சரி முதலில் தேங்காய் பறித்துவிடலாம் பிறகு பறிக்கமுடியவில்லை என்றால் பொருள் எல்லாம் வீனாக போய்டும் என்று சொன்னதால். சரி என்று தேங்காய் திருட கிளம்பினோம், அதில் நிறைய விதிமுறை இருந்தது மரம் சின்னதாக இருக்க வேண்டும் அப்பதான் யாரும் வந்தால் சீக்கிரம் இறங்கி ஓடி போக முடியும்,மரம் இருக்கும் இடம் யாரும் அடிக்கடி வந்து போகாத இடமாக இருக்க வேண்டும், அந்த மரம் தேங்காய் நல்ல முற்றலாக இருக்க வேண்டும்.இப்படி நிறைய விதிமுறைகளை வைத்து கொண்டு மரத்தை தேடி போனோம் ஒரு வழியாக ஒரு தென்னத்தோப்பில் நல்ல மரத்தை கண்டுபிடித்து எல்லாம யாரும் வருகிறார்களா என்று காவல் காக்க ஒருவன் மேலே ஏறி இரண்டு தேங்காய் பற்றித்து போட்டு விட்டு இறங்கும் போடு தலையாறி (ஊர் காவல் காரர்) வர எல்லாத்தையும் அவசரம் அவசரமாக எடுத்து கொண்டு ஓடினோம்,அவரும் துரத்தி கொண்டு ஓடிவர நாங்க வேலிமுல்,நாயுருவி எல்லாம் காலில் கிழிக்க ஓடி வந்து பள்ளி கூடத்தில் பின் புறம் தேங்காயை பதுக்கி வைத்துவிட்டு ஓடிவந்த களைப்பாறினோம்.
தேங்காயை நாங்க கூர்மையான கருங்கல் கொண்டு குத்தி உறித்து கொண்டு இருந்தோம்,இருவர் மட்டும் கடைக்கு போய் பொருட்கள் வாங்கி வந்தனர்.தேங்காயை திருடி விட்டதால் கொஞ்சம் மீதி இருந்த காசுக்கு தேன் மிட்டாய்யும் முறுக்கும் வாங்கி வந்தனர். சாப்பிட்டு கொண்டே "சூடுகாய்" செய்ய ஆரம்பித்தார்கள் சக்தியும், முரளியும். என்ன செய்கிறாகள் என்று அருகில் இருந்து பார்த்து கொண்டு இருந்தேன், முதலில் அந்த தேங்காய் மேல் இருக்கும் குடுமியை பிய்த்து விட்டு அங்கு இருக்கும் மூன்று கண்னில் ஒரு கணில் ஓட்டை போட்டுவிட்டு அதில் வெள்ளம் பொட்டுகடலை ஏலக்காய் எல்லாம் பொடி செய்து அது வழியாக உள்ளே திணித்து கொண்டு இருந்தார்கள் பின் அந்த கண்னை ஒரு குச்சியை வைத்து அடைத்தார்கள்.
காய்ந்த மரத்தில் இருந்து கீழே விழுந்து இருந்த குச்சி அனைத்தையும் பொருக்கி தீயை மூட்டி அதில் தேங்காய்யை போட்டு வாட்டினார்கள், அப்ப அப்ப நடு நடுவே அந்த தேங்காய் தண்ணியில் வெல்லமும் பொட்டுகடலையும் கலந்து இருப்பதால் அது வற்றும் வரை சூடு படுத்த வேண்டும் அதன் பிறகு எடுத்து உடைத்து சாப்பிட்டா!எப்படி இருக்கும் தெரியுமா என்று நாக்கை சப்புகொட்டி காண்பித்தான் ஒரு அரை மணி நேரம் கழித்து தேங்காய் தீ பிடிக்க ஆரம்பித்தது, சரி இனிமேல் இருந்தால் முதலுக்கே(?) மோசம் ஆயிடும் என்று சொல்லி விட்டு தேங்காயை துண்டு சுற்றி எடுத்து கொண்டு பள்ளி கூடம் முன்பக்கம் வந்தோம், வந்து தேங்காயை உடைத்தால் தண்ணி வற்றவும் இல்லை ஒன்றும் இல்லை, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டு எங்கே தவறு நடந்தது என்று ஆராய்சி செய்தார்கள் கடைசியாக தேங்காய் முற்றல் இல்லை என்றாகள்,பின் உடைத்து ஆள் ஆளுக்கு பங்கு பிறித்து சாப்பிட்டோம், வெல்லத்தை சாதாரன தேங்காயில் சாப்பிடுவது போல் இருந்தது அப்படி இருந்தும் ஒன்றும் மிச்சம் ஆகவில்லை எல்லாம் காலியாகி விட்டது.
மதியம்வீட்டுக்கு போனால் அம்மா, அப்பா எனக்காக காத்துகொண்டு இருந்தார்கள் போனவுடனே கை,கால கழுவிட்டு வாடா தம்பி சாப்பிடலாம் என்றார்கள் இல்லமா இப்ப வேண்டாம் என்றேன் ஏன் இன்னும் தேங்காய் செறிக்கலையா என்றார்கள்நான் அதெல்லாம் ஒன்றும் இல்லையே என்று சமாளிக்க பார்த்தேன் வாய் ஓரத்தில் தேங்கா ஒட்டி இருக்கு பாரு என்றார்கள் நானும் பார்த்தேன் ஒன்னும் ஒட்டி இல்லை பொய் சொல்லி இருக்கிறார்கள் அப்பா என்னை பார்த்து சிரித்து கொண்டு இருந்தார். அம்மா அது சரி தேங்காய் ஏது என்று கேட்டுச்சு, ம்ம்ம் அது வந்து வந்து முரளி வீட்டு கொள்ளையில் பறித்து எடுத்து வந்தான் என்றேன்.
அவுங்க எப்படா தம்பி நம்ம தென்னந் தோப்பை அவுங்க வாங்குனாங்க என்று அம்மா கேட்டுச்சு, அப்பா சரி போதும் விடு தம்பி அடுத்தமுறை வேனும்னா சொல்லு நம்ம தலையாரியே பறித்து கொடுப்பான் அவனை பார்த்து ஓடி கை,காலை ஒடிச்சுக்காதே என்றார்.அடுத்த ஒரு வாரம் வீட்டில் வேலை செய்யும் பெண்கள், என்ன சின்ன பிள்ளை நம்ம தோப்புல தேங்கா திருட சொல்லிட்டு நீங்களே காவல் நின்னீங்கலாமே! என்று கிண்டல் செய்தார்கள். அதில் இருந்து சூடுகாய் என்றாலே தென்னாலி ராமன் பூனை போல் ஓடிவிடுவேன்.
12 comments:
உங்க வீட்டு வயலு எது? அடுத்தவன் வீட்டு வயலு எதுன்னே தெரியாம திருடி தின்னுருக்கிங்க. :))
அவ்ளோ வயல் இருக்கா உங்களுக்கு சொந்தமா...
"அவ்ளோ வயல் இருக்கா உங்களுக்கு சொந்தமா... " அப்படி இல்ல தம்பி..தென்னை மரம் வீட்டுக்கு முன்ன பின்ன இருந்தா தெரியும் ஊர் கடைசியில ஒரு நாலு மரத்த வச்சு இருந்தா யாருக்கு தெரியும்..சின்ன பிள்ளை வேற அப்ப ஏதுவும் தெரியாது..
நாட்டாமை மாதிரி கண்ணுக்கு தெரிஞ்சத வச்சி பண்ணையம் பண்ணிகிட்டு இருந்திங்கன்னு சொல்லுங்க. :)
ஆன கட்டி போரடிச்சிருக்கிங்களா?
என்ன கொடுமை சரவணா இது?
இப்படி பீலிங்க வாரியிறைச்சி பதிவெழுதி இருக்கிங்க போக்குவரத்தே இல்லாம இருக்கு.
பேசாம கவுஜ எழுதுங்க. அடிக்கறதுக்காவது நாலு பேர் கண்டிப்பா வருவாங்க.
சந்தேகமிருந்தா அய்யனாரிடம் கேளுங்க. அவரெல்லாம் இப்படிதான் அடிவாங்குவாரு.
முடிஞ்சா ராயல் ராமை கேட்டுபாருங்க. வார்த்தையே இல்லாம கவிதை எழுதறவரு அவரு.
ஒரு தேங்கா திருடுனா தப்பா?
இல்லப்பா
ஒவ்வொரு நாளும் ஒரு தேங்கா திருடுனா தப்பா?
தப்பு மாதிரி தெரியுது
தினக்கும் ஒரு தேங்கான்னு ஒங்க ஊர்ல எல்லாரும் திருடுனா?
பெரிய தப்புதான்
"டேய் ஓட்ட்யாங்க பெரிய தப்பான் குசும்பனுக்கு பின்னூட்டமா போட்டு தமிழ்மனத்தை விட்டே தூக்குங்கடா"
:)
//வார்த்தையே இல்லாம கவிதை எழுதறவரு அவரு. //
அப்பிடி போடு அரிவாள!! சின்னத்தல.. உங்க இமேஜு காலி!! (ஹாஹா.. ஹிஹி.. ஹோஹோ)
ஏம்பா சரவணா! இதுக்கு வூட்டு கிச்சன்ல திருடிரூக்கலாமில்ல? தேங்கா உரிக்கிற வேல மிச்சமாயிருக்கும்.. ஹ்ம்ம் பொழக்க தெரியாத புள்ள..
காயத்ரி said...
"ஏம்பா சரவணா! இதுக்கு வூட்டு கிச்சன்ல திருடிரூக்கலாமில்ல? தேங்கா உரிக்கிற வேல மிச்சமாயிருக்கும்.. ஹ்ம்ம் பொழக்க தெரியாத புள்ள.. "
அதுயாரு சரவணா??? எனக்கு போட்டியா?
poosudaa.
தெனாலி ராமன் - பூனை உதாரணம் - மிக அருமை - apt one- என்னடா காலம் போன கடைசியில், இப்போ comment வருதேன்னு பார்கதேங்க. உங்கள் எல்லா பதிவையும், im reading from start.
SKP
Post a Comment