Monday, December 31, 2007

என்ன என்ன நடந்தால் 2008 வலைபதிவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்!!!

வரும் ஆண்டில் நம் வலைபதிவர்கள் இப்படி அறிவித்தால் எப்படி இருக்கும்.

இனி நான் புனைவு கவிதையோ அல்லது புரியாத கவிதையையோ எழுத போவது இல்லை என்று முடிவு எடுத்து இருக்கிறேன் என்று அய்யனார் அறிவித்தால்.

இனி வரும் வருடத்தில் டாக்டர்.கவிதாயினி அழுவாச்சி காவிய கவிதை எழுதமாட்டேன் என்று அறிவித்தால்.

தம்பி உமா கதிர் இனி பஸில் பயனம் செய்யும் பொழுது யாருடனும் பேசமாட்டேன் என்றால் (அப்படி சொன்னாலே போதும் பதிவு எதுவும் வராது).

ஓசை செல்லா இந்த வருடமாவது ஒரு சொக்கா தச்சு போட்டுக்கிட்டு கண்ணாடியை கழட்டி ரொம்ப நாட்களாக வெறும் கண்ணாடியோடு நின்றுகொண்டு இருக்கும் காந்தி தாத்தாவுக்கு மாட்டிவிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுப்பேன் என்று சொன்னால்.

நச் போட்டி முடிந்த பின்பும் "நச்சு" கதை எழுதிக்கொண்டு இருக்கு சிறுகதை சூறாவளி கோவி.கண்ணன் இனி கதை எழுத மாட்டேன் என்று சொன்னால்.

ஒரு நாளாவது யோனி, குறி என்ற வார்த்தை இல்லாத தமிழ்மணத்தை கண்டால்

எங்கேயாவது ஒரு இடத்திலாவது பதிவரை வம்புக்கு இழுக்காமல் பின்னூட்டம் இடுவேன் என்று வவ்வால் சொன்னால்.

பொங்கலில் அபி அப்பா "கள்" எடுப்பதை நிறுத்துவேன் என்று சொன்னால்

ஸ்டேட்டஸ் மெசேஜில் இனி புரியாத கவிதை போட்டு கலவரபடுத்த மாட்டேன் என்று ராம் சொன்னால்.

தினம் ஒரே ஒரு பதிவு மட்டும் குட்டீஸ் போட்டால்...

மின்னுது மின்னல் வேறு பெயரில் இனி எழுதமாட்டேன்(??) இனி பழயபடி திரும்ப அனானிபிளாக்குக்கே வருவேன் என்று சொன்னால்

வீட்டுக்கு ஒரு மரம் போல எல்லோருக்கு ஒரு விருது என்று தமிழ்மணம் அறிவித்தால்.

(நீங்களும் பின்னூட்டத்தில் வேறு ஏதும் இருந்தால் சொல்லுங்க:)

இப்படி எல்லா மற்றவர்கள் சொல்வது இருக்கட்டும் நீ என்னா சொல்ல போகிறாய் என்று கேட்க்கும் நண்பர்களுக்கு ஒரு அறிவிப்பு...
.
.
.
.
.
.
.
.
.
.
.


இனி நான் கோட்டு போட்டு போட்டோ புடிக்க மாட்டேன் என்று உங்களுக்கு எல்லாம் மகிழ்ச்சியான செய்தியோடு இந்த வருட வாழ்த்தையும் சொல்லிக்கிறேன்.

நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் பெற்று ஓங்கி வாழ்க! வாழ்க வளமுடன்.

Tuesday, December 25, 2007

இதை படிக்கும் பலருக்கு காதில் புகை வரலாம்!!!

இதோ இந்த பதிவை படிக்கும் பலர் காதில் புகை வரலாம், அப்படி பட்ட நல்லவர்கள் இந்த பதிவை படிக்காமல் இருப்பது நல்லது!!!

இந்த இசான் அவஸ்தி இருக்கானே இந்த இசான் அவஸ்தி அதாங்க தாரே ஜமீன் பர் படத்தில் நடிச்சு இருக்கானே என்னா நடிப்பு நடிச்சு இருக்கான். அவனை ஒரு முறை பார்த்தால் போதாது என்று நேற்று திரும்பவும் போய் இரண்டாம் முறையாக பார்த்துவிட்டு வந்தேன். என்னா நடிப்பு என்னா நடிப்பு!!!


காலை 5 மணிக்கு பரபரப்புடனும், மிகுந்த டென்சனுடனும் எழுந்து மிசின் போல கட கட என்று ஆபிஸ் கிளம்பும் அப்பா,காலை 6 மணிக்கு ஒரு கடி பிரட், ஒரு வாய் பால் ஒரு கையில் புத்தகம் என்று டென்சனாக இருக்கும் அண்ணனுக்கு மத்தியில் 7 மணிக்கு மிகவும் சோம்பலாக படுக்கையில் இருந்து எழுந்திருக்க மனசு இல்லாமல் டிக்கிய மட்டும் தூக்கிட்டு தலையை தலையனையில் புதைத்து தூங்கும் பையனை குண்டாஸ் சட்டத்தில் கைது செய்து தூக்கிட்டு போவது போல் டிக்கியில் ஒரு போடு போட்டு குண்டாங்கட்டியா தூக்கிட்டு போய் பாத்ரூமில் அமுக்கும் பொழுதும் சவரில் தண்ணியை திறந்துவிட்டு மேலே விழும் தண்ணியோடு போடும் சண்டையாகட்டும், ஊரில் இருந்து வந்த அப்பாவிடம் என்ன எனக்கு வாங்கி வந்த என்று கேட்டுவிட்டு பழத்தை கழுவாமல் வாயில் வைப்பது போல் காட்டும் பால்வா ஆகட்டும், அவன் நடிப்பு அருமை.

3+9=3 என்று மட்டும் விடை எழுதி விட்டு மீதியை சாமிக்கு விட்டுவிட்டு பிந்தாஸ் என்று சொல்லும் பொழுதும் அண்ணனிடம் ஸ்கூலை கட் அடித்துவிட்டேன் என்று சொல்லிவிட்டு போலி விடுமுறை குறிப்பு எழுதி கொடு என்று சொல்லிவிட்டு கண் அடித்து பிந்தாஸ் (ஹிந்தியில் என்ன சொல்கிறான் என்று புரியவில்லை) சப் டைட்டிலில் பயப்படாத! என்று வந்தது!அப்பொழுது அவன் குறும்பு சிரிப்பு அட அடா ...

பெரியவர்கள் நாம் பார்க்கும் பார்வைக்கும் சிறுவர்களின் பார்வைக்கும் எத்தனை வித்தியாசம் அப்பாவின் தோளில் அமர்ந்து ஐஸ் வாங்கி சாப்பிடும் சிறுவன்,தெருவோரம் கூடையில் தூங்கும் சிறுவன், கையை ஊன்றி பல்டி அடிக்கும் குழந்தைகள், தண்ணியை அண்ணாந்து குடிக்கும் ஒருவர், மண்ணை அள்ளி கொட்டும்பொக்கலைன் இயந்திரம், சாரத்தின் மேல் ஏறும் பெயிண்டர் என்று அவன் ஆச்சர்யமாக வியந்து பார்க்கும் பார்வைக்கும் நமக்கும் எத்தனை வித்தியாசம்.அவன் நடிப்பையும் குறும்பையும் பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு!

இதே நம் ஊராக இருந்திருந்தால் தினமும் போகலாம் இங்கு 30 திர்ஹாம் டிக்கெட் என்னசெய்வது, இந்த மாத கோட்டாதான் முடிந்து இருக்கு. அடுத்தமாதமும் போவோம்ல்ல போய்ட்டு வந்து திரும்ப வெறுப்பேத்தும் பதிவு போடும் முன்பு எல்லோரும் பார்த்துவிடுங்க:)))

குறிப்பு:

1)நேற்று படம் பார்க்கும் பொழுது அண்ணாச்சியும் அழுதுவிட்டார் என்பதை சொல்லமாட்டேன்.

2) நண்பர் பினாத்தலார் சொல்லும் பொழுது சின்ன பையன் நீயே படத்தை பார்த்துவிட்டு இப்படி பீல் செய்யும் பொழுது ஒரு வயதான அப்பாவாக என்னை நினைத்து பார் நான் எப்படி பீல் செஞ்சு இருப்பேன் என்று சொன்னார். 100% உண்மையான வரி அது.நிச்சயம் எல்லா அப்பாவும் பாருங்க குடும்பத்தோடு.

2) ஹிருதிக் ரோசன், ஐஸ்வர்யா ராய் நடித்து இருக்கும் அக்பர் என்று ஒரு படம் டிரையிலர் போட்டாங்க சும்மா மிரட்டி இருக்கானுங்க!

இன்னும் ஒரு முறை கூட படம் பார்க்காத தம்பி உமா கதிர், தம்பி கோபி, G3 அவர்களுக்கு இந்த பதிவை டெடிக்கேட் செய்கிறேன்!!!

ஐயோ என்னை அடிக்காதீங்க! நான் இனி எழுதமாட்டேன்!!!

டேய் வெளியே வாடா ங்......அடிங்க! இப்ப வெளியே வரப்போறீயா இல்லையா. எங்கிருந்தோ பறந்து வந்த கல் ஒன்று நான் ஒளிந்து இருந்த அறை ஜன்னல் கதவை பதம் பார்க்க சிலு சிலு என்று நொறுங்கி விழுந்தது கண்ணாடி. இன்னும் சத்தம் அதிகமாகி கொண்டே போனது. உள் பக்கமாக பூட்டி இருந்த கதவை யாரோ உடைப்பது போல் சத்தம், ஆம் நினைத்தது சரிதான் கதவு உடைந்துவிட்டது டேய் எங்கிருக்கிறான் என்று தேடுங்கடா அவனை!

காலடி சத்தங்கள் அதிகமாக கேட்டது ஒரு ஐம்பது அறுபது பேர் இருப்பாங்களோ! இதயம் படபட என்று அடித்துக்கொண்டது! நான் ஒளிந்து இருக்கும் மேஜை அருகேயும் காலடி சத்தம் கேட்டது கரெக்ட்டாக பீம் பாய் போல ஒருவன் என் முன்பு வந்து இங்க இருக்கிறான் பாருங்க டா என்று சத்தம் போட.

எல்லோரும் அப்படியே அலேக்காக தூக்கி போட்டு பந்தாடினார்கள், அம்மா அடிக்காதீங்க ஐய்யோ அடிக்காதீங்க ஸ்டாப் ஸ்டாப்!

அடிங்க வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் எதுக்கு அடிக்கிறீங்க என்று சொல்லிட்டு அடிங்க!!!

அதுல தருமி , ஆசிப், ஜெசிலா ,முத்துலெச்சுமி , இம்சை அரசி வந்தாங்க அதில் ஒரு நியாயம் இருந்துச்சு, அய்யனார் வந்தாரு பொருத்துக்கிட்டோம், அவுங்க எல்லாம் உருப்படியா எழுதி இருக்காங்க வந்தாங்க? நீ என்னா உருப்படியா எழுதி இருக்க அதில் வர? நீ எப்படிடா அதுல வரலாம்?

நான் எப்பங்க அதில் வந்தேன் நீங்க வேற யாரையோ அடிப்பதற்கு பதில் என்னை அடிக்கிறீங்க என்று சொல்ல அவர்கள் காட்டிய ஆதாரம் கீழே!!!

ஐயோ ஆனந்தவிகடனில் வந்ததுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை அதுல எதோ ஒரு சதி இருக்கு ஐய்யோ அடிக்காதீங்க. என்னை நம்புங்க இனி நான் உருப்படியா எழுதுறேன்.

டேய் இத பாருடா இத்தனை அடிவாங்கியும் இனி ஒழுங்கா எழுதுறேன் என்று சொல்லுறான் அடி பத்தாது போல இன்னும் நொங்குங்கடா!!!

ஐயோ அடிக்காதீங்க இனி எழுதவே மாட்டேன். விட்டுவிடுங்க.

அடிச்சவுங்க போனில் தம்பி இனி எழுதவே மாட்டேன் என்று சொல்லிட்டான் விட்டு விடலாமா? என்று யாரிடமோ கேட்க. அவன் இப்படிதான் சொல்லுவான் பத்தாது இன்னும் நாலு சாத்து சாத்துங்க என்று கட்டளை வர, சரி தம்பி என்றார்கள்!!!

தம்பீபீபீ நீயா?

டேய் நல்ல கனவா? மூஞ்ச கழுவிட்டு வீட்டுக்கு போ ஆபிஸ் டைம் முடிஞ்சு போச்சு என்று சகா சொல்ல கிளம்பினேன்.
குறிப்பு: போனில் வாழ்த்து சொன்ன நண்பர் உன் எல்லா பதிவையும் மொக்கை என்று சொல்லிடமுடியாது நிறைய நல்ல பதிவும் எழுதி இருக்க என்று சொல்ல?அது எப்படி எனக்கு தெரியாம நடந்துச்சு என்று நான் கேட்க?அவர்: நீ எழுதிய ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் துபாய் விசா பற்றி எழுதியது அப்புறம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் துபாய் விசா பதிவு அப்புறம் ம்ம்ம் ம்ம்ம் துபாய் விசா பதிவு இப்படி ரொம்ப யோசிச்சார். அவருக்கு இந்த பதிவை சமர்பிக்கிறேன்.

Saturday, December 22, 2007

தாரே ஜமீன் பர் - படம் அல்ல ஒரு நல்ல கவிதை

தாரே ஜமீன் பர் இதுபோல் ஒரு நல்ல படம் எப்பொழுது பார்த்தேன் என்று நினைவு இல்லை. படத்தின் தலைப்புக்கே என்ன அர்த்தம் என்று தெரியாமல் நானும் அய்யனாரும், வெள்ளி கிழமை படம் பார்க்க போய் டிக்கெட் கிடைக்காமல் சனி கிழமை இரவு 7.30 க்கு முன்பதிவு செய்துவிட்டு வந்தோம். பின்புதான் நண்பர் ஒருவர் மூலம் தெரிந்துகொண்டோம் "சிறு நட்சத்திரம் தரையில்" கிட்டதட்ட மூன்று மணி நேரம் போனது தெரியவில்லை.

கதை:
இசான் அவாஸ்தியாக (Darsheel) அவனுக்கு படிப்பதில் நாட்டம் இல்லை ஒரு வரி கூட தப்பு இல்லாமல் படிக்க எழுத வராது. 3+9= 3 என்று பதில் எழுதும் அவன், அவனுக்கு என்று ஒரு உலகத்தில் இருக்கிறான். மூன்றாம் வகுப்பையே இரண்டு முறை படிக்கிறான் இந்த முறையும் அவனை பாஸ் ஆக்க முடியாது அவனுக்கு மனதளவில் பிரச்சினை இருக்கிறது அதுக்கு என்று சில சிறப்பு பள்ளிகூடங்கள் இருக்கிறது என்று தலைமை ஆசிரியர் சொல்ல கோவம் அடையும்அவன் அப்பா.

அவன் அண்ணன் போல அனைத்திலும் முதல் மார்க் வாங்கவேண்டும் இப்படி இருந்தால் உருப்படாமல் போய்விடுவான் என்று போர்டிங் ஸ்கூலில் சேர்த்துவிடுகிறார். இது தனக்கு கொடுக்கப்பட்ட தண்டனையாக கருதும் அந்த சிறுவன் யாரிடமும் ஒரு வார்த்தையும் பேசாமல் தன்னைதானே தனிமை படுத்திக்க ஆரம்பிக்கிறான், அந்த பள்ளிகூடத்துக்கு தற்காலிக ஓவிய ஆசிரியராக வரும் நிக்ஹும் சார் (அமீர்கான்) ஏற்கனவே டுயுலிப்ஸ் என்ற மூளைவளர்ச்சி குறைந்த குழந்தைகளுக்கு பாடம் நடத்தியவர் அவர்.அதனால் இந்த சிறுவன் இப்படி இருப்பது ஆபத்து என்று உணர்ந்து அவனிடம் இருக்கும் தனி திறமையை வெளிக்கொண்டுவருகிறார்.

மிகவும் எளிமையான கதைதான் ஆனால் அதை படம் ஆக்கி இருக்கும் விதமும் அனைவரின் மிக இயல்பான நடிப்பும் படம் முடிந்தும் வெகு நேரம் ஆகிறதுஅந்த அனுபவத்தில் இருந்து வெளிவர.

முதல் பாதி படம் முழுவது அந்த சிறுவனின் குறும்புகளால் கலகலப்பாக ஓடுகிறது இடைவேளைக்கு பிறகு சில இடங்களில் அழும் அளவுக்கு அவனின் நடிப்பு இருக்கிறது.

நிச்சயமாக குழந்தைகளோடு அப்பா,அம்மா பார்க்கவேண்டிய படம்.
ஒரு அமைதியான நூலகத்தில் போய் அருமையான கவிதை புத்தகத்தை படித்த உணர்வு இருக்கிறது, படம் பார்த்து முடித்தபின்.
அந்த சிறுவன் இந்தவருடம் விருது வாங்க போவது நிச்சயம், மிக மிக இயல்பான நடிப்பு.

தமிழில் ஏன் இதுபோல் ஒரு படம் வராது!!! என்ன என்ன இல்லை?

முதல் காட்சியிலேயே ஹா ஹா ஊ என்று சத்தத்தோடு காலை தலைவரை தூக்கிவைத்து உடம்பில் இருக்கும் எல்லா பார்ட்டையும் பார்ட் பார்ட்டாக காட்டிவிட்டு வேறு வழியே இல்லாமல் முகத்தை காட்டும் ஹீரோ அறிமுக காட்சி இல்லை, அமீர்கான் அறிமுகம் ஆகும் பொழுது இடைவேளை.

ஹீரோ அடிபட்டு ஆஸ்பிட்டலில் படுத்துகிடந்தாலும் கணவில் வரும் பாட்டு இல்லை, வரும் பாட்டு அனைத்தும் அந்த சிறுவனின் மனநிலையை அல்லது எல்லா குழந்தைகள்மனநிலையை சொல்வதாகவே இருக்கிறது.

அகலமான ரோடு இருக்க துக்கினியோண்டு டிரஸ் போட்டுக்கிட்டு ரோட்டில் நடக்காமல் நிறுத்தி இருக்கும் காரின் மேல் ஏறி போகும் ஹீரோயின் இல்லை.

அழுது ஆர்பாட்டம் செய்து ஒப்பாரி வைத்து எனக்கும் நடிக்கதெரியும் என்று காட்டும் ஹீரோவாக அமீர்கான் இல்லை, கண் ஓரத்தில் தளும்பும் கண்ணீராலேயே மனுசன் நம்மை கலங்கவைத்து விடுகிறார்.

முக்கியமாக படத்தில் காதுகிழிய ஏய் ஏய், உய், டுமீல் , டமார் இது போன்ற சத்தம் எதுவும் இல்லை.

தேவை இல்லாத காமெடி இல்லை.

பஞ் டயலாக் இல்லை, ஹீரோ புகழ் அடுத்த முதல்வர், அடுத்த மேயர்,சேர்மேன், ஊராட்சி தலைவர் என்று எல்லாம் புகழ் பாடும் பாட்டு இல்லை.

எல்லாத்தையும் விட முக்கியமாக கல்யாண காட்ச்சிக்கு கூட ஜட்டி & பிராவோடு வலம் வரும் ஹீரோயின் இல்லீங்கோ!!!!

இப்படி எதுவுமே இல்லாதது எப்படி தமிழ் படம் ஆகும். ஆகையால் இதுபோல் தமிழ்படம் வாராது.

டிஸ்கி: ஹிந்தியே தெரியாத எங்கள் ரெண்டு பேருக்காக இங்கிலீஸ் சப் டைட்டில் போட்ட நல்லவனே நீ நல்லா இருப்ப!

Friday, December 21, 2007

கார்டூன் குசும்பு + லொள்ளு பாட்டு டபுள் டமாக்கா!!!












பாட்டு:
ஆத்துல அன்ன கிளி தேச்சு நீ மஞ்ச குளி...

அடிங்க குளிக்கிறத பார்க்கிறது மட்டும் இல்லாம தேச்சு குளின்னு பாட்டுவேறயா?
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?
ம்ம்ம் கூட உங்க அண்ணன், அப்பா யாரும் வருகிறார்களா என்று பார்க்கத்தான்.

கண்ணா மூச்சி ஏன டா கண்ணா?
கண்ணன் : சும்மா ஒரு டைம் பாஸ்க்கு தான்.

லூசு பெண்ணே லூசு பெண்னே லூசு பையன் உன் மேலதான் லூசா சுத்துறான்.
பெண்: டேய் மேல சுத்துற லூசு பையா கொஞ்சம் வேகமாக சுத்துடா காத்து வர மாட்டேங்குது!!!
அக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்!!!
இப்படியே சத்தம் போட்டு பாடிக்கிட்டு இரு எல்லாரும் காலி செஞ்சிட்டு போய்விடுவாங்க அப்புறம் தனியா இருக்கலாம்!!!

நாங்க கொடுக்கும் விருது:
இந்த வருட சிறந்த காமெடி விருதை வெள்ளை அனானி அவர்களுக்கும்
சிறந்த கவிஞர் விருதை சிகப்பு அனானிக்கும்
சிறந்த கதை ஆசிரியர் விருதை குட்டை அனானிக்கும் கொடுக்கிறோம்!!!
ஏன்னா பதிவர் எல்லோரும் நடுவரா ஆயிட்டாங்க, அதனால விருது வாங்க ஆள் இல்லீங்கோ!!!!

Thursday, December 20, 2007

பில்லா 2007 சொட்டை மனோகர் டவுட்?

பில்லா படத்தை பற்றி எல்லோரும் அலசி காயப்போட்டு விட்டாங்க. இதுக்கு மேல சொல்ல ஒன்னும் இல்லை என்று ஆனபிறகு நாம என்னத்தை சொல்வது! பில்லா படம் சுமாராக இருக்க என்ன காரணம் என்று பாக்கலாம்.

கதை ஒன்றும் புதிய கதை இல்லை என்பதால் கதை பற்றி விமர்சனம் தேவை இல்லை.


படம் சுமாராக இருக்க காரணம் அஜித்தின் கடின உழைப்பு என்றால் மிகையாகாது. அப்படி என்னா உழைப்பு என்று நீங்ககேட்கலாம்.

1) வித விதமான கோட் ஷூட் போட்டுக்கிட்டு f tvயில் பசங்க கேட் வாக் போவாங்க (அத எப்ப நாம பார்த்து இருக்கோம், பொண்ணுங்க ஷோவுக்கு நடுவே விளம்பரம் போடுவாங்கஅப்ப பார்த்தது)அது போல நடக்க கடின பயிற்ச்சி எடுத்து இருக்கார்.

2) அதிகம் பேசாமல் இருந்து இருக்கிறார். (சிட்டிசனில் வரும்: எலே கலெக்ட்டரூரூரூ , நான் தானா வளர்ந்த காட்டு மரம் போன்ற தன் டயலாக் பேசி தன் திறமையை காட்டாமல் இருக்கிறார்)

3) பார்க்க அஜித் அழகாக இருக்கிறார்.

படத்தில் எனக்கு பிடித்தவை:

1)செய் பாட்டுக்கு டான்ஸ் ஆடும் பெண், ஹீரோயின் நயன் தாராவை விட அழகாக இருக்காங்க.


2)பின்னனி இசை


3)அஜித்தின் நடப்பு (நடிப்பு அல்ல).


சொட்டை மனோகர் டவுட்:


1)அஜித் அடிக்க கேன் கேன் என்று கேட்கிறீங்களே கிருஸ்னாயில் வாங்கவா, இல்லை பெட்ரோல் வாங்கவா?


2) ஏம்மா நயன் ஏதோ முத்து குளிக்க போவது போல் உடம்ப ஒட்டி டிரஸ் போட்டு இருக்கீங்களே அது எதுக்கு?


3) பெண் டிரைவ் பெண் டிரைவ் என்று சொல்லி ஒரு பிளாஸ்டிக் டப்பாவை தேடுறீங்க பெண் டிரைவ்வை தேடனும் என்றால் ரோட்டில் போய் நின்னா பெண் டிரைவை நிறைய பார்கலாமே!!!
கருத்து கந்தசாமி:

அஜித் கடைசியா படத்தில் நீங்க சொல்றீங்க I am wired ஆனா படம் பார்க்கும் மக்கள் we are very tired என்று சொல்றாங்களே அது ஏனுங்கோ!!!

Monday, December 17, 2007

உண்மையை சொல்லும் நேரம் இது!!!

நேற்று பிறந்தநாள் மிக சந்தோசமாக அனைவருடைய வாழ்த்துக்களுடன் ஒரு நாள் ஓடி போனது தெரியாமல் ஓடி போனது.

வாழ்த்து சொன்ன நண்பர்கள், சொல்லனும் என்று நினைத்து சொல்ல முடியாமல் போன அன்பு நண்பர்கள். பெயர்களை குறிப்பிட்டு நன்றி சொன்னால் முறையாக இருக்காது. அதனால் எல்லோருக்கும் பல கோடி நன்றி!!

நீங்கள் காட்டிய அன்புக்கும் பாசத்துக்கும் சாதாரனமாக 10000 அல்லது 20000 ரூபாய்க்கு எல்லாம் ட்ரீட் என்று ஒன்றை வைத்து உங்கள் அன்பை சிறுமை படுத்த விரும்பவில்லை!

அப்புறம் எல்லோரும் ஒவ்வொரு வயசை சொல்லி வாழ்த்து சொல்றாங்க சொல்லுங்க ஏன் 80ன்னு கூட சொல்லுங்க ஆனா அப்படி வாழ்த்து சொல்லும் உங்களை விட நான் ஒரு வயதுதான் பெரியவன் என்பதை சொல்லிக்கிறேன். (குட்டீஸ் நீங்க மட்டும் விதிவிலக்கு). எங்க இப்ப சொல்லுங்க எனக்கு எத்தனை வயசு?

அப்புறம் இன்று முதல் வெள்ளி கிழமை வரை பிறந்தநாளை முன்னிட்டு விடுமுறை அறிவித்த அன்பு நண்பன் துபாய் ராஜா (ஹலோ நான் இல்லீங்க) அவர்களுக்கு நன்றி:)

நன்றி நன்றி நன்றி!!

Wednesday, December 12, 2007

நாட்டாமை தீர்ப மாத்தி சொல்லு!!!








கொஞ்சமா லேட் ஆயிட்டா என்ன சொல்லுவாங்க சரி அடுத்த முறை லேட்டா வராத இதுதான் கடைசி எச்சரிக்கை என்று சொல்லுவாங்க! இல்ல என்னா காரணம் என்று எழுதி கொடுத்து அப்பா கிட்ட கை எழுத்து வாங்கி வர சொல்லுவாங்க, ஆனா இந்த PIT நண்பர்கள் குழு ஒரே அடியாக போட்டியே முடிஞ்சு போச்சு என்று சொல்லி பொடரியிலேயே அடிச்சு அனுப்பிட்டாங்க. அப்படி ஒன்னும் பெருசா லேட் ஆகிவிடவில்லை ஜஸ்ட் பத்தே பத்து நாள்தான் லேட்டாக வந்தேன். இது தப்பா?

விழா ஆண்டு விழா மலர் + அதில் இடம் பெற்ற பதிவர்களின் படைப்பு


அழகான முதல் பக்க அட்டை அதில் தித்திக்கும் தமிழோசை எத்திக்கும் ஏற்றமுற என்ற வரியோடு அமீரகத் தமிழ் இணைய நண்பர்கள் ஆண்டு விழா மலர் 2007 யை அருமையாக தொகுத்துஇருக்கிறார்கள் ஆசிப், ஜெஸிலா & காமராஜன். தமிழக பாரம்பரியத்தையும் துபாய் வளர்சியையும் ஒருங்கே காட்டும் விதமாக அழகாக டிசைன் செய்து இருக்கிறார் ஷீலா ஜீவன்.


அமைப்பின் தலைவர் ஜெகபர் எழுதி இருக்கும் புதிய பாதையில் என்ற கட்டுரையோடு துவங்குகிறது மலர் அமைப்பை பற்றியும் அதன் வளர்ச்சியையும் பற்றி தெளிவாக சொல்லி இருக்கிறார்.அடுத்து தொடுவானம் தொலைவல்ல என்று ஆசிப் எழுதி இருக்கும் கட்டுரை புதியவர்களின் வருகையால் புதிய சிகரங்களை நோக்கிய பயனத்தில் தொடுவானமொன்றும் தொலைவல்லதான் என்று சுருக்கமாக சொல்லி இருக்கிறார் ஆசிப் அண்ணாச்சி!


சக்தி தாசன் எழுதி இருக்கும் அன்பான வாழ்த்துகள்


தமிழ் இனி மெல்லச்சாகும்

தமிழ்ப்புலவன் கூற்றுப் பிழையென

தாயகத் தனயர்கள் நீவிர்

தரையினில் புது மொழி தந்திர் ...


என்று ஒரு பக்க கவிதையும் அதன் கீழ் அவரை பற்றிய குறிப்பு கொடுத்து இருக்கிறார்கள்.அதன் பிறகு வலை பதிவர்கள் பலரின் படைப்புகள் இடம் பெற்று இருக்கின்றன.


இந்த புத்தகத்தில் இடம்பெற்ற வலைபதிவர்களின் பெயரும் குறிப்பும்.


உரக்க சொன்னதில்லை நீ ---- பிரேம் குமார்


ஜாலியான சோக கதை ---வா.மணிகண்டன்


ராமரும் சின்ன ராமனும்---- மதுமிதா


விந்தையான யாத்திரிகர்கள் ----- கிரிதரன் ராஜகோபால்


கவிதைகள் ---- அருட்பெருங்கோ


தாய்மை ---ஜெய்புனிஷா ஜெகபர்


உயிர் வருகை ----- பாம்பாட்டி சித்தன்


எரி சக்தி நம் தனி சக்தி --- சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்


கடிதங்களை சேகரிப்பவனின் முதல் கடிதம்--- அய்யனார்


குழந்தைகள் கடக்கும் காலை ----- முபாரக்


வாகன மாசுக்கட்டுபாடு -- சுரேஷ்


மல்லிப்பூக்களும் நிலக்கடைகளும் ----- அனிதா


கவிதைகள் --ப்ரியன்


பதுங்குகுழி ---செல்வேந்திரன்


தூவானம் முடிந்த பூமிப்பெண்--- கென்


சேலம் ரயில்வே கோட்டம் வறட்டு ஜம்பமா? --- நந்த குமார்


மாணிக்கம் பொண்டாட்டி --- உமாகதிர்


சமகால உலகக் கவிஞர்கள்--- ஷாஜஹான்


மழை வாழ்க்கை--- ஷைலஜா


விஷப் பார்வை ----ரசிகவ் ஞானியார்


கனவுகள் வேறு திசை --ஃபக்ருதீன்


நாய்குட்டிகள்---- கிரிதரன்


கனவினில் மரணம் ---மஞ்சூர் ராசா


ஒரு விமானப் பயணம்----- P.B அஹமது முஹைதீன்


அவள் பார்த்தால் சூர்யோதயம்-- மோஹன் தாஸ்


என்றென்றும் அன்புடன் ----அப்துல் காதர்


தாம்பத்யம்--- செல்வராணி சேரன்


சிறந்த நடிகர்----- நஜிமுதீன்


காதலிக்கு காதலனின் உருக்கமான கடிதம்----சா.முகம்மது அபுபக்கர்


யார் திருந்தவேண்டும்---- சரவணன்


பெண் விடுதலை --- ஆசிப் மீரான்


கவிதைகள்--- முத்துகுமரன்


சுகுணா என் காதலி---- ஜெஸிலா ரியாஸ்


கவிதை துளி--- H.பானு ஃபசுல்ஹக்


மனித தர்மம்-----பட்டுக்கோட்டை பாலு


ஒரு கடலாக! ----ப்ரியன்


வலைபதிவு என்றால் என்ன? --- சிந்தாநதி


இதில் அனைவரது புகைபடத்துடன் அவர் அவர்களை பற்றிய சிறு குறிப்பும் இருக்கிறது பின் கடைசி பக்கத்தில் அனைவரது முகவரிகளும் இருக்கிறது.


வலைபதிவர்களை தவிர்த்து பார்தால் தாய்மை கதையும், சேரன் மனைவி எழுதிய தாம்பத்யம் கதையும் அருமை. பின் பல பக்கங்களில் அருட்பெருங்கோ அவர்களின் கவிதை சிதறிக்கிடந்துபடிக்க நிறைவாக இருக்கிறது.


நீ பிறந்த பிறகுதான்

உன் அப்பாவுக்கே

பெயர்வைத்தார்களா?

அழகப்பன் என்று.


என்ற அருட்பெருங்கோ கவிதையும்.


சென்ற வருட வறட்சிக்கே

ஊர் காலியானது தெரியாமல்

இன்னும்

காவல் காத்துக் கொண்டுருக்கிறார்

ஊர் எல்லையில்

அய்யனார்.


என்ற ப்ரியன் கவிதையும் நான் ரசித்தவை.


மிகவும் கஷ்டபட்டு அழகான ஆண்டு விழா மலரை தொகுத்த ஆசிப்க்கும் ஜெஸிலா அவர்களுக்கும் வாழ்த்துகளை சொல்லுவோம்.

Tuesday, December 11, 2007

என்னால் அவள் இரண்டு மாதம் (கொஞ்சம் நான் வெஜ்)

வழக்கம் போல் காலை 8 மணிக்கு ஆபிஸ் வந்து http://www.gmail.com/ என்று அடித்துவிட்டுபின் user name: kusumbuonly password: ****** என்று டைப் செய்து மெயில்செக் செய்வதே முதல் வேலையாக இருக்கும், அதற்கும் காரணம் பிரியாவின் மெயில்.இன்று அவளிடம் இருந்து வந்த மெயிலை பார்த்தவுடன் தூக்கி வாரி போட்டது.

எல்லாம் ஒழுங்காகதான் போய்கொண்டு இருந்தது பிரியாவிடம் இருந்து மெயில் வரும் வரை, நான் யாரோ நண்பர்கள் தான் விளையாடுகிறார்கள் என்று ஆர்வம் காட்டவில்லை, பதிவை பற்றி பாராட்டி மெயில் வந்தால் "நன்றி" என்று ஒரு வார்தையில் பதில் அனுப்புவேன் பின் உங்களிடம் பேச வேண்டும் போன் நம்பர் தரமுடியுமா என்று வந்தது எதுக்கு வீண் செலவு ஆன்-லைனில் வாங்க சாட் செய்யலாம் என்றேன், இல்லை உங்க போன் நம்பர் கொடுங்க என்று பதில் வந்தது பின் நம்பர் கொடுத்த மதியம் +91984......... என்று புதிதாக ஒரு நம்பர் வந்தது எடுத்து பேசினால் நான் தான் பிரியா என்று அறிமுகம் செய்து கொண்டாள் பின் வழக்கமான விசாரிப்புகள் முடிந்த பிறகு ஆன் லைனில் வர சொன்னாள் அதைதானே முன்பே நான் சொன்னேன் என்றதற்கு உங்களிடம் இருந்து எதிர்பார்தது போல் மெயில் வரவில்லை சரி நம்பவில்லை போல அதனால் தான் பேசிவிட்டு ஆன் லைனில் வர சொல்லலாம் என்று சொன்னாள். மனதில் இருந்ததை சரியாக சொன்னாள்.

பின் எப்பொழுதும் முதல் ஆளாக பதிவை பற்றி விமர்சனமும் செய்வாள், காலையில் வந்ததும் முதல் மெயில் அவளிடம் இருந்து குட்-மார்னிங் மெயிலும் அதில் கனிவான விசாரிப்பும் இல்லாமல் இருந்தது இல்லை. நாட்கள் ஆக ஆக வாங்க போங்க போய் வா போ அவள் பக்கம் இருந்து.ஒரு நாள் ஏன் இன்னும் வாங்க போங்க என்றே சொல்லிகிட்டு இருக்கே வாடி போடி சொல்லு என்றாள் இல்லை எனக்கு வராது என்று சொல்ல அப்ப இனி பேசமாட்டேன் என்றாள் சரி என்றேன். கட் செய்துவிட்டு போனாள் பின் ஒரு நாள் முழுவதும் சாட்டும் இல்லை, போனும் இல்லை சரி மறுநாள் வருவாள் என்று விட்டுவிட்டேன் ஆனால் இரண்டு நாட்கள் வேலையாக இருந்ததில் மறந்துவிட்டேன். மறுநாள் "வளிடம் இருந்து போன் வந்தது "பேசமாட்டேன் என்றால் போ என்று விட்டுட்டே இல்ல நல்ல பழக்க வழக்கம் உன்னிடம் இருந்து போன் வரும் இல்லை மெயிலாவது வரும் நினைத்து ஏமாற்ந்ததுதான் மிச்சம்" என்று சொல்லிவிட்டு அழுதாள், எனக்கு என்னமோ போல் ஆனது. நான் சொன்ன சமாதானத்தையும் ஏற்கவில்லை போடா என்றால் அப்பொழுது கவனிக்கவில்லை அதன் பிறகு பெண்களுக்கே உரிதான போடா, பிசாசு, பொறுக்கி என்ற அடை மொழிகளோடு அழைக்க ஆரம்பித்தாள் எத்தனையோ முறை சொல்லியும் நான் வாடி போடி சொன்னது இல்லை இப்பொழுது வா போ என்று சொல்வதோடு சரி.

அன்று ஒரு நாள் சாட் செய்யும் பொழுது ஏதாவது ஜோக் சொல்லேன் என்றாள் எனக்கு சைவ ஜோக் எல்லாம் தெரியாது அசைவ ஜோக்தான் தெரியும் அதை எல்லாம் உன்னிடம் சொல்ல முடியாது என்று சொல்ல பரவாயில்லை சொல்லு என்றாள் அசைவ ஜோக்கில் பேசிக் ஜோக்கான எலி கதையை சொல்ல அதுக்கே விழுந்து விழுந்து சிரித்தாள். இரண்டு மாதம் முன்பு விசா மாற்ற ஊருக்கு வரபோகிறேன் என்று சொல்ல கண்டிப்பாக என் வீட்டுக்கு வரவேண்டும் என்றாள்ஒரு வார லீவில் தான் வருகிறேன்............அந்த ஊருக்கு வருவது என்றால் இரண்டு நாட்கள் ஆகும் முடிந்தால் வருகிறேன் என்றேன் இல்லை நீ வரவேண்டும் இல்லை நடப்பதே வேறு என்றாள்.

ஊருக்கு போய் விட்டு இரண்டு நாள் கழித்து திருப்பதி போவதாக சொல்லி வீட்டில் இருப்பவர்களுக்கு பட்டை நாமம் போட்டுவிட்டு அவள் ஊருக்கு சென்றேன் பஸ் நிலையத்தில் இறங்கியதும் கையில் இருந்த பையை யாரோ பிடுங்க திரும்பினால் நீல கலர் சுடிதாரில் ஒரு பெண் டேய் ஜொள்ளா நான் தான் டா பிரியா என்று சொல்ல முதன் முதலாக அவளை பார்த்தேன் மிக அழகாக இருந்தாள் பின் வீட்டு அழைத்து சென்றாள், வீட்டில் யாரும் இல்லை எங்கே என்று கேட்க எல்லோரும் சித்தப்பா பையன் திருமணத்துக்கு போய் இருக்காங்க எல்லாம் இரவுதான் வருவாங்க என்றாள். இதுவே அய்யனாராக இருந்தால் நானும் அவளும் நான்கு சுவரும் ஒரு கதவும் இரு ஜன்னலும் என்று டைட்டில் வைத்து கதை எழுதுவார் என்றேன் சத்தம் போட்டு சிரித்தாள்.

பின் அருகில் வந்து அமர்ந்தாள் ....................................(பதிவு ரொம்ப பெருசாக போவதால் சென்சார்). மாலை புறப்படும் பொழுது இதுபோல் நீ செய்வாய் என்று எதிர்பார்கவே இல்லை என்றாள், பயமாக இருக்கிறது என்றாள் பயப்படாதே எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன்.

இன்று காலையில் டேய் குசும்பா இது எனக்கு இரண்டாவது மாதம் என்ன செய்யலாம் சொல்லு என்று கேட்டு மெயில் வந்தது அதை படிக்க போய்தான் பழைய நினைப்பு. பதிவு போட்டு இதுக்கு நீதான் காரணம் என்று சொல்லிவிடவா என்றாள்.

அம்மா தாயே என் மானத்தை வாங்கிடாத ஊருக்கு வந்த பொழுது உனக்கு வலை பூ கிரியேட் செய்ததே நான் செய்த பெரியதப்பு என்று பீல் செஞ்சுக்கிட்டு இருக்கேன் இதுல வெற்றிகரமாக இரண்டாவது மாதம் என்று போஸ்ட் வேறயா? எழுதி இருப்பது 12 பதிவு அதுல 10 பதிவு மரத்தின் இலை பச்சை, கடல் நீலம், மேகம் கருப்பு என்று கவிதை மீதி 1 அறிமுகம் இன்னொன்னு சமையல் குறிப்பு என்று அம்மா எழுதி தந்தது. நீ மட்டும் பிளாக் எழுத வெச்சது நான் தான் என்று சொன்ன தமிழ் மண மக்கள் என்னை ரவுண்டு கட்டி அடிப்பாங்க.

இன்னொரு திருப்பம்: பஸ் டிரைவர் என்னமா திருப்புகிறார் பாருங்க அது பெரிய திருப்பம்.


சர்வேசன் இதுக்கு மேல திருப்பம் வேண்டும் என்றால் PIT குழுவிடம் சொல்லி பெரிய திருப்பம் உள்ள ரோடா படம் புடிக்க சொல்லுங்க:)))

டிஸ்கி:
1) நான் ஊருக்கு போய் ஒரு வருடம் ஆகிறது, அப்பொழுது நான் வலை பதிவர் இல்லை.

2) நான் இதற்கு முன் எழுதிய கதைக்கான பின்னூட்ட டெம்ளேட் மற்ற பதிவர்களுக்கு உபயோகிக்க தான் என்பதிவில் அல்ல.

Friday, December 7, 2007

அமீரகத் தமிழ் இணைய நண்பர்களோடு இயக்குநர் சேரன்!

நேற்று அமீரகத்தில் ஸ்டார் பள்ளி கூடத்தில் அமீரகத் தமிழ் மன்றம் ஆண்டு விழா நடந்தது.இது 7 வது வருட விழா என்றும் அதுக்கு இயக்குநர் சேரன் வருவது என்பது இரண்டாவது முறை என்பதும் அங்கு சென்ற பிறகுதான் தெரிந்தது, ஆசிப் சொன்னவுடன் என்ன ஏது என்று தெரியாமல் வழி தெரியாமல் மாட்டிக்கிட்ட ஆட்டு குட்டி போல் தவித்தேன் அங்கு போய். காரணம் நான் நினைத்தது வருபவர்கள் எல்லாம் பிளாக்கராக இருப்பார்கள் போல என்று நினைத்தேன் ஆனால் அவர்கள் எல்லாம் பெரும் தலைகள் எல்லாம் புத்தகத்தில் எழுதியவர்கள், எழுதிகொண்டு இருப்பவர்களாம்.

தமிழ் தாய் வாழ்த்துடன் ஆரம்பம் ஆன விழா பின் சிறுமியின் நடனம் கலை நிகழ்ச்சி பின் ஆண்டு விழா மலரை சேரன் வெளியிட்டார்.அதன் பிறகு சிரிக்கவைக்க போவது யார் நிகழ்சியும் நடந்தது.



பள்ளி கூட நிர்வாகி ஒருவர் பேசும் பொழுது இங்கு படிக்கும் தமிழ் மாணவர்களுக்கு தமிழ் மொழியை சொல்லி கொடுக்க நீங்கள் ஏற்பாடு செய்யவேண்டும், இல்லை என்றால் இங்கு பயிலும்இந்த தலைமுறை குழந்தைகள் தமிழ் எழுத தெரியாமல் போய்விடும் என்றார்.அவர் சொன்னது கசப்பான உண்மை தமிழ்நாட்டில் இருக்கும் பல காண்வெண்ட் குழந்தைகளுக்கே தமிழ் எழுததெரிவது இல்லை.


விழாவில் கலக்கிய மூவர்!

இந்த பதிவுக்கு தலைப்பு சேரனை திருத்திய ஆசிப் மீரான் என்றுதான் வைக்கலாம் என்று இருந்தேன் வழக்கம் போல் குசும்பு என்று நினைத்து பல பேர் படிக்காமல் போய்விடுவார்களோ என்று விழாவை பற்றிய தலைப்பையே வைத்துவிட்டேன். விழாவை நடத்துவது அல்லது தொகுத்து வழங்குவது என்பது சாதாரன விசயம் அல்ல அதை எவ்வித தயாரிப்பும் பேப்பரில் எழுதி வைத்து எல்லாம் படிக்காமல் மிக இயல்பாக சுத்த தமிழில் நிகழ்சியை தொகுத்து வழங்கினார் ஆசிப், சிலரிடம் இருந்து கற்றுகொள்ள ஒன்று இரண்டு விசயங்கள் இருக்கும் இவரிடம் பல விசயம் இருக்கிறது அதில் முக்கியமாக தமிழ் பேசும் அழகு. சேரன் பேசும் பொழுது சொன்னார், எனக்கு பேசும் பொழுது ஆங்கில வார்த்தைகள் அதிக வந்து கொண்டு இருந்தது முதல் முறை இங்கு வந்த பொழுது சரளமாக ஆங்கில கலப்பு இல்லாமல் வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் தமிழ் பேசும் பொழுது ஏன் நம்மால் முடியாது என்றுஅன்று எனக்கு தோன்றியது அது தோன்ற காரணமாக இருந்தது நண்பர் ஆசிபின் பேச்சு என்று குறிப்பிட்டார் அதில் எதும் மிகை இல்லை. இவரின் பேச்சு மிகவும் அருமையாக இருந்தது.



அடுத்து கலக்கியவர் சேரன் மிகவும் எளிமையாக எவ்வித பந்தாவும் இல்லாத பேச்சு, ஒரு இடத்தில் அவர் சொன்ன கருத்து எனக்கு மிகவும் பிடித்தது, தமிழுக்காக தமிழர்களால் நடத்தபடும் விழாவில் கலந்துகொள்ள எந்த நடிகரேனும் காசு கேட்பார்களேயானால் அவர்களை தவிர்த்து விடுங்கள் என்று முன்பே சொன்னதாகவும் திரும்ப ஏன் என்னை கூப்பிடுகிறீர்கள் நான் ஒன்னும் அந்த அளவுக்கு முகபூச்சு இல்லாத நடிகன்/ இயக்குனர்தானே என்றதற்கு எங்களுக்கு அதை போல் ஒருவர்தான் வேண்டும் என்றும் சொல்லி எங்களை கூப்பிட்டனர் என்றார்.அடுத்த முறை விழா நடத்தும் பொழுது நீங்கள் கூப்பிடுகிறீர்களோ இல்லையோ நானே வருவேன் அப்பொழுது நீங்கள் லேபர் கேம்பில் அல்லது மிகவும் கஷ்ட படும் நபர்களையையும் அழைத்து விழாவில் கலந்துக்க வைக்கனும். அவர்களுக்கு நீங்கள் தான் ஆதரவாக இருக்கனும் என்றார் அது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.


அடுத்து கலக்கியவர்கள்

கலக்க போவது யார் நிகழ்சியில் பங்கு பெற்ற நால்வர் வந்து இருந்தனர். அதில் குறிப்பாக தேவா என்பவர் மிமிகிரி ஷோ ஹைலைட்டாக அமைந்தது அவர் செய்த காதல் கொண்டேன்படத்தில் இருந்து கிளைமேக்ஸ் சீனிலில் பேசும் தனுசின் வசனமும் ஆடலுடன் திவ்யா திவ்யா என்று சொல்லி ஆடும் ஆட்டத்தையும் செய்து காட்டினார் மிக சிறப்பாக இருந்தது.பின்பு நான்கு கால்களுடன் ஒருவர் ஆடினார். இந்த நிகழ்சியை தொகுத்து வழங்கியவர் ஜெஸிலா அவர்கள்.


11 மணிக்கு மேலும் நிகழ்சி தொடர்ந்து கொண்டு இருந்தது இந்த நிகழ்சிக்கு பிறகு அண்ணாசி ஆசிப் சொந்த குரலில் பாட்டு ஒன்று பாடபோவதாக கழுகார் சொன்னதை அடுத்து மறுநாள் வேலைக்கு போகவேண்டும் என்ற நினைவு வந்தது எங்கு அண்ணாச்சியின் பாட்டில் "சொக்கி" விடுவோமோ என்ற பயத்தில் அவரிடம் சொல்லிவிட்டு நானும் லொடுக்குவும் எஸ்கேப்:))

வருத்தம்: சேரன் பேசும் பொழுது பெருசுங்க என்று சிலரை குறிப்பிட்டார் பின் இளசுகள் என்று குறிப்பிடும் பொழுது அவரையும் அண்ணாச்சியையும் இளசு என்று சொல்லிவிட்டார்:(((((அவரை சொல்லிக்கிட்டது கூட பரவாயில்லை அண்ணாச்சியை இளசு என்று சொன்னதை நினைத்து தூக்கமே வரவில்லை.


நிஜ வருத்தம்:

1) நிகழ்ச்சி முழுவதையும் பார்கமுடியவில்லை காரணம் நேரம் போதவில்லை அடுத்த முறை கொஞ்சம் முன்பே ஆரம்பிக்கலாம் அல்லது சில நிழச்சியின் நீளத்தை குறைக்கலாம்.


2) தமிழுக்காக என்று கூடி இருந்த பலரும் தங்கள் உறவினர்கள் , குழந்தைகளோடு ஆங்கிலத்தில் தான் பேசிக்கொண்டு இருந்தார்கள்.


விழாவிற்கு வந்து இருந்தவர்கள்:


இயக்குனர்: சேரன்

தொழில் அதிபர் : RK

அசத்த போவது யாரு டீம் நால்வர்


விழாவிற்கு வந்து இருந்த வலை பதிவர்:

பினாத்தல் சுரேஷ்

அய்யனார்

தம்பி உமாகதிர்

லொடுக்கு

Wednesday, December 5, 2007

மாலன் மட்டும்தான் ரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் போடுவாறா?

கொஞ்ச நாட்களுக்கு முன் மாலன் அ முதல் ஓள வரை அவர் பதிவுக்கு எப்படி பின்னூட்டம் போடுவது என்று ரெடிமேடாக பின்னூட்ட டெம்ளேட் கொடுத்து இருந்தார், அவர் மட்டும்தான் அப்படி செய்ய முடியுமா?

இதோ இன்றைக்கு தமிழ்மணத்தை ஓப்பன் செய்தாலே நச் என்று ஒரு கதை இச்சென்று ஒரு கதை, வாரா வாரம் தொடர் கதை என்று எல்லோரும் வரிந்து கட்டிக்கொண்டு கதை ஆசிரியர் ஆயிட்டாங்க. கவிதை எழுத மாட்டேங்கிறாங்க நாமலும் எதிர் கவுஜ எழுதலாம் என்று பார்த்தா ம்ம்ம்:(
சரி ரூட்ட மாத்துன்னு தொடர் கதை , சிறு கதை எழுதுவர்களுக்கு எப்படி பின்னூட்டம் போடலாம் என்றுதான் இந்த பதிவு.

பார்த்தீங்கன்னா பல பேர் கதையை எல்லாம் படிக்க நேரம் இல்லை அப்புறம் எப்படி பின்னூட்டம் போடுவது என்று போடுவதே இல்லை, அப்படி செய்தால் கதை எழுதும் ஆசிரியர் மனம் என்ன பாடு படும். இதோ சில ரெடிமேட் டெம்ளேட்ஸ்

சிறு கதைக்கு என்றால்

1) எதிர் பாராத முடிவு:) அருமை

2) நல்ல திரும்பம்:) எதிர் பார்கவே இல்லை.

3) சின்ன கதையாக இருந்தாலும் சிறப்பாக இருக்கிறது.

4) //--------------------------------// இந்த வரி மிக அருமை ( ------குள் எதை வேண்டும் என்றாலும் காப்பி பேஸ்ட் செஞ்சுக்குங்க, ஆனால் முடிந்தது or முற்றும் என்ற வரியை காப்பி பேஸ்ட் செஞ்சி அருமை என்று சொல்லிடாதீங்க அடி விழும்).

5) சமீபத்தில் படிச்சதில் இந்த கதை மிக சிறப்பாக இருக்கிறது.

6) ஆனந்தவிகடனுக்கு அனுப்பலாம்!

போட்டிக்கான் கதையாக இருந்தால் வேலை மிக சுலபம்.

1) வாழ்த்துக்கள்

2) போட்டியில் வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

3) நிச்சயம் வெற்றி பெற போகும் கதை.

4) கலக்கல் கதை வெற்றி நிச்சயம்.

5) இப்படி எல்லாம் கதை எழுதினா நாங்க எல்லாம் போட்டியில் கலந்துக்க முடியாது போலவே!!!

6):))) அருமை

தொடர் கதைக்கு என்றால்

1) ரொம்ப அருமை! மிக இயல்பாக இருக்கிறது!

2) அடுத்த பாகத்துக்காக வெயிட்டிங் !!! ( எத்தனை பாகம் எழுதினாலும் இவர் படிக்க போவது இல்லை என்பது வேறு விசயம்)

3) வாரம் ஒரு முறைதானா? :(((( [ வாரம் ஒரு முறைதானே!!! என்று போட்டுவிட கூடாது கவனம் தேவை]

4) ஹீரோ டயலாக சூப்பர் , ஹீரோயின் டயலாக் சூப்பர் [ நன்றி அபி அப்பா]

5) நல்ல எழுத்து நடை!

6) கடைசி வரியில் அடுத்த பாகத்துக்கான் எதிர்பார்பை தூண்டி விட்டு விடுகிறீர்கள்!

7) சீக்கிரம் தொடருங்கள்!!! [ நிஜ கருத்து சீக்கிரம் முடியுங்கள் ]

8)//-------------------------------// நான் ரசித்த வரிகள்

9) கதை போல் இல்லை சொந்த அனுபவமோ!!!

10) தேர்ந்தெடுத்த கதை ஆசிரியர் கதை போல இருக்கு.

11) அடுத்த முறை இன்னும் கொஞ்சம் அதிகமாக எழுதவும்!!! [ ரொம்ப பெருசா எழுதி இருக்க சின்னதா எழுதுய்யான்னு அர்த்தம்]

12) தொடரும் என்ற வரிக்கு முதல் வரியை காப்பி செய்து, என்ன இப்படி முடித்து விட்டிர்கள் சீக்கிரம் தொடருங்கள்.

13) முடிவை அறிய ஆவலாக உள்ளேன் தனிமடலிலாவது சொல்லவும்!!!

14) முந்தைய பாகங்களை தேடி தேடி படித்தேன் அந்த அளவுக்கு சிறப்பாக இருக்கிறது உங்கள் தொடர். [ முதல் பாகத்துக்கு இந்த பின்னூட்டம் சரி வராது]

15) மிகவும் விறு விறுப்பாக இருக்கிறது.

16) யாராவது அருமை என்று பின்னூட்டத்தில் சொல்லி இருந்தால் காப்பி பேஸ்ட் செஞ்சு ரிப்பீட்டேய் போடலாம்:)

Tuesday, December 4, 2007

2011 முதல்வர் + மந்திரி சபை ஒரு சிறப்பு பார்வை!!!

நேற்று கட்சி ஆரம்பிச்ச சரத் முதல் ராமதாஸ் வரை எல்லோருக்கும் டார்கெட் 2011ல் முதல்வர் பதவிதான். எல்லோரும் நானும் முதல்வர் என்று சொல்லும் பொழுது ஏன் நீங்கள் அல்லது நானும் இந்த போட்டியில் குதிக்க கூடாது?


என்னது மக்கள் ஆதரவு இல்லாமல் எப்படி? என்று அபத்தமான கேள்வி எல்லாம் கேட்க கூடாது ஆமா? இப்ப சரத்குமார் கட்சி பேரு என்னான்னு கூட யாருக்கும் தெரியாது அவர் சொல்லவில்லையா? அது போலதான் நம்பிக்கை தான் வாழ்கை!!!


சரி நானும் முதல்வர் ஆனா யார் யாருக்கு எல்லாம் மந்திரி பதவி கொடுக்கிறது? என்ன மந்திரி பதவி கொடுக்கிறது என்று ஒரு லிஸ்ட் போட்டலாம்.

முதல்வர்: குசும்பன் (குடும்பத்தில் குண்டுவைக்கும் துறை, கல்லூரி பெண்கள் விடுதி மேம்பாட்டு துறை)

துனை முதல்வர்கள்: அன்றைய இளம் ஹீரோயின்கள்

கல்விதுறை அமைச்சர்: திரு. தருமி

சுகாதாரம்+மருத்துவ துறை: திருமதி. டெல்பின்

தகவல் பரிமாற்ற துறை : திரு. அபி அப்பா

உணவு துறை: G3

கால்நடை துறை (கோழியும் அடக்கம்) : டாக்டர்.காயத்ரி

விவசாய துறை: இளா

வனவிலங்கு(புலி) பாதுகாப்பு துறை: நாகை சிவா

விளம்பர கட்டுபாட்டு துறை: ஜெஸிலா

கிரிக்கெட் மேம்பாட்டு துறை: பாஸ்ட் பவுலர்

குடும்ப தற்காப்பு கலை மேம்பாட்டு துறை: பெனாத்தலார்

மது ஒழிப்பு துறை : அய்யனார்

குழந்தைகள் நல துறை: குட்டீஸ்

இளம் பெண்கள் நல துறை: ஜொள்ளு பாண்டி

சுற்றுலா மேம்பாட்டு துறை: மை பிரண்ட் (யாருப்பா அது வெளிநாட்டவர் எல்லாம் அமைச்சர் ஆக கூடாதுன்னு சொல்றது?)

சுற்று சூழல் பாதுகாப்பு துறை : வெங்கட், செல்வேந்திரன்

விளம்பர மேம்பாட்டு துறை: ஓசை செல்லா

அறநிலைய துறை : ஜீ.ரா & KRS

ஆசிரியர் நல துறை : கண்மணி

போக்குவரத்து துறை: டோண்டு (சொந்த கார் வைத்து இருப்பதால்)

கடலை விவசாய மேம்பாட்டு துறை: தம்பி

ஈயம், பித்தளை துறை : அண்ணாச்சி & மோகன்தாஸ்

பசி பட்டினி ஒழிப்பு துறை: துர்கா

ஹீரோயின்கள் மேம்பாட்டு : ஆயில்யன் & ரசிகன்

ஆப்பு துறை: கைபுள்ள

குடிசை மாற்று வாரியம்+உப்புமா மேம்பாட்டு துறை: இலவசகொத்தனார்

வேறு யார் யாருக்கு என்ன என்ன துறை கொடுக்கலாம் சொல்லுங்களேன் எல்லோருக்கு பதவி என்ற ஒரு கொள்கை இருக்கு.

விரிவாக்க பட்ட மந்திரி சபை:

ஆரோக்கிய துறை + குண்டர் தடுப்பு துறை: TBCD

நெட்வெர்க் புலனாய்வு துறை : ராம்

ஆள் மாறாட்ட தடுப்பு துறை : மின்னல்

ரீமேக் பட தயாரிப்பு துறை: தேவ்

PIT யின் பூ போட்டிக்கு

போன மாசம் முழுவதும் ரோடு ரோடா அலையவிட்டாங்க ரோடு ரோடா அலைஞ்சு உருண்டு பிரண்டு போட்டோ எடுத்து, ஒரு முறை உருண்டு நடுரோட்டுக்கு வந்து லாரி காரன் திட்டியது வேறு விசயம் இப்படி பல தடைகளை கடந்து வந்து போஸ்ட் போடலாம் என்று பார்த்தா தேதி இப்பதான் பத்துநாளைக்கு முன்பே முடிஞ்சு போச்சு என்று சொல்லிட்டாங்க.

சரி ஒரு திறைமையான கலைஞன் உருவாகும் பொழுது இது போல் தடைகள் எல்லாம் வரதான் செய்யும் என்று மனச தேத்திக்கிட்டு இந்த முறை கொஞ்சம் சீக்கிரமாகவே போட்டியில் கலந்துக்கலாம் என்று ஒரு சிறு முயற்சி! இதுவே காஞ்சு போன ஊரு இதுல எங்க இருந்து வகை வகையா பூக்களை போட்டோ எடுப்பது ஏதோ இருப்பதை வைத்து கொஞ்சம் அட்ஜெஸ் செஞ்சுக்குங்கப்பா!!!























இங்க ஏன் நமீதா போட்டோ என்று கரீட்டா சொல்லுங்க பார்கலாம்:)) இதில் ஒரு சூது இருக்கு.

அப்புறம் இதுபோல போட்டியின் மூலம் போட்டோ எடுக்கும் ஆர்வத்தை என்னிடம் ஏற்படுத்தியது போல பல பேருக்கும் ஏற்படுத்தி இருக்கும் என்பது நிச்சயம். ஆகவே அந்த PIT குழு நண்பர்களுக்கு என் பாராட்டுகள்.

Monday, December 3, 2007

2011 முதல்வர் + மந்திரி சபை ஒரு சிறப்பு பார்வை!!!

நேற்று கட்சி ஆரம்பிச்ச சரத் முதல் ராமதாஸ் வரை எல்லோருக்கும் டார்கெட் 2011ல் முதல்வர் பதவிதான். எல்லோரும் நானும் முதல்வர் என்று சொல்லும் பொழுது ஏன் நீங்கள் அல்லது நானும் இந்த போட்டியில் குதிக்க கூடாது?


என்னது மக்கள் ஆதரவு இல்லாமல் எப்படி? என்று அபத்தமான கேள்வி எல்லாம் கேட்க கூடாது ஆமா? இப்ப சரத்குமார் கட்சி பேரு என்னான்னு கூட யாருக்கும் தெரியாது அவர் சொல்லவில்லையா? அது போலதான் நம்பிக்கை தான் வாழ்கை!!!


சரி நானும் முதல்வர் ஆனா யார் யாருக்கு எல்லாம் மந்திரி பதவி கொடுக்கிறது? என்ன மந்திரி பதவி கொடுக்கிறது என்று ஒரு லிஸ்ட் போட்டலாம்.

முதல்வர்: குசும்பன் (குடும்பத்தில் குண்டுவைக்கும் துறை, கல்லூரி பெண்கள் விடுதி மேம்பாட்டு துறை)

துனை முதல்வர்கள்: அன்றைய இளம் ஹீரோயின்கள்

கல்விதுறை அமைச்சர்: திரு. தருமி

சுகாதாரம்+மருத்துவ துறை: திருமதி. டெல்பின்

தகவல் பரிமாற்ற துறை : திரு. அபி அப்பா

உணவு துறை: G3

கால்நடை துறை (கோழியும் அடக்கம்) : டாக்டர்.காயத்ரி

விவசாய துறை: இளா

வனவிலங்கு(புலி) பாதுகாப்பு துறை: நாகை சிவா

விளம்பர கட்டுபாட்டு துறை: ஜெஸிலா

கிரிக்கெட் மேம்பாட்டு துறை: பாஸ்ட் பவுலர்

குடும்ப தற்காப்பு கலை மேம்பாட்டு துறை: பெனாத்தலார்

மது ஒழிப்பு துறை : அய்யனார்

குழந்தைகள் நல துறை: குட்டீஸ்

இளம் பெண்கள் நல துறை: ஜொள்ளு பாண்டி

சுற்றுலா மேம்பாட்டு துறை: மை பிரண்ட் (யாருப்பா அது வெளிநாட்டவர் எல்லாம் அமைச்சர் ஆக கூடாதுன்னு சொல்றது?)

சுற்று சூழல் பாதுகாப்பு துறை : வெங்கட், செல்வேந்திரன்

விளம்பர மேம்பாட்டு துறை: ஓசை செல்லா

அறநிலைய துறை : ஜீ.ரா & KRS

ஆசிரியர் நல துறை : கண்மணி

போக்குவரத்து துறை: டோண்டு (சொந்த கார் வைத்து இருப்பதால்)

கடலை விவசாய மேம்பாட்டு துறை: தம்பி

ஈயம், பித்தளை துறை : அண்ணாச்சி & மோகன்தாஸ்

பசி பட்டினி ஒழிப்பு துறை: துர்கா

ஹீரோயின்கள் மேம்பாட்டு : ஆயில்யன் & ரசிகன்

ஆப்பு துறை: கைபுள்ள

குடிசை மாற்று வாரியம்+உப்புமா மேம்பாட்டு துறை: இலவசகொத்தனார்

வேறு யார் யாருக்கு என்ன என்ன துறை கொடுக்கலாம் சொல்லுங்களேன் எல்லோருக்கு பதவி என்ற ஒரு கொள்கை இருக்கு.

விரிவாக்க பட்ட மந்திரி சபை:

ஆரோக்கிய துறை + குண்டர் தடுப்பு துறை: TBCD

நெட்வெர்க் புலனாய்வு துறை : ராம்

ஆள் மாறாட்ட தடுப்பு துறை : மின்னல்

ரீமேக் பட தயாரிப்பு துறை: தேவ்

ஈரோட்டில் பஸ்ஸை எப்படி நிறுத்துவாங்க?

தீபாவளிக்கு G3 டாக்டர்.கவிதாயினியை போய் பார்த்துவிட்டு வந்ததை பற்றி ஒரு பதிவு போட்டு இருக்காங்க ஆனால்அதுக்கு முன்பு நடந்த சில முக்கிய சம்பவங்கள் இருட்டடிப்பு செய்து இருக்காங்க, அப்படி என்னா என்று கேட்கிறீங்களா?இருங்க சொல்றேன்.

முதலில் அந்த ஊரு பேரு ஈரோடோ கொசு ரோடோ என்னாவா இருந்தா நமக்கு என்னா டாக்டர்.கவிதாயினி அம்மா கையால்கோழி கறி சாப்பிடனும் என்ற உயர்ந்த குறிக்கோளை கொண்ட G3 என்னா செஞ்சாங்க அவுங்க அம்மாவுக்கு போன் போட்டு தான் அங்கு வரபோவதை சொல்லி எப்படிம்மா வரனும் பஸ் ரூட் என்னா எப்படி வரனும் என்று கேட்டு இருக்காங்க, டாக்டர்.கவிதாயினி அம்மா நீ தனியா வரவேண்டாம் அம்மா பையன் தீனதயாலுவை அனுப்பி வைக்கிறேன் வந்து உன்னை கூட்டிவருவான் என்றுசொன்னதும் அது ஏன் வீன் சிரமம் நான் தனியாகவே வருகிறேன் என்று சொல்லி கேட்காமல் உன்னை வந்து தம்பி கூட்டிவருவான் என்று சொல்லி போனை கட் செஞ்சுட்டாங்க.

மறு நாளை கையில் ஒரு டிராவல் பேக் உடன் ஒரு பையன் யார் என்னா என்று கேட்டால் அம்மா உங்களை கூட்டி வர சொன்னாங்க,என்று சொல்லி இருக்கிறான் தம்பி, என்ன டா நம்மளை அழைத்து வர சொன்னாங்க இவன் எதுக்கு அங்கிருந்து ஒரு பேக்கை தூக்கிட்டு வந்து இருக்கிறான் உள்ள ஏதும் திங்க கொடுத்து அனுப்பி இருப்பாங்களோ என்று கொஞ்சம் உற்சாகமாகவே G3 கிளம்பினாங்க.ஆனால் தம்பி கடைசி வரை பேக்யை திறக்கவே இல்லை, சரி அதில் என்னதான் இருக்கும் என்று ஒரு டவுட்டிலே சென்னையில் இருந்து கிளம்பி நாமக்கல் போய் அங்கிருந்து பஸ் புடிக்க காத்திருக்கும் பொழுது என்ன டா அங்கிருந்து இவ்வளோ தூரம் வந்துட்டோம் ஒன்னும் அதில் இருந்து எடுத்து கொடுக்கவில்லையே. திங்க கொடுக்க மறந்துட்டானா என்று டவுட்டோடு என்ன தம்பி வேறு எங்கயாவது போய் விட்டு வருகிறாயா என்று கேட்க? இல்லையே அக்கா ஏன் அவன் திருப்பி கேட்க?
இல்லை கையில் பேக் எடுத்து வந்து இருக்கியே அதான் என்று கேட்க, அதெல்லாம் இல்லை அக்கா சும்மாதான் என்று லேசாக சிரிச்சு வெச்சான். என்ன டா பைய திறக்க மாட்டான் போல இருக்கே என்று அவனுக்கு தெரியாம நைசா அமுக்கி பார்த்தா துணி மூட்டை மாதிரி இருக்குது.

ரொம்ப குழம்பி போய் சரி போ வீட்டில் போய் தான் சாப்பாடு என்று இன்னைக்கு தலைவிதி போல என்று பஸ்ஸுக்காக காத்துக்கிட்டு இருக்கும்பொழுது கொசு ரோடு என்று பேர் போட்டு ஒரு பஸ் வர சீக்கிரம் போய் சாப்பிடும் ஆர்வ கோளாரில் ஓடி போய் பஸ்ஸில் ஏற போக தம்பி தடுத்துவிட்டான் வேண்டாம் அக்கா அடுத்த பஸ்ஸில் போகலாம் என்று.
சரி என்று அடுத்த பஸ் வந்து அதில் ஏறி படிக்கு பக்கதிலேயே உள்ள சீட்டில் இடம் புடிச்சு உட்கார்ந்து கிட்டாங்க கொஞ்ச நேரம் கழிச்சு தம்பி அந்த பேக்யை எடுத்து நைசா கீழ படி வழியா உருட்டிவிட்டான் G3 குழம்பி போய் பார்க்க, டக்குன்னு பேக் கீழ விழுந்துட்டு கீழ விழுந்துட்டு பஸ்ஸை நிறுத்துங்க என்று சொல்லி தம்பி கத்த பஸ் நிறுத்த பட்டது, வாங்க அக்கா என்று G3யையும் அழைச்சிட்டு கீழ இறங்கி போய்பேக்கை எடுத்துக்கிட்டு திரும்ப பஸ்ஸுக்குதான் போக போகிறோம் என்று G3 நினைக்க தம்பி அக்கா எங்க ஊருக்கு பஸ் ஸ்டாப் எல்லாம் கிடையாது பஸ்ஸை நிறுத்த நாங்க கண்டு பிடிச்சு இருக்கும் டெக்னிக் இது என்று சொல்ல!

இவுங்க bag யை எடுத்துக்கிட்டு திரும்ப வருவாங்க என்று காத்துகொண்டு இருந்த டிரைவர் சொன்னது என்ன கொடுமை சார் இது?இதுங்க பஸ்ஸை நிறுத்த செஞ்ச நாடகமா இது? என்று நாலு நல்ல வார்த்தையால் திட்டிவிட்டு பஸ்ஸை எடுத்துக்கிட்டு போனார்.

G3 அறிவு பூர்வமா கேட்ட கேள்வி போகும் பொழுது பஸ்ஸை நிறுத்த என்ன செய்வீங்க என்று கேட்க? ரெண்டு எருமை மாட்டை குறுக்க விட்டுவிடுவோம் என்று சொல்லி முடிக்கவும் வீடு வந்தது.

டிஸ்கி: இனி டாக்டர் விஜய், டாக்டர். சங்கர் வரிசையில் கவிதாயினியும் டாக்டர் என்றே அழைக்க படுவார், மூனாவதையே மூனு முறை படிச்ச புள்ள இன்னைக்கு ஏதோ தமிழில் பச்சடி, கிச்சடின்னு ஏதோ செய்கிறார்களாம் செஞ்சு முடிச்சவுடனே டாக்டர் என்று சொல்லனுமாம் அதுக்கு முன்னோட்டம் தான் இது.