இது வரை 22% குடும்பஸ்தர்கள் தங்கள் மனைவி, குழந்தைகளை ஊருக்கு திரும்ப அனுப்பி விட்டார்களாம், வரும் இரு மாதங்களில் அது 45% ஆக உயரும் என்றும் சர்வே சொல்வதாக ரேடியோவில் சொல்லப்பட்டது. ஏன் இப்படி அனைவரும் மனைவி,குழந்தைகளை அனுப்புகிறார்கள் அப்படி என்ன பிரச்சினை?
பிரச்சினை ஒரு வழியில் வந்தால் பரவாயில்லை அனைத்து வழியிலும் வந்தால் என்ன செய்வது முதலில் தங்கும் இடத்துக்கே பிரச்சினை, முதல் அடி ஷேரிங் என்ற முறையில் குறைந்தவாடகையில் தங்கி இருக்கும் மக்களை குறிவைத்து தாக்கப்பட்டு இருக்கிறது. ஒரு பெரிய பங்களாவை(வில்லா) வாடகைக்கு எடுத்து அதை பல ரூம் போல் தடுத்து வாடகைக்கு விட்டு வந்தார்கள் ரியல் எஸ்டேட் நிறுவனத்தார். ஒரு வில்லாவில் குறைந்த பட்சம் 15 குடும்பங்களாவது இருக்கும் இனி அப்படி இருக்க கூடாது ஒரு வில்லாவில் ஒரு குடும்பம் தான் வசிக்கலாம் ஷேரிங் செய்ய கூடாது இன்னும் 10 நாட்களில் காலி செய்யவேண்டும் என்று குறைந்த வாடகையில் வசித்து வந்தவர்களின் வீட்டில் நோட்டிஸ் ஒட்டப்பட்டுவிட்டது.
இங்கு ஷேரிங்கில் இருப்பதுக்கே மாதம் 35,000 தரவேண்டி இருக்கிறது ஒரு ஆள் தனியாக தங்க வேண்டும் என்றால் வில்லாவை வாடகைக்கு எடுக்க அம்பாணிதான் வரவேண்டும்.
மூன்று மாத வாடகை, ஒரு மாத கமிசன் என்று மொத்தமாக பணம் கொடுத்தால் மட்டுமே பிளாட்டில் வீடு கிடைக்கும். எங்கே போவது அவ்வளோ பணத்துக்கு என்று பல கிளம்புகிறார்கள்.
அடுத்த அடி இங்கு துபாயில் குறைந்த வாடகையில் (30,000)க்கு வீடு வேண்டும் என்றால் எல்லோரும் கை காட்டும் இடம் சத்வா என்று அழைக்க படும் இடம். அங்கு எப்படி குறைந்தது 75,000 பேராவது வசிப்பார்கள், குடும்பங்கள், பேச்சிலர் என்று அனைவருக்கும் வீடு கிடைக்கும் பகுதி சத்வா. இப்பொழுது அந்த பகுதி முழுவதையும் இடித்துவிட்டு ஜூமைரா கார்டன் ரெசிஸ்டன்ஸ்கட்ட ஆரம்பிக்க போகிறார்களாம், அதில் குடியேற வேண்டும் என்றால் மாதம் குறைந்தது 75 ஆயிரமாவது வாடகை கொடுக்க வேண்டி இருக்கும்.
அடித்த அடி சாலிக் இது சாலைகளை காரில் கடந்து போகும் பொழுது கொடுக்க வேண்டிய வரி , ஒரு முறை கடக்க 45ரூபாய். குறைந்த வாடகைக்கு ஆசைப்பட்டு தூரமாக இருந்தாலும் பரவாயில்லை என்று ஷார்ஜா சென்ற மக்களிடம் இருந்து பணம் வாங்க செய்யப்பட்டது, இது வரை இரு இடங்களில் இருக்கிறது இன்னும் 2 இடங்களில் வர போகிறது. இதுக்கு சொல்லபடும் காரணம் டிராபிக்கை குறைக்க என்று சொன்னாலும் அது நிஜம் அல்ல. காலியா இருக்கும் பல அடுக்குமாடி குடியிருப்புகளை ஃபில்லப் செய்யவே என்று சொல்லப்படுகிறது. விடுமுறை நாட்கள் அல்லது விடிகாலை நேரங்களில் ஷார்ஜாவில் இருந்து துபாய் வர ஆகும் நேரம் 15 நிமிடம். ஆனால் காலை 6 மணிக்கு ஆபிஸ் கிளம்பினால் துபாய் வர ஆகும் நேரம்2 மணி நேரம் அது போல் மாலையும். 8 மணி நேர வேலைக்கு 4 மணி நேரம் டிராவலிங் டைம். இருந்தும் பரவாயில்லை என்று அங்கு போனவர்கள் ஒரு நாளைக்கு இனி 90ரூபாய்.
அடுத்த அடி விலைவாசி உயர்வு இரு மாதத்துக்கு முன்பு வாங்கிய 20 கிலோ அரிசி மூட்டையின் விலை 598ரூபாய், இன்று 1138 ரூபாய். அதே போல் ஆயில் 4 லிட்டர் பேக் விலை 218 ரூபாய், இப்பொழுது 402 ரூபாய். இப்படி அனைத்திலும் விலைவாசி எகிறி பறக்கிறது. இது போதாததுக்கு WAT இந்த வருட இறுதியில் இருந்துவர போகிறது.
பஸ்ஸில் வேலைக்கு போகலாம் என்றால் குறைந்தது 1 மணி நேரமாவது வரிசையில் நிற்கவேண்டி இருக்கிறது, சரி பணம் கொடுத்து யார் காரிலாவது லிப்ட் போகலாம் என்றால்அப்படி லிப்ட் கொடுப்பது சட்டவிரோதம் , போலீஸ் பிடித்தால் 50,000 ரூபாய் லிப்ட் கொடுத்தவருக்கு அபராதம்.
இங்கு என் ஆபிசில் வேலை பார்க்கும் ஆபிஸ் பாய் 1500 ரூபாயில் சாப்பிட்டு கொண்டு இருந்தவர் இப்பொழுது மாதம் 3000 வருவதாகவும் , வாடகை (ஒரு பெட் ஸ்பேஸ்)3500ல் இருந்துஇப்பொழுது 5000 ஆகிவிட்டதாகவும் சொல்கிறார் அவருடைய சம்பளம் 15,000ரூபாய். இவர் தங்கி இருக்கும் இடத்தில் ஒரு அறையில் குறைந்தது 20 பேர் இருப்பார்களாம் அனைவருக்கும்ஒரே ஒரு பாத் ரூம் காலை 3 மணியில் இருந்து ஒவ்வொருவருக்கும் 15 நிமிடம் வீதம் ஒதுக்கபடுமாம், போய் குளித்துவிட்டு வந்து படுத்து தூங்குவாராம் முன்பு 9,000 ஆயிரம் வீட்டுக்கு கொடுத்துவந்தவர் இப்பொழுது 6,000 கூட அனுப்ப கஷ்டமாக இருக்கிறது என்கிறார்.
இங்கு சுமாரான வேலையில் இருக்கும் என்னை போன்ற ஆட்களுக்கு 45,000 வரை கொடுக்க படுகிறது, அது தனியாக இருக்கும் பொழுது போதுமானதாக இருந்தது எல்லா செலவும் 20,000 முடித்து25 மிச்சம் செய்யமுடிந்தது ஆனால் இனி குடும்பத்தோடு இருக்கவேண்டும் என்றால் செலவே 40,000வரை ஆகிவிடும்.
ஒரு சிறு பட்ஜெட் (குடும்பத்தோடு இருக்க) : சம்பளம் 4000 Dhs
வீட்டு வாடகை ஷேரிங்கில்(ஷார்ஜாவில்)-- 1500 Dhs (தனி வீடு என்றால் 2500 Dhs, சிங்கில் பெட் ரூம் வீடு என்றால் 3000 Dhs ஆகும்)
வாட்டர் & எலக்ட்ரிசிட்டி -- 200 Dhs
சாப்பாடு -- 500 Dhs
டிராண்ஸ்போர்ட் -- 600 Dhs
போன் -- 150 Dhs
இதர செலவுகள் -- 200 Dhs
--------
மொத்தம் 3150 Dhs
(1 Dhs = 11.65 Rs)
(அப்பாடா எவ்வளோ ஒரு பொறுப்பா பதிவு போட்டு இருக்கேன், கல்யாணத்துக்கு பிறகு குசும்பனுக்கு பொறுப்பு வந்துடுச்சுன்னு பாராட்டு மழைய ஆரம்பிங்க, வீட்டுல காட்டனும்ல்ல)
Wednesday, May 28, 2008
Subscribe to:
Post Comments (Atom)
67 comments:
நானே அங்கிட்டு வரலாம்ங்குற ரோசனைல இருக்கேன்..இதுல இப்படியொரு பதிவப் போட்டு என் நெனப்புல மண்ணள்ளிப் போட்டுட்டீகளே அண்ணாச்சி..எனக்கு ஒரே அழுவாச்சியா வருது..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
Same situation in Kuwait also
அய்யோ பாவம்.. குசும்பனுக்கு இத்தனை கவலையா..
பொறுப்பு வந்துடுச்சுன்னு
:))
//எம்.ரிஷான் ஷெரீப் said...
நானே அங்கிட்டு வரலாம்ங்குற ரோசனைல இருக்கேன்..இதுல இப்படியொரு பதிவப் போட்டு என் நெனப்புல மண்ணள்ளிப் போட்டுட்டீகளே அண்ணாச்சி..எனக்கு ஒரே அழுவாச்சியா வருது..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//
நீங்களுமா?
ஸேம் பிளட் :))
நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் சரி
குசும்பன்,
நாங்கள் இந்தியா திரும்புவதற்கு முன் துபாயில் ஒரு வாய்ப்பு கிடைத்தது.
பட்ஜெட் போட்டு பாத்து தலை சுத்தி
"ஆணியே புடுங்க வேண்டாம்" என்ரு ஐடியாவை டிராப் செஞ்சுட்டு இந்தியா ஃபிலைட்ட் ஏறிட்டேன்.
டேய் கல்யாணம் ஆன உடனே ஓவர் நைட்ல எப்படிடா இப்படி பொறுப்பானவங்களா மாறிடறீங்க?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இந்தியாவிலேயும் விலையேற்றத்தின் பாதிப்பில் கிட்டதட்ட இப்படி ஆகிடுமாமே...
//
அடுத்த அடி விலைவாசி உயர்வு இரு மாதத்துக்கு முன்பு வாங்கிய 20 கிலோ அரிசி மூட்டையின் விலை 598ரூபாய், இன்று 1138 ரூபாய். அதே போல் ஆயில் 4 லிட்டர் பேக் விலை 218 ரூபாய், இப்பொழுது 402 ரூபாய்.
//
சிங்கையிலும் அப்படித்தான் இருக்கு அரிசி விலை.... :(
\\கல்யாணத்துக்கு பிறகு குசும்பனுக்கு பொறுப்பு வந்துடுச்சுன்னு பாராட்டு மழைய ஆரம்பிங்க\\
இப்பவாச்சும் கொஞ்சம் பொறுப்பு [அட்லீஸ்ட் பதிவிலாவது] வந்ததேன்னு ரொம்ப சந்தோஷப்பட்டுக்கிட்டோம் குசும்பன்:))
நல்ல பதிவுண்ணே ;)
enna annathey!wanthathila irunthu bayangara data collection maathiri theriyuthu....ore polambala irukkey!!nadakkattum...nadakkattum....yaam petra intha thunbam peruga neevirum!!!:)))
amaam!...saappattukku 500dhs?no chance....5kilo rice ippo 22dhs....oru thadavai weettu selavukku porutkal waanga kurainjathu 100dhs aavathu aagum....ippo ellaam saappaattu budjet 1000 thaiyum thaandithaan!!!
//எம்.ரிஷான் ஷெரீப் said...
நானே அங்கிட்டு வரலாம்ங்குற ரோசனைல இருக்கேன்..///
தனியாவா? இல்லை குடும்பத்துடனா? குடும்பத்துடன் என்றால் மாதம் குறைந்தது 10,000 Dhs வேலை என்றால் 5000 Dhs மிச்சம் செய்யலாம்.
யோசித்து கணக்கு போட்டுவிட்டு வாங்க.
****************************
மதுமதி said...
Same situation in Kuwait also//
அங்குமா?
****************************
கயல்விழி முத்துலெட்சுமி said...
அய்யோ பாவம்.. குசும்பனுக்கு இத்தனை கவலையா..//
ஜாலியா ஒவ்வொரு ஷாப்பிங் மாலா கலர் கணக்கெடுப்பு அதிகாரியா இருந்த என் நிலை இப்படி ஆச்சே:((( அதில் கொஞ்சம் வருத்தம் தான்:))
***************************
ஆயில்யன் said...
பொறுப்பு வந்துடுச்சுன்னு
:))
நன்றி இன்னும் கொஞ்சம் பெட்டரா என்னை பற்றி சொல்ல முயற்சி செய்யுங்க!:)))
*************************
புதுகைத் தென்றல் said...
"ஆணியே புடுங்க வேண்டாம்" என்ரு ஐடியாவை டிராப் செஞ்சுட்டு இந்தியா ஃபிலைட்ட் ஏறிட்டேன்.//
எஸ் ஆயிட்டீங்க போல! இன்னும் சில மாதம் கழித்து நல்ல முடிவுதான் எடுக்கனும்.
****************************
சந்தோஷ் = Santhosh said...
டேய் கல்யாணம் ஆன உடனே ஓவர் நைட்ல எப்படிடா இப்படி பொறுப்பானவங்களா மாறிடறீங்க?//
அதுவா மாப்பி ஒனக்கு சொன்னா புரியாது..கொஞ்ச நாள் கழித்து தெரியும்.
****************************
TBCD said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இந்தியாவிலேயும் விலையேற்றத்தின் பாதிப்பில் கிட்டதட்ட இப்படி ஆகிடுமாமே...///
பாதி ஆகிவிட்டது
****************************
ஜெகதீசன் said...
சிங்கையிலும் அப்படித்தான் இருக்கு அரிசி விலை.... :(//
அவ்வ்வ் எங்கேயும் அப்படிதானா?
*****************************
//தனியாவா? இல்லை குடும்பத்துடனா? குடும்பத்துடன் என்றால் மாதம் குறைந்தது 10,000 Dhs வேலை என்றால் 5000 Dhs மிச்சம் செய்யலாம்.
யோசித்து கணக்கு போட்டுவிட்டு வாங்க.//
20 வயசுப் பையனை குடும்பத்தோடு கூப்டுற முதல் ஆள் நீங்கதான் அண்ணாச்சி..
எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல..அதனால ஒரு ரெண்டு வருஷத்துக்கு உங்க கெஸ்டா வந்து அங்க டேரா போடலாம்ற ஐடியால இருக்கேன்..என்ன சொல்றீங்க? :P
//நீங்களுமா?
ஸேம் பிளட் :))//
அட ஆயில்யன்,அப்போ நீங்களும் கத்தார்ல தான் இருக்கீங்க..இக்கரைக்கு அக்கரை பச்சை..:)
எப்டிக் கண்டுபுடிச்சேன் பார்த்தேளா? :P
இப்பவாவது ரெண்டு பேருக்குப் பட்ஜெட் போடுவீங்க.
கொஞ்ச நாட்களுக்கு அப்புறம் பாப்பா, பாலு,டாக்டர்,படிப்பு!!!
யோசிக்க வேண்டிய விஷயம்.
Divya said...
இப்பவாச்சும் கொஞ்சம் பொறுப்பு [அட்லீஸ்ட் பதிவிலாவது] வந்ததேன்னு ரொம்ப சந்தோஷப்பட்டுக்கிட்டோம் குசும்பன்:))///
அவ்வ்வ் கொஞ்சம் நல்லதா நாலு வார்த்தை சொன்னாதான் என்ன:(((
*******************************
கோபிநாத் said...
நல்ல பதிவுண்ணே ;)//
ரொம்ப நன்றி தம்பி ”:)” போடாமா இரண்டு வார்தை எழுதியதுக்கு:)))
*******************************
sister said...
enna annathey!wanthathila irunthu bayangara data collection maathiri theriyuthu....ore polambala irukkey!!nadakkattum...nadakkattum....yaam petra intha thunbam peruga neevirum!!!:)))//
ஆமாம் சிஸ்டர் என்ன செய்வது வந்ததில் இருந்து வீடு புடிக்க அது இதுன்னு அலையும் பொழுதுதான் எல்லாம் தெரிகிறது. நீங்க சொல்வது வாழ்த்தா ?:(((
என்னது 1000 Dhs சாப்பாட்டுக்கா? பட்ஜெட்டில் துண்டு விழும் போல இருக்கே:(((
***************************
கோகிலவாணி கார்த்திகேயன் said...
The best way we all go to India and struggle there with the proud of we are living in OUR Country.//
ஆமாங்க அதை தான் செய்யனும்.
மிக்க நன்றி.
****************************
எஸ் ஆயிட்டீங்க போல!
அப்படி எல்லாம் சொல்ல முடியாது குசும்பன்.
இந்தியாவிலையும் விலைவாசி கண்டபடி ஏறி கிடக்கு.
வீட்டு வாடகை வானத்துல தான் இருக்கு.
ஆனாலும் நம்ம மண்ணு. அது ஒண்ணுதான் ஆறுதல்.
//சிங்கையிலும் அப்படித்தான் இருக்கு அரிசி விலை.... :(//
ஜெகதீசன், இத தெரிஞ்சுதான் நான் இப்பலாம் வெறும் oats சாப்பிட ஆரம்பிச்சுட்டேன்.
This is not only happening in Dubai. It's a global issue now.
Enjoy the life.
குடும்பத்தை துபாய் வரவழைத்து, தினம் அடிவாங்க பயந்து தானே இப்படி பதிவு போடுறீங்க. . . .
அது சரி இப்படி பொறுப்பா பதிவு போடறீங்களே, குசும்பா பதிவு போடுவீங்களா. . . .
அண்ணே அப்படியே வருடத்துக்கு ஒரு முறை ஊருக்கு போய் வந்தால் மிச்ச சொச்சமும் காலியாகி விடும் என்பதை சொல்லிடுங்க....
கல்யாணத்துக்கு பிறகு குசும்பனுக்கு பொறுப்பு வந்துடுச்சு
அடப்பாவிங்களா.
மொத்தமா குடும்பத்துக்கே 3150 துதான் ஆகுமா? எனக்குத் தனியாளா இருந்தே இன்னும் சில மடங்கு அதிமா வருதே? :-(((
குசும்ப்ஸ்
இன்னிக்கு கல்ப் நூஸ்ல சிகரெட் விலையும் ஏத்தறதா போட்ருக்கானுங்க. இது ஒண்ணுதான் ஏத்தாம இருந்தானுங்க. இப்ப இதையும்.....
எம்.ரிஷான் ஷெரீப் said...
20 வயசுப் பையனை குடும்பத்தோடு கூப்டுற முதல் ஆள் நீங்கதான் அண்ணாச்சி..
எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல..அதனால ஒரு ரெண்டு வருஷத்துக்கு உங்க கெஸ்டா வந்து அங்க டேரா போடலாம்ற ஐடியால இருக்கேன்..என்ன சொல்றீங்க? :P//
நான் 20 வயசு பையனா இருக்கச்ச குடும்பம் என்று சொன்னால் அம்மா அப்பா என்றுதான் எனக்கு நினைவு வரும், குடும்பம் என்றாம் மனைவி மட்டும் என்று யார் சொன்னா?
(அப்பாடி எஸ்கேப்)
தனியாக என்றால் தாராளமாக வாங்க நோ பிராபிளம்...
*****************************
வல்லிசிம்ஹன் said...
இப்பவாவது ரெண்டு பேருக்குப் பட்ஜெட் போடுவீங்க.
கொஞ்ச நாட்களுக்கு அப்புறம் பாப்பா, பாலு,டாக்டர்,படிப்பு!!!
யோசிக்க வேண்டிய விஷயம்.//
என்னது கொஞ்ச நாட்களுக்கு அப்புறமா? சில மாதம் ஆகும் என்றார்கள்.. அப்ப இந்த சின்ன பையனை ஏமாத்திட்டாங்களா?
********************************
Thamizhmaangani said...
ஜெகதீசன், இத தெரிஞ்சுதான் நான் இப்பலாம் வெறும் oats சாப்பிட ஆரம்பிச்சுட்டேன்.//
யார் அங்க அந்த ஓட்ஸ் விலையையும் ஏற்றுங்கள்.
*****************************
ஆமாம் அனானி நீங்கள் சொல்வதும் சரிதான்.
*******************************
வெங்கட்ராமன் said...
அது சரி இப்படி பொறுப்பா பதிவு போடறீங்களே, குசும்பா பதிவு போடுவீங்களா. . . .//
முன்பே போட ஆரம்பிச்சாச்சு
******************************
தமிழ் பிரியன் said...
கல்யாணத்துக்கு பிறகு குசும்பனுக்கு பொறுப்பு வந்துடுச்சு//
அப்பாடி நீங்க ஒருத்தராவது சொன்னீங்களே!!!
******************************
ஆசிப் மீரான் said...
அடப்பாவிங்களா.
மொத்தமா குடும்பத்துக்கே 3150 துதான் ஆகுமா? எனக்குத் தனியாளா இருந்தே இன்னும் சில மடங்கு அதிமா வருதே? :-(((///
பாத்துக்குங்க மக்கா செலவே பலமடங்கு வருகிறது என்கிறார்.
கேட்ட நல்லவர் வல்லவர் என்கிறார்.
அண்ணாச்சி ராஜா வீட்டு விருந்துக்கும்,
எங்களை போல் அன்றாடங்காச்சிங்க வீட்டு விருந்துக்கும் வித்தியாசம் இருக்கு அண்ணாச்சி
பாருங்கப்பா, குசும்பனுக்கும் பொறுப்பு வந்துடுச்சு :)
பயங்கர நம்பர் கணக்கா இருக்கே? எல்லா நாட்டுலயும் கிட்டத்தட்ட இதே நிலைமைதான் போல ...
சேம் ப்ளட்:(
குசும்பா.. நீ எம்புட்டு நல்லவன்..? நல்லாயிரு சாமி.. அங்கிட்டு வர்றேன்னு சொல்றவன்கிட்டேயெல்லாம் இதைத்தான் சொல்லணும்..
12 மணி நேர வேலைக்கு 4 மணி நேரம் உக்காந்தே போகணுமா? அதுக்கு இங்கன இருந்து எருமை மாடு மேய்க்கலாமே..? நான் வரல சாமியோவ்..
//ஆசிப் மீரான் said...
அடப்பாவிங்களா. மொத்தமா குடும்பத்துக்கே 3150துதான் ஆகுமா? எனக்குத் தனியாளா இருந்தே இன்னும் சில மடங்கு அதிமா வருதே?:-(((//
அப்போ இதைவிட சில மடங்கு செலவைச் சமாளிக்கிற அளவுக்கு பல மடங்கு வருமானமாக்கும் நம்ம அண்ணாச்சிக்கு..
அப்ப வலைப்பதிவர்களிலேயே கோடீஸ்வரன், நம்ம அண்ணாச்சிதானா..?
எப்படி மேட்டர் தானா வெளில வந்திருச்சு பாருங்க..
குசும்பன் வாழ்க..
நிஜமாகவே உபயோகமான பதிவு தான்.... எனக்கு:-))
பொறுப்பாளி சரவணனுக்கு
வாழ்த்துக்கள்
குசும்பா என்ன பிரச்சனை ஏன் பாதி இந்திய ரூபாயிலும் பாதி திராம்ஸிலும் குழப்பி எழுதியிருக்க!?!?
புது மாப்பிள்ளைக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.இங்கேயும் அதே கதைதான்.உதாரணத்திற்கு வீட்டு வாடகை ரூ24000 கொடுத்துகிட்டிருந்த நான் இப்ப ரூ31000 அழுதுகிட்டே கொடுத்துகிட்டிருக்கேன்.என்ன பெட்ரோலும்,குப்புஸும் அதே விலையில் இருக்குறத வச்சு மனசு தேத்திக்க வேண்டியதா இருக்கு. ஆனா நமக்கும் குப்புஸுக்கும் பங்காளி தகராறு.
இங்க மங்களூரில ஏறக்குறைய 900 ஸ்கொயர் ஃபீட். இரண்டு படுக்கை அறை, பால்கணி, கார் பார்க்கிங் இருக்கும் வீடு வாடகை 2500 ரூ. ஒத்த ஆளுக்கு அவ்ளோ குடுத்துகிட்டிருக்கேன் :(
வீட்டுல இருந்து அலுவலகம் செல்ல பைக்கில் 5 நிமிடங்கள் ட்ராபிக் இல்லாத பொழுது.
ட்ராபிக் இருக்கும் போது 300 வினாடிகள்
:(
/
இது போதாததுக்கு WAT இந்த வருட இறுதியில் இருந்துவர போகிறது.
/
VAT தெரியும் இது என்ன WAT புதுசாக இருக்கு !?
புரியலை தயவு செய்து விளக்க்க்கவும்.
/
யார் காரிலாவது லிப்ட் போகலாம் என்றால்அப்படி லிப்ட் கொடுப்பது சட்டவிரோதம் , போலீஸ் பிடித்தால் 50,000 ரூபாய் லிப்ட் கொடுத்தவருக்கு அபராதம்.
/
இங்கல்லாம் 50, 100 தான் குடுத்திட்டு போய்கிட்டே இருக்கலாம்.
இன்னும் 50,000 அளவுக்கு முன்னேறலை நம்ம ஆளுங்க!!
:))))))
/
இடத்தில் ஒரு அறையில் குறைந்தது 20 பேர் இருப்பார்களாம் அனைவருக்கும்ஒரே ஒரு பாத் ரூம் காலை 3 மணியில் இருந்து ஒவ்வொருவருக்கும் 15 நிமிடம் வீதம் ஒதுக்கபடுமாம
/
ஏசி இருக்குமில்ல
இங்க அந்த வசதி எதும் இல்லை :((((((((
/
(அப்பாடா எவ்வளோ ஒரு பொறுப்பா பதிவு போட்டு இருக்கேன், கல்யாணத்துக்கு பிறகு குசும்பனுக்கு பொறுப்பு வந்துடுச்சுன்னு பாராட்டு மழைய ஆரம்பிங்க, வீட்டுல காட்டனும்ல்ல)
/
பொட்டி அனுப்பினாதான் அதெல்லாம் நடக்கும்
/
சந்தோஷ் = Santhosh said...
டேய் கல்யாணம் ஆன உடனே ஓவர் நைட்ல எப்படிடா இப்படி பொறுப்பானவங்களா மாறிடறீங்க?
/
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு
/
ஜெகதீசன் said...
//
அடுத்த அடி விலைவாசி உயர்வு இரு மாதத்துக்கு முன்பு வாங்கிய 20 கிலோ அரிசி மூட்டையின் விலை 598ரூபாய், இன்று 1138 ரூபாய். அதே போல் ஆயில் 4 லிட்டர் பேக் விலை 218 ரூபாய், இப்பொழுது 402 ரூபாய்.
//
சிங்கையிலும் அப்படித்தான் இருக்கு அரிசி விலை.... :(
/
கருணாநிதி தயவில் தமிழ்நாட்டில் கிலோ அரிசி 2 ரூ.
கர்நாடகாவில் எட்டியூரப்பா புண்ணியத்தில் கிலோ அரிசி 2 ரூ.
/
எம்.ரிஷான் ஷெரீப் said...
20 வயசுப் பையனை குடும்பத்தோடு கூப்டுற முதல் ஆள் நீங்கதான் அண்ணாச்சி..
எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல..
/
யோவ் ஊர் முழுக்க இப்பிடித்தான் பொய் சொல்லி வெச்சிருக்கியா!?!?!?
நாங்களும் ஒத்தை ஆளா அடிச்சி கும்மி வளப்போம்!!
நாங்களும் திருப்பி செய்வோம் அண்ணாச்சி!!
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
அப்ப வலைப்பதிவர்களிலேயே கோடீஸ்வரன், நம்ம அண்ணாச்சிதானா..?
எப்படி மேட்டர் தானா வெளில வந்திருச்சு பாருங்க..
குசும்பன் வாழ்க..//
அண்ணாச்சி வெச்சு உருட்டிக்கிட்டு இருக்கும் கார் ரோல்ஸ் ராய்ஸ்
(அந்த காரை யார் வெச்சு இருந்தா என்று எல்லாம் கேள்வி கேட்க கூடாது)
*************************
மங்களூர் சிவா said...
குசும்பா என்ன பிரச்சனை ஏன் பாதி இந்திய ரூபாயிலும் பாதி திராம்ஸிலும் குழப்பி எழுதியிருக்க!?!?//
அதானே ஏன் ?
ஆங் அப்ப வீட்டில் இருந்து போன் வந்துச்சு.:)))
**************************
VAT தெரியும் இது என்ன WAT புதுசாக இருக்கு !?
புரியலை தயவு செய்து விளக்க்க்கவும்.//
:(((
**********************
மங்களூர் சிவா said...
நாங்களும் திருப்பி செய்வோம் அண்ணாச்சி!!///
நாங்க எல்லாம் அலார்ட்டா இருப்போம்
வாங்க ஒண்டிக்கு ஒண்டி:))
50
ஆஹா அங்கே லிப்டு குடுத்தா தப்பா?
திரும்பு வந்துடுங்க அண்ணாச்சி! :D
எனக்கு தெரிஞ்சு விஜயகாந்துக்கு அப்புறமா புள்ளி விவரம் குடுத்த ஒரே ஆளு நீங்கதான். இனிமேல் கேப்டன் என்று எல்லோராலும் அன்பொடு அழைக்க படுவீராக. :)
கார்த்திக் said...
ஊரையும் உறவையும் உட்டுப்போட்டு போயி 25 k மீதி பண்ணுறதுக்கு,இது எவ்வளவோ மேல்,
குடும்பம் குட்டி,மாடு கண்ணுன்னு சந்தோசமாவது இருந்துட்டு போகலாம்.//
அவ்வ்வ் சரிதாங்க ஆனா இப்ப ஊர்ல பராமரிப்பு செலவு ரொம்ப ஆச்சுங்க.
*****************************
ILA said...
ஆஹா அங்கே லிப்டு குடுத்தா தப்பா?//
ஆமாம் இளா, லிப்ட் கொடுத்தாலே காசு வாங்கிட்டு கொடுப்பதாக தான் இந்த ஊர் போலீஸ்க்கு நினைப்பு
(85% மக்கள் காசு வாங்கிட்டுதான் கொடுப்பாங்க) அதனால் யாரும் கொடுக்க முன்வருவது இல்லை.
*******************************
CVR said...
திரும்பு வந்துடுங்க அண்ணாச்சி! :D//
அவ்வ் வந்து???????????
*******************************
எல்லோரும் விரும்புவது said...
எனக்கு தெரிஞ்சு விஜயகாந்துக்கு அப்புறமா புள்ளி விவரம் குடுத்த ஒரே ஆளு நீங்கதான். இனிமேல் கேப்டன் என்று எல்லோராலும் அன்பொடு அழைக்க படுவீராக. :)///
இதுக்கு என்னை ..............
ம்ம்ம் ஒன்னும் சொல்ல வார்த்தை வரவில்லை.
/
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
அதுக்கு இங்கன இருந்து எருமை மாடு மேய்க்கலாமே..?
/
அண்ணே குசும்பனை நீங்க டைரக்டாவே திட்டலாம் உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு.
பூரிக்கட்டைல அடிக்கிறதுக்கு மட்டும் வேறவிங்க ரைட்ஸ் வெச்சிருக்காங்க!!
:))))))))
/
ILA said...
ஆஹா அங்கே லிப்டு குடுத்தா தப்பா?
/
அப்ப எப்பிடி 'பிக்கப்' பண்றது என்ன ஊருய்யா அது
ச்சீ த்தூ க்கா..........
:)))))))))))))))
/
எல்லோரும் விரும்புவது said...
எனக்கு தெரிஞ்சு விஜயகாந்துக்கு அப்புறமா புள்ளி விவரம் குடுத்த ஒரே ஆளு நீங்கதான். இனிமேல் கேப்டன் என்று எல்லோராலும் அன்பொடு அழைக்க படுவீராக. :)
/
கேப்டன் குசும்பன்!!!!
:))))))))))))
வாய்யா குடும்பஸ்த்தா......
இப்பத் தெரியுதா நாங்க பட்ட கஷ்டம்?
இங்கே சாப்பாடு ஐட்டம் எல்லாம் 28% ஏறிப்போச்சு.
இந்தவருசம் எலக்ஷன் வேற வருது.
இருக்குது எங்கம்மாவுக்கு!
கார்த்திக் கலைவாணி கமெண்டை டெலிட் செய்ய சொன்னாங்க அதுக்கு பதில் கார்த்திக் கமெண்டை டெலிட் செஞ்சுட்டேன் மன்னிக்கவும்.
மங்களூர் சிவா said...
/
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
அதுக்கு இங்கன இருந்து எருமை மாடு மேய்க்கலாமே..?
/
அண்ணே குசும்பனை நீங்க டைரக்டாவே திட்டலாம் உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு.
பூரிக்கட்டைல அடிக்கிறதுக்கு மட்டும் வேறவிங்க ரைட்ஸ் வெச்சிருக்காங்க!!
:))))))))//
அத தான் ஒய் செய்யுறேன், அங்க எருமை மாடு , இங்க ஒட்டகம்.:)))
//மங்களூர் சிவா said...
/
ILA said...
ஆஹா அங்கே லிப்டு குடுத்தா தப்பா?
/
அப்ப எப்பிடி 'பிக்கப்' பண்றது என்ன ஊருய்யா அது
ச்சீ த்தூ க்கா..........
:)))))))))))))))//
லிப்ட் கொடுப்பது லிப் டூ லிப் கொடுப்பது எல்லாம் ரொம்ப தப்பு:))
பிக்கப் செய்வது எப்படியா? அத நீங்க என்னிடம் கேட்கிறீங்களா? ரொம்ப தன்னடக்கம்ய்யா உமக்கு.
//துளசி கோபால் said...
வாய்யா குடும்பஸ்த்தா......
இப்பத் தெரியுதா நாங்க பட்ட கஷ்டம்?//
இது என்னங்க சீரியலில் பழிவாங்கும் பொழுது சொல்லும் டயலாக் போல எல்லாம் சொறீங்க? அவ்வ்வ்வ்வ்:(((
///இங்கே சாப்பாடு ஐட்டம் எல்லாம் 28% ஏறிப்போச்சு.
இந்தவருசம் எலக்ஷன் வேற வருது.
இருக்குது எங்கம்மாவுக்கு!//
இங்கு அதுபோல் எல்லாம் எதுவும் கிடையாது மன்னர் வருகிறார் பராக் பராக் பாராக்
kusumbu annaa,
1999 il MBA mudithavudan abudhabi il Dh.3000 vaangi 2400 veettukku anuppinen. 2 varusathukku appuram ottagam veenam eruma madu pothumnu madras vanthutten. inga mattum enna vaaluthu..ippo madras la 2 bedroom flattukku naan kudukkum rent Rs.23,000. namma thaatha antha kaalathulanu avaroda kaalam pona kadaisila pesuna dialoge ka namma ippoove peas vendi irukku..
pudukkottai abdulla
ஓஓ அங்கே குடும்பம் நடத்தறது அவ்வளவு கடினமா ? எதுக்கு இந்தப் பதிவு - மஞ்சுவே கூப்பிட்டு வர ஐடியா இருக்கா இல்லையா
நண்பா, அரிசி விலை ஏற்றத்திற்கு காரணம் இந்தியா அரிசி ஏற்றுமதியை தடைசெய்ததுதான். மற்ற பொருட்கள் விலை உயர்வுக்கு காரணம் கச்சா எண்ணெய் விலையேற்றமும் தான். சப்புட ஆரம்பிச்ச காலத்துல இருந்து பொன்னி அரிசியில பொங்கியே சாப்பிட்டுட்டு, இப்ப ரொம்ப கஷ்டமா இருக்கு சரவணா. முஸ்தபால மட்டும் பொன்னி அரிசி கிடைக்குது, ஆனா அதுக்கு நம்ம ஊரு ரேஷன் கடையில நிக்கிறமாதிரி வரிசையில நிக்க வேண்டியிருக்கு. ஒரு ஆளுக்கு 5 கிலோ பாக்கெட் 2 மட்டும்தான் ...
உலகம்பூரா இப்டித்தான் இருக்கு.
Mr.Kusuamban,
In this post, there is a mix up of rupees & dhs. That's why I want to ask these questions.
Please answer if possible.
I received an offer from Free zone co. and waiting for VISA(as Proj Mgr).
What will be the approx. expenses for a family with 2 children: 1 at 3rd &
other at LKG.
We would like to rent at least a single bedroom house.
My salary is fixed at 15000 dhs, exclusive of accomodation.
My wife is a teacher here. Can she get a job there easily?
Is is possible to get visa for my mother-in-law?
Thanks. Rajasekaran
Post a Comment