இயக்குனர் சாமி நடிகை பத்மபிரியாவை அடித்துவிட்டாராம், சரி என்ன இப்ப அதனால என்று நினைக்கிறீங்களா? எல்லோரும் அதை பற்றி பேசும் பொழுது
ஆ ஊன்னா பெண் விடுதலை பெண் அடிமை என்று கூச்சல் போடும் பெண்களும், நடிகைகளும் எங்கே போனாங்க? யார் அடிச்சா என்னா?
ஏன் அதை எதிர்த்து யாரும் குரல் கொடுக்கவில்லை?
யார் அடி வாங்கினா என்னா வாங்கா விட்டால் என்ன நம்மை யாரும் அடிக்காமல் இருந்தா சரி என்று நினைக்கும் பெண்களின் மனநிலையையே இது காட்டுவதாக எனக்கு தோன்றுகிறது. எங்கே இதுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் அடுத்த பட வாய்பு கிடைக்காமல் போய்விடுமோ என்கிற சுய நலம் ஒரு காரணமா?
நரி இடம் போனா என்னா வலம் போனா என்னா தன் மேல விழுந்து புடுங்காம இருந்தா சரி என்று நினைக்கும் மனோபாவம் தான் இதுக்கு காரணமா? அல்லது அவள் நடிகைதானே என்ற இளக்காரமா?
ஒரு போராட்டம் நடத்தி அடுத்தமுறை யாரவது அடிக்க கை ஓங்கும் பொழுது யோசிக்கும் படி செய்து இருக்க வேண்டாமா?
ஏன் ஏன் ஏன்?
டிஸ்கி: இந்த பதிவை குரு ஆசிப் அண்ணாச்சிக்கும் மோகன்தாஸுக்காகவும்!!!
Showing posts with label பெண்ணீயம். Show all posts
Showing posts with label பெண்ணீயம். Show all posts
Monday, October 15, 2007
Subscribe to:
Posts (Atom)