Saturday, June 23, 2007

விடுதலை எப்போது?

இந்த கவிதைக்கு விளக்கம் சொல்லாமல் ஏன் இந்த கவிதையை சிபி எழுதினார் என்று உங்களுக்கு சொன்னால் தானாக உங்களுக்கு கவிதை அர்த்தம் புரியும் .

அன்று ஒரு நாள் மாலைவேளையில் பார்க்கில் மல்லாக்க படுத்து அடுத்த கவிதைக்கு கருவை தேடிக்கொண்டு இருக்கும் பொழுது...மரத்தின் மேல் இருந்த காக்கா அண்ணன் மேல் கக்கா (காக்காவின் கக்காவைதான் எச்சம் என்கிறார்) போய்விட ஆத்திரத்தில் ஒரு கல்லை எடுத்து காக்காவை அடிக்க அடிபட்ட காக்கா கீழே விழுவதற்க்குள் எதிர் பக்கம் இருந்து ஒரு குரல் தள ஏன் இந்த கொலை வெறி ஏன் என்றால் அருகில் இருந்த ராம் தலை மீது மண்டையை பதம் பார்த்தது அருகில் இருந்த போலீஸ்கார் விலங்கு வதை தடுப்பு சட்டம், கொலை முயற்ச்சி வழக்கில் அண்ணனை கைது செய்து சிறையில் அடைத்து விடுகிறது...அங்கிருந்து அண்ணன் கேட்டது தான் கவிதையின் முதல் வரி...(அலைபாயுதே பட ஸ்டைலில் கவிதை எழுதி இருக்கிறார்).

மின்னலும்,குசும்பனும் தான் இந்த கொலை முயறச்சிக்கு சாட்சி அதனால் தான் பயந்து போய் இருக்கிறார் (அரண்டவனுக்கு இருண்டதுஎல்லாம் பேய் என்று சொல்வார்களே அதுபோல்).. சிபி ஜெயிலில் இருக்கும் சேதி கேட்டு தெல்கியாரும், கிழ்மத்துர் எக்ஸ்பிரஸ் இருவரும்மகிழ்ச்சி கடலில் திளைக்கின்றனர்.

ஜெயில் இருப்பது நினைவு இல்லாமல் சண்டைக்கு அழைக்கிறார், சக கைதிகள் போட்டு வெளுத்து வாங்கி விடுகின்றனர், அடிப்பட்டு (காக்க காக்கவில் சூர்யா கிடப்பது போல் கிடக்கிறார்) ..அப்பொழுது சத்தம் போட்டு சொல்கிறார் "விடு! தலை கிடைக்கும்ஒரு நாள்" (காந்தி ஜெயந்தி எல்லாம் முடிஞ்சு போச்சு ...இப்ப விடுதலை கிடையாது).

இப்பொழுது கவிதை


வீறிட்ட அலறலுடன்கேட்டுக் கொள்கிறேன்
என்னை நானே!"விடுதலை எப்போது?"
என் கேள்விவான் மீது
மோதிபறவைகளின் எச்சமாய்
என் மீதே விழுகிறது!
எதிர்ப்படுக்கை
ஒன்றிலிருந்துமுனகல்வருகிறது!

"தள!ஏனிந்தகொலைவெறி?
""உமக்கேது விடுதலை?"எகத்தாள ஒலிசுவரில்
பட்டுஎதிரொலிக்கிறது!எரிச்சலுற்று
திரும்பிப் பார்க்கிறேன்!மின்னலும்
குசும்பும்மாறி மாறிகண்ணில்
தெரியவிழிகளின் பாப்பாக்கள்
பப்பரப்பே என்றுசுழலத் தொடங்குகின்றன!

கெக்கெபிக்கேசிரிப்பொலியொன்று
கவனத்தைச் சிதறடிக்கஎங்கோ தொலைவில்
தெக்கியாரைக்கிச்சு கிச்சு மூட்டிவிட்டுவிரைந்து
செல்கிறதுஅதிவேகபுகை வண்டி!

எனக்கென்றுஎதிரிகளைநானே தெரிவுசெய்து
சண்டைக்குஅழைக்கிறேன்!வாளைச்
சுழற்றியபடிபிச்சுவாக் கத்தியுடன்
எனைச் சூழ்ந்துநெருங்குகின்றனர்!
நானும்சண்டையிடத்தயாராகிறேன்!

சமாதானம் எங்கிருக்கிறது?
திமிறித் திமிறிப்பார்த்தும்பிடியிலிருந்து
நழுவ முடியவில்லை! சுய நினைவைக்கொஞ்சம்
கொஞ்சமாய்இழந்துகொண்டேசூளுரைக்கிறேன்!
"விடு! தலை கிடைக்கும்ஒரு நாள்"
நின்றுவிட்ட இயந்திரத்தைப்பொல
தேய்ந்து வருகிறது குரல்!
தோள் பட்டையில்உணர்கிறேன்சுரீரென்ற வலி!


18 comments:

Anonymous said...

கவிதை ஆசிரியரின் மனதில் இருந்தவற்றை அப்படியே உள்வாங்கி பொருள் தந்திருக்கிறார் உரை நடை ஆசிரியர்.

தெற்கு பதிப்பகம்

Anonymous said...

என்ன சிபி அண்ணாத்தே! டபுல் ஆக்டு குடுக்குறாரு போல கீதே!

கவுஜை கலாய்த்தல்ல போட்டுட்டு,
வெளக்கத்தை வேற இடத்துல வைக்குறாரே!

Anonymous said...

குசும்பன் அண்ணே?

'பப்பரப்பே' ன்னா என்ன அண்ணா?

Anonymous said...

//தென்மேற்கு பதிப்பகம் //

ஐ!

தென்மேற்குப் பருவக் காற்று தேனிப் பக்கம் வீசும் போது சாரல்! இன்பச் சாரல்!

said...

மின்னலின் காதலி said...
"'பப்பரப்பே' ன்னா என்ன அண்ணா? "

பப்பரப்பே என்பது ஒரு சொல் அல்ல
பரப்பரப்பான பேய் என்பதன் மருவுதான் பப்பரப்பே இது சங்ககால தமிழ் இலக்கியம் சில இடங்களில்
வந்து உள்ளது...பின் லெமூரியா கண்டத்தோடு வழக்கொடிந்து போய்விட்டது...

said...

இந்த கவுஜையை எழுதுனது சிபியா குசும்பனான்னு பட்டிமன்றமே வைக்கலாம் போல இருக்கே!

said...

உண்மையை சொல்லுங்க.. யாரு யாரிடமிருந்து சுட்டது?

said...

@கருத்தம்மா said...
////தென்மேற்கு பதிப்பகம் //

ஐ!

தென்மேற்குப் பருவக் காற்று தேனிப் பக்கம் வீசும் போது சாரல்! இன்பச் சாரல்!
//

இன்னைக்கு ஒருத்தரு பாடுற மூட்ல இருக்கார் போல தெரியுதே! any good news? :-P

Anonymous said...

//பப்பரப்பே என்பது ஒரு சொல் அல்ல
பரப்பரப்பான பேய் என்பதன் மருவுதான் பப்பரப்பே இது சங்ககால தமிழ் இலக்கியம் சில இடங்களில்
வந்து உள்ளது...பின் லெமூரியா கண்டத்தோடு வழக்கொடிந்து போய்விட்டது...
//

வரலாற்றைத் திரித்துக் கூறாதீர்கள் குசும்பன்.

பப்பரப்பே என்பது ஒரு சத்தம். அதை நான்தான் முதலில் ஒரு திரைப் படத்தில் விவேக்குக்காக பயன்படுத்தினேன்.

"அஞ்சுதலை நாகம் பப்பரப்பேன்னு வந்துகிட்டிருக்கு"

said...

:: மை ஃபிரண்ட் ::. said...
இந்த கவுஜையை எழுதுனது சிபியா குசும்பனான்னு பட்டிமன்றமே வைக்கலாம் போல இருக்கே!

மை ஃபிரண்ட் நான் போய் கவிதை எழுதினா அய்யானார் அருவாவினால் வெட்டுவார்...

"உண்மையை சொல்லுங்க.. யாரு யாரிடமிருந்து சுட்டது? "

தோசை தோசைகல்லில் சுட்டது..
வடை வாணலியில் சுட்டது...
சப்பாத்தி தந்தூரி அடுப்பில் சுட்டது..
சோளம் தீயில் சுட்டது...
செங்கல் சூளையில் சுட்டது...

சுட்ட டீடெயில் போதுமா???

Anonymous said...

//இன்னைக்கு ஒருத்தரு பாடுற மூட்ல இருக்கார் போல தெரியுதே! any good news? :-P
//

ஆமா! எனக்கு மைக் திரும்ப கிடைச்சிடுச்சு!

"தேனே தென்பாண்டி மீனே!
இசைத் தேனே! இசைத் தேனே!
மானே இள மானே!

நீதான் செந்தாமரை!"

Anonymous said...

"ஏண்டா! என் பேரைக் கேட்டா அழுவுற குழந்தை கூட ஒரு கையால தன் வாயைப் பொத்திக்கும்!

போயும் போயும் மைக் மோகன் சொல்லியா நம்மைப் பத்தி தெரியணும்"

Anonymous said...

செந்தாமரை!

அதே குழந்தைகிட்டே குளோசப்ல போய் அலெக்ஸ் பாண்டியன்னு என் பேரைச் சொல்லிப் பாரு!

"அய்யோ! பூச்சாண்டின்னு அவங்க அம்மாவையும் அழைச்சிகிட்டு ஓடிடும்"

Anonymous said...

மலையோரம் வீசும் காத்து! மனசோடு பாடும் பாட்டு! கேக்குதா கேக்குதா!

"என்ன கேட்கலையா! எந்த கடன்காரப் பாவி மைக் செட்டை ஆஃப் பண்ணினது"

"ஓ! ரேடியோ செட் காரரா! கோவிச்சிக்காதீங்க அண்ணாச்சி! சீக்கிரம் செட்டில் பண்ணிடுறேன்"

Anonymous said...

யோவ் மோகா!

உனக்குப் போய் வாடகைக்கு மைக் குடுத்தேன் பாரு!

என்னைய செருப்பால அடிக்கணும்!

Anonymous said...

அடிப்பதற்கு மட்டும் தேவை எனில் 50% டிஸ்கவுண்ட்!

said...

.:: மை ஃபிரண்ட் ::. said...

இந்த கவுஜையை எழுதுனது சிபியா குசும்பனான்னு பட்டிமன்றமே வைக்கலாம் போல இருக்கே!
///

அவருதான் இவரு போதுமா...:)

said...

adadaaaa adada daaaa vafffffffff