Friday, February 29, 2008

சென்றவார தமிழ் மணம் ஒரு பார்வை + கிசு கிசு

சண்டை, அதிரடி திருப்பம், அழுகாச்சி, இரங்கல் என்று எல்லாம் கலந்த வாரமாக இருந்ததாலும் , சண்டைகளே அதிகம் இருந்ததால் ஒரு வாரம் முழுவது ஒரே சண்டை காட்சிகள் கொண்ட படத்தை பார்த்தது போல் ஒருவித சலிப்பை தந்தது. இனி அது பற்றிய ஒரு பார்வை...

கடந்த வாரத்துக்கு முதல் வாரம் கருந்து கந்தசாமி என்று வந்த பதிவுகளால் யார் அது என்று தெரியாமல் முழித்தவர்களுக்கு விடை கிடைத்தது. கடந்த வாரம்அனைவரும் நேரடி தாக்குதலில் இறங்க குழப்பம் இன்றி எல்லாம் புரிந்தது.

அதிரடி திருப்பமாக திரும்பவும் வெற்றிகரமாக எத்தனாவது முறை என்று தெரியவில்லை ...ஓசை செல்லாவில் ரீ- என்ட்ரி.

True-known னிடம் இருந்து மெயில் ஏதும் வராததால் சிலரின் மெயில் பாக்ஸ் புதிய மெயில் ஏதும் இல்லாமல் காத்து வாங்கியது.

ஓசை செல்லாவின் வலைப்பூ ஹாக் செய்யபட்டு சில மணி நேரத்தில் முற்றிலுமாக மீட்கப்பட்டது. பலருக்கும் தெரிவதுக்கு முன்பு பிரச்சினை முடிந்ததால் அதன் பிறகு இது சம்மந்தமாகவந்த பதிவுகளால் பலர் ஏன் ஏதற்க்கு என்று புரியாமல் விழித்தனர்.

ஒரு வாரமாக நடந்த சண்டையினை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கோடு கோவி.கண்ணன் ஒரு வருடம் இனி பதிவு எழுத போவது இல்லை என்று சென்றது யாரும் எதிர்பாராத முடிவாக அமைந்தது.

கும்மி அடிக்க பயன்பட்டு வந்த அமுக கூட்டுவலைபூ தாக்குதல் களமாக மாறியதால் அதில் இருந்த கும்மி பதிவர்கள் பலர் வெளியேறினர்.

இப்படி பல சண்டைகள் நடந்தாலும் ஆங்காங்கே சில நகைச்சுவை சம்பவங்களும் நடைப்பெற்றது.

நண்பர் வலையுலக சுனாமி லக்கி லுக்குக்கு தமிழச்சியால் யோணி கொண்டான் என்ற புதிய பட்டம் வழங்கப்பட்டது, இது யாருக்கும் கிடைக்காத பட்டம் என்பதால் அதன் அருமை உணர்ந்த பல பதிவர் ஒன்று சேர்ந்து தீவு திடலில் அவருக்கு பாராட்டு விழா நடத்த போகிறார்கள்.

குசும்பனின் ஒரு பதிவால் கோபம் அடைந்த தமிழச்சி எதிர்பதிவு போட அதற்காக இனி குசும்பன் காலி என்று அய்யனார் & கோ இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

கிசு கிசு

சரம் தொடுக்கும் துபாய் பதிவருக்கு புரூப் ரீடிங் மட்டும் செய்துவந்தவர் இப்பொழுது பதிவும் எழுதி நூலகமும் ஆரம்பிச்சு கொடுத்து இருக்கிறார்களாம் அவர் யார் என்று தெரியாதவர்களுக்கு ஒரு சின்ன குறிப்பு அவர் கையில் எப்பொழுதும் குச்சி இருக்கும்.

ஊருக்கு சென்று திரும்பி வந்த அபிதாபி பதிவர் வரும் பொழுது ஒரே ஒரே வாட்டர் பாட்டில் மட்டும் வாங்கி கொண்டு வந்ததால் காத்திருந்த பாலைவன எல்லை காவல் தெய்வம் + சகாக்களின் தாக சாந்தி குறையுடனே முடிந்தது தாகசாந்தி நடந்த இடம் எல்லை காவல் தெய்வத்தை கலாய்க்கும் ஒருவரின் வீடு, எப்பொழுதும் எங்கு தாகசாந்தி நடைப்பெற்றாலும் ஆம்லேட் போட்டுவிடும் நபருக்கு(ஊருக்கு சென்று வந்தவர்) அருகிலேயே பிளாஸ்டிக் பையோடு வீட்டு உரிமையாளர் காத்திருந்தாராம்.


ஊரில் காதல் வலை வீசிய பெண் பற்றி துபாய் அப்பா பதிவரிடம் மப்பில் உளர அவர் சூரியன் FMல் தோன்றி சொல்லாதது மட்டும் தான் செய்யவில்லை, மறதியில் சம்மந்தப்பட்ட நபருக்கே போன் போட்டு இது போல் விசயம் தெரியுமா அவனுக்கும் அவுங்களுக்கும் ஒரு இதுவாம் என்று சொல்ல சம்மந்தப்பட்ட பதிவர் கொடுத்த அர்சனையில் ஒரு பக்க காது தீஞ்சி போச்சாம் அப்பா பதிவருக்கு.

வலையை ஹாக் செய்வதை தவிர்ப்பது பிஷ்சிங் பற்றி எல்லாம் குமுதம் ரிப்போட்டரில் பேட்டி கொடுதவரின் வலைப்பூவே ஹாக் செய்யப்பட்டதால் பலரும் அதிர்ச்சியில் உறைந்தனர் இதனை தொடர்ந்து பலரும் கடவுசொல்லை ஒரு முழநீளத்துக்கு மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.


தமிழச்சியின் பதிவு தலைப்பை குசும்பு செய்த நபர் பம்மல் பாண்டியாக மாறி பம்மியதாலே பிரச்சினை சுமூகமாக முடிந்தது என்றும் பலராலும் கிசு கிசுக்கப்படுகிறது.

Tuesday, February 26, 2008

இப்படி எல்லாம் எழுத உங்களுக்கு அசிங்கமா இல்லை, கேட்க யாரும் இல்லை என்ற தெனாவெட்டா?நான் இருக்கேன்ய்யா!

நானும் கொஞ்ச நாட்களாக பார்த்துக்கிட்டு இருக்கேன், தமிழ் மணத்தை ஓப்பன் செஞ்சாலேஅந்த வார்த்தைதான். ஏன் அப்படி? பொதுவில் எழுதுகிறோமே என்று ஒரு அக்கரை இல்லைபொறுப்பு வேண்டாம்,இது ஆரோக்கியமான போக்காக! கொஞ்சம் சிந்தியுங்கள்.

இதை யார் ஆரம்பிச்சது என்று தெரியவில்லை ஆனால் இதில் வவ்வால், மங்களூர் சிவா போன்றவர்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது...

பாருங்க எங்கு பார்த்தாலும் சென்செக்ஸ் சென்செக்ஸ் சென்செக்ஸ் ச்சே ச்சே
சென்செக்ஸ் எழுச்சி சென்செக்ஸ் சரிவு இது பற்றி பல பதிவுகள்.
யாருங்க அந்த சென் ரீமா சென்னா, ரியா சென்னா, இல்லை சுஷ்மிதா சென்னாஅத சொல்லுங்கய்யா முதலில்.

வவ்வாலாவது தமிழில் எழுதினார் கொஞ்சம் புரிஞ்சுது யப்பா சிவா நீ வெச்சு இருக்கும் பதிவோட தலைப்பு மட்டும்தான் தமிழில் இருக்கு அதையும் ஆங்கிலத்தில் மாத்திடு....சென்செக்ஸை பற்றி எழுதுங்க ஆனா எனக்கும் புரியும் படி எழுதுங்க...


டிஸ்கி: செக்ஸை பத்தி பேசினா தப்பு சென்செக்ஸை பத்தி பேசினா தப்பு இல்லையான்னு யாரும் தலைப்பு வெச்சுடாதீங்க. ஏன்னா அதை ஒரு பதிவர் ரிசர்வ் செஞ்சு வெச்சு இருக்காங்க!

Saturday, February 23, 2008

பெல்லி டான்ஸர் கூட ஒரு டான்ஸ்!!!



இதுக்கு பிறகும் நான் துபாயில் என்ன செய்யகிறேன் என்று கேட்கமாட்டீங்கதானே!!!



மேலும் பல பெல்லி டான்ஸ் போட்டோவும் , வீடியோவும் இரண்டு மாதம் கழித்து வெளியிடப்படும்:))

Monday, February 18, 2008

வணக்கம் வலையுலக செய்திகள் வாசிப்பது உங்கள் குசும்பன்

உள்ளூர் செய்திகள்:

அமீரக அப்பா பதிவருக்கு போனோ போபியா அதிகமாகிவிட்டதாம், அமீரக நண்பர்கள் அனைவருக்கும் 5 நிமிடத்துக்கு ஒரு முறை போன் போட்டு கதை சொல்லு கவிதை எழுதி கொடு என்று இம்சித்து வருகிறாராம். இதில் அதிகம் பாதிக்கபட்டது கோபியும், சென்ஷியும். இதனால் அவர் போன் செய்வதுக்கு முன்பே சென்ஷி போன் செய்து நான் பிஸி அப்புறம் பேசுகிறேன் என்றும் சொல்லிவிட்டு எஸ் ஆகிவிடுகிறாராம். மற்றவர்கள் எந்த நேரத்தில் போன் வரும் என்ற ஒரு வித பயத்திலேயே இருக்கிறார்கள். போன் வந்தவர்கள் உனக்கு எத்தனை முறை போன் வந்தது, நல்லவேளை எனக்கு 6 முறை தான் என்று துக்கம் விசாரித்த பின்பே ஹலோ சொல்கிறார்கள்.

ஊருக்கு போன எக்ஸ் பிரஸ் திரும்பி துபாய் வந்துவிட்டது, ஆனால் தண்ணி இல்லாத காட்டுக்கு மாற்றுவது போல்நெட், மொபைல் சிக்னல் இல்லாத இடத்தில் தூக்கி போட்டுவிட்டார்கள், பொட்டி தட்டிய கை சும்மா இருக்காது என்பது போல் நேரம் கெட்ட நேரத்தில் போன் போட்டு மலேசியாவில் இருக்கும் சம்மந்தியை இம்சித்து வருகிறார்.

ஊருக்கு போன தம்பி தனியாக தான் திரும்பி வருகிறார், அவர் வந்த பிறகுதான் தாகசாந்தி செய்யனும் என்று பதிவர் அய்யனார் ஒரு சொட்டு தண்ணி கூட குடிக்காமல் விரதம் இருந்து வருகிறார்.

அண்ணாச்சி பதிவர் சில சமயம் பாட போறேன் பாட போறேன் என்று குசும்பன் போன்ற சிறு பிள்ளைகளை மிரட்டி வந்தார், கடந்த வியாழன் அன்று இந்தியன் கான்ஸ்லேட்டில் நடந்த விழாவில் காட்டு குயிலு மனசுக்குள்ள என்ற தளபதி பட பாட்டையும், நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாலாம்... என்றபாட்டையும் அசத்தலாக பாடி மக்களை ஆடவைத்துவிட்டார்.

அதே விழாவுக்கு சிறப்பு விருந்தினராக சென்ற திரு.குசும்பன் குஜராத்தி பெண் பாடிய மதுரைக்கு போகாதடி என்ற பாட்டில் மனதை பறிகொடுத்துவிட்டு நடைபிணமாக திரிகிறாராம், அந்த பெண்ணுக்கு எப்படியாவது தமிழ் சொல்லி கொடுக்கனும் என்ற சபதத்தை எடுத்து இருக்கிறார்.

பதிவு போட மேட்டர் இல்லை மேட்டர் இல்லை என்று ஸ்டேட்டஸ் மெசேஜில் பினாத்திக்கிட்டு இருந்த ஒரு பெரும் பதிவர் சமிபத்தில் ஷார்ஜாவில் நடந்த தேவாவின் இசை நிகழ்ச்சியை காண ஆவலுடன் தனியாக போய் மாட்டிகிட்டு வாங்கி வந்த பல்பு & ஆப்புவே காரணம் என்று நம்ம தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன.

வெளிநாட்டு செய்திகள்:

மலேசியா சென்று இருக்கும் நாமகல்லார் பிரியாக இருந்தாலும் வெளியில் டூர் செல்வது இல்லையாம், எங்கே டூர் சென்றால் தன்னையும் தாக்கி பதிவு வருமோ என்ற பயத்தில் ரூமிலேயே மட்டையாகிவிடுகிறாராம்.

கோவா போய் குத்து டான்ஸ் ஆடிவிட்டு வந்து குட்டிஸ் கார்னர் சங்க உருப்பினர்கள் இருவருக்கு டான்ஸ் ஆடிய களைப்பு இன்னும் தீரவில்லையாம், அதில் ஒருவர் இரவிலும் கருப்பு கண்ணாடி போட்டுக்கிட்டு டாய்லெட் எங்கு இருக்கு என்று கூட தெரியாமல் சுத்திக்கிட்டு இருந்தையும், மற்றொருவர் ஷவரில் குளிக்கும் பொழுது கூட தலையில் மாட்டி இருந்த தொப்பியை கழட்டாததையும் பார்த்த மக்கள் முதல் நபருக்கு மனசுக்குள்ள பெரிய ஓசை செல்லான்னு நினைப்பு என்றும், இரண்டாம் நபருக்கு மனசுக்குள் பெரிய பாலுமகேந்திரா என்று நினைப்பு என்று பேசிக்கொண்டார்களாம்.

இந்த வாரம் அதிகம் பேச பட்டவை:

கருத்து கந்தசாமி யாரு?

ஜெயமோகனை ஏன் இந்த தாக்கு தாக்குறாங்க?

தமிழச்சி எங்கே?

ஓசை செல்லா எப்ப ரீ என்ட்ரி கொடுப்பார்? (ISD போன் லைன் வேலை செய்யவில்லையா?)

கைப்புள்ளயே இப்பதான் ஸ்டாரா?

அய்யனாரும் சுகுணாவும் புரியும் படி கவுஜ எழுதிகிறார்கள் ஏன் இந்த மாற்றம்?

முயல் முயல் & முயல் முயல் = முயல் முயல் முயல் முயல் முயல் முயல்

நான் சிறு பிள்ளையாக இருக்கும் பொழுது முதன் முதலாக முயலை தொட்டுபார்த்தது என் அத்தை வீட்டில், ஒரு பெரிய ரூம் முழுவதும் சிறிதும் பெரிதுமாக பல முயல்கள் தத்தி தத்தி ஓடிக்கிட்டு இருக்கும் லேசாக கதவைதிறந்து ஒரு கண்ணை அதில் வைத்து பார்த்த பொழுது அழகான காஷ்மீர் பனி கட்டி போல வெள்ளை வெளேர் என்று அழகாக பின் கால்களால் உட்கார்ந்து கொண்டு முன் இரு கால்களைகொண்டு முகத்தை சுத்தம் செய்து கொண்டு இருந்தது, நான் பார்பதை தெரிந்து கொண்டு மெல்ல அருகில் வந்து என் கால் விரல்களை முகர்ந்தது, அதை பிடிக்க குனிந்த பொழுதுதத்தி ஓடிவிட்டது. அத்தை இரு என்று சொல்லிவிட்டு உள்ளே போய் அதை காதை பிடித்து தூக்கி கொண்டு வந்தார்கள்.




அது அப்படியே பாவமாக முகத்தை வைத்து கொண்டு தொங்கியதை பார்க்கும் பொழுது பாவமாக இருந்தது அத்தை அதுக்கு வலிக்க போவுது இங்க கொடுங்க என்று கோயிலில்சுண்டலுக்கு கை நீட்டுவது போல் நீட்டினேன், அத்தை உடம்மை புடிச்சு தூக்க கூடாது தூக்கினால் செத்துவிடும் அதான் காதை புடிச்சு தூக்க வேண்டும் என்றார்கள் பின் காதைபுடிச்சு தூக்கினேன். அழகான அரிசி போல் சிறு சிறு பற்கள், சிகப்பு கலரில் கண் , சர்ப் எக்ஸெல் போட்டு துவைத்ததுபோல் வெண்மையான புசு புசு முடி, கடிக்குமா கடிக்காதஎன்ற பயம் இருந்தது அத்தையிடம் கேட்டேன் கடிக்காது என்றார்கள், பின் அதை மெதுவாக கீழே இறக்கிவிட்டேன் குடு குடுன்னு ஓடி போய் ஒரு மூலையில் உட்காந்து கொண்டது.நானும் ஓடி போய் அது வெளியே போக முடியாத படி குறுக்க படுத்துக்கிட்டு தொட்டு தடவி கொடுத்தேன் அங்கு இருந்த ஒரு இரண்டு மூன்று நாட்களுக்கு நான் தான்அதுக்கு கேரட்,கல்யாண முருங்கை இலை எல்லாம் கொடுப்பேன். கேரட்டை முன் கால்களால் வாங்கி நறுக் புறுக் என்று சமத்தா சாப்பிட்டுவிட்டு என் அருகில் வந்து அமர்ந்துகொள்ளும்.

ஊருக்கு புறப்படும் பொழுது அத்தை எனக்கும் முயல் கொடுங்க நான் வளர்கிறேன் என்றேன் வீட்டில் எங்க இடம் இருக்கு அது எல்லாம் முடியாது என்றார்கள் அம்மா, அப்பா நாம ஒரு கூண்டுசெஞ்சு பிறகு வந்து எடுத்துக்கிட்டு போகலாம் இல்லை பூனை கடிச்சுடும் என்றார்கள் சரி என்று வீட்டுக்கு வந்து ஒருவாரத்தில் அழுது அடம் புடிச்சு கூண்டு ரெடி ஆனது.போய் முதல் வேளையாக இரு ஜோடி முயலை தூக்கிட்டு வந்தேன். அதன் பிறகு விளையாடும் நேரம் குறைந்தது எப்பொழுதும் படிக்கும் நேரம் குறைவே அதிலும் மேலும் குறைந்தது.

வீட்டு வேலையாள் கூட அலக்கு எடுத்து போய் கல்யாண முருங்கை இலை பறிச்சு எடுத்துவந்து அதை மோட்டார் செட் தொட்டியில் போட்டு ஒரு ஒரு இலையாக அலசிபூச்சு,மொசுக்கட்டை இல்லாமல் எடுத்து ஒன்று ஒன்றாக அதுங்களுக்கு ஊட்டிவிடுவேன் வேறு யாராவது கூண்டை திறந்தா அந்த மூலைக்கு ஓடிவிடும் நான் திறந்தால் மட்டும் ஓடி கிட்டக்க வரும் அதில் ஒன்னு ரெண்டை புடிச்சு வீட்டுக்குள் எடுத்து வந்து ஓடவிட்டு அதன் பின் ஓடி, தவ்வி தவ்வி நானும் அதுங்களோடு ஒரு முயல் போல் விளையாடுவேன்.வீட்டில் அம்மா வாங்கும் கேரட்டையும் அம்மாவுக்கு தெரியாமல் நைசாக எடுத்து போய் அதுங்களுக்கு கொடுப்பேன்.

கூண்டை சுத்தம் செய்யும் பொழுது அம்மா எல்லா முயலையும் எடுத்து வீட்டில் விட்டு விட்டு கூண்டை சுத்தம் செய்வார்கள், சில சமயம் நான் தூங்கி கொண்டு இருந்தாலும்என் அருகில் வந்து முகத்தை உரசி கொண்டு என் அருகில் வந்து உட்கார்ந்துக்கொள்ளும். எனக்கு முன்னாடி யாரும் என் முயல்களை காதை பிடித்து தூக்கிவிட முடியாது.

ஒரு இரண்டு மூன்று மாதம் ஆனது ஒரு முயல் வயிறு மட்டும் பெரியதானது அம்மா சொன்னாங்க டேய் உன் முயல் குட்டி போட போவுது இன்னு ஒரு மாசத்தில் என்றார்கள், ஒரு நாள் பள்ளி கூடம் விட்டு திரும்ப வரும் பொழுது அம்மா கண்ணை பொத்தி அழைத்து சென்று ஒரு அட்டை பெட்டியினை காட்டினார்கள் கண் திறந்தால் அதனுள் பஞ்சு போட்டு அதன் மேல் ஒரு வெள்ளை துணி போட்டு அதில் மிகவும் சிறிதாக எலி குட்டி போல் முடியே இல்லாமல் நான்கு குட்டிகள்உடம்பில் உள்ளே இருக்கு சிறு சிறு நரம்புகள் கூட தெரிந்தது கண்ணே திறக்காமல் நான்கும் ஒன்றேடு ஒன்று ஒட்டியபடி படுத்து கிடந்தன. சிறு எறும்பு கடித்தாலும்இறந்துவிடும் என்று பெட்டியை சுத்தி எறும்பு மருந்து போட்டு பெட்டி மேல் வழியா ஏதும் பூச்சு விழாமல் இருக்க அதை பழய கொசுவலை கொண்டு மூடி பத்திரமாகபாதுகாத்து வைத்தோம்.

சின்ன சின்ன குட்டிங்களுக்கு பசிக்கும் பொழுது அம்மா அந்த பெரிய முயலை பிடிச்சு வந்து காலில் மல்லாக்க போட்டு அந்த சிறு குட்டிகளை எடுத்து அதன்வயிற்றின் மேல் விடுவார்கள் முடிகளின் உள்ளே மறைந்து இருக்கும் பால் காம்புகளை எப்படிதான் தேடி கண்டு பிடிக்கும் என்று தெரியாது, தேடி சமத்தாகபால் குடிச்சுவிட்டு ஏதோ ரொம்ப பெரிய வேலை செஞ்சு டயர்ட் ஆனமாதிரி அங்கேயே படுத்து விடுவார்கள், பின் அதை எடுத்து திரும்ப டப்பாவில் விடுவார்கள்,ஒரு முறை நான் ஆசை பட்டேன் என்று என் காலில் பெரிய முயலை போட்டு பால் கொடுக்கவைத்தார்கள் , ஒரு வாரத்தில் நான்கில் ஒன்று இறந்து போனது.பின் மூன்றும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பெரியதானது.

இப்படி ஒரு ஆறு மாதத்தில் நான்கு ஜோடிக்கும் மேல் அதிகம் ஆனது அம்மா சொன்னார்கள் ஒரு முயலை 50 ரூபாய்க்கு கேட்கிறார்கள் நம்மிடம் நிறைய இருக்கிறதேகொடுத்துவிடலாம் என்றார்கள் நானும் சரி என்றேன், மறுநாள் அம்மா முயலை வித்த காசு உண்டியலில் போட்டுவை என்று 50 கொடுத்தார்கள்சித்தப்பா வீட்டில் இருந்து சாப்பிட அழைத்து சென்றார்கள் கறி சாதம் சாப்பிட்ட பின் சொன்னார்கள்இது ஆட்டு கறி இல்லை முயல் கறி என்று அன்று நான் அழுத அழுகை வீட்டில் போட்ட சண்டை அன்று இரவு சாப்பிடாமல் அழுதுக்கொண்டே தூங்கினேன்...மறுநாள் இனி முயலே வேண்டாம் என்று எல்லாத்தையும் எடுத்து போய் அத்தை வீட்டில் விட்டு விட்டு வந்துவிட்டேன்.

எங்கேயாவது முயலை டீவியில் பார்த்தாலும் நான் வளர்த்த முயல்களும் அதோடு நான் விளையாடிய நாட்களும் நினைவுக்கு வரும்.

Friday, February 15, 2008

வாங்கிய மார்க் எல்லாம் இப்படியே வாங்கியதால்....

ஸ்கூல் படிக்கும் பொழுதும் சரி காலேஜ் படிக்கும் பொழுதும் சரி வாங்கிய மார்க் எல்லாம் இப்படியே இருந்ததால் இது எனக்கு பிடித்தமானதாக ஆகிவிட்டது. ஹ்லோ ரொம்ப தப்பா நினைக்காதீங்க 100 ல் எத்தனை முட்டை இருக்கு 2 ஆகையால்தான் அப்படி சொன்னேன்.



Wednesday, February 13, 2008

இலங்கை தமிழ் நண்பர்களே கொஞ்சம் பதில் சொல்லுங்க!!!

ராஜ்தாக்ரே விவகாரம் விசயமாக அறையில் விவாதம் செய்ய போய் அது இலங்கை பிரச்சினையில் வந்து நின்றது, அப்பொழுது அறை நண்பர் இலங்கை தமிழர்கள் இங்கிருந்து போனவர்கள் என்று நினைக்காதீங்க என்றார், அதுபற்றி விவரம் எனக்கு எதுவும் தெரியாததால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. வரலாற்றில் இராஜ இராஜ சோழன் ஆண்டதாக சொல்ல படுகிறது, அதன் மூலம் அங்கு சென்றவர்களா?இல்லை அதுக்கு முன்பே அங்கிருந்தவர்கள் என்றால் எப்படி சென்றார்கள்?

மற்றொரு நண்பர் சொன்னார் மலேசியா, இலங்கைக்கு ஆங்கிலேயரால் தமிழகத்தில் இருந்து அழைத்து செல்லபட்டவர்கள் என்கிறார்.

மற்றொரு நண்பர் இலங்கை இந்தியாவுடன் இனைந்து இருந்தது காலபோக்கில் கடல் கொண்டதால் தீவு ஆகிவிட்டது என்கிறார்.

எது உண்மை? வரலாறு என்ன? தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள்.

(இப்படி ஒரு சந்தேகம் அல்லது கேள்வியை நம் சகோதர்களை பார்த்து கேட்க வெட்கபடதான் வேண்டும் தெரியாமல் இருப்பது இதை விட வெட்கம் என்பதால் கேட்கிறேன் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்).

Friday, February 8, 2008

என்ன கொடுமைங்க இது? பெண்ணீய பதிவர்களே பதில் சொல்லுங்க



காலையில் அனானி ஒருவரும், துளசி டீச்சரும் ஒரு பின்னூட்டம் போட்டு இருந்தார்கள் என்னா மேட்டர் என்றால், ஆம்லேட் கேட்ட கணவனை கத்தியால் குத்திய மனைவி பற்றிய செய்தியின் சுட்டியை கொடுத்து இருந்தாங்க, ஒரு வாரம் முன்புதான் ஆம்லேட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று கண்டுபிடிப்பது எப்படி?


என்று ஒரு போஸ்ட் போட்டு இருந்தேன், அதற்கு இது ஆணிய சிந்தனை ,இது புனைவு என்று எல்லாம் பெண் வலைபதிவர்கள் சொல்லிவிட்டு சென்றார்கள் இப்பொழுது இதுக்கு என்ன சொல்ல போகிறார்கள்.


இதுல பார்த்தீங்கன்னா அவன் ஆம்லேட் போட சொல்லி கேட்டுவிட்டு மனைவிக்கு வெங்காயமும் வெட்டிக்கிட்டு இருந்து இருக்கான் அப்பொழுதுதான் அந்த கத்திய பிடுங்கி குத்தி இருக்காங்க. ஒருவேளை செய்தி தவறாக இருக்குமோ ஆம்லேட் போட லேட் ஆனதால் குத்தி இருப்பாங்களோ!

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இனி ஆம்லேட் போட சொல்லி கேட்கபிடாது, அவுங்களுக்கா மூட் இருந்து செஞ்சு கொடுத்தா சாப்பிடனும் இல்லையா பேசாம சாப்பிட்டு விட்டு படுத்துவிடனும். ஆம்லேட் கேட்டா இனி லேட். xyz என்று ஆக சாத்திய கூறு அதிகம் இருப்பதாக ஆலமர ஜோசியர் சொல்கிறார்.

ஹிந்து பேப்பரில் வந்தது (நன்றி அனானி).

டிஸ்கி:

1) மனைவி அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்....

2) பொன்னான மனசே பூவான மனசே வைக்காத பொண்ணுமேல ஆசை..

Monday, February 4, 2008

உடற்பயிற்சியும் - சில காமெடியும்!!!

முதலில் டம்பிள்ஸ் காமெடி:
தூள் படத்தில் விவேக் ரீமா சென்யை உசார் செய்ய காலையில் எழுந்து ரீமா சென் முன்னாடி நின்னுக்கிட்டு டம்பிள்ஸ் அடிப்பார், அப்ப அந்த பக்கமாக வரும் பரவை முனியம்மா அட இந்த கருமத்தைதான் இராத்திரி முழுக்க ஒட்டிக்கிட்டு இருந்தியான்னு அட்டை டம்பிள்ஸை காலால் ஒரு எத்து எத்தும் ரீமா சென் முன்னாடி அப்படி ஆனதில் விவேக் ரெம்ப நொந்து போவார் அந்த காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும்.

வெயிட் லிப்ட் காமெடி:
கோவில் படத்தில் வடிவேலு ஜிம் ஸ்கூல் நடத்துவார் அப்ப ஒருவன் படுத்துக்கிட்டு வெயிட் லிப்ட் அடிப்பார் அப்ப அந்த பக்கம் வரும் வடிவேலும் ச்சே ச்சே என்னா அடிக்கிற அடிக்கிற அடியில் தவக்களை எட்டிபார்க்க வேண்டாமா, அங்க பாருடா பழனி படிகட்டு போல எத்தனை ஸ்டெப்ஸ் பாருடா என்று அவருடைய கட் அவுட்டை காட்டுவார் பின் இங்க பாரு எப்படி அடிக்கிறேன் என்று சொல்லிட்டு, படுத்துவிட்டு இப்ப விடுங்கடா பார்கலாம் என்று சொல்வார்! அவனுங்களும் விட்ட உடன் அந்த கம்பி மூக்கை உடைச்சுடும் அப்ப அடிப்பட்ட நாய் கத்துவது போல் மியுசிக் வரும்,முகம் முழுவதும் இரத்தத்தோட எல்லோரையும் ஒரு லுக் விட்டுவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்வார் அந்த காமெடியும் செமயா இருக்கும்.

சிலம்பு காமெடி:
வில்லாதிவில்லன் படத்தில் நக்மாவை டாவடிக்கும் கண்ணாடி போட்ட ஒருவன் சிலம்பு கத்துக்க வருவான் வந்து கவுண்டர் பக்கத்தில் சிலம்பு சுத்தும் ஒருவன் டேய் அங்க போ அங்க போ என்று சொல்வார் அப்பொழுது கண்ணில் பட்டுவிடும் கட்டு போட்டு இருக்கும் அவரிடம் போய் உங்களுக்கு ஒரு கண்ணு நொள்ளயான்னு கேட்டுவிட்டு ஆக்ஸ்வலி இது என்னா என்று மான் கொம்பை கையில் வைத்துக்கிட்டு கேட்பார் கவுண்டர் மான் கொம்பு என்றதும் தூக்கி தூரத்தில் போட்டுவிடுவார் அது போய் நட்டுக்கா நிக்கும் அதன் அருகில் போய் நின்னுக்கிட்டு நல்லா உட்காந்து எழுந்திரிக்கனும் என்று சொல்லி கொடுப்பார் பின்னாடி அது ஆப்பு பிக்ஸ் ஆகிக்கும்!
இதுவும் செமகாமெடியாக இருக்கும்.


டிஸ்கி: உடற்பயிற்சி உடலுக்கு மிகவும் நல்லது எல்லோரும் உடற்பயிற்சி செய்யுங்கோ!!! ஆனா கவனமாக செய்யுங்க. யப்பா இதுவும் ஆரோக்கியம் சம்மந்த பட்ட பதிவுதான் இதுக்கும் எதிர் பதிவு எல்லாம் போட்டு சூட்டை கிளப்பாதீங்கோ:))))

தோழர் தோழி யாரும் எனக்கு இல்லாததால் எதிர் பதிவு வர வாய்பு இல்லை!! எனவே நீங்களும் உங்களுக்கு பிடிச்ச காமெடியை வகை படுத்தலாமே!!!