Monday, June 25, 2007

இளா


நம்ம இளா இப்ப என்ன செஞ்சு இருக்காருன்னா இப்ப கோடை காலம் தண்ணி இல்லை அதனால் விவசாயம் பார்க்க முடியாது அதனால் கொத்தனார் வேலைக்கு (இலவச கொத்தனார் ஜாக்கிரதை போட்டிக்கு ஒரு ஆள்). போய் இருக்கிறார் அங்கு வளைஞ்சு நெளிஞ்ச சுவர் கட்டும் வேலை அதுக்கு கலவையை இருட்டுல போடசொல்லி இருக்கிறார்கள் அதனால் பயந்து போனேன் என்பதை முதல் இரண்டு பத்திகளில் சொல்லி இருக்கிறார்.

இப்ப மூனாவது பத்தியில என்ன சொல்ல வருகிறார் என்றால் அங்கு வேலை செய்ய முடியாமல் அங்கிருந்து தப்பித்து மறைந்து மறைந்து ஓடுகிறார், என் முடிய கூட புடிச்சு சிறை வைக்க முடியாது என்று வேறு சவால் விடுகிறார்.

கடைசியா என்ன ஆச்சின்னா இளாவ புடிச்சு...இருட்டு அறைக்குள்ள போட்டு அடைச்சிட்டாங்க அங்க ரூம்ல புகையவேறவிட்டுடாங்க...(வாழபழம் பழுக்க வைக்க செய்வாங்களே அதுமாதிரி) ...இவரு பிஞ்சு அதனால் வெதும்பிகிறேன் என்கிறார்.

பெட்லேயே படுத்து பழக்க பட்ட இளா...கோரை பாயில் படுத்டு இருக்கிறேன் என்கிறார். (பாய் மஞ்சலாக இருக்கும்),யாராவது வந்து காப்பாற்ற மாட்டாங்களா என்று ஏக்கமாக விடியலை நோக்கி இருக்கிறார்...யாரோ உவமை என்கிறவுங்க (ஆணா பெண்ணா என்று தெரியவில்லை) அவர்கள் காப்பாற்றுவதாக சொல்வது பொய்யோ என்று சந்தேகம் வேறு படுகிறார்...

நீதி: ஒன்னும் இல்ல (நான் எதுவும் இங்க சொல்லவில்லை)

புணர்வென்னும் கலவையில்
சுருக்கமான நெளிவுகளுக்குள்

நீள்கோடாய்
ஒரு முற்றுப்புள்ளி!

இருட்டு வண்ண திரவம்,
வேறொரு நிற கலவை,
கலக்கமாய் பார்வை!

நிகழ்களுக்கிடையே ஓட்டம்,
கனவென்னும் கற்பனை,
சிறையில் அகப்படாத
என் ரோமம்,
தேடித் தேடியே கலைந்து
போகிறேன் வக்கிரத்தை!

புணர்வென்னும்
கலவையில்
ஒருமை காணும் தனிமை!

தொலையத் தொலைய
காண்கிற மாயை,
புகை மண்டலத்தில்நீர் வேட்கை!
வெதும்புகிறேன் நான்!

மஞ்சள் படுக்கையில்
வெளிச்சம் தேடும் என் பார்வை,
பொய் சொல்லியே
ஏமாற்றுகிறதா உவமை?


23 comments:

said...

ஐயா, உங்க தமிழ் புலமைக்கு முன்னால நாங்க எல்லாம் ஜூஜூபி. தலைவணங்குறேன் சாமி. ஆனாலும் என் கவிதைக்கு நானே அர்த்தம் கண்டு புடிச்சு(நல்லா கவனிங்க) நானே அர்த்தம் கண்டு புடிச்சு நாளைக்கே வேற பதிவா போடுவேன்

said...

ILA(a)இளா said...
"ஐயா, உங்க தமிழ் புலமைக்கு முன்னால நாங்க எல்லாம் ஜூஜூபி. தலைவணங்குறேன் சாமி. "

அப்ப நேற்று என்ன ஒத்தைக்கு ஒத்த
தயாநிதி மாறன் *** மாதிரி கூப்பிட்டதுக்கு
என்ன சொல்லுறீங்க!!!
(***குறிப்பு: முன்னால் மத்திய அமைச்சர்)

"ஆனாலும் என் கவிதைக்கு நானே அர்த்தம் கண்டு புடிச்சு(நல்லா கவனிங்க) நானே அர்த்தம் கண்டு புடிச்சு நாளைக்கே வேற பதிவா போடுவேன் "

சொந்த செலவுல சூனியம் வச்சுக்கிறதுங்குறது இதுதான்...

said...

நீதி: இதுலேர்ந்து என்ன தெரியவருகிறது.... விவசாயி விவசாயி ஆக இருக்கனும் கொத்தனார் கொத்தனாரக இருக்கனும் கொத்தனா விவசாயி ஆக கூடாது, விவசாயி கொத்தனார் ஆக கூடாது
//

குலக்கல்வியை ஆதரிக்கும் குசுபனை கண்டிக்கிறோம்

said...

மின்னுது மின்னல் said...
//குலக்கல்வியை ஆதரிக்கும் குசுபனை கண்டிக்கிறோம் //

மின்னல் என்னய்யா என்ன என்னமோ சொல்லுற...ஏன்யா ஏன்!

நான் தான் கராமா கும்மி பந்தல்ல எல்லாம் "உண்டு" ன்னு சொல்லிட்டேனே அப்புறமும் என் மேல என்னய்யா கோபம்...

said...

நான் தான் கராமா கும்மி பந்தல்ல எல்லாம் "உண்டு" ன்னு சொல்லிட்டேனே அப்புறமும் என் மேல என்னய்யா கோபம்...
//

பின்னுட்டத்தை திசைதிருப்பு செயல் வேண்டாம் நீங்க குலக்கல்வியை ஆதரிக்கிரீர்களா ?
ஆம் எனக்கு ஒன்னும் ஆச்சேபம் இல்லை

இல்லையெனில் ஏன் அந்த வரி...?

உண்மையான பதில் வேண்டும்


(பத்தவச்சிட்டியே பரட்டை)

Anonymous said...

சொந்த செலவுல சூனியம் வச்சுக்கிறதுங்குறது இதுதான்...
//

ரீப்பீட்டேய்

Anonymous said...

என்னது
குசுப்பனை
சாச்சிபுட்டாங்களா....

said...

பரட்ட அந்த வரியை நீக்கி விட்டேன்
பின் வருபவர்கள் எந்த வரியை நீக்கினீங்க என்று கேட்டால் மதிப்பு கூட்டு சேவை வரி என்று சொல்ல நேரும்

Anonymous said...

என்னது குசுபனை
கலாய்ச்சி புட்டாங்களா
யாரு மின்னலா
அட ரெண்டு பேரும் ஒண்னாதாய்யா பீர் அடிச்சானுவோ எதுக்கு இப்ப அடிச்சிகிறானுவோ

said...

எண்ணை ஊற்றுபவன் said...
என்னது குசுபனை
கலாய்ச்சி புட்டாங்களா
யாரு மின்னலா
அட ரெண்டு பேரும் ஒண்னாதாய்யா பீர் அடிச்சானுவோ எதுக்கு இப்ப அடிச்சிகிறானுவோ
//

யோவ் யாருய்யா நீ புதுச குண்ட போடுற

Anonymous said...

குசும்பன் said...
பரட்ட அந்த வரியை நீக்கி விட்டேன்
பின் வருபவர்கள் எந்த வரியை நீக்கினீங்க என்று கேட்டால் மதிப்பு கூட்டு சேவை வரி என்று சொல்ல நேரும்
//
எந்த வரியை?

said...

நான் தான் கராமா கும்மி பந்தல்ல எல்லாம் "உண்டு" ன்னு சொல்லிட்டேனே அப்புறமும் என் மேல என்னய்யா கோபம்...
//
அய்யனாருக்கே பத்தாதே இதுல நான் வந்தா இருக்குமா..?

எனக்காக தனியே எடுத்து வைத்து இருக்கிரீரா என்பதை தெரிய படுத்தினால் நன்றாக இருக்கும்..:)

said...

மின்னுது மின்னல் said...
"எனக்காக தனியே எடுத்து வைத்து இருக்கிரீரா என்பதை தெரிய படுத்தினால் நன்றாக இருக்கும்..:)

நீ வா செல்லம் வந்த பிறகுதானே கால தனியா எடுக்க முடியும்..
கோழி கால சொன்னேன்..

Anonymous said...

நீ வா செல்லம் வந்த பிறகுதானே கால தனியா எடுக்க முடியும்..
கோழி கால சொன்னேன்..
///
எங்க தல மேல கை வைச்சிருவீயா நீ எங்க வச்சி பாரு தெரியும்...



மின்னல் தற்கொலை படை
துபாய் கிளை

Anonymous said...

:)
romba late ah vanthuthena?
//ஆனாலும் என் கவிதைக்கு நானே அர்த்தம் கண்டு புடிச்சு(நல்லா கவனிங்க) நானே அர்த்தம் கண்டு புடிச்சு நாளைக்கே வேற பதிவா போடுவேன்
//
hey man kandu pudichu rendu thadavai repeat pannurar...enna panna poorar namba annatha?

said...

ஆஹா!! குசும்பா.. கொடுத்த பணியை செவ்வனே செய்துள்ளாய். உன் திறமையை யாம் மெச்சினோம்!

said...

அது ஏன் கவிஞர்கள் மேல ஒரு கொல வெறியோட அலையுற? உன்னோட ஆளு ஷாலினி உனக்கு கவிதை எழுத தெரியுமான்னு கேட்டதுக்கு தெரியும் இல்ல தெரியாதுன்னு சொல்லி இருக்கணும். தெரியாட்டி சும்மா இருக்கணும் இப்படி கவிஞர்கள் மேல வெறியோட அலையகூடாது.

said...

துர்கா|†hµrgåh said...
:)
"hey man kandu pudichu rendu thadavai repeat pannurar...enna panna poorar namba annatha? "

இல்லாத ஒன்றை கண்டுபிடிக்க போகிறாராம்..அய்யோ அய்யோ என்ன சின்ன புள்ள தனமா இருக்கு..

தேடினாலும் கிடைக்காது!!! (surf ex)

said...

காயத்ரி said...
"கொடுத்த பணியை செவ்வனே செய்துள்ளாய். உன் திறமையை யாம் மெச்சினோம்!"

இதுக்கு ஏதும் பொற்கிழி, கிளி, எலி எல்லாம் கிடையாதா?

said...

சந்தோஷ் said...
"அது ஏன் கவிஞர்கள் மேல ஒரு கொல வெறியோட அலையுற? உன்னோட ஆளு ஷாலினி உனக்கு கவிதை எழுத தெரியுமான்னு கேட்டதுக்கு தெரியும் இல்ல தெரியாதுன்னு சொல்லி இருக்கணும். தெரியாட்டி சும்மா இருக்கணும் இப்படி கவிஞர்கள் மேல வெறியோட அலையகூடாது."

அது ஒரு பெரிய கதை அதை இங்க சொல்லவா, இல்ல தனி போஸ்ட்டா போடவா?

said...

இங்க என்னா நடக்குது?

said...

மகேந்திரன்.பெ said...
இங்க என்னா நடக்குது?

வாங்க மகேந்திரன், என்ன இளா அவர் கவிதைக்கு விளக்கம் சொல்ல முடியுமா என்று சவால் விடுத்தார், அதுக்கு விளக்கம் கொடுத்து இருக்கேன், நான் கொடுத்த விளக்கத்தோடு கவிதைய படிச்சு பாருங்க புரியும்...

said...

இந்த range ல அகநானுறு புறநானுறுக்கும் பொழிப்புரை எழுதுங்க