என்னம்மா இத்தனை தொட்டுக்க இருக்கும் பொழுது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லேட் போட்டுக்கிட்டு இருக்க வாம்மா வந்து உட்கார் எவ்வளோதான் நீ செய்வாய் வா சேர்ந்து சாப்பிடலாம்!
இருங்க உங்களுக்கு தொட்டுக்க ஆலேட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க அதுவும் சின்ன வெங்காயம் வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பராக இருக்கும் என்று சொல்வீங்க அதுக்குதான்.
இப்படி சொன்னா கல்யாணம் ஆகி ஆறுமாதம் என்று அர்த்தம்!!!
**********************
என்னம்மா இன்னைக்கு ஸ்பெசல்!
சாம்பார், பெரிய வெங்காயம் போட்டு ஆம்லேட் தொட்டுக்க!
அவ்வளோதானா?
முடியலைங்க!
இது ஒரு வருடம் ஆன ஜோடிங்க!
**************************
என்னம்மா சாப்பிடலாமா?
இருங்க இந்த சீரியல் முடியட்டும். என்னங்க கொஞ்சம் பெரிய வெங்காயம் உறிச்சு தாங்களேன் ஆம்லேட் போடுறேன்.
இது கல்யாணம் ஆகி ஒன்றரை வருடம் ஆனதுங்க!
********************************
என்னம்மா இது வெங்காயமே இல்லாம ஆம்லேட் போட்டு இருக்க எனக்கு பிடிக்காதுன்னு தெரியும்லே!
ஒரு நாள் இதை சாப்பிட்டாதான் என்னா? எல்லாத்தையும் நானே செய்யனுமா?
இது இரண்டு வருடம் ஆன ஜோடிங்க!
*******************************
என்னம்மா இது இத்தனோன்டு இருக்கு, முட்டைய கலக்க கூட இல்ல அப்படியே உடைச்சு புல் பாயிலா ஊத்தி இருக்க?
முட்டை என்னா நானா போடுறேன் கோழி போட்டது சின்னதா இருக்கு அதுக்கு நான் என்னா செய்ய! சும்மா குறை சொல்லிக்கிட்டு இருக்காம, தொட்டுக்கிட்டு சாப்பிடுங்க!
இது ஒரு மூன்று வருடம் ஆனது!
***********************************
என்னா இது ஆப் பாயில் போட்டு இருக்க நான் இத சாப்பிடவே மாட்டேன் என்று தெரியும்ல!
ஒரு நாள் தின்னா ஒன்னும் குறைஞ்சு போய்டாது, சாப்பிடுங்க ஊருல இல்லாத அதிசய புருசன் எனக்குன்னு வந்து வாச்சி இருக்கு! இது ஒரு 4ல் இருந்து 5 வருடம் ஆன ஜோடிங்க!
******************************
என்னம்மா இன்னைக்கு ஒன்னும் செய்யலையா?
சாதம் வைத்து இருக்கேன், பிரிஞ்சில் நேற்று வாங்கிய மோர் இருக்கு, முட்டையும் இருக்கு ஆம்லேட் போட்டு சாப்பிடுங்க!
இது ஒரு 7 வருடம் ஆனதுங்க!
*******************************
என்னம்மா இன்னை என்ன சமையல் செய்யனும்!
அதையும் நான் தான் சொல்லனுமா? எனக்கு என்னா பிடிக்கும் என்று தெரியாதா? அதை செய்யுங்க!
இது பத்து வருடத்துக்கு மேற்பட்ட ஜோடிங்க!!!
********************************
இதில் கவனிச்சீங்கன்னா அவன் என்னம்மா என்று சொல்லுவது மற்றும் மாறவே இல்லை:)
ஆண்கள் வைக்கும் அன்பும் பாசமும் என்றுமே மாறாது என்றும் ஆசிப் அண்ணாச்சி சொல்கிறார், பெரியவங்க சொன்னா சரியாகதான் இருக்கும் போல. (அண்ணாச்சி நீங்க பொடிசு இல்ல, பொடிசு இல்ல:) என்னை மன்னிக்கலாம்!!!)
ரெடி ஸ்டார்ட் மியூஜிக்!!!
Subscribe to:
Post Comments (Atom)
52 comments:
நல்லா இருக்கு..
எங்க வூட்டுலே..ஆம்லேட் போடுறதே இல்லையே..
அப்ப எனக்கு கல்யாணமே ஆகவில்லை... :)
குசும்பன்: இன்னைக்கு ஸ்பெசலா ஆம்லெட் செய்யலாமா?
எனக்கு தெரியாதுங்களே.
குசும்பன்: நான் சொல்லித்தரேன். சின்ன வெங்காயம் வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பராக இருக்கும்.
குசும்பன்: .....மேற்கொண்டு சொல்லிதருகிறார்....
இப்படி சொன்னா???
தம்மாதூண்டு முட்டையில இவ்ளோ தத்துவமா?
இனி மக்கள் உங்களை முட்டை மந்திரி என அழைத்து போற்றட்டும்... உமது புகழ் இவ்வையம் முழுதும் பரவட்டும்...
I Enjoyed this post.
:)
// TBCD said...
நல்லா இருக்கு..
எங்க வூட்டுலே..ஆம்லேட் போடுறதே இல்லையே..
அப்ப எனக்கு கல்யாணமே ஆகவில்லை... :)///
ரொம்ப பேராசை பட கூடாது!!!
******************
J K said...
//குசும்பன்: .....மேற்கொண்டு சொல்லிதருகிறார்....
இப்படி சொன்னா???//
கேட்டரிங் காலேஜில் கெஸ்ட் லெக்சராக போய் குசும்பன் அழகிய குமரிகளுக்கு பாடம் எடுக்கிறார் என்று அர்த்தம்:)))
10 வருஷம் ஆனாலே ரங்கமணில்லாம் சமையல் செய்ய ஆரம்பிச்சுருவாங்களா?
எந்த வீட்ல இந்தக் கதை?
இந்தப் பதிவைக் கண்டிப்பா என் ரங்கமணி கண்ணுல காமிக்கணும்...
எங்க வீட்டில கல்யாணம் ஆனதில இருந்து நான் தானே ஆம்லேட் போடரேன் அப்ப அதுக்கு ஒரு தனி பதிவு போடுங்க பாக்கலாம்...
செந்தில் said...
I Enjoyed this post.
:)///
நன்றிங்க
*******************
பாச மலர் said...
10 வருஷம் ஆனாலே ரங்கமணில்லாம் சமையல் செய்ய ஆரம்பிச்சுருவாங்களா?
எந்த வீட்ல இந்தக் கதை? /////
காலம் காலமாக எங்கும் நடக்கும் சோக கதைங்க இது:(((
///இந்தப் பதிவைக் கண்டிப்பா என் ரங்கமணி கண்ணுல காமிக்கணும்...///
ஒரு ஆண் துன்ப பட நானே காரணமாக ஆயிட்டேனே!!! அவ்வ்வ்வ்:(
***************************
//இம்சை said...
எங்க வீட்டில கல்யாணம் ஆனதில இருந்து நான் தானே ஆம்லேட் போடரேன் அப்ப அதுக்கு ஒரு தனி பதிவு போடுங்க பாக்கலாம்...//
நாம் எல்லாம் விதி விலக்கு நண்பா! நமக்காக நாமே ஆம்லேட் போடலாம் பதிவு போட பிடாது:)) ரொம்ப டேமேஜ் ஆகிடும்!
எக்ஸலண்ட் குசும்பரே !!!!!!!!!! கலக்கல்...ரியல்லி எஞ்ஞாய்டு...!!!
=))))))))))
//இதில் கவனிச்சீங்கன்னா அவன் என்னம்மா என்று சொல்லுவது மற்றும் மாறவே இல்லை//
எதையாவது மாற்றி சொல்லி பார்த்தாலல்லவா தெரியும். எந்த பக்கம் வீங்குமோ என்று :)))
//ஆண்கள் வைக்கும் அன்பும் பாசமும் என்றுமே மாறாது//
ஆமாம். பயமும் பணிவும் என்றுமே மாறாது :))
நல்ல கற்பனைங்க
:))))))
வாழ்த்துக்கள்.
இருங்க உங்களுக்கு தொட்டுக்க ஆலேட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க அதுவும் சின்ன வெங்காயம் வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பராக இருக்கும் என்று சொல்வீங்க அதுக்குதான்.
இப்படி சொன்னா கல்யாணம் ஆகி ஆறுமாதம் என்று அர்த்தம்!!!
//
ஆண்கள் பேசும் டயலாக்கா இது :)
ம் என்னத்த சொல்ல...:)
அதெல்லாம் இருக்கட்டும்... எதை வச்சி எத்தனை வருஷ காதல் ஜோடினு கண்டுபிடிக்கிறது?
குறிப்பா.. 10 வருஷமா காதல் பண்ற ஜோடிய கண்டுபிடிகிறது எப்படினு சொன்னா சிலரை சோதிச்சி பாக்க கொஞ்சம் வசதியா இருக்க்கும். :P
அதையும் நான் தான் சொல்லனுமா? எனக்கு என்னா பிடிக்கும் என்று தெரியாதா? அதை செய்யுங்க!
இது பத்து வருடத்துக்கு மேற்பட்ட ஜோடிங்க!!!
//
பத்து வருசம் எல்லாம் காத்திருக்க குசுபனால் முடியாதாமே ...!!!
ஆஹா.. அருமை. இந்த ரிசர்ச் இற்கு எத்தனை மாசம் ஆச்சு?
அடுத்து கடலை போடுறத வச்சி காதலர்களை பற்றிய ஒரு பதிவு போட முடியாதா?
ANUPAVAM ENPATHU ENNA? ORUVAR ANUPAVAM ILLAMALAE ANUPAVATHAI ORU PATHIVAE PODUKIRAAR -
AYYO IRAIVA ENNA MOOLAIYAPPA
VIVEK MAATHIRI MATTAVANGA VEETIL NADAPPATHU THERIKIRATHO
NANPARKALAE JAAKIRATHAI
முட்டைக்குள்ள இத்தனை விதமான ஆம்லட்டா?
ஆம்லட்டுக்குள்ள இவ்வளவு இருக்கா?
ஆமா..
அந்தக்குடும்பம் சுத்த சைவமா இருந்தா..?
:)
எப்புடி?
என்ன அண்ணா,ரொம்ப யோசிக்கிறீங்க போல ;)
அண்ணி ரொம்ப நல்லவங்களாக இருப்பாங்க.உங்களுக்கு அன்றாடம் வெங்காயம் போட்ட ஆம்லெட் கிடைக்க வாழ்த்துக்கள்
//இதில் கவனிச்சீங்கன்னா அவன் என்னம்மா என்று சொல்லுவது மற்றும் மாறவே இல்லை:)
ஆண்கள் வைக்கும் அன்பும் பாசமும் என்றுமே மாறாது //
supreryyyeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee
அதெல்லாம் இருக்கட்டும்... எதை வச்சி எத்தனை வருஷ காதல் ஜோடினு கண்டுபிடிக்கிறது?
குறிப்பா.. 10 வருஷமா காதல் பண்ற ஜோடிய கண்டுபிடிகிறது எப்படினு சொன்னா சிலரை சோதிச்சி பாக்க கொஞ்சம் வசதியா இருக்க்கும். :P
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்டெய்
சூப்பரு!!
கலக்குறீங்க அண்ணாச்சி!! :-D
ஜோக்கெல்லாம் ஓகேதான்...
//இதில் கவனிச்சீங்கன்னா அவன் என்னம்மா என்று சொல்லுவது மற்றும் மாறவே இல்லை:)//
இது மட்டும் புனைவு... என்ன நீங்க நிஜத்துக்கும் புனைவுக்கும் வித்தியேசமே தெரியாம இருக்கீங்க ;-)
\\ஆம்லேட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று கண்டுபிடிப்பது எப்படி?"\\
தமிழ்மண மக்களுக்கு தெரிவிக்கிறது என்னான்னா இனிமேல் அண்ணன் திரு. குசும்பன் பதிவில் ஆம்லேட் போடுவது, சாம்பார் வைப்பது, ரசம் வைப்பது, பூரிகட்டை எப்படி உடைந்தது போன்ற தகவல் தான் வரும் ;)
அண்ணே இனி நீ காலி...ஹைய்யா எங்களுக்கு ஜாலி ;))
//ஆண்கள் வைக்கும் அன்பும் பாசமும் என்றுமே மாறாது//
உண்மை.
ஒரு சின்ன முட்டைய வச்சு ஆம்லேட் மட்டும் தான் போட முடியும்னு நினைச்சேன். . . . .
வாழ்க்கை தத்துவத்தையே விளக்கிப்புட்டீங்களே தலைவா. . . . . .:-))
ஸூப்பரு. . . .
" இன்னிக்கு பாரு. நான் வெங்காயமெல்லாம் போட்டு அருமையா ஆம்லெட் பண்ணித்தரேன்..
இதோ கொஞ்ச நேரங்கழிச்சு ...."
டிவியில் நட்ட கண்ணை எடுக்கவே இல்லை.
" அட! நீயேம்மா செஞ்சே? என்னை ஒரு குரல் கூப்புட்டுருக்கக்கூடாது?"
இது ஒரு ஏறக்கொறைய 34 வருசத்துக்கு அப்புறம்:-)))
ஆம்லேட்ல இவ்ளோ இருக்கா..யப்பா......
செந்தழல் ரவி said...
எக்ஸலண்ட் குசும்பரே !!!!!!!!!! கலக்கல்...ரியல்லி எஞ்ஞாய்டு...!!!///
நன்றி ரவி!
***********************
நன்றி சாமான்யன்
***********************
சுல்தான் said...
எதையாவது மாற்றி சொல்லி பார்த்தாலல்லவா தெரியும். எந்த பக்கம் வீங்குமோ என்று :)))///
அவ்வ்வ் அப்படி வேற நடக்குமா?
************************
புதுகைத் தென்றல் நல்ல கற்பனைன்னு சொல்றீங்க ஓக்கே நன்றி, அது என்னா வாழ்த்துக்கள் எனக்கும் இதுபோல நடக்கவா?:))))
*************************
SanJai எவனாவது என்னத்தயாவது செஞ்சுட்டு போறானுங்க விடுங்க நாம பேசாம ஜாலியா வேடிக்கை பார்க்கலாம்:)
அப்புறம் கத்திரிக்காய் முத்தினா கடைக்கு வந்துதான் ஆகனும் :)))
************************
மின்னல் எனக்கு சீனியர் நீங்க எனக்கு டிரைனிங் கொடுக்க மாட்டீங்களா என்னா?
*************************
மிகவும் அற்புதம்... :)
வாழ்வியல் ரகசியமா. அட அட. சூப்பருங்கோ.
ஆமாங்க சஞ்சய் தானே கேட்டாரு அதுக்கு ஒரு பதிவு போடுங்க. எத்தனை வருசமான காதல் ஜோடி ன்னு கண்டுபிடிக்க என்ன செய்யனும்..
கிசு கிசு பதிவுக்கு அப்பறம்....
கல்யணத்துக்கு வாழ்த்துக்கள்.....
எல்லாம் ஒரு பிலனிங்தான்
Kalakals Kusumbarey....enjoyed the post!!
Divya.
//இறக்குவானை நிர்ஷன் said...
அடுத்து கடலை போடுறத வச்சி காதலர்களை பற்றிய ஒரு பதிவு போட முடியாதா?///
போட்டுவிட்டால் போச்சு:)))
********************
நன்றி அனானி
*********************
நட்டு said...
முட்டைக்குள்ள இத்தனை விதமான ஆம்லட்டா?///
ஆமாங்க நட்டு:)
**********************
சுரேகா.. said...
அந்தக்குடும்பம் சுத்த சைவமா இருந்தா..?//
தோசை, சட்டினி, இட்லி, காப்பி என்று எவ்வளோவவோ இருக்கே:)
*************************
நன்றி டாக்டரம்ம்மா!!!
***************************
நன்றி துர்கா உங்க வாழ்த்து போலயே நடக்கட்டும்!!!
*************************
நன்றி ரசிகன்
**************************
சீனா சார் அவுங்க என்னா தலைமறைவான குற்றவாளிகளா அவுங்களை கண்டுபிடிக்கனும் கண்டுபிடிக்கனும் என்று சொல்றீங்க, தானா ஒரு நாள் உங்க கண்ணில் மாட்டுவாங்க:)
**************************
CVR said...
சூப்பரு!!
///
நன்றி
**************************
சேதுக்கரசி said...
இது மட்டும் புனைவு... என்ன நீங்க நிஜத்துக்கும் புனைவுக்கும் வித்தியேசமே தெரியாம இருக்கீங்க ;-)//
ஆமாங்க சூதுவாது தெரியாத பிள்ளைங்க :)))
************************
நன்றி பாபா
*********************
கோபிநாத் said...
அண்ணே இனி நீ காலி...ஹைய்யா எங்களுக்கு ஜாலி ;))///
நல்ல தம்பி:( விளங்கிடும்:(
****************************
அரை பிளேடு நீங்களாவது உதவிக்கு வந்தீங்களே!!! நன்றி
***************************
வாங்க வெங்கட் மிக்க நன்றி :)
**************************
துளசி கோபால் said...
" அட! நீயேம்மா செஞ்சே? என்னை ஒரு குரல் கூப்புட்டுருக்கக்கூடாது?"
இது ஒரு ஏறக்கொறைய 34 வருசத்துக்கு அப்புறம்:-)))///
டீச்சர் சொன்னா சரிதான்:)
*******************************
நன்றி இக்பால்
************************
நன்றி சேது
************************
நன்றி நளாயினி
**********************
முத்துலெட்சுமி said...
ஆமாங்க சஞ்சய் தானே ///
போனா போகுது பொழச்சு போகட்டும் விட்டு விடுங்க:)
**************************
Pondy-Barani said...
கிசு கிசு பதிவுக்கு அப்பறம்....
கல்யணத்துக்கு வாழ்த்துக்கள்.....
எல்லாம் ஒரு பிலனிங்தான்///
நல்ல பிலானிங்தான் :))
***************************
நன்றி திவ்யா
//
TBCD said...
நல்லா இருக்கு..
எங்க வூட்டுலே..ஆம்லேட் போடுறதே இல்லையே..
அப்ப எனக்கு கல்யாணமே ஆகவில்லை... :)
//
ஆகா இப்பிடி ஒரு நினைப்பா!!
//
J K said...
குசும்பன்: இன்னைக்கு ஸ்பெசலா ஆம்லெட் செய்யலாமா?
எனக்கு தெரியாதுங்களே.
குசும்பன்: நான் சொல்லித்தரேன். சின்ன வெங்காயம் வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பராக இருக்கும்.
குசும்பன்: .....மேற்கொண்டு சொல்லிதருகிறார்....
இப்படி சொன்னா???
//
கல்யாணம் வர்ற ஏப்ரல் மாசம் என்று அர்த்தம்
//
குசும்பன் said...
//இம்சை said...
எங்க வீட்டில கல்யாணம் ஆனதில இருந்து நான் தானே ஆம்லேட் போடரேன் அப்ப அதுக்கு ஒரு தனி பதிவு போடுங்க பாக்கலாம்...//
நாம் எல்லாம் விதி விலக்கு நண்பா! நமக்காக நாமே ஆம்லேட் போடலாம் பதிவு போட பிடாது:)) ரொம்ப டேமேஜ் ஆகிடும்!
//
இது சூப்பர். நாமெல்லாம் விதிவிலக்குகள்..
//
சுல்தான் said...
//இதில் கவனிச்சீங்கன்னா அவன் என்னம்மா என்று சொல்லுவது மற்றும் மாறவே இல்லை//
எதையாவது மாற்றி சொல்லி பார்த்தாலல்லவா தெரியும். எந்த பக்கம் வீங்குமோ என்று :)))
//
ரிப்பீட்டேய்
//
சுல்தான் said...
//ஆண்கள் வைக்கும் அன்பும் பாசமும் என்றுமே மாறாது//
ஆமாம். பயமும் பணிவும் என்றுமே மாறாது :))
//
ரிப்பீட்டேய்
அதெல்லாம் இருக்கட்டும்... எதை வச்சி எத்தனை வருஷ காதல் ஜோடினு கண்டுபிடிக்கிறது?
குறிப்பா.. 10 வருஷமா காதல் பண்ற ஜோடிய கண்டுபிடிகிறது எப்படினு சொன்னா சிலரை சோதிச்சி பாக்க கொஞ்சம் வசதியா இருக்க்கும். :P
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்டெய்
//
கோபிநாத் said...
தமிழ்மண மக்களுக்கு தெரிவிக்கிறது என்னான்னா இனிமேல் அண்ணன் திரு. குசும்பன் பதிவில் ஆம்லேட் போடுவது, சாம்பார் வைப்பது, ரசம் வைப்பது, பூரிகட்டை எப்படி உடைந்தது போன்ற தகவல் தான் வரும் ;)
//
கோபி செம ஷாட். சூப்பர்.
ஒரு மார்கமாதான்யா இருக்கு பதிவெல்லாம்.
இதைப் பார்க்கவும்:
http://www.hinduonnet.com/thehindu/holnus/004200802081966.htm
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-)
குசும்பா, எந்த நேரத்துலே இந்தப் பதிவைப்போட்ட்டீரோ?
இப்பப் பாருங்க, நாட்டுலே நிலமை என்ன ஆச்சுன்னு!!!!
http://epaper.dinamalar.com/ArticleImageEx.aspx?article=09_02_2008_013_017&type=1&mode=1
துளசி டீச்சர், அனானி ரெண்டு பேரும் ஒரே நியூஸை லிங்க் குடுத்துருக்கீங்க !!
ஆம்லெட்னாலே அலற வெச்சிட்டீங்க :(
குசும்பா பதில் சொல்லுப்பா அவங்க எத்தனை வருச ஜோடி!?!?
இப்படி சொன்னா???
//
கல்யாணம் வர்ற ஏப்ரல் மாசம் என்று அர்த்தம்////
சிவா எனக்கும் ஒரு காலம் வரும்! அப்ப வச்சுக்கிறேன் கச்சேரிய!!
****************************
ரிப்பீட்டு, செமசாட்டுன்னு கமெண்டா போடுறீங்க உங்களுக்கு துளசி டீச்சர் லிங் கொடுத்து இருக்கும் சம்பவத்தில் வரும் பெண் போல "அமைதியான" பெண் கிடைக்க வாழ்த்துக்கள்:)))
********************
துளசி கோபால் said...
குசும்பா, எந்த நேரத்துலே இந்தப் பதிவைப்போட்ட்டீரோ?
இப்பப் பாருங்க, நாட்டுலே நிலமை என்ன ஆச்சுன்னு!!!!////
என்ன கொடுமைங்க டீச்சர் இது, அவன் தான் வெங்கயாமும் வெட்டிக்கிட்டு இருந்து இருக்கிறான் அப்ப அந்த கத்திய புடுங்கி குத்துவது என்றால் அம்மே!!!! இனி நான் சைவம் சைவம் சைவம்!!!
*****************************
மங்களூர் சிவா said...
துளசி டீச்சர், அனானி ரெண்டு பேரும் ஒரே நியூஸை லிங்க் குடுத்துருக்கீங்க !!
ஆம்லெட்னாலே அலற வெச்சிட்டீங்க :(
குசும்பா பதில் சொல்லுப்பா அவங்க எத்தனை வருச ஜோடி!?!?///
என் சின்ன அறிவுக்கு எட்டவிள்ளை நண்பா யாராவது அனுபவஸ்தர்கள் சொல்வார்கள், பயத்தில் பேச்சு வரவில்லை!!! உங்களுக்கும் ஆம்லேட் பிடிக்கும் என்று கேள்வி பட்டேன்!!!
(நானே போட்ட) ஆம்லெட் சாப்டுட்டு போட்ட மறுமொழி:
குசும்பா, எது எப்பிடி ஆனாலும் ஆம்லெட் போடத் தெரியலேன்னா (ரங்கமனிக்கு) கஷ்டம்தான்.
செல சமயம், 'ரவுண்டு' கட்டி அடிக்கும்போது, நல்ல பிள்ளையா நாமளே ஆம்லேட் போட்டா, ஒரு 'ரவுண்டு' எச்சா (extra) சாப்பிடலாம் என்பது, ஆன்றோர்களின் கண்டுபிடிப்பு ;)
//
குசும்பன் said...
இப்படி சொன்னா???
//
கல்யாணம் வர்ற ஏப்ரல் மாசம் என்று அர்த்தம்////
சிவா எனக்கும் ஒரு காலம் வரும்! அப்ப வச்சுக்கிறேன் கச்சேரிய!!
//
நடத்துங்க!!
காலை வாரிக்கலைன்னா என்ன ஒரு நட்பு!!!!
//
குசும்பன் said...
ரிப்பீட்டு, செமசாட்டுன்னு கமெண்டா போடுறீங்க உங்களுக்கு துளசி டீச்சர் லிங் கொடுத்து இருக்கும் சம்பவத்தில் வரும் பெண் போல "அமைதியான" பெண் கிடைக்க வாழ்த்துக்கள்:)))
//
இவ்வளவு அமைதியான பெண்ணா வேணாம் சாமி வீடு கலகலப்பா இருக்காதே!!!
அட குசும்புக்கு டிப்ஸா என்று படிக்க வந்தா ஹா ஹா haa ஒரு முட்டைக்கு இத்தனை குசும்பா , கலக்கலான பதிவு நல்ல சிரிச்சாச்சு.
//அதுவும் செந்தில் தம்மாதூண்டு முட்டையில இவ்ளோ தத்துவமா? //ஹே ஹே
//ஆம்லட்டுக்குள்ள இவ்வளவு இருக்கா?
ஆமா..
அந்தக்குடும்பம் சுத்த சைவமா இருந்தா..?// haa haa
Post a Comment