த காவாலிகளுக்கு பயமாவது வரணும்.

Anonymous said...

குசும்பன் அவர்களே,

உங்கள் பதிவைப் படித்ததும் ஷங்கர் பட அந்நியன் ஞாபகம் வருகிறார்.
இந்த மாதிரி தவறு செய்பவர்களுக்கு எல்லாம் கும்பிபாகம், கபீம் குபாம் Treatments தான் சரி வரும் போல.

தப்பு பண்ணனும்னு நினைக்கிறவங்களுக்கு தண்டனை தான் முதலில் ஞாபகம் வரணும்.
'டவுசர அவுத்து வுட்டு மிளகாய் பொடி தூவிருவானுங்கடி' ன்னு தெரிஞ்சாதான் எவனும் தப்பு பண்ணவே யோசிப்பான்.

said...

வெண்பூ சொன்னதுபோலதான் எனக்கும் நிகழ்ந்தது. தலைப்பைப் பார்த்ததுமே ‘ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்' என்று பதறி பக்கத்தைத் திருப்பிவிட்டேன். அந்த ***யை நாலுவார்த்தை திட்டிவிட்ட மபின்னும் கொஞ்ச நேரத்துக்கு மனது அலைபாய்ந்து கொண்டுதான் இருந்தது.

கிண்டலுக்காக சொல்லவில்லை.. இவ்வளவு சீரியஸாக, கோபமாக உங்களையே பதிவு எழுதவைக்குமளவு சம்பவங்கள் நடப்பது மிகுந்த வருத்தத்தையே தருகிறது.

நம்ம அப்துல்லா, ஹிதேந்திரன் பெற்றோர் போன்ற மனிதர்களுக்கு நடுவே இப்படியும் சில மிருகங்கள்!

ச்சே!

said...

நீங்க சொல்லுறதோட இதையும் சேத்தா நல்லது,
அவங்களுக்கு எல்லாம் நல்ல காய் அடிச்சு விடவேண்டும்

said...

\\மனதில் வன்மம் எத்தனை இருந்தால் இப்படிப்பட்ட செயலை செய்ய அவனுக்கு மனது வரும்?\\
உண்மைதான், சிபார்சு செய்யப்பட்டிருக்கும் குற்றத்திற்கான தண்டனைகளைப் பார்க்கும்போது நமது மனங்களிலும் எவ்வளவு வன்மம்...????????

said...

:(:(:(

Anonymous said...

//உண்மைதான், சிபார்சு செய்யப்பட்டிருக்கும் குற்றத்திற்கான தண்டனைகளைப் பார்க்கும்போது நமது மனங்களிலும் எவ்வளவு வன்மம்...????????//

சங்கர் ......
இதில் வன்மம் எங்கு உள்ளது. தப்பு செய்தவன், அதை நடத்திய விதத்தைப் பார்க்கும்பொழுது அல்லது கேட்கும்பொழுது மனதில் பொங்கியெழும் உணர்வுகளை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது.

அவனை தண்டிக்க நாம் யார் என்ற கேள்வி எழலாம். மனித மனம் ஒரு விசித்திர உணர்வுகளின் பிறப்பிடம். பாசத்திற்கு தலை வணங்குவதும், அக்கிரமத்திற்கு எதிராக புரட்சி செய்ய சொல்வதும் நம் மனமே.

அதே போல் தான் இதுவும். ஒருவன் தவறு செயும்பொழுது அதற்கான தண்டனையை அவன் பெற வேண்டும் என நினைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்.

அவனை ராஜ மரியாதையுடன் கோர்ட்டுக்கு கொண்டு வந்து, அமைதியான முறையில் நியாயமான தண்டனை வழங்க வேண்டும் என்று சொல்கிறீர்களா ?

வாழ்க ஜனநாயகம் !

said...

:(

Anonymous said...

Mr.சங்கர்...

மனிதன் மனிதனை கொலை செய்ய இயலாது.

மதம் கொண்ட யானைக்கு அங்குசம் உதவாது....

வெறி கொண்ட மிருகம்(சிங்கம், புலி, சிறுத்தை...) ஒரு மனிதனை குதறினால்....
அதுவே ஒரு குழந்தையானால் சுட்டுத்தள்ளு வேறென்ன?

Dr.-BGL

said...

நியாயமான கோபம் தான்!
என் பங்கிற்கு பத்து கிலோ மிளகாய் பொடி தருகிறேன்

said...

இதர்கெல்லாம் மிகக் கொடுமையான( கடுமையான அல்ல) சட்டங்கள் இயற்ற வேண்டும்.. அதர்கு முதலில் காசுக்கு ஓட்டுப் போடும் பழக்கத்தை ஒழிக்க வேண்டும். அப்போ தான் தகுதி உள்ளவர் ஜெயித்து எதுனா உருப்படியா நடக்கும்...

எச்சரிக்கை : இந்தியா உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு.. அதாவது எதையும் சகித்துக் கொள்ள வேண்டிய நாடு.. :(

said...

குசும்பா என்ன இது?

ஒரு நல்ல மனநிலையில் இருக்கும் எந்தவொரு நபரும் இது போன்ற பைத்தியக்காரத்தனமான, கொடூரத்தை செய்ய மாட்டார்கள்..

மனநலசிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர் இந்த நபர்.. மரண தண்டனை என்பதெல்லாம் திட்டமிட்டு செய்யும் படுகொலைகளுக்கு மட்டுமே.. இது போன்ற மனப்பிறழ்வால் பாதிக்கப்பட்டு நொடியில் முடிவெடுத்து செய்பவர்களுக்கு அல்ல..

said...

அனைவருக்கும் நன்றி!

*****************************
சங்கர் இன்று நம்புகிறேன் காந்தி உங்கள் உருவில் இன்னும் வாழ்ந்துகொண்டு இருப்பதாக. பரிந்துரை செய்து இருக்கும் தண்டனைகள் என்னை பொருத்தவரை மிகவும் குறைவுதான் இதுபோல் செயலிப் ஈடுபடுபவர்களுக்கு.

****************************
உண்மை தமிழன் அண்ணே இவன் ஏதோ கோவத்திலோ அல்லது ஒரு நொடியிலோ இதை செய்யவில்லை, இரண்டு மணி நேரமாக போன் செய்து பணம் கொடுக்காவிட்டால் கொன்று விடுவேன் கொன்று விடுவேன் என்று மிரட்டி செய்துஇருக்கிறான்.

said...

ஐயா அப்படி ஒன்றும் காந்தீயவாதி இல்லை. இதே கோவம் குரூரம் எனக்குள்ளும் இருக்கிறது. செய்தற்கான தண்டனை இருக்கு. ஆனால் இப்படியான தண்டனை மட்டும் இன்னொருவன் உருவாவதை தடுக்குமா????

said...

அரபு நாட்டுக்கு வந்து அரபிகள் போலவே கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்று சொன்னால் எப்படி? காந்தி பிறந்த தேசக்காரரர் இப்படி பேசலாமா?
:)) :(
(சிவாஜி மாதிரிங்னா)

said...

/நான் அந்த செய்தியின் தலைப்பை மட்டுமே படித்தேன். டீடெல்ய்ஸ் படிக்க மனம் இட தரவில்லை :(//

எங்கே போகிறோம் என்று தெரியவில்லை

said...

///
***மகன
///

நியாயமா இந்த வார்த்தைக்கு நாலு ஸ்டார் போட்டிருக்கனும்...

:D