Friday, April 22, 2011

கோ- பட விமர்சனம்

இரண்டு வருடங்களுக்கு பிறகு நானும் மனைவியும் சேர்ந்து போய் பார்த்தபடம், மகன் வயிற்றில் 3 மாதமாக இருந்த பொழுது கடைசியாக பார்த்த படம் அதே டைரக்டர் எடுத்த அயன். திரும்ப அதே டைரக்டர் எடுத்த “கோ” படத்தை வியாழன் அன்று இரவு பார்த்தோம். அப்ப இப்பவும் திரும்ப பாப்பா ஏதும் வயித்தில் இருக்கான்னு கேட்டிங்க பிச்சி பிச்சி! ஷார்ஜா மெகா மால் கிராண்ட் சினிமாஸில் கோ 11.30 ஷோ போகலாம் என்று நண்பர்கள் குடும்பத்தையும் அழைச்சிக்கிட்டு போனோம். போனதும் தான் தெரிஞ்சுது ஷோ கேன்சல். பிறகு துபாயில் இருக்கும் கலேரியாவில் போன் செஞ்சி கேட்டதுக்கு ”கோ” 12 மணிக்கு ஒரு ஷோ, 1 மணிக்கு ஒரு ஷோ என்றான். மணி 11.30 ஆவுது போய் ட்ரை செஞ்சி பார்க்கலாம் என்று ஒரு முடிவோடு கிளம்பினோ. 11.30 வரை இனியன் தூங்கவில்லை. சரி நாம இன்னைக்கு வெளியில்தான் நிக்கனும் என்று நினைச்சிக்கிட்டே போனோம், வழியில் கொஞ்சம் ட்ராபிக் இருந்ததால் கொஞ்சம் லேட் ஆகி சரியாக 12.00மணிக்கு போனோம். நண்பர் டிக்கெட் எடுக்க போனார் பார்த்தால் 1 மணி ஷோ கேன்சல் 12 மணி ஷோ மட்டும் தான் என்றார்கள் படம் போட்டு 5 நிமிடம் ஆகும் என்றார்கள்.

படம் பார்த்தால் டைட்டில் ஓடுவதிலிருந்து பார்க்கவேண்டும் என்ற கொள்கையை விட்டுக்கொடுத்துவிட்டு போனோம் பார்த்தால் அப்பொழுதுதான் டைட்டில் ஓடிக்கிட்டு இருந்தது. வரும் பொழுது இனியன் காரிலேயே தூங்கிவிட்டது கொஞ்சம் சந்தோசமாக இருந்தது. ஆனால் சரியா 30 நிமிடத்தில் முழித்ததும் பக்குன்னு இருந்துச்சு...ஆனா அழாம அப்படியே உட்காந்து 2.30 வரை படம்பார்த்தான்.

படம் ஆரம்பமே பேங் கொள்ளை ...கொள்ளையர்களை சேஸ் செஞ்சி பாஞ்சி, எம்பி , எகிறி என்று எல்லா ஆங்கிளிலும் போட்டோ எடுக்கும் பிரஸ் போட்டோ கிராப்பராக ஜீவா அறிமுகம் ஆகிறார். இவர் எடுத்த போட்டோக்களின் உதவியால் கொள்ளைக்கூட்டம் பிடிபடுகிறது. செம ஜாலியான கொலிகாக பியா, அடக்கமான பொண்ணாக கார்த்திகா. (சிம்பு சொன்னது சரிதான், இந்த பெண் ஹீரோயினாக மட்டும் இல்ல ஹீரோயின் பிரண்டாக நடிக்கக்கூட லாயக்கு இல்லை) படத்தில் இந்த பெண்ணை தவிர மீதி அனைத்தும் அருமையாக இருந்தது.

ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்று அனைவரும் செய்யும் தில்லுமுள்ளு திருகுதாளங்களை எல்லாம் தின அஞ்சல் பேப்பர் முதல் பக்கத்தில் ஜீவாவின் அதிரடி போட்டோக்களால் போட்டு டார்டாராக கிழிக்கப்படுகிறது. IIM, DR என்று படித்தவர்கள் கொண்ட டீம் ஒன்று ”இறகு” சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.
பலதடைகள்,பல அவமானங்கள், பல இழப்புகளை சந்திக்கநேரிடுகிறது. அதையெல்லாம் மீறி தேர்தலை சந்திக்கிறார்கள். முடிவு என்ன ஆனது என்பதை மே 13 தேதிவரை காத்திருக்காமல் தியேட்டரில் போய் பார்த்து தெரிஞ்சுக்குங்க.

அமளி துமுளி பாட்டுக்கான லொக்கேசனும் பாடல் படமாக்கப்பட்ட விதமும் அவ்வளோ அருமை. பாம் வெடித்து நண்பர்கள் இறந்தசோகத்தில் ஜீவா இருக்கும் பொழுது ஜீவா கார்த்திகாவுடன் டூயட் பாடுவது போல் வருவது படத்தில் ஒட்டவே இல்லை. தியேட்டரில் இருப்பவர்கள் கூட என்ன கொடுமை இது என்றார்கள்.

காமெடிக்கு என்று தனியாக ஆள் எதுவும் இல்லாமல் அதையும் ஜீவாவே செய்திருக்கிறார்... அவரோட ஹெட் என்னாடா போட்டோ எடுத்திருக்க எல்லா போட்டோவும் ஷேக் ஆகியிருக்கு என்று சொல்லும் பொழுது சரி சார் அடுத்த பேங் கொள்ளையடிக்கும் பொழுது கொள்ளையனுங்களை போஸ் கொடுக்க சொல்லி நின்னு நிதானமா ஜூம் போட்டு எடுக்கிறேன் என்று சொல்லுவதும். பேப்பரில் வந்த அழகிகள் நியூஸை நான் தான் எழுதினேன் அவுங்க எல்லாம் ஒரு நைட்டுக்கு நைட்டுக்கு 10 ஆயிரமாம் சம்பாரிக்கிறாங்களாம்...அப்படின்னா நீ எனக்கு எவ்வளோ தருவ என்று பியா கேட்கும் பொழுது 108 ரூபாய் என்று சொல்லிட்டு...பக்கத்திலிருக்கும் கார்த்திகாவுக்கு எவ்வளோ தரலாம் என்று கேட்டதுக்கு...எல்லாம் ஓக்கே ஆனா ஹைட்தான் கொஞ்சம் சாஸ்தி வருகிறவனுக்கு என்னா ஸ்டூலா கொடுத்து அனுப்பமுடியும் என்று சொல்லும் பொழுது தியேட்டரே அதிருகிறது.

முதல் பாதி விறுவிறுப்புடன் போனது...இரண்டாம் பாதி சற்று நீளம். ஆனால் படம் ஓக்கே. பொலிட்டிக்கள் த்ரில்லர்.

Sunday, April 3, 2011

ஸ்ரீசாந்த் ஸ்பெசல் 3-4-2011




இப்படி எல்லாம் இந்திய கொடிய போத்திக்கிட்டாதான் இன்னைக்கு நான் இந்திய டீம் வெற்றிக்காக விளையாடியதா நம்பவைக்க முடியும்.









**********

பெட்டிங் கட்டுபவர்: ஒருத்தன் கூட ஸ்ரீசாந்த் விக்கெட் எடுப்பான்னு பெட்டு கட்ட மாட்டேங்கிறானுங்களே...இப்படியே போனா கம்பெனி நஷ்டத்தில் போய்விடுமே!

***********
கங்குலி: வாப்பா ஸ்ரீசாந்த் இப்படி பக்கத்துல உட்காரு...

ஸ்ரீசாந்த்: என்ன அண்ணே ரொம்ப பாசமா கூப்பிடுறீங்க?

கங்குலி: எப்படியும் அடுத்த IPLல் எனக்கு ஏற்பட்ட கதிதான் உனக்கும் அதான் இப்பவே சீட் ரிசர்வ் செஞ்சி வைக்கிறேன்...

*********
பழமொழி: கேட்கிறவன் கேனையனா இருந்தா எலி ஏரோப்பிளேன் ஓட்டும் என்று சொல்லுவானாம்.

புதுமொழி: கேட்கிறவன் கேனப்பயலா இருந்தா ஸ்ரீசாந்த் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தான்னு சொல்லுவானாம்.

********
ஜெயிலர்: உனக்கு இன்னைக்கு தூக்கு தண்டனை எதுனா கடைசி ஆசை இருந்தா சொல்லு!

கைதி: ஸ்ரீசாந்த் விக்கெட் எடுப்பதை பார்க்கனும்.

ஜெயிலர்: அது நடக்காத விசயம் வேற எதுனா கேளு...

கைதி: அப்ப ஸ்ரீசாந்த் மெயிடென் ஓவர் போடுவதை பார்க்கனும்.

ஜெயிலர்: இதை எல்லாம் காதால கேட்பதுக்கு பதில் இந்த கயித்துல நானே தொங்கிடுவேன்.

Saturday, April 2, 2011

ஜம்கே பகட், ஜோர் சே லகட் லகாவ்! ஹே லகாவ்! ரிவீட் சாட்


சிலநேரங்களில் ஆண்டவன் சோதிப்பான் ஆனா கைவிட மாட்டான்...அதுமாதிரி தான் நேற்றைய உலககோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி அமைந்தது.

ஸ்ரீசாந்த் முதல் மேட்சில் பங்களாதேஷ்க்கு எதிராக காட்டிய பர்மான்சில் ஆடிப்போய் இருந்த நமக்கு தோனி என்ன நம்பிக்கையில் இறுதிப்போட்டியில் ரிஸ்க் எடுக்கிறார் என்று கோவம் கோவமா வந்துச்சு. அந்த கோவத்தை விட காலையில் இருந்து இன்று இறுதிப்போட்டியில் நம்ம ஸ்ரீசாந்த் களிக்குமா களிக்கனும் என்ற அனைத்து மலையாளிதாரங்களின் விருப்பம் என்று எல்லாம் புலம்பிக்கிட்டு இருந்த ரேடியோ சானல்ஸ், மற்றும் சேட்டன்களை நினைச்சால் தான் எனக்கு வயிறு கலக்கியது. இவன் பாட்டுக்கு இரண்டு விக்கெட் எடுத்துட்டா
ங்கொயாலுங்க கிரிக்கெட்ன்னு ஒரு விளையாட்டு அழிஞ்சு போனாலும் வாய் ஓயாம பேசுவானுங்களேன்னு ஒரு பயம் இருந்துக்கிட்டே இருந்துச்சு.

ஆனா ஸ்ரீசாந்த் ஓவரை உட்டு பிரி பிரின்னு பிரிச்சதில் பயபுள்ளைங்க இன்னைக்கு வாயே திறக்கவில்லை. அவனுங்களையும் ஆப் செஞ்சாச்சு, நம்ம கப்பையும் ஜெயிச்சாச்சு. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!

***********
5 முறை வேர்ல்ட் கப்பில் விளையாடியும் கப் வாங்காவில்லையே என்ற சச்சின் குறை தீர்ந்ததுதான் மிகப்பெரிய சந்தோசம்...போன முறை வேர்ட்ல் கப்பில் டாப் ஸ்கோர் அவருதான், இந்த முறை 18 ரன் வித்தியாசத்தில் இரண்டாமிடம்.

*********
ஒரு சிறந்த தலைவனுக்கான பண்பு தோனியின் பேச்சில் நேற்று தெரிந்தது...ஏன் அஸ்வினுக்கு பதில் ஸ்ரீசாந்த், ஏன் யுவராஜுக்கு பதில் நீ முன்னாடி இறங்கின என்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லவேண்டியிருந்திருக்கும் அதனால் தான் பொறுப்பா ஆடினேன் என்றார். அதுமாதிரி ஜெயித்ததும் ஆர்பட்டமும் இல்லை, ஆர்பாட்டத்திலும் இல்லை.

********
350 எடுத்திருந்தாலும் இவிங்ககிட்ட ஜெயிச்சிருக்க முடியாது போலன்னு ஸ்ரீலங்கா கேப்டன் சொன்னதுதான் ஹைலைட்.

********
சேவாக் முதல் ஓவரிலேயே டக், சச்சின் 18 ரன்னில் அவுட் என்றதுமே ஸ்ரீலங்கன்ஸ் அனைவரும் கப்பு நமக்குதான் என்று கனவில் இருந்திருப்பானுங்க..நம்மில் பலரும் அட அவ்வளோதான் என்று நினைத்திருப்போம்... ஆனால் நம்பிக்கையோட போராடிய கம்பீர், கோலி, தோனி தான் ரியல் ஹீரோஸ். ஒரு வேர்ல்ட் கப் பைனலில் அதுவும் இரண்டு விக்கெட் இழந்த நிலையில் சேசிங்கில் அத்தனை பிரஸ்சரோடு 97 வரை ஸ்கோர் செய்த கம்பீர், அவரோடு களத்தில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் விக்கெட் எதுவும் விழாமல் நின்ற கோலி அதன் பிறகு வந்த தோனி ஆகியோர் ஸ்ரீலங்கன்ஸ் கனவை தகர்த்துவிட்டார்கள்.

*******