Saturday, June 9, 2007

நாமகல் சிபியை குமட்டில் குத்தபோவது யாரு???

நாமகல் சிபியை குமட்டில் குத்தபோவது யாரு???
அசத்த போவது யாரு நிகழ்சியை பார்த்து பார்த்து போர் அடித்தவர்களுக்கு இந்த சுவையான குமட்டில் குத்த போவது யாரு நிகழ்ச்சி..


நாமகல் சிபி அண்ணன் எப்பொழுதுமே பாக்கு போட மாட்டார் எப்பயாவது தம் அடிக்கும் பொழுது பாக்கு போடுவார், எப்பொழுதுமே தம் அடிக்க மாட்டார் எப்பயாவது தண்ணி அடிக்கும் பொழுது மட்டும் தம் அடிப்பார்.எப்பயும் தண்ணி அடிக்க மாட்டார். எப்பயாவது ......................(கோடிட்ட இடங்களை நிரப்புக).

அப்படியா பட்ட நல்லவர் இன்று முதல் தம் மட்டும் அடிப்பது இல்லை என்று சபதம் எடுத்து இருக்கிறார்,மேலும் அவர் இனி அவரை தம் உடன் பார்த்தால் "குமட்டில் குத்தலாம்" என்று இனிய செய்தியை எல்லாருக்கும்சொல்லி இருக்கிறார். இனி வருங்காலத்தில் அடுத்த அடுத்த பழக்கங்களை விடும்பொழுது அண்ணன் தமிழ்மண பதிவர்,வாசகர்களுக்கா ஒவ்வொரு உறுப்பையும் நேந்துக்கிட்டு விட்டுவிடுவார் என்று அண்ணன் சார்பாக சொல்லிகிறேன்.


இனி அவரை குமட்டில் குத்த முத்தான சில யோசனைகள்...

தேவையானவை: 1)உருட்டு கட்டைகள் தேவைக்கு ஏற்ப
2) உதயம் படத்தில் நாகார்ஜுன் கையில் மாட்டி மற்றவர்களை குத்தும் குத்து கட்டை அவர் அவர் கை சைசுக்கேற்ப்ப
3)கிரிக்கெட் பேட், ஸ்டெம், ஹாக்கி ஸ்டிக் அவர் அவர் வசதிக்கு ஏற்ப.

செய்முறை: இந்த முறைக்கு கொஞ்சம் சிறு வயதில் ஓனான் பிடித்த முன் அனுபவம் தேவை. ஓனான் என்றும் கடைக்கு போய் சிகெரெட் வாங்கி அடித்தது இல்லை நாமாக அதன் வாயில் சிகரெட்டை வைத்துவிட்டு, ஏய் இத பார்டா என்ன பாத்து ஓனான்புகை விடுது என்று அடுத்து நொறுக்கிய அனுபவம் தேவை. அப்படி பட்டவர்கள் சிபியை எங்கு பார்த்தாலும் குண்டாங்கட்டியா கட்டிதூக்கி அவர் வாயில் ஒரு சிகெரெட்டை தினித்து (மறக்காமல் ஒரு புகை படம் எடுத்து கொள்ளவும் அப்பதான் ஏன் அடிச்சிங்க என்று நம்மை யாரும் கேள்வி கேட்க முடியாது.) குமட்டில் குத்து குத்து என்று மொத்தமாகவோ அல்லது தனி தனியாகவோ குமட்டு குத்து குத்தவும்...குமட்டு பொன்னிறமாகவரும் வரை விடாமல் குத்தி எடுக்கவும். இதை சின்னவர் முதல் பெரியவர் வரை செய்யலாம். மிகவும் ஜாலியாக இருக்கும்.

யோசனை 2:
தேவையானவை: மேற்ச்சொன்ன அனைத்து கருவிகளும் + ஒரு தெர்மா மீட்டர் + ஒரு டாக்டர் கோட்.

செய்முறை: ஒரு பத்து பதினைந்து பேரை மறைந்து இருக்க சொல்லி விட்டு, சிபி எதிரில் வரும் பொழுது...நாங்க எல்லாம் மெடிக்கல் காலேஜ் ஸ்டுடண்ஸ் ஒரு சர்வே எடுக்கிறோம். எல்லாருக்கு உடல் வெப்ப நிலை சூரியனை பொருத்து மாறுகிறதா என்று கண்டுபிடிக்க போகிறோம். சோ உங்க வாய ஆ காட்டுங்க இந்த தெர்மா மீட்டர வச்சு பார்த்துவிடுகிறோம் என்றுசொல்லிவிட்டு அவர் ஆ காட்டும் பொழுது சிகரெட்டை வாயில் வைத்துவிடவும்... பிறகு முதல் பத்தியில் உள்ள கடைசி மூன்று வரிகளைபடிக்கவும்.


யோசனை 3:

தேவையானவைகள்: மேற்கூறிய அனைத்து ஆயுதங்களும் + சிம்பு நடித்து வெளி வந்த தம் பட சீடி.

செய்முறை : அவர் கையில் தம் பட சீடியை கொடுத்துவிட்டு...பிறகு என்ன போட்டோ + குமட்டு குத்து.

குமட்டு எங்கிருக்கிறது என்று தெரியாமல் தடுமாறுபவர்களுக்கு அவர் சரியாக செய்யும் வரை வாய்ப்பு வழங்க படும். பின் தனியாக கிளாஸ் வேண்டுமானாலும் எடுக்க படும்.
மேலும் யோசனைகளும் செய்முறைகளும் வரவேற்க படுகின்றன.... முதலில் வருபவர்களுக்கு ஆயுதங்களும், குறிப்புகளும் இலவசமாகவழங்க படும். முன் பதிவும் செய்யலாம்.( குறிப்பு: ஆயுதங்கள் ஸ்டாக் உள்ள வரை மட்டுமே.)

வெப்பன் சப்ளையர்ஸ்: 1)உண்மைத் தமிழன் 2)அபி அப்பா 3)பொன்ஸ் 4)சந்தோஷ்


வேண்டுகோள்: ஆயுதம் உடையோர் ஆயுதம் தாரீர், இல்லாதோர் அடியாள் தாரீர்.21 comments:

said...

நாமக்கல் சிபி கையும் களவுமாக பிடிக்கப்பட்டார் - விவரங்கள் இங்கே.

குமட்லயே குத்துங்க. திரும்பி குத்தினா தாங்குவீங்களா?

said...

பாவம் சிபி அண்ணா...

said...

நானும் போட்டியில் கலந்துக்குறேன். :-)

weapon ரெடியா? :-D

ஆனா அண்ணனை எப்படி அடிக்கிறதுன்னு தெரியலை.

said...

" நாமக்கல் சிபி கையும் களவுமாக பிடிக்கப்பட்டார் - விவரங்கள் இங்கே.

குமட்லயே குத்துங்க. திரும்பி குத்தினா தாங்குவீங்களா? "

ஏய் யார்ப்பா அது அங்கு பின்னங் கால் பிடறில அடிக்க ஒடுறது யாரு குசும்பனா பாரு ஏய் அவனேதான்ப்பா ஏய் புடிங்கப்பா அவன...

சே என்னமா சிட்டா பறந்துட்டான்

said...

"துர்கா|†hµrgåh said...
பாவம் சிபி அண்ணா... "

வாங்க துர்கா!
அண்ணன் அடி வாங்குறதா நினைச்சு பார்த்து பாவம் சொல்லுறீங்களா?

said...

".:: மை ஃபிரண்ட் ::. said...
நானும் போட்டியில் கலந்துக்குறேன். :-)

weapon ரெடியா? :-D

ஆனா அண்ணனை எப்படி அடிக்கிறதுன்னு தெரியலை. "

யார்ப்பா அங்க மை பிரண்டுக்கு இரண்டு உருட்டுகட்டையும்,
ஒரு வின்னர் சீடியும் பார்சல்....

படத்த பார்த்து வடிவேலு அடி வாங்குறத மட்டும் பார்த்து மனப்பாடம்
பண்ணிக்கிட்டு வந்துடுங்க..

தப்பு பண்ணினாகூட அடுத்த முறை வாய்ப்பு வழங்க படும். so கவலை படாதீங்க.

said...

//ஆனா அண்ணனை எப்படி அடிக்கிறதுன்னு தெரியலை.//

என்னாது தெரியலையா? எதையும் பிளான் பண்ணி செய்யனும்...இங்க பாருங்க அஜக்...நெஜக்....நொஜக்....இப்டிதான்....

said...

"இங்க பாருங்க அஜக்...நெஜக்....நொஜக்....இப்டிதான்.... "

என்ன அபி அப்பா! யோசனைகளை பற்றி ஒன்னுமே சொல்லவில்லை,
ஓ நீங்க கொடுத்த ஐடியாவை நீங்களே பாராட்ட கூடாது என்று தன்னடக்கமா?

said...

//என்ன அபி அப்பா! யோசனைகளை பற்றி ஒன்னுமே சொல்லவில்லை,
ஓ நீங்க கொடுத்த ஐடியாவை நீங்களே பாராட்ட கூடாது என்று தன்னடக்கமா?//

ஆஹா! தேர இழுத்து தெருவுல வுட கெளம்பிட்டாய்ங்கய்யா கெளம்பிட்டாய்ங்கய்யா....செவனேன்னு போய்கிட்டு இருக்குர என்னய போயி சிபிகிட்ட மாட்டிவுடுற உமக்கு குசுப்பு சாஸ்திய்யா சாஸ்திய்யா!!

said...

"ஆஹா! தேர இழுத்து தெருவுல வுட கெளம்பிட்டாய்ங்கய்யா கெளம்பிட்டாய்ங்கய்யா....செவனேன்னு போய்கிட்டு இருக்குர என்னய போயி சிபிகிட்ட மாட்டிவுடுற"

என்னங்க நீங்க சொல்லுறத பார்த்தா உங்களுக்கும் இந்த பதிவுக்கும்
சம்பந்தமே இல்லங்குற மாதிரில்ல இருக்கு...நீங்க சொன்ன இன்னும்
பல யோசனைகளை நான் போடுலங்க்குற கோபமா??? இல்லை
நன்றி அபி அப்பா என்று போடவில்லை என்கிற கோபமா?
இல்ல வெப்பன் சப்ளையர்ஸ்ல 1000 உருட்டு கட்டை என்று குறிப்பு
போடாம வெறும் உங்க பேர மட்டும் போட்டுவிட்டேன் என்கிற
வருத்தமா...சொல்லுங்க அபி அப்பா..எல்லா நாம பேசி தீர்த்துக்களாம்.

said...

எங்க சிபியை காணும்! யாரவது அடிச்சி சிங்கத்த சாச்சுட்டாங்களா?

said...

குசும்பன்,ரெண்டு நாளா ஊர்ல இல்லை. ஆனா எங்க ஊருக்கு போயிட்டேன். அதான் பிளாக் பக்கம் வர முடியலை.

இல்லைன்னா நானே இங்க கும்மி அடிச்சி தூள் கெளப்பி இருப்பேன்!

பகல்ல ஆஃபீஸ் வேலைய முடிச்சிட்டு நிதானமா வரேன்!

மத்தபடி கிண்டலடிச்சதுக்காக கோவிச்சிக்குறதெல்லாம் நம்ம கொள்கைல கிடையாது. :).

நம்ம கொள்கையெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்.

:)
:)
:)

இதான்!

said...

//ஆனா அண்ணனை எப்படி அடிக்கிறதுன்னு தெரியலை//

அஞ்சாவது வியர்டு இருக்கு. அப்ளை பண்னுங்க மை பிரண்ட்!

(ஆஹா! நானே எடுத்து கொடுக்குறனா?)

said...

//ஏய் யார்ப்பா அது அங்கு பின்னங் கால் பிடறில அடிக்க ஒடுறது யாரு குசும்பனா பாரு ஏய் அவனேதான்ப்பா ஏய் புடிங்கப்பா அவன...

சே என்னமா சிட்டா பறந்துட்டான் //

ம்.அந்த பயம் இருக்கட்டும்!
:)

said...

//ஓ நீங்க கொடுத்த ஐடியாவை நீங்களே பாராட்ட கூடாது என்று தன்னடக்கமா?
//

அபி அப்பா! இதுல "ஆபரேஷன் ஓணான் பீடி" உங்க திட்டம்தானா?

:-x
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

said...

//...நீங்க சொன்ன இன்னும்
பல யோசனைகளை நான் போடுலங்க்குற கோபமா??? //

இன்னும் பல யோசனைகளா?

:( அபி அப்பா! சென்னைக்கு என்னிக்கு வர்றீங்க?

சங்கத்து ஆளுகளோட விமான நிலையத்துக்கே வந்துடுறோம்!

தம்பிகளா! ஆசிட் பாட்டிலெல்லாம் ரெடியா எடுத்து வையுங்க!

said...

"அபி அப்பா! இதுல "ஆபரேஷன் ஓணான் பீடி" உங்க திட்டம்தானா?

:-x
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! "

அப்பா(டி)!!!வை உங்க பிளான் படி சிபிக்கிட்ட போட்டு கொடுத்தாச்சு மை ஃபிரண்ட்
உங்க பிளான் சக்சஸ்...

said...

":( அபி அப்பா! சென்னைக்கு என்னிக்கு வர்றீங்க?

சங்கத்து ஆளுகளோட விமான நிலையத்துக்கே வந்துடுறோம்!

தம்பிகளா! ஆசிட் பாட்டிலெல்லாம் ரெடியா எடுத்து வையுங்க! "

அடா அடா இதும் நீங்க சொன்னது போலவே நடந்துடும் போல
இருக்கு மை ஃபிரண்ட்..எப்படிங்க உங்களாள மட்டும் இப்படி கரெக்ட்டா பிளான் பண்ணி
செய்ய முடியுது மை ஃபிரண்ட்...

said...

//அடா அடா இதும் நீங்க சொன்னது போலவே நடந்துடும் போல
இருக்கு மை ஃபிரண்ட்..எப்படிங்க உங்களாள மட்டும் இப்படி கரெக்ட்டா பிளான் பண்ணி
செய்ய முடியுது மை ஃபிரண்ட்...//

:))

said...

//வெப்பன் சப்ளையர்ஸ்: 1)உண்மைத் தமிழன் 2)அபி அப்பா 3)பொன்ஸ் 4)சந்தோஷ்//

உண்மைத் தமிழன் ஆயுதம் வேற சப்ளை செய்யுறாரா?

அவருக்கு இருக்கு இன்னும்!

said...

//வேண்டுகோள்: ஆயுதம் உடையோர் ஆயுதம் தாரீர், இல்லாதோர் அடியாள் தாரீர்.//

:))