Tuesday, February 21, 2012

டரியள் டக்ளஸ் 21-2-2012

செய்தி: கட்சி துவங்கியது முதல் தொடர்ந்து தனித்து போட்டியிட்டிருந்தால், இன்று ஆளுங்கட்சியாக இருந்திருப்போம் அல்லது, 50, 60 எம்.எல்.ஏ.,க்களை கொண்ட எதிர்க்கட்சியாக இருந்திருப்போம்,'' என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

டக்ளஸ்: சொல்றதுதான் சொல்றீங்க...பிரதமர் ஆகியிருப்போம் என்று சொல்லுங்களேன்.


********
செய்தி: மீண்டும் பேங் கொள்ளையர்கள் சென்னையில் கைவரிசை...

டரியள் டக்ளஸ்: அம்மா கூட இருக்கிறவங்கதான் கொள்ளையடிக்கிறாங்கன்னு அனுப்பிவுட்டா...எங்கிருந்தோ வந்தவனுங்க கொள்ளையடிக்கிறானுங்களே! அவ்வ்வ்வ்வ்

*********

சங்கரன்கோவில்: ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை-அழகிரி தகவல்!

ட்விஸ்ட் டிவிஸ்ட்டுன்னு சொல்லுவாங்களே அது இதுதான்.

***********

உன்னை எதுக்குவேண்டும் என்றாலும் மன்னிச்சிடுவேன்...ஆனா திருப்பதியில லட்டுக்கு பதிலா ஜிலேபி கொடுக்க சந்திரபாபுநாயுடு சொல்லிட்டாருன்னு சொன்ன பாரு அதுக்கு மட்டும் மன்னிக்கவே மாட்டேன் டா...


இதே மாதிரி....

உங்களை பிட்டு படம் பார்த்ததுக்கு அதுவும் சட்டசபையில் கூட்டு சேர்ந்து பார்த்ததுக்கு கூட மன்னிச்சிடுவேன்..ஆனா அந்த வீடியோவை பாலியல் பிரச்சினையில் சிக்கிய பெண்ணுக்கு உதவதான் நாங்க பார்த்தோம் என்று சொல்றீங்கபாருங்க அதை மட்டும் மன்னிக்கவே முடியாதுய்யா!

**************

செய்தி: எங்களால்தான் கல்யாணம் திருமணமாச்சு; ஆசீர்வாதம் வாழ்த்தாச்சு: கருணாநிதி.

ஜெயலலிதா: நோட்டட்! (நெக்ஸ்ட் ஸ்டெப் இனி திருமணம் என்று பத்திரிக்கை அடித்தால் அது செல்லாதுன்னு அறிவிச்சிடவேண்டியதுதாம்)

****************

Saturday, February 11, 2012

டரியள் டக்ளஸ் 11-02-2012

அதிமுகவுக்கு விஜயகாந்த் சவால் வேடிக்கையானது : சரத்குமார்

டரியள் டக்ளஸ்: பாஸ்.....நீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்...இதுல நீங்க அவரை கிண்டல் செய்யிறீங்க.

*******

திராவிடக் கட்சிகளுடன் எக்காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டோம்-ராமதாஸ் மறுபடியும் அறிவிப்பு.

டக்ளஸ்: அவரு நமக்கு சொல்ற மாதிரி தெரியல...அவரு மறந்துடக்கூடாதுன்னு அவரு திரும்ப திரும்ப சொல்லி மனப்பாடம் செஞ்சிக்கிறாரு போல...

*********
ஆளுநர்தான் புதியவர்... உரை புதிதல்ல: விஜயகாந்த்.

டரியள் டக்ளஸ்: இதை சொல்லும் எதிர்கட்சி தலைவர் தான் புதியவர். வாக்கியம் புதிதல்ல.

*********
இடுக்கன் வருங்கால் நகுக என்பதை கடைப்பிடிக்கும் ஒரே ஆள்..ஜி.கே.மணி "ராமதாஸ் மீதான வழக்கு... நகைப்பை ஏற்படுத்துகிறது."

*********
எல்லோரும் நிதி கேட்பார்கள், நான் 'சாட்டிலைட்' கேட்டேன், குழம்பி விட்டார் பிரதமர்-மோடி.

டரியள் டக்ளஸ்: ஒரு பச்சமண்ணுக்கிட்ட கேட்கிற கேள்வியா இது?

********

பிரச்சினைகளைத் தீர்க்க விரைவில் புதுமையான போராட்டம்- விஜயகாந்த் அறிவிப்பு..

டரியள் டக்ளஸ்: எதிரிங்களுக்கு இவரோட பட சிடிய கொடுப்பாரோ?

********
சொன்னாலும் சொல்லுவாங்க...

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்- நியூசிலாந்தில் 10 முறை நில அதிர்வு...ஆகவே முல்லைபெரியாறு அணையை இடிக்கவேண்டும்.- கேரள முதல்வர்


எனக்கும் கேமிராவில் கண்டம், கர்நாடகா அமைச்சர்களுக்கும் கேமிராவால் கண்டம் ஆக மொத்தம் கேமிராவால் கர்நாடகாவுக்கு ஆபத்து. ----நித்தியாணந்தர்

மேட்டர் செஞ்சாலும் கேமிராவில் படம் புடிச்சி டீவியில் போடுறாய்ங்க, மேட்டர் படம் பார்த்தாலும் படம் புடிச்சி டிவியில் போடுறாங்க...தனிமனித சுதந்திரத்தில் தலையிடுறாங்க..- டிஸ்மிஸ் செய்யப்பட்ட அமைச்சர்கள்.

Thursday, January 12, 2012

நண்பன்


இப்படி ஒரு விஜயை பார்த்து எவ்வளோ நாள் ஆச்சி. இதுக்காகவே அமீர்கானுக்கு நன்றி சொல்லனும். கடைசியாக விஜய் நடித்து பார்த்த படம் திருப்பாச்சி, அதன் பிறகு விஜய் படத்தை டீவியில் கூட பார்த்தது இல்லை. ஷங்கர் டைரக்சன், 3 இடியட்ஸ் ரீமேக் என்பதால் நம்பிபோகலாம் என்று நேற்று இரவு போனேன்.


படம் ஆரம்பித்தது முதல் கடைசி வரை கொஞ்சம் கூட போர் அடிக்காமல் செம ஜாலியா போச்சு, இப்படி என்ஜாய் செஞ்சி, தியேட்டரில் இருந்த அனைவரும் செமயா சிரிச்சி கடைசியாக பார்த்த படம் எதுவென்று நினைவில் இல்லை.

படத்தை பற்றி சொல்லவேண்டும் என்றால் ஏற்கனவே 3 இடியட்ஸ் பார்த்தவங்களுக்கு கொஞ்சம் சலிப்பாக இருக்கலாம், என்னய்யா அப்படியே சீன் பை சீன் காப்பி அடிச்சிருக்காங்க, மில்லிமீட்டர் பேரைக்கூடவா காப்பி அடிப்பாங்க, சத்யராஜ் ஷேவ் செய்துக்கும் பொழுது போடும் பாட்டு ட்ராக்கை கூட மாற்றம் இல்ல இப்படி படம் எடுக்க எதுக்கு ஷங்கர், ஜெயம் ரவி அண்ணன் ராஜா போதுமே என்று எல்லாம் சொல்லுவாங்க. சரி சங்கர் கொஞ்சம் மாத்தி அப்படி இப்படி டிங்கரிங் செஞ்சி எடுத்தா...ச்சே திரி இடியட்ஸ் எப்படி இருக்கும் தெரியுமா? கெடுத்துட்டாங்கய்யான்னு சொல்லுவாங்க.

எனக்கு படத்துல பெருசா எதுவும் குறை இல்ல, கொடுத்த காசுக்கு சந்தோசமா சிரிச்சி ரசிச்சி படம் பார்த்தாச்சு.

சத்யராஜ் அவர் இயல்பா பேசி நடிச்சிருந்தாலே செமயா இருந்திருக்கும், அவரு ஹிந்தியில் பேசும் ஆள்மாதிரியே பேச ட்ரை செஞ்சதுதான் கொஞ்சம் சொதப்பல்.


"திருக்குறள் சைஸ்க்கு ப்ளாஷ் பேக் சொல்றான் பாரு" "நீ யாரு? இவனுக்கு அக்கா" மாதிரியான டயலாக்குகள் ரசிக்க வைக்கின்றன.

சைலன்சருக்கு சத்யன் செமயா செட் ஆவுறாரு...ஶ்ரீகாந்த் மட்டும் கொஞ்சம் சொதப்பல்.

நண்பன் பார்க்கும் பொழுது 3 இடியட்ஸ் வெச்சி கம்பேர் செய்யாம படம் பாருங்க...நிச்சயம் படம் பிடிக்கும்.




Tuesday, December 6, 2011

சர்ப் எக்ஸ்சல் நாவல் உருவாகிய விதம்.

பாகம்1:

மனைவி: என்னங்க கொஞ்சம் மளிகை கடையில் சாமான் வாங்க வேண்டியிருக்கு...எனென்னன்னு சொல்றேன்...கொஞ்சம் எழுதிக்கொடுங்க.

எழுத்தாளர்: எழுத்தாளனுக்கு வந்த சோதனை...ஒரு நாவல் எழுதும் பொழுது மளிகை கடைக்கு ரோக்கா எழுத சொல்றீயே...

மனைவி: இட்லி மாவு அரைச்சிக்கிட்டு இருக்கேன்..கையெல்லாம் மாவு..கடை பையன் வந்துடுவான்...கொஞ்சம் எழுதிக்கொடுங்க.

எழுத்தாளர்: சொல்லு..சொல்லித்தொலை...

மனைவி: உப்பு ஒரு கிலோ...மஞ்சள் தூள் கால் கிலோ, புளி ஒரு கிலோ...

எழுத்தாளர்: ம்ம்ம்

மனைவி: சன்பிளவர் ஆயில் 2லிட்டர், எழுதுறீங்களா?

எழுத்தாளர்: ஆஹா நீ சொன்னதை எல்லாம் எழுதிக்கொண்டு இருந்த நாவல் பேப்பரிலேயே ஏழுதிட்டேன்... சரி வுடு...வேற பேப்பரில் எழுதித்தாரேன்.

********

பாகம்2:

மனைவி: என்னங்க ஐய்யப்பன் சரணம் சொன்னா நல்லது நடக்குமாம்...என் ப்ரெண்டு 108 சரணமும் ஏழுதிக்கொடுத்தா...

எழுத்தாளர்: எங்க காட்டு...

மனைவி: இந்தாங்க நீங்களும் முடிஞ்சா சொல்லுங்க..

எழுத்தாளர்: இங்க வெச்சிட்டுப்போ..

(எழுத்தாளர் மறந்துப்போய் எழுத்திக்கொண்டு இருந்த நாவலின் நடுவில் வைத்துவிடுகிறார்...)

ப்ரூப் பார்க்கும் பொழுது...

"சார்...நடுவுல ஐயப்பன் சரணம் பேப்பர் எல்லாம் இருக்கு.."

"அவரு எது ஏழுதினாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும். அதுல இருப்பது எல்லாத்தையும் பிரிண்ட் செய்யனும்"

*********

பாகம் 3:


எழுத்தாளர்: இங்க இருந்த காண்டம் பாக்கெட்டை பார்த்தியா?

நண்பி: இல்லீயே...எங்க இருந்தா என்ன? இப்ப நான் கொஞ்சம் பிஸி வரமுடியாது...

எழுத்தாளர்: நீ வரவேண்டாம்...நான் சாட் செய்யப்போறேன்...அதுக்குதான் காண்டம் எங்கன்னு தேடுறேன்...

நண்பி: ங்கேகேகே...:(

(எழுத்தாளர் சிஸ்டத்தில் இருந்து கொஞ்ச நேரத்தில் oh god oh god oh god என்று சத்தம் வருது...)

நண்பி: அடப்பாவிங்களா சாட் செய்யும் பொழுது கூட சவுண்டு எல்லாம் கொடுத்து ஒரு ரியாலிட்டியோடதான் சாட் செய்வீங்களா? அவ்வ்வ்வ்வ்வ்

********
பாகம் 4:

எழுத்தாளர்: என்னம்மா சோகமா இருக்க?

மனைவி: சொந்தக்காரங்க ஒருத்தவங்க இறந்துட்டாங்க, அவுங்க வீட்டுக்கு போவனும் இடம் தெரியல...

எழுத்தாளர்: போன் போட்டு இடம் எங்கன்னு கேளு நான் ரூட்டு போட்டு தருகிறேன்....

மனைவி: சரி... சென்னியம்மன் கோவிலுக்கு பக்கத்தில்..வேளச்சேரி 100 அடி ரோட்டில் முதல் லெப்ட் எடுக்கனுமாம்...அங்க ஏரிக்கு பக்கத்தில் இருக்குதாம் சுடுகாடு..

எழுத்தாளர்: லொக்கேசன் மேப் வரைகிறார்...

மனைவி: அட இது தெரிஞ்ச இடம் தான்...நான் போய்க்கிறேன்..

எழுத்தாளர்: இந்தா இந்த பேப்பரை எடுத்துக்கிட்டு போ..

மனைவி: இல்லை வேண்டாம்..தெரியும்.

(எழுத்தாளர் மறந்து போய் அந்த படம் வரைந்த பேப்பரையும் நாவல் எழுதிய பேப்பர் கட்டில் சேர்த்துவிடுகிறார்.)

**********
பாகம்5:

மனைவி: என்னங்க...உங்க டேபிளில் ஒரு சமையல் குறிப்பு எழுதி வெச்சிருந்தேன்.. பார்த்திங்களா?

எழுத்தாளர்: இல்ல.. அதை ஏன் என் டேபிளில் வெச்ச?

மனைவி: இல்லீங்க டீவியில் சமையல் குறிப்பு நிகழ்சி பார்த்துக்கிட்டு இருந்தேன்.. அவசரத்துக்கு பேப்பர் பேனா கிடைக்கவில்லை...அதான் ..

(எழுத்தாளர் அந்த பேப்பரின் பின் பக்கத்தில் தான் நாவலை தொடர்ந்து எழுதிக்கொண்டு இருக்கிறார் என்பது மனைவிக்கும் அவருக்கும் தெரியாது.)

********

பாகம் 6:
பதிப்பகத்தில்...தொகுத்துக்கொண்டு இருப்பவர்..

ஹரி: என்னய்யா நாவலுக்கு நடுவில் காண்டம் பாக்கெட் இருக்கு?

கிரி: அன்னைக்கே சீனியர் சொல்லிட்டாரு...அதுல எது இருக்கோ அப்படியே பிரிண்ட் செய்யனும் ஏன்று...

ஹரி: இதை எப்படியா பிரிண்ட்ல ஏத்த முடியும்..

கிரி: பாக்கெட்டை பிரிச்சி...அதை வெளியில் எடுத்து ...ஒரு பேப்பரில் வெச்சி அவுட் லைன் வரைஞ்சிடு..

*********

பாகம் 7:

ஜோசியக்காரன்: என்ன சார் ஜோசியம் பார்க்கனுமா? பில்லி சூனியம் ஏவல் எடுக்கனுமா?

எழுத்தாளர்: ஜோசியம் எல்லாம் வேண்டாம்...எனக்கு இந்த பேப்பரில் எந்திரம் ஒன்னைப்போட்டுக்கொடு..

ஜோசியக்காரன்: என்ன எந்திரம் வேண்டும்? தனலெட்சுமி வீட்டுக்கு வர ஒரு எந்திரம் இருக்கு போட்டுதரவா? ஆனா அதை தகட்டில் தான் போடனும்..பேப்பரில் எல்லாம் போடக்கூடாது.

எழுத்தாளர்: தகட்டை எல்லாம் பதிப்பகத்தில் கொடுக்கமுடியாது...நீ இந்த பேப்பரிலேயே வரைந்து கொடு.

ஜோசியக்காரன்: சரி

எழுத்தாளர்: தனலெட்சுமி வீட்டுக்கு வருவதுக்கு இருப்பது மாதிரி குஷ்பூ புத்தக வெளியீட்டுக்கு வரவைக்க எதுவும் எந்திரம் இருக்கா?

ஜோசியக்காரன்: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

*************



Sunday, September 11, 2011

பாரதியின் அரிய புகைப்படங்கள்!

காலையில் வழக்கம் போல் பஸ்ஸில் கும்மிக்கிட்டு இருக்கும் பொழுது பாரதியின் ஒரு புகைப்படத்தை பார்த்தேன் பார்த்ததும்

"பாபா ராம்தேவ் மாதிரி இருக்காரு பாரதி...ஆனா போட்டோவில் எல்லாம் வேற மாதிரி இருக்காரே போட்டோஷாப்பில் தாடியை எல்லாம் ட்ரிம் செஞ்சி...மீசைய எல்லாம் முறுக்கிவுட்டு வரலாறு முக்கியம் அமைச்சரே எனப்து போல் போட்டோவை ரிலீஸ் செஞ்சது யாரு? " என்று பஸ் விட்டேன்.

அதைத்தொடர்ந்து நடந்த விவாதத்தில் ஹரி கிருஷ்ணன் புகைப்படத்துக்கு விளக்கம் கொடுத்தது மட்டுமின்றி...அரிய புகைப்படத்தையும் அனுப்பி வைத்தார்.


அனுப்பிய ஹரி கிருஷ்ணனுக்கும் நன்றி.

‘நன்றி, ‘சித்திர பாரதி’ தொகுத்தவர் திரு ஆர் ஏ பத்மநாபன்’










Monday, August 8, 2011

கலைஞர் கார்ட்டூன் 8-8-2011


Wednesday, July 13, 2011

ஒரே ஒரு கார்ட்டூன்