நேற்று அமீரகத்தில் ஸ்டார் பள்ளி கூடத்தில் அமீரகத் தமிழ் மன்றம் ஆண்டு விழா நடந்தது.இது 7 வது வருட விழா என்றும் அதுக்கு இயக்குநர் சேரன் வருவது என்பது இரண்டாவது முறை என்பதும் அங்கு சென்ற பிறகுதான் தெரிந்தது, ஆசிப் சொன்னவுடன் என்ன ஏது என்று தெரியாமல் வழி தெரியாமல் மாட்டிக்கிட்ட ஆட்டு குட்டி போல் தவித்தேன் அங்கு போய். காரணம் நான் நினைத்தது வருபவர்கள் எல்லாம் பிளாக்கராக இருப்பார்கள் போல என்று நினைத்தேன் ஆனால் அவர்கள் எல்லாம் பெரும் தலைகள் எல்லாம் புத்தகத்தில் எழுதியவர்கள், எழுதிகொண்டு இருப்பவர்களாம்.
தமிழ் தாய் வாழ்த்துடன் ஆரம்பம் ஆன விழா பின் சிறுமியின் நடனம் கலை நிகழ்ச்சி பின் ஆண்டு விழா மலரை சேரன் வெளியிட்டார்.அதன் பிறகு சிரிக்கவைக்க போவது யார் நிகழ்சியும் நடந்தது.
பள்ளி கூட நிர்வாகி ஒருவர் பேசும் பொழுது இங்கு படிக்கும் தமிழ் மாணவர்களுக்கு தமிழ் மொழியை சொல்லி கொடுக்க நீங்கள் ஏற்பாடு செய்யவேண்டும், இல்லை என்றால் இங்கு பயிலும்இந்த தலைமுறை குழந்தைகள் தமிழ் எழுத தெரியாமல் போய்விடும் என்றார்.அவர் சொன்னது கசப்பான உண்மை தமிழ்நாட்டில் இருக்கும் பல காண்வெண்ட் குழந்தைகளுக்கே தமிழ் எழுததெரிவது இல்லை.
விழாவில் கலக்கிய மூவர்!
இந்த பதிவுக்கு தலைப்பு சேரனை திருத்திய ஆசிப் மீரான் என்றுதான் வைக்கலாம் என்று இருந்தேன் வழக்கம் போல் குசும்பு என்று நினைத்து பல பேர் படிக்காமல் போய்விடுவார்களோ என்று விழாவை பற்றிய தலைப்பையே வைத்துவிட்டேன். விழாவை நடத்துவது அல்லது தொகுத்து வழங்குவது என்பது சாதாரன விசயம் அல்ல அதை எவ்வித தயாரிப்பும் பேப்பரில் எழுதி வைத்து எல்லாம் படிக்காமல் மிக இயல்பாக சுத்த தமிழில் நிகழ்சியை தொகுத்து வழங்கினார் ஆசிப், சிலரிடம் இருந்து கற்றுகொள்ள ஒன்று இரண்டு விசயங்கள் இருக்கும் இவரிடம் பல விசயம் இருக்கிறது அதில் முக்கியமாக தமிழ் பேசும் அழகு. சேரன் பேசும் பொழுது சொன்னார், எனக்கு பேசும் பொழுது ஆங்கில வார்த்தைகள் அதிக வந்து கொண்டு இருந்தது முதல் முறை இங்கு வந்த பொழுது சரளமாக ஆங்கில கலப்பு இல்லாமல் வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் தமிழ் பேசும் பொழுது ஏன் நம்மால் முடியாது என்றுஅன்று எனக்கு தோன்றியது அது தோன்ற காரணமாக இருந்தது நண்பர் ஆசிபின் பேச்சு என்று குறிப்பிட்டார் அதில் எதும் மிகை இல்லை. இவரின் பேச்சு மிகவும் அருமையாக இருந்தது.
அடுத்து கலக்கியவர் சேரன் மிகவும் எளிமையாக எவ்வித பந்தாவும் இல்லாத பேச்சு, ஒரு இடத்தில் அவர் சொன்ன கருத்து எனக்கு மிகவும் பிடித்தது, தமிழுக்காக தமிழர்களால் நடத்தபடும் விழாவில் கலந்துகொள்ள எந்த நடிகரேனும் காசு கேட்பார்களேயானால் அவர்களை தவிர்த்து விடுங்கள் என்று முன்பே சொன்னதாகவும் திரும்ப ஏன் என்னை கூப்பிடுகிறீர்கள் நான் ஒன்னும் அந்த அளவுக்கு முகபூச்சு இல்லாத நடிகன்/ இயக்குனர்தானே என்றதற்கு எங்களுக்கு அதை போல் ஒருவர்தான் வேண்டும் என்றும் சொல்லி எங்களை கூப்பிட்டனர் என்றார்.அடுத்த முறை விழா நடத்தும் பொழுது நீங்கள் கூப்பிடுகிறீர்களோ இல்லையோ நானே வருவேன் அப்பொழுது நீங்கள் லேபர் கேம்பில் அல்லது மிகவும் கஷ்ட படும் நபர்களையையும் அழைத்து விழாவில் கலந்துக்க வைக்கனும். அவர்களுக்கு நீங்கள் தான் ஆதரவாக இருக்கனும் என்றார் அது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.
அடுத்து கலக்கியவர்கள்
கலக்க போவது யார் நிகழ்சியில் பங்கு பெற்ற நால்வர் வந்து இருந்தனர். அதில் குறிப்பாக தேவா என்பவர் மிமிகிரி ஷோ ஹைலைட்டாக அமைந்தது அவர் செய்த காதல் கொண்டேன்படத்தில் இருந்து கிளைமேக்ஸ் சீனிலில் பேசும் தனுசின் வசனமும் ஆடலுடன் திவ்யா திவ்யா என்று சொல்லி ஆடும் ஆட்டத்தையும் செய்து காட்டினார் மிக சிறப்பாக இருந்தது.பின்பு நான்கு கால்களுடன் ஒருவர் ஆடினார். இந்த நிகழ்சியை தொகுத்து வழங்கியவர் ஜெஸிலா அவர்கள்.
11 மணிக்கு மேலும் நிகழ்சி தொடர்ந்து கொண்டு இருந்தது இந்த நிகழ்சிக்கு பிறகு அண்ணாசி ஆசிப் சொந்த குரலில் பாட்டு ஒன்று பாடபோவதாக கழுகார் சொன்னதை அடுத்து மறுநாள் வேலைக்கு போகவேண்டும் என்ற நினைவு வந்தது எங்கு அண்ணாச்சியின் பாட்டில் "சொக்கி" விடுவோமோ என்ற பயத்தில் அவரிடம் சொல்லிவிட்டு நானும் லொடுக்குவும் எஸ்கேப்:))
வருத்தம்: சேரன் பேசும் பொழுது பெருசுங்க என்று சிலரை குறிப்பிட்டார் பின் இளசுகள் என்று குறிப்பிடும் பொழுது அவரையும் அண்ணாச்சியையும் இளசு என்று சொல்லிவிட்டார்:(((((அவரை சொல்லிக்கிட்டது கூட பரவாயில்லை அண்ணாச்சியை இளசு என்று சொன்னதை நினைத்து தூக்கமே வரவில்லை.
நிஜ வருத்தம்:
1) நிகழ்ச்சி முழுவதையும் பார்கமுடியவில்லை காரணம் நேரம் போதவில்லை அடுத்த முறை கொஞ்சம் முன்பே ஆரம்பிக்கலாம் அல்லது சில நிழச்சியின் நீளத்தை குறைக்கலாம்.
2) தமிழுக்காக என்று கூடி இருந்த பலரும் தங்கள் உறவினர்கள் , குழந்தைகளோடு ஆங்கிலத்தில் தான் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
விழாவிற்கு வந்து இருந்தவர்கள்:
இயக்குனர்: சேரன்
தொழில் அதிபர் : RK
அசத்த போவது யாரு டீம் நால்வர்
விழாவிற்கு வந்து இருந்த வலை பதிவர்:
பினாத்தல் சுரேஷ்
அய்யனார்
தம்பி உமாகதிர்
லொடுக்கு
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
//தாயரிப்பும் //
//ஏன் நம்மாள் முடியாது //
//) நிழச்சி //
நண்பா உமக்கு நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன்!
ஆசிப் அண்ணாச்சிக்கிட்ட வாங்கி கட்டிக்க போறீங்க....!????
அப்பக்கண்டிப்பா அவங்கெல்லாம் தமிழங்கதான். சந்தேகமே இல்லை.
நல்லா சொன்னீங்க...!
சேரன் சார் எப்பவுமே மனிதாபிமானம் மிகுந்த இயக்குனர்..எங்க உதவி இயக்குனர் வட்டாரத்துலயே ஒரு நல்ல அபிப்ராயமும் மரியாதையும் கிடைக்கப்பெற்றவர்..முகமூடி அணியத்தெரியாத படைப்பாளி..
எங்க வீட்டுக்கும் வந்து போங்க..
http://surekaa.blogspot.com
(இது டெம்ப்ளேட் இல்லங்கோ..)
நல்லா எழுதியிருக்கீங்க அண்ணாச்சி!!
பொதுவா நமக்கு தொடர்பில்ல நிகழ்ச்சியா இருந்தா,நடுவுல இருக்கற வரிகளை விட்டுட்டு மேலோட்டமா படிச்சிட்டு போவோம்,ஆனா இதை படிக்கும் போது முழுசா படிச்ச்சிட்டு போனேன்.உங்க நடை தெளிவாவும் சலிப்பில்லாமலும் இருந்துச்சு!!
வாழ்த்துக்கள்! :-)
;-))
ஆண்டு விழா மலரை அண்ணாச்சி சிறப்பாக உருவாக்கியிருந்தார் என கேள்விப்பட்டேன். அதைப்பற்றி எதுவுமே எழுதவில்லையே. ஏன் உங்களுக்கு கிடைக்கவில்லையா?
ஆசிப் ஏன் குசும்பனுக்கு கொடுக்கவில்லையா?
//ஆண்டு விழா மலரை அண்ணாச்சி சிறப்பாக உருவாக்கியிருந்தார் என கேள்விப்பட்டேன். அதைப்பற்றி எதுவுமே எழுதவில்லையே. ஏன் உங்களுக்கு கிடைக்கவில்லையா?//
மஞ்சூர் இந்த கேள்விய கேக்க சொன்னது யாரு?
நான்னு மட்டும் சொல்லிடாதிங்க! அவரே வெந்த புண்ணுல வேல பாய்ச்ச்ட்டிங்கன்னு உங்க மேல கோவத்துல இருக்கார். :)
இது குசும்பன் பதிவு தான? :ப்
:)))
husbandology paadam aarambhiruku. budan kilama paadam varuthu.
www.pudugaithendral.blogspot.com
vaanga.
ஆயில்யன் said...
நண்பா உமக்கு நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன்!///
சரியாக சொன்னீங்க
///ஆசிப் அண்ணாச்சிக்கிட்ட வாங்கி கட்டிக்க போறீங்க....!????///
:))))
****************************
சின்ன அம்மிணி said...
அப்பக்கண்டிப்பா அவங்கெல்லாம் தமிழங்கதான். சந்தேகமே இல்லை.///
:))) சரிதான்
**************************
சுரேகா.. said...
நல்லா சொன்னீங்க...!
சேரன் சார் எப்பவுமே மனிதாபிமானம் மிகுந்த இயக்குனர்..எங்க உதவி இயக்குனர் வட்டாரத்துலயே ஒரு நல்ல அபிப்ராயமும் மரியாதையும் கிடைக்கப்பெற்றவர்..முகமூடி அணியத்தெரியாத படைப்பாளி..///
இப்படி இருந்தா ரொம்ப கஷ்டமாச்சே:))) உங்க வீட்டுக்கும் வந்துட்டேன்:)))
****************************
CVR said...
நல்லா எழுதியிருக்கீங்க அண்ணாச்சி!!
உங்க நடை தெளிவாவும் சலிப்பில்லாமலும் இருந்துச்சு!!
வாழ்த்துக்கள்! :-)///
ரொம்ப நன்றி தம்பி:)))
***************************
கோபிநாத் said...
;-))///
:)))))
****************************
மஞ்சூர் ராசா said...
ஆண்டு விழா மலரை அண்ணாச்சி சிறப்பாக உருவாக்கியிருந்தார் என கேள்விப்பட்டேன். அதைப்பற்றி எதுவுமே எழுதவில்லையே. ஏன் உங்களுக்கு கிடைக்கவில்லையா?
ஆசிப் ஏன் குசும்பனுக்கு கொடுக்கவில்லையா?///
கொடுத்தார் அவர் இரவு வீட்டுக்குவரும் பொழுதே மணி 12.30 ஆகிவிட்டது பிறகு படிக்கவில்லை, நேற்றுதான் படித்தேன் மிகவும் அழகான தொகுப்பாக இருக்கிறது!!!
உங்கள் கவிதை ஒன்றும் வந்து இருக்கிறது!!!
*****************************
தம்பி said...
//ஆண்டு விழா மலரை
நான்னு மட்டும் சொல்லிடாதிங்க! அவரே வெந்த புண்ணுல வேல பாய்ச்ச்ட்டிங்கன்னு உங்க மேல கோவத்துல இருக்கார். :)///
இல்லேன்னா மட்டும் தெரியாமல் போய்விடுமா? இருடி மகனே!!!
*************************
பொடியன்~ said...
இது குசும்பன் பதிவு தான? :ப்///
ஏன் ஏனி பிராபிளம்?
**************************
புதுகைத் தென்றல் said...
:)))
husbandology paadam aarambhiruku. budan kilama paadam varuthu.
www.pudugaithendral.blogspot.com
vaanga.///
வந்துடலாம்:))
****************************
அண்ணாச்சி ஆசிப் அவர்களே நிகழ்ச்சி எப்படி இருந்தது.
(தம்பியும் குசும்பனும் ஏதேனும் சொல்வார்கள் அதையெல்லாம் கண்டுக்காதீங்க)
Last friday this program telecasted in Mega Tv in thamiza thamiza program(morning 11'clk)
they telecasted for 2 hrs
Post a Comment