Monday, June 18, 2007

கவிதை விமர்சனம் செய்ய யார் யார் ரெடி!!!

என் இனிய தமிழ் மண கவிஞர்கள்
தல ராம் அவர்களே!
தோழி காயத்ரி அவர்களே!
தளபதி மின்னல் அவர்களே!
நண்பர் சிபி அவர்களே(நீங்க தான் சகலாகல வல்லவன் ஆச்சே!)

விடுபட்ட (நிஜ) கவிஞர்கள் மண்ணிக்கவும்...


இது நண்பர் எழுதிய கவிதை(???)யா செய்யுள்ளா என்று தெரியவில்லை,இதுக்கு விமர்சணம் எழுத சொன்னார்...நம்ம சிற்றறிவுக்கு எட்டவில்லை,அதனால் தான் உங்களை எல்லாம் கூவி கூவி அழைக்கிறேன்..வந்து விளக்கம் சொலுங்கோ...


வெளிச் சொல்லமுடியாத
வெக்கைகளின் வெளிகளில்
பற்றியெறிகின்றன என்
பச்சை தாவரங்கள்சுயங்களின் முனை முறிவுகளில்
தடவப்பட்ட பிரியக்களிம்புகள்
என்றென்றும் ஆற்றுவதில்லை
புரையோடிப்போனமனக்காயங்களை

இருள் நிறைந்த பாதைபோல
ஒளியற்றுப்போகிறதுவாழ்க்கை
சில நேரங்களில்ஆங்கே ஒட்ட வைத்தமெழுகு
போல உன் பிரியங்கள்அவ்வப்போது
என்னை ஆற்றுமாயினும்வழியற்றுத்
திரிகின்றனஎன் விழிப் பட்டாம்பூச்சிகள்

காலங்களின் வழிதெரியாஒற்றையடிப்பாதையின்
வழியேவழிந்தோடிக்கொண்டிருக்கிறது
என் பிரியங்களின் ஆழ்நதி
என்றேனும் ஒருநாள் கரையேருமென்ற

நம்பிக்கையில் நானும்
என் பிரியங்களும்
உன் பின்னாலேயெ நடைபயில்கிறோம்.

நன்றி சிவராமன்

ரொம்ப நேர ஆராய்ச்சிக்கு பிறகு எனக்கு என்ன புரிந்தது என்றால்

"என்றென்றும் ஆற்றுவதில்லை புரையோடிப்போனமனக்காயங்களை"
அவருக்கு எங்கயோ அடிபட்டு காயம் அடைந்து இருக்கிறார்.

"வழியற்றுத் திரிகின்றனஎன் விழிப் பட்டாம்பூச்சிகள்"
கண்ணுல பூச்சி பறக்குதுன்னு சொல்லுவாங்கள்ள அத வேறுமாதிரிசொல்கிறார்.

"என் பிரியங்களும்உன் பின்னாலேயெ நடைபயில்கிறோம்."
யார் பின்னாலேயோ நடந்து போகிறார்...

ஆனா மக்கா என்னா என்ன சொல்லவருக்கிறார் என்றுதான் புரியவில்லை...

16 comments:

said...

உங்க குசும்ப எங்ககிட்டயே காட்ரீங்களா. . . . . .
என்னமோ போங்க

said...

வாங்க வெங்கட்ராமன்
என்ன செய்யுள படிச்சு படிச்சு மண்டை காஞ்சு போச்சா!!!

ஜில்லுன்னு ஒரு மோர் குடிங்க...

said...

விடுபட்ட (நிஜ) கவிஞர்கள் மண்ணிக்கவும்...
//

இதுக்கு பிறகும் நாங்க வந்து விளக்கம் சொல்லனுமா...:)

said...

//தல ராம் அவர்களே!
தோழி காயத்ரி அவர்களே!
தளபதி மின்னல் அவர்களே!
நண்பர் சிபி அவர்களே(நீங்க தான் சகலாகல வல்லவன் ஆச்சே!)//

குசும்பன்னு பேர் வச்சிகிட்டது பொருத்தமாத்தான் இருக்கு!

மேல உள்ளவங்கள்லாம் கவிஞ்சர்க்ளா?
:))

said...

மின்னுது மின்னல் said...
விடுபட்ட (நிஜ) கவிஞர்கள் மண்ணிக்கவும்...
//

இதுக்கு பிறகும் நாங்க வந்து விளக்கம் சொல்லனுமா...:)

மின்னல் ஒழுங்கா பாருங்க எல்லா எழுத்தும் கருப்புல இருக்கும் பொழுது
அது மட்டும் நீல கலர்ல இருக்கு..அது யாரோ செய்த சதி...நான் போய்
உங்கள போய் இப்படி சொல்லுவேனா!!!

வாங்க வாங்க வந்து விளக்கம் சொல்லுங்க!!

said...

தம்பி said...
//தல ராம் அவர்களே!
தோழி காயத்ரி அவர்களே!
தளபதி மின்னல் அவர்களே!
நண்பர் சிபி அவர்களே(நீங்க தான் சகலாகல வல்லவன் ஆச்சே!)//

குசும்பன்னு பேர் வச்சிகிட்டது பொருத்தமாத்தான் இருக்கு!

மேல உள்ளவங்கள்லாம் கவிஞ்சர்க்ளா?
:))



தம்பி தங்கள் வருகைக்கு நன்றி

தம்பி நீங்க வேற தள ராம் நேற்று போட்ட
கவிதைக்கு என்ன அர்த்தம் என்று கண்டுபிடிக்க
தமிழ் உலக மாநாட்டை நடத்தலாமா என்று
கலைஞர் யோசிச்சுகிட்டு இருக்கிறார்...

மின்னல் நிலாவ(அ.ஆ ஹீரோயின்) கலால
அடிச்சது எல்லாம் கவிதையா எழுதுகிறார்,

காயத்ரி அவுங்க எல்லாரையும் தூக்கி சாப்பிட்டுவிடுவாங்க
போல...அதுனாலதான் அப்படி சொன்னேன்..

உள் குத்து எல்லாம் இல்ல :))))))

said...

எல்லாரும் ஒரு முடிவோடதான் கவிதை எழுதுறாங்க நம்மல நோக்கிய கொலவெறியுடன்

said...

வாத்யாரே பின்னுட்டம் உட்டவங்க பேரு ஒழுங்கா தெரியறதில்லயே எதுனா செய்யவேண்டியதுதானே...
சின்ன சாத்தான்குளத்தான்

said...

என்ன மின்னல் "கொலவெறியுடன்" என்ன போய் இப்படி சொல்லீட்டீங்க மதியம் சிம்ரன் ஆப்ப கடைல
இருந்து வாங்கிய பிரியாணி கூட உள்ள போக மாட்டேங்குது...

நீங்க அந்த கவிதையை படிச்சு விளக்கம்
சொல்லுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்
கோழி கோச்சுக்குமே என்ற காரணத்தால்
சாப்பிட போகிறேன்....

said...

////தல ராம் அவர்களே!
தோழி காயத்ரி அவர்களே!
தளபதி மின்னல் அவர்களே!
நண்பர் சிபி அவர்களே(நீங்க தான் சகலாகல வல்லவன் ஆச்சே!)//

அடபாவிகளா! இந்த குத்து குத்து வைச்சிருக்கீங்க?? :)

said...

கவிதைக்கு அர்த்தம் தானே உங்க ஊரிலே ஆறு இருந்துச்சுன்னா அதிலே இருக்கிற உட்பரப்பிலே இல்லன்னா சாத்தான'குளத்து' வெளிபரப்பிலே போய் நின்னுப்பாருங்க...

அர்த்தம் வெளங்கிடும்.... :)

said...

செல்வேந்திரன் said...
வாத்யாரே பின்னுட்டம் உட்டவங்க பேரு ஒழுங்கா தெரியறதில்லயே எதுனா செய்யவேண்டியதுதானே...
சின்ன சாத்தான்குளத்தான்

வாங்க செல்வேந்திரன்

அடிக்கடி இதுபோல் பிரச்சினை வருது அத எப்படி சரி செய்யிரது என்று தெரியவில்லை!!!

said...

" இராம் said...
கவிதைக்கு அர்த்தம் தானே உங்க ஊரிலே ஆறு இருந்துச்சுன்னா அதிலே இருக்கிற உட்பரப்பிலே இல்லன்னா சாத்தான'குளத்து' வெளிபரப்பிலே போய் நின்னுப்பாருங்க...

அர்த்தம் வெளங்கிடும்.... :) "

செந்தில் ஒரு படத்துல கவுண்டமணி கிட்ட ஏதோ டவுட் கேட்பாரு..
கவுண்டமணி செந்தில ஆற்றில் புடிச்சு தள்ளி விட்டு...உங்க அப்பா
நடுகடலில் நண்டு சுட்டுகிட்டு இருப்பாரு அவருகிட்ட போய் கேளுன்னு
சொல்லுவாரு...

நீங்க சொல்லுற பதில பார்த்தா அதுதான் நினைவுக்கு வருது..

said...

//காயத்ரி அவுங்க எல்லாரையும் தூக்கி சாப்பிட்டுவிடுவாங்க
போல...அதுனாலதான் அப்படி சொன்னேன்..//

நானே ஊருக்குள்ளார வராம பாலைவனத்துல இரூந்து கவிதை எழுதறேன்.. என்னை ஏன் வம்புக்கு இழுக்கறீங்க? நான் உங்க கூட டூ போங்க..:(

said...

//விடுபட்ட (நிஜ) கவிஞர்கள் மண்ணிக்கவும்...//

நாங்கெல்லாம் போலி கவிஞர்களா? இதுக்கு யார்னாச்சும் சர்ட்டிபிகேட் தருவீங்களாப்பா?

said...

காயத்ரி said...
//விடுபட்ட (நிஜ) கவிஞர்கள் மண்ணிக்கவும்...//

நாங்கெல்லாம் போலி கவிஞர்களா? இதுக்கு யார்னாச்சும் சர்ட்டிபிகேட் தருவீங்களாப்பா?

ஹலோ டூப்லீகேட் சர்ட்டிபிகேட்ட இப்படி பப்ளிக்கா கேட்டுகிட்டு...ரகசியமா கேளுங்க
எங்க பிரிண்ட் பண்ணலாம்ன்னு சொல்லுறேன்