Showing posts with label தமிழ்மணம். Show all posts
Showing posts with label தமிழ்மணம். Show all posts

Sunday, January 17, 2010

உய்யா உய்யா உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்



சிலநேரங்களில் கிடைக்கும் எதிர்பாராத பரிசுகள், வாழ்த்துக்கள் கொடுக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை,நேற்று அதுபோல் கிடைத்த தமிழ்மண 2009 நகைச்சுவை, கார்ட்டூன் பிரிவின் முதல் பரிசு விருதும் அதன்பிறகுபோன் செய்தும் மெயில் அனுப்பியும் பின்னூட்டமிட்டும் வாழ்த்திய நண்பர்களால் மிகவும் உற்சாகமாக இருந்தேன்.

எவ்விதமான சச்சரவும் இன்றி தமிழ்மணம் ஒருநாள் கூட தாமதமின்றி இந்த போட்டியினை நடத்தி முடித்திருக்கிறார்கள், சரியான திட்டமிடல்களோடு பக்காவாக நடத்திமுடித்த தமிழ்மண நிர்வாகிகளுக்கும், தொழில் நுட்ப குழுவினருக்கும் நன்றிகள் சொல்லி அதை ஒரு வார்த்தையில் அடக்கிவிட முடியாது.

நான் பரிந்துரை செய்தது ஒரே ஒரு பிரிவான "நகைச்சுவை, கார்ட்டூன்" பிரிவு அதில் செந்தழல் ரவியின் வெண்ணைபோல் ஒருவன், கார்க்கியின் புட்டி ஹீரோ ஏழு, பினாத்தலின் திருமங்கலம் மில்லியனர் இவர்களை எல்லாம் பார்த்ததும் ஆஹா இந்த முறை வடை கிடைக்காது போலவே என்று மனசில் பயம் இருந்தது. இருந்தும் ஓட்டு மட்டும் யாரிடமும்கேட்க கூடாது ஸ்டேட்டஸ் மெசேஜ் கூட போடக்கூடாது யாருடையது பிடித்திருக்கிறதோ அதுக்கு ஓட்டு போடட்டும் நண்பர்களுக்கு எதுக்கு தொல்லைகொடுக்கனும் என்று விட்டுவிட்டேன். தோற்றாலும் யாரிடம் தோற்க போகிறோம் நம் நண்பர்களிடம் தானே இதில் என்ன இருக்கு என்று நினைத்தேன்.ஆனால் எப்பொழுதும் போல் நான் நினைப்பதுக்கு எதிராகவே நடப்பது போல் இதிலும் வெற்றிப்பெற்று முதல் பரிசு கிடைத்துவிட்டது. இருந்தும் எனக்கு பிடித்திருந்த செந்தழல் ரவி, கார்க்கி, பினாத்தல் சுரேஷ் இவர்களோடு இந்த விருதை பகிர்ந்துக்கிறேன். இதற்கு காரணமாக இருந்த சக பதிவுலக நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.

அமீரகத்தில் இருந்து வெற்றி பெற்ற நண்பர்கள் ஆதவன், இஸ்மத் ஆகியோருக்கும் மற்ற பிரிவில் வெற்றிப்பெற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Thursday, February 26, 2009

தமிழ்மண விருதின் பகீர் பின்னணி


”டேய் நல்லா தேடிப்பாருப்பா கதை கவிதைன்னு ஏதும் ஒன்னாவது”

”ம்ம்ம்ம் ஒன்னுமே இல்லைங்க!”

”புகைப்படமாவது ஏதும் கிடைக்குதா?”

”இல்லீங்க ஸ்கூலில் வாங்கிய மார்க் போல முட்டைய படம் புடிச்சு போட்டு இருக்கான் ஒரு படம் தான் தேறுது!அதுக்கு கொடுத்தால் மக்கள் நம்மை கேர்ட்டில் வெச்சே அதாலாயே அடிப்பாங்க!”

”அறிவியல், பொருளாதாரம், தொழில்நுட்பம் இதுல ஏதாவது?”

”மருந்துக்குக்கு கூட இந்த வார்தைகள் இல்லீங்க!”

”பெண்கள் பிரச்சினைகளை பற்றி ஏதும்?”

”பெண்களே பிரச்சினைகள் என்றுதான் ஒன்னு ரெண்டு கிடக்கு!”

”இப்படியே எல்லாத்தலைப்பிலும் தேடிப்பார்த்து டயர்ட் ஆகிய தமிழ்மணம்,எலேய் அப்புறம் என்னததான் டா இரண்டு வருசமா இங்க எழுதிக்கிட்டு இருக்கான்?”

”மொக்கை, கும்மி மட்டும் தாங்க இருக்கு.”

”சரி சரி போனா போகுது. அதுல ஏதும் தேறுதான்னு பாரு.”


ஆனந்தவிகடனில் ஒன்னும் ஜூவியில் ஒன்னும் இவன் கார்ட்டூன் வந்திருக்குங்க!


அதுல ஒன்னு எடுத்து போட்டுக்க. நம்ம பய!!!


நகைச்சுவை,கார்ட்டூனில் முதல் இடம் இப்படிதாங்க கிடைச்சு இருக்கும் தமிழ்மணமே நேரடியாக விருது கொடுத்து இருந்தால்!


ஆனால் இப்படி ஒரு நிலைவராமல் என்னையும் ஓட்டு போட்டு வெற்றிப்பெற வைத்த மக்கள் அனைவருக்கும் நன்றி!


வரும் ஆனா வராது என்ற காமெடி போல் இழுத்துக்கிட்டுஇருந்த விருதுகள் அறிவிச்சதில் மகிழ்ச்சி அதுவும் எனக்கும் தெரிந்த நண்பர்கள் பலருக்கும் விருது கிடைச்சதில் மகிழ்ச்சி! வெற்றிப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
தமிழ்மணத்துக்கு நன்றிகள்!
*******************************&&&&&&&&&&&&&&&****************


விருதுன்னு ஏதும் கிடைச்சா அதை யாருக்கும் டெடிக்கேட் செய்யனுமாமே! என் பல மன கஷ்டங்களை போக்க இருக்கும் ஒரே இடமாக இருக்கும் என் சக பதிவர்களுக்கும்,கும்மி நண்பர்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். தமிழில் ஒரு சிலவார்த்தைகள் சொல்லவிரும்புகிறேன்.

“எல்லாப்புகழும் இறைவனுக்கே”

(அப்புறம் என்னா பேட்டி, போட்டோஷெசன் எல்லாத்தையும் நாளை வெச்சுக்கலாம் ஏன் என்றால் எனக்கு இன்று விடுமுறை)

Tuesday, August 14, 2007

தமிழ்மண நுழைவு தேர்வு முடிவு

நடந்து முடிந்த நுழைவுதேர்வில் ஆர்வமுடன் பலபேர் கலந்துக்கொண்டனர், தேர்வு முடிவு என்றாலே வழக்கம் போல் பெண்கள் தான் முதல் இடத்தை பிடிக்கின்றனர். அது போல்தான் இங்கேயும் நம்ம ஜெஸிலாதான் முதல் இடத்தை பிடிக்கிறார். அவரை அடுத்து இரண்டாம் இடத்தை நம்ம வெங்கட்ராமனும் மூன்றாம் இடத்தை நம்ம ராம் நான்காம் இடம் இம்சையும் பெற்று இருக்கிறார்கள்.

தினதந்தி முதல் பக்கம்
நடந்து முடிந்த நுழைவு தேர்வில் முதல் இடம் பெற்ற ஜெஸிலா போட்டோவும் பேட்டியும் இடம் பெற்று இருக்கிறது.

கேள்வி: இந்த வெற்றி எப்படி உங்களுக்கு சாத்தியமானது?

பதில் : ஆபிஸில் கிடைக்கும் சிறிது நேரத்தையும் கூட வீனாக்காமல் தமிழ் மணத்திலேயே செலவிட்டேன்.

கேள்வி:இதுக்கு பின்னால் யார் இருக்கா?

பதில்: என் பின்னால் யாரும் இருந்தால் தமிழ்மணதை படிக்க முடியாமல் போய் இருக்கும். அதனால் பின்னால் யாரும் இல்லை.

கேள்வி: முதல் மார்க் வாங்கிட்டீங்க அடுத்து உங்கள் லட்சியம் என்ன?
பதில்: டாக்டர் ஆவது தான் என் லட்சியம். (எல்லாம் அப்படிதானே சொல்லுவாங்க).


தினகரன் முதல் பக்க செய்தி
பல சோதனைகளையும் தாண்டி சாதனை புரிந்த மாணவர் வெங்கட்ராமன்.

கேள்வி : நீங்க அதிக அளவில் சோதனைகளை சந்தித்து இருக்கிறீர்களாமே அப்படி என்ன?

முதலில் லக்கி கிட்ட மாட்டினேன் என்ன காரணம் என்றே தெரியவில்லை அவரு என் மேல கோவமா ஆயிட்டார். அடுத்து இளவஞ்சிக்கிட்ட சிக்கிசின்னா பின்னமானேன், அவருக்கும் என் மேல என்ன கொலை வெறியோ தெரியல. இரண்டு நாள் ரூம் போட்டு அழுதேன் தெரியுமா? இப்படி பல சோதனைகலை கடந்துதான் இந்த சாதனையை செஞ்சு இருக்கிறேன்.

தினமலர் செய்தி.

ஆபிஸில் பார்ட் டைமாக வேலை பார்த்து, இரவில் கண் முழித்து வேலை பார்த்த இளைஞர் ராம் மூன்றாம் இடம் பிடித்து சாதனை.

கேள்வி: நீங்க இந்த வெற்றிய எதிர் பார்தீங்களா?

பதில்: ஜாகிர்கான் நன்றாக பால் போடும் பொழுதே வெற்றிய எதிர் பார்தேன். இந்தியா வெற்றி பெறும் என்று சொல்லி இருந்தேன்அது போலவே நடந்தது.

கேள்வி: நான் அத கேட்கலீங்க நீங்க மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து இருப்பதை கேட்கிறேன்?

பதில்: ஹோ அதுவா இது எல்லாம் சாதாரணம், எங்க ஊரில் நான் படிக்கும் பொழுது நான் தான் முதல் மார்க் வாங்குவேன். ஏன்னா நான் ஒருத்தவன் தானே எங்க ஊர் பள்ளி கூடத்தில் படித்தது.

கேள்வி: இந்த வெற்றிக்கு யார் யார் எல்லாம் காரணம்?

பதில் : எங்க மேனேஜர்தாங்க!

கேள்வி: எல்லாரும் அம்மா அப்பா டீச்சர் என்று சொல்லுவாங்க நீங்க வித்தியாசமா மேனேஜர் என்று சொல்றீங்க?

பதில்: ஆமாங்க அவருதானே என்ன ஆபிஸில் சும்மா உட்கார வச்சு இருக்கிறார் அதனால் தானே என்னால் படிக்க முடியுது. அப்ப அவருதானே காரணமாக இருக்க முடியும்.

மறு கூட்டலுக்கு விண்ணபங்கள் வரவேற்கபடுகின்றன. கட்டணம் $5000 செலுத்துபவர்களுக்கு முதல் மார்க் வழங்கபடும்.

Sunday, August 12, 2007

தமிழ்மணம் நுழைவு தேர்வு

அனைத்து கேள்விகளுக்கும் விடையளி மதிப்பெண் 12 X 1= 12

1) நாள் ஒன்றுக்கு 5 பதிவுகளுக்கு மேல் போட்டு தாக்குபவர் யார்?

அ) மகேந்திரன்.பெ ஆ) செந்தழல் ரவி இ) ஓசை செல்லா ஈ) இவை அனைத்தும்


2) கீழ்கண்டவர்களில் யாருக்கு கராத்தே தெரியும்

அ) நாமகல் சிபி ஆ) பொட் டீ கடை இ)வரவணையன் ஈ) தமிழச்சி

3) பத்து பக்கத்துக்கு மேல் ஒரு பதிவு போடுபவர் யார்?

அ) அபி அப்பா ஆ) யோசிப்பவர் இ) பால சந்தர் கனேசேன் ஈ) உண்மை தமிழன்

4) முதல் பின்னூட்டம் போடுபவர் யார்?

அ) மை பிரண்ட் ஆ) அபி அப்பா இ) G3 ஈ) இலவச கொத்தனார்

5)பின்னூட்டம் மட்டுமே போடுபவர் யார்?

அ)மின்னுது மின்னல் ஆ) மின்னாத மின்னல் இ) மினுக்கும் மின்னல் ஈ) பின்னிய மின்னல்

6) சட்னி வடை யார்?

அ) மகேந்திரன்.பெ ஆ) பெ.மகேந்திரன் இ) மகேந்திரன் ஈ) எல்லாம் ஒன்றுதான்


7) கருப்பு யார்?


அ) நெல்சன் மண்டேலா ஆ) மைக்கேல் ஜாக்ஸன் இ) முத்தையா முரளிதரன் ஈ) இவர்கள் அனைவரும்

8) அய்யனாரின் கவிதைகளில் அதிக இடம் பெறும் வார்தை

அ) மது ஆ) குறி இ) ராதிகா ஈ) இவையனைத்தும்


9) யாருடைய பின்னூட்டத்தில் அங்கங்களின் பெயர் இடம் பெற்று இருக்கும்

அ) டோண்டு ஆ) போலி டோண்டு இ) மகேந்திரன்.பெ ஈ)இவை அனைத்தும்

10) போனில் பேசுவதை அல்லது ரோட்டில் அட்ரஸ் கேட்ட ஒரு நிகழ்வை பதிவாய் போடுபவர் யார்?

அ)தம்பி ஆ) அண்ணன் இ) சித்தப்பா ஈ) மாமா

11) வீனை வாசிக்க போவதாக சொல்லி தமிழ்மணத்தில் இருந்து விடைபெற்றவர்?

அ) ஓசை செல்லா ஆ) ஆசை செல்லா இ) பூசை செல்லா ஈ) தோசை செல்லா

12) யாருக்கு பின்னூட்டம் போட்டால் வீட்டை பற்றி திட்டி பதில் பின்னூட்டம் வரும்.

அ) தாண்டு ஆ) நோண்டு இ) பூண்டு ஈ) யாருக்கும் இல்லை

பொருத்துக 5 x 2 =10

1) அய்யனா------------ கேமிரா

2) கவிதாயினி காயத்ரி--------ஆவி

3) நாமக்கல் சிபி --------- நடணமங்கை,காலி கோப்பை

4) ஓசை செல்லா ------- ரிப்பீட்டேய்

5) கோபி ------- டீ கடை காரன்


கோடிட்ட இடங்களை நிரப்புக 8 X 1 =8

1) பதிவர் பட்டறையில் -----------------என்பவருடைய --------------------காணாமல் போனது.

2) -------------------பார்கிறேன் தொடரை 100 வாரங்கள் எழுதியவர்----------------

3) -------------------சோதனை தமிழ் மணத்தில் பிரபிலம்.

4) பதிவர் சந்திப்பு என்றால் ------------------------கண்டிப்பாக இடம்பெறும்.

5) ---------------------டைய டவுசர் கிழிந்து போனது.

6) திசையதிர ------------விட்டதை பற்றி எழுதியவர் ----------------------------

7) இளவஞ்சியிடம் வகையாக வாங்கி கட்டிகொண்டவர்---------------------------

8) ஜட்டியின் கதை எழுதியவர் ---------------------------

odd வார்தைகள்

1) அ)அய்யனார் ஆ) சுகுனாதிவாகர் இ) தமிழ்நதி ஈ) குசும்பன்

2) அ)நாமகல் சிபி ஆ)ராம் இ) நாகைசிவா ஈ) பெயரிலி

3) அ) அபி அப்பா ஆ)சென்ஸி இ) தம்பி ஈ) ஜெஸிலா

4) அ)கண்மனி ஆ) அபி அப்பா இ) முத்துலெச்சுமி ஈ)மாலன்

விளக்கி எழுதுக

1) பா.க.ச என்றால் என்ன?

2) வ.வா சங்கம் என்றால் என்ன?

3) ப.பா சங்கம் என்றால் என்ன?

4) அ.மு.க என்றால் என்ன?

5) கு.மு.க என்றால் என்ன?

Friday, July 20, 2007

தமிழ் மணத்தில் இருந்து விடை பெறுகிறேன்...

கடைசியாக தீர்மானித்து விட்டேன் தமிழ் மணத்தில் இருந்து விடை பெறுவது என்று. இத்தனை நாள் நீங்கள் எனக்கு கொடுத்து வந்த ஆதரவையும் மீறி, உங்கள் அன்பையும் மீறி இந்த முடிவு எடுக்கும் நிலைக்கு தள்ளபட்டு விட்டேன்.

பல நாட்கள் குழப்பத்திற்கு பிறகு இந்த முடிவு,
பல நாள் இதனால் தூங்காமல் இருந்திருக்கிறேன்,
ஏன் இப்படி? எதனால்? எதற்கும் விடை இல்லை.

ஏன் இந்த முடிவு என்று பலருக்கு ஆச்சிர்யமாக இருக்கலாம்,
இருந்தாலும் வேறு வழி இல்லை.

பல பேர் பல முறையில் விடை பெற்று இருக்கிறார்கள், நான்
கொஞ்சம் வித்தியாசமாக விடை பெற வேண்டும் என்று நினைக்கிறேன்.
நீங்கள் எனக்கு சந்தோசமாக விடை கொடுங்கள்.


1 + 1 = ???

தயவு செய்து விடை கொடுங்கள்.

(இளா போட்டோம்ல ஒரு மொக்கை)

Saturday, June 9, 2007

நீங்க எந்த இடத்தில்

தமிழ்மணத்தில் நீங்க எத்தனையாவது இடத்தில் இருக்கிங்க என்று தெரியவேண்டுமா? ஒரு சுய பரிசோதனை.

1)ரெண்டு வரியில் ஒரு பதிவு போட்ட பிறகு யாராவது பின்னூட்டம் போட்டு இருக்கிறார்களா என்றுஅடிக்கடி பார்ப்பவரா?

பதில் 1) ஆம் 2) இல்லை

2) யாரேனும் ஒருவர் வந்து ஒரே ஒரு புள்ளியோ அல்லது :) போட்டால் கூட தங்கள் வருகைக்கு நன்றி என்று பதில் போடுபவரா?

பதில் 1) ஆம் 2) இல்லை

3) சொந்தமாக ரூம் போட்டு யோசிச்சு பதிவு எழுதுபவரா?

பதில் 1) ஆம் 2) இல்லை

4) உங்க பெயரில் போலியாக யாரும் பதிவு எழுதவில்லையா?

பதில் 1) ஆம் 2) இல்லை

5) ரெண்டு வரியில் ஒரு பதிவு போட்டால் கூட அதற்க்கு 40 பின்னூட்டத்துக்கு மேல் வரும் சூட்சமம் புரியவில்லையா?

பதில் 1) ஆம் 2) இல்லை

6) மற்றவர்கள் பின்னூட்டத்திற்க்கும் பின்னூட்டம் போடுகிறீர்களா??

பதில் 1) ஆம் 2) இல்லை

7) ஒரு பதிவுக்கும் அடுத்த பதிவுக்கும் போதிய இடைவெளி விடுகிறீர்களா?
பதில் 1) ஆம் 2) இல்லை

8) பதிவு எழுதுறதைவிட பின்னூட்டம் போடுறதுல குறியா இருக்கீங்களா?

பதில் 1) ஆம் 2) இல்லை

9) கும்மிக்கும் கும்பிக்கும் அர்த்தம் தெரியுமா?

பதில் 1) ஆம் 2) இல்லை

10) நீங்கள் வலையுலகில் இல்லாவிட்டாலும் மற்றவர்கள் உங்களுக்கு மற்றவர்கள் ப்ராக்ஸி கொடுக்கிறாங்களா?

பதில் 1) ஆம் 2) இல்லை


ரிசல்ட்:
மேற்கண்ட கேள்விகளுக்கு 7-10 பதில்களுக்கு ஆம் என்று சொல்லியிறுந்தால்
நீங்க குட்டி பாப்பா உங்களுக்கு cerelac பரிந்துரை செய்யபடுகிறது .

4-6 பதில்களுக்கு ஆம் என்று சொல்லியிறுந்தால் "complan" தேவை.(வளர்ந்து வருகிறீர்கள் இருந்தாலும் ஊட்டசத்து தேவை படுகிறது.

1-3 பதில்களுக்கு ஆம் என்று சொல்லி இருந்தால் நீங்க ஆளாகி விட்டீர்கள்.

ஒரு பதிலுக்கு கூட ஆம் என்று பதில் சொல்லவில்லையா....அப்ப நீங்க இந்த வார நட்சத்திரம் அல்லது நீங்கதான் "இல்லி வடை"