Showing posts with label பதிவர் புத்தகம். Show all posts
Showing posts with label பதிவர் புத்தகம். Show all posts

Wednesday, February 25, 2009

அச்சுத்துறையில் ஒரு புதிய மாற்றத்தை கொடுக்கும் கோடாக் நெக்ஸ் பிரஸ்!

அச்சுத்துறையில் ஆப்செட்டுக்கு நிகரனா ஒரு டிஜிட்டெல் பிரிண்டிங் மெசின் இல்லையே என்ற குறையை போக்க வந்திருப்பதுதான் Kodak Nexpress S3000, ஆப்செட்டில் இருக்கும் பெரும் குறையே அது எடுத்துக்கொள்ளும் காலம்தான் ஒரு 5 பக்கம் உள்ள ஒரு கையடக்க புத்தகத்தை பிரிண்ட் செய்யனும் என்றால், பிளேட் போட்டு, பின் கலர் கரெக்சென் செய்து ஒரு புரூப் பிரிண்ட் பார்க்க குறைந்தது 3 நாட்களாவது ஆகும், ஏற்கனவே அவர்கள் வைத்து இருக்கும் ஆர்டரை பொருத்து உங்களுக்கு புரூப் கொடுக்க ஆகும் காலம் கூடலாம். ஆனால் இப்பொழுது பிலிம் Based ஆப்செட் பிரிண்டிங் மெசின்கள் பல வந்துவிட்டாலும் ஒரு பிலிம் பிளேட்டுக்கு 250 Dhs ஆகிறது.

டிஜிட்டெட் பிரிண்டிங்கில் இதுவரை இருந்த பிரச்சினை ஆப்செட் பிரிண்டிங்கில் உபயோகப்படுத்தும் பேப்பர்களை உபயோகப்படுத்த முடியாததுதான், உட்பிரிபேப்பர், ஐவெரி பேப்பர்களை மட்டுமே பயன்படுத்தமுடியும் அதுவும் அதிகப்பட்சம் 300gsm அப்படி பயன்படுத்தும் பொழுதும் முதல் ஒரு 100 பிரிண்ட் சரியான கலரிலும் அதன் பிறகு போகபோக கலர் மாறி மாறி வரும் , பின் கொஞ்ச நாட்கள் போய்விடும் இதுபோன்ற பிரச்சினைகள் Nexpress ல் இல்லை.

Nexpressல் 60gsm பேப்பர் முதல் 450 gsm பேப்பர் வரை உபயோப்படுத்த முடியும் ஆப்செட்டில் பயன்படுத்தும் அனைத்து வகையான பேப்பர்களையும் இதில் பயன்படுத்தமுடியும், இது டோனர் Based பிரிண்டிங் முறை என்றாலும் ஆப்செட்டுக்கு மிக அருகில் அதாவது 92%வரை குவாலிட்டி இருக்கிறது. ஒருவர் 10 பக்கம் கொண்ட புத்தகத்தை டிஜிட்டலில் செய்வது என்பது மிகவும் கடினம் ஏன் என்றால் டிஜிட்டெலில் front & back பிரிண்ட் செய்யும்பொழுது பிரிண்ட் இம்பிரசன் மாறும் அதாவது முதல் பக்கத்தில் பிரிண்டிங் 7.5mm தள்ளி ஆரம்பித்தது என்றால் பின் பக்கம் அதே பேப்பரில் பிரிண்ட்செய்யும் பொழுது 7.1mmலோ அல்லது 7.8mm லோ ஆரம்பிக்கும் ஆனால் இந்த Nexpressல் Reversible பெல்ட் டெக்னாலஜியால் முதல் பக்கத்தில் 7.53mm தள்ளி இம்ப்ரெசன் விழும் என்றால் பின் பக்கத்திலும் 7.53mm அதே இடத்தில் சரியாக இம்ப்ரெசன் ஆகும்.


அனைத்து டிஜிட்டெல் மெசின்களும் 4 கலரை கொண்டு இயங்குவதுதான் CMYK ஆனால் இதில் 5வதாக ஒரு கிளியர் இங் என்று சொல்லப்படும் ஒன்றால் வாட்டர் மாஸ்க் போன்ற பிரிண்டுகளும் பிரிண்ட் செய்யமுடியும்.


இந்த 5வது கலரின் பயன்கள்.


1)வாட்டர் மாஸ்க் போன்ற பிரிண்ட்டுகள் பிரிண்ட் செய்வது!


2)புரொடெக்சன் கோட் ஆகவும் இது பயன் படுகிறது தண்ணீர், விரல் அச்சு போன்றவற்றில் இருந்து காக்க இந்த 5வது கலர் ஆகிய கிளியர் இங் பயன்படுகிறது.கிளாஸி பினிசிங் கொடுக்கவும் இது பயன்படுகிறது, இந்த மெசினோடு கிளாசிங் யூனிட் என்று ஒரு இலவச இனைப்பும் கொடுக்கிறார்கள் 5வது இங் கோட்டிங்கொடுத்து இருந்தால் இதன் மூலம் முகம் பார்க்கும் அளவுக்கு பள பள பிரிண்டிங் ரெடி.


3) செக் புக்கில் இருக்கும் மேக்னடிக் பார் கோட் பிரிண்டிங்


4) டச் பீல் என்று சொல்லபடும் முறை, (ஒரு உருவத்தை பிரிண்ட் செய்தால் அதை தொட்டு என்ன உருவம் என்று உனரசெய்யும் முறை) ஆகியவையாகும்.


இவை அனைத்தையும் விட Variable Data பிரிண்டிங் எனப்படும் முறை இந்த மெசினில் பிரிண்ட் செய்யலாம். உதாரணத்துக்கு பள்ளிகூடத்தில் படிக்கும் மாணவர்களின் பெற்றோருக்கு அவர்கள் பெயர் போட்டு ஒரு லெட்டர் அனுப்பவேண்டும் என்று அந்த நிர்வாகம் நினைக்கிறது, 5000 பேருக்கு அனுப்பவேண்டிய லெட்டரை மட்டும் தனியாக பிரிண்ட்செய்துவிட்டு பின் பெயர் வரும் இடத்தில் தனியாக எழுத வேண்டும் அல்லது வேறு முறையை உபயோக்கிக வேண்டும் ஆனால் இதில் பெயர்கள் அடங்கிய டேட்டாபேஸ் பைலை எந்த இடத்தில் பெயர் வரவேண்டும் என்று சொல்லிவிட்டால் போது அழகாக அவர்கள் பெயர் அடங்கிய லெட்டர்ரெடி ஆகிவிடும் அது போல் தன் நிர்வாகத்தில் பணி புரியும் 10 ஆட்களுக்கு மாதாந்திர காலெண்டரில் இருக்கும் 12 பக்க படத்திலும் அவரவர் பெயர் போட்டுகொடுக்கவேண்டும் என்றாலும் இதில் சாத்தியம் மொத்தம் 10 காலெண்டர் பத்து பெயர்களிலும் ரெடி ஆகிவிடும்.


ஒருவர் தான் எழுதிய கவிதை தொகுப்பை ஒரு பத்து பேருக்கு புத்தக வடிவில் பிரிண்ட் செய்து கொடுக்கவேண்டும் என்று நினைக்கிறார் என்றால் அவரால் ஆப்செட்டில் பிரிண்ட் செய்யமுடியாது, 10 புத்தம் பிரிண்ட் செய்ய 50 புத்தகம் பிரிண்ட் செய்யும் அளவுக்கு முதலில் பேப்பர் வேஸ்ட் ஆகும், ஆனால் இதில் 5 புத்தகம் தான் வேண்டும் என்றாலும் அடுத்த 30 நிமிடங்களில் புத்தகம் ரெடி!


சாதரணமாக பிரிட்டிங்கில் உபயோக்கிக்கும் பேப்பர்களை உணவு பேக்கிங்குக்கு பயன்படுத்த கூடாது ஏன் என்றால் அதில் இருக்கும் நச்சுதன்மை ஆனால் இதில் பிரிண்ட் செய்தவைகளை தாரளமாக பயன்படுத்தலாம். இதுபோல் பல பயன்கள் இருக்கிறது இந்த Nexpressல் விலை கொஞ்சம் அதிகம் தான் நம் ஊர் காசுக்கு கிட்டதட்ட 4 கோடி வரும் ஆனால் மிகவும் தாரளமாக கொடுக்கலாம். நாங்கள் வாங்கி இருக்கும் முறையை பற்றி வெளியில் சொல்லமுடியாது யாருக்காவது விருப்பம் இருப்பின் மெயிலில் கேளுங்கள் எப்படி வாங்கவேண்டும் என்று சொல்கிறேன். U.A.E லேயே முதன் முதலாக வாங்கி இருக்கும் பெருமை என் கம்பெணிக்கு இருக்கிறது அதுபோல் இந்த மாடலுக்கு முன் மாடலான Nexpress 2000 இந்தியாவில் 4 இடத்தில் இருக்கிறது சென்னையிலும் ஒரு பிரபல தொழிலதிபரிடம் இருக்கிறது.
டிஸ்கி: பதிவர்கள் புத்தகம் ஏதும் எழுதிக்கிட்டு இருந்தால் அதை இதில் எளிதில் பிரிண்ட் செய்துவிடலாம்.