Showing posts with label ஐடியா டெப்போ. Show all posts
Showing posts with label ஐடியா டெப்போ. Show all posts

Wednesday, August 5, 2009

ட்விட்டர் அப்படின்னா???

கொஞ்ச நாளைக்கு முன்னாடி எல்லா ”பிரபல பதிவருங்க” பிளாக்கின் சைட் பாரில் நான் ட்விட்டுறேன் நீ ட்விட்டுறியா? என்னோடு ட்விட்ட, என்னோடு நொட்டன்னு ஏகப்பட்ட விளம்பரங்கள் சரி என்ன கருமாந்திரமோ இருந்துட்டு போவுட்டும் நமக்கு எதுக்கு அதெல்லாம் இங்க ஒரு கடைக்கே ஆள் சேர்க்கமுடியல இதுல எதுக்கு ட்விட்டு அது இதுன்னு எதுக்குன்னு பேசாம இருந்துட்டேன்.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஆயகலைகள் அனைத்தையும் கரைச்சு குடிச்சவரான அன்பு குருஜி சுந்தரும் ஒரு பதிவில் எனக்கு ட்விட்டர்
புரியவில்லை அல்லது பிடிக்கவில்லை என்று சொல்லி வேறு ஏதோ சொல்லப்போக சுரேஷ்கண்ணனுக்கும் அவருக்கும் சண்டை வந்தது.
என்னடா என் குருஜிக்கு வந்த சோதனை என்றும் நான் யோசித்துக்கொண்டு இருந்தபொழுது என் அறை நண்பர் சிவராமன் எப்பொழுதும் ட்விட்டுவார் , ட்விட்டரை பற்றி அடிக்கடி பேசுவார் சில பதிவுலக ஜாம்பாவான்கள் கூட அங்க சோபிக்கமுடியவில்லை என்றும் சொன்னார் அட நமக்கு எதுக்கு வம்பு என்று இருந்துவிட்டேன்.

திடிர் என்று ஒரு நாள் ஞானோதயம் வர அப்படி என்னதான் அதில் இருக்குன்னு பார்க்கலாம் என்று ஒரு யூசர் நேம் ஐடி கிரியேட் செஞ்சு பார்த்தேன் ஒன்னும் பிடிபடல அப்படியே விட்டுவிட்டேன், அப்புறம் பாலோயர்ஸ் சேர சேர என்னடா இது என்று எட்டிபார்க்க ஆரம்பிச்சேன் கொஞ்சம் கொஞ்சமாக சிவராமன் , புரூனோ, இளா எல்லாம் சொல்லி கொடுத்தாங்க புரிஞ்சுது அதான் உங்களுக்கு விளக்கமாக சொல்லலாமேன்னு இந்த பதிவு.

ஸ்கூல் படிக்கும் பொழுது ஒரு பாராகிராப் கொடுத்துட்டு அதை சுருக்கி அர்த்தம் மாறாமல் ஒரு 4 வரியில் எழுத சொல்வார்கள். அதுபோல் ஒரு சம்பவம் சொல்லி அதை டெலிகிராபிக் மெசேஜ்ஜாக எழுத சொல்வார்கள்

உதாரணத்துக்கு திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் புதுக்குடி கிராமத்தை சேர்ந்த குவாட்டர் கோவிந்தனின் மனைவியான பரமேஸ்வரி வயது 68 இன்று காலை எழுந்து தண்ணீர் பிடிக்க பைப்படிக்கு சென்ற பொழுது கால் வழுக்கி கீழே விழுந்து மண்டை உடைந்து கபால மோட்சம் அடைந்தார். என்ற செய்தியை டெலிகிராபிக் மெசேஜ்ஜாக எப்படி சொல்வது?


”குவாட்டர் கோவிந்தன் மனைவி பரமேஸ்வரி ”கோ”யிந்தா கோயிந்தா” ஸ்டார்ட் இமிடியட்லி


இவ்வளோ தான் இது எழுத தெரிஞ்சால் போதும் நீங்கள் ட்விட்டராக ஆகலாம்! ஏன் இப்படி என்றால் அங்க அதிகபட்சமாக 140 எழுத்துக்கள் தான் டைப் செய்ய முடியும்!

நாம எல்லாம் குறும்படத்தையே 1 மணி நேரம் எடுக்கும் ஆட்களை வெச்சு இருக்கிறோம், சிலர் எழுதும் பதிவை ஸ்குரோல் செஞ்சு பார்க்கவே 5 நிமிடம் ஆவுது(படிக்க இல்லை), இவர்களை எல்லாம் வெச்சுக்கிட்டு எப்படி ட்விட்டுவது என்று கேள்வி கேட்டால் பதில் என்னிடம் இல்லை:)

அப்புறம் என்னத்த ட்விட்டுவது?

எதை பற்றி வேண்டும் என்றாலும் ட்விட்டலாம் இதுதான் என்று வரைமுறை இல்லை

எடுத்துகாட்டாக

காலையில் எழுந்து ஆபிஸ் வந்தேன் பஸ்ஸில் கூட்டம் அதிகம்! இது ஒரு ட்விட்டர் மெசேஜாக போடலாம்

பாலோயர்ஸ் அதிகமாக இருந்தால் அச்சிச்சோ அது என்ன பஸ் என்று கேள்வி கேட்பார்கள்?

நீங்களும் அது 47A எப்பொழுதும் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று சொல்லலாம்!

அவரும் கூட்டம் அதிகமாக இருக்கா ஏன் அரசு அதிக பஸ் விடவில்லையா என்பார்

நீங்களும் எத்தனை பஸ் இருந்தாலும் பத்தாது என்று சொல்லலாம்.

இப்படியே மாறி மாறி ட்விட்டலாம்.

என்னது? இத பேச எதுக்கு ட்விட்டனும் சாட் விண்டோவில் பேசிக்கலாமேன்னு கேட்டால் எனக்கு பதில் சொல்லதெரியாதுங்கோ!

நாலு பேரு பாலோயரா ஆவனும் என்றால்

நேற்று மன்மோகன் சிங் பேசிய அபத்தமான பேச்சு லிங் என்று அந்த செய்தி வந்த பக்கதுக்கு லிங் கொடுக்கனும். (மன் மோகன் பேச்சுன்னாலே அபத்தமாக இருக்கும் என்பது தெரிஞ்சதுதான் இருந்தாலும் லிங் கொடுக்கனும்),

லாலு பேசிய பேச்சுக்கு லிங் என்று லிங் கொடுக்கனும் (முக்கியமாக இவை எல்லாம் ஆங்கிலத்தில் இருப்பது நல்லது, அப்பொழுதுதான் ஒரு கெத்து கிடைக்கும்) நீங்க பாட்டுக்கு தினதந்திக்கு எல்லாம் லிங் கொடுத்தால் ஒன்னும் சொல்வதுக்கு இல்லை:)


இது என்னடா வம்பா போச்சு இப்படி படிச்சுதான் அதுக்கு லிங் கொடுக்கனுமா? அதெல்லாம் சரி வராது நான் தருமி பரம்பரை என்றாலும் ஒன்னும் பிரச்சினை இல்லை நீங்க கேள்வி கேட்கலாம். எதை பற்றி?

சுண்டைகாய் பொறியல் செய்முறை லிங் கிடைக்குமா?

மனைவி செய்யும் சாம்பாரின் ருசியை மாற்றுவது எப்படி?

ராக்கமா கைய தட்டு பாட்டு எங்கு டவுன் லோட் செய்யலாம்? இப்படி எல்லாம் தோன்றியதை கேட்கலாம்!

அப்புறம் முக்கியமான விசயம் நீங்க நாலு பேருக்கு பாலோயரா ஆவனும்
அப்படி ஆனா அவுங்க ட்விட்டுவது உங்க பேஜில் வரும் யார் யாரை பாலோயரா ஆக்கலாம் யார் யார் எப்படி எப்படி?

அங்கு நம்ம கேள்வி நாயகன் புருனோ வழக்கம் போல் புள்ளிவிவரங்களுக்கான லிங்கோடு ட்விட்டுவார். சமீபத்தில் விமான ஸ்ட்ரைக் பற்றி இவரும் பத்ரியும் காரசாரவிவதாம் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க, நீ என்னா செஞ்சேன்னு கேட்குறீங்களா? இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலைன்னு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன். புள்ளி விவரங்கள், செய்திகள் வேண்டும் என்றால் இவர்களுக்கு பாலோயரா ஆவனும்...என்ன இளையராஜாவை பற்றி மட்டும் பேசாம இருக்கனும் புருனோவிடம்:)

அப்புறம் எழுத்துலக ஜாம்பாவான்கள் பா.ரா இருக்காக, சொக்கன் இருக்காக, எப்பவும் சீரியசாகவே பேசும் ஐகரன்பிரகாஸ், பாஸ்டன் பாலா, அன்புடன் பாலா இவுங்க எல்லாம் இருக்காக.


வில்லங்கமான டாப்பிக் ஆள் வேண்டும் என்றால் TBCD

கவிமடதளபதி பினாத்தலார்

அப்புறம் ஜாலியான்னா ஆளா வேண்டும் என்றால் இலவச கொத்தனார், கானா பிரபா

மொக்கையாக என்றால் அதிஷா, நான்:) இப்படி பலர் இருக்காங்க அப்ப அப்ப அய்யனார் நான் வெச்ச மீன் குழம்பை சாப்பிட வருகிறீர்களா என்று தலைய காட்டுவார் இப்பதான் ஜ்வோராம் சுந்தர், பைத்தியகாரன் எல்லாம் சேர்ந்து இருக்காங்க இவர்கள் எல்லாம் சீக்கிரம் பார்ம்க்கு வரும் முன்பே சேர்ந்துவிடுவது நல்லது.

தத்துவம்: நீயும் பிரண்டும் டைப்பினா அது சாட்டு, நீ மட்டும் டைப்பினா அது ட்விட்டு!

டிஸ்கி: சுரேஷ்கண்ணனுக்கு போட்டியாக பிளாக் ஆரம்பித்தேன் என்று அண்ணாச்சி போன சந்திப்பில் சொன்னார், (அவருக்காக இந்த டிஸ்கி) சுரேஷ்கண்ணன் ட்விட்டரிலும் ட்விட்டுகிறார் சீக்கிரம் வாங்க அண்ணாச்சி!

Wednesday, February 4, 2009

பப்ளிக்கா ஒண்ணுக்கு அடிக்காதீங்க! (அடல்ட் “ஒன்”லி பதிவு)

ஆத்திரத்தை அடக்கினாலும் உச்சாவை அடக்காதீங்க என்று ஒரு சொல் வழக்கு உண்டு! எதை எதையோ மறந்த நம்ம பயபுள்ளைங்க இதை மட்டும் கரெக்ட்டா கடைப்பிடிச்சுக்கிட்டுவரானுங்க. ஊரில் எத்தனை எத்தனையோ மாற்றம் ஆனால் பஸ் ஸ்டாண்ட், முட்டு சந்து, தெருமுக்கு, குட்டி சுவரு, என்று எந்த பாரபடசமும் இன்றி நம்ம ஆளுங்க யூரின் டேங்கைகாலி செஞ்சுட்டு போய்டுறானுங்க அது மட்டும் மாறவே இல்லை. அதுவும் போகும் பொழுது ரவுண்ட் ரவுண்டா டிசைன் போட்டுக்கிட்டு, சில பேர்
என்னமோ போனாவை புடிச்சு செக்கில் கையெழுத்து போடுவது போல் படம் வரைவானுங்க. குட்டி சுவர் என்றால் ஈ.ஸி.ஜி மாதிரி லைன் லைனா போடுவானுங்க. சில சமயம் யார் ரொம்ப தூரம் எட்டி அடிக்கிறானுங்க என்று போட்டி வேற!


நம்ம பயபுள்ளைங்களுக்கு இருக்கும் ஒரு பழக்கம் ஒருத்தன் ஒண்ணுக்கு அடிக்க ஆரம்பிச்சா டக்கு டக்குன்னு மத்தவனுங்களுக்கும் ஒண்ணுக்கு முட்டிக்கிட்டு வந்து அப்படியே லைன் கட்டிநின்னு ஒரு சின்ன ஓடைய உருவாக்கிவிட்டு விட்டு போய்டுவானுங்க.



இதே மாதிரி கண்ட கண்ட இடத்தில் ஒண்ணுக்கு அடிக்கும் பொழுதுதான் நம்ம தல நர்சிம் உள்ளேவருகிறார் ஏதாச்சும் செய்யனும் பாஸ் என்று!. ச்சே அவுங்க ஒண்ணுக்கு அடிக்கிற இடத்துக்கு இல்லைங்க. என் நினைவில் வருகிறார் என்று சொல்ல வந்தேன்.

இதே மாதிரி கண்ட கண்ட இடத்தில் எல்லாம் ஒண்ணுக்கு அடிச்சு இடத்தை நாற அடிப்பதை எப்படி எல்லாம் தடுக்கலாம் என்று மல்லாக்க படுத்துக்கிட்டுயோசிச்சதில் பல ஐடியா தோன்றியது.

1) எங்க ஊரில் திறமையான பசங்க நிறைய பேர் இருக்கானுங்க சும்மா டைம் பாஸ்க்கு ஸ்கூலுக்கு போய்ட்டு படிப்பு வராம ஒரு நிலையான வருமானமும் இல்லாமசுத்திக்கிட்டு இருப்பானுங்க, அவனுங்களுக்கு பொழுது போக்கு வேலியில் போகும் ஓணானை எட்டி நின்னு ஒரு சின்ன கல்லால் அடிச்சு அது வாயில புகையிலை வெச்சு டான்ஸ் ஆட உடுவது, அது வாயில் பீடிய வெச்சு பீடி அடிக்கவிடுவது என்று பைசா பிரோஜனம் இல்லாத வேலைய பார்த்துக்கிட்டு இருக்கானுங்க. அப்படி ஓணான் அடிப்பதில் திறமையான ஆளுங்களை கொண்டு வந்து பஸ் ஸ்டாண்ட் பக்கம் உட்கார வெச்சு கையில கொஞ்சம் கல்லை கொடுத்தோம் என்று வெச்சுக்குங்க எவனாவது ஒண்ணுக்கு அடிக்க ஜிப்பை திறந்து வெளியே எடுத்தானுங்க “டிங்காண”வை ஓணான் அடிப்பது போல் ஒரே அடி அடிச்சுடுவானுங்க. இப்படி அதிகமாகஅடிச்சு விரட்டுபவர்களுக்கு மாதம் ஒரு சம்பளம் போட்டு கொடுத்தா அவன் பொழப்பும் ஓடும் பஸ் ஸ்டாண்டும் கிளீனா இருக்கும். (ஓணான் பிடிக்க இன்னொரு முறை வெளக்கமாத்து குச்சியில் சுருக்கு போட்டு புடிப்பது அந்த முறையில் கை தேர்ந்தவர்கள் இந்த வேலையில் வாய்ப்பு வழங்கபடாது)

2) முதலில் சொன்ன யோசனையில் கொஞ்சம் ரிஸ்க் அதிகம் கல்லு கொஞ்சம் வேகமாக போய் பட்டுவிட்டால், அதனால் அதுக்கு பதில் பிளாஸ்டிக் குண்டுகள் நிறப்பிய டுப்பாக்கி கொடுக்கலாம், பிளாஸ்டிக் குண்டு என்பதால் ரிஸ்க் கம்மி, அதோடு மட்டும் இன்றி விவேக்கிடம் கேட்பது போல் எதடா சுட்ட? என்று கேட்டால் மைனர் குஞ்ச சுட்டேன் என்று டயலாக் வேற சொல்லிக்கலாம். (இதுக்கு டிரைனிங் அக்டாமி ஆரம்பிப்பது, ”குறி” தவறாமல் சுடுபவர்களுக்கு பதக்கம் வழங்குவது என்று பல ஐடியா இருக்கு)

3) கால் வெச்சா வெடிக்கும் கண்ணி வெடி போல் ஜொய்ங்ங்ங் என்று உச்சா அடிக்கும் பொழுது உச்சா பட்டா ”டமார்” என்று வெடிக்கும் சில பல வெடிகளை கண்டுபிடிக்கவேண்டும், அப்படி வெடிச்சுது என்றால் பயத்தில் வந்த உச்சாவும் ரிவர்ஸ் கியர்போட்டு உள்ளே ஓடிவிடும்.

4)ஒருவித கெமிக்கல் கண்டுபிடிக்கவேண்டும் அதை பொது இடங்களில் தூவ வேண்டும் அந்த கெமிக்கலுக்கு இரு பயன்கள் இருக்கவேண்டும்

4.1) டிங்கானாவின் அளவு ஒருமுறை பப்ளிக்கா உச்சா போனால் ஒரு மி.மீ குறையவேண்டும். நம்ம பயபுள்ளைங்களுக்கு எப்பொழுதுமே இருக்கும் ஒரு டவுட் “அளவை” பற்றியது இது போதுமா போதாதா? இதை வெச்சு வாழ்கைய ஓட்டமுடியுமா? எத்தனை முறை மாத்ரூபூதம் டீவியில் தோன்றி யானைய அடக்கும் அங்குசம் சின்னதுதான் என்று சொன்னாலும் என்று ஒருவித குழப்பத்தோடயே உலாவிக்கிட்டு இருப்பானுங்க அப்படி இருக்கும் பொழுது ஒவ்வொரு முறையும் ஒரு மி.மீ குறையும் என்றால் உள்ளதும் போச்சுடாநொல்லகண்ணா என்று பப்ளிக்கா வெளியே எடுக்கவே பயப்படுவானுங்க!

4.2) இரண்டாவது பலனாக ஒரு முறை பப்ளிக்கா உச்சா போனால் ஒரு மூன்று நாளைக்கு ”ஒன்னியும்” செய்யமுடியாதபடி அந்த கெமிக்கல் பவுடர் வேலை செய்யனும்.

5) பஸ் ஸ்டாண்டில் பெரிய ஸ்கிரீன் வெச்சு மாய லென்ஸ் மூலம் ரொம்ப சின்னதா புரோஜெக்ட் செஞ்சா பயந்து போய் ஓடி போய்டுவானுங்க.

இப்படி டிராப்பிக்கை, எச்சில் துப்புவதை, சிகரெட் பிடிப்பதை எல்லா தடுக்க பல யோசனை வெச்சு இருக்கேன், இதுக்கு மேலும் ஏதாச்சும் செய்யனும் பாஸ் என்று யாராவது கேட்டிங்கன்னா ஒன்னு ஒன்னாக வெளியே வரும்.


டிஸ்கி: உங்களுக்கும் ஏதும் இதுபோல் யோசனை இருந்தால் பின்னூட்டத்தில் கூச்சப்படாம சொல்லுங்க பாஸ்!