Wednesday, September 19, 2007

என் புது கேமிராவின் முதல் கவிதை

நான் புதுசா ஒரு கேமிரா வாங்கி இருக்கேன் அண்ணன் VCR அவரின் வழிகாட்டுதலின் படி நல்ல கேமிராவாக வாங்கனும் என்று வாங்கி முதன் முதலாக அதில் எடுத்த முத்தான மூன்று கவிதை போட்டோஸ்!!!

எல்லா புகழும் VCR க்கே!!!





டிஸ்கி: கவிதையை Zoom செஞ்சு பார்க்க கவிதை மேல் கிளிக் செய்யவும், இல்லை இதே பக்கத்தின் வலது பக்க மேல் மூலையில் இருக்கும் சிகப்பு பட்டனில் ஒரு பெருக்கல் குறி போட்டு இருக்கு பாருங்க அத கிளிக் செஞ்சா கவிதை மறைந்து போகும்.
மேலும் கவிதை மேல் ஆர்வம் உள்ளவர்கள் தனிமடல் இடவும் :)))

Sunday, September 16, 2007

பெப்ஸி உங்கள் சாய்ஸ் உமாவோடு நம் வலைப்பதிவர்கள்----ஒரு கற்பனை

வலைப்பதிவர்களை வைத்து ஏற்கனவே மலரும் மொட்டு பகுதி எழுதியாச்சு, இனி வேற என்ன செய்யலாம் என்று குப்புற படுத்துக்கிட்டு யோசிக்கும் பொழுது வலைப்பதிவர்கள் பெப்ஸி உங்கள் சாய்ஸில் பேசி பாட்டு கேட்டால் என்ன என்ன பாடல்கள் கேட்பார்கள்.

(அவர்களின் கேரக்டர்கள் + தற்பொழுதைய சூழ்நிலைகளை வைத்து)

முழுக்க முழுக்க கற்பனையே யாரையும் புண்படுத்தவேண்டும் என்று தயாரிக்கபட்டது அல்ல இந்த நிகழ்ச்சி. (திரையில் தோன்றுகிறது).

நிகழ்சியில் முதல் பாடலை கேட்பவர் ஜெஸில்லா

ஹலோ பெப்ஸி உமாவா?

உமா: ஆமாங்க நீங்க யாரு பேசுறது?

ஜெஸில்லா: நான் ஆவி புகழ் கிறுக்கல்கள் ஜெஸில்லா பேசுறேங்க .

உமா: ஹோ அப்ப செத்துபோன எங்க ஆயா கூட பேசுவீங்களா?

ஜெஸில்லா: நான் சொல்றது அந்த ஆவி இல்லீங்க:(ஆவின்னா ஆனந்த விகடன்.)

உமா: ஹோ அப்படியா! சரி உங்களுக்கு என்ன பாட்டு போடனும்?

ஜெஸில்லா: அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை காலம் மாறி போச்சு கண்ணீர் மிச்சம் இல்லையே!!!

***************************************
அடுத்து ஓசை செல்லா

ஓசை: ஹலோ பெப்ஸி உமாவா?

உமா: ஆமாங்க நீங்க யாரு பேசுறது?

ஓசை: நான் போறங்க இனி வரமாட்டேங்க!!!

உமா: யாருங்க நீங்க? எங்க போகபோறீங்க? என்ன சம்மந்தம் சம்பந்தம் இல்லாம பேசுறீங்க

ஓசை: இல்லிங்க நான் வரமாட்டேன்ங்க, போறேங்க என்ன தடுக்காதீங்க!!!

உமா: ஒரு நிமிசங்க போகாதீங்க!!! லூசாப்பா நீ? இருப்பா!!!

ஓசை: அப்ப நீங்கதான் என்ன "லூசா" நீ என்று உரிமையோடு திட்டி திரும்ப வரசொன்னதா உங்க போட்டோ போட்டு ஒரு பதிவு போட்டுக்கட்டுமா?

உமா: என்னத்த வேண்டுமானாலும் செஞ்சுக்க ஆனா என்ன பாட்டு வேண்டும் என்று சொல்லு....

ஓசை : விடைகொடு எந்தன் நாடே என்று (பாடுகிறார் திடீர் என்று ரெண்டு குரல் ஒலிக்கிறது)

உமா: ஹலோ யாருங்க அது பக்கத்துல கிராஸ் டாக் ஆகுது ...

ஓசை: இல்லிங்க அவரும் என் பிரண்டுதான் பேரு சுகுணாதிவாகர் அவரும் கிளம்புறாராம்...

***************************
உமா: ஹலோ யாரு பேசுறது?

யாகூ ஊ ஹா ஹூஊஊஊஊஊஊ டிஷ்யும்.....

உமா: ஹலோ யாருங்க பேசுறது? உங்க டீவி வால்யூமை குறைங்க!!! ஏதோ சண்டை படம் பாக்குறீங்க போல!!!

ஹூஊஊஊஊஊஊ டிஷ்யும்.....

உமா: என்னங்க இது போன் போட்டு ஒரே அடிதடி எபெக்ட்டா கொடுக்குறீங்க யாருங்க நீங்க?

தமிழச்சி: ஹலோ யாருங்க லைன்ல!!!

உமா: நீங்கதாங்க போன் போட்டது நீங்கதான் சொல்லனும்?

தமிழச்சி: ஹோ என் பிரண்டுக்கு போன் போட்டேன் அது தப்பா ஆயிடுச்சி போல!!! என் பேர் தமிழச்சிங்க... நீங்க யார் பேசுறது?

நான் பெப்ஸி உமாங்க போன் போட்டா பாட்டு எல்லாம் போடுவேனே அந்த உமாங்க, என்னங்க உங்க டீவி வால்யுமை குறைங்களேன் ஒரெ அடிதடி சத்தம்மா இருக்கு

தமிழச்சி: டீவியில் இல்லைங்க அது, என் கிட்ட வாலாட்டின பொட்டீ கடை சத்தியா அடிவாங்குகிறார்...

உமா: உங்களுக்கு என்ன பாட்டு வேண்டும்...

தமிழச்சி: யார பார்த்து பாட்டு வேணும்மான்னு கேட்கிற... கராத்தே அடி வேணுமா?

**********************
அடுத்து செந்தழல் ரவி

ஹலோ பெப்ஸி உமாவா?

உமா: ஆமாங்க நீங்க யாரு பேசுறது?

ரவி: நான் 007 செந்தழல் ரவிங்க,

உமா: அது என்னாங்க 007 செந்தழல் ரவி?

ரவி: நான் யாரு யாரு என்ன என்ன பேருல பதிவு போடுவாங்கன்னு கண்டு புடிக்கிறதுல புலிங்க!!!

நான் அதுக்காக அவுங்க கூடயே பிரண்டு மாதிரி சேர்ந்து அவுங்க எப்படின்னு கண்டுபிடிப்பேங்க

உமா: ஹோ விஜயகாந் படம் பார்த்து கெட்டு போன ஆளா நீங்க? சரி சரி என்ன பாட்டு வேண்டும் என்று சொல்லுங்க ...

ரவி: "டொடய்ங் டொடய்ங் டொடட் டொடய்ங்" ...

உமா: என்னங்க இது ?

ரவி: இது 007 படத்துல வரும் தீம் மியுஜிக்... அத போடுங்க

உமா: அதெல்லாம் போட முடியாது ஏதாவது பாட்டு கேளுங்க..

ரவி: அப்ப எனக்கு ஒன்னும் வேண்டாம் போங்க!

***********************
அடுத்து அபி அப்பா

அபி அப்பா: ஹலோ ஹலோ ஹலோ ....

உமா: யாருங்க நீங்க?

என் பேரு அபி அப்பாங்க?

உமா: எங்கேந்து பேசுறீங்க?

அபி அப்பா: நீங்க இருக்கிற ரூமுக்கு அடுத்த ரூமில் இருந்துதான் பேசுறேன்...

உமா: அதுக்கு எதுக்கு போன் போட்டு பேசுறீங்க?

அபி அப்பா: அட நீங்க வேற என்கிட்ட யாராவது கை கொடுத்து ஹலோ சொன்னா கூட நான் கை கொடுத்து விட்டு எட்டி போய் நின்னு போன் போட்டுதான் ஹலோ சொல்லுவேன்...

உமா: ஏன் இப்படி?

அபி அப்பா: அது அப்படிதாங்க... போன்ல யாரு கூடயாவது பேசலன்னா கை கால் எல்லாம் நடுங்கும்.

உமா: சரி என்ன பாட்டுவேனும் ...

அபி அப்பா: பாட்டு எல்லாம் வேண்டாம் நீங்க ஒரு 24 ஹவர்ஸ் என் கூட பேசிக்கிட்டு இருங்க அதுபோதும்..

உமா: அதெல்லாம் முடியாது நீங்க முதல்ல பாட்டு கேட்டுவிட்டு லைன கட் செய்யுங்க...

அபி அப்பா: ஹலோ ஹலோ ஹலோ...(டி.ஆர் என் பக்கத்து வீடு அதனால் அவர் படத்து பாட்டு போட்டுவிடுங்க)

***************************

அடுத்து நம்ம கோபி

ஹலோ நான் கோபி பேசுறேங்க!!!

உமா: ஹாய் கோபி எப்படி இருக்கிங்க?

கோபி: என்ன கொடுமைங்க இது நான் ஹாய் கோபி இல்லிங்க? நான் ஹாய் கோபி இல்லிங்க? நான் ஹாய் கோபி இல்லிங்க?(நான் நிக்கிறேன் நிக்கிறேன் என்று பலாசுலாக்கி கத்துவது போல் கதறுகிறார்)

உமா: என்ன ஒரு பேச்சுக்கு ஹாய் சொன்னா இப்படி கோப படுறீங்க?

கோபி: இல்லீங்க நான் எங்க போனாலும் என் பேர்ல ஹாய் கோபின்னு ஒருத்தர் இருக்கிறார் அவர்தான் நான் என்று என்னிடம் பேசி வெறுப்பேத்துறாங்க!!!

உமா: சரி விடுங்க உங்களுக்கு என்ன பாட்டு வேண்டும் ?

கோபி: ரிப்பீட்டேய்...

உமா: என்னங்க இப்படி ஒரு பாட்டே இல்லீங்க?

கோபி: அட உங்களுக்கு தெரியலைங்க!!! ரஜினி படத்தில் !!! தேவுடா தேவுடா பாட்டில் நடுவில் வரும்ங்க...அந்த வரியை மட்டும் போடுங்க...

உமா: கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

********************************
அடுத்து TBCD

ஹலோ

உமா: யாரு பேசுறீங்க? உங்க பேரு என்ன?

TBCD: நான் உங்க பேர கேட்டேனா? எதுக்கு என் பேர கேட்குறீங்க..நான் பேர சொல்ல மாட்டேன்..

உமா: சரி விடுங்க எங்கேருந்து பேசுறீங்க?

TBCD :உங்க ஊர் எந்த ஊர் என்று நான் கேட்டேனா? எதுக்கு என் ?ஊர் பேர கேட்குறீங்க

உமா: சரியான மொக்கை கேசாக இருக்கும் போல!!! சரி என்ன பாட்டுதான் வேண்டும் அதயாவது சொல்லுங்க!!!

TBCD: பேரை சொல்லவா அது நியாயம் ஆகுமா?

***************************
அடுத்து மகேந்திரன்.பெ

ஹலோ

உமா: யாரு பேசுறீங்க?

மகேந்திரன்: நான் மகேந்திரன்

உமா: ஹோ டைரக்டர் மகேந்திரன் அவரா நீங்க?

மகேந்திரன்: இல்லை நான் அவர் இல்லை!!! எங்கபோனாலும் இதே கொடுமை!!

உமா: சரி சரி உங்களுக்கு என்ன பாட்டு வேண்டும்?

மகேந்திரன்: இந்த பாட்டு சூடான பக்கத்தில் வருமா?

உமா: அப்படின்னா?

மகேந்திரன்: விளங்கிடும் அப்ப உன்கிட்ட பேசுறது வேஸ்ட்..
நான் அவன் இல்லை படத்தில் இருந்து நான் அவன் இல்லை பாட்டு போடுங்க!!!!

***************************
உமா: நிறையபேர் கூட பேசனும் என்ற ஆசை இருந்தாலும் அதுக்கு நேரமும் காலமும் போதவில்லை!
ஆனால் பல பேர் இந்த பாட்ட குசும்பனுக்கு டெடிக்கேட் செய்ய சொல்லி
லெட்டர் வழியாகாகவும் SMS வழியாகாகவும் கேட்டு இருக்காங்க, இந்த பாடல் குசும்பனுக்காக....

திரையில் தோன்றும் பாடல்.....

அழகு நீ நடந்தால் நடை அழகு... (பேக்ரவுண்ட் கோரஸ்) அழகு
நீ சிரித்தால் சிரிப்பழகு (பேக்ரவுண்ட் கோரஸ்) அழகு
நீ பேசும் தமிழ் அழகு (பேக்ரவுண்ட் கோரஸ்) அழகு
நீ ஒருவன்தான் அழகு....

****************************

20 20 உலககோப்பை ஏன் பார்க்கவேண்டும்?

ஹலோ சித்தப்புங்களா யார் யார் எல்லாம் 20 20 வேர்ல்ட் கப் மேட்ச் இதுவரை பார்க்கவில்லையோ அவுங்க எல்லாம் போய் அத பாருங்க! கிரிக்கெட் பிடிக்காதவங்களுக்கு கூட பிடிக்கும், கிரிக்கெட் இல்லீங்க மைதானத்தில் சிக்ஸர், அல்லது நான்கு அடிச்சா, சும்மா ஆடுறாங்க பாருங்க ஆட்டம் அந்த ஊரு பொண்ணுங்க, என்னமா ஆடுறாங்க!!!
வியாழன் இரவு 8 மணிக்கு ஆரம்பித்தது மேட்ச், ஆரம்பம் எப்பொழும் போல நம்ம ஆளுங்க சொதப்ப விக்கெட் விழுந்துக்கிட்டே இருந்தது, அட சிக்ஸ், நான்கு அடிச்சாதான் அவுங்க ஆட்டத்தை பார்கலாம் என்று நினைத்தால் விக்கெட் விழுந்தா கூட சும்மா கும்மு கும்முன்னு ஆடுதுங்க...சரி நம்ம பயபுள்ளைங்க அடிக்கதான் மாட்டேங்கிறானுங்க நல்லவேளை அவுட்டாவது ஆவுறானுங்களே என்று சமாதானம் ஆகிட்டேன்.

பின் பாக்கிஸ்த்தான் காரங்க அடி பிரிச்சு எடுத்தானுங்க, ரொம்ப சந்தோசமா இருந்தது, அதுவும் 19 ஓவர் நம்ம கொடை வள்ளல் அகர்கர் போட 17 ரன் அடிச்சானுங்க...

கடைசியா என்ன ஆச்சு நாம எடுத்த அதே 141 ரன்னையும் அவனுங்க எடுக்க மேட்ச் டை ஆனது!மேட்ச் டை ஆனால் பவுல் அவுல் முறையில் வெற்றி நிர்ணயம் செய்யபடும் என்றார்கள்.

அது என்னடா பவுல் அவுட் முறை என்று பார்த்தால், ஸ்டெம்புக்கு முன்னாடி பேட்ஸ் மேன் இல்லாம சும்மா பவுலிங் செஞ்சு ஸ்டெம்ப அடிக்கனும், முதலில் நம்ம சேவாக் கரெக்டா அடிச்சார்,பாக்கிஸ்தான் சைடில் ஒருவர் போட ஸ்டெம்பை விட்டு வெளியே போனது பால். அடுத்து நம்மஹர்பஜன் அவரும் சூப்பரா போட்டார், திரும்பவும் பாக்கிஸ்தான் சைட் வேஸ்ட் செஞ்சார்கள்,அடுத்து நம்ம ஊத்தப்பா போட்டு ஒரு சூப்பர் ஸ்டெப்பும் போட்டார். நன்றாக இருந்தது. பின் அப்ரிடி போடஅதுவும் வெளியே போனது.. ஸோ நாம் வெற்றி பெற்றோம்.

நீதி: இந்தியா வெற்றி அடையவேண்டும் என்றால் ஸ்டெம்புக்கு முன்னாடி ஆள் இருக்க கூடாது, இருந்தா அந்த பால் ஸ்டெம்பை அடிக்காது, ஏன்னா அது பேட்ஸ் மேனால் ஸ்டேடியத்துக்கு வெளியே அடிக்கபட்டு இருக்கும்.
டிஸ்கி: நம்ம பாஸ்ட் பவுலர் ஊரில் இல்லை இருந்திருந்தா நல்லா விளக்கமாக எழுதி இருப்பார். (மேட்ச பத்திதாங்க) அவரு இல்லாத குறைய போக்க ஏதோ நம் பங்குக்கு...

Friday, September 14, 2007

நான் இதில் எழுதுவது இன்றோடு கடைசி,--ஏன்? போட்டோ ஆதாரம்:(((

மிகுந்த மன வருத்தத்துடன் இனி இந்த பக்கத்தில் எழுதமுடியாது என்பதை சொல்லிக்கிறேன், இந்த முடிவை நானாக எடுக்கவில்லை. சூழ்நிலை அப்படி, யாரையும் குறை சொல்லவோ, குற்றம் சொல்லவோ நான் விரும்பவில்லை,
நானே இதை எதிர்பார்ததுதான் இந்த முடிவை நான் முன்பே எடுத்திருக்கவேண்டும்.


கடந்த 4 மாதமாக எழுதிவந்தேன், இனி இதில் எழுத முடியாது. ஆமாங்க படத்த பாருங்க நான் கடந்த நான்கு மாதமாக எழுதிவந்த நோட் புக் கடைசி பக்கமும் முடிஞ்சு போச்சு, இனி எப்படி இந்த பக்கத்தில் எழுத முடியும் சொல்லுங்க. பேனாவில் இருந்த ரீபிலும் முடிஞ்சு போச்சு.


நீங்க எந்தபக்கம் என்று நினைச்சீங்க...

டிஸ்கி: இந்த பதிவு இனி எழுதமாட்டேன் என்று சொல்லி விடைபெறும் நண்பர்கள் சுகுணாதிவாகர், அரைபிளேடு மற்றும் பலருக்காகவும். புச்சா நோட்டு வாங்கி திரும்ப வாங்க எழுதலாம்:)))

Thursday, September 13, 2007

ங்கொக்கமக்கா!!! ரவா தோசை --- (கொஞ்சம் வித்தியாசமாக)

மக்களே நான் கடந்த முறை செய்த முட்டை மசாலா சமையல் குறிப்பை யாரும் டிரை செஞ்சு பார்த்திங்களா இல்லையான்னு தெரியவில்லை, ஆனால் எந்த புகாரும் வரவில்லை அதனால் யாருக்கும் சேதாரம் இல்லை என்று நினைத்து தைரியமாக அடுத்த சமையல் டிப்ஸ்.

முதலில் வைரமுத்து பாடல் தோன்றிய கதை என்று சொல்வது போல், இந்த ரவா தோசை தோன்றிய கதை.


அன்னைக்கு செம பசி வீட்டில் போய் சாதம் வைத்து, குழம்பு வைத்து எல்லாம் சாப்பிடும் அளவுக்கு பொறுமை இல்லை.சரி நூடுல்ஸாவது செய்யலாம் என்று பார்த்தால் அதுவும் இல்லை, சரி என்னதான் செய்யலாம் என்று பார்த்தேன் ரவா இருந்தது சரி ரவா தோசை செஞ்சிடலாம் என்று முடிவு செய்து, அதில் போட என்ன காய்கறி இருக்கு என்று பார்த்தேன் கேரட் மட்டும் இருந்ததுஅதை சின்னதாக வெட்டும் அளவுக்கு பொறுமை இல்லை பக்கத்தில் பார்த்தேன் Knorr veg சூப் மிக்ஸ் இருந்தது, சரி சும்மா போட்டுதான் பார்ப்போமே என்று அதை எடுத்து போட்டு அரிசி மாவு, போட்டு கலக்கி தோசை ஊற்றினேன், ங்கொக்கமக்கா என்று இருந்தது. நண்பன் சொன்னா மச்சி டேய் உன்னை கட்டிக்க போறவ கொடுத்து வச்சவடா என்று எப்படி டா இப்படி புதுசு புதுசா என்ன என்னமோ செய்கிறாய் என்றான்...இது போல் ஒரு தோசையை சாப்பிட்டது இல்லை என்று கேட்டு கேட்டு வாங்கி சாப்பிட்டான்.


தேவையான பொருட்கள்:


ரவா : 3 கப்

அரிசி மாவு: 1 கப்

கடலை பருப்பு : ஒரு கை பிடி

பச்சை மிளகாய்: 3

இஞ்சி : சிறியது

Knoor வெஜ் சூப் மிக்ஸ்


செய்முறை:

ரவா, அரிசி மாவை தண்னீர் விட்டு கலந்து அதில் கடலை பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய் எல்லாம் வறுத்து போட்டுக்கவும்,பின் knoor வெஜ் சூப் மிக்ஸை போட்டு கலக்கவும். பின் தோசை கல்லை போட்டு தோசை ஊற்றவும்.


(குறிப்பு: தோசை எப்படி ஊற்றுவது என்று தெரியாத கல்யாணம் ஆகாத இளம் பெண்களுக்கு இலவசமாக டிரைனிங் கொடுக்கபடும்.)


சாப்பிடும் முறை:
பின் ஒரு பிஸை எடுத்து வாயில் போடவும், அங்கிருந்து ங்கொக்கமக்கா என்று சவுண்டு வரும்.


(குறிப்பு: தோசை எப்படி சாப்பிடுவது என்று தெரியாத கல்யாணம் ஆகாத இளம் பெண்களுக்கு இலவசமாக ஊட்டியும் விடபடும்.)


டிஸ்கி: ஜெஸிலா நீங்க இந்த முறை உங்க சமையல் குறிப்பு புத்தகத்தை எடுத்துவிட்டேன் என்று சொல்லமுடியாது.

Monday, September 10, 2007

நமீதா போட்டோஸ் -ஜொள்ளு ஸ்பெசல்

அகில உலக நமீதா ரசிகர்களே உங்களுக்காக கும்மீத்தா சாரி சாரி நமீதா படங்கள்.





நச் என்று "இச்" வைப்பது எப்படி???

எனக்கு கேட்க கூச்சமா இருக்கு இருந்தாலும் கேட்கிறேன் இச் வைப்பது எப்படி?நச்சென்று இச்சொன்று வைத்தாயே என்ற பாடலை கேட்டு இருக்கலாம் எல்லோரும், எனக்கு அதிலும் சந்தேகம் இருக்கிறது, எனக்கு நிஜமாக இச் வைப்பது எப்படி என்று தெரியவில்லை! தெரிந்த யாரும் சொல்லி கொடுக்க மாட்டேங்கிறாங்க!!!

பலருக்கும் அனுபவம் இருக்கும் எங்கு எங்கு வைக்கலாம் எங்கு எங்கு வைக்க கூடாது என்றுசொன்னால் என் போன்ற சின்ன பிள்ளைகளுக்கு உபயோகமாக இருக்கும்.

சரியாக எங்கு எங்கு "ச்" வரும் எங்கு எங்கு "ச்" வராது?

தள்ளிச்சென்றான் இங்கு ச் வருமா?

சொல்லி கொடுங்க!!!

ஏங்க எல்லாம் இப்படி முறைக்கிறீங்க? நான் ஏதும் தப்பா கேட்டுவிட்டனா?சரி சரி போய் எல்லாம் வேலைய பாருங்க சமத்தா... இச் ஆராய்சி எல்லாம்வீட்டில் போய் செஞ்சுக்கலாம்!!!

டிஸ்கி: தனியாக ச் வைக்க முடியாதாமே!!! அதுக்காகதான் இச் என்று சொன்னேன்!!!

Thursday, September 6, 2007

ஒரு முடியின் கதை

சிறகடித்துப் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகளை ரசிக்கும்

தருணங்களைக் காட்டிலும் என்றைக்கேனும்

இந்த வண்ணக்கலவை நிறமிழந்து போகுமோ என்ற அச்சம் மிகுகிறது.

அலையடித்து பறக்கும் கல்லூரி பெண்கள் கூந்தல்களை ரசிக்கும் தருணங்களைக் காட்டிலும் என்றைக்கேனும்என் தலையில் அடித்த வண்ணகலவை வெளுத்து போய்விடும் என்ற அச்சம் மிகுகிறது...

இரவுப் பனியில் குளித்தெழுந்து தலை துவட்டாத ஈரத்தில்

இதழ் மலரக் காத்திருக்கும் ரோஜாக்களைப் பார்த்து

புன்னகைக்கவும் மறந்து போய் இன்று

ஒரு நாள் மட்டும்தானே இந்த அழகு எனகவலை தொற்றிக் கொள்கிறது

காலை சவரில் நனைந்து தலை துவட்டிய துண்டில்

ஒட்டிக்கொண்டு வரும் சாயத்தை பார்த்து

அழவும் மறந்து போய் இன்னும் எத்தனை நாள் தான்

இந்த சாயம் நிற்கும் என்ற பயம் தொற்றி கொள்கிறது!!!

ஓயாத உன் பேச்சொடு கலந்து வரும் புன்னகையில்

அதிக பங்களிப்பு இதழ்களுக்கா விழிகளுக்கா என

ஆராயவும் மனமின்றி இது எனக்கானதா என

ஏக்கமே நிலை தடுமாறச் செய்கிறது

காற்றோடு கலந்து வரும் ஈர பதத்தில்

கூட சாயம் வெளுத்துவிடுமோ என பயம் அது பற்றி

ஆராயவும் முடியவில்லை அது போல் முடி

எனக்கு வாய்க்காதா என்று ஏக்கம் வருகிறது

இருப்பை மறந்த தேடலில்

கரைந்து ஓடும் கால வெளியில்

தொலைந்து போவது

என் சுயம் மட்டுமே

வெளுப்பை மறைக்கும் முயற்சியில்

கரைந்து ஓடும் சாயங்கள் மழையில்

மற்றவர்களுக்கு தெரிந்து போவது

என் சொட்டை தலையும்

அதில் வெள்ளை முடியும் மட்டுமே!!!

டிஸ்கி : வழக்கம் போல் எதிர் கவிதை கண்மணி அக்கா கவிதை கருப்பில் இருப்பது.

Wednesday, September 5, 2007

ரொம்ப நாடகளுக்கு பிறகு கண் குளிர குளிர சைட் அடித்தோம்

காலையில் அண்ணாச்சி ஆசிப்புக்கு போன் போட்டு என்ன அண்ணாச்சி ஆபிஸ் பக்கம் வாங்க லஞ்சுக்கு எங்கயாவது போகலாம் என்றேன்.
அவரும் சரிய்யா 1 மணிக்கு லேம்ஸி பிளாசா வந்துவிடுகிறேன் என்றார்.

மணி 12.30 யோவ் நான் இப்ப கிளம்புறேன் நீ எங்க இருக்க என்றார். ஒருத்தர பார்க்க போனேன் டிராபிக்கில் மாட்டிவிட்டேன் என்றேன், சரி ஒன்றும் அவசரம் இல்லை பொறுமையாக வா என்றார்.

சரி என்று அவரை போய் பார்க்கும் பொழுது மணி 1.20 ... இனி.

உள்ளே நுழைந்தா தத்தக்கா பித்தக்கான்னு நடக்க தெரியாம ஒரு பிகர் அண்ணாச்சிய நோக்கி நடந்து போய் கிட்டு இருந்துச்சு.. எங்க அண்ணாச்சி மேல மோதி அண்ணாச்சிக்கு அடிபட்டு விடுமோ என்ற நல்ல எண்ணத்தில் நம் மீது மோதி அடிப்பட்டாலும் பரவாயில்லை என்று நான் சொய்ங் என்று சறுக்கி ஓடி போனா அதுக்குள்ள டக்குன்னு ஒருத்தன் வந்து தாங்கி பிடிச்சி கூட்டிக்கிட்டு போனான்..புஸ்ஸ்ஸ்ஸ் (காதில் இருந்து புகை) .

என்னாடா என்று பார்த்தால் புடவை கட்டி நடக்க தெரியாம நடந்ததன் வினை.

ம்ம்ம் சரி வாங்க புட் கோர்ட் போகலாம் என்று உள்ளே போனால் திமு திமு திமுன்னு ஒரு 150 பிகர்ஸ் எல்லாம் புடவையில்... அய்யோ அய்யோ எதவிடுவது எத பார்ப்பது என்று தெரியாமல் முழிக்க, அண்ணாச்சி டேய் வாடா சாப்பிடலாம் என்றார்...

அண்ணே கண்ணுக்கு பிகர் இல்லாத போதுதான் வயிற்றுக்கு உணவிட சொல்லி வள்ளுவர் சொல்லி இருக்காருண்ணே என்றேன்!!!
அண்ணாச்சி தலையில் அடுத்து கொண்டு போய்.. சாப்பாடு வாங்கி வந்தார்.

சாப்பிடும் பொழுது ரெண்டு மூனு பெண்கள் என் மீது மோதியதால் அண்ணாச்சி பக்கம் இருந்து லேசா கருகல் வாசனை அடித்தது...உடனே தண்ணி குடிச்சி நெருப்பை அடக்கினார்.

அவர்களுக்குள் ஏதோ போட்டி இருக்கும் போல யார் புடவையை இறக்கி கட்டுவது என்று... ஒழுங்கா கட்டவும் தெரியாமல் சும்மா சுத்திக்கிட்டு வந்து ஒரு கன்னி பையன் மனதை இம்சை செஞ்சுதுங்க...

அவுங்க புதுசா யாரும் வந்தால் கன்னத்தோடு கன்னம் வைத்து வரவேற்பு கொடுத்தாங்க (கை கொடுப்பது போல்) எனக்கும் ஒரு தபா என்றேன்!!! யாரும் கண்டுக்கவே இல்லை!!!

அண்ணாச்சி என்னை டேய் என்னாலா இங்க உட்கார முடியலை நீ இங்க வா என்றார்... அங்கே நான் கண்ட காட்சி (சென்சார்)....
அதன் பிறகு அண்ணாச்சி லிப்ஸ் மட்டும் அசைவது மட்டும் தெரிந்தது என் காதில் அவர் பேசியது எதுவும் விழவில்லை.

வெளியே வந்ததும் என்ன அண்ணாச்சி ஒன்னும் பேசவே இல்லை என்றேன்.. முறைத்தார் அது ஏன் என்றுதான் தெரியவில்லை!!!

எதுக்கு இப்படி எல்லாம் புடவையில் வந்து இருக்காங்க என்று தெரியாமல் குழம்பி போனோம், வெளியில் நின்று கொண்டு இருந்த பிகரிடம் எக்ஸ் கூயுஸ் மி ? எனி ஸ்பெஸல் டுடே என்று கேட்டேன்...

டீச்சர்ஸ் டே கொண்டாடுகிறோம் என்றார்கள்...

(அடிக்கடி இப்படி கொண்டாடுங்க என்று சொல்லிவிட்டு வர மனசு இல்லாமல் வந்தோம்)

டிஸ்கி: என்னதான் அறை குறையா அலைஞ்சாலும் புடவையில் இருக்கும் கிக்கே கிக்குதான்...அதுக்குதான் இந்த பதிவு.

Tuesday, September 4, 2007

கலாட்டா போட்டோ!!!

போட்டோ குசும்பு!!! திரும்பவும் வேற யாரு நம்ம அய்யனார் தான். அது என்னவென்று தெரியவில்லை, அய்யனாரை வம்புக்கு இழுக்கவில்லை என்றால் அந்த நாள் முழுமை அடைவது இல்லை:)))





ஆபாச பின்னூட்டம் இடும் TBCD யார்?

கடந்த சில நாட்களாக TBCD யிடம் இருந்து பின்னூட்டம் வர தொடங்கியது, அடா அடா யாரோ புது வாசகர் போல நம் பதிவை படிச்சதும் மட்டும் இல்லாமல் பின்னூட்டமும் போட்டு இருக்கிறாரே என்று மகிழ்ச்சியில் இருந்தேன், மறு தினம் அவரிடம் இருந்து மெயில், நீங்கள் கலாய்க்க ஒருவரின் படத்தை இந்த மெயிலுடன் அனுப்பி உள்ளேன் அவரை கலாய்க்கவும் என்று!!!

படத்தை பார்த்தவுடன் தான் புரிந்தது இவர் கொஞ்சம் விவகாரமான ஆளாக இருப்பார் போல என்று!!! ஏன் என்றால் அவர் அனுப்பி இருந்தது என் பிளாக் புரொபைலில் இருக்கும் டாம் பூனை படம்.


சரி நானும் பதிலுக்கு இவர் நல்லவர் , அன்பானவர், இவரை எல்லாம் கலாய்க்க கூடாது என்று பதில் மெயில் அனுப்பினேன்.


திரும்ப அவரிடம் இருந்து ஒரு மெயில்


"பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழும் கலாய்பவன். கலாய்க்க புகைபடம் இருந்தால் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com "
(அப்படியே என் புரோபைலில் இருப்பதை காப்பி பேஸ்ட் செஞ்சு இதுக்கு என்ன பதில் என்கிறார் அவ்வ்வ்வ்வ்வ்:(((( )

அதனால் தான் அனுப்பினேன் கலாய்கவில்லை என்றால் பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்று எச்சரிக்கை!!!
பிறகு அன்பு மழை பொழிந்து பின்னூட்டம் வரும், சாட்டில் வந்தாலே எங்கய்யா நான் அனுப்பின போட்டோவை கலாய்கவில்லையா என்று?
இல்லை என்றால் கொலுத்திவிடுவேன் என்று மிரட்டுவார், நானே அல்ரெடி கொலுத்திவிட்ட மாதிரிதான் இருக்கேன் என்று சொன்னாலும் கவனிப்பது இல்லை... சரி இதிலே எங்கே ஆபாசம் வந்தது என்கிறீர்களா?

ஆஆஆஆ என்று கதறும் அளவுக்கு பாசமாக பின்னூட்டம் இடுகிறார் அப்ப அவரு ஆபாச பின்னூட்டம் தானே இடுகிறார்.


Monday, September 3, 2007

யார் அந்த கருங்காலி போட்டோ சிக்கியது!!!

கடந்த பத்து நாட்களாக நான் தேடி வந்த அந்த கருங்காலியின் போட்டோ இன்று சிக்கியது. நீங்களே பாருங்கள், எவ்வளோ நல்லவனாக கூட்டதோடு கூட்டமாக வந்ததால் அடையாளம் தெரியாமல் போய்விடும் என்று நினைத்து விட்டார் போல் அவர் ஆனால் போட்டோவில் மாட்டிவிடுவோம் என்று தெரியாமல்...




ஆமாங்க போன பதிவர் சந்திப்பில் எனக்கு தட்டில் வச்சதே ஒரே ஒரு ஜாங்கிரி, ஆனா போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு திரும்பி பார்க்கிறேன் தட்டு மட்டும் இருக்கு... சரி போனா போகுதேன்னு விட்டு விட்டேன்.. . ஆனா இன்னைக்கு வசமாக சிக்கியது அந்த போட்டோ!! பாருங்க கை மட்டும் வந்து ஜாங்கிரிய திருடுது...

யார் அந்த கருங்காலி என் தட்டை காலி செய்தது????

Sunday, September 2, 2007

நான் ஏன் கேரளாவுக்கு மாற கூடாது? வீக் ஆரம்ப ஜொள்ளு

அது என்ன மாயமோ தெரியலை இந்த கேரள பெண்கள பார்த்தா மட்டும் மனசுக்குள்ள மணி அடிக்குது, தலையில் பல்பு எரியுது. (மொழி படம் மாதிரி).

கேரள பெண்கள் தலை குளித்துவிட்டு தலை முடி நுனியில் சிறு முடிச்சி ஒன்று போட்டு, தலையில் மல்லிகை பூ வச்சு, மலையாள பாரம்பரிய உடையில், நெற்றியில் சின்னதாக சந்தனம் வைத்து...ம்ம்ம்ம் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம் அவர்களின் அழகை இப்படி எல்லா அழகும் மொத்தமாக ஒரெ இடத்தில்...


















டிஸ்கி: படங்கள் அனுப்பிய வெங்கட்டுக்கு நன்றி.
போன முறை வந்து ஏமாந்து போன வரவனையான், தஞ்சாவூரான் ஆழியூரான் , ஆகியோருக்காக இந்த பதிவு...

அய்யனாருக்கு என் கண்டனம்...

அய்யனார் நீங்கள் எழுதும் கவிதை புரியாது என்பது தெரிந்தும் அதை படித்து , அதை புரிந்துகொள்ள நான் எடுத்த முயற்சிகள் ஏராளம்.
நீங்கள் எதிர் வினை என்று எழுதினால் நான் சம வினை என்று எழுதி அதுக்கு விளக்கம் கொடுத்தேன். இப்படி நான் பல பதிவுகள் உங்களுக்காக போட்டு இருக்கிறேன் ,அப்படி இருக்கும் பொழுது.. நீங்கள் ஏன் இப்படி செய்தீர்கள்?????

நான் மூன்று நாள் லீவில் இருக்கும் பொழுது, வகைத் தொகையில்லா சில உரையாடல்கள்-
என்று வரிசையாக 5 பதிவுகள் போட்டால் நான் எப்படி ஓவர் டைம் செய்துதான் விளக்கம் கொடுக்க வேண்டி இருக்கும். இப்படி எனக்கு அதிக வேலை கொடுக்கும் உங்களுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.

ஏன் இப்படி செஞ்சீங்க விளக்கம் கொடுங்க!!!


டிஸ்கி: எங்களுக்குள் ஏதும் பிரச்சினை என்று நினைச்சீங்களா மக்களே!!! அப்படி ஏதும் வராது. ஏன்னா நான் அய்யனாரை எப்படி வேண்டுமானாலும் கலாய்ச்சிக்கலாம் என்று அவருடன் *ஒரு வருட அக்ரிமெண்ட் போட்டு இருக்கிறேன்.

நான் உங்க கூட *அக்ரிமெண்ட் போட ரெடி!!! நீங்க உங்க பெயரையும் கெடுக்க சாரி சாரி கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் மெயில் அனுப்பவும்.

* நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

இப்படிக்கு
அக்ரிமெண்ட் போட்டு கலாய்போர் சங்கம்
துபாய்

எனக்கு தில் இருக்கு நான் எந்த பக்கம் என்று சொல்ல.உங்களுக்கு??

எல்லோரும் கடந்த சில நாட்களாக அவர் அவர்கள் எந்த பக்கம் என்று பதிவு போடுகிறார்கள், இந்த நேரத்தில் நானும் எந்தபக்கம் என்று சொல்லி ஆக வேண்டிய கட்டாயம்.

நான் அதை சொல்லாமல் போனால் பின்னொரு நாள் எனக்கு அவ பெயர் வரும், அதனால் நான் இங்கு அதை சொல்லியே ஆக வேண்டும். பல பேர் என்னிடம் நீ எந்த பக்கம் என்று கேட்டுவிட்டார்கள் இதுவரை சிரித்து மழுப்பி வந்தேன், இனி சொல்லாமல் இருந்தால்...

நான் தைரியமாக சொல்கிறேன் நான் வலது பக்கம் என்று...

என்ன குழப்பமாக இருக்கா பாருங்க நீங்களே சொல்லுங்க...நான் எந்த பக்கம் என்று...





ஆமாங்க நான் தூங்கும் பொழுது வலது பக்கம் படுத்துதான் தூங்குவேன். அப்ப நீங்க...:)))


நீங்கள் எந்தபக்கம் ???





டிஸ்கி: இத சொல்ல எதுக்கு சிரித்து மழுப்பவேண்டும் என்று நீங்க நினைக்கலாம். ஆனா அவுங்க கேட்டது ஆபிஸில் எந்த பக்கம் படுத்து தூங்குவாய் என்று..இதுக்கு சிரிக்காம என்ன பதில் சொல்ல முடியும்.