Thursday, December 20, 2007

பில்லா 2007 சொட்டை மனோகர் டவுட்?

பில்லா படத்தை பற்றி எல்லோரும் அலசி காயப்போட்டு விட்டாங்க. இதுக்கு மேல சொல்ல ஒன்னும் இல்லை என்று ஆனபிறகு நாம என்னத்தை சொல்வது! பில்லா படம் சுமாராக இருக்க என்ன காரணம் என்று பாக்கலாம்.

கதை ஒன்றும் புதிய கதை இல்லை என்பதால் கதை பற்றி விமர்சனம் தேவை இல்லை.


படம் சுமாராக இருக்க காரணம் அஜித்தின் கடின உழைப்பு என்றால் மிகையாகாது. அப்படி என்னா உழைப்பு என்று நீங்ககேட்கலாம்.

1) வித விதமான கோட் ஷூட் போட்டுக்கிட்டு f tvயில் பசங்க கேட் வாக் போவாங்க (அத எப்ப நாம பார்த்து இருக்கோம், பொண்ணுங்க ஷோவுக்கு நடுவே விளம்பரம் போடுவாங்கஅப்ப பார்த்தது)அது போல நடக்க கடின பயிற்ச்சி எடுத்து இருக்கார்.

2) அதிகம் பேசாமல் இருந்து இருக்கிறார். (சிட்டிசனில் வரும்: எலே கலெக்ட்டரூரூரூ , நான் தானா வளர்ந்த காட்டு மரம் போன்ற தன் டயலாக் பேசி தன் திறமையை காட்டாமல் இருக்கிறார்)

3) பார்க்க அஜித் அழகாக இருக்கிறார்.

படத்தில் எனக்கு பிடித்தவை:

1)செய் பாட்டுக்கு டான்ஸ் ஆடும் பெண், ஹீரோயின் நயன் தாராவை விட அழகாக இருக்காங்க.


2)பின்னனி இசை


3)அஜித்தின் நடப்பு (நடிப்பு அல்ல).


சொட்டை மனோகர் டவுட்:


1)அஜித் அடிக்க கேன் கேன் என்று கேட்கிறீங்களே கிருஸ்னாயில் வாங்கவா, இல்லை பெட்ரோல் வாங்கவா?


2) ஏம்மா நயன் ஏதோ முத்து குளிக்க போவது போல் உடம்ப ஒட்டி டிரஸ் போட்டு இருக்கீங்களே அது எதுக்கு?


3) பெண் டிரைவ் பெண் டிரைவ் என்று சொல்லி ஒரு பிளாஸ்டிக் டப்பாவை தேடுறீங்க பெண் டிரைவ்வை தேடனும் என்றால் ரோட்டில் போய் நின்னா பெண் டிரைவை நிறைய பார்கலாமே!!!
கருத்து கந்தசாமி:

அஜித் கடைசியா படத்தில் நீங்க சொல்றீங்க I am wired ஆனா படம் பார்க்கும் மக்கள் we are very tired என்று சொல்றாங்களே அது ஏனுங்கோ!!!

10 comments:

Anonymous said...

//
1)அஜித் அடிக்க கேன் கேன் என்று கேட்கிறீங்களே கிருஸ்னாயில் வாங்கவா, இல்லை பெட்ரோல் வாங்கவா?//

சிங்கப்பூர், மலேசியாவில் இந்தச் சொல் பேச்சு வழக்கில் அதிகம் பயன்படுகிறது. கதைக்களம் மலேசியாவாக இருப்பதால் படத்திலும் வருகிறது. i can do it, can u do it? போன்ற சூழல்களில் வரும் can என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் எடுத்துக் கேட்பது அந்த ஊர் வழக்கம்.

//3) பெண் டிரைவ் பெண் டிரைவ் என்று சொல்லி ஒரு பிளாஸ்டிக் டப்பாவை தேடுறீங்க பெண் டிரைவ்வை தேடனும் என்றால் ரோட்டில் போய் நின்னா பெண் டிரைவை நிறைய பார்கலாமே!!!//

நிசமாலுமே புரியாமத் தான் கேக்குறீங்களா? pen drive = flash drive = thumb drive = usb disk எல்லாம் ஒன்னு தான்..

said...

அனானி என்னை சாச்சுபுட்டிங்களே சாச்சுபுட்டிங்களே!!!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:((((

said...

குசும்பா, யார் மேலே விமர்சனம் வைக்கிற...அவர் கொஞ்ச அந்தப் பக்கம் சாய்ச்சு நடிச்சா, வித்தியாசமான வேடமின்னு சிலாகிச்சு படம் பாக்க ஒரு கூட்டமே இருக்கு..அஜித் படம் பாக்கிறது தான் என் ஆம்பிசன்னு...ஒரு பிரபலமான பதிவர் என் கிட்டே சொன்னார்..அதுனாலே...

இதெல்லாம்..ஆரயக்கூடாது...அனுபவிக்கனும்...(அது மண்டை வலியாக இருந்தால் கூட...)

அப்பறம்...அந்த அனானிக்கு ஒரு பெரிய வணக்கம்...அய்யா...நீர் புலவர்....நான்... ;))))))))

said...

:)))

Anonymous said...

//நிசமாலுமே புரியாமத் தான் கேக்குறீங்களா? pen drive = flash drive = thumb drive = usb disk எல்லாம் ஒன்னு தான்..//


நிசமாலுமே 'சொட்டை மனோகர்' character புரியாமத் தான் கேக்குறீங்களா? :)))))))

Pls watch the antics of 'சொட்டை மனோகர்' in lollu-sabha.blogspot.com

said...

அனானி!

அய்யோ பாவம்!

//(சிட்டிசனில் வரும்: எலே கலெக்ட்டரூரூரூ , நான் தானா வளர்ந்த காட்டு மரம் //

தானா வளர்ந்த காட்டு மரம் அமர்க்களம் படத்தில் வரும் டயலாக்.. நீ எல்லாம் என்னய்யா தமிழ் இனம்.. ஒரு டயலாக் எந்த படத்தில் வந்தது என்று தெரியல..

said...

:-))))))))))))

said...

//
அஜித் கடைசியா படத்தில் நீங்க சொல்றீங்க I am wired ஆனா படம் பார்க்கும் மக்கள் we are very tired என்று சொல்றாங்களே அது ஏனுங்கோ!!!
//
ஐயய்யோ பாக்கலாம்னு இருந்தேன் நல்லவேளை தப்பிச்சிட்டேன்!!

said...

/// TBCD said...
இதெல்லாம்..ஆரயக்கூடாது...அனுபவிக்கனும்...(அது மண்டை வலியாக இருந்தால் கூட...)////

அஜித்தோடு ஆஞ்சநேயா படம் பார்த்து விட்டு ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்திவிட்டு வேண்டிக்கிட்டேன் தப்பு தவறி கூட என்னை இனி அஜித் படம் பார்க்கவைத்து விடாதேன்னு.

இப்பொழுதுதான் வடையை வாபஸ் வாங்கினேன். பரவாயில்லை:)

**************************

ஜெகதீசன் said...
:)))
///தானா வளர்ந்த காட்டு மரம் அமர்க்களம் படத்தில் வரும் டயலாக்.. நீ எல்லாம் என்னய்யா தமிழ் இனம்.. ஒரு டயலாக் எந்த படத்தில் வந்தது என்று தெரியல..///

ஹி ஹி :))) நீங்க எல்லாம் உசாரா இருக்கீங்களா பதிவை படிக்கிறீங்களான்னு டெஸ்ட் செஞ்சேன்:)))

*****************************

மங்களூர் சிவா said...
///ஐயய்யோ பாக்கலாம்னு இருந்தேன் நல்லவேளை தப்பிச்சிட்டேன்!!///

அந்த அளவுக்கு எல்லாம் மோசம் இல்லை சிவா பார்க்கலாம்!!!!

*******************************

said...

ஆங்கிலப் படங்கள் மாதிரி தமிழ்ப் படங்கள் திறமையான தொழில்நுட்பத்துடன் வருவதில்லை என்று புலம்புவீர்கள், அதனை நோக்கி ஒரு தமிழ்ப் படம் எடுத்தால் அது நொட்டை, இது சொட்டை என்று கலாய்ப்பீர்கள்.. அம்முவாகிய நான், கற்றது தமிழ், ஆட்டோகிராப் போன்ற படங்களுடன், பில்லா 2007 மாதிரியான படங்களும் தமிழுக்குத் தேவை தான்..