Thursday, June 21, 2007

"ஆப்பு"ரேசன் கவுஜர்ஸ்!

ஆப்புரேசன் கவுஜர்ஸ் ஸ்டாட்ஸ் அதன் துவக்கவிழா :)
(சிவாஜியில் ரஜினி கருப்பு பணத்தை எப்படி ஒழிக்கிறாறோ அது போல் இனி ....)


துர்கா: எப்படி குசும்பா எல்லா மொக்க கவிஞர்களையும் கண்டுபிடிக்க போற!!!

குசும்பன்: துர்கா எல்லா நாட்டுலேயும் வலைபதிவு பக்கம் வரும் பலபேர் இருக்காங்க சும்மா ஆணி புடுங்குறவுங்க, ஆணி புடுங்கர மாதிரி நடிக்கிறவுங்க எல்லாரையும் ஒரு இடத்துக்கு வரசொல்லுவோம். அவுங்க கிட்ட அவங்களுக்கு தெரிஞ்ச கவுஜை எழுதுறவுங்க பத்தி டீட்டெயில் கேட்போம்.

துர்கா: எப்படி குசும்பன் அவுங்க நம்ம கிட்ட சொல்லுவாங்க...

குசும்பன்: அதுக்கு நாம போகவேண்டிய இடம் முதலில் துபாய்...
(உய்ங்ங் ஏரேபிளேன் துபாய்ல இறங்குகிற சவுண்ட்)

குசும்பன்,துர்க்கா: ஹலோ மிஸ்டர் அய்யனார் எப்படி இருக்கீங்க...

அய்யனார்: என்ன இத மாதிரி கவுஜ, கதை எழுத சொன்ன தம்பி கூட எட்டி பார்கல, ஆனா நீங்க ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங் (பேச முடியாமல் கண் கலங்குகிறார்).

குசும்பன்: நாங்க இத மாதிரி "ஆப்பு"ரேசன் கவுஜர்ஸ்" ஆரம்பித்து இருக்கிறோம், உங்களுக்கு பு.மொ.க.வி பட்டம் கொடுத்த பத்தி கவல படாம எங்க கூட வாங்க.

அய்யனார்: நாலாயிரம் பேருக்கு நல்லது நடக்கனும்னா வருகிறேன் குசும்பன், துர்கா.

(தட தட தட தட ஏரேபிளேன் இப்ப சென்னையில் இறங்குகிற சவுண்ட், டப்பா பிளைட் அதான் இந்த தட தட சத்தம்).

எங்க பேச்சுக்குமதிப்பு கொடுத்து வலைபதிவை மேய்பவர்கள், சும்மா கமெண்ட் போடுபவர்கள், பதிவு போடுபவர்கள், கவுஞர்கள் எல்லாம் வந்து இருக்கீங்க ...நீங்க எல்லாம் செய்யவேண்டியது...உங்களுக்கு தெரிஞ்ச நண்பர்கள் ரெடி செய்து வைத்து இருக்கும், அல்லது போஸ்ட்செய்து இருக்கும் மொக்ககவுஜர்கள் யார் யார் என்று நீங்க இங்க எங்க கிட்டவந்து சொல்லுங்க, (கூட்டத்தில் இருந்து ஒருவர்).மொக்ககவுஜன்னா என்னா....அத ஏன் உங்க கிட்ட சொல்லன்னும்...

குசும்பன்: நீ வலைபதிவுக்கு புதுசா...!!!

அந்த ஆள்: ஆமா எப்படி கண்டுபிடிச்சிங்க...

குசும்பன்: ஹாஹாஹா..கண்னு...மொக்ககவுஜன்னா என்னான்னு நீ கேட்க்கும் பொழுதே...நான் தெரிஞ்சுக்கிட்டேன்...நீ என்னன்னு தெரியாம படிச்சு அவுங்களுக்கு கமெண்ட் போடுறதாலதான் அவுங்க இன்னும் மொக்ககவுஜ போடுறாங்க...நீ தெரியாம செய்யிற தப்பு மத்தவுங்க ஏன் உன் பிள்ளைங்க கூட நாளைக்கு இப்ப தமிழ் மணத்துல பரண் என்று ஒரு வசதி இருக்கு அதன் மூலமாக அத படிச்சு தலை கிறு கிறுத்து போகலாம் ... இது தேவையா...

அந்த ஆள்: நான் யார் யார்ன்னு சொல்லிடுறேன்... மேடைக்கு வருகிறார்

மற்றவர்கள்: பார்டா...நாம யார் யார்ன்னு சொல்லனும்மாம் இவரு எல்லாருக்கும் விருது கொடுத்து நல்ல பெயர் வாங்குவாராம்...

துர்கா: இங்க சொல்ல விருப்பம் இல்லாதவங்க அங்க ஆபிஸ் ரூம்ல வெயிட் பண்ணுங்க....
(பாதிபேர் ஆபிஸ் ரூம் போகிறார்கள் )

அங்கே ஆபிஸ் ரூம்மில்...( வராரு வராரு அய்யனார் வராரு, கையில் கவிதை, கதை தொகுப்ப எடுத்துக்கிட்டு வராரு...மொக்க சத்தம் கேட்காமலே, குந்திகினு கவுஜை போடுறாரு அழகு ராசா..) இது பின்னனி பாட்டு.

அய்யனார் அங்கே அவன் அவள் மற்றுமொரு அவள் மேலதிகமாய் சாயந்திர மழையும் (கதை தலைப்பே புரியலேயே ராசா எப்படிஎப்படி ராசா உன்னால மட்டும் முடியுது!!!) கதையை சொல்ல ஆரம்பிக்கிறார்.. என்ன கதையை சொன்னார் என்று உங்களுக்கு தெரியவேண்டுமா? http://ayyanaarv.blogspot.com/2007/06/blog-post_19.html போய் பாருங்கள் ...

ஒரு மண்டை ஓடு கீழே ரெண்டு பெருக்கள் குறி

துர்கா: அது என்ன குசும்பா ஒரு மண்டை ஓடு கீழே ரெண்டு பெருக்கள் குறி..

குசும்பன் : எச்சரிக்கைக்கு அப்படிதானே போட்டு இருப்பாங்க...படம் போட முடியல கொஞ்சம் அட்ஜஸ் செய்துக்குங்க..

எல்லாம் கதவை உடைத்துக்கிட்டு, ஜன்னல உடைத்துகிட்டு வெளியே வந்து விழுறாங்க...
அவர்கள் கொடுத்த லிஸ்ட்.....(சாரி ரகசியம்...)

உங்களுக்கு தெரிந்த பெயர்களை பின்னூட்டதுல சொல்லுங்க இல்ல அய்யனார் அங்க வருவாரு பின்னாடியே அப்புறம் ராம் வருவாரு ஆமா சொல்லிபுட்டேன்....


56 comments:

said...

ஸ்டார்ட் மியுஜிக்... :)

said...

குசும்பு,

"ச்ச்சும்மா......... வலிக்குதுல்ல.. வயிறு...!

குசும்பன் காதலி said...

டேய் குசும்பா, நீ ஏதோ இங்க நல்ல புள்ளை மாதிரி கவிஜையை எதிர்க்கறேன்னு ஆக்டிங் விடற. ஆனா அங்க என்கூட இருக்கும் போது ஒரே காதல் கவிதையா எழுதி தர. ஏண்டா இப்படி பொய் பேசற.

மின்னல் said...

குசும்பன் காதலி said...
டேய் குசும்பா, நீ ஏதோ இங்க நல்ல புள்ளை மாதிரி கவிஜையை எதிர்க்கறேன்னு ஆக்டிங் விடற. ஆனா அங்க என்கூட இருக்கும் போது ஒரே காதல் கவிதையா எழுதி தர. ஏண்டா இப்படி பொய் பேசற.
///

நீ யாரு எத்துனையாவது வட்டத்தில வர்ர..

said...

மின்னுது மின்னல் said...
ஸ்டார்ட் மியுஜிக்... :)

என்ன மியுஜிக் மின்னல்

said...

செல்வேந்திரன் said...
குசும்பு,

"ச்ச்சும்மா......... வலிக்குதுல்ல.. வயிறு...!


:)))))))))))) நன்றி

said...

எனக்குத் தெரிந்த பெரிய்ய கவிதாயினி துர்கா தான்.

said...

குசும்பன் காதலி said...

யார் நீ அசினா, ஸ்ரேயாவா, பாவ்னாவா, யார்ன்னு முதல்ல சொல்லு..

குசும்பன் காதலி said...

கோவை சரளா

said...

நந்தா said...
எனக்குத் தெரிந்த பெரிய்ய கவிதாயினி துர்கா தான்.

துர்கா அந்த கம்யூட்டர்ல அய்யனார்ன்னு பேர சொன்னீங்கனா
அலறி அடிச்சிக்கிட்டு ஓப்பன் ஆகும் அதுல லிஸ்ட்ன்னு ஒரு data base ஓப்பன் செய்து...

முதல் பெயரா : உங்க பேர போட்டுக்குங்க...கடைசியில சாய்ஸ்ல விட்டுவிடுவோம்...:)))))))

said...

அடபாவி....... ;-))

said...

குசும்பன் said...
மின்னுது மின்னல் said...
ஸ்டார்ட் மியுஜிக்... :)

என்ன மியுஜிக் மின்னல்
//

டைட்டில் மியுசிக் தான்

said...

இராம் said...
அடபாவி....... ;-))
///

தல தானா வந்து விழுது வலையில... :)

said...

இராம் said...
அடபாவி....... ;-))
///

சிரிப்பான் போட்டா விட்டுட முடியுமா... ???

சரி சரி நீங்களே சொல்லுங்க நீங்க இதுவரை எத்துனை கவிதை எழுதியிருக்கீங்க லிங்க் குடுங்க.... :)

said...

மின்னுது மின்னல் said...
இராம் said...
அடபாவி....... ;-))

இல்ல தானா விழல அவரு பேர கடைசியா போட்டுவிட்டேன்
என்கிற வருத்தம்....

நயன்தாரா said...

என்னோட சிபி சிபி சிபி

said...

பாவம்யா அய்யனார்.. விட்ருங்கய்யா.. ஆமா, நீங்க எல்லாம் அவர் நண்பர் வா.ம கவிதைகளைப் பார்த்ததில்லையா?

said...

பொன்ஸ்~~Poorna said...
பாவம்யா அய்யனார்.. விட்ருங்கய்யா.. ஆமா, நீங்க எல்லாம் அவர் நண்பர் வா.ம கவிதைகளைப் பார்த்ததில்லையா?

யக்கா அய்யானார நிறுத்த சொல்லுங்க நாங்க நிறுத்துகிறோம்.

டொக் ....என்னபா டொக்ன்னு ஒரு சவுண்ட்...

அய்யனார் குதிரையில டக் டக் டக் டக்ன்னு போய் கிட்டு இருந்தாரு
அக்கா சொன்னவுடனே சடன் பிரேக் போட்டுட்டாரு...

யக்கா வா.ம...யக்கா அவரு புலிய அவுத்துவிட்டு விடுவேன்னு
பயமுறுத்துகிறாரு...அதான்.. கொஞ்சம் சீரியஸ் டைப் போல
அதான் அவர் பக்கம் போகல...

said...

நயன்தாரா said...
என்னோட சிபி சிபி சிபி

மூனு தடவை சிபி பெயரை சேர்த்துக்க...

said...

அண்ணாத்த!!
உங்க ரவுசு கலகலக்குது போங்க!! :-D

Anonymous said...

வந்துட்டேன் ......

Anonymous said...

//நந்தா said...
எனக்குத் தெரிந்த பெரிய்ய கவிதாயினி துர்கா தான்.
//

குசும்பன் இவரும் நம்ப list இல் இருக்கார்.note this guy plz.எனக்கு கவுஜ வராது :)

Anonymous said...

//குசும்பன் காதலி said...
கோவை சரளா
//

hehe.குசும்பன்னுக்கு ஏற்ற காதலி

said...

CVR said...
அண்ணாத்த!!
உங்க ரவுசு கலகலக்குது போங்க!! :-D

ரொம்ப நன்றிங்க....

Anonymous said...

/துர்கா அந்த கம்யூட்டர்ல அய்யனார்ன்னு பேர சொன்னீங்கனா
அலறி அடிச்சிக்கிட்டு ஓப்பன் ஆகும் அதுல லிஸ்ட்ன்னு ஒரு data base ஓப்பன் செய்து...

முதல் பெயரா : உங்க பேர போட்டுக்குங்க...கடைசியில சாய்ஸ்ல விட்டுவிடுவோம்...:))))))) //

நான் இனிமேல் கவுஜ பக்கமே போக மாட்டேன்.இனிமேல் பதிவே எழுதவே மாட்டேன்.நான் எஸ்கேப்

said...

//நயன்தாரா said...
என்னோட சிபி சிபி சிபி
//

எத்தனை தபா வேணா என்னைப் போட்டுத் தள்ளுங்க!

ஆனா அதுக்கு முன்னாடி இவிங்க வந்து என் பேரை இப்படி முன்மொழியணும்!

ஹிஹி..!

குசும்பன் காதலி said...

செல்லம் மறக்காம இன்னிக்கு வந்து ஒரு கவிதை சொல்லிட்டு போயிடுமா. உன் கவிதையை கேட்டாதான் எனக்கு தூக்கமே வருது.

said...

நாமக்கல் சிபி said...
"ஆனா அதுக்கு முன்னாடி இவிங்க வந்து என் பேரை இப்படி முன்மொழியணும்!
ஹிஹி..!"

பீம் பாய் பீம் பாய் இந்த சிபிய கொஞ்சம் கவனி

பீம் பாய் said...

//பீம் பாய் பீம் பாய் இந்த சிபிய கொஞ்சம் கவனி //

முஜே தமிழ் மாலும் நஹி சாப்!
அவுர் முஜே சிபி ஜி பி மாலும் நஹி!

said...

குசும்பரே!!

நம்ம பேர நீ பயன்படுத்தி விளம்பரமாகிய தொகை சுமார் 33 ஆயிரத்து 240 திராம்.வரும் வெள்ளிக்கிழமைக்குள் கிடேசன் பார்க்கில் செலுத்தி ரசீது பெற்றுகொண்டு ஃபைனிலிருந்து தப்பிக்கவும்

said...

அய்யனார் said...
குசும்பரே!!

"நம்ம பேர நீ பயன்படுத்தி விளம்பரமாகிய தொகை சுமார் 33 ஆயிரத்து 240 திராம்.வரும் வெள்ளிக்கிழமைக்குள் கிடேசன் பார்க்கில் செலுத்தி ரசீது பெற்றுகொண்டு ஃபைனிலிருந்து தப்பிக்கவும் "

அய்யனார் முதல் சந்தேகம்....திராம் என்றால் என்ன எனக்கு
கிராம் தான் தெரியும்..

அடுத்து..."கிடேசன் பார்க்கில்" எந்த ஊரில் இருக்கிறது..
நடேசன் பார்க் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா?

said...

முஜே தமிழ் மாலும் நஹி சாப்!
அவுர் முஜே சிபி ஜி பி மாலும் நஹி!

பீம் சொல்லுறது ஒன்னும் புரியல...ஒரு வேளை நீங்களும் கவிஞரோ!!!

முனீஸ்வரன் said...

எனது பெயரையும் பயன்படுத்தி கலாய்த்துவிட்டு
வருகிற ஞாயிறன்று குவார்ட்டர் விஸ்கியும், சிக்கம் பிரியாணி மற்றும் சுருட்டு வகையாறாக்களை படையல் இடுமாறு கட்டளை இடுகிறேன்!

said...

//முஜே தமிழ் மாலும் நஹி சாப்!
அவுர் முஜே சிபி ஜி பி மாலும் நஹி!

பீம் சொல்லுறது ஒன்னும் புரியல...ஒரு வேளை நீங்களும் கவிஞரோ!!!//
அடப்பாவி குசும்பா உன் ரவுசுக்கு ஒரு அளவே இல்லையா சும்மா இந்த பக்கமா வந்தாக்கூட உள்ள புடிச்சி போட்டுகுவ போல.

said...

//
குசும்பன் இவரும் நம்ப list இல் இருக்கார்.note this guy plz.எனக்கு கவுஜ வராது :)//
இவங்க பெரிய கவிதாயினி விடாத குசும்பா இவங்களை

Anonymous said...

//நம்ம பேர நீ பயன்படுத்தி விளம்பரமாகிய தொகை சுமார் 33 ஆயிரத்து 240 திராம்.வரும் வெள்ளிக்கிழமைக்குள் கிடேசன் பார்க்கில் செலுத்தி ரசீது பெற்றுகொண்டு ஃபைனிலிருந்து தப்பிக்கவும் "//


அய்ஸ் யாருமே படிச்சு புரிந்துக்கொள்ள முடியாத அந்த கதையை,நம்ப குசும்பன் அவர்கள் கஷ்டப்பட்டு படித்து உங்களின் இலக்கிய புலமையை எங்களை போல பாமார மக்களுக்கு விளம்பரம் செய்தார்.அதுக்கு நீங்கதான் துட்டு கொடுக்கனும்.என்ன குசும்பன் நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்களே...அய்ஸை விடதீங்க :))

said...

சந்தோஷ் said...
//முஜே தமிழ் மாலும் நஹி சாப்!
அவுர் முஜே சிபி ஜி பி மாலும் நஹி!

பீம் சொல்லுறது ஒன்னும் புரியல...ஒரு வேளை நீங்களும் கவிஞரோ!!!//
அடப்பாவி குசும்பா உன் ரவுசுக்கு ஒரு அளவே இல்லையா சும்மா இந்த பக்கமா வந்தாக்கூட உள்ள புடிச்சி போட்டுகுவ போல.

சீச்சீ உங்கள மாதிரி நல்ல புள்ளைங்கள எல்லாம் ஒன்னும் செய்ய மாட்டோம்..

said...

சந்தோஷ் said...
//இவங்க பெரிய கவிதாயினி விடாத குசும்பா இவங்களை //

என்ன எல்லாரும் உங்கள விதாயினின்னு
சொல்லுறாங்க...

Anonymous said...

//சந்தோஷ் said...
//இவங்க பெரிய கவிதாயினி விடாத குசும்பா இவங்களை //

என்ன எல்லாரும் உங்கள விதாயினின்னு
சொல்லுறாங்க...//

ஹிஹி...எல்லாம் பாசக்கார பய புள்ளைங்க.நான் எழுதுற பின்னுட்டமே கவிதைன்னு சொன்னாலும் சொல்லவாங்க.அந்த அளவுக்கு என் மேல பாசம் aka கொல வெறி.எனக்கு கவுஜை எல்லாம் சரியா படிக்கவே தெரியாது.இதுல எங்க மேன் எழுதுறது.

said...

துர்கா|†hµrgåh said...
"நான் எழுதுற பின்னுட்டமே கவிதைன்னு சொன்னாலும் சொல்லவாங்க.அந்த அளவுக்கு என் மேல பாசம் aka கொல வெறி.எனக்கு கவுஜை எல்லாம் சரியா படிக்கவே தெரியாது.இதுல எங்க மேன் எழுதுறது. "

நம்புகிறேன்..

குசும்பன் காதலி said...

செல்லம் இன்னும் கிளம்பலையா? சீக்கிரம் வந்து ஒரு கவிதை சொல்லிட்டு போ செல்லம்.

said...

குசும்பன் காதலி said...
செல்லம் இன்னும் கிளம்பலையா? சீக்கிரம் வந்து ஒரு கவிதை சொல்லிட்டு போ செல்லம்.

கவிதைதானே இதோ ஒரு வார்த்தை கவிதை....

"குசும்பன்"

said...

நான் இங்க வரவும் இல்ல.. எதயும் படிக்கவும் இல்ல.. இது குசும்பன் மேல சத்தியம்.. :)

said...

யோவ் குசும்பரே எங்கிருந்து வர்ரீக எங்க பொழப்புல மண்ணப் போட.அட கவுஜக்கு இல்லீங்க இப்படி ஐடியால்லாம் வந்து காமெடி போட்றீங்களே அதுக்கு.சரி லிஸ்ட் சொல்ரேன்
1.அய்யனார்
2.குட்டிபிசாசு
3.தம்பி
4'காயதிரி
5.நாமக்கல் சிபி
6. இப்ப போடும் லஷ்மி
7.எப்பவாச்சும் போடும் முத்து லட்சுமி
8.ஒரேமுறை போட்ட அபிஅப்பா
9.ஜி
10.சத்தியமா நான் இனி போட மாட்டேன்;((

said...

கண்மணி said...

"10.சத்தியமா நான் இனி போட மாட்டேன்;(( "

துர்கா நம்ம பிளான் சக்ஸஸ் ஆகுது ஒரு ஆள் திருந்தி நம்ம பக்கம் வர்றாங்க...மீதி இருக்குற ஆள திருத்துறோம் இல்ல தீர்த்துகட்டுறோம்...

said...

//துர்கா நம்ம பிளான் சக்ஸஸ் ஆகுது ஒரு ஆள் திருந்தி நம்ம பக்கம் வர்றாங்க...மீதி இருக்குற ஆள திருத்துறோம் இல்ல தீர்த்துகட்டுறோம்...//
கிழிச்சிங்க, சும்மா இருந்த சிபியை கிளப்பிவிட்டுடிங்க, சும்மா கலாச்சிகிட்டு இருந்த அவரு, யாருக்குமே புரியாத மாதிரி தமிழில் ஜாங்கிரி சுட ஆரம்பிச்சிடாரு.

said...

//ஹிஹி...எல்லாம் பாசக்கார பய புள்ளைங்க.நான் எழுதுற பின்னுட்டமே கவிதைன்னு சொன்னாலும் சொல்லவாங்க.அந்த அளவுக்கு என் மேல பாசம் aka கொல வெறி.எனக்கு கவுஜை எல்லாம் சரியா படிக்கவே தெரியாது.இதுல எங்க மேன் எழுதுறது.//
ஆனாலும் உங்களுக்கு இம்முட்டு தன்னடக்கம் கூடாது..தன்னடக்கத்துக்கே தன்னடக்கமா இருக்கிங்களே?

said...

சந்தோஷ் said...
"சும்மா இருந்த சிபியை கிளப்பிவிட்டுடிங்க, சும்மா கலாச்சிகிட்டு இருந்த அவரு, யாருக்குமே புரியாத மாதிரி தமிழில் ஜாங்கிரி சுட ஆரம்பிச்சிடாரு."

அண்ணன் இப்பவும் வேற பெயர்ல கலாய்ச்சிக்கிட்டு தான் இருக்காரு... கண்டுபிடிங்க பார்போம்...

said...

மாட்டிவிட்டுட்டியே யக்கா.. மாட்டிவிட்டுட்டியே...

//1.அய்யனார்
2.குட்டிபிசாசு
3.தம்பி
4'காயதிரி
5.நாமக்கல் சிபி
6. இப்ப போடும் லஷ்மி
7.எப்பவாச்சும் போடும் முத்து லட்சுமி
8.ஒரேமுறை போட்ட அபிஅப்பா
9.ஜி
10.சத்தியமா நான் இனி போட மாட்டேன்;(( //

கவுஜர்களின் தளபதி இருட்டுக்குகை குருட்டுப்புலியை லிஸ்டில் விட்டதை நான் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன்

said...

அய்ஸ் @ அடர்கான புலி இங்கேதான் இருக்கா?

புது அடர்கான புலியும் இங்கேதான் இருக்கு போல?

அப்போ நான் ஜூட்.. :-P

said...

ஜி said...
"கவுஜர்களின் தளபதி இருட்டுக்குகை குருட்டுப்புலியை லிஸ்டில் விட்டதை நான் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன்"

யார் அந்த "தளபதி" லிஸ்ட்டில் விடுபட்டவர்?

said...

.:: மை ஃபிரண்ட் ::. said...
"அய்ஸ் @ அடர்கான புலி இங்கேதான் இருக்கா?

புது அடர்கான புலியும் இங்கேதான் இருக்கு போல?

அப்போ நான் ஜூட்.. :-P "

ஜூட் எல்லாம் இல்லை வெயிட்...யார் அந்த புது புலி,பழைய புலி??

said...

பழசு அய்ஸ்
புதுசு
ராம் தான் வேறயாரு

said...

மின்னுது மின்னல் said...
"பழசு அய்ஸ் புதுசு
ராம் தான் வேறயாரு "

அப்ப சிபி????

said...

மொக்க கவிஞர்களையும்

சும்மா ஆணி புடுங்குறவுங்கஇ ஆணி புடுங்கர மாதிரி நடிக்கிறவுங்க எல்லாரையும் ஒரு இடத்துக்கு

இது என்னவென புரியவில்லை. பலரும் இந்த வசனங்களை பாவிக்கிறார்கள். ஆனால் எனக்கு தான் புரியவில்லை சற்று புரிய வையுங்கள் குசும்பா. பிளீஸ்.

said...

நளாயினி said...
மொக்க கவிஞர்களையும்
"இந்த வசனங்களை பாவிக்கிறார்கள். ஆனால் எனக்கு தான் புரியவில்லை சற்று புரிய வையுங்கள் குசும்பா. பிளீஸ். "

ஆனி புடுங்குவது என்றால் ஆபிஸ் வேலை..