கட்சி தலைவன் தலைவிக்காக மண் சோறு, நாக்கை அறுத்துக்கொள்வது,பிறந்தநாளுக்காக காவடி எடுபது...அலகுகுத்துவது அமைச்சரே தீ மிதிப்பது போன்ற நிகழ்சிகள் நம் நாட்டில் இதுவரை நடக்கவில்லையா??? நம் உழைப்பு, நம் பணம் எல்லாத்தையும் நம்மிடம் இருந்து கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகளை விட நடிகர்கள் மேல்...
நாம் யாரிடம் எதிர் பார்க்கவேண்டுமோ அவர்களை மறந்துவிடுகிறோம்... வேலை செய்து கூலிவாங்கும் நடிகர்கள் நாட்டை காக்க வேண்டும்என்று எதிர் பார்கிறோம்...
Tuesday, June 19, 2007
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
அவங்க திரையில பேசற பஞ்ச் டயலாக் அப்படி, அரசியலுக்கு வந்தா புடுங்கிடுவேன்னு சொல்லுற டயலாக்... இதெல்லாம் வச்சிட்டு அவங்க ரசிகர்களும் இவர் அரசியலுக்கு வருவாரு என்று எதிர்பார்க்கிறார்கள்!!
வாங்க குட்டி பிசாசு,
ஒரே ஒரு பாட்டு வரிதான் நினைவுக்கு வருகிறது..
"உன் குத்தம்மா என் குத்தமா யார நானும் குத்தம் சொல்ல!!!"
//அவங்க திரையில பேசற பஞ்ச் டயலாக் அப்படி, அரசியலுக்கு வந்தா புடுங்கிடுவேன்னு சொல்லுற டயலாக்//
ஏற்கனவே இருக்குறவனை ஏண்டா ஓட்டு வாங்குறப்ப சொன்னதை செய்யலேன்னு கேக்க மாட்டான்.
ஏன்னா ஓட்டுக்கு இவ்ளோன்னு காசு வாங்கிட்டு ஓட்டுப் போடுறவங்கதான் எல்லாரும். அப்ப அவனை எதுவும் கேக்க முடியாது.
அதைப் பண்றேன், இதைப் பண்ணுறேன்னு சொல்லிட்டு ஆட்சிக்கு வந்தவனை கேக்க மாட்டாங்க!
வரனா, இல்லையான்னே தெளிவா சொல்லாத ஆட்கள் கிட்டதான் உரிமையாக் கேப்பாங்களாம்!
//////////////////////////////
குட்டிபிசாசு said...
அவங்க திரையில பேசற பஞ்ச் டயலாக் அப்படி, அரசியலுக்கு வந்தா புடுங்கிடுவேன்னு சொல்லுற டயலாக்... இதெல்லாம் வச்சிட்டு அவங்க
//////////////////////////////
அவுங்க பேசுற பஞ்ச் டயலாக் எல்லாம் ஞாபகம் வச்சுகிட்டு இப்படி கேக்குறீங்களே.
அரசியல் வாதிங்க தேர்தல அறிக்கைன்னு ஒன்னு கொடுப்பாங்களே அது ஞாபகம் இருக்கா. . . . . ?
போன் தேர்தல்ல அந்த சாக்கடைகளோட கூட்டணி. இந்த தேர்தல்ல இந்த சாக்கடைகளோட கூட்டணின்னு மாற்க்கிட்டே இருக்காங்களே இதெல்லாம் உங்களுக்கு ஞாபகமே இல்லையா. . . ?
இப்படி 3 மணி நேரம் பாக்குற படதத ஞாபம் வக்கிற நீஙக அஞ்சு வருசம் ஆட்சி நடத்துற அரசியல் வாதிகளை ஏன் கேள்வி மாட்டேங்குறீங்க. . . . .?
////////////////////////
நாம் யாரிடம் எதிர் பார்க்கவேண்டுமோ அவர்களை மறந்துவிடுகிறோம்... வேலை செய்து கூலிவாங்கும் நடிகர்கள் நாட்டை காக்க வேண்டும்என்று எதிர் பார்கிறோம்...
////////////////////////
இது தான் நம்ம மக்களோட குசும்பு.
நாமக்கல் சிபி said...
"அதைப் பண்றேன், இதைப் பண்ணுறேன்னு சொல்லிட்டு ஆட்சிக்கு வந்தவனை கேக்க மாட்டாங்க!"
ஆள பார்க்கமுடிஞ்சா தானே கேட்குறதுக்கு....
எங்கு ஊர் மயிலாடுதுறை தொகுதி எம்.பி ஒருத்தர் இருக்கிறார், சின்ன சிங்கபூர் மாதிரி ஆக்க போகிறேன்
என்று ஒவ்வொரு முறையும் சொல்லி ஓட்டு வாங்கி ஜெயிக்கிறார்.
அதன் பிறகு ஆளே காணாமல் போய்விடுகிறார்...
எப்ப பார்த்தாலும் டெல்லிலதான் இருக்கிறார்..
வெங்கட்ராமன் said... "இப்படி 3 மணி நேரம் பாக்குற படதத ஞாபம் வக்கிற நீஙக அஞ்சு வருசம் ஆட்சி நடத்துற அரசியல் வாதிகளை ஏன் கேள்வி மாட்டேங்குறீங்க. . . . .? "
ஒருத்தன எல்லாரும் போட்டு நொக்கு நொக்குன்னு நொக்கிகிட்டு இருப்பாங்க..தப்பு செஞ்சவன விட்டு
விடுவாங்க நாம் அவன விட்டுட்டு இவனபோட்டு ஏங்க இந்த அடி அடிக்கீறீங்கன்னு கேட்டா!!!
இவன்தான் அடிச்சா திருப்பி அடிக்க மாட்டான்..
நமக்கு எல்லாருக்கும் எவன் இளிச்சவாயனோ அவன போட்டு கும்மு கும்முன்னு கும்முவோம்...அரசியல்
வாதிங்க கிட்ட கேட்டா ஆட்டோ வரும் அந்த பயந்துல எல்லா அங்க அவயங்களையும் மூடிப்போம்..
ஒரு அமைச்சர் சொல்கிறார் சிவாஜியை விட நாட்டில் வேறு முக்கியமான
பிரச்சினைகளே இல்லயா என்று...
ஐயா மவராச அத தீக்கதானே உங்கள ஓட்டுபோட்டு தேர்ந்து
எடுத்து இருக்கு..நீங்கதானே அத சரி செய்யனும்...
எத்தனை பிரச்சினை இருக்கு தமிழ் மொழியை தேசிய மொழியாக்கிட்டா!
காவிரில தண்ணி வரும், முல்லை பெரியார் அணை நீர்மட்டம் தானாக
உயரும், பாலாற்றில் பால் வரும் அதுதானே இப்ப நாட்டுல இருக்குற
பிரச்சினை.
கோடநாட்டு எஸ்டேட், நான்கு தொகுதி மனுதாக்கல் செய்தது...இதுபோல்
தலையாய பிரச்சினைதானே முக்கியம்...
ம்...இவங்க ப்ஞ்ச் அடிச்சி பதவிக்கு வ்ந்துடுவாங்களோன்னு தான் பஞ்ச் அடிக்கும்போதே நீ என்ன பெரிய இவனான்னு கேட்டு தட்டி வைக்கப்பாக்குறாங்களோ..
Post a Comment