Friday, May 30, 2008

நான் எடுத்த டூலிப்ஸ் புகைப்படங்கள் --- nathas அவர்களுக்கு போட்டியாக

காலையில் Nathas அவர்கள் அவர் எடுத்த டுலிப் புகைப்படங்களை
டுலிப் மலர் கண்காட்சி என்று பதிவிட்டு இருக்கிறார். மிகவும் அருமையாக இருக்கிறது.

அதன் பிறகுதான் ஏன் என்னிடம் இருக்கும் படங்களையும் போட கூடாது என்று இந்த பதிவில் போட்டு இருக்கிறேன்.








குறிப்பு: கடைசியில் இருக்கும் குச்சு மிட்டாய் கல்யாணம் ஆகாத வாலிப வயோதிக அன்பர் குபீர் இலக்கியவாதி தம்பிக்கு.

Wednesday, May 28, 2008

துபாயில் குடும்பத்தோடு வாழ முடியுமா?

இது வரை 22% குடும்பஸ்தர்கள் தங்கள் மனைவி, குழந்தைகளை ஊருக்கு திரும்ப அனுப்பி விட்டார்களாம், வரும் இரு மாதங்களில் அது 45% ஆக உயரும் என்றும் சர்வே சொல்வதாக ரேடியோவில் சொல்லப்பட்டது. ஏன் இப்படி அனைவரும் மனைவி,குழந்தைகளை அனுப்புகிறார்கள் அப்படி என்ன பிரச்சினை?

பிரச்சினை ஒரு வழியில் வந்தால் பரவாயில்லை அனைத்து வழியிலும் வந்தால் என்ன செய்வது முதலில் தங்கும் இடத்துக்கே பிரச்சினை, முதல் அடி ஷேரிங் என்ற முறையில் குறைந்தவாடகையில் தங்கி இருக்கும் மக்களை குறிவைத்து தாக்கப்பட்டு இருக்கிறது. ஒரு பெரிய பங்களாவை(வில்லா) வாடகைக்கு எடுத்து அதை பல ரூம் போல் தடுத்து வாடகைக்கு விட்டு வந்தார்கள் ரியல் எஸ்டேட் நிறுவனத்தார். ஒரு வில்லாவில் குறைந்த பட்சம் 15 குடும்பங்களாவது இருக்கும் இனி அப்படி இருக்க கூடாது ஒரு வில்லாவில் ஒரு குடும்பம் தான் வசிக்கலாம் ஷேரிங் செய்ய கூடாது இன்னும் 10 நாட்களில் காலி செய்யவேண்டும் என்று குறைந்த வாடகையில் வசித்து வந்தவர்களின் வீட்டில் நோட்டிஸ் ஒட்டப்பட்டுவிட்டது.

இங்கு ஷேரிங்கில் இருப்பதுக்கே மாதம் 35,000 தரவேண்டி இருக்கிறது ஒரு ஆள் தனியாக தங்க வேண்டும் என்றால் வில்லாவை வாடகைக்கு எடுக்க அம்பாணிதான் வரவேண்டும்.

மூன்று மாத வாடகை, ஒரு மாத கமிசன் என்று மொத்தமாக பணம் கொடுத்தால் மட்டுமே பிளாட்டில் வீடு கிடைக்கும். எங்கே போவது அவ்வளோ பணத்துக்கு என்று பல கிளம்புகிறார்கள்.


அடுத்த அடி இங்கு துபாயில் குறைந்த வாடகையில் (30,000)க்கு வீடு வேண்டும் என்றால் எல்லோரும் கை காட்டும் இடம் சத்வா என்று அழைக்க படும் இடம். அங்கு எப்படி குறைந்தது 75,000 பேராவது வசிப்பார்கள், குடும்பங்கள், பேச்சிலர் என்று அனைவருக்கும் வீடு கிடைக்கும் பகுதி சத்வா. இப்பொழுது அந்த பகுதி முழுவதையும் இடித்துவிட்டு ஜூமைரா கார்டன் ரெசிஸ்டன்ஸ்கட்ட ஆரம்பிக்க போகிறார்களாம், அதில் குடியேற வேண்டும் என்றால் மாதம் குறைந்தது 75 ஆயிரமாவது வாடகை கொடுக்க வேண்டி இருக்கும்.

அடித்த அடி சாலிக் இது சாலைகளை காரில் கடந்து போகும் பொழுது கொடுக்க வேண்டிய வரி , ஒரு முறை கடக்க 45ரூபாய். குறைந்த வாடகைக்கு ஆசைப்பட்டு தூரமாக இருந்தாலும் பரவாயில்லை என்று ஷார்ஜா சென்ற மக்களிடம் இருந்து பணம் வாங்க செய்யப்பட்டது, இது வரை இரு இடங்களில் இருக்கிறது இன்னும் 2 இடங்களில் வர போகிறது. இதுக்கு சொல்லபடும் காரணம் டிராபிக்கை குறைக்க என்று சொன்னாலும் அது நிஜம் அல்ல. காலியா இருக்கும் பல அடுக்குமாடி குடியிருப்புகளை ஃபில்லப் செய்யவே என்று சொல்லப்படுகிறது. விடுமுறை நாட்கள் அல்லது விடிகாலை நேரங்களில் ஷார்ஜாவில் இருந்து துபாய் வர ஆகும் நேரம் 15 நிமிடம். ஆனால் காலை 6 மணிக்கு ஆபிஸ் கிளம்பினால் துபாய் வர ஆகும் நேரம்2 மணி நேரம் அது போல் மாலையும். 8 மணி நேர வேலைக்கு 4 மணி நேரம் டிராவலிங் டைம். இருந்தும் பரவாயில்லை என்று அங்கு போனவர்கள் ஒரு நாளைக்கு இனி 90ரூபாய்.

அடுத்த அடி விலைவாசி உயர்வு இரு மாதத்துக்கு முன்பு வாங்கிய 20 கிலோ அரிசி மூட்டையின் விலை 598ரூபாய், இன்று 1138 ரூபாய். அதே போல் ஆயில் 4 லிட்டர் பேக் விலை 218 ரூபாய், இப்பொழுது 402 ரூபாய். இப்படி அனைத்திலும் விலைவாசி எகிறி பறக்கிறது. இது போதாததுக்கு WAT இந்த வருட இறுதியில் இருந்துவர போகிறது.

பஸ்ஸில் வேலைக்கு போகலாம் என்றால் குறைந்தது 1 மணி நேரமாவது வரிசையில் நிற்கவேண்டி இருக்கிறது, சரி பணம் கொடுத்து யார் காரிலாவது லிப்ட் போகலாம் என்றால்அப்படி லிப்ட் கொடுப்பது சட்டவிரோதம் , போலீஸ் பிடித்தால் 50,000 ரூபாய் லிப்ட் கொடுத்தவருக்கு அபராதம்.

இங்கு என் ஆபிசில் வேலை பார்க்கும் ஆபிஸ் பாய் 1500 ரூபாயில் சாப்பிட்டு கொண்டு இருந்தவர் இப்பொழுது மாதம் 3000 வருவதாகவும் , வாடகை (ஒரு பெட் ஸ்பேஸ்)3500ல் இருந்துஇப்பொழுது 5000 ஆகிவிட்டதாகவும் சொல்கிறார் அவருடைய சம்பளம் 15,000ரூபாய். இவர் தங்கி இருக்கும் இடத்தில் ஒரு அறையில் குறைந்தது 20 பேர் இருப்பார்களாம் அனைவருக்கும்ஒரே ஒரு பாத் ரூம் காலை 3 மணியில் இருந்து ஒவ்வொருவருக்கும் 15 நிமிடம் வீதம் ஒதுக்கபடுமாம், போய் குளித்துவிட்டு வந்து படுத்து தூங்குவாராம் முன்பு 9,000 ஆயிரம் வீட்டுக்கு கொடுத்துவந்தவர் இப்பொழுது 6,000 கூட அனுப்ப கஷ்டமாக இருக்கிறது என்கிறார்.

இங்கு சுமாரான வேலையில் இருக்கும் என்னை போன்ற ஆட்களுக்கு 45,000 வரை கொடுக்க படுகிறது, அது தனியாக இருக்கும் பொழுது போதுமானதாக இருந்தது எல்லா செலவும் 20,000 முடித்து25 மிச்சம் செய்யமுடிந்தது ஆனால் இனி குடும்பத்தோடு இருக்கவேண்டும் என்றால் செலவே 40,000வரை ஆகிவிடும்.

ஒரு சிறு பட்ஜெட் (குடும்பத்தோடு இருக்க) : சம்பளம் 4000 Dhs

வீட்டு வாடகை ஷேரிங்கில்(ஷார்ஜாவில்)-- 1500 Dhs (தனி வீடு என்றால் 2500 Dhs, சிங்கில் பெட் ரூம் வீடு என்றால் 3000 Dhs ஆகும்)
வாட்டர் & எலக்ட்ரிசிட்டி -- 200 Dhs
சாப்பாடு -- 500 Dhs
டிராண்ஸ்போர்ட் -- 600 Dhs
போன் -- 150 Dhs
இதர செலவுகள் -- 200 Dhs
--------
மொத்தம் 3150 Dhs

(1 Dhs = 11.65 Rs)

(அப்பாடா எவ்வளோ ஒரு பொறுப்பா பதிவு போட்டு இருக்கேன், கல்யாணத்துக்கு பிறகு குசும்பனுக்கு பொறுப்பு வந்துடுச்சுன்னு பாராட்டு மழைய ஆரம்பிங்க, வீட்டுல காட்டனும்ல்ல)

Tuesday, May 27, 2008

சென்னை பதிவர்களை எந்த எந்த விளம்பரத்தில் நடிக்க வைக்கலாம்??? + கிசு கிசு

போட்டோவில் மட்டுமே பார்த்து இருந்த பால பாரதியை நேரில் பார்க்கும் பொழுது மிகவும் அழகாக இருக்கிறார். அவருக்கு 45 வயது என்று யாராலும் சொல்ல முடியாது. இவரை கோத்ரேஜ் ஹேர் டை அல்லது கார்னியர் கலர் நேச்சுரல்ஸ் விளம்பரத்துக்கு உபயோகபடுத்திக்கலாம்.

லக்கி மிகவும் கெச்சலாக இருக்கிறார் இவர் பேசும் பேச்சில் சென்னை வாடை இருக்கிறது. இன்னும் கொஞ்சம் இவர் உடம்பு குறைஞ்சா எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்ற விளம்பரத்தில் நடிக்க வைக்கலாம்.

ஜ்யோவ்ராம் சுந்தர் இவரை சூரியன் மறைந்த பின்பு பார்த்ததால் எவ்வித பிரச்சினையும் இன்றி இவர் முகத்தை பார்க்க முடிந்தது கிளார் அடிக்கவில்லை, இவரை ஆயுர்வேதிக் ஹேர் டானிக் விளம்பரத்தில் நடிக்கவைக்கலாம்.

(இவரை பார்க்கும் பொழுது எல்லாம் ஹேராமில் கமல் பிரண்டாக நடித்து இருப்பவர் போல் இருக்கிறார் ஷாருக் அல்ல .

சந்தோஷ் இவரை பஞ்சதந்திரத்தில் இதயத்தில் ஓட்டை என்று நடித்து இருக்கும் குழந்தைக்கு அண்ணனாகவும் அல்லது அமுல் பேபி, செரிலாக் போன்ற விளம்பரங்களில் நடிக்கவைக்கலாம்.

வரவனையான் பார்க்க குட்டி வில்லன் போல் இருப்பதால் இவர் ரிஜெக்டெட்

இந்த விளபரத்தை எல்லாம் எடுக்க போவது அகில உலக தமிழன் டீவி புகழ், குறும்பட வித்தகர், நெடுந்தொடர் பிதாமகன் அகில உலகத்தையே தன் பெரும் பதிவுகளால் பயமுறுத்திவைத்து இருக்கும் ஹாலிவுட் டைரக்ட்டர் உண்மை தமிழன்.





கிசு கிசு

பெல்ட்டால் அடிப்பேன், உருட்டு கட்டையால் அடிப்பேன் என்று பதிவில் சண்டை போட்டுக்கிட்டு இருந்த இருவரும் சந்திப்பு முடிந்ததும் இருவரும் கிளாஸ்மேட் ஆகிவிட்டனர். கேட்டால் அது கருத்து மோதல் அது வேறு இது வேறு என்று சொல்கிறார்கள்.

சரியாக 100% தப்பா ஜோதிடம் சொல்வார் என்று சொல்லபடும் பதிவர், அவர் பெயர் கூட மான் என்று முடியும் அவர் என்னை பார்த்து சரியாக 100% தப்பா உங்க கல்யாணம் அரேஞ்சுடு மேரேஜ் தானே என்றார். பின்பு நான் இல்லை என்றதும் இல்லை நானா உங்க கல்யாணம் லவ் மேரேஜா என்று கேட்க கூடாது என்பதற்கா இப்படி சொன்னதாக சமாளித்தார்.

அதிஷ்டபார்வை பதிவருக்கு கல்யாணம் ஆகி இரு குழந்தை இருப்பதாகவும்
வீட்டில் மதுரை ஆட்சி என்றும் பாபா என்பவர் சொன்னார்.

பைத்தியகாரன், ஆடு மாடு எல்லாம் சீரியஸ் ஆசாமிகளாக இருப்பதால் அவுங்களுக்கு மாப்பு.

Friday, May 23, 2008

நன்றி + கிர்ர்ர்ர்ர்ர் + அடி உதை + சந்தோசம் = விடுமுறை

நன்றி
இங்கிருந்து ஊருக்கு போனவுடன் என்னையும் சந்திக்க வந்து இருந்த அனைத்து சென்னை பதிவர்களுக்கும் ஏற்பாடு செய்து இருந்த அழகு குட்டி பாலபாரதி + லக்கிக்கும் நன்றி.

கல்யாணத்துக்கு நேரில் வந்தும், தான் வரமுடியாவிட்டாலும் தன் மனைவி, மாமா போன்றவர்களை அனுப்பியும் ,போனிலும் வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி.

உங்கள் வாழ்த்தும் அன்பும் எங்களை வளமோடு வாழவைக்கும்.

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்

சொந்த காரங்க வீட்டுக்கு கல்யாண பத்திரிக்கை கொடுக்க போனா பொண்ணு நம்ம சாதி இல்லையாமே என்று கேட்கும் பெருசுங்களும், அப்பா, அம்மாவிடம் வீட்டு பண்ணையாளா வேலை பார்த்தவர் பொண்ணு எங்கசாதியாமே! அந்த ஊரில் எனக்கு சொந்த காரங்க இருக்காங்க பார்க்க போனா அந்த பொண்ணும் எனக்கு சொந்தமா வருவாங்க போல என்று சொல்லி அவர் இனி நீங்களும் எனக்கு சொந்தம்தான் என்று சொல்லாமல் சொல்லிஅம்மாவை டென்சன் ஆக்கி விட்டு இரண்டு மூன்று நாள் கல்யாணவேலையை நிறுத்திவிட்டு போன பெருசுங்க இவுங்களால் ஆன டென்சன் கொஞ்சம் நஞ்சம் இல்லை.இது முதல் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

அட என்ன கொடுமைங்க எந்த டீவி சேனலை திருப்பினாலும் ஆட்டம் ஆட்டம் ஆட்டம் இதுக்கு ஒரு முடிவே கிடையாது போல. இது அடுத்த கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்அட டீவி நிகழ்ச்சிகள் தான் இப்படி என்றால் இடையில் வரும் விளம்பரங்களும் கும்பலாக ஆட்டம் தான் இதை முதன் முதலில் சென்னை சில்க்ஸ் ஜிகு ஜிகு ரயிலு என்று ஒரு பத்து ”ஜிகிடிங்க” ரயில் ஓட்டியதாக நினைவு (ம்ம் அந்த ரயிலில் ஒரு சீட்டையாவது புக் செய்ய முடியுமா என்று அப்ப அப்பாவியா கேட்டுக்கிட்டு இருந்தேன்).

இப்ப வரும் கும்பலோடு ஆட்டம் விளம்பரங்களில் சம்மர் என்றால் ஜாலிக்கே சரவணா சாப்பிங் ஜாலிக்கே என்று பச்சை கலர் குட்டை பாவாடையை லேசாக கையில் பிடித்துக்கொண்டுஆடும் பெண்கள் விளம்பரமும். பாம் பாம் (இப்படிதான் கடைசியா சவுண்ட் வருது),
ஸ்ரீதேவி டெக்ஸ்டைலுக்கு ஒரு இட்டலி குண்டனோடு 3 பெண்கள் ஆடும் ஹாட் மச்சி ஹாட் விளம்பரமும் அருமையாக இருக்கு என்ன அந்த இட்டலி குண்டன் இரண்டு பெண்கள் ஆடும் இடத்தை ஆக்கிரமிச்சதால் கொஞ்சம் வருத்தம் தான்.

எந்த ஊருக்கு போனாலும் அந்த ஊர் பஸ் ஸ்டாண்டு அருகில் இருக்கும் சுவர்களில் உங்கள் ஊரில் அதிரடியாய் தோன்றுகிறார் J.K. ரித்தீஸ் என்று எல்லா இடத்திலும் விளம்பரம்.உலக காவியம் கானல் நீர் என்ற படத்தில் நடிச்சிட்டு இவரு கொடுக்கும் அலப்பரைக்கு அளவே இல்லை. யாராவது உங்க ஊரில் அதிரடியாய் தோன்றினாரா என்று சொல்லுங்கப்பா.

அடி அடி அடி

வெள்ளி அன்று ஊருக்கு போன நான் ஞாயிறுதான் சென்னை பதிவர்களை சந்திக்க முடியும் என்று லக்கி சொன்னதால் இரண்டு நாட்கள் நண்பர்கள் ரூமில் தங்கி இருந்தேன்,அங்கு அவர்களிடம் டாய்லெட் போய்விட்டு வந்து என்ன கொடுமை டா பாத்ரூமுல கூட ஏசி இல்ல பரவாயில்லை அட்ஜெஸ் செஞ்சுக்கிறேன் அட்லீஸ்ட் சிட்டிங் பேசினுக்காவதுஏசி வையுங்க ரொம்ப அங்க வேர்க்குது என்று சொல்லி வாங்கிய அடி.

கோல்ட் பிளாக் கிங்ஸ் வாங்கி ஊதும் நண்பனிடம் இது எல்லாம் எங்க ஊரில் பீடி என்று சொல்லி அடி வடிவேலு மாதிரி சொல்லி முடிக்கங்காட்டியும் சட சட சடன் அடி மழை.

ஆமாம் படுத்து இருக்கும் பொழுது கொய்ங்ங்ங்ங் என்று சத்தம் கொடுத்துக்கிட்டு ஒரு பூச்சி சுத்தி வருதே இது பேரு என்னா இது கடிச்சா ஏதும் வருமா என்று அப்பாவியா கேட்டா கூட அடிக்கிறானுங்க. எல்லாத்துக்கும் கோப படுறானுங்க கோப கார பசங்க. ச்சே என்ன உலகம் இது.

சந்தோசம்

ச்ச்சீ போங்க வெட்கமா இருக்கு.

Monday, May 19, 2008

ம்ம்ம்ம் என்னத்த சொல்ல... திரும்பி வந்துட்டேன்!!!

சத்தியமாக இந்த படத்துக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை. யாராவது வந்து தன்னிலை விளக்கமா என்று கேட்டீங்க நல்லா இருக்காது ஆமா.



சூதுவாது தெரியாம பூனை கை நீட்ட கை பிடிக்க பட்ட பூனை.


இதுக்கு மேல என்ன நடந்துச்சுன்னு சொல்லனுமா?






வீடு தொடைக்க விட்டாலும் கொடுக்கிற போஸுக்கு எல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்லை.

டிஸ்கி: என்னோட புரோபைலில் இருக்கும் பூனைக்கும் இதுக்கும் பல வித்தியாசங்கள் இருப்பதால் இது நான் இல்லை.