Wednesday, March 31, 2010

அகில உலக தமிழ்வலைபதிவர் சங்கம் இனிதே ஆரம்பம்!

சென்னை வலைப்பதிவர்கள் ஆரம்பிக்க நினைத்த தமிழ் வலைப்பதிவர்கள் சங்கத்தில் பலருக்கு உடன்பாடு இல்லாதமாதிரி தோன்றுகிறது. ஆகவே அமீரகத்தில் இருக்கும் பதிவர்களின் பேராதரவோடு அமீரக மார்கண்டேயன் தலைவர் ஆசிப் அண்ணாச்சியின் சீரிய தலமையில் இன்றே உதயம் ஆகிறது. அகில உலக தமிழ்வலைப்பதிவர் சங்கம்.
சங்கம் கொள்கைகள் நோக்கங்கள் பின்வருமாறு...

இங்க பாருங்க ஐயா எங்க சங்கத்தில் சேர்ந்து இந்த அடையாள அட்டைய வாங்கி மாட்டிக்கிட்டா, அர்த்த ராத்திரியில் கூட அய்யனார் பதிவுக்கு போகலாம்,விடிய காலையில் வினவு பதிவுக்கு போகலாம். நான் ஏன் டா அங்க எல்லாம் போகபோகிறேன் என்று யாராச்சும் கேட்டால் அவன் ரத்தம் கக்கி சாவான்.

எங்க சங்கத்தில் சேர்ந்தா உங்களுக்கு கட்டற்ற சுதந்திரம் கிடைக்கும், நீங்க உச்சாபோகனும் என்றால் கூட எங்களிடம் சுண்டு விரலை காட்டி அனுமதி வாங்கவேண்டியஅவசியம் இருக்காது. நீங்களே சுதந்திரமாக போய் வரலாம்.

சங்கத்துக்கு என்று ஆரம்பிக்கும் வலைப்பதிவில் பாலோயரா ஆவும் அனைவரையும் நாங்கபாலோ செய்வோம், அனைவரும் சமம், ஒரு சிலரை மட்டும் பாலோ செய்ய மாட்டோம் என்று சொல்வதன் மூலம் எங்களுக்கு சிகப்பு சாயம் யாரும் பூச நினைத்தால் அவர்கள் முகத்தில் கரி பூசுவதுபோல் திராவிட கொள்கையான இலவச திட்டத்தின் கீழ் உறுப்பினர் ஆகும் அனைவருக்கும் லேப் டாப் வழங்கபோகிறோம்.* (ஒரு லட்சம் கட்டி மெம்பர் ஆகும் ஆட்களுக்கு மட்டும்).

வெளிநாடுகளில் இருந்து அமீரகம் வர நினைக்கும் ஆட்களின் சொந்த செலவில் அமீரகம் வந்து செல்ல சங்கம் நடவடிக்கை எடுக்கும்,மேலும் வரும் நபர்களுக்கு நாங்களே சுத்தி காட்டுவோம், அவருக்கு முன்னாடி போய் சங்கத்து ஆட்கள் நின்னு நின்ன இடத்திலேயே எங்களை நாங்களே சுத்தி காட்டுவோம்.

சங்கத்து தலைமைக்கு தேர்தல் நடத்துவோம் அதில் அண்ணாச்சி மட்டுமே போட்டியிடுவார், இருந்தாலும் இடைத்தேர்தல் அளவுக்குஅண்ணாச்சி செலவு செய்து 1லட்சம் ஓட்டு வாங்கி வெற்றியடைவார் என்று சொல்வதன் மூலம் எங்களுக்கு பதவி ஆசை இல்லை என்பதை தெளிவு படுத்துகிறோம்.

ஒரு குடையின் கீழ் செயல்பட முடியாது என்று சொல்லும் பாலாபாரதி போன்றோர்களுக்காக இரண்டு மூன்று குடைகளை இணைத்து மெகா குடையை தயார் செய்து இருக்கிறோம், அதன் கீழும் வரமுடியாதவர்கள் அட்லீஸ் ரெயின் கோட் கீழாவது வரமுடியுமா என்று பார்க நாங்கள் ரெயின் கோட்டையும் தயார் செய்து வெச்சிருக்கோம். என்று சொல்வதன் மூலம் அனைவரையும் ஒருங்கினைக்க நாங்க முயல்கிறோம் என்று தெளிவுபடுத்துகிறோம்.

உன் பெயர் என்ன? உன் உயரம் என்ன? உன் ஊர் என்ன? என்ற ரீதியில் சுதந்திரமான கேள்விகளை பைத்தியக்காரன் போன்றோர் பயம் இன்றி கேட்கலாம் அவர்களை கட்டம் கட்டமாட்டோம், வட்டம், செவ்வகம் கூட கட்டமாட்டோம் என்று சொல்வதன் மூலம் சங்கத்தில் கருத்து சுதந்திரம் உண்டு என்பதை தெளிவு செய்கிறோம்.

பதினெட்டில் இருந்து 21 வயது வரை உடைய திருமணம் ஆகாத பெண்கள் சங்கத்தில் இலவசமாக இணைந்துக்கலாம் 33% மட்டும் அல்ல 75% ஏன் வேண்டும் என்றால் சென்ஷி, கோபி மாதிரி ஆளுங்களை காலி செஞ்சுட்டு கூட அந்த இடங்களில் பெண்களை சேர்த்துவிடுகிறோம் என்று சொல்வதன் மூலம் பெண்களுக்கு சங்கம் சம உரிமை கொடுக்கும் என்று சொல்லிக்கிறோம்.

இதை இன்று அதுவும் ஏப்ரல் 1 ஆம் தேதி ஆரம்பிப்பதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. (சங்கதலைவர் அண்ணாச்சி வாழ்க).


FAQ:
1)என் பேரில் பேங்கில் இருக்கும் நகை கடன் 2 லட்சம், கூட்டுறவு பேங்கில் இருக்கும் ஆட்டுகுட்டி லோன் ஒரு லட்சத்தையும் "சங்கமே" கலை நிகழ்ச்சி நடத்தி அடைக்குமா?

அண்ணாச்சியே அடைப்பார், கலை நிகச்சியும் நடத்தி அட்வான்ஸ் லோனும் தரப்படும்.

2) கலைநிகழ்ச்சியில் மல்லு டான்ஸ் இருக்குமா?
உப்பில்லா பண்டம் குப்பையிலே, மல்லு டான்ஸ் இல்லாத நிகழ்ச்சி மக்கள் டீவியிலே என்ற பழமொழிக்கு ஏற்ப கலைஞர் டீவியின் மானாட மயில் ஆட நிகழ்ச்சியினை போலவே கலைநிகழ்ச்சி நடக்கும்.

சங்கம் கார்ட்டூன்ஸ் 31-3-2010




ஒரு மெயிலுக்கே இவ்வளோ பீல் செய்யுறீங்களே, அப்படியே எங்க நிலமையை நினைச்சு பாருங்க சார்!

அறிக்கைகள், விளக்கங்கள் மூலம் ஏழை பங்காளிகளுக்கு வாழ்வு கொடுக்கும் உ.த வாழ்க வாழ்க!


சங்கம் சில டிப்ஸ்!
கூட்டத்துக்கு நமீதா, அசின் வருகிறார்கள் என்று சொல்லிவிட்டு கூட்டம் கூடியதும்,சங்கம்வேண்டும் என்று சொல்றவங்க கைய தூக்குங்க, சங்கம் வேண்டாம் என்று சொல்றவங்க ரெண்டு காலையும் நின்னுக்கிட்டுதூக்குங்க என்று சொல்லலாம்.

சங்கம் ஆரம்பிப்பதால் என்ன பயன் என்று கேட்கிறவர்களுக்கு இப்படி பதில் சொல்லலாம்.

சங்கம் ஆரம்பிக்க போகிறோம் என்று சொன்னதுக்கே குசும்பன் 2 பதிவு, சென்ஷி 2 பதிவு, உ.த 1 பதிவு, வெட்டிப்பயல் 1பதிவு, செந்தழல் ரவி ஒரு வீடியோ பதிவு என்று பலர் பதிவு எழுதுவதால் சங்கம் ஆரம்பித்த பின் பல லட்சம் பேர் பதிவு எழுதுவார்கள் என்று சொல்லலாம்.
இதை எல்லாம் விட நம்ம வெண்பூ பல வருட தவத்துக்கு பிறகு இன்று ஒரு பதிவு எழுதியிருக்கிறார் பாருங்க இதுக்காகவே சங்கம் ஆரம்பிக்கலாம்:)))

Friday, March 26, 2010

மிளகுரசம்,பெரும்பாவம்,மாமியார்- பாரு எழுதும் தொடர்

மிளகுரசம்,பெரும்பாவம்,மாமியார்- பாரு எழுதும் கும்மும்தம் ரிப்போர்டரில்
இப்படி சொல்கிறார்... " சென்ற மாதம் ஒரு பத்திரிகை ஆசிரியர் எனக்கு போன் செய்து 'ஒரு சிறுகதை வேண்டும் என்றார்" இதுமாதிரி கஷ்டமான கேள்விகளை சமாளிக்க பாருவுக்கு சில யோசனைகள்..

1) சாரி ராங் நம்பர் என்று சொல்லி வைத்துவிடலாம்.

2) சார் ரொம்ப பிஸி (மன்னு நான் ரொம்ப பிஸி ஹார்லிக்ஸ் விளம்பரம் மாதிரி) அடுத்த வருசம் பத்து புக்கு எழுதி ரிலீஸ் செய்ய சின்சியரா "செக்ஸி சாட் செஞ்சுக்கிட்டு இருக்காரு" என்று இவரே மிமிக்கிரி செஞ்சு சொல்லிடலாம்.

3) டாய் எவன் டா நீ, மலையாள உலகமே கொண்டாடும் ஒரே தமிழ் எழுத்தாளன் நான், என்னை போயா 'சிறுகதை' எழுத சொல்கிறாய் என்று சவுண்ட் விடலாம்.

4) பாரீஸ் போய் தண்ணியடிக்க காசு இல்லாத பொழுது, அல்லது என் நாய்க்கு ஒருவேளை சாப்பாடுக்கு 1000ரூபாய் இல்லாத பொழுது, ஜீன்ஸ் பேண்ட் வாங்க 10000ரூபாய் இல்லாமல் தவித்த பொழுது எல்லாம் எனக்குகாசு கொடுத்து உதவி செஞ்சியா நீ? இப்பொழுது எப்படிடா நீ சிறுகதை கேட்கலாம் என்று கத்தலாம்.

5) தமிழும் தமிழுலகமும் நாசமாய் போவது இதுபோல் பத்திரிகை ஆசிரியர்களால் தான், ஒரு எழுத்தாளனுக்கு போன் போட்டு சிறுகதை எழுதி தரமுடியுமா என்று கேட்கும் வன்முறையை உலகத்தில் எங்கும் நடக்காது, ரஷ்யாவின் "கிஸ்மஸ் காவோ மாஸ்" ஒரு வரி எழுதி தரமாட்டாரா என்று அவர் வீட்டு முன் ரஷ்யாவின் அனைத்து பத்திரிக்கைகளும் காத்து கிடக்கும், ஆனால் இங்கு மட்டுமே ஒரு போன் போட்டு ஒரு சிறுகதை எழுதி தரமுடியுமா என்று கேட்கும் அவலம் நடக்கிறது. ஒட்டு மொத்த பத்திரிகை உலகையே கொளுத்தனும் என்று சவுண்ட் விடலாம்

6) ரஜினியிடம் இப்படி கேட்கமுடியுமா?, கலைஞரிடம் இப்படி போன் போட்டு சிறுகதை எழுதி தரசொல்லி கேட்கமுடியுமா? அது எப்படி என்னிடம் மட்டும் போன் போட்டு சிறுகதை எழுதி தரசொல்லி கேட்கலாம். என்று சவுண்ட் உடலாம்.

7) பொன்னுசாமி அக்கவுண்ட் நம்பர் ICICI Bank 04422323223 இதுக்கு முதலில் பணம் அனுப்பிவிட்டு அப்புறம் போன் செய்.

8) இளைஞர்கள் விரும்பி படிக்கும் ஒரே எழுத்தாளன் நான் "எழுத்தாளனனிடம் போய்" சிறுகதை எழுதி கேட்கலாமா? அறிவு இருக்கா? உன்னை எல்லாம் எவன் பத்திரிகை ஆசிரியனாய் போட்டது, இதுக்காகவே நான் கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடர போகிறேன் என்றும் சவுண்ட் விடலாம்.

9) இந்தியாவை தவிர மற்ற நாடுகளான அமெரிக்கா, அன்டார்ட்டிக்கா, ஆப்பிரிக்கா,ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளில் இருக்கும் பல்கலைகழகங்களில் என் 108 டிகிரி புக்கை மொழி பெயர்த்து பசங்களுக்கு பாடமாக வைத்திருக்கிறார்கள் அப்படியாபட்ட என்னைபோய் "சிறுகதை" என்னை போய் என்னை போய் "சிறுகதை" எப்படிடா கேட்கலாம் என்று சவுண்ட் விடலாம்.

10) சிறுகதையா ங்ங்ங்கே ? அப்படின்னா பிம்பிளிக்கு பிலாப்பி மாமா பிஸ்கோத்துன்னு எதையாவது சொல்லி போனை கட் செஞ்சுடலாம்.

Monday, March 8, 2010

கார்ட்டூன்ஸ் 08-03-2010

"கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்"
அழகு நீ நடந்தால் நடையழகு அழகு! நீ சிரித்தால் சிரிப்பழகு அழகு!

இக்கட ரா ரா ரா ராமைய்யா, எட்டுக்குள்ள வாழ்கை இருக்கு ராமைய்யா
ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழி குட்டி வந்ததுன்னு யானை குஞ்சு
















நித்தியானந்தரின் தலைமறைவை அடுத்து புது மஹான் அவதரித்தார் இந்த பூமியில்...
எங்கு எல்லாம் தீவிரமான வாதம் தலை தூக்குதோ அங்கெல்லாம், இன்விட்டேசன் இல்லாமல் ஆஜர் ஆவான் இந்த மஹான். யார் அந்த மஹான்? புனை பெயர் கு வில் ஆரம்பித்து ன் என்று முடியும். நடுவில் சும்ப என்று மூன்று எழுது வரும். இவர் போட்டோவை தன் பிளாக்கில் போட்ட அப்துல்லாவுக்கு சினிமாவில் பாட சான்ஸ் வந்துச்சு.

இவர் பெயரை காலை தினமும் எழுந்ததும் மந்திரம் போல் உச்சரித்த முரளிக்கு, முக்காமல் முனகாமல் ஃபிரியா பிரியுது.

இவர் போட்டோவை பர்ஸில் வைத்திருந்த கார்த்தியின் பர்ஸை ஆட்டைய போட்ட பிக்பாக்கெட் திருடர்கள், திரும்ப வந்து கொடுத்தது மட்டும் இன்றி கார்த்தியின் கை செலவுக்கு பணமும் கொடுத்தார்கள். (பிச்சைக்கார பய உனக்கு எதுக்கு பர்ஸ் என்று திட்டி, நாலு மொக்கு மொக்கினது கணக்கில் வராது.) இப்படி பல பலன்கள்.

இதை படித்தது அலட்சியம் செய்த குமாரு கால் ஒடிஞ்சு குமரு ஆயிட்டான். நக்கலாக சிரிச்ச வாய் கோணிக்கிச்சு.
சிஸ்யை கோடிகள் அப்ளிகேசன் மட்டும் வரவேற்க்கப்படுகின்றன. புகைப்படம் இல்லாத அப்ளிகேசன் ரிஜெக்ட் செய்யப்படும்.
இப்படிக்கு
குசும்பானந்தா சுவாமிகள் ட்ரஸ்ட்வொர்த்தி ட்ரஸ்ட்
துபாய்