Tuesday, October 28, 2008

சும்மா டைம் பாஸ் மச்சி!!!

சிறகடித்துப் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகளை ரசிக்கும்


தருணங்களைக் காட்டிலும் என்றைக்கேனும்


இந்த வண்ணக்கலவை நிறமிழந்து போகுமோ என்ற அச்சம் மிகுகிறது.


அலையடித்து பறக்கும் கல்லூரி பெண்கள் கூந்தல்களை ரசிக்கும் தருணங்களைக் காட்டிலும் என்றைக்கேனும்என் தலையில் அடித்த வண்ணகலவை வெளுத்து போய்விடும் என்ற அச்சம் மிகுகிறது...


இரவுப் பனியில் குளித்தெழுந்து தலை துவட்டாத ஈரத்தில்


இதழ் மலரக் காத்திருக்கும் ரோஜாக்களைப் பார்த்து


புன்னகைக்கவும் மறந்து போய் இன்று


ஒரு நாள் மட்டும்தானே இந்த அழகு எனகவலை தொற்றிக் கொள்கிறதுகாலை சவரில் நனைந்து தலை துவட்டிய துண்டில்


ஒட்டிக்கொண்டு வரும் சாயத்தை பார்த்து


அழவும் மறந்து போய் இன்னும் எத்தனை நாள் தான்


இந்த சாயம் நிற்கும் என்ற பயம் தொற்றி கொள்கிறது!!!


ஓயாத உன் பேச்சொடு கலந்து வரும் புன்னகையில்


அதிக பங்களிப்பு இதழ்களுக்கா விழிகளுக்கா என


ஆராயவும் மனமின்றி இது எனக்கானதா என


ஏக்கமே நிலை தடுமாறச் செய்கிறது


காற்றோடு கலந்து வரும் ஈர பதத்தில்


கூட சாயம் வெளுத்துவிடுமோ என பயம் அது பற்றி


ஆராயவும் முடியவில்லை அது போல் முடி


எனக்கு வாய்க்காதா என்று ஏக்கம் வருகிறது
இருப்பை மறந்த தேடலில்


கரைந்து ஓடும் கால வெளியில்


தொலைந்து போவது


என் சுயம் மட்டுமேவெளுப்பை மறைக்கும் முயற்சியில்


கரைந்து ஓடும் சாயங்கள் மழையில்


மற்றவர்களுக்கு தெரிந்து போவது


என் சொட்டை தலையும்


அதில் வெள்ளை முடியும் மட்டுமே!!!டிஸ்கி : வழக்கம் போல் எதிர் கவிதை கண்மணி அக்கா கவிதை கருப்பில் இருப்பது.*************************************************************************
சிகப்பு கலரில் இருப்பது கண்மணி எழுதிய கவிதை அதற்க்கு கீழே இருப்பது நான் எழுதிய எதிர் கவுஜ:)

ஆஹா...வந்துடுச்சி...[தலைப்பின் மறுபாதி டிஸ்கியில்]

ஓஹோ வரவில்லை....(தலைப்பின் மறுபாதி டிஸ்கியில்)

உதிர்ந்து விழுவோம் என அஞ்சியிருந்தால்
பூக்கள் இதழ் விரிக்காமலே இருந்திருக்கக் கூடும்.
பிரிவோம் என நினைத்திருந்தால்
உன்னைப் பற்றிய நினைவுகள்
எனக்குள் வேர்விட்டிருக்காது
காதல் பூத்தும் இருக்காது
கொட்டியச் சிதறிய சருகுகள்
மக்கிச் சிதைந்து மரத்திற்கே உரமாவதுபோல
உன் சுணக்கமும்,ஒதுங்கல்களும் எனக்குள்ளே
புதைந்து என் கனவுகளுக்கு உரமிட்டு
உன் நினைவுகளை என்னுள் ஆழமாய்
வேறூன்றச் செய்கின்றன.

தடுக்கி விழுவோம் என அஞ்சியிருந்தால்
அஞ்சு பாபி ஜார்ஜ் ஓடாமலே இருந்திருக்க கூடும்.
உடைவோம் என நினைத்திருந்தால்
எனக்கு பிடித்த முட்டை
கோழி வயிற்றிலேயே இருந்திருக்க கூடும்.
முட்டை வெளியே வந்தும் இருக்காது
வந்து என் கையில் சிக்கியும் இருக்காது.
உடைந்து முட்டைகள் வெந்து தணிந்து
ஆம்லேட் ஆவதுபோல.
வாந்துமுட்டையும், ஆமை முட்டையும்
மண்ணுக்குள்ளே இருந்திருக்கும்.

இந்த உலகை வெறுப்பதற்கு பல காரணங்கள்
இருந்தன எனக்கு
உன்னிடம் பேசும் வரை
பேசிய பிறகோ என்னையே வெறுத்துக் கொள்கிறேன்
காரணமே தெரியாமல்.
பேசும் உன் மொழிகளை விட பேசாத உன்
விழிகள் எனக்குள் எழுதும் கவிதைகள்
ஏராளம்.

இந்த ஆம்லேட்டை வெறுப்பதற்கு பல காரணங்கள்
இருந்தன எனக்கு
அதை எடுத்து சாப்பிடும் வரை
சாப்பிட்ட பிறகோ என்னையே வெறுத்து கொள்கிறேன்
காரணமே தெரியாமல்..
வெந்த முட்டைகளை விட வேகாத ஆப் பாயில்கள்
ருசி அதிகம்.


கவனம் தப்பாத உன் பேச்சுக்களில்
எங்கேனும் காதல் ஒளிந்திருக்குமோ
எனப் பார்த்திருப்பதும்
மட்டறுக்கப் படும் உன் வார்த்தைகளில்
எனக்கான நேசம் தூவப் பட்டிருக்குமோ எனத்
தேடுவதுமே
என் வாடிக்கையாகிப் போகிறது


கவனமாக திருப்பி போடப்பட்ட ஆம்லேட்டுகளில்
பச்சைமிளகாய் எங்கேனும் ஒளிந்துருக்குமா
என பார்பதும்
அதன் மேல் மிளகு தூள் தூவபட்டு இருக்குமா
எனத் தேடுவதுமே
என் வாடிக்கையாகிப் போகிறது.


இலையுதிர் காலங்களுக்குப் பிறகு
வசந்தம் வந்துதானே ஆகவேண்டும்.
காத்திருக்கிறேன் வரும்வரை

எனக்கு முன் ஆடர் செய்த ஆம்லேட்டுக்கு பிறகு
ஆப்பாயில் வந்துதானே ஆகவேண்டும்
காத்திருக்கிறேன் வரும் வரை...(சாப்பிடாமல்)

டிஸ்கி: ....எனக்கும் காதல் கவிதை
டிஸ்கி: எனக்கான ஆப்பாயில்

***************************************************

முதல் முறையாக சும்மா ஒரு மீள் பதிவு.

24 comments:

said...

:-)))...

கவித....கவித!!!!

said...

முடியல.....அவ்வ்வ்வ்... இது ஆனந்த கண்ணீர்

said...

சூப்பர் தல..ஒரு நிமிஷம்.

அட.. என்ன இது..

அய்யோ தல ரத்தம்..

Anonymous said...

Dear Kusumban
In your post on "living in Dubai' ( May 08) I have asked some queries. Can you please answer them?

Thanks.
Rajashekar

said...

நண்பா கலக்கல் :))))

said...

//சிறகடித்துப் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகளை ரசிக்கும்
தருணங்களைக் காட்டிலும் என்றைக்கேனும்
இந்த வண்ணக்கலவை நிறமிழந்து போகுமோ என்ற அச்சம் மிகுகிறது//

இந்த வரிகள் தமிழ்மண முகப்பில் தெரிந்தவுடன்.. மைல்ட்டான டவுட்டோடுதான் ஓப்பன் பண்ணேன் தல.. ம்ம்ம்ம்.. என்னைய சும்பனாக்கிட்டீங்க குசும்பன்..

நக்கல் கலக்கல் தல!!!!!

நர்சிம்

said...

:)))))

Anonymous said...

இனிமே அக்கா கவிதை எழுதுவாங்களா???

said...

இந்த கவுஜ க்கு பரிசாக 2 ஆம்லேட்டும் 2 ஆஃப்பாயிலும் :)

said...

எம்மை வென்றுவிட்டீர் கவிஞரே, எம்மை வென்றுவிட்டீர்:):):)

said...

கண்மணி எங்க இப்ப வந்தாங்கன்னு யோசிச்சிட்டே வந்தேன். .. ஓ மீள்பதிவா.. :)
சரி இருந்தாலும் ராப் மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் வல்லவனுக்கு வல்லவன்னு நிரூபிக்க ஒரு வாய்ப்பு கிடைச்சதாக்கும்..

said...

\\முத்துலெட்சுமி-கயல்விழி said...
கண்மணி எங்க இப்ப வந்தாங்கன்னு யோசிச்சிட்டே வந்தேன். .. ஓ மீள்பதிவா.. :)
சரி இருந்தாலும் ராப் மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் வல்லவனுக்கு வல்லவன்னு நிரூபிக்க ஒரு வாய்ப்பு கிடைச்சதாக்கும்..
\\

ரீப்பிட்டே ;))

கண்மணி அக்கா எங்க இருக்கிங்க??

said...
This comment has been removed by the author.
said...

கவிதைக்கே எதிர்பதிவு போட்டு ஜம்மய்க்கிறீங்க தல.. ஜூப்பரு.!

said...

இப்பதைக்கு ஒரு அட்டன்டன்ஸ்.

இப்ப போறேன்.

பிறகு வருவேன்.

said...

//"சும்மா டைம் பாஸ் மச்சி!!!"///

இதை டைம் பாஸ் பண்ணுற நேரத்தில்தான படிக்கனும்.
இப்ப வேலை நேரம் அப்புறமா வர்ரேன்.

said...

ஒத்துகிறேன் நீயும் வெட்டியாதான் இருக்கேனு...:)

said...

//
காலை சவரில் நனைந்து தலை துவட்டிய துண்டில்
ஒட்டிக்கொண்டு வரும் சாயத்தை பார்த்து
அழவும் மறந்து போய் இன்னும் எத்தனை நாள் தான்
இந்த சாயம் நிற்கும் என்ற பயம் தொற்றி கொள்கிறது!!!
//

அடப்பாவி!!! டை அடிச்சிதான் ஒரு குடும்பத்தையே ஏமாத்துனியா நீயி... பாவம்யா எந்தங்கச்சி.. இப்பவாவது உண்மைய சொன்னியா???

said...

ஆம்லெட்...

said...

இவ்ளோ தெறமயா ஒரு மனுஷனுக்கு? கலக்கல்!

said...

//
வெந்த முட்டைகளை விட வேகாத ஆப் பாயில்கள்
ருசி அதிகம்.
//

கவித.. கவித.. முட்டை கவிச்ச விட அதிகமா நாறுது இந்த வரிகள்.. :)))

//
எனக்கு முன் ஆடர் செய்த ஆம்லேட்டுக்கு பிறகு
ஆப்பாயில் வந்துதானே ஆகவேண்டும்
காத்திருக்கிறேன் வரும் வரை...(சாப்பிடாமல்)
//
பக்கத்துல இருக்குறவன் எடுத்து சாப்புட்றபோறான்..
//

said...

ரொம்பவும் குசும்புதான் குசும்பரே...கவுஜ சூப்பர்...நல்லாவே யோசிக்கிறாய்ங்கைய்யா...

-வீணாபோனவன்.

said...

முடியல.....அவ்வ்வ்வ்... இது ஆனந்த கண்ணீர்....:-)))))))

said...

கவிதை ஜூப்பரப்பு....

ஒத்துகிறேன் நீயும் வெட்டியாதான் இருக்கேனு...:)


ரிப்பீட்டேய் ;)