Wednesday, November 25, 2009

கும்மு கும்மி வாழ்த்தலாம் வாங்க!

நிஜப்பெயர்: தென்கரை பாலன், கீழக்குகரை சூலன் இப்படி ஏதோ ஒன்று

புனைப்பெயர்: நாட்டாமை

வயது: இன்றோடு 60 (அனுஜன்யாவுக்கு நான்கு வயது இளையவர்)

தொழில்: நோட்டு அச்சடிப்பது.

உபதொழில்: சஞ்சய்க்கு பொண்ணு தேடுவது.( வயதான காலத்திலும் கஷ்டமான வேலை)

நண்பர்கள்: அண்ணாச்சி என்று அழைப்பவர்கள்

எதிரிகள்: அங்கிள் என்று கூப்பிடுபவர்கள்

பிடித்தது: சின்னபசங்க வெயிலான்,செல்வேந்திரன், அகல்விளக்கு இவர்களோடு ஊர் சுற்றுவது.

பிடிக்காதது: எல்லோரையும் போல ஆதியின் பதிவுகள். (அப்பாடா ஒரு ஆள் காலி)

சமீபத்திய சாதனை: இத்தனை வயதிலும் ரெண்டு வீட்டுக்காரன் என்று பெயர் வாங்கியது. (புதுவீடு கட்டி குடிபோனது)

நீண்டகால சாதனை: தொழிலதிபராக இருப்பது

நீண்டநாள் ஆசை: மும்பை போகும் பொழுது கவிதை சொல்லாமல் இருக்ககூடிய அனுஜன்யாவை பார்க்கனும் என்பது.

சமீபத்திய ஆசை: அழகுகுட்டி குசும்பனை பார்க்கனும் என்பது




மேற்கண்ட படத்தில் இருப்பவர் இன்று 60வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். வாங்க வாங்க கும்மலாம்...

Tuesday, November 24, 2009

கார்ட்டூன் குசும்பு 25-11-2009

ஒழுங்கா இன்னும் ஒருமாசம் பதவியில் இருந்திருப்பேன், இப்ப வீடுகிடைக்காம அல்லாட விட்டுவிட்டீயே ராசா!
பஜ்ஜி சாப்பிட பேப்பர் சப்ளை செய்யும் தமிழகதலைவரின் கடிதம்!



பொன்சேகா: வீடுகிடைக்கவில்லை எங்கு சென்று தங்குவது என்று தெரியவில்லை...
டரியள் டக்ளஸ்: சகல வசதிகளுடன் நீங்கள் செஞ்சுக்கொடுத்த முகாம் பல இருக்கே தலைவரே, அங்க போகலாமே!
*********
தளபதி: இனி ரேசன் கடைகளில் அத்துறையின் அமைச்சர் போன் நம்பர் ஒட்டப்படும், குறை இருப்பின் அவரை நேரடியாக தொடர்பு கொண்டு பேசலாம்.
டரியள் டக்ளஸ்: ஆஹா நீங்களுமா?
*************

Sunday, November 22, 2009

ப்ளைட் வாங்க போனேன்! படங்களுடன்(அபாயகுறி)

கடந்த வாரம் துபாயில் ஏர்போர்ட் எக்ஸ்போ2009 வெகு விமர்சையாக நடந்தது, சென்னையில் இருந்து இதில் பங்கெடுக்க வந்த SHATS என்ற நிறுவனத்தினால் எனக்கு எக்ஸ்போவுக்கு செல்ல 100$ மதிப்புடைய பாஸ் கிடைத்தது. நண்பகளிடம் போன் செய்து கேட்டால் வரமுடியாது வேலை இருக்கு என்று சொல்லிவிட்டார்கள், சரி நாம மட்டுமாவது போய் ஒரு ப்ளைட்டை பேசி விலைக்கு வாங்கி வந்துடலாம் என்று போனேன்.

ஏகப்பட்ட கெடுபிடி ஜட்டியோடு நிக்க விடாத குறையாக செக் செய்தார்கள். ச்சே என்னடா இதுன்னு நொந்துக்கொண்டே போனேன். பிறகுதான் தெரிந்தது ஏன் அப்படி கெடுபிடி என்று. உலகில் இருக்கும் பல நாடுகளின் விமானங்கள், போர் விமானங்கள் என்று அனைத்திலும் நாம் ஏறி பார்க்கலாம் என்பதால் தான் அப்படி கெடுபிடி. பல அரபிகள் பிடிச்ச பிளைட்டை பேசி விலைக்கு வாங்கிக்கொண்டு இருந்தார்கள்.

மதியம் இரண்டு மணிக்கு ஆரம்பித்த ஏர் ஷோ 5 மணி வரை நடந்தது, நின்ன இடத்தில் இருந்து சுற்றுவட்டாராம் அதிர கிளம்பும் அமெரிக்க போர் விமானம், அவனோட கண்போலவே இனிக்கியோண்டு சைனா ப்ளைட் இவர்கள் வானில் போட்ட ஆட்டம் பார்க்க அதிரடியாக இருந்தது.

12 பேர் வரை பயணம் செய்யக்கூடிய ஹெலிகாப்டர், உள்ளே இருக்கும் பெண்ணையும் சேர்த்து கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டானுங்க அதனால் இதை வாங்கவில்லை.


நான்கு பேர் மட்டும் அமர்ந்து செல்லக்கூடிய ராயல் எக்ஸிகூட்டிவ் பிளைட்! இறங்கி வரும் அரபி துண்டு போட்டு பேசி முடிச்சுட்டார். ஸ்டோர்ரூமில் இந்த மாடல் பிளைட் ஸ்டாக் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.

எங்க ஆரம்பிச்சு எங்க துடைச்சு முடிப்பதுன்னு தெரியலையே, ஒட்டகத்துக்கு பதிலா திடிர் என்று ப்ளைட்டை கொடுத்தா என்ன செய்வேன் அவ்வ்வ்வ்வ்


யூஏஇ போர் விமானம், அண்ணன் சண்டைக்கு போகும் பொழுது கெத்தா போய் இறங்கலாம் என்று கேட்டால் அருவா, கத்தி எல்லாம் வைக்க ஸ்டாண்ட் இல்லன்னு சொல்லிட்டாங்க.ஆகையால் இதையும் வாங்க முடியவில்லை.


வெளியில் அம்புட்டு காத்தாடி வெச்சு இருக்கானுவோ, உள்ளார ஒன்னு கூட இல்ல அதான் இதையும் வாங்கவில்லை, அமெரிக்க போர் விமானம்.


அழகிய லைலா டன் டன் டன் மன்மத புயலா டன் டன் டன்(இப்படிதானே ரம்பா அம்மாம் பெரிய காத்தாடிக்கு முன்னாடி நின்னு ஆடும்) அதான் நானும் அப்படி நின்னு பார்த்தேன்!


இந்த புள்ள ஒரே அடம் நீங்க வாங்கும் பிளைட்டில் அப்படியே என்னை வீட்டில் ட்ராப் செஞ்சுவிட்டுவிடுங்கன்னு...தப்பி வருவதுக்குள் பெரும்பாடா போச்சு...

ஒன்னு வாங்கினா ஒன்னு இலவசம் எல்லாம் கிடையாதுன்னு சொல்லிட்டானுங்க


நெக்ஸ்ட் தீபாவளி வரைக்கும் நமத்து போகாம இருக்க கியாரண்டி தர மாட்டேன் என்று சொல்லிட்டார்கள், இந்த ராக்கெட்டுங்களுக்கு.


ஒரே ஒரு ஆளைதான் கூட்டிக்கிட்டு போகலாமாம் அதுவும் பின்னாடி உட்காரவெச்சு, நடுவுல ஒரு தடுப்பு வேற, வேலைக்கே ஆவாத ப்ளைட், இதை வாங்க நான் என்ன மடையனா?

ஆள் இல்லாத உளவு விமானம், படிச்சுட்டு பின்னூட்டம் போடாம போறவங்க மேட்டரை எல்லாம் அவுங்க வூட்டு அம்மணிங்க கிட்ட போட்டு கொடுப்பது போல் செட்டிங் செய்ய சொல்லி இருக்கேன்.
***********
ஒரே ஒரு ப்ளைட் ரொம்ப பிடிச்சு இருந்துச்சு, சரி வாங்கலாம் என்று பேசி விலை எல்லாம் பேசி முடிச்சுட்டு, ஏர்ஹோஸ்டஸ் பத்து பேரு வேண்டும் என்றேன் அதுக்கு என்ன பதினைந்தா கொடுத்துடுறோம் என்றார்கள், சரி எந்த ஊரு ஏர்ஹோஸ்டஸ் என்றேன் ஏர் இந்தியா ஏர் ஹோஸ்டஸ் என்றார்கள்... அங்க பிடிச்ச ஓட்டம் வீட்டில்தான் வந்து நின்றேன். ரிட்டையர்ட் ஆகவேண்டிய பாட்டியை (உன்னை போல் ஒருவன் லெட்சுமி மாதிரி) எல்லாம் ஏர் ஹோஸ்டஸா போட்டா ஏர் இந்தியா நஷ்டத்தில் ஓடாம லாபத்திலா ஓடும். யாராவது சொல்லி புரியவையுங்கப்பா!

Wednesday, November 18, 2009

வலைப்பதிவர்களின் டீலா நோ டீலா! (கேம் ஷோ)



வலையுலக மக்கள் டீலா நோ டீலா நிகழ்ச்சியில் கலந்துக்கிற மாதிரியான ஒரு கற்பனை, இங்கு டீலே வேற!

வால்பையனுக்கு ரூல்ஸை சொல்லுகிறார் ரிஷி, இங்க பாருங்க இந்த பக்கம் புகையிலை, பீடி, சிகரெட், பில்டர், கஞ்சா, சாராயம், கள்ளு, பீர், ஒயின், விஸ்கி, பிராந்தி, ஓட்கா, டகிளா,ஷாம்பெயின் என்று ஒவ்வொரு பொண்ணுங்க கையில் இருக்கும் பெட்டியிலும் ஒன்னு ஒன்னு இருக்கும். நீங்க ஒரு பெட்டிய எடுத்து இங்க வெச்சுக்கிட்டு மத்ததை எல்லாம் ஓப்பன் செய்ய சொல்லனும். அப்படி ஓப்பன் செய்யும் பொழுது டீல் பேசுவோம், உங்க பெட்டியில் விலை அதிகமான ஷாம்பெயினும் இருக்கலாம், இல்ல பீடி கட்டும் இருக்கலாம். உங்க லக்கை பொருத்து.


ரிஷி: இப்ப முதல் ரவுண்ட்

வால்: எனக்கு ஒரு லார்ஜ்

ரிஷி: யோவ் இது விளையாட்டோட முதல் ரவுண்ட், இப்ப என்ன செய்யனும் நீங்க அங்க நிக்கிற பொண்ணுங்க கையில் இருக்கும் பெட்டியை ஓப்பன் செய்யனும்!

வால்: முதலில் அவுங்களை எனக்கு பாலோயரா ஆக சொல்லுங்க அப்புறம் நான் அவுங்க பாலோயரா ஆகி அப்புறம் ஓப்பன் செய்கிறேன், எனக்கு பாலோயரா இல்லாதவங்க பொட்டிய எல்லாம் நான் ஓப்பன் செய்வது இல்லை!

ரிஷி: நீங்க ரூல்ஸை பாலோ செய்யாததால் உங்களை ஆட்டத்தில் இருந்து வெளியேற்றுகிறேன்.

வால்: ஹல்லோ அப்ப முதலில் ரூல்ஸை என்னை பாலோ செய்ய சொல்லுங்க, நான் உடனே ரூல்ஸை பாலோ செய்யுறேன், இதுதான் என் கொள்கை!

ரிஷி: ஆண்டவா...........


************

அடுத்து தண்டோரா!


ரிஷி: சார் உங்களை அறிமுக படுத்திக்குங்க!


தண்டோரா: என் அடுத்தவரி பெயர் அடுத்தவரி தண்டோரா அடுத்தவரி ஆச்சரியகுறி.


ரிஷி: என்ன சார் அது அடுத்தவரி அடுத்தவரின்னு சொல்றீங்க?


தண்டோரா: என் பெயரை கவிதையா சொன்னேனுங்க, எழுதும்பொழுது என்றால் ஒரு Enter தட்டி தட்டி கவிதையா மாத்திடுவேன், பேசும்பொழுது இப்படி சொன்னாதானே கவிதைன்னு புரியும்.


ரிஷி: என்ன கொடுமை சார் இது?


தண்டோரா: ஆஹா பின்னூட்டம் வேற போட்டுவிட்டீங்களா?


ரிஷி: என்னது பின்னூட்டமா?


தண்டோரா: ஆமா நான் சொன்ன கவிதைக்கு நீங்க சொன்ன பின்னூட்டம் என்ன கொடுமை இது! இதையும் கவிதையா என்ன அடுத்த வரி கொடுமை அடுத்தவரி இது அடுத்தவரி கேள்விகுறின்னு சொல்லி இருந்தீங்கன்னா நீங்களும் கவிஞரா ஆகி இருக்கலாம்.


ரிஷி: ஆஹா வேண்டாம் சார் வாங்க ஆட்டத்துக்கு போகலாம். இப்ப அங்க நிக்கும் பொண்ணுங்க கையில் இருக்கும் பொட்டிய எதையாவது ஒன்னை ஓப்பன் செய்ய சொல்லுங்க.


தண்டோரா: மூன்றாவது அடுத்தவரி வரிசையில் அடுத்தவரி இரண்டாவதாக அடுத்தவரி நிற்கும் அடுத்தவரி பெண்ணின் அடுத்தவரி கையில் அடுத்தவரி இருக்கும் அடுத்தவரி பெட்டி அடுத்த வரி எண் அடுத்தவரி இருபத்தி அடுத்தவரி மூன்று அடுத்தவரி திறங்க.


ரிஷி: போன் ரிங் ஆகிறது... சார் இப்ப கால் வந்துச்சு... நீங்க இதுமாதிரி கவிதை சொல்லாம இருந்தா இப்பவே ஷாம்பெயின் பாட்டிலை உங்களுக்கு தருவதாக சொல்லுகிறார், சொல்லுங்க டீலா, நோ டீலா!


தண்டோரா: டீ அடுத்தவரி


ரிஷி: அய்யய்யோ

****************

கேபிள் சங்கர்

ரிஷி: மனசுக்குள்(ஆஹா இவரிடம் அறிமுக படுத்திக்க சொல்லலாமா வேண்டாமா? இவரும் அவரை போல் கவிஞரா இருந்துட்டா?)


(கேபிள் சங்கர், ரிஷியிடம் இன்னொரு சேர் கொண்டு வர சொல்லுங்க என்கிறார், ரிஷி இல்ல சார் நீ மட்டும் தான் இதில் கலந்துக்கமுடியும் வேறு யாரும் ஹெல்புக்கு எல்லாம் வெச்சுக்க கூடாது என்கிறார், இல்லை இல்லை எனக்குதான் இன்னொரு சேரும் என்று சொல்லியபிறகு அவர் கொண்டு வந்த சேரில் தன் தொப்பையை பார்க் செஞ்சுட்டு ஆரம்பிக்கிறார்)

கேபிள்: ஹல்லோ இரண்டாவது வரிசையில் மூன்றாவதா நிற்க்கும் பியூட்டி உன் தலை முடியில் இரண்டு முடி லைட்டா கலைஞ்சு போய் இருக்கு பாரு, அந்தா நாலாவது பொண்ணு மேக்கப் கொஞ்சம் ஹார்டா இருக்கு பாருங்க அதை கொஞ்சம் டச்சப் செய்யுங்க, அந்த கடைசி வரிசையில் நிக்கும் இரண்டாவது பொண்ணு சூப்பரா இருக்கு அதை முதல் வரிசைக்கு கொண்டு வாங்க, மூன்றாவது வரிசையில் இருக்கும் பெண் மேல் படும் லைட்டிங் கொஞ்சம் அவுட்டாப்போக்கசில் இருக்கு அதை கொஞ்சம் சரி செய்யுங்க....


ரிஷி: சார் நிறுத்துங்க...சார் நிறுத்துங்க


கேபிள்: கொஞ்சம் லைட்டிங்கில் கிரீன் டோன் இருக்கிறமாதிரி பார்த்துக்குங்க...அப்புறம் கடைசியில் நாலாவதா நிக்கிறபொண்ணு பிரா கொஞ்சம் வெளியில் தெரியுது இன்னும் நல்லா தெரியுற மாதிரி அட்ஜெஸ் செய்யுங்க..


ரிஷி: சார் நீங்க டைரக்டரா?


கேபிள்: ஆமாம், இதுவரை ஒரு 20 இங்கிலீஸ் படம், ஒரு 30 தமிழ்படம், ஒரு 10 தெலுங்குபடம்...


ரிஷி: இவ்வளோ படம் டைரக்ட் செஞ்சு இருக்கீங்களா? சார் பிளீஸ் சார் எனக்கு அடுத்த படத்தில் சான்ஸ் கொடுங்க சார்...


கேபிள்: இதுக்கு எல்லாம் விமர்சனம் எழுதி இருக்கிறேன்னு சொல்ல வந்தேன்...முதலில் நீங்க மூனு நாளா டாய்லெட் போகாதவன் போல மூஞ்ச வெச்சுக்கிட்டு டீலா நோ டீலான்னு கேட்பதைமாத்தனும், தானாவே உங்களுக்கு சான்ஸ் தேடிவரும்.


ரிஷி: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

*********************
பைத்தியக்காரன்

ரிஷி: சார் வணக்கம்


பைத்தியக்காரன்: வணக்கம்மா! நல்லா இருக்கியாம்மா?


ரிஷி: நல்லா இருக்கேன் சார்! ஆட்டத்துக்கு போகலாமா சார்?


பைத்தியக்காரன்: இரும்மா, (பொண்ணுங்களை பார்த்து) ஏம்பா கையில் இருக்கும் பொட்டிய மூடி வெச்சுக்கிட்டு மத்ததை எல்லாம் திறந்து வெச்சு இருக்கீங்களே? இது நல்லாவா இருக்கு?கொஞ்சம் ஒழுங்கா உடம்பை மூடுவது போல் ட்ரஸ் போட கூடாதாப்பா?

ரிஷி: மனசுக்குள் (என்ன இவரு என்னை என்னமாங்கிறார், பொண்ணுங்களை என்னப்பா என்கிறார்) சார்...

பைத்தியக்காரன்: மன்னிக்கனும், நான் விளையாட வரவில்லை என் கருத்தினை இங்கு பதிவு செய்யவே வந்தேன். இது என்னோட கருத்து மட்டுமே, கருத்தினை யார் மேலும் நான் திணிக்கவில்லை, கருத்து சொல்வது என் கடமை அதை கேட்பதும் கேட்காமல் போவதும் உங்கள் உரிமை. நன்றி வருகிறேன்.


ரிஷி: நன்றி நான் சொல்லனும் சார்! ரொம்ப நன்றி!(நல்லவேளை போர்வையோட வந்து எல்லோரையும் போத்திவிட்டு போகாம போகிறாரே)

Monday, November 16, 2009

ச்சீ ச்சீ ஊரா இது!

காலையில் எழுந்ததும் எல்லாம் கக்கூஸ் போறானுங்க, மாடு எல்லாம் இன்னும் பச்சையாகவே சாணிபோடுது, ரோடு எல்லாம் மோசமாக இருக்கு ச்சீ ச்சீ ஊரா இதுன்னு ரேஞ்சில் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு போனா பேசனுமாம். அப்பதான் புள்ள வெளிநாட்டில் வேலை பார்க்குதுன்னு ஒத்துப்பாங்களாம். இப்படிதான் எங்க சொந்தகார பயபுள்ள ஒன்னு அமெரிக்காவில் நல்ல வேலையில் இருந்துச்சு அது ஊருக்கு வந்த பொழுதுவீட்டுல ஏசி இருந்தும் வசதி பத்தவில்லை என்று திருவாரூரில் ஒரு ஹோட்டலில் ரூம் போட்டு தங்கி அது கொடுத்த அலபறை கொஞ்சம் நஞ்சம் இல்ல, இந்த முறை போனா ஊரில் வீட்டில்தான் தங்கி இருந்தான் என்னன்னு விசாரிச்சா ரிஷசனில் வேலை போய்விட்டதாம்.

சரி இதை விடுங்க நம்ம மேட்டருக்கு வருவோம்... நண்பர்களை சீண்டுவதில் இருக்கும் சுகமே சுகம் தான்.

சென்னை வந்ததும் போன் செய்டா வந்து பிக்கப் செஞ்சுக்கிறேன் என்று நண்பன் சொல்லி இருந்தான், சரி என்று இறங்கியதும் போன் செஞ்சேன் ஒரு 5 நிமிடத்தில் வந்துவிட்டான். ஏறி கொஞ்ச தூரம் போனதும் மச்சான் கொஞ்சம் ஏசியை ஆன் செய்யேன் ரொம்ப புழுக்கமா இருக்கு என்றேன், என்னமோ கெட்ட வார்த்தையில் திட்டியது போல் முறைச்சான், ஏன்டா நான் என்ன தப்பா சொல்லிட்டேன் என்று முறைக்கிற ஏசி ஒர்க் ஆவாதா என்றேன், டேய் ஒழுங்கு மரியாதையா வாயை மூடிக்கிட்டு வா இல்ல வாயிலேயே குத்து வாங்குவ என்றான், என்னடா இது இப்படி வன்முறையா பேசுற ஏசி போடமுடியும் இல்ல முடியாதுன்னு சொல்லு அதுக்கு எதுக்கு அடிப்பேன் உதைப்பேன் என்று சொல்லிக்கிட்டு என்றேன், ஓரம் கட்டி நிறுத்திவிட்டு இங்க இறங்கி வீட்டு அட்ரஸுக்கு ஆட்டோ புடிச்சு வா அப்பதான் நீ சரி வருவ என்றான், சரி ஆட்டோவிலாவது ஏசி இருக்குமா என்றேன்..%#$^$%$%^$^$@@$@@$@ திட்டிக்கொண்டேதிரும்ப பஜாஜ் பல்சரை ஸ்டார்ட் செஞ்சான்:)

மறுநாள் பஸ்ஸில் போகும் பொழுது மழை பேஞ்சு தண்ணி உள்ளே ஒழுகியது, அவனுக்கு போன் போட்டு ரெயின் கம்மிங் இன் சைட் பஸ் யா! இட்ஸ் டூ பேட் யா, நான் இப்ப என்ன செய்ய என்றேன், ங்கொய்யாலே அப்படியே பஸ்ஸில் இருந்து கீழே குதிச்சு சாவுடா என்றான். :((

பைக் எடுத்துக்கிட்டு கோயிலுக்கு போக சொன்னான், போகும் பொழுது ஹெல்மெட்டை கொடுத்து போட்டுக்க என்றான், கையில் ஹெல்மெட்டை வாங்கிக்கொண்டு அதை இப்படியும் அப்படியும் பார்த்தேன், டேய்............ ஒரு மயிறும் நீ கேட்காத கேட்ட அதாலேயே அடிவாங்குவ, இதுல ஏசி எல்லாம் இருக்காது வேண்டும் என்றால் போட்டுக்கிட்டு போ இல்ல போய் ட்ராப்பிக் போலீஸ் கிட்ட 200ரூபாய் பைன் கட்டு என்றான். ஓ ஒன்லி 15திர்ஹாம் பைன் தானா? இன் துபாய்ன்னு... ஆரம்பிக்கங்காட்டியும் அடிக்க வந்ததால் எஸ்கேப் ஆயிட்டேன்...

ஒருநாள் மதியம் சாப்பிட்டு விட்டு தட்டை வெச்சுக்கிட்டு மச்சான் டஸ்ட்பின் எங்க இருக்குடா என்றேன்.... ஹி ஹி திட்டியதை சொல்ல எனக்கு வெட்கமா இருக்கு.

ஊருக்கு கிளம்பும் பொழுது டேய் போன் செஞ்சு எத்தனை முறை கேட்டேன் என்னடா வேண்டும் என்னடா வேண்டும் என்று ஒன்னும் வேண்டாம் வேண்டாம் என்ற... என்றேன். இங்கயே எல்லாம் கிடைக்குதுடா அதான் வேண்டாம் என்றேன் என்றான். சரி அப்ப எனக்கு தெரியாம எடுத்து வெச்சுக்கிட்ட என்னோட ரெண்டு பழய ஜட்டிய கொடுத்துடுடா என்றேன்.... அதன் பிறகு சென்சார்.

நம்மை டரியள் ஆக்கியதையும் சொல்லனுமுல்ல...போன முறை ஊருக்கு போய் இருந்தப்ப வெச்சு இருந்த மோட்ரலா மொபைலை பார்த்துட்டு என்னடா துபாயில் இருந்து வர இன்னும் இந்த டப்பா மொபைல வெச்சுக்கிட்டு இருக்க ஒரு நல்ல மொபைலா வாங்க கூடாது என்று ஊர்ல இருக்கும் பயபுள்ளைங்க துக்கம் விசாரிக்க ஆரம்பிச்சுட்டுங்க. இந்த முறை வாங்கி இருந்த நோக்கியா E71யை பார்த்துட்டு, அங்க எல்லாம் சைனா மொபைல் யூஸ் செய்யலாமா? இங்க தடை செய்ய போறாங்களாம் என்றார்கள். இல்லடா பாரு இது சைனா மொபைல் இல்ல என்றேன் அட நோக்கியா மாதிரியே டூப்ளிகேட் மாடலா இது? கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்

பதிவர்கள் சந்திப்பு!
மழையினால் உலகபடம் பதிவர்களோடு பார்க்க இருந்தது ஒத்திவைக்கப்பட்டது,அதன்பிறகு ஊருக்கு கிளம்பும் முதல் நாள் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று நர்சிம்மை சந்திச்சேன்:), (நனாவுக்கு நனா), ஒரு செட் வடை சாப்பிட்டு சந்திப்பை முடிச்சோம், மொழி படத்தில் பிகரை பார்த்தா தலையில் பல்பு எரியனும் என்று சொல்வது போல் ஒருவர் தொடர்ந்து 4 முறைக்கு மேல் போன் செஞ்சு சந்திக்கனும் என்றால் மூக்கின் மேல் பல்பு எரியனும் என்று ஸ்ரீ ஸ்ரீ சுந்தரானந்த சுவாமிகள் சொல்லிக் கொடுத்ததுக்கு இனங்க, மூக்குக்கு மட்டும் ஹெல்மெட் கிடைக்குமா என்று தேடி கிடைக்காததால் வாங்கி போன சரக்கோடு தண்டோரா ஆபிஸுக்கு சென்றேன், அங்கு ரமேஷ்வைத்யா அண்ணன்,கேபிள் சங்கர் இருவரும் வந்தார்கள், பிறகு ஜாக்கி சேகர் வந்தார், இன்னொருவர் வந்தார்.

நான் வாங்கிக்கொண்டு போய் இருந்த சரக்கு ஒரிஜினலா என்று கேபிளும், தண்டோராவும் டெஸ்ட் செஞ்சார்கள் எனக்கு கொடுத்தார்கள் இல்லை பழக்கம் இல்லை என்றேன்,சரி டீ,காபியாவது குடிங்க என்றார்கள் இல்லை அதுவும் பழக்கம் இல்லை என்றேன், குடிச்சுக்கிட்டு இருந்த கிளாஸை கீழே வெச்சுட்டு இதையாவது குடிப்பீயா என்றார்கள் தண்ணியை காட்டி ம்ம்ம் என்றேன், மனசுக்குள்ளேயே திட்டி இருப்பார்கள்.

அப்படியே பேச்சு ஸ்பெல்லிங் மிஸ்டேக் செய்யும் பதிவர்கள் பக்கம் சென்றது, ஆஹா நமக்கு நேரம் சரி இல்லை போல என்று பம்மிக்கிட்டு இருந்தேன். ரமேஷ் வைத்யா ”ன்” போட வேண்டிய இடத்தில் shift அமுக்கி ”ண்” போடும் ஆட்களை உதைக்கனும் என்றார், ம்ம்கும் அப்படியே நீங்க உதைச்சுட்டாலும் வலிச்சுடும் என்றும் மனசுக்குள்ளே நினைச்சுக்கிட்டேன்.
அதன்பிறகு அங்கிருந்து கிளம்பி T.நகர் சென்று அருளானந்தம் மெஸ்ஸில் சாப்பிட்டோம். கேபிளார் ஸ்டேசன் வரை கொண்டு வந்து விட்டு சென்றார். அங்கிருந்து ஊருக்கு சென்றேன்.