Thursday, October 9, 2008

என்னோட பாஸ்க்கு எல்லோரும் தந்தி அனுப்புங்க!!!

கடந்த பத்து நாட்களுக்கு மேலாக வலைப்பக்கம் வரமுடியாத அளவுக்கு வேலை, புதுசாக என்னை நம்பி Kodek NexPress s3000 என்ற மெசினை வாங்கி இருக்கிறார் என் டைரக்டர். அதன் மதிப்பு சுமார் 4 1/2 கோடி ஒரு 7 மீட்டர் நீளமும் 3 மீட்டர் அகலமும் உள்ள மெசின் மூன்று பகுதியாக வந்தது அதை பிக்ஸ் செய்ய வந்தது ஜெர்மனியில் இருந்து ஒரே ஒரு ஆள். அதை பற்றி தனி பதிவாக எழுதுகிறேன். வேறு இடத்தில் இதை வைக்கலாம் என்ற பொழுது அழுது அடம்புடிச்சு இங்கேதான் வைக்கனும் என்று சொல்லி வாங்கி வைத்த பிறகு வைக்க இடம் இல்லாமல் என் ரூமையும் இடித்தார்கள், வைத்த பிறகு அதுக்கு டிரைனிங் அது இதுன்னு ஆப்பு மேல் ஆப்பு, இதுக்கு பேருதான் சொ.செ.சூ போல! என்னை வேலை மேல் வேலை வாங்கும் என் பாஸ்க்கு என்னை பிரியாக விடும் படியும் கும்மி அடிக்க கை குறைகிறது என்றும் உடன்பிறப்புகளே தந்தி அனுப்புங்க.

இரு நாட்களுக்கு முன்பு காலை 5 மணிக்கு எல்லாம் டாக்ஸி பிடிச்சு ஆபிஸ் வரும் பொழுது டாக்ஸி டிரைவருக்கு பணம் கொடுத்துவிட்டு பர்ஸை உள்ளே வைக்கும் பொழுது அது தவறி டாக்ஸியிலேயே விழுந்துவிட்டது, கவனிக்காமல் பஸ் ஏற போன பிறகுதான் பர்ஸ் இல்லாதது தெரியவந்தது அதுக்குள் டாக்ஸியும் போய் விட்டது.பஸ் ஸ்டாண்டில் இருக்கும் அலுவலகத்தில் போய் சொல்ல போனேன் அங்கு இருந்தவனுங்களுக்கு ஆங்கிலத்தில் டாக்ஸி என்ற வார்த்தை மட்டும் தான் தெரியும் போல இருக்கு, டாக்ஸி???? அங்கே போ என்று டாக்ஸி நிறுத்தத்தை காட்டினார்கள் காலையிலேயே பர்ஸ் காணாமல் போனது ஒரு சோதனை என்றால் இவனுங்களுக்கு புரியவைப்பது பெரும் சோதனை போல் என்று ஒன்னியும் இல்ல என்று சொல்லிவிட்டு சட்டையில் இருந்த சில்லறைய வைத்து ஆபிஸ் வந்து, எல்லா கிரிடிட் கார்டையும் பிளாக் செஞ்சேன்.

அதில் 475 திர்ஹாமும் (சுமார் 6000ரூபாய்), என்னோட கிரிடிட் கார்ட், டெபிட் கார்ட், லேபர் கார்ட் என்ற சகல வஸ்துக்களும் இருந்தன, லேபர் கார்ட் திரும்பபுதுசாக வாங்கனும் என்றால் சுமார் 15,000ரூபாய் ஆகும் என்றார்கள் என்ன கொடுமை இது என்று வேலைய பார்க்க ஆரம்பித்தேன்.

மதியம் 12 மணி போல் ஒரு போன் வந்தது எடுத்தவர் ஹிந்தியில் பேசினார் ஒன்னும் புரியாமல் என் டிரைவரிடம் கொடுத்தேன் அவர் பேசிவிட்டு சார் உங்க பர்ஸ் கிடைச்சிடுச்சு, அதை ஒருவர் எடுத்துவெச்சுக்கிட்டு போன் செய்கிறார் என்றார், சரி என்று அவரை பார்க்க போனோம், பேக்கரியில் டெலிவரி வேலை பார்க்கும் ஒரு பஞ்சாபி பர்சை கொடுத்துவிட்டு எல்லாம் சரியாக இருக்கா பாரு என்றார், உள்ளே 475 திர்ஹாம் இருக்கு வேறுஎல்லாம் சரியாக இருக்கா பாரு என்றார், பிரித்து கூட பார்க்காமல் எல்லாம் சரியாகதான் இருக்கும் என்று சொல்லிவிட்டு வந்தேன்.

பரிசல்காரனிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பதிவில் அவர் போட்ட பின்னூட்டத்துக்கு பதில் சொல்லமுடியவில்லை என்ன சொல்வது என்று தெரியவில்லை, அவர் போட்டு இருந்த பின்னூட்டம் மூலம் மேன்மக்கள் மேன்மக்களே என்று சொல்லாமல் சொல்லிவிட்டார். சாரி பரிசல்!

அபி அப்பாவுக்கு உடம்பு சரி இல்லாமல் போனது இங்கு இருக்கும் அனைவரும் அவர் பதிவை பார்த்துதான் தெரிஞ்சுக்கிட்டோம், ஒவ்வொருவரும் அவருக்கு என்ன ஆச்சு பக்கத்தில்தானே இருக்கீங்க போய் பார்க்கலையா என்று கேட்கும் பொழுது கோவம் தான் வந்தது. ISD போன் செஞ்சு பேச முடிஞ்சவருக்கு ஒரு லோக்கல் மிஸ்டுகால் கொடுக்கமுடியாமல் போனது ஏன் என்றுதான் தெரியவில்லை.

இங்கு அமீரகத்தில் தினமலர்,மாலைமலர் போன்ற தளங்களை தடைசெய்துவிட்டார்கள், அதனால் அதில் இருந்து படங்களை எடுத்து கார்ட்டூன் போட முடியவில்லை, யாரும் அனுப்பி வைத்தீர்கள் என்றால் நல்லது.


என்னை காணவில்லை என்று தேடிய கார்க்கிக்கு நன்றி:))

54 comments:

said...

//என்னை காணவில்லை என்று தேடிய கார்க்கிக்கு நன்றி:))//

அடப்பாவி, என்னைய ஒருத்தனும் கண்டுக்கிற மாட்டேன்றானுங்கங்கிறதை 'ரீஜெண்டா' சொல்றியா ?

said...

உங்கள் பர்ஸ் எடுத்து கொடுத்தவருக்கு என்ன பதில் மரியாதை செய்தீர்கள்???

//இங்கு அமீரகத்தில் தினமலர்,மாலைமலர் போன்ற தளங்களை தடைசெய்துவிட்டார்கள்,//

இதுக்கு வேறு வழி இருக்கே... சில சைட்களின் வழியாக செல்லலாமே?

said...

//அபி அப்பாவுக்கு உடம்பு சரி இல்லாமல் போனது இங்கு இருக்கும் அனைவரும் அவர் பதிவை பார்த்துதான் தெரிஞ்சுக்கிட்டோம், //

என்னது அபி அப்பாவுக்கு 'அந்த' ஆப்புரேசனா ? சொல்லவே இல்லை, ஹார்லிக்ஸ் பாட்டிலாவது அனுப்பி வைச்சிருப்போம்ல.

said...

கோவி.கண்ணன் said...
அடப்பாவி, என்னைய ஒருத்தனும் கண்டுக்கிற மாட்டேன்றானுங்கங்கிறதை 'ரீஜெண்டா' சொல்றியா ?///

ஹி ஹி ஹி அட்லீஸ் ஒருத்தராவது இருந்தாரேன்னு சந்தோசமாக சொன்னேன்!

said...

கூடுதுறை said...
உங்கள் பர்ஸ் எடுத்து கொடுத்தவருக்கு என்ன பதில் மரியாதை செய்தீர்கள்???//

சொன்னால் நன்றாக இருக்காது என்றுதான் விட்டுவிட்டேன்!

*******************************
கோவி.கண்ணன் said...
என்னது அபி அப்பாவுக்கு 'அந்த' ஆப்புரேசனா ? சொல்லவே இல்லை, ஹார்லிக்ஸ் பாட்டிலாவது அனுப்பி வைச்சிருப்போம்ல.//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

கூடுதுறை said...
இதுக்கு வேறு வழி இருக்கே... சில சைட்களின் வழியாக செல்லலாமே?//

கொஞ்சம் சொல்லி கொடுங்களேன், ஒன்னியும் செய்யமுடியவில்லை.

said...

//இங்கு அமீரகத்தில் தினமலர்,மாலைமலர் போன்ற தளங்களை தடைசெய்துவிட்டார்கள்,//

நானும் அமீரகம் தான் ஆனா தடையில்லாம தினமலர் படிக்கிறேன். எவ்வளவோ செய்றோம் இது செய்யமாட்டோமா...
வேணும்ன்னா சொல்லுங்க நான் வேணா மெயில் பண்றேன்.
பர்ஸை காணோம் என்றவுடன் காயத்ரி மேடம் மாதிரி ஒரு மொக்கை பதிவு போட வேணாமா?

said...

அந்த புது மெஷின வச்சு கார்ட்டூன் கமெண்ட்ஸ் பதிவு போட முடியுமா???

ஆபீஸுக்கு டாக்ஸி, பஸ்-ன்னு, எல்லா mode of transportation-லயும் போறீங்க போல!!!

பர்ஸ் திரும்பக்கெடச்சது சந்தோஷம்!!!(கேட்க்க்கூடாதுதான்னாலும், குறு குறுங்குது...பர்ஸ்ல உங்க ஃபோட்டோ வச்சிருந்தீங்களா???)

அபி அப்பாவை கேட்டதா சொல்லவும்...

said...

நான் ஆதவன் said...
நானும் அமீரகம் தான் ஆனா தடையில்லாம தினமலர் படிக்கிறேன். எவ்வளவோ செய்றோம் இது செய்யமாட்டோமா...
வேணும்ன்னா சொல்லுங்க நான் வேணா மெயில் பண்றேன். //

ரொம்ப புண்ணியமாக போவும் அதைச்செய்யுங்க! நீங்களும் அமீரகமா?
மெயில் ஐடி kusumbuonly@gmail.com

said...

வாங்க தல... நீங்க இல்லாம வடிவேலு எல்லாம் காமெடி பண்ண ஆர‌ம்பிச்சிட்டாங்க.. சீக்கிரம் ஏதாவ்து செய்யுங்க...

said...

அந்த மிஷினைப்பத்தி ஒரு நல்ல :)

//நல்ல// பதிவு போடுங்களேன்..!

:))))

said...

//என்னை நம்பி Kodek NexPress s3000 என்ற மெசினை வாங்கி இருக்கிறார் என் டைரக்டர். அதன் மதிப்பு சுமார் 4 1/2 கோடி //
:)))))

said...

விஜய் ஆனந்த் said...
ஆபீஸுக்கு டாக்ஸி, பஸ்-ன்னு, எல்லா mode of transportation-லயும் போறீங்க போல!!!//

வீட்டில் இருந்து பஸ்ஸ்டாண்டுக்கு டாக்ஸி, அங்கிருந்து பஸ்! என்ன செய்வது இங்கு டிரைவிங் லைசண்ஸ் எனக்கு கொடுப்பேனா என்று சொல்கிறார்களே!!!:((

//பர்ஸ் திரும்பக்கெடச்சது சந்தோஷம்!!!(கேட்க்க்கூடாதுதான்னாலும், குறு குறுங்குது...பர்ஸ்ல உங்க ஃபோட்டோ வச்சிருந்தீங்களா???)///

அப்படி இருந்திருந்தா ”என்னைபார் யோகம் வரும்” படம் வாங்கும் செலவு மிச்சம் என்று அவரே வைத்து இருந்திருப்பார்!

////அபி அப்பாவை கேட்டதா சொல்லவும்...///

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

said...

//பர்ஸை காணோம் என்றவுடன் காயத்ரி மேடம் மாதிரி ஒரு மொக்கை பதிவு போட வேணாமா?
//

நான் எந்த பதிவு போட்டலும் "மொக்கை" பதிவு போட்டுடுச்சுடானு தான் சொல்றாங்க அது ஏன்?

said...

me the 15th?

said...

//புதுசாக என்னை நம்பி Kodek NexPress s3000 என்ற மெசினை வாங்கி இருக்கிறார் என் டைரக்டர். அதன் மதிப்பு சுமார் 4 1/2 கோடி ஒரு 7 மீட்டர் நீளமும் 3 மீட்டர் அகலமும் உள்ள மெசின் //

ஓகே, நாங்க நம்பறோம்.உங்க ஆபீஸில் இதெல்லாம் இருக்குன்னு போன வாரம் உங்களுக்கு தெரிய வந்துச்சு. ஆனா டீட்டெயில்சை மனப்பாடம் பண்ண இவ்ளோ நாள் ஆச்சா?

said...

//இரு நாட்களுக்கு முன்பு காலை 5 மணிக்கு எல்லாம் டாக்ஸி பிடிச்சு ஆபிஸ் வரும் பொழுது டாக்ஸி டிரைவருக்கு பணம் கொடுத்துவிட்டு பர்ஸை உள்ளே வைக்கும் பொழுது அது தவறி டாக்ஸியிலேயே விழுந்துவிட்டது, கவனிக்காமல் பஸ் ஏற போன பிறகுதான் பர்ஸ் இல்லாதது தெரியவந்தது அதுக்குள் டாக்ஸியும் போய் விட்டது//

கண்ணன் தேவன் டீ வாங்க போறதை விட கஷ்டப்பட்டு அபீஸ் போறீங்களே:(:(:(

said...

கார்க்கி :வாங்க தல... நீங்க இல்லாம வடிவேலு எல்லாம் காமெடி பண்ண ஆர‌ம்பிச்சிட்டாங்க.. சீக்கிரம் ஏதாவ்து செய்யுங்க...// ரிப்பீட்டு.!

said...

உடனடியாக எல்லோரும் குசும்பனின் முதலாளிக்கு தந்தி அடியுங்கள் கீழ்கண்ட வாசகங்களுடன்

"இன்னும் நிறைய மிஷின் வாங்கவும், ஒரு நிமிட ஓய்வு கூட இல்லாமல் குசும்பனுக்கு வேலை கொடுக்கவும் "


காணாப் போன குசும்பன தேடி செய்தி அனுப்ச கார்க்கிக்கு என் கடுமையான கண்டணங்கள்.

said...

//என் டிரைவரிடம் கொடுத்தேன் //

கார் இல்லாம டிரைவர் வெச்சிருக்க அண்ணன் குசும்பன் வாழ்க வாழ்க :):):)

said...

/காணாப் போன குசும்பன தேடி செய்தி அனுப்ச கார்க்கிக்கு என் கடுமையான கண்டணங்கள்.//

அவரு காணோம போனதுக்கு பின்னாடி இருக்கிற சதிய மறந்துட்டிங்களே சகா.. என் மேல ட்வுட் வரக்க்கூடாதுனு நான் தேடினேன்..

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. உளறிட்டேனோ?

said...

//"இன்னும் நிறைய மிஷின் வாங்கவும், ஒரு நிமிட ஓய்வு கூட இல்லாமல் குசும்பனுக்கு வேலை கொடுக்கவும் "
/

எங்கத் தல பாலைவனத்துல கொண்டு போய் விட்டாலும் பால் பாயசம் காய்ச்சி குடிப்பாரு..

குசும்பன் வாழ்க‌

சும்பன் வாழ்க..

பன் வாழ்க..

said...

இப்படிதான் என் மொபைல் டாக்ஸில மிஸ் ஆனதும் பதறாம போன் செஞ்சு வாங்கினேன்

பாக்கிஸ்தான்காரன் ரொம்ப நல்லவன்

அவ்வ்வ்வ்வ்

said...

கார்க்கி said...
வாங்க தல... நீங்க இல்லாம வடிவேலு எல்லாம் காமெடி பண்ண ஆர‌ம்பிச்சிட்டாங்க.. சீக்கிரம் ஏதாவ்து செய்யுங்க...//

அவ்வ்வ்வ்வ் எனக்கு தெரிஞ்சது சுண்டல் அதையும் சரஸ்வதிபூஜைக்காக செஞ்சாச்சு:)

*********************************
சுரேகா.. said...
அந்த மிஷினைப்பத்தி ஒரு நல்ல :)

//நல்ல// பதிவு போடுங்களேன்..!

:))))//

சுரேகா எதுக்கு நீங்க நல்ல என்பதை அழுத்தி சொல்றீங்கன்னு தெரியுது ஒழுங்காவே எழுதுறேன்.

*****************************
கல்ப் தமிழன் என் டைரக்டரை நினைச்சு சிரிக்கிறீங்களா:))))

****************************
கார்க்கி நீங்க பெரும் பதிவர் என்று அர்த்தம்:)
*****************************
ராப் உங்க கமெண்ட் எல்லாம் கலக்கல்!
******************************

said...

தாமிரா நன்றி
********************
நண்பா பால்ராஜ் நீயுமா?:((((((
********************
கார்க்கி said...
//எங்கத் தல பாலைவனத்துல கொண்டு போய் விட்டாலும் பால் பாயசம் காய்ச்சி குடிப்பாரு..//

அப்ப இன்னும் நான் பாலைவனத்துக்கு போகலையா?:))

//குசும்பன் வாழ்க‌

சும்பன் வாழ்க..

பன் வாழ்க..//

நல்ல வேளை முன் பக்கம் இருந்து பெயர் தேய்ந்து பன் என்று முடிஞ்சுது, பின் பக்கத்தில் இருந்து தேஞ்சு முடிஞ்சு இருந்தால் ரொம்ப நாறி இருக்கும்!!!

Anonymous said...

நல்ல வேளை முன் பக்கம் இருந்து பெயர் தேய்ந்து பன் என்று முடிஞ்சுது, பின் பக்கத்தில் இருந்து தேஞ்சு முடிஞ்சு இருந்தால் ரொம்ப நாறி இருக்கும்!!
//

kalakkal reply :)

said...

//
நல்ல வேளை முன் பக்கம் இருந்து பெயர் தேய்ந்து பன் என்று முடிஞ்சுது, பின் பக்கத்தில் இருந்து தேஞ்சு முடிஞ்சு இருந்தால் ரொம்ப நாறி இருக்கும்!!!//

தெரிஞ்சுதானே செஞ்சோம்..

Anonymous said...

//
புதுசாக என்னை நம்பி Kodek NexPress s3000 என்ற மெசினை வாங்கி இருக்கிறார் என் டைரக்டர்.
//
உங்க பாஸ் உங்கள நம்பி வாங்கியிருக்கார்னா, நீங்க
அவ்வளவு சுத்தமா மெஷின் துடைக்கிற ஆள்னு பேர் வாங்கியிருக்கீங்க. அப்படித்தானே??

said...

உங்களுக்கு பிரமோசனா

Anonymous said...

சீக்கிரம் பழிய பார்முக்கு வாங்க குசும்பா. நீங்க இல்லாம இங்க போரடிக்குது.

said...

//வீட்டில் இருந்து பஸ்ஸ்டாண்டுக்கு டாக்ஸி, அங்கிருந்து பஸ்! என்ன செய்வது இங்கு டிரைவிங் லைசண்ஸ் எனக்கு கொடுப்பேனா என்று சொல்கிறார்களே!!!:((///


நண்பா இன்னுமா லைசென்ஸ் எடுக்கல :(((((((((((

வேணும்னா இப்ப போய் எனக்கு கல்யாணமெல்லாம் ஆகிடுச்சு ஃப்ளீஸ் கொடுத்துங்கடான்னு கேட்டுப்ப்பாருங்களேன்!!!!!!!!!!!!

said...

//Kodek NexPress s3000 //

அருமையான மெஷின். கழுத்துக்குக் கீழே தடவிக்கொடுத்தா போதும். சாயங்காலம் ஒருமுறை பருத்திக்கொட்டை, காலையில புண்ணாக்கு வைக்கோல் போட்டிங்கன்னா எல்லா வேலையும் அதுவே செஞ்சிடும். செய்யுதில்ல?

said...

//ரொம்ப புண்ணியமாக போவும் அதைச்செய்யுங்க!//

check ur mails now..

said...

//பரிசல்காரனிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பதிவில் அவர் போட்ட பின்னூட்டத்துக்கு பதில் சொல்லமுடியவில்லை என்ன சொல்வது என்று தெரியவில்லை, அவர் போட்டு இருந்த பின்னூட்டம் மூலம் மேன்மக்கள் மேன்மக்களே என்று சொல்லாமல் சொல்லிவிட்டார். சாரி பரிசல்!
//

என்னாதிது ச்சின்னப்புள்ளத் தனமா? எனக்கு கெட்ட வார்த்தைல திட்டத் தெரியாது. ஆனா நீங்க ஸாரி எல்லாம் கேட்டா ஆள் வெச்சுத் திட்டுவேன். ஆமா...

said...

ரஜினி ஷூட்டிங் சமயத்துல அவரு கூட நடிக்கற புதுமுகத்தை, அல்லது ஹீரோயினை ஒரு ஜாலிக்காக கலாய்ச்சுட்டே இருப்பாராம். நீங்க என்னைக் கலாய்ச்சதை அப்படி, பெருமையாத்தான் நெனைச்சேன்... இன்னும் நெனைக்கறேன்.

இதை எழுதும்போதுதான் ஞாபகம் வருது.. இதுதானே நான் நட்சத்திரமாகும் வாரம்!

ஆஹா.. நாளைக்கே ஒரு மொக்கையைப் போட்டுட வேண்டியதுதான்!

Anonymous said...

உங்கள் பர்ஸ் எடுத்து கொடுத்தவருக்கு என்ன பதில் மரியாதை செய்தீர்கள்???//
-))

said...

//இங்கு அமீரகத்தில் தினமலர்,மாலைமலர் போன்ற தளங்களை தடைசெய்துவிட்டார்கள்,//
ஓ அதுக்கு தான் தினத்தந்தியா? அத உங்க பாஸ் படிப்பாரா? :)

said...

கவனமா இருக்க வேணாமா மாம்ஸ்.. அப்புறம் உங்க பர்ஸ்க்கு எங்க இருக்கனு கேட்டு தந்தி அனுப்பி இருக்கனும்.. :))

said...

/வேறு இடத்தில் இதை வைக்கலாம் என்ற பொழுது அழுது அடம்புடிச்சு இங்கேதான் வைக்கனும் என்று சொல்லி வாங்கி வைத்த பிறகு வைக்க இடம் இல்லாமல் என் ரூமையும் இடித்தார்கள்,//

ஜொள்ளு மாமா.. கல்யாணம் ஆகியும் திருந்தலையா? :))

said...

உங்க வேலைப்பளு உங்க பதிவுலயே தெரியுது குசும்பா... பரவாயில்ல லூஸ்ல விடுங்க.. அப்பப்ப இந்த மாதிரி வேலை வந்துட்டேதான் இருக்கும். அதை முடிச்சிட்டு ஃபுல் ஃபார்ம்ல வாங்க..

உங்க பர்ஸ் கிடைச்சது சந்தோசம் & ஆச்சரியம்.

//Kodek NexPress s3000//

ஒரு சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு.. கரெக்ட் பண்ணிகோங்க, இன்னிக்கு சாயங்காலம் மெசின தொடக்கிறப்ப பாத்து பதிவுல கரெக்ட் பண்ணிடுங்க :)))

said...

அண்ணே உனக்கு நடந்த சோதனை (பர்ஸ்) எனக்கும் நடந்தது..அப்புறம் சொல்றேன் ;)

said...

பர்ஸ் நல்லபடியாக திரும்ப கிடத்ததுக்கு வாழ்த்துக்கள். ;-)

said...

//இங்கு அமீரகத்தில் தினமலர்,மாலைமலர் போன்ற தளங்களை தடைசெய்துவிட்டார்கள்//
அந்த சென்சாரா ? கொடுமை தான்.

said...

//
நான் ஆதவன் said...

பர்ஸை காணோம் என்றவுடன் காயத்ரி மேடம் மாதிரி ஒரு மொக்கை பதிவு போட வேணாமா?
//

ரிப்ப்பீட்ட்ட்டு

said...

தந்தி எல்லாம் அனுப்ப முடியாது நீ பிஜியா வேலை செய்யுறன்னு கேக்குறப்பவே நெம்ப சந்தோசமா இருக்கு!

said...

//என்னை நம்பி Kodek NexPress s3000 என்ற மெசினை வாங்கி இருக்கிறார் என் டைரக்டர். அதன் மதிப்பு சுமார் 4 1/2 கோடி //

இன்னுமாய்யா துபாய்ல உன்னைய நம்பிகிட்டிருக்காய்ங்க!?!?!?

:))))))

said...

//இரு நாட்களுக்கு முன்பு காலை 5 மணிக்கு எல்லாம் டாக்ஸி பிடிச்சு
//

ஓ காலைல கூட ஒருதபா 5 மணி வருமில்ல??

ஓகே ஓகே பாத்ததே இல்ல அதுதான் கேட்டேன்

:))))))))))))))

said...

//
ஜோசப் பால்ராஜ் said...

உடனடியாக எல்லோரும் குசும்பனின் முதலாளிக்கு தந்தி அடியுங்கள் கீழ்கண்ட வாசகங்களுடன்

"இன்னும் நிறைய மிஷின் வாங்கவும், ஒரு நிமிட ஓய்வு கூட இல்லாமல் குசும்பனுக்கு வேலை கொடுக்கவும் "
//

ரிப்பீட்டு

said...

50

said...

50

said...

//மங்களூர் சிவா said...
//இரு நாட்களுக்கு முன்பு காலை 5 மணிக்கு எல்லாம் டாக்ஸி பிடிச்சு
//

ஓ காலைல கூட ஒருதபா 5 மணி வருமில்ல??

ஓகே ஓகே பாத்ததே இல்ல அதுதான் கேட்டேன்//

ரிப்பீட்டேய்!!!

said...

//நான் ஆதவன் said...

பர்ஸை காணோம் என்றவுடன் காயத்ரி மேடம் மாதிரி ஒரு மொக்கை பதிவு போட வேணாமா?//

காயத்ரி மேடமா??? அழுகாச்சி கவிதாயினி அப்படினா எல்லாருக்கும் டீஜெண்டா புரியும்.

Anonymous said...

http://graphics.kodak.com/US/Product/Printers_Presses/Digital_Color/Kodak_Nexpress_S3000/default.htm

மெஷின் சூப்பர்... குசும்பன் அண்ணா போடப்போற புக்ஸ் எல்லாம் இந்த மெசின்-ல தான் இனிமே போடுவாங்க சரிதானே அண்ணா.. பிரிண்ட் செய்தது பாலிதீன் ராப்பேர் போட்டு பின் அடித்து கொடுக்குது இந்த மெஷின். அண்ணா உங்க போட்டோ குசும்பு எல்லாம் bind செய்தது புக் போட்டு தாங்க

Anonymous said...

http://graphics.kodak.com/US/Product/Printers_Presses/Digital_Color/Kodak_Nexpress_S3000/default.htm