Thursday, June 7, 2007

அப்படி போடு போடு போடு....


ஒவ்வொருத்ரும் ஸ்கூலில் அடி வாங்கி இருப்பீங்க அதன் பின்னனியில் சில சுவையாண சம்பவங்கள் இருக்கும் அப்படி "அடி"யேன் அடி வாங்கிய கதை...நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.

நான் வீட்டுல ஒரே பிள்ளை என்பதால் அவ்வளவாக வீட்டில் அடி வாங்கியது இல்லை.
ஆனால் படிக்கும் பொழுது பள்ளிகூடத்தில் வாங்கிய அடி அடா அடா உங்க வீட்டு எங்க வீட்டு அடி இல்லைங்க அப்படி அடி வாங்கி இருக்கிறேன். பல சமயம் நம்ம கொழுப்பால் சில சமயம் யாரோ செய்த தவறுக்கு பலி கடா ஆக்க பட்டு இருக்கிறேன். அப்படி நான் அடிவாங்கியதில் மறக்க முடியாதவை.

விளையாட்டு & உடற்பயிற்ச்சி வாத்தியார் அடித்த அடி.
வாரத்தில் ஒரு நாள் கடைசி கிளாஸ் விளையாட்டு, அன்று அது போல் கிரிகெட் விளையாட போனோம், லெக் அம்பெயர் மாதிரி விளையாட்டு வாத்தியார் நின்று கொண்டு இருந்தார், என் முறை பேட்டிங் முதல் இரண்டு பந்து அடிக்க முடியவில்லை , சரி இதுக்கு மேலே வேஸ்ட் பண்ணினா மான பிரச்சினை என்று மூனாவது பந்தை அடிக்க வேகமாக சுற்றினேன் சுற்றின சுற்றில் சொய்ங் என்று பறந்தது பந்து இல்லைங்க என் கையில் இருந்த பேட் போய் நச் என்று அவரின் காலை பதம் பார்த்தது, அதன் பிறகு சட சட ஒரே சத்தம் என் முதுகில் இருந்து, என்ன நடக்குது என்று யோசிபதுக்குள் போட்டு வெளுத்து வாங்கிவிட்டார், ச்சே ஒரு வருங்கால டென்டுல்கரை இப்படியா அடிப்பது என்று கோப பட்டு கொஞ்ச நாள் கிரிக்கெட் விளையாடம இருந்தேன் அது தனிகதை. மறு நாள் அவரை பார்க்கும் பொழுதுதான் ஏன் அப்படி அடித்தார் என்று தெரிந்தது,காலில் கட்டு போட்டு 16 வயதினிலே கமல் மாதிரி நடந்து வந்தார்.

பத்தாவது படிக்கும் பொழுது R.K அடித்த அடி.நான் போன "சாமி" படத்திற்க்கு அவரும் வந்து அவரை நான் பார்த்ததினால் ஒரு குற்ற உணர்ச்சியிலா இல்லை பத்தாவதிலே ""சாமி" படம்" பார்த்து இவன் என்ன பண்ண போறான் என்ற அக்கறையிலா என்று தெரியவில்லை, கிளாஸ் உள்ளே வந்து நேரா என் கடைசி டெஸ்க்கு வந்து என்ன ஏது என்று சொல்லமலே அடி அடினு அடித்தார் அதுவும் என் டெஸ்க் கிளாஸ் மூலையில் இருந்தது அவருக்கு வசதியாக போய்விட்டது மூலையிலவிட்டுகிட்டு கும்மு கும்முனு கும்மி எடுத்துட்டாரு.

A.R என்ற கணக்கு வாத்தியாரிடம்.கிளாசில் எனக்கும் இன்னொறு பையனுக்கும் சண்டை . சண்டையில் அவனை அடிக்க துரத்திக்கொண்டு ஓடினேன் ஓடியவன் கிளாஸ் ரூம்க்கு வெளியே போய் நின்று என்னை திரும்ப பார்த்தான் நான் கிளாஸ் ரூம் வாசலில் ஒரு காலை ஸ்டைலா தூக்கி புரூஸ்லி கூப்பிடும் ஸ்டைலில் நின்று கொண்டு கைகலால் வாடா வாடா என்று கூப்பிட்டேன் வந்தது கணக்கு வாத்தியார், காலை தூக்கி கொண்டு உதைப்பது போல் நின்று கொண்டு இருப்பதை பார்த்தவர் துவைத்து காய போடாத குறை ஒன்றுதான் அப்படி அடித்தார்.

11வது படிக்கும் பொழுது கிளாஸ் டெஸ்ட் வைத்தார் NN என்ற வாத்தியார், அவர் டெஸ்ட் வைப்பதற்க்கு முன்பே சொன்னார் ஐந்து தவறு வரை இருக்கலாம் அதற்க்கு மேல் போனால் ஒவ்வொரு தவறுக்கும் பத்து பத்து அடி என்று சொல்லி இருந்தார், நாம எழுத போவது புக்கை பார்த்து நாம தவறே இல்லாம எழுதினோம் என்றால் அந்த ஆண்டவனே வந்து சொன்னாலும் என்னை நம்ம மாட்டார் அவர், ஆகையால் நாம பார்த்தே எழுதினாலும் நாமாக வேணும் என்று நாலு தவறு செய்வோம் ஐந்துக்கு மேல் போனால்தானே அடி என்று புக்கை பார்த்து எழுதினேன். என் கெட்ட நேரம் எழுதும் பொழுது தானாக நான்கு தவறு + கூடுதலாக நானாக வேண்டும் என்றே வைத்த நான்கு தவறு ஆக மொத்தம் எட்டு தவறு எனக்கு 40 அடி என்று முடிவானது , கையை நீட்டி அடித்து கொண்டு இருக்கும் பொழுது வலியில் கம்பை பிடித்துவிட்டேன் என்னமோ சட்டையை பிடித்த மாதிரி அவருக்கு கோபம் வந்து பின்னி பெடல் எடுத்துவிட்டார்.

பிறகு 12வதில் தமிழ் ஸார்யிடம் வாங்கிய அடி எங்க பள்ளிகூடத்தில் ஒரு பழக்கம் உண்டு காலையில் பிரேயரின் பொழுது கிளாஸ் வாரியாக அமர்ந்து இருக்க வேண்டும். அப்பொழுது எங்க பள்ளிகூடத்தில் ஒரு போர்டில் முதல் நாளே ஒரு திருக்குறளும் அதற்க்கு விளக்கமும் எழுதி போட்டு இருப்பார்கள்,அதை ஒவ்வொருவரும் தனியாக ஒரு நோட்டில் எழுதிவைத்து இருக்கவேண்டும் அதன் கூடவே அன்றைய முக்கிய செய்திகள் குறைந்தது ஐந்து எழுதி இருக்க வேண்டும். HM அவர்கள் இந்த row வில் இத்தனையாவது பையன் என்பார் அவன் எழுந்து குறளையும் அதன் விளக்கத்தையும் சொல்லவேண்டும் குறைந்தது 700 அல்லது 800 பேர் இருக்கும் கூட்டத்தில். அப்படி அவனுக்கு தெரியவில்லை என்றால் அப்பொழுதே அவன் எழுந்து HM ரூம் வாசலில் போய் முட்டி போட வேண்டும்,பின் வந்து தமிழ் வாத்தியாரிடம் அர்ச்சனை வாங்க வேண்டும், சரி பிரேயருக்கு வந்தாதானே இப்படி என்று லேட்டாக போனால் பள்ளி கூடத்து வாசலிலேயே அடி வாங்க வேண்டும். இதில் உள்ளுக்குள் நாலு சுவற்றிற்குள் அடிவாங்குவது தான் சால சிறந்தது என்று நான் முன்பே போய் விடுவேன். அன்று அப்படி போன பொழுது எங்கே உன் நோட்டை காட்டு என்றார், நான் எழுதி இருந்தது பிரதமர் வெளிநாட்டு பயணம் ,பின் அன்றைய வெப்ப நிலை. திருச்சி 101, தஞ்சை...(அனேக பக்கங்களில் இதைதான் எழுதி இருந்தேன்)இப்படி எழுதி இருந்ததை பார்த்து விட்டு என்னடா இது நியுஸ் எழுத சொன்னா வெப்ப நிலையை எழுதி இருக்க என்றார். ஏன் அதையும் தான் நியுஸ்ல சொல்லுராங்க அப்ப அதுவும் நியுஸ் தானே என்றேன் , சொன்ன பிறகு என் கிளாஸில் இருந்து HM ரூம் வரை அடித்தே இழுத்து கொண்டு சென்றார் HM அவர் பங்குக்கு கொஞ்சம். பின் ஒரு வாரம் அவரின் தமிழ் கிளாஸின் பொழுது வெளியே போய் வாசல் படியில் புத்தகத்தை வைத்து நிற்க்க வேண்டும்.

இப்படியாக எந்த வாத்தியாருகிட்டயும் நாம அடி வாங்கலேயே என்று பின்னால் ஒரு குறை வந்துவிடகூடாது என்று எல்லாரிடமும் அடிவாங்கி ஒரு வழியா ஸ்கூலை முடித்து கொண்டு காலேஜில் சேர்ந்தேன். அதன் பிறகு அடிவாங்குவதற்கு மங்களம் பாடபட்டது.

9 comments:

said...

//சரி இதுக்கு மேலே வேஸ்ட் பண்ணினா மான பிரச்சினை என்று மூனாவது பந்தை அடிக்க வேகமாக சுற்றினேன் சுற்றின சுற்றில் சொய்ங் என்று பறந்தது பந்து இல்லைங்க என் கையில் இருந்த பேட் போய் நச் என்று அவரின் காலை பதம் பார்த்தது, அதன் பிறகு சட சட ஒரே சத்தம் என் முதுகில் இருந்து, என்ன நடக்குது என்று யோசிபதுக்குள் போட்டு வெளுத்து வாங்கிவிட்டார்//

:))

//நான் போன "சாமி" படத்திற்க்கு அவரும் வந்து அவரை நான் பார்த்ததினால் //

சாமி படம் நீங்க பத்தாவது படிக்கும்போதே வந்துடுச்சா?

!?

//நான் கிளாஸ் ரூம் வாசலில் ஒரு காலை ஸ்டைலா தூக்கி புரூஸ்லி கூப்பிடும் ஸ்டைலில் நின்று கொண்டு கைகலால் வாடா வாடா என்று கூப்பிட்டேன் வந்தது கணக்கு வாத்தியார்,//

ஆஹா! அற்புதமான காட்சி!
மனசுக்குள்ளேயே விசுவலைஸ் பண்ணிப் பாக்கும்போதே ஆனந்தமா இருக்கே!

//தானாக நான்கு தவறு + கூடுதலாக நானாக வேண்டும் என்றே வைத்த நான்கு தவறு //

அடக் கடவுளே!

பார்த்து எழுதும்போது எப்படிய்யா தவறு வரும்?

//ஏன் அதையும் தான் நியுஸ்ல சொல்லுராங்க அப்ப அதுவும் நியுஸ் தானே என்றேன்//

அதானே! உங்க வாத்தியாருக்கு உங்க மேல பொறாமை! இவ்ளோ புத்திசாலியா இருக்கீங்களேன்னு!

said...

வாங்க நாமக்கல் சிபி, முதல்ல நீங்க பொறுமையா படிச்சு கமெண்ட்
போட்டதுக்கு நன்றி. நீங்க எங்க என் மேல கோபமா இருக்கிங்கலோ
என்று நினைத்தேன்.

"சாமி படம் நீங்க பத்தாவது படிக்கும்போதே வந்துடுச்சா?"

ஐய் ஐய் இதானே வேணாங்குறது...(நான் சின்ன பையன்னு
உங்களுக்கு தெரியாதா...)

"அடக் கடவுளே! பார்த்து எழுதும்போது எப்படிய்யா தவறு வரும்?"

சனி பகவான் உச்சத்துல இருந்தா ஜெராக்ஸ் எடுத்தாகூட தப்பு வரும்.

"உங்க வாத்தியாருக்கு உங்க மேல பொறாமை! இவ்ளோ புத்திசாலியா இருக்கீங்களேன்னு! "

அதுமட்டும் இல்லேன்னே கமல் கூட என்ன மாதிரி இருப்பாரா...என்ன டா இவன் இவ்வளோ
புத்திசாலியா இருக்கான் + அழகா வேற இருக்கான்னு பொறாமைண்னே...

said...

/////////////
ச்சே ஒரு வருங்கால டென்டுல்கரை இப்படியா அடிப்பது என்று கோப பட்டு கொஞ்ச நாள் கிரிக்கெட் விளையாடம இருந்தேன்
/////////////

இதுக்கு பேர்தான குசும்பு.

////////////////////
நான் கிளாஸ் ரூம் வாசலில் ஒரு காலை ஸ்டைலா தூக்கி புரூஸ்லி கூப்பிடும் ஸ்டைலில் நின்று கொண்டு கைகலால் வாடா வாடா என்று கூப்பிட்டேன் வந்தது கணக்கு வாத்தியார்,
////////////////////

நல்லா வகுந்துருப்பாரே உங்களை. . . . . .


:-)))))))))))))))))

said...

//நீங்க எங்க என் மேல கோபமா இருக்கிங்கலோ
என்று நினைத்தேன்.
//

மிஸ்டர் குசும்பு!

பெரிய பின்னூட்டத்தைப் பார்த்ததும் பயந்துட்டீங்களா?

கோபமெல்லாம் நமக்கு எதுக்குங்க வருது?

வ.வ.சங்கத்துல வேற இருக்கேன். அதுக்கெல்லாம் இடம் தரலாமா?

:)

said...

//...(நான் சின்ன பையன்னு
உங்களுக்கு தெரியாதா...)
//

அதனாலதான்யா கேக்குறேன்.

விக்ரம் நடிச்ச "சாமி" படம்தான?

said...

//நல்லா வகுந்துருப்பாரே உங்களை. . . . . //

சந்தோஷத்தைப் பாருங்களேன் இவருக்கு!

:)

said...

"விக்ரம் நடிச்ச "சாமி" படம்தானே"

சிபி எனக்கு தெரிந்த வரை சாமி படம் என்றால்
1)விக்ரம், திரிஷா நடிச்சபடம் தான்..
2) கந்தன் கருனை, திருவிளையாடல் இது போன்ற படங்களும் சாமி படங்கள்.
நீங்க திரும்ப திரும்ப
கேட்பதை பார்த்தால் எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு..
(இதே பெயரில் வேறு படம் இருக்கோ என்று)

said...

நான் அடிவாங்கிய கதை இங்கே பார்க்க http://dondu.blogspot.com/2006/01/blog-post_30.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

சிபி இவராவது பரவாயில்லைங்க கொஞ்சமா சந்தோச படுறாரு..

நாம அடி வாங்கினா கிளாஸ் பொண்னுங்க ஸ்வீட் கொடுத்து
கொண்டாடத குறை மட்டும் தான்...
என்னத்த அடிச்சாலும் ம்ம்ம்..அதே கெத்த மெயின் டெயின் பண்ணுவோம்ல..
அடி வாங்கி முடிச்சுக்கிட்டு நம்ம டெஸ்க்குல வந்து உட்காந்து முதல்
வேலை "மாப்புள நான் அடி வாங்கினப்ப சிரி சிரின்னு சிரிச்சவ பேர் எல்லாத்தையும்
சொல்லுடா என்று கலெக்ட் பண்ணுறதுதான்" பிறகு லன்ஞ் பிரேக்ல காலி பண்ணிடுவோம்ல...