இந்த வாரம் முதல் இனி கவிஞர்களுக்கு சிறந்த பு.மொ.க.வி பட்டம் வழங்குவது என்று முடிவு செய்யபட்டு உள்ளது.. போட்டிக்கு பல கவிதைகள் வந்தன வந்து கொண்டும் இருக்கின்றன... அதில் இருந்து சில கவிதைகளை மட்டும் நாங்கள் தேர்வு செய்யும் கட்டாயத்தில் இருக்கிறோம்..
அதன் படி தேர்வு செய்யபட்ட கவிஞர்கள்
1) கவிஞர் ராம்
2) கவிஞர் அய்யனார்
3) கவிஞர் மின்னல்
இவர்கள் மேடைக்கு வந்து அவர்கள் கவிதையை அவர்களே வாசிக்கட்டும்..
முடிவை நடுவர்கள் பிறகு அறிவிப்பார்கள்...
முதலில் கவிஞர் ராம் அவர்களை மேடைக்கு அழைக்கிறேன்..
கவிஞர் ராம் நீங்க எழுதிய குருட்டு புலி கவிதை இந்த பு.மொ.க.வி விருது அடுத்தசுற்றுக்கு தேர்ந்து எடுக்க பட்டு இருக்கிறது.
நீங்க அதை வாசியுங்கள்...
கவிஞர் ராம் அந்த கவிதையை வாசிக்கிறார்..
அவர் வாசித்து முடித்தவுடன்...ஒரே அமைதி... (முத்துவில் கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட மாதிரி.) அபி பாப்பா தம்பி ங்கே ங்கே ங்கா..ங்காங்கா..என்று பசியில் கத்த கூட்டம் தப்பாக புரிந்துகொண்டு கூட்டம் முழுவதும் ங்கே ங்கே ங்கா..ங்காங்கா.. ரீப்பீட்டே!!
ஸ்டேடியம் முழுவதும் ங்கா பாட்டு கோரஸ்சாக ஒலிக்கிறது..
அடுத்து கவிஞர் மின்னல் மேடைக்கு வரவும்...
கவிஞர் மின்னல் வந்து...
குளம் மேல் கல் எறிந்தேன்
குளித்துக்கொண்டு இருந்த
நிலா பட்டது காயம்
என்று கவிதை பாட...
கூட்டத்தில் இருந்து ஒரு கல் மின்னல் மேல்..அடித்தவர் நான் நிலா ரசிகன் (ரகசீவ் ஞானியார் இல்லப்பா) (அ.ஆ ஹீரோயின்) என் நிலா மேல் ஏன்யா கல்ல போட்ட என்று கேட்க ஓடுகிறார் மின்னல்..
அடுத்து கவிஞர் அய்யனார்யை அழைக்கிறோம்...
அய்யனார் அவர் போர்ஹோவின் முத்தம் கவிதையை படிக்க படிக்க எல்லாரும் ஓடுகின்றனர். ..அவர்களுக்கு வெளியில் அனைவருக்கும் எலும்பிச்சை பழம் தேய்த்து குளிக்க வழங்கி கொண்டு இருக்கிறார் அண்ணாச்சி.
இப்பொழுது முடிவை அறிவிக்க வேண்டிய கட்டம் வந்துவிட்டது...
நடுவர் இங்கு பங்கேற்ற அனைவரும் திறமையாணவர்கள்தான் ஒருத்தருக்கொருத்தர் சலைத்தவர்கள் அல்ல ஆனால் இந்த விருதை ஒருவருக்குதான் கொடுக்க முடியும் ஆதாலால்
இந்த வருட சிறந்த பு.மொ.க.வி வித்தகர் விருதை வாங்கி கொள்ள தம்பி அய்யனாரை அழைக்கிறேன்... மேலும் மிகவும் நெருக்கடி கொடுத்த கவிஞர் ராமை ஏன் தேர்வு செய்யவில்லை என்பதை இங்கு தெரிவு படுத்த விரும்புகிறேன்...
நம்ம இந்த பு.மொ.க.வி விருதின் நோக்கமே.. புரியாத மொழியில் கவிதை எழுதுவதுதான் ஆனால் கவிஞர் ராம் கவிதையை ஒரு வாரம் முன்புபிறந்த குழந்தை ரிப்பீட் அடிச்சது அந்த குழந்தைக்கு புரிந்துவிட்டதால் அவர் இந்த விருது பெரும் வாய்ப்பை இழக்கிறார்...
மேடையில் தம்பி, அய்யனார் இருவரும் வர நடுவர் குழம்புகிறார் நீ யாருப்பா ஏன் மேடைக்கு வந்த என்று கேட்க நீங்கதானே தம்பி அய்யனார் வருக என்றீர்கள் நான் தம்பி, இவர் அய்யனார் என்க நடுவர் தலை தெறிக்க ஓடுகிறார்.
கூட்டத்தில் இருந்து இருவர்: புரியாத மொழியில் கவிதை எழுதுவதால் நீங்கள் இன்று முதல் பு.மொ.கவி வித்தகர் என்று அழைக்க படுவீர் ஆக.
பேட்டி: பு.மொ.க.வி விருது வாங்கினத பற்றி என்ன நினைக்கிறீங்க மிஸ்டர் பு.மொ.க.வி. வித்தகர் அய்யனார்???
அய்யனார்: ஆக்ஸ்வலி
குசும்பன் : எங்க வலி...
அய்யனார்: வலி எல்லாம் இல்ல... ஆக்ஸ்வலி நான் விருத குறி வச்சு எல்லாம் கவிதை எழுதுறது இல்ல...தமிழ்மண மக்கள் அனைவரையும் குழப்பனும் அதுதான் என் நோக்கம்...
ஒரே ஒரு சந்தேகம்: அது என்னா இப்ப எல்லாரும் ஒரு வார்தையில் உள்ள தேடியலைந்து என்கிறதை
தே
டி
ய
லை
ந்
து
குருட்டு புலிய
கு
ரு
ட்
டு
பு
லி
இப்படி எழுதுறீங்க font அலைன்மெண்ட் பிரச்சினையா???
பேட்டி: மிஸ்டர் கவிஞர் ராம் நீங்க இந்த விருதை தவற விட்டதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்??
ராம்: கொஞ்சம் வருத்தமாகதான் இருக்கிறது ஒரு 10 ரூபா கட்டி ரீ-ஜாயின் பண்ற மாதிரி ஏதும் வழி இருந்தா சொல்லுங்க குருட்டு எலின்னு ஒரு கவிதை ரெடி செய்யிறேன்...
குசும்பன்: அபீட்.....
Wednesday, June 20, 2007
Subscribe to:
Post Comments (Atom)
64 comments:
:)
குசும்பன் - பேரு கரெக்டாத்தான் இருக்கு!
//நான் நிலா ரசிகன் (ரகசீவ் ஞானியார் இல்லப்பா) (அ.ஆ ஹீரோயின்) என் நிலா மேல் ஏன்யா கல்ல போட்ட என்று கேட்க ஓடுகிறார் மின்னல்..//
:) மின்னலு! உனைப் பார்த்தா பாவமா இருக்கு!
//..அவர்களுக்கு வெளியில் அனைவருக்கும் எலும்பிச்சை பழம் தேய்த்து குளிக்க வழங்கி கொண்டு இருக்கிறார் அண்ணாச்சி//
:))
//மேடையில் தம்பி, அய்யனார் இருவரும் வர நடுவர் குழம்புகிறார் நீ யாருப்பா ஏன் மேடைக்கு வந்த என்று கேட்க நீங்கதானே தம்பி அய்யனார் வருக என்றீர்கள் நான் தம்பி, இவர் அய்யனார் என்க நடுவர் தலை தெறிக்க ஓடுகிறார்.
//
நல்ல சென்ஸ் ஆஃப் (ஆப்பு) ஹியூமர் உமக்கு!
//கூட்டத்தில் இருந்து இருவர்: புரியாத மொழியில் கவிதை எழுதுவதால் நீங்கள் இன்று முதல் பு.மொ.கவி வித்தகர் என்று அழைக்க படுவீர் ஆக//
:))))))))))))))))))))))))))))))))))))
//இப்படி எழுதுறீங்க font அலைன்மெண்ட் பிரச்சினையா???
//
கவிதை கவிதை! அதெல்லாம் உங்களுக்குப் புரியாது குசும்பன்!
@@@
நல்லா இருய்யா
அடபாவி குசும்பா... ஏய்யா இப்பிடி கொலைவெறி பிடிச்சு அலையுறே? ;-)
/அடித்தவர் நான் நிலா ரசிகன் /
நடிகை நிலாவுக்கு ரசிகரா?
நாமக்கல் சிபி said...
:)
குசும்பன் - பேரு கரெக்டாத்தான் இருக்கு!
"நல்ல சென்ஸ் ஆஃப் (ஆப்பு) ஹியூமர் உமக்கு"
எல்லாம் உங்ககிட்ட இருந்து கத்துக்கிட்டது தானுங்கோ!!!
//எல்லாம் உங்ககிட்ட இருந்து கத்துக்கிட்டது தானுங்கோ!!! //
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...!
நாமக்கல் சிபி said...
":) மின்னலு! உனைப் பார்த்தா பாவமா இருக்கு! "
இந்த கவிதைய எல்லாம் படிக்கிற
எங்கல பார்த்த எப்படி இருக்கு????
//கவிஞர் ராம் அந்த கவிதையை வாசிக்கிறார்..
அவர் வாசித்து முடித்தவுடன்...ஒரே அமைதி... (முத்துவில் கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட மாதிரி.) அபி பாப்பா தம்பி ங்கே ங்கே ங்கா..ங்காங்கா..என்று பசியில் கத்த கூட்டம் தப்பாக புரிந்துகொண்டு கூட்டம் முழுவதும் ங்கே ங்கே ங்கா..ங்காங்கா.. ரீப்பீட்டே!!
ஸ்டேடியம் முழுவதும் ங்கா பாட்டு கோரஸ்சாக ஒலிக்கிறது..//
ஹி ஹி...... ROFTL
"அய்யனார் said...
@@@
நல்லா இருய்யா "
வாங்க அய்யனார் தங்கள் வருகைக்கு நன்றி...
இராம் said...
அடபாவி குசும்பா... ஏய்யா இப்பிடி கொலைவெறி பிடிச்சு அலையுறே? ;-)
தல ராம் எய்தவர் அங்கிருக்க அம்பை நோவதேன்...
(நாராயண நாரயண BGM)
/
தல ராம் எய்தவர் அங்கிருக்க அம்பை நோவதேன்...
(நாராயண நாரயண BGM)//
யாரு மேன் அந்த புல்லுருவி??????
நாமக்கல் சிபி said...
"கவிதை கவிதை! அதெல்லாம் உங்களுக்குப் புரியாது குசும்பன்! "
சாரி ஒரு சின்ன திருத்தம் யாருக்கும் புரியாது..
இராம் said...
அடபாவி குசும்பா... ஏய்யா இப்பிடி கொலைவெறி பிடிச்சு அலையுறே? ;-)
உங்களுக்கு ஒரு விருது வாங்கிதரும் வரை ஓயமாட்டோம்....
அய்யனார்,
உங்களுக்கு இது தேவையா? ;)
குசும்பன்,
இன்னுமா வார்ப்புரு சரி பண்ணல? ஒரு தபா நம்ம ஐடிக்குத் தட்டி வுடுறது..
இராம் said...
/
தல ராம் எய்தவர் அங்கிருக்க அம்பை நோவதேன்...
(நாராயண நாரயண BGM)//
யாரு மேன் அந்த புல்லுருவி??????
ஐய் ஐய் நான் அவரு பேர சொல்ல மாட்டேன்..வேணும்ன்னா ஒரு கூளு தர்ரேன் சி என்று ஆரம்பித்து
பி என்று முடியும்...(சும்மா தமாசுக்கு)
//குசும்பன்,
இன்னுமா வார்ப்புரு சரி பண்ணல? ஒரு தபா நம்ம ஐடிக்குத் தட்டி வுடுறது//
அப்புறம் என்னப்பா!
சட்டுனு ஒரு மெயில் தட்டிடுப்பா!
எனக்கும் இந்த அக்காதான் ஹெல்ப் பண்ணினாங்க!
//வேணும்ன்னா ஒரு கூளு தர்ரேன் சி என்று ஆரம்பித்து
பி என்று முடியும்...(//
ஆமா! அவரு பேரு சிந்தனைச் சிற்பி!
(ஏன்யா எங்களுக்குள்ளே சிண்டு முடியறே! அதெல்லாம் நடக்காது!எங்கயும் இனி இராமை ஓட்ட மாட்டேன்னு அவருக்கே தெளிவா தெரியும்)
பொன்ஸ்~~Poorna said...
அய்யனார்,
உங்களுக்கு இது தேவையா? ;)
குசும்பன்,
இன்னுமா வார்ப்புரு சரி பண்ணல? ஒரு தபா நம்ம ஐடிக்குத் தட்டி வுடுறது..
பொன்ஸ் உங்க வருகைக்கு நன்றி..
வார்ப்புரு என்றால் என்ன அதன் பயன்? ...இரண்டு மாத போராட்டத்திற்க்கு
பிறகுதான் தமிழ் மணத்திலேயே இனைக்க முடிந்தது..
கொஞ்சம் அறிவு கம்மி...
//வார்ப்புரு என்றால் என்ன அதன் பயன்? //
வார்ப்புரு ன்னா பிளாக்கரோட டெம்பிளேட்!
அதைத்தான் தமிழில் வார்ப்புருன்னு சொல்லுவோம்!
குசும்பன்...ஆஹா என்ன ஒரு பொருத்தமான பெயர்.சிபி அண்ணா சொன்னதை நானும் வழி மொழிகின்றேன்
நீங்க எங்கு இருந்தாலும் நல்லா இருக்கனும்.இவுங்க எல்லாம் எழுதுற கவிஜ படிச்சு புட்டு ஒன்னுமே புரியமால் குழம்பி போனேன்.இவங்க தொல்லை எல்லாம் தாங்கலை...இப்படி அடிக்கடி போஸ்ட் போட்டு தாக்குங்க.முக்கியமாக அய்யனாரை சும்மா விடதீங்க.
குசும்பன் அவர்களே, கவிஞர்கள் மீது இவ்வளவு கோபம் கூடாது உங்களுக்கு.
anyhow ஒரே ஒரு சீரியஸ் பதிவு pls. I have tagged u.
siva.
sivaramang.wordpress.com
துர்கா|†hµrgåh said...
குசும்பன்...ஆஹா என்ன ஒரு பொருத்தமான பெயர்.சிபி அண்ணா சொன்னதை நானும் வழி மொழிகின்றேன்
யக்கோவ்...வணக்கமுங்கோ!!!
துர்கா|†hµrgåh said...
நீங்க எங்கு இருந்தாலும் நல்லா இருக்கனும்.இவுங்க எல்லாம் எழுதுற கவிஜ படிச்சு புட்டு ஒன்னுமே புரியமால் குழம்பி போனேன்.இவங்க தொல்லை எல்லாம் தாங்கலை...இப்படி அடிக்கடி போஸ்ட் போட்டு தாக்குங்க.முக்கியமாக அய்யனாரை சும்மா விடதீங்க.
நீங்களும் நம்ம ஆளா...வாங்க வாங்க..இப்படி கவிதை எழுதுறவுங்க ஒவ்வொருத்தார
தேடி புடிச்சு கொல்லுவோம்...
//நீங்களும் நம்ம ஆளா...வாங்க வாங்க..இப்படி கவிதை எழுதுறவுங்க ஒவ்வொருத்தார
தேடி புடிச்சு கொல்லுவோம்... //
ஆஹா! ஒரு குரூப்பாத்தான் கெளம்பி இருக்காங்க போல!
- கவிதை எழுதுவோர் குரூப்!
நாமக்கல் சிபி said...
//வேணும்ன்னா ஒரு கூளு தர்ரேன் சி என்று ஆரம்பித்து
பி என்று முடியும்...(//
ஆமா! அவரு பேரு சிந்தனைச் சிற்பி!
(ஏன்யா எங்களுக்குள்ளே சிண்டு முடியறே! அதெல்லாம் நடக்காது!எங்கயும் இனி இராமை ஓட்ட மாட்டேன்னு அவருக்கே தெளிவா தெரியும்)
யப்பா பொது ஜனங்களே நான் ஒன்னும் சொல்லவே
அண்ணா வந்து இனி இராமை ஓட்டமாட்டேன்னு
சொல்கிறார்..
இனி என்றால் இதன் பிறகு...என்று அர்த்தம்.(நாரயண நாரயண)
//இனி என்றால் இதன் பிறகு...என்று அர்த்தம்.(நாரயண நாரயண)
//
நல்லா ஃபுல் ஃபார்ம்லதான் இருக்கீங்கய்யா! வாழ்க!
//யப்பா பொது ஜனங்களே நான் ஒன்னும் சொல்லவே
அண்ணா வந்து இனி இராமை ஓட்டமாட்டேன்னு
சொல்கிறார்..
//
அடக் கடவுளே! சொன்னது நான் தான்!
ஆனா இனிமேல் இராமைப் பத்தி நான் பேசவே மாட்டேன்!
//நீங்களும் நம்ம ஆளா...வாங்க வாங்க..இப்படி கவிதை எழுதுறவுங்க ஒவ்வொருத்தார
தேடி புடிச்சு கொல்லுவோம்...
//
கண்டிப்பாக....count me in :)
இவுங்க கவிதை எல்லாம் படிச்சு 4 நாளாக நிம்மதியாக தூங்க முடியவில்லை.அந்த அளவுக்கு குழப்பிட்டாங்க.
அய்யனார்,நம்ப ரெண்டு பேரும் நாசமாக போவோம்ன்னு சாபம் விடுறார்.என்னன்னு கவனிங்க குசும்பன்
உம்மை இப்படித் திட்டினாத்தான் அடங்குவீரா?
//ஏன்யா எங்களுக்குள்ளே சிண்டு முடியறே! அதெல்லாம் நடக்காது!எங்கயும் இனி இராமை ஓட்ட மாட்டேன்னு அவருக்கே தெளிவா தெரியும்) //
ஆனா நான் அவரை கண்டிப்பாக ஓட்டுவேன் என்று இராம் அண்ணாவுக்குத் தெரியும்.அண்ணா இல்லவிட்டால் என்ன,தங்கை நான் இருக்கின்றேன்...:)
siva said...
குசும்பன் அவர்களே, கவிஞர்கள் மீது இவ்வளவு கோபம் கூடாது உங்களுக்கு.
முதல் ஆளே நீங்கதான்
துர்கா|†hµrgåh said...
"நீங்க எங்கு இருந்தாலும் நல்லா இருக்கனும்."
"முக்கியமாக அய்யனாரை சும்மா விடதீங்க. "
ரொம்ப பாதிக்கபட்டு இருப்பீங்க போல..அய்யனார்...உங்கள தனியா கவனிச்சிக்குறேன்
துர்கா|†hµrgåh said...
//ஏன்யா எங்களுக்குள்ளே சிண்டு முடியறே! அதெல்லாம் நடக்காது!எங்கயும் இனி இராமை ஓட்ட மாட்டேன்னு அவருக்கே தெளிவா தெரியும்) //
ஆனா நான் அவரை கண்டிப்பாக ஓட்டுவேன் என்று இராம் அண்ணாவுக்குத் தெரியும்.அண்ணா இல்லவிட்டால் என்ன,தங்கை நான் இருக்கின்றேன்...:)
வாங்க வாங்க இதுபோல் பாசகார தங்கச்சிக்கு இருக்கும் வரை எங்களுக்கு என்ன கவலை...
துர்கா|†hµrgåh said...
//நீங்களும் நம்ம ஆளா...வாங்க வாங்க..இப்படி கவிதை எழுதுறவுங்க ஒவ்வொருத்தார
தேடி புடிச்சு கொல்லுவோம்...
//
கண்டிப்பாக....count me in :)
இவுங்க கவிதை எல்லாம் படிச்சு 4 நாளாக நிம்மதியாக தூங்க முடியவில்லை.அந்த அளவுக்கு குழப்பிட்டாங்க.
உட்டா ரூம் போட்டு நாளு நாள் அழுவீங்க போல!!!
நாமக்கல் சிபி said...
உம்மை இப்படித் திட்டினாத்தான் அடங்குவீரா?
துர்க்கா சிபி அண்ணன் பேர லிஸ்ட்ல
சேர்த்துடுவோமா??? அவரும் பெறிய
கவிஞரா இருப்பாரு போல!!!
(http://pithatralgal.blogspot.com/2006/06/101_09.html)
என்னதான் நடக்குது இங்க. ஏன் இந்த கொலை வெறி?
குசும்பரே உங்களுக்கு இந்த வ்ருஷத்துக்கான அமைதிக்கான நோபல் பரிசு தர ஐ.நா சபை முடிவு பண்ணி இருக்காங்க. உங்களை மாதிரி சேவையை இது வரைக்கும் யாருமே செய்யலைன்னு ஊரெல்லாம் ஒரே பேச்சு........
குழம்(ப்)பியது யாரோ?
இந்த உலகம் என்னை குழப்புகிறதா?
இந்த உலகை நான் குழப்புகிறேனா?
இந்த உலகம் என்னை குழப்புவதாகச் சொல்லி
இந்த உலகை நான் குழப்புகிறேனா?
இந்த உலகை நான் குழப்புவதாகச் சொல்லி
இந்த உலகம் என்னை குழப்புகிறதா?
இந்த உலகம் என்னை குழப்புவதாக
என்னை நானே குழப்பிக் கொள்கிறேனா?
இந்த உலகை நான் குழப்புவதாகச் சொல்லி
இந்த உலகம் தன்னை குழப்பிக் கொள்கிறதா?
யார் யாரை குழப்புவது?
யார் யாரால் குழம்புவது
என்று புரியாத குழப்பத்தில்நான்!
:(
//அவரும் பெறிய
கவிஞரா இருப்பாரு போல!!!//
இதுல உள்குத்து எதுவும் இல்லையே?
நந்தா said...
"என்னதான் நடக்குது இங்க. ஏன் இந்த கொலை வெறி?"
ஒரு பொண்னு இதமாதிரி கவிதைய எல்லாம் படிச்சு
நாளு நான் தூக்கம் சோறு தண்ணி இல்லாம் கிடந்திருக்கு
இதுக்கு மேல என்ன வேணும்...
"குசும்பரே உங்களுக்கு இந்த வ்ருஷத்துக்கான
அமைதிக்கான நோபல் பரிசு தர ஐ.நா சபை
முடிவு பண்ணி இருக்காங்க."
ச்ச ச்சே நான் பரிசுக்காக எல்லாம் இந்த சேவையை
செய்யவில்லைங்க...
" உங்களை மாதிரி சேவையை இது வரைக்கும் யாருமே செய்யலைன்னு
ஊரெல்லாம் ஒரே பேச்சு"
இது பேருதான் குசும்பு...
நாமக்கல் சிபி said...
குழம்(ப்)பியது யாரோ?
இந்த உலகம் என்னை குழப்புகிறதா?
இந்த உலகை நான் குழப்புகிறேனா?"
துர்கா என்ன செய்யலாம் இவர...
கருட புராணம் படி என்ன தண்டனை
தரலாம் பார்த்து சொல்லுங்க!!!
//ச்ச ச்சே நான் பரிசுக்காக எல்லாம் இந்த சேவையை
செய்யவில்லைங்க...//
யோவ் ஒரு பேச்சுக்குச் சொன்னா முத்து படத்துல வர்ற அப்பா ரஜினிகாந்த் மாதிரி தியாகி ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்கறீரு. இதெல்லாம் ஓவரா இல்லை.
என்ன கொடுமை சரவணா இது...???
மின்னுது மின்னல் said...
என்ன கொடுமை சரவணா இது...???
என்னத்த இருந்தாலும் நீங்க இப்படி
சொல்லகூடாது... மின்னல் அடுத்த
கவிதை எப்பொழுது..
:) மின்னலு! உனைப் பார்த்தா பாவமா இருக்கு!
//
நீங்க வேற சிபி மத்தவங்கள பாக்குறப்போ இது பெருசா தெரியல...:)
என்னத்த இருந்தாலும் நீங்க இப்படி
சொல்லகூடாது... மின்னல் அடுத்த
கவிதை எப்பொழுது..
//
எதுக்கு ..?
அடிவாங்குனது பத்தாதா...?
மின்னல் தற்கொலை படை
துபாய் குறுக்கு சந்து
நாமக்கல்
எங்க தல ராயல் ராம விட அய்யனார் பெரிய கவியோ
உனக்கு இருக்குடி
ராயல் ராமை கலாய்போர் கழகம்
மற்றும் ஸ்ரேய்யா நற்பணி மன்றம்
மின்னுது மின்னல் said...
:) மின்னலு! உனைப் பார்த்தா பாவமா இருக்கு!
//
நீங்க வேற சிபி மத்தவங்கள பாக்குறப்போ இது பெருசா தெரியல...:)
சிபி இந்த பதிவ பார்த்து சிரிச்சிங்கலோ இல்லையோமின்னல் பதில பாருங்க....நிச்சயம் சிரிப்பீங்க...
Anonymous said...
எங்க தல ராயல் ராம விட அய்யனார் பெரிய கவியோ
உனக்கு இருக்குடி
ஐயா அனானி யாருக்கு இருக்கு நடுவருக்கா, இல்ல பதிவ போட்ட எனக்கா, இல்ல சிறந்த பு.மொ.க.வி அய்யானாருக்கா???
யாருக்குயா ஆப்பு
நடுவர் said...
என்னத்த இருந்தாலும் நீங்க இப்படி
சொல்லகூடாது... மின்னல் அடுத்த
கவிதை எப்பொழுது..
//
எதுக்கு ..?
அடிவாங்குனது பத்தாதா...?
எப்ப யார்கிட்ட:)))))))))))...சொல்லுங்க
கைய கால எடுத்துடலாம்.
ஐயா அனானி யாருக்கு இருக்கு நடுவருக்கா, இல்ல பதிவ போட்ட எனக்கா, இல்ல சிறந்த பு.மொ.க.வி அய்யானாருக்கா???
யாருக்குயா ஆப்பு
///
அடுத்த பதிவில் ராமுக்கு பரிசு கிடைக்குமா..
கிடைக்கவில்லையெனில் குசும்பனை கொளுத்துவோம்
:)
நாமக்கல் சிபி said...
//அவரும் பெறிய
கவிஞரா இருப்பாரு போல!!!//
இதுல உள்குத்து எதுவும் இல்லையே?
//
நடுகுத்து மாதிரிதான் தெரியுது..:)
ஸ்ரேயா நற்பணி மன்றம் said...
"அடுத்த பதிவில் ராமுக்கு பரிசு கிடைக்குமா..
கிடைக்கவில்லையெனில் குசும்பனை கொளுத்துவோம்
:) "
ஐய்யா ராமு இப்படி பாசகார தம்பிக்க இருப்பது தெரியாம போச்சே!!! அடுத்த முறை அவரு கவிதை
எழுதலேன்னா கூட கூப்பிட்டு குடுக்கத்துடுறேன்...
பாசகார அண்ணங்களா!!! இந்த கொளுத்துவோம்ன்னு சொன்னது சும்மா லொளளாங்காட்டியும் தானே!
பாசகார அண்ணங்களா!!! இந்த கொளுத்துவோம்ன்னு சொன்னது சும்மா லொளளாங்காட்டியும் தானே!
///
எங்கள வச்சி கமெடி பண்ணலையே
நாங்க சொன்னத செய்வோம்
சொல்லாததையும் செய்வோம்
மின்னுது மின்னல் said...
நாமக்கல் சிபி said...
//அவரும் பெறிய
கவிஞரா இருப்பாரு போல!!!//
இதுல உள்குத்து எதுவும் இல்லையே?
//
நடுகுத்து மாதிரிதான் தெரியுது..:)
மின்னல் அடுத்த கவிதைக்காக எல்லாரும் காத்துகொண்டு
இருக்கிறார்கள் எழுதுங்கள் அடுத்த கவிதையை....
பெயருக்கு ஏத்த மாதிரி தான்யா இருக்கே நீயி.. ஆனாலும் அநியாயத்துக்கு குசும்பு விடுறே நீயி...
//அய்யனார்: ஆக்ஸ்வலி
குசும்பன் : எங்க வலி.//
ROFTEL.. இது ஒரு சாம்பிள் தான் பதிவு முமுவது இது மாதிரி நிறைய கலக்கல்.
சந்தோஷ் said...
பெயருக்கு ஏத்த மாதிரி தான்யா இருக்கே நீயி.. ஆனாலும் அநியாயத்துக்கு குசும்பு விடுறே நீயி...
//அய்யனார்: ஆக்ஸ்வலி
குசும்பன் : எங்க வலி.//
ROFTEL.. இது ஒரு சாம்பிள் தான் பதிவு முமுவது இது மாதிரி நிறைய கலக்கல்.
சந்தோஷ்.. மிக்க நன்றி உங்கள்
கருத்துக்கு...
யோவ் எல்லாரும் தூள் கிளப்பினா நான் மேட்டருக்கு மண்டபத்துக்குதான்யா போவனும். சரியான குசும்புய்யா உமக்கு:-))
அபி அப்பா said...
யோவ் எல்லாரும் தூள் கிளப்பினா நான் மேட்டருக்கு மண்டபத்துக்குதான்யா போவனும். சரியான குசும்புய்யா உமக்கு:-))
அபி அப்பா உங்க குட்டி பையனாலதான் ராம்க்கு கிடைக்கவேண்டிய
விருது கிடைக்காம போய்விட்டது...
இப்பவே நீங்க மண்டபத்துல இருக்கிறதா மின்னல் சொன்னார்...
சரி எப்ப ஊருக்கு வரீங்க எப்ப டிரீட்????
oooo. ka kaka aaaa uuulala.
Post a Comment