Monday, December 17, 2007

உண்மையை சொல்லும் நேரம் இது!!!

நேற்று பிறந்தநாள் மிக சந்தோசமாக அனைவருடைய வாழ்த்துக்களுடன் ஒரு நாள் ஓடி போனது தெரியாமல் ஓடி போனது.

வாழ்த்து சொன்ன நண்பர்கள், சொல்லனும் என்று நினைத்து சொல்ல முடியாமல் போன அன்பு நண்பர்கள். பெயர்களை குறிப்பிட்டு நன்றி சொன்னால் முறையாக இருக்காது. அதனால் எல்லோருக்கும் பல கோடி நன்றி!!

நீங்கள் காட்டிய அன்புக்கும் பாசத்துக்கும் சாதாரனமாக 10000 அல்லது 20000 ரூபாய்க்கு எல்லாம் ட்ரீட் என்று ஒன்றை வைத்து உங்கள் அன்பை சிறுமை படுத்த விரும்பவில்லை!

அப்புறம் எல்லோரும் ஒவ்வொரு வயசை சொல்லி வாழ்த்து சொல்றாங்க சொல்லுங்க ஏன் 80ன்னு கூட சொல்லுங்க ஆனா அப்படி வாழ்த்து சொல்லும் உங்களை விட நான் ஒரு வயதுதான் பெரியவன் என்பதை சொல்லிக்கிறேன். (குட்டீஸ் நீங்க மட்டும் விதிவிலக்கு). எங்க இப்ப சொல்லுங்க எனக்கு எத்தனை வயசு?

அப்புறம் இன்று முதல் வெள்ளி கிழமை வரை பிறந்தநாளை முன்னிட்டு விடுமுறை அறிவித்த அன்பு நண்பன் துபாய் ராஜா (ஹலோ நான் இல்லீங்க) அவர்களுக்கு நன்றி:)

நன்றி நன்றி நன்றி!!

28 comments:

said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

said...

பஸ்ட்டூ....

என்சாய்.....

said...

//அப்புறம் எல்லோரும் ஒவ்வொரு வயசை சொல்லி வாழ்த்து சொல்றாங்க சொல்லுங்க ஏன் 80ன்னு கூட சொல்லுங்க ஆனா அப்படி வாழ்த்து சொல்லும் //

வாழ்த்துக்கள்... உங்களை விட நான் ஒரு நாள் சிறியவன்...எனென்றால் நேற்று உங்களுக்கு பிறந்தநாள்.

:))

//நீங்கள் காட்டிய அன்புக்கும் பாசத்துக்கும் சாதாரனமாக 10000 அல்லது 20000 ரூபாய்க்கு //

10,000 திர்ஹாமுக்கு டிடி எடுத்து வச்சிருந்தேன் இப்போ வேண்டாமுன்னு சொல்லிட்டிங்க ... சரி எதாவது முதியோர் இல்லத்துக்கு உங்க பேரைச் சொல்லி கொடுத்துடுறேன்.
:)))0

said...

பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

நேத்தே தெரியாம போச்சே குசும்பன் சாரிப்பா

என்றென்றைக்கும் சகல சௌபாக்கியங்களோடும் சீரும் சிறப்புமா வாழ்க!!!!!

said...

நன்றி மாம்ஸ்

Anonymous said...

மதுமிதா said...

பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

நேத்தே தெரியாம போச்சே குசும்பன் சாரிப்பா

என்றென்றைக்கும் சகல சௌபாக்கியங்களோடும் சீரும் சிறப்புமா வாழ்க!!!!!

இது என்ன குசும்பு, நாங்க மணிக்கு ஒரு பதிவு போட்டோமே

said...

இங்கனவும் ஒரு தடவை கூவிக்குறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள். உன்ன விட ஒன்னு இல்ல இரண்டு இல்ல மூணு வயசு எனக்கு கம்மி என்பதையும் சொல்லிக்குறேன்..

said...

Edho treata pathi soldren solli irundheenga... oru detailayum kaanom :((

Happy vacation :D

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ஹையா குசும்பருக்கு ஒருவயசு கூடிபோச்சு

said...

லேட்டா சொன்னாலும்...
வாழ்த்துக்கள் சார்..!

எங்கள் வாழ்வும்
எங்கள் வளமும்

மங்காத குசும்பனென்று

சங்கே முழங்கு..!

said...

நன்றி திவ்யா,

நன்றி JK


கோவி.கண்ணன் said...
//வாழ்த்துக்கள்... உங்களை விட நான் ஒரு நாள் சிறியவன்...எனென்றால் நேற்று உங்களுக்கு பிறந்தநாள்.///

இது அண்ணே நான் 6 வது பாஸ் அண்ணே நீங்க 10வது பெயிலு அண்ணே என்று செந்தில் சொல்வது போல் இருக்கு:))


////10,000 திர்ஹாமுக்கு டிடி எடுத்து வச்சிருந்தேன் இப்போ வேண்டாமுன்னு சொல்லிட்டிங்க ... சரி எதாவது முதியோர் இல்லத்துக்கு உங்க பேரைச் சொல்லி கொடுத்துடுறேன்.:)))0///

எங்கேயாவது நான் வேண்டாம் என்று சொல்லி இருக்கேனா? சரி சரி எங்க வீட்டு அட்ரெசுக்கு அனுப்பிடுங்க ஏன்னா எங்க அப்பாவும் அம்மாவும் முதியவர்கள் தான்:)))

said...

மதுமிதா மிக்க நன்றிங்க:)


குட்டீஸ் உங்களை தனியாக கவனிக்கனுமே:)))

புலி நெசமாதான் சொல்றீயா?:))) மிக்க நன்றி புலி:)

G3 என் அன்பை விட பெரிய ட்ரீட் என்ன இருக்க முடியும்:))

said...

குசும்பன் said...
மதுமிதா மிக்க நன்றிங்க:)


குட்டீஸ் உங்களை தனியாக கவனிக்கனுமே:)))

மாம்ஸ் அதான் நேத்தே எங்க கிட்ட தனி தனிய அழுது பொலம்பி மன்னிப்பு கேட்டிட்டீங்களே, நாங்களும் உங்கள மன்னிச்சிட்டோமே

said...

இந்த வருசமாவச்சும், மூழுசா தாடி வளர வாழ்த்துறேன்...
பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

Anonymous said...

அன்பு சரவணா அண்ணா, உன் குசும்பு தொடரட்டும்...

Anonymous said...

அன்பு தம்பி சரவணா, உன் பணி தொடரட்டும்...

said...

நான் என்ன பொய்யா சொல்லுறேன்..

பாஸ்போர்ட் காப்பி அனுப்பவா?

said...

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் மாமா.. :-))
கொஞ்சம் தாமதம் ஆய்டிச்சி.. மன்னிச்சிடுங்க. உங்க பிறந்தநாள் அன்னைக்கு இரவு சுமார் 12 மணிக்கு மேல தான் ஒரு " ரொம்ப நல்லவர்" சொன்னார். அதுக்கப்புறம் இணைய தொடர்பு இல்லாம போச்சி.. இன்னைக்கு சொல்லிட்டேன். அக்கவுண்ட்ல வச்சிக்கோங்கோ.. :P

said...

Wish you a very Happy New Year.

said...

பல இடங்களில் பிறந்த நாள் வாழ்த்து சொல்லியாச்சு குசும்பனுக்கு.

இருப்பினும் இந்த இடம் தான் தகுதியான இடம்.

லேட்டானாலும் பரவாஇல்ல

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்

said...

பல இடங்களில் பிறந்த நாள் வாழ்த்து சொல்லியாச்சு குசும்பனுக்கு.

இருப்பினும் இந்த இடம் தான் தகுதியான இடம்.

லேட்டானாலும் பரவாஇல்ல,

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள், குசும்பரே..

//நீங்கள் காட்டிய அன்புக்கும் பாசத்துக்கும் சாதாரனமாக 10000 அல்லது 20000 ரூபாய்க்கு எல்லாம் ட்ரீட் என்று ஒன்றை வைத்து உங்கள் அன்பை சிறுமை படுத்த விரும்பவில்லை!
//

இது நல்லா இருக்கு. பயன்படுத்திக்கலாமா? காப்பி/டீ ரைட் ஏதும் இல்லயே? :)

said...

மிகவும் தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள். இதுக்குத்தான் ட்ரீட் ஏதாவது கொடுக்கவாவது போன் செய்யணும்கிறது. செஞ்சிருந்தா வாழ்த்து சொல்லியிருப்போம்ல. :-) ஆமா, சமைச்சு அய்யனாரை மட்டும்தான் வீட்டுக்கு சாப்பிட கூப்பிடுவீங்களா? ரொம்ப போங்கா தெரியலை?

said...

என்ன சிவா, G3 பண்ணீட்டிங்க - நார்மலா ரிப்பீட்டேய் தானெ பண்ணுவீங்க

said...

//
cheena (சீனா) said...
என்ன சிவா, G3 பண்ணீட்டிங்க - நார்மலா ரிப்பீட்டேய் தானெ பண்ணுவீங்க

//
ஒரு 'சேஞ்சு'க்கு!!!

said...

///TBCD said...
இந்த வருசமாவச்சும், மூழுசா தாடி வளர வாழ்த்துறேன்...
பிறந்த நாள் வாழ்த்துக்கள்....///

நன்றி உங்கள் வாழ்த்து போல் வளரட்டும்:))

*********************
நன்றி பெரியார், நன்றி மொராஜ் தேசாய்

**********************

நாகை சிவா said...
நான் என்ன பொய்யா சொல்லுறேன்..

பாஸ்போர்ட் காப்பி அனுப்பவா?///

டூப்ளிகேட் காப்பி போட்டாலும் போடுவீங்க ஒரிஜினல் பாஸ்போட் அனுப்புங்க:)))) நல்ல விலைக்கு வாங்குறாங்க!!!!

*************************

~பொடியன்~ said...
/// இரவு சுமார் 12 மணிக்கு மேல தான் ஒரு " ரொம்ப நல்லவர்" சொன்னார்.///

யார் அந்த நல்லவர்:))) புகைபட கலாமணி நந்துவா:))

*************************
நன்றி சுந்தர்,

நன்றி சீனா

நன்றி சிவா, லேட் ஆனா என்னா உங்கள் அன்பும் வாழ்த்தும் போதும்!

நன்றி தஞ்சாவூரான் என்ன இப்படி கேட்டுக்கிட்டு தாராளமா பயன்படுத்திக்குங்க:))))

நன்றி ஜெஸிலா

///ஆமா, சமைச்சு அய்யனாரை மட்டும்தான் வீட்டுக்கு சாப்பிட கூப்பிடுவீங்களா? ரொம்ப போங்கா தெரியலை?///

அய்யனார் எதையும் தாங்கும் கட்டை என் சமையலை சாப்பிட்டும் நல்லா இருக்கார் நீங்க எல்லாம் குடும்பமாக இருக்கீங்க அதான் விட்டுவிட்டேன்:)))

**************************
மங்களூர் சிவா said...
//
ஒரு 'சேஞ்சு'க்கு!!!///

அப்படியே எனக்கு ஒரு 1 லச்சத்துக்கு சேஞ்சு கிடைக்குமா?

****************************

said...

//ஆமா, சமைச்சு அய்யனாரை மட்டும்தான் வீட்டுக்கு சாப்பிட கூப்பிடுவீங்களா? ரொம்ப போங்கா தெரியலை?///

அய்யனார் எதையும் தாங்கும் கட்டை என் சமையலை சாப்பிட்டும் நல்லா இருக்கார் நீங்க எல்லாம் குடும்பமாக இருக்கீங்க அதான் விட்டுவிட்டேன்:)))//


ஓஹோ..!

அந்த சிக்கன் ஐட்டங்களுக்கு அய்யனார்தான் டெஸ்ட்டிங் பார்ட்டியா?

இப்ப அவரு எப்படி இருக்காரு...???

said...

நேத்து பேசெயிலெ சொல்லவே இல்லை.
வாழ்த்துக்கள்.