அழகான முதல் பக்க அட்டை அதில் தித்திக்கும் தமிழோசை எத்திக்கும் ஏற்றமுற என்ற வரியோடு அமீரகத் தமிழ் இணைய நண்பர்கள் ஆண்டு விழா மலர் 2007 யை அருமையாக தொகுத்துஇருக்கிறார்கள் ஆசிப், ஜெஸிலா & காமராஜன். தமிழக பாரம்பரியத்தையும் துபாய் வளர்சியையும் ஒருங்கே காட்டும் விதமாக அழகாக டிசைன் செய்து இருக்கிறார் ஷீலா ஜீவன்.
அமைப்பின் தலைவர் ஜெகபர் எழுதி இருக்கும் புதிய பாதையில் என்ற கட்டுரையோடு துவங்குகிறது மலர் அமைப்பை பற்றியும் அதன் வளர்ச்சியையும் பற்றி தெளிவாக சொல்லி இருக்கிறார்.அடுத்து தொடுவானம் தொலைவல்ல என்று ஆசிப் எழுதி இருக்கும் கட்டுரை புதியவர்களின் வருகையால் புதிய சிகரங்களை நோக்கிய பயனத்தில் தொடுவானமொன்றும் தொலைவல்லதான் என்று சுருக்கமாக சொல்லி இருக்கிறார் ஆசிப் அண்ணாச்சி!
சக்தி தாசன் எழுதி இருக்கும் அன்பான வாழ்த்துகள்
தமிழ் இனி மெல்லச்சாகும்
தமிழ்ப்புலவன் கூற்றுப் பிழையென
தாயகத் தனயர்கள் நீவிர்
தரையினில் புது மொழி தந்திர் ...
என்று ஒரு பக்க கவிதையும் அதன் கீழ் அவரை பற்றிய குறிப்பு கொடுத்து இருக்கிறார்கள்.அதன் பிறகு வலை பதிவர்கள் பலரின் படைப்புகள் இடம் பெற்று இருக்கின்றன.
இந்த புத்தகத்தில் இடம்பெற்ற வலைபதிவர்களின் பெயரும் குறிப்பும்.
உரக்க சொன்னதில்லை நீ ---- பிரேம் குமார்
ஜாலியான சோக கதை ---வா.மணிகண்டன்
ராமரும் சின்ன ராமனும்---- மதுமிதா
விந்தையான யாத்திரிகர்கள் ----- கிரிதரன் ராஜகோபால்
கவிதைகள் ---- அருட்பெருங்கோ
தாய்மை ---ஜெய்புனிஷா ஜெகபர்
உயிர் வருகை ----- பாம்பாட்டி சித்தன்
எரி சக்தி நம் தனி சக்தி --- சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்
கடிதங்களை சேகரிப்பவனின் முதல் கடிதம்--- அய்யனார்
குழந்தைகள் கடக்கும் காலை ----- முபாரக்
வாகன மாசுக்கட்டுபாடு -- சுரேஷ்
மல்லிப்பூக்களும் நிலக்கடைகளும் ----- அனிதா
கவிதைகள் --ப்ரியன்
பதுங்குகுழி ---செல்வேந்திரன்
தூவானம் முடிந்த பூமிப்பெண்--- கென்
சேலம் ரயில்வே கோட்டம் வறட்டு ஜம்பமா? --- நந்த குமார்
மாணிக்கம் பொண்டாட்டி --- உமாகதிர்
சமகால உலகக் கவிஞர்கள்--- ஷாஜஹான்
மழை வாழ்க்கை--- ஷைலஜா
விஷப் பார்வை ----ரசிகவ் ஞானியார்
கனவுகள் வேறு திசை --ஃபக்ருதீன்
நாய்குட்டிகள்---- கிரிதரன்
கனவினில் மரணம் ---மஞ்சூர் ராசா
ஒரு விமானப் பயணம்----- P.B அஹமது முஹைதீன்
அவள் பார்த்தால் சூர்யோதயம்-- மோஹன் தாஸ்
என்றென்றும் அன்புடன் ----அப்துல் காதர்
தாம்பத்யம்--- செல்வராணி சேரன்
சிறந்த நடிகர்----- நஜிமுதீன்
காதலிக்கு காதலனின் உருக்கமான கடிதம்----சா.முகம்மது அபுபக்கர்
யார் திருந்தவேண்டும்---- சரவணன்
பெண் விடுதலை --- ஆசிப் மீரான்
கவிதைகள்--- முத்துகுமரன்
சுகுணா என் காதலி---- ஜெஸிலா ரியாஸ்
கவிதை துளி--- H.பானு ஃபசுல்ஹக்
மனித தர்மம்-----பட்டுக்கோட்டை பாலு
ஒரு கடலாக! ----ப்ரியன்
வலைபதிவு என்றால் என்ன? --- சிந்தாநதி
இதில் அனைவரது புகைபடத்துடன் அவர் அவர்களை பற்றிய சிறு குறிப்பும் இருக்கிறது பின் கடைசி பக்கத்தில் அனைவரது முகவரிகளும் இருக்கிறது.
வலைபதிவர்களை தவிர்த்து பார்தால் தாய்மை கதையும், சேரன் மனைவி எழுதிய தாம்பத்யம் கதையும் அருமை. பின் பல பக்கங்களில் அருட்பெருங்கோ அவர்களின் கவிதை சிதறிக்கிடந்துபடிக்க நிறைவாக இருக்கிறது.
நீ பிறந்த பிறகுதான்
உன் அப்பாவுக்கே
பெயர்வைத்தார்களா?
அழகப்பன் என்று.
என்ற அருட்பெருங்கோ கவிதையும்.
சென்ற வருட வறட்சிக்கே
ஊர் காலியானது தெரியாமல்
இன்னும்
காவல் காத்துக் கொண்டுருக்கிறார்
ஊர் எல்லையில்
அய்யனார்.
என்ற ப்ரியன் கவிதையும் நான் ரசித்தவை.
மிகவும் கஷ்டபட்டு அழகான ஆண்டு விழா மலரை தொகுத்த ஆசிப்க்கும் ஜெஸிலா அவர்களுக்கும் வாழ்த்துகளை சொல்லுவோம்.
14 comments:
ஆசிப், ஜெசிலா, காமராஜன், வடிவமைத்த ஷீலா ஜீவன் மற்றும் உதவிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
அனைவருக்கும் வாழ்த்துக்கள் ;)
மஞ்சூர் ராசா said...
ஆசிப், ஜெசிலா, காமராஜன், வடிவமைத்த ஷீலா ஜீவன் மற்றும் உதவிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.///
நன்றி:))
******************
நாகை சிவா said...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்///
நன்றி:))
******************
கோபிநாத் said...
அனைவருக்கும் வாழ்த்துக்கள் ;)//
நன்றி:))
**********************
தகவலுக்கு மிக்க நன்றி குசும்பன்.
ஆண்டு விழா குழுவினருக்கும் என் நன்றிகளும் வாழ்த்துக்களும்
-
பிரேம்குமார்
http://premkumarpec.blogspot.com
வாழ்த்துக்கள் நல்ல முயற்சி.
அனைவருக்கும் வாழ்த்து(க்)கள்
இப்படி ஒரு புத்தகம் வருகிறதா எனக்கு இது புதிய தகவல். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
/ஆசிப்க்கும்//
/ஜெஸிலா அவர்களுக்கும்//
என்ன கொடுமை இது சரவணன்?? ;-((
இருந்தாலும் மலர் வடிவமைப்பில் முழுகவனமும் செலுத்தியதற்காகப் பாராட்டுதல்கள் எல்லாம் ஜெஸிலாவுக்கே உரித்தானது. என் பங்கு சும்மா மேற்பார்வை மட்டுமே :-)) (ஒருவேளையும் செய்யாத டேமேஜர் மாதிரின்னு வைங்க)
சாத்தான்குளத்தான்
தகவலுக்கு நன்றி குசும்பன்.
மலர் வடிவைப்பிற்குப் பின் இருக்கும் உழைப்புக்குரிய அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்.
படைப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
பிரேம் குமார்
தாசன்
துளசி கோபால்
அனைவருக்கும் நன்றி.
***************************
மங்களூர் சிவா இது ஆண்டு விழா மலர் வருடத்துக்கு ஒருமுறைதான்:)))
*****************************
ஆசிப் மீரான் said...
/ஆசிப்க்கும்//
/ஜெஸிலா அவர்களுக்கும்//
என்ன கொடுமை இது சரவணன்?? ;-((
இருந்தாலும் மலர் வடிவமைப்பில் முழுகவனமும் செலுத்தியதற்காகப் பாராட்டுதல்கள் எல்லாம் ஜெஸிலாவுக்கே உரித்தானது. என் பங்கு சும்மா மேற்பார்வை மட்டுமே :-)) (ஒருவேளையும் செய்யாத டேமேஜர் மாதிரின்னு வைங்க)///
அண்ணாச்சி நீங்க சிவாஜி ரஜினி மாதிரி புகழ்ச்சி பிடிக்கமாட்டேங்குது உங்களுக்கு:)))
**********************************
அருட்பெருங்கோ said...
தகவலுக்கு நன்றி குசும்பன்.///
நன்றி அருட்பெருங்கோ
மனித தர்மம்-----பட்டுக்கோட்டை பாலு - அவரது பதிவக முகவரி வேண்டுமே..
அல்லது அவரது தொலைபேசி எண்ணாவது..?
என் நெருங்கிய நண்பர்..இடையில் தொடர்பில்லை..
அனைவருக்கும் வாழ்த்துக்கள். குசும்பன் வாழ்த்துக்கள் உங்களுக்கும் தான்.
அட! இந்த பதிவை இப்பதான் பார்க்கிறேன் குசும்பரே. குசும்பரும் அப்பப்ப கொஞ்சம் மேட்டரும் எழுத ஆரம்பிச்சிட்டா போலிருக்கே எல்லாம் ஆசிப் தயாரிப்புன்னு சொல்றாங்க உண்மைங்களா? :-) இதை எழுத கரிக்கிட்டா எல்லாம் வாங்கிக்கிட்டீங்களா? ஆனால் கொஞ்சம் அதிகமாவே இருக்கே :-). இருந்தாலும் நன்றிங்கோ.
Post a Comment