Wednesday, August 25, 2010

என்ன கொடுமை சரவணன்?

நேற்று நண்பரின் வீட்டுக்கு சென்று இருந்தோம். அங்கிருந்து நானும் நண்பரும் கடைக்கு சென்று விட்டு திரும்ப போய் காரை ஸ்டார்ட் செய்தால் கார் ஸ்டார்ட் ஆகமாட்டேங்குது, கார் கீயை லாக்கில் இருந்தே எடுக்க முடியவில்லை, பார்க்கிங் செய்திருந்த ரோட்டில் ஆள் நடமாட்டம் இல்லை, ரொம்ப நேரம் காத்திருந்து பிறகு ஒரு சேட்டன் வந்தார் அவரிடம் கெஞ்சி கூத்தாடி அண்ணே கார் ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது கொஞ்சம் என்னன்னு பாருங்க என்றேன். அவரும் உள்ளே உட்காந்து சீட்டை கொஞ்சம் முன்னாடி இழுத்து அட்ஜஸ் செய்துவிட்டு ஸ்டார்ட் செய்தார், கார் ஸ்டார்ட் ஆகிவிட்டது. அண்ணே என்னன்னே பிரச்சினை என்ன செஞ்சிங்க என்றேன்...ஒன்னுமில்லை சீட்டை அட்ஜஸ் செஞ்சேன் என்று சொல்லிட்டு போய்விட்டார்...



அஜித் படத்தில் கருணாஸ் ஆட்டோவில் ஏம்பா போன முறை என் ஆட்டோ கண்ணாடிய அட்ஜஸ் செஞ்ச அதுல ஒரு நியாயம் இருந்துச்சு... இந்த முறை பக்கத்து ஆட்டோ கண்ணாடிய அட்ஜஸ் செய்யுறீயேன்னு சொல்லும் காமெடி நினைவுக்கு வந்தது.



****************

நண்பர்களை விடுமுறையில் சந்தித்த பொழுது குடும்பத்தோடு வந்திருந்த நண்பர் வீட்டுக்கு கிளம்பினார், அவரோட இரண்டு வயது பையனை கூப்பிட்டு
மாமாவுக்கு டாட்டா சொல்லிட்டு வா போகலாம் என்றார். அவனும் டாட்டா காட்டுவது போல் கையை ஆட்டினான், அவர் ஒழுங்கா வாயை திறந்து டாட்டா சொல்லிட்டு வா என்றார், அவன் உடனே ஆஆஆஆன்ன்னு வையை திறந்து வெச்சிக்கிட்டு டாட்டா காட்டுவது போல் கையை ஆட்டினான்.. எல்லோரும் சிரித்ததும் வெட்கம் வந்து ஓடிவிட்டான்.


************

சுதந்திர தினத்து அன்று மக்கள் டீவியில் ஒரு நிகழ்ச்சியில் சுதந்திரம் கிடைத்த பொழுது காந்தி எங்கிருந்தார் என்று கேள்வி பொது மக்கள், மாணவர்களிடம் கேட்கப்பட்டது. எங்கிருந்தார் என்று தெரியவில்லை என்று அல்லது எதாவது ஒரு இடத்தின் பெயரை சொல்லியிருந்தாலவது பரவாயில்லை, செத்து போய்விட்டார் என்று சொன்னார்கள் பலர் :((

அதுமாதிரி தேசியகீதத்தை எழுதியவர் யார் என்று கேட்டார்கள் தமிழில் சாலமன் பாப்பையா என்றார்கள்... அடங்கொன்னியா:(

*************

அப்ப அப்ப நடக்கும் நண்பர்களோட சந்திப்புகள், பதிவர் சந்திப்புகள் மூலம் விடுமுறை தினம் உற்சாகமாக போகும், ரமதான் மாதம் என்றால் நண்பர்கள் கொடுக்கும் இப்தார் விருந்துகளினால் மிகவும் உற்சாகமாக போவும், நோம்பு ஆரம்பித்த முதல் வாரமே பதிவர்களுக்கு ஆசிப் அண்ணாச்சி வீட்டில் புகாரி பிரியாணியோடு இப்தார் அண்ணாச்சி & கோவால் கொடுக்கப்பட்டது. நம்ம ஊரில் நோம்பு நேரத்தில் பள்ளி வாசலில் கொடுக்கும் கஞ்சி போன்ற சுவையோடு இங்கே ஹோட்டலில் இருந்து வாங்கி வந்திருந்தார்கள் மிகவும் அருமையாக இருந்தது. அதுபோல் நாளை (27 -8) அன்று அண்ணாச்சி தலைவராக இருக்கும் அமீரக தமிழ் மன்றம் சார்பாக ஒரு இப்தார் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இப்படி வாரம் வாரம் இப்தார் கொடுப்பதுக்கு பதில் இரமதான் மாதம் முழுவதும் இப்தார் கொடுக்க ஏற்பாடு செய்ய சொல்லனும்:))


Monday, August 16, 2010

கார்ட்டூன் 16-8-2010





உங்கள் குடும்பம் எந்த கட்சி மாதிரியானது என்று கண்டுபிடிப்பது எப்படி?


மகன்களால் பிரச்சினையா அப்ப தி.மு.க.



குடும்பஸ்தன் என்று ரேசன் கார்ட் வாங்கிட்டுஅதில் உங்க பேர் மட்டும் இருந்ததால் அங்கீகாரம் கேன்சல் ஆயிட்டா?அப்ப ம.தி.மு.க



குடும்பத்தில் யாரும் உங்க பேச்சையும் மதிப்பது இல்லை குடும்பத்தலைவர் என்ற டம்மி போஸ்டிங்கில் இருக்கீங்களா? அப்ப காங்கிரஸ்

பையனுக்கு எங்கயாவது எப்படியாவது எவன் காலிலாவது விழுந்து அட்மிசன் போட அலையிறீங்களா அப்ப உங்க குடும்பம் பா,ம.க



அடிக்கடி உங்க வீட்டு அம்மணி ரெஸ்ட் எடுக்க அம்மா வீட்டுக்கு போறாங்களா? அப்ப அ.தி.மு.க.



கூட்டணி போட ஆள் கிடைக்காம தனி ஆவர்த்தனம் பாடும் பேச்சிலர் ஆளா? அப்ப நீங்க பிஜேபி



பேருக்கு நீங்கதான் தலைவர், மனைவியும் மச்சானும் தான் உங்களின் ரிமோட் என்றால் அப்ப உங்க குடும்பம் தே.மு.தி.க



கோச்சுக்கிட்டு தனிக்குடித்தனம் வந்த பிறகு குடும்பம் நடத்த முடியாம திரும்ப எப்படா வீட்டில் வந்து கூப்பிடுவாங்க தனிகுடும்பத்தை கலைச்சிடலாம் என்று காத்திருந்தா சரத் கட்சி



வந்ததும் சரியில்ல வாச்சதும் சரியில்ல ஊர்ல ஒரு பய நம்ம பேச்ச மதிக்க மாட்டேங்கிறான் என்ற நிலையில் இருந்தா கம்யூனிஸ்ட்

Wednesday, August 4, 2010

மீண்டும் பத்திரிக்கையில் பெயர் மாற்ற மோசடி...

இந்த முறை ஏமாற்றப்பட்டது நான்:((

இதுக்கு முடிவு கட்ட போவது யார்?:((

ஐஸ்வர்யா ராய் அடித்த கல்யாணபத்திரிக்கையில் என் பெயருக்கு பதிலாக அபிஷேக் பட்ச்சன் பெயர் வந்த பொழுது எவ்வளோ மனசு கஷ்டமா இருந்தது தெரியுமா? இதை விவேக் ஓபராய் கூப்பிட்டு சொன்ன பொழுதுதான் தெரியவந்தது. நீங்கள் ஆசை ஆசையாக சைட் அடித்த பிகர் கல்யாண பத்திரிக்கையில் வேற ஒருவர் பெயர் வரும் பொழுது வரும் வலி..அதை அனுபவித்தால் தான் உங்களுக்கு புரியும், அட்லீஸ்ட் பத்திரிக்கையில் இந்த பிகரை குசும்பனிடம் இருந்து ஆட்டைய போட்டேன் என்று ஒருவரி சொல்லியிருந்தாலாவது பரவாயில்லை. ஒன்னுமே சொல்லாமல் என்னமோ சொந்தமாக தேத்தி கரெக்ட் செஞ்சு கல்யாணம் செய்வது போல் பத்திரிக்கை அடித்தது மட்டும் அல்லாமல், என் பெயரை வேறு இருட்டடிப்பு செய்துவிட்டார்கள். இத்தனைக்கும் அபிசேக் பட்சன் அடிக்கடி பேசுபவர்தான், அப்பொழுதுதாவது சொல்லியிருக்கலாம் உங்க பிகரை ஆட்டைய போட போறேன் என்று.

வேதனையோடு, தாடியோடு
குசும்பன்

பின்னூட்டங்கள்

1 to 25 பின்னூட்டங்கள்: கடுமையான கண்டனங்கள்

26) பல்வெட்டு said: இதுவரை யாரும் எந்த கல்யாணம் ஆன பிகரையும் சைட் அடிச்சது இல்லையா? இதுவரை யாரும் ஊசி போடும் நர்ஸை சைட் அடிச்சது இல்லையா? இதுவரை யாரும் கல்யாணம் ஆன நடிகையை ரசித்தது இல்லையா? அவர்கள் மட்டுமே இதுக்கு கண்டனம் தெரிவிக்கலாம்!!!


*********
ஜ்யோவ்ராம் சுந்தர் Sundar - ஊதாப்பூ said: முதல்லயே அபிஷேக் பச்சன் உங்ககிட்ட சொல்லியிருந்தா பரவாயில்லை. விவேக் கூப்பிட்டு சொன்ன பிறகுதான் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கு. அப்புறம் நல்லா மாட்டிகிட்ட பிறகு ஆமாம்னு ஒத்துக்கறாரு அபிஷேக். சே, என்ன மனுஷன். என்னுடைய கடுமையான கண்டனங்கள்


***********
கண்ணா K - அபிஷேக் பச்சன் படங்களை புறக்கணிப்போம்.....

ஜ்யோவ்ராம் சுந்தர் Sundar - ஜிக்கி said : இல்லை கண்ணா, புறக்கணிப்பெல்லாம் பெரிய விஷயம். அபிஷேக் உணர்ந்து திருந்திவிட்டாலே போதும்.


*************

ஜ்யோவ்ராம் சுந்தர் Sundar - ஏன், எல்லாரும் கடுமையான கண்டனங்கள்னே சொல்றாங்க. அப்ப லேசான, மந்தனமான கண்டனங்கள் எல்லாம்கூட இருக்கா?

************
கண்ணா K - அபிஷேக் பச்சன் said...
அண்ணே, அந்த இதழில் நன்றி -குசும்பன் என வரவேண்டியது,மிஸ் ஆகி விட்டது.அடுத்த இத்ழில் வரும்.நான் ஆசிரியரிடம் பேசி விடுகிறேன்.விடுபட்டமைக்கு வருந்துகிறேன்.அதே சமயம் நான் வேண்டுமென்றே செய்ததாக நினைக்க வேண்டாம்.நீங்கள் உரிமையாக ஃபோன் பண்ணியே கேட்கலாம்.


************
ஜ்யோவ்ராம் சுந்தர் Sundar - டாக்டர் க்ரூனோ said : அபிஷேக், நீங்கள் இதற்குமுன் திருமணம் செய்திருக்கிறீர்களா? அப்போது எல்லாம் அறிவித்துவிட்டுத்தான் செய்தீர்களா? சரி, குசும்பன் பெயரே பத்திரிகையில் இருந்தாலும், இது தெரியாமல் அவர் வேறு யாரையாவது திருமணம் செய்ய இருந்து அந்தப் பத்திரிகையிலும், குசும்பன் பெயர் போட்டே அடித்துவிட்டால், ஒரே சமயத்தில் இரண்டு இடத்தில் திருமணம் என்றால் குசும்பனை என்ன நினைத்துக் கொள்வார்கள். இது குறித்து நான் முன்னர் எழுதிய பதிவின் சுட்டி .................. இது இவ்வளவு வருடங்கள் சைட் அடித்த உங்களுக்குத் தெரியாது என்பதை நம்ப கஷ்டமாக இருக்கிறது.


************
குசும்பன் kusumbu - அலோ இரண்டாப்பு தமிழ்வாத்தியார் சுப்பையா இருக்காங்களா?

ஆமாம் சுப்பையாதான் பேசுறேன்

அய்யா நான் மும்பையில் இருந்து அபிசேக் பேசுறேன்.. நன்றி குசும்பன் என்று வரவேண்டிய இடத்தில் என் பெயர் வந்துட்டுய்யா..

அதை ஏன்யா என்கிட்ட சொல்ற...

ஆசிரியர் கிட்ட சொல்லிடுறேன் என்று பொதுவுல சொல்லிட்டேன் அதை காப்பாத்தனுமுல்ல ஐய்யா!


************
நடந்து முடிந்த பத்திரிக்கை பிரச்சினையும் என் தரப்பும்....
நேற்றிலிருந்து கண்டனத்தையும், காண்டத்தையும் தொடர்ந்து வழங்கி வரும் அனைவருக்கும் நன்றி. தலைவர் பொய் தமிழன் போல் நான் எலி அல்ல, சும்மா சும்மா திரும்ப அதே கமெண்டை காப்பி செய்து ஒவ்வொரு கமெண்டுக்கும் வேற வேற கலர் கொடுத்து வந்தது 50 பின்னூட்டம் என்றால் அதுக்கு 100 பின்னூட்டம் போட்டு விளக்கம்சொல்ல.. ஆகவே தனியா பதிவு போடுறேன்.

நான் நிறைய முறை சொல்லியிருக்கிறேன்... நான் காப்பி அடிச்சு பாஸ் செய்தவன் என்று, அதுக்காக அப்படியே புக்கில் இருப்பதை போல் படம் 1.1ல் இருப்பது போல் என்று எழுதியது இல்லை, அப்படி எழுதியிருந்தால் அதுக்கு பெயர் ஈ அடிச்சான் காப்பி, நானே சொந்தமாக படம் வரைந்து பாகம் குறிச்சிருக்கிறேன். என் எழுத்தில் வ.சே.சுவும், மா.பொ.சியும் கால் ஆட்டிக்கிட்டு படுத்திருப்பதை உத்து உத்து பார்த்து படிப்பவர்களுக்கு தெரியும்.

கல்யாண பத்திரிக்கை பத்தி பக்கம் பக்கமாக விளக்கம் கொடுக்கும் அபிசேக் ..ஒரு வார்த்தை அண்ணே உங்க சைட்டை நான் ஆட்டைய போடுகிறேன் என்று சொல்லியிருந்தா நான் வேண்டாம் என்றா சொல்லபோறேன்.

பலர் நான் மன்னிப்பேன் ..என்று என் மேல் உள்ள நம்பிக்கையில் சொல்லியிருக்கிறார்கள் . நான் ஒன்றும் சர்ச்சில் பாவ மன்னிப்பு வழங்கும் பாதர் அல்ல. என் குழந்தைக்கு பாதர்.

சிலர் சொல்கிறார்கள் இது பிரபலம் ஆக செய்யும் ட்ரண்ட் என்று, எல்லோருக்கும் சொல்கிறேன்..பிரபலம் என்றால் என்ன தெரியுமா? முக்காடு போட்டு ஜெயிலுக்கு அழைச்சிக்கிட்டு போனாலும் ஓடி வந்து போட்டோ எடுக்கிறானுங்க பாரு அப்ப சொல்லலாம் நீங்க பிரபலம் என்று.


மூனு மாதத்துக்கு ஒருமுறை டாய்ய்ய் நீதானே குசும்பன் என்று கெட்டப்பை மாத்தினாலும் சரியா கண்டுபிடிச்சு கொடுத்த கடனை கேட்கிறார்கள் அதை தவிர வேறு யாருக்கும் என்னை தெரிவது இல்லை.

ஒரு அட்டுபிகரை கரெக்ட் செய்ய குச்சிமிட்டாய், குருவி ரொட்டி, டீ அதோடு மட்டும் இல்லாமல் டூரிங்டாக்கிஸ் அழைச்சிக்கிட்டு போவது இடைவேளை நேரத்தில் முறுக்கு, கடலை மிட்டாய் என்று வாங்கி கொடுப்பது ஒருவாரம் போவதோடு செலவும் ஆகிறது.

இதே ஒரு உலகபிகரை கரெக்ட் செய்ய கப்பசினோ, பஸ்கின் ராபின்ஸ் ஐஸ்கிரிம் முதல் ஸ்டார்பக்ஸ் காப்பி வரை செலவு செய்யவேண்டியிருக்கு, மாயாஜால், சத்யம் என்று அழைச்சிக்கிட்டு செல்லும் பொழுது பர்ஸ் காலியாகிடுது, இப்படி எல்லாம் கஷ்டப்பட்டு கரெக்ட் செய்வதால் என்ன பலன்? அட பார்றா சூப்பர் பிகருன்னு நம் கூட வரும்பொழுது நாலு பேரு திரும்பி பார்த்தா நமக்கு ஒரு மெதப்பா இருக்கு. இதை தவிர இதில் சாதிக்க ஒன்னும் இல்ல. ஆனா ரொம்ப சுளுவா டக்குபுக்குன்னு யாரோ ஆட்டைய போட்டுவிட்டு நன்றின்னு என் பெயர் கூட போடாம இருப்பது எவ்வளோ கஷ்டமாக இருக்கு தெரியுமா?

இனி இந்த விசயத்தை பற்றி பேசவோ, பாட்டாக பாடவோ விரும்பவில்லை.
நன்றி வணக்கம்! இன்றுடன் இப்படம் கடைசி!

பீ ஹேப்பி!