Monday, December 3, 2007

2011 முதல்வர் + மந்திரி சபை ஒரு சிறப்பு பார்வை!!!

நேற்று கட்சி ஆரம்பிச்ச சரத் முதல் ராமதாஸ் வரை எல்லோருக்கும் டார்கெட் 2011ல் முதல்வர் பதவிதான். எல்லோரும் நானும் முதல்வர் என்று சொல்லும் பொழுது ஏன் நீங்கள் அல்லது நானும் இந்த போட்டியில் குதிக்க கூடாது?


என்னது மக்கள் ஆதரவு இல்லாமல் எப்படி? என்று அபத்தமான கேள்வி எல்லாம் கேட்க கூடாது ஆமா? இப்ப சரத்குமார் கட்சி பேரு என்னான்னு கூட யாருக்கும் தெரியாது அவர் சொல்லவில்லையா? அது போலதான் நம்பிக்கை தான் வாழ்கை!!!


சரி நானும் முதல்வர் ஆனா யார் யாருக்கு எல்லாம் மந்திரி பதவி கொடுக்கிறது? என்ன மந்திரி பதவி கொடுக்கிறது என்று ஒரு லிஸ்ட் போட்டலாம்.

முதல்வர்: குசும்பன் (குடும்பத்தில் குண்டுவைக்கும் துறை, கல்லூரி பெண்கள் விடுதி மேம்பாட்டு துறை)

துனை முதல்வர்கள்: அன்றைய இளம் ஹீரோயின்கள்

கல்விதுறை அமைச்சர்: திரு. தருமி

சுகாதாரம்+மருத்துவ துறை: திருமதி. டெல்பின்

தகவல் பரிமாற்ற துறை : திரு. அபி அப்பா

உணவு துறை: G3

கால்நடை துறை (கோழியும் அடக்கம்) : டாக்டர்.காயத்ரி

விவசாய துறை: இளா

வனவிலங்கு(புலி) பாதுகாப்பு துறை: நாகை சிவா

விளம்பர கட்டுபாட்டு துறை: ஜெஸிலா

கிரிக்கெட் மேம்பாட்டு துறை: பாஸ்ட் பவுலர்

குடும்ப தற்காப்பு கலை மேம்பாட்டு துறை: பெனாத்தலார்

மது ஒழிப்பு துறை : அய்யனார்

குழந்தைகள் நல துறை: குட்டீஸ்

இளம் பெண்கள் நல துறை: ஜொள்ளு பாண்டி

சுற்றுலா மேம்பாட்டு துறை: மை பிரண்ட் (யாருப்பா அது வெளிநாட்டவர் எல்லாம் அமைச்சர் ஆக கூடாதுன்னு சொல்றது?)

சுற்று சூழல் பாதுகாப்பு துறை : வெங்கட், செல்வேந்திரன்

விளம்பர மேம்பாட்டு துறை: ஓசை செல்லா

அறநிலைய துறை : ஜீ.ரா & KRS

ஆசிரியர் நல துறை : கண்மணி

போக்குவரத்து துறை: டோண்டு (சொந்த கார் வைத்து இருப்பதால்)

கடலை விவசாய மேம்பாட்டு துறை: தம்பி

ஈயம், பித்தளை துறை : அண்ணாச்சி & மோகன்தாஸ்

பசி பட்டினி ஒழிப்பு துறை: துர்கா

ஹீரோயின்கள் மேம்பாட்டு : ஆயில்யன் & ரசிகன்

ஆப்பு துறை: கைபுள்ள

குடிசை மாற்று வாரியம்+உப்புமா மேம்பாட்டு துறை: இலவசகொத்தனார்

வேறு யார் யாருக்கு என்ன என்ன துறை கொடுக்கலாம் சொல்லுங்களேன் எல்லோருக்கு பதவி என்ற ஒரு கொள்கை இருக்கு.

விரிவாக்க பட்ட மந்திரி சபை:

ஆரோக்கிய துறை + குண்டர் தடுப்பு துறை: TBCD

நெட்வெர்க் புலனாய்வு துறை : ராம்

ஆள் மாறாட்ட தடுப்பு துறை : மின்னல்

ரீமேக் பட தயாரிப்பு துறை: தேவ்

24 comments:

said...

:)

எனக்கு கொடுத்த பதவியை ரசித்தேன். அதை விட அய்யனாருக்கு கொடுத்த பதவியை நினைத்து மகிழ்ந்தேன்.

ஆனா பாரு ராசா நானும் 2011 ல முதல்வர் என்ற நினைப்பில் சுத்திக்கிட்டு இருக்கேன். சரி விடு நான் ஜெயிச்சா முதல்வர். நீ ஜெயிச்சா முதலில் மந்திரி ஆகிட்டு அப்புறம் உன்னை போட்டு தள்ளிட்டு ஆகிட்டு போறேன்.

said...

நாகை சிவா said...
:)

/// நீ ஜெயிச்சா முதலில் மந்திரி ஆகிட்டு அப்புறம் உன்னை போட்டு தள்ளிட்டு ஆகிட்டு போறேன்.///

நல்ல கொள்கை நீதான்யா வருங்கால பிரதமர்.

said...

//ஹீரோயின்கள் மேம்பாட்டு : ஆயில்யன் & ரசிகன்//

எம்மிருவருக்குள்ளும் குரோதம் வளர்த்துவிடும் வகையில் நடந்துகொள்ளும்

2011 முதல்வர் ஒழிக!
2011 முதல்வர் ஒழிக!
2011 முதல்வர் ஒழிக!

said...

//தகவல் பரிமாற்ற துறை : திரு. அபி அப்பா//

எந்த விதமான தகவல் பரிமாற்ற துறை நண்பா?

said...

ஆயில்யன் said...
//ஹீரோயின்கள் மேம்பாட்டு : ஆயில்யன் & ரசிகன்//

எம்மிருவருக்குள்ளும் குரோதம் வளர்த்துவிடும் வகையில் நடந்துகொள்ளும்

2011 முதல்வர் ஒழிக!
2011 முதல்வர் ஒழிக!
2011 முதல்வர் ஒழிக!///

உட்கட்சி பூசலை நாம பேசி தீர்த்துக்களாம் என்னது இது சின்னபுள்ள தனமா காங்கிரஸ் கட்சி மாதிரி நாம எல்லாம் சேவை செய்ய வந்தவர்கள் பதவியா முக்கியம்:))
சரி நீங்க வட நாட்டு ஹீரோயின்களை மேம்படுத்துங்க, அவரு உள்ளூர் நடிகைகளை மேம்படுத்தட்டும்:)))

said...

/வேறு யார் யாருக்கு என்ன என்ன துறை கொடுக்கலாம் சொல்லுங்களேன் எல்லோருக்கு பதவி என்ற ஒரு கொள்கை இருக்கு.//

:((((((

said...

நண்பா எங்க முத்தக்காவுக்கு நோ போஸ்டிங்க் :(((((((((((((

(இருடி ராசா! அக்கா லீவுல இருக்காங்க போல வந்தப்புறம் தான் இருக்கு உனக்கு!)

said...

ஆயில்யன் said...
//தகவல் பரிமாற்ற துறை : திரு. அபி அப்பா//

எந்த விதமான தகவல் பரிமாற்ற துறை நண்பா?///

ரகசிய தகவல்கள்:))))

said...

//கடலை விவசாய மேம்பாட்டு துறை: தம்பி//


நேரஞ்சரியில்லையோ உமக்கு:))

said...

//குசும்பன் said...
ஆயில்யன் said...
//தகவல் பரிமாற்ற துறை : திரு. அபி அப்பா//

எந்த விதமான தகவல் பரிமாற்ற துறை நண்பா?///

ரகசிய தகவல்கள்:))))
//

எனக்கென்னமோ அமைச்சர் பதவி கொடுக்கற சாக்குல ஆப்பு வைச்சிட்டீஙன்னு நினைக்கிறேன் :)

said...

நண்பா எங்க விதயாக்காவுக்கு நோ போஸ்டிங் :((

(இருடி ராசா! அக்கா லீவுல இருக்காங்க வந்தப்புறம் தான் இருக்கு உனக்கு!)

said...

எங்களுக்கு பதவி அளித்த வருங்கால முதல்வர் குசும்பன் வாழ்க....

said...

என் அருமை உடன் பிறப்பு ஜெகதீசனுக்கு பதவி கொடுக்காத (ஆப்படியே எனக்கும் ) இந்த அரசாங்கத்தை கலைக்கும் வரை நான் ஓய மாட்டேன் என்று அறுதியிட்டுக் கூறிக்கொள்கிறேன்.

இவன்,

எ.ஏ.தி.க தலைவர்
எ.ஏ.தி.க. தலைமையகம்.

said...

ஆயில்யன் said...
//கடலை விவசாய மேம்பாட்டு துறை: தம்பி//


நேரஞ்சரியில்லையோ உமக்கு:))///

இல்லை எல்லா கோயிலுக்கும் எல்லா சாமிக்கும் எட்டீயூரப்பா போல் பூஜை எல்லாம் செய்துவிட்டேன், நோ பிராபிளம்:)))
////////////////////////
ஆயில்யன் said...
நண்பா எங்க முத்தக்காவுக்கு நோ போஸ்டிங்க் :(((((((((((((


நண்பா எங்க விதயாக்காவுக்கு நோ போஸ்டிங் :((///

மந்திரி சபை விரிவாக்கபடும், கவலை படாதீங்க என்ன துறை வேண்டும் என்றாலும் எடுத்துக்கலாம்:))

******************

Anonymous said...

என்னது... எங்க தலைவர் டிபிசிடி க்குப் பதவி இல்லையா??????????????

said...

//Baby Pavan said...
எங்களுக்கு பதவி அளித்த வருங்கால முதல்வர் குசும்பன் வாழ்க....
///

டேய் தம்பி உங்களுக்கு கிடையாதாம் குட்டீஸ்ல யாரு மத்த குட்டீஸ நல்ல அடிச்சு உதைச்சு காய வைக்கிறீங்களோ அவங்களுக்குதானம்!

said...

யோவ் முதல்வர் ஆகுறதுக்கு முதல் ஆதரவு கொடுத்த எனக்கு ஒரு பதவியும் இல்லையா....

ஆதரவு வாபஸ் வாங்கிக்குறேன்...2011 மந்திரி சபைக்கு 2007ல்லேயே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர்றேன்ய்யா :-(

said...

லொடுக்கை விட்டுட்டீங்களே :)

said...

உடனடி அதை மாற்றுங்கள். அல்லது வழக்கம் போல அதற்கு ஒரு விளக்கம் கொடுங்கள்
//

விளக்கமே எங்களுக்கு வேண்டும்
:)

said...

கால்நடை துறை (கோழியும் அடக்கம்) : டாக்டர்.காயத்ரி

திரும்ப ஒருக்கா இங்கயும் கேட்கறென், இது என்ன அவங்க படிச்சி வாங்கின பட்டமா ?

said...

ஆயில்யன் said...
//Baby Pavan said...
எங்களுக்கு பதவி அளித்த வருங்கால முதல்வர் குசும்பன் வாழ்க....
///

டேய் தம்பி உங்களுக்கு கிடையாதாம் குட்டீஸ்ல யாரு மத்த குட்டீஸ நல்ல அடிச்சு உதைச்சு காய வைக்கிறீங்களோ அவங்களுக்குதானம்!

ஏன்ணெ நாங்க எல்லாம் ஒத்துமையா நல்லா இருந்தா உங்களுக்கு பிடிக்காதா, அது தான் முதல்வர் எஞ்சினியர் (எவ்ளொ நாள் தான் டாக்டர் பட்டம் தரது அதான்) குசும்பன் 10 மந்திரி போஸ்ட் குடுக்கரதா பிராமிஸ் பண்ணிருக்காரே

said...

தேவ் | Dev said...
யோவ் முதல்வர் ஆகுறதுக்கு முதல் ஆதரவு கொடுத்த எனக்கு ஒரு பதவியும் இல்லையா....

ஆதரவு வாபஸ் வாங்கிக்குறேன்...2011 மந்திரி சபைக்கு 2007ல்லேயே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர்றேன்ய்யா :-(

என்னப்பா இது தேவ் அங்கிள்'கு பதவி இல்லயா, உடனடியா நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அடுத்த முதல்வரா தேவ் அங்கிளை தேர்ந்து எடுப்போம்

said...

எ.ஏ.தி.க said...
என்னது... எங்க தலைவர் டிபிசிடி க்குப் பதவி இல்லையா??????????????///

கொடுத்தாச்சு:)))

*****************************

ஆயில்யன் said...
///டேய் தம்பி உங்களுக்கு கிடையாதாம் குட்டீஸ்ல யாரு மத்த குட்டீஸ நல்ல அடிச்சு உதைச்சு காய வைக்கிறீங்களோ அவங்களுக்குதானம்!///

உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு இப்படி சண்டைய மூட்டி விடுறீங்க.. குட்டிஸ் என்று நான் சொல்லி இருப்பதால் எத்தனை குட்டிஸ் உண்டோ அத்தனை குட்டிஸ்க்கு பதவி உண்டு!!!

said...

தேவ் | Dev said...
///ஆதரவு வாபஸ் வாங்கிக்குறேன்...2011 மந்திரி சபைக்கு 2007ல்லேயே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர்றேன்ய்யா :-(////

என்னப்பா பொசுக்கு பொசுக்குன்னு கோச்சுக்கிறீங்க!! உங்கள பேசாம சபாநாயகரா ஆக்கிடவா?

************************

மின்னுது மின்னல் said...
லொடுக்கை விட்டுட்டீங்களே :)///

அதான் அவர் அண்ணன் பாஸ்ட் பவுலருக்கு பதவி கொடுத்தாச்சே!!!

வாரிசு அரசியல் செய்கிறோம் என்று சொல்லிட கூடாது பாருங்க:))
*****************************

Baby Pavan said...
///திரும்ப ஒருக்கா இங்கயும் கேட்கறென், இது என்ன அவங்க படிச்சி வாங்கின பட்டமா ///

ஊசி போடு படிப்பு படிக்கவில்லை, தமிழ் Dr பட்டம் வாங்க போறாங்க:)))
(ஏய் நிஜம்தான் பா ஏன் இப்படி ஏதோ பெரிய ஜோக் சொன்ன மாதிரி எல்லாம் விழுந்து விழுந்து சிரிக்கிறீங்க?)

**************************


என்னப்பா இது தேவ் அங்கிள்'கு பதவி இல்லயா, உடனடியா நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அடுத்த முதல்வரா தேவ் அங்கிளை தேர்ந்து எடுப்போம்///

இது முறையா? நியாயமா? அடுக்குமா?

******************************