இந்த இசான் அவஸ்தி இருக்கானே இந்த இசான் அவஸ்தி அதாங்க தாரே ஜமீன் பர் படத்தில் நடிச்சு இருக்கானே என்னா நடிப்பு நடிச்சு இருக்கான். அவனை ஒரு முறை பார்த்தால் போதாது என்று நேற்று திரும்பவும் போய் இரண்டாம் முறையாக பார்த்துவிட்டு வந்தேன். என்னா நடிப்பு என்னா நடிப்பு!!!
காலை 5 மணிக்கு பரபரப்புடனும், மிகுந்த டென்சனுடனும் எழுந்து மிசின் போல கட கட என்று ஆபிஸ் கிளம்பும் அப்பா,காலை 6 மணிக்கு ஒரு கடி பிரட், ஒரு வாய் பால் ஒரு கையில் புத்தகம் என்று டென்சனாக இருக்கும் அண்ணனுக்கு மத்தியில் 7 மணிக்கு மிகவும் சோம்பலாக படுக்கையில் இருந்து எழுந்திருக்க மனசு இல்லாமல் டிக்கிய மட்டும் தூக்கிட்டு தலையை தலையனையில் புதைத்து தூங்கும் பையனை குண்டாஸ் சட்டத்தில் கைது செய்து தூக்கிட்டு போவது போல் டிக்கியில் ஒரு போடு போட்டு குண்டாங்கட்டியா தூக்கிட்டு போய் பாத்ரூமில் அமுக்கும் பொழுதும் சவரில் தண்ணியை திறந்துவிட்டு மேலே விழும் தண்ணியோடு போடும் சண்டையாகட்டும், ஊரில் இருந்து வந்த அப்பாவிடம் என்ன எனக்கு வாங்கி வந்த என்று கேட்டுவிட்டு பழத்தை கழுவாமல் வாயில் வைப்பது போல் காட்டும் பால்வா ஆகட்டும், அவன் நடிப்பு அருமை.
3+9=3 என்று மட்டும் விடை எழுதி விட்டு மீதியை சாமிக்கு விட்டுவிட்டு பிந்தாஸ் என்று சொல்லும் பொழுதும் அண்ணனிடம் ஸ்கூலை கட் அடித்துவிட்டேன் என்று சொல்லிவிட்டு போலி விடுமுறை குறிப்பு எழுதி கொடு என்று சொல்லிவிட்டு கண் அடித்து பிந்தாஸ் (ஹிந்தியில் என்ன சொல்கிறான் என்று புரியவில்லை) சப் டைட்டிலில் பயப்படாத! என்று வந்தது!அப்பொழுது அவன் குறும்பு சிரிப்பு அட அடா ...
பெரியவர்கள் நாம் பார்க்கும் பார்வைக்கும் சிறுவர்களின் பார்வைக்கும் எத்தனை வித்தியாசம் அப்பாவின் தோளில் அமர்ந்து ஐஸ் வாங்கி சாப்பிடும் சிறுவன்,தெருவோரம் கூடையில் தூங்கும் சிறுவன், கையை ஊன்றி பல்டி அடிக்கும் குழந்தைகள், தண்ணியை அண்ணாந்து குடிக்கும் ஒருவர், மண்ணை அள்ளி கொட்டும்பொக்கலைன் இயந்திரம், சாரத்தின் மேல் ஏறும் பெயிண்டர் என்று அவன் ஆச்சர்யமாக வியந்து பார்க்கும் பார்வைக்கும் நமக்கும் எத்தனை வித்தியாசம்.அவன் நடிப்பையும் குறும்பையும் பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு!
இதே நம் ஊராக இருந்திருந்தால் தினமும் போகலாம் இங்கு 30 திர்ஹாம் டிக்கெட் என்னசெய்வது, இந்த மாத கோட்டாதான் முடிந்து இருக்கு. அடுத்தமாதமும் போவோம்ல்ல போய்ட்டு வந்து திரும்ப வெறுப்பேத்தும் பதிவு போடும் முன்பு எல்லோரும் பார்த்துவிடுங்க:)))
குறிப்பு:
1)நேற்று படம் பார்க்கும் பொழுது அண்ணாச்சியும் அழுதுவிட்டார் என்பதை சொல்லமாட்டேன்.
2) நண்பர் பினாத்தலார் சொல்லும் பொழுது சின்ன பையன் நீயே படத்தை பார்த்துவிட்டு இப்படி பீல் செய்யும் பொழுது ஒரு வயதான அப்பாவாக என்னை நினைத்து பார் நான் எப்படி பீல் செஞ்சு இருப்பேன் என்று சொன்னார். 100% உண்மையான வரி அது.நிச்சயம் எல்லா அப்பாவும் பாருங்க குடும்பத்தோடு.
2) ஹிருதிக் ரோசன், ஐஸ்வர்யா ராய் நடித்து இருக்கும் அக்பர் என்று ஒரு படம் டிரையிலர் போட்டாங்க சும்மா மிரட்டி இருக்கானுங்க!
இன்னும் ஒரு முறை கூட படம் பார்க்காத தம்பி உமா கதிர், தம்பி கோபி, G3 அவர்களுக்கு இந்த பதிவை டெடிக்கேட் செய்கிறேன்!!!
18 comments:
//
"இதை படிக்கும் பலருக்கு காதில் புகை வரலாம்!!!"
//
என் காதில் புகை வரவில்லை...
-இனைச் செயலாளர்,
த.ம.பா.க.போ.சங்கம்(தலைப்பு மட்டும் பார்த்து கமெண்ட் போடுவோர் சங்கம்)
புகை வரும் அளவுக்கு இதில் என்ன இருக்குன்னு தெரியலெ...
பத்மப்ரியாவோடு அய்யனாரும் அண்ணாச்சியும் சேர்ந்து எடுத்த போட்டோக்கள் தான் புகை வருவதற்கான இல்லையில்லை நெருப்புவருவதற்கானவை.
இதை படித்தால் கண்ணீர் தான் வரும்.
ம்ம்ம்ம்
//பாந்தாஸ்// எப்பா அது பிந்தாஸ். இரண்டுமுறை பார்த்தும் ஒரு வார்த்தை ஒழுங்கா வருதா :-)
நல்லா சொல்லியிருக்கீங்க..!
உங்க சிறப்பே இதுதான்..!
அவஸ்தியின் நடிப்புக்கு நீங்கள் சூட்டிய மகுடம் சரிதான்.!
அப்புறம்.. அது 'பிந்தாஸ்' .. பயமின்றி..தைரியமாக என்று அர்த்தம்
\\இன்னும் ஒரு முறை கூட படம் பார்க்காத தம்பி உமா கதிர், தம்பி கோபி, G3 அவர்களுக்கு இந்த பதிவை டெடிக்கேட் செய்கிறேன்!!!\\
அண்ணே உனக்கு ஏன் இந்த கொலைவெறி...முடிவு பண்ணிட்டோம் (நானும் சென்ஷியும்) படத்தை பார்க்கிறதுன்னு..;))
அப்புறம் ஒரு விஷயம் கதிர் படத்தை பார்த்துட்டார். ;))
ஹலோ த.ம.பா.க.போ.ச சிகெரெட்டை உங்க காதில் சொருவீனா வரும் பாருங்க!!
******************
மஞ்சூர் ராசா said...
புகை வரும் அளவுக்கு இதில் என்ன இருக்குன்னு தெரியலெ... ///
அட நீங்க வேற நிறைய பேர் ஒரு முறை கூட பார்க்கமுடியவில்லை என்று மூலையில் உட்கார்ந்து அழுதுக்கிட்டு இருக்காங்க அதான் ஏதோ என்னால் முடிஞ்ச அளவுக்கு ஆறுதல் சொல்லலாம் என்று:))
**************************
என்ன தல ம்ம்ம்ம் என்று சொல்லிவிட்டு போய் விட்டீங்க:((( ரொம்ப புகையோ!!!
**************************
ஜெஸிலா said...
//பாந்தாஸ்// எப்பா அது பிந்தாஸ். இரண்டுமுறை பார்த்தும் ஒரு வார்த்தை ஒழுங்கா வருதா :-)///
அது எப்படி ஒரு கருப்பு தமிழனுக்கு ஹிந்தி எப்படி வரும், வந்தா நான் தமிழன் இல்லையே!!!:) வராது வரவும் கூடாது என்று சதி செஞ்சுட்டாங்க!!!
***************************
சுரேகா.. said...
///நல்லா சொல்லியிருக்கீங்க..!
உங்க சிறப்பே இதுதான்..!///
நன்றி சுரேகா!
///அப்புறம்.. அது 'பிந்தாஸ்' .. பயமின்றி..தைரியமாக என்று அர்த்தம்///
ஆமாம் அது பிந்தாஸ் நீங்க சொல்வதை பார்த்தா நான் என்னமோ பாந்தாஸ் என்று சொல்லி இருந்தது போல் இருக்கு:) திரும்ப ஒரு முறை எதுக்கும் படிச்சு பாருங்க!!!
படத்தை பார்க்கனும் முடிவு பண்ணிட்டேன்.
நம்மாளுங்க அதி மேதாவித் தனத்த காமிக்கறதா நெனச்சி இந்த படத்தையும் குப்பைனு சொல்றதுக்கு முன்னாடி பாத்துடறேண் அங்கிள்.
//ஹிருதிக் ரோசன், ஐஸ்வர்யா ராய் நடித்து இருக்கும் அக்பர் என்று ஒரு படம் டிரையிலர் போட்டாங்க சும்மா மிரட்டி இருக்கானுங்க//
பில்லா கூட இப்டிதான் மெரட்டினாங்க :(
இருக்குற முளைய யோசிச்சு கோடிகள கொட்டு அவனவன் படம் எடுப்பான் நீங்க ஓசி கலப்பைல ஒரு பதிவு போட்டுட்டு அத இன்னும் மூணு பேருக்கு டெடிகேட் பண்ணுவிங்க?
ரொம்ப நக்கலா போச்சு உங்களுக்கு.
ரெண்டாவது முறையும் உனக்கு டிக்கெட் எடுத்து கூட்டிட்டு போன அந்த அப்பாவி அண்ணாச்சிய சொல்லணும். இப்பவும் நன்றி சொல்லவேல்ல பாரு.
//2) ஹிருதிக் ரோசன், ஐஸ்வர்யா ராய் நடித்து இருக்கும் அக்பர் என்று ஒரு படம் டிரையிலர் போட்டாங்க சும்மா மிரட்டி இருக்கானுங்க!////
ரிப்பீட்டேய்!!!
///கோபிநாத் said...
அண்ணே உனக்கு ஏன் இந்த கொலைவெறி...முடிவு பண்ணிட்டோம் (நானும் சென்ஷியும்) படத்தை பார்க்கிறதுன்னு..;))///
ஒரு பாசம் தம்பி பாசம், சென்ஷி கூடயா போக போற அப்ப முதல் நாளே கிளம்பு அப்பதான் கரெக்ட்டா ஊரை எல்லாம் சுத்திகாட்டிவிட்டு உன்னை தியேட்டருக்கு கூட்டிட்டு போவார், போனவுடனே டயர்ட் ஆகி தூங்கிடுவாய், வாழ்த்துக்கள்
பாக்க தூண்டிட்டீங்க. $10 டேமேஜ் ஆச்சுன்னா, அழுதுடுவேன் ;)
//2) ஹிருதிக் ரோசன், ஐஸ்வர்யா ராய் நடித்து இருக்கும் அக்பர் என்று ஒரு படம் டிரையிலர் போட்டாங்க சும்மா மிரட்டி இருக்கானுங்க! //
ட்ரெயிலர் பாத்து ஏமாறாதீங்க. Elavyaன்னு ஒரு படம் பாத்து
$10 டேமேஜ் ஆச்சு.
elavya illa, Eklavya.
ஏகலைவா படத்தை இந்தியாவிலிருந்து
ஆஸ்கார் அனுப்பும் லிஸ்டில் வைத்திருந்தாங்க
SurveySan said...
பாக்க தூண்டிட்டீங்க. $10 டேமேஜ் ஆச்சுன்னா, அழுதுடுவேன் ;)///
பாருங்க பார்த்துவிட்டு பிடிக்கவில்லை என்றால் சொல்லுங்க அந்த 10$யை நான் தருகிறேன்:))))
///ட்ரெயிலர் பாத்து ஏமாறாதீங்க. Elavyaன்னு ஒரு படம் பாத்து
$10 டேமேஜ் ஆச்சு.///
போஸ்டர்(????) :))) பார்த்து ஏமாற்ந்து போனது ஒரு காலம் அதன் பின் டிரைலர் பார்த்து ஏமாற்ந்து போனது ஒரு காலம்:))) இப்ப எல்லாம் உசாரு!!!
valar said...
ஏகலைவா படத்தை இந்தியாவிலிருந்து
ஆஸ்கார் அனுப்பும் லிஸ்டில் வைத்திருந்தாங்க///
ஓ அப்படியா, நான் இப்பொழுதுதான் கேள்வி படுறேன்!!!
SurveySan said...
பாக்க தூண்டிட்டீங்க. $10 டேமேஜ் ஆச்சுன்னா, அழுதுடுவேன் ;)///
பாருங்க பார்த்துவிட்டு பிடிக்கவில்லை என்றால் சொல்லுங்க அந்த 10$யை நான் தருகிறேன்:))))
///ட்ரெயிலர் பாத்து ஏமாறாதீங்க. Elavyaன்னு ஒரு படம் பாத்து
$10 டேமேஜ் ஆச்சு.///
போஸ்டர்(????) :))) பார்த்து ஏமாற்ந்து போனது ஒரு காலம் அதன் பின் டிரைலர் பார்த்து ஏமாற்ந்து போனது ஒரு காலம்:))) இப்ப எல்லாம் உசாரு!!!
Post a Comment