1)ரெண்டு வரியில் ஒரு பதிவு போட்ட பிறகு யாராவது பின்னூட்டம் போட்டு இருக்கிறார்களா என்றுஅடிக்கடி பார்ப்பவரா?
பதில் 1) ஆம் 2) இல்லை
2) யாரேனும் ஒருவர் வந்து ஒரே ஒரு புள்ளியோ அல்லது :) போட்டால் கூட தங்கள் வருகைக்கு நன்றி என்று பதில் போடுபவரா?
பதில் 1) ஆம் 2) இல்லை
3) சொந்தமாக ரூம் போட்டு யோசிச்சு பதிவு எழுதுபவரா?
பதில் 1) ஆம் 2) இல்லை
4) உங்க பெயரில் போலியாக யாரும் பதிவு எழுதவில்லையா?
பதில் 1) ஆம் 2) இல்லை
5) ரெண்டு வரியில் ஒரு பதிவு போட்டால் கூட அதற்க்கு 40 பின்னூட்டத்துக்கு மேல் வரும் சூட்சமம் புரியவில்லையா?
பதில் 1) ஆம் 2) இல்லை
6) மற்றவர்கள் பின்னூட்டத்திற்க்கும் பின்னூட்டம் போடுகிறீர்களா??
பதில் 1) ஆம் 2) இல்லை
7) ஒரு பதிவுக்கும் அடுத்த பதிவுக்கும் போதிய இடைவெளி விடுகிறீர்களா?
பதில் 1) ஆம் 2) இல்லை
8) பதிவு எழுதுறதைவிட பின்னூட்டம் போடுறதுல குறியா இருக்கீங்களா?
பதில் 1) ஆம் 2) இல்லை
9) கும்மிக்கும் கும்பிக்கும் அர்த்தம் தெரியுமா?
பதில் 1) ஆம் 2) இல்லை
10) நீங்கள் வலையுலகில் இல்லாவிட்டாலும் மற்றவர்கள் உங்களுக்கு மற்றவர்கள் ப்ராக்ஸி கொடுக்கிறாங்களா?
பதில் 1) ஆம் 2) இல்லை
ரிசல்ட்:
மேற்கண்ட கேள்விகளுக்கு 7-10 பதில்களுக்கு ஆம் என்று சொல்லியிறுந்தால்
நீங்க குட்டி பாப்பா உங்களுக்கு cerelac பரிந்துரை செய்யபடுகிறது .
4-6 பதில்களுக்கு ஆம் என்று சொல்லியிறுந்தால் "complan" தேவை.(வளர்ந்து வருகிறீர்கள் இருந்தாலும் ஊட்டசத்து தேவை படுகிறது.
1-3 பதில்களுக்கு ஆம் என்று சொல்லி இருந்தால் நீங்க ஆளாகி விட்டீர்கள்.
ஒரு பதிலுக்கு கூட ஆம் என்று பதில் சொல்லவில்லையா....அப்ப நீங்க இந்த வார நட்சத்திரம் அல்லது நீங்கதான் "இல்லி வடை"
27 comments:
//ஒரு பதிலுக்கு கூட ஆம் என்று பதில் சொல்லவில்லையா....அப்ப நீங்க இந்த வார நச்சத்திரம் அல்லது நீங்கதான் "இல்லி வடை"
//
:))
எனக்கு காம்ப்ளான் வேணும்!
ரிசல்ட்: மேற்கண்ட 7 கேள்விக்களுக்கு இல்லை என்பது என் பதில் ஏனெனில் நான் யார் எனது ரிசல்ட் என்ன..???
ஹீஹீ.. மீ தி ஃபர்ஸ்ட்டூ. ;-)
//ஒரு பதிலுக்கு கூட ஆம் என்று பதில் சொல்லவில்லையா....அப்ப நீங்க இந்த வார நச்சத்திரம் அல்லது நீங்கதான் "இல்லி வடை"
//
சத்யா, இட்லிவடையாரே... ஓடிவாங்க.. இங்க ஒருத்தர் உங்களை பத்திதான் ஏதோ கலாய்க்கிறார். ;-)
இன்னும் 3 கேள்விகளை விட்டுவிட்டீங்களே.. இதையும் சேர்த்துக்கோங்க..
8- பதிவு எழுதுறதைவிட பின்னூட்டம் போடுறதுல குறியா இருக்கீங்களா?
1) ஆம் 2) இல்லை
9- கும்மிக்கும் கும்பிக்கும் அர்த்தம் தெரியுமா?
1) ஆம் 2) இல்லை
10- நீங்கள் வலையுலகில் இல்லாவிட்டாலும் மற்றவர்கள் உங்களுக்கு மற்றவர்கள் ப்ராக்ஸி கொடுக்கிறாங்களா?
1) ஆம் 2) இல்லை
அட்டெண்டன்ஸ்
குவீஸ்ல நானும் உள்ளேன் ஐயா போட்டுக்கிறேன். :-D
":))எனக்கு காம்ப்ளான் வேணும்! "
நாமகல் சிபி என்னது பிளாஸ்கல பார்லி டீ ஊத்தி வச்சி குடிக்கிற சங்கத்துல இருந்துக்கிட்டு
என்னது சின்ன புள்ளதனமா காம்பிளான் கேட்டுக்கிட்டு....
நல்லா இல்ல
கக்காபோ said...
"ரிசல்ட்: மேற்கண்ட 7 கேள்விக்களுக்கு இல்லை என்பது என் பதில் ஏனெனில் நான் யார் எனது ரிசல்ட் என்ன..??? "
நீங்க பழம் தின்னு கொட்டை போட்ட ஆளுங்கன்னாவ்..
அடுத்த வார நச்சத்திரன் ஏன் நிலா(நம்ம நிலா அக்கா இல்லை) ஆக கூட
வாய்ப்பு இருக்கிறது.
.:: மை ஃபிரண்ட் ::. said...
"சத்யா, இட்லிவடையாரே... ஓடிவாங்க.. இங்க ஒருத்தர் உங்களை பத்திதான் ஏதோ கலாய்க்கிறார். ;-) "
மை பிரண்ட்ன்னு பேர் வச்சுகிட்டு ..எதிரி பண்ணுற வேலைய
செய்கிறீரே இது நியாயமா?
"அபி அப்பா said...
அட்டெண்டன்ஸ் "
"அட்டெண்டன்ஸ் மட்டும் பத்தாது ஏன்னா மை பிரண்ட் சொல்லுறாரு
நிறைய பேரு ப்ராக்ஸி கொடுக்கிறாங்க என்று..."
so அபி அப்பாவுக்கு யாரே ப்ராக்ஸி கொடுப்பதால் அடுத்த வார சூரியன் அவர்தான்.
":: மை ஃபிரண்ட் ::. said...
இன்னும் 3 கேள்விகளை விட்டுவிட்டீங்களே.. இதையும் சேர்த்துக்கோங்க.."
மை பிரண்ட் கோரிக்கையின் படி அவர் கருத்தும்
8,9,10 வதாக இனைக்க பட்டு உள்ளது.
1 இல்லை
2 இல்லை
3. இல்லை
4. இல்லை
5. இல்லை
6. ஆம்
7.இல்லை (பதிவே போடுவதில்லை)
8. ஆம்
9. இல்லை
10. இல்லை
@மின்னுது மின்னல்:
//7.இல்லை (பதிவே போடுவதில்லை)//
மிமி.. நீங்கதான் அடுத்த வார சூப்பர் ஸ்டாருனு குசும்பன் சொல்றாரு.. பாருங்கோ! ;-)
@குசும்பன்:
//மை பிரண்ட் கோரிக்கையின் படி அவர் கருத்தும்
8,9,10 வதாக இனைக்க பட்டு உள்ளது. //
நல்லது.. நீங்க இந்த குவீஸ்ல கலந்துக்கில்லையா குசும்பன்?
//மை பிரண்ட்ன்னு பேர் வச்சுகிட்டு ..எதிரி பண்ணுற வேலைய
செய்கிறீரே இது நியாயமா? //
எல்லாரையும் இங்கே வர்ற சொல்லி அழைக்கிறேன்.. உங்களுக்கே ப்ராக்ஸி கொடுக்கிறேன் நான்.. என்ன இப்படி சொல்லிட்டீங்க? :-(
குசும்பா,
அண்ணன் அபி அப்பாவுக்கு பதில் போட்டீங்க.. அண்ணன் கோபிக்கு பதில் போடவே இல்லையே? அவரு கோச்சுக்கிட்டு போயிட்டார். :-(
"கோபிநாத் said...
குவீஸ்ல நானும் உள்ளேன் ஐயா போட்டுக்கிறேன். :-D "
கோபிநாத் உள்ளேன் ஐயா மட்டும் போட்டால் பத்தாது...
பரிச்சை மார்க் படி நீங்க எத்தனை மார்க் எடுத்து இருக்கீங்க...
அத சொல்லுங்க
"நல்லது.. நீங்க இந்த குவீஸ்ல கலந்துக்கில்லையா குசும்பன்? "
ஐயோ ஐயோ இந்த பதிவே எனக்காக போட்டதுதான் என்று உங்களுக்கு
தெரியவில்லையா?
ஹிட் கவுண்டர்ல இருக்குற 2257 விசிட்ல நான் மட்டும் யாராவது பின்னூட்டம் போட்டு இருக்காங்கலா என்று திரும்ப திரும்ப பார்த்தது 2256 தடவைங்கோ...
//ஹிட் கவுண்டர்ல இருக்குற 2257 விசிட்ல நான் மட்டும் யாராவது பின்னூட்டம் போட்டு இருக்காங்கலா என்று திரும்ப திரும்ப பார்த்தது 2256 தடவைங்கோ... //
என்னங்க கதை இது? நாந்தான் ஒரு கமேண்ட் போட்டுட்டு ரிலீஸ் பண்ணிட்டீங்களா இல்லையா.. பதில் பின்னூட்டம் போட்டீங்களான்னு வந்து வந்து உங்க ஹிட் கவுண்டரை ஏத்திட்டு இருக்கேன். இதுல வெளியே வேற விளம்பரம் பண்ணிட்டு இருக்கேனாக்கும்.. ஹீஹீ..
நான் இந்த பதிவை படிக்கவில்லை!!
மை பிரண்ட் said "பதில் பின்னூட்டம் போட்டீங்களான்னு வந்து வந்து உங்க ஹிட் கவுண்டரை ஏத்திட்டு இருக்கேன்."
நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு ...........(பாட்டு மறந்து போச்சு)
சாரி சத்யா...
காக்க உக்கார பனம் பழம் உழுந்த கதையா நான்
இந்த பதிவ போடும் பொழுது நீங்க நச்சத்திரம்.
சாரி.
//நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு ...........(பாட்டு மறந்து போச்சு) //
நல்லா பாடுறீங்களே! ;-)
.:: மை ஃபிரண்ட் ::. said... நல்லா பாடுறீங்களே! ;-)
நான் பாட ஆரம்பிச்சா எல்லாம் என் வீட்டுக்கு முன்னாடி
Q கட்டி நிப்பாங்க..நான் பாடி முடிச்சதும் பாஷால ரஜினி கையில்
முத்தம் கொடுப்பது போல் என் கையில் முத்தம் கொடுத்துவிட்டு
செல்வார்கள்...
கிகிகிகி கலக்கல்..
8க்கு ஆம் போட்டேன்.
சரி cerelac என்றால் என்ன?
Post a Comment