Tuesday, June 12, 2007

நுழைவு தேர்வு போன்ற தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற!!!

நுழைவு தேர்வை ரத்து செய்துவிட்டதால் என் போன்ற திறமையான மாணவர்கள் திறமையை நிருப்பிக்க வழி இல்லாமல் போய்விட்டது, என்னதான் இருந்தாலும் அதில் அதிக மதிப்பெண் வாங்கும் டெக்னிக்கை மறந்து விடாமல் வாழையடி வாழயாக போற்றி பாதுக்காக்க வேண்டியது எனது கடமை. ஆகையால் இத்தனை நாட்களாக கட்டிகாத்து வந்த ரகசியத்தை உங்களிடம் சொல்கிறேன்.

12வது தாண்டுவதற்கே முப்பது குட்டிகரணம் போடும் என்னை போன்ற ஆட்கள் 49 மார்க் நுழைவு தேர்வில்எடுப்பது எப்படி என்ற ரகசியத்தை சொல்கிறேன், உங்களிடம் வேண்டி கேட்டு கொள்வது எல்லாம் இதை தயவு செய்து வியாபாரம் ஆக்கிவிட வேண்டாம். அது போல் குரு காணிக்கையாக எதுவும் எனக்கு வேண்டாம்.

நுழைவு தேர்வில் இனி 49 மார்க் எடுப்பது எப்படி. அவசியம் மூன்று ரப்பர், 1 பென்சில், ஒரு பால் பாயின்ட் பென் (ஏன் 3 ரப்பர், 1 பெண்சில் என்ற கேள்வி நீங்க கேட்பது புரிகிறது பதில் கடைசியில்) தேர்வு அறைக்கு முன் செல்லும் முன் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்...ஒரு ரப்பரை எடுத்து அதன் நான்கு பக்கங்களிளும் 1,2,3,4 என்று எழுதி கொள்ளுங்கள். பின் கொஸ்டின் பேப்பரை கொடுத்த உடன் நீங்கள் எடுக்க வேண்டியது உங்கள் பெண்சிலை அல்ல..உங்கள் ரப்பரை.. எடுத்து அதை உங்கள் டேபிள் மேல் தாயகட்டை உருட்டுவது போல் உருட்டிவிடுங்கள் அதில் மூன்று என்று வந்தால்முதல் கேள்விக்கு பதில் மூன்றாவது கட்டத்தில் என்ன இருக்கிறதோ அதுதான் விடை.

அதுபோல் எல்லா கேள்விக்கும் உருட்டி எல்லா கேள்விக்கும் விடை அளியுங்கள்.

ம்ம்ம் இப்ப கேளுங்க உங்க சந்தேகத்தைஏன் மூன்று ரப்பர் அதுதானே?
உருட்டி விடும் பொழுது முன்னாடி போய் விழுந்துட்டா அத எடுக்க என்று உங்க நேரத்தை வீணடிக்காமல் அடுத்த ரப்பரை எடுத்து உருட்ட ஆரம்பித்து விடுங்கள்.

ம்ம்ம் அடுத்தது என்ன இப்படி செய்வதால் 49 மார்க் வாங்க முடியுமா அதுதானே! கண்டிப்பா 200 க்கு 49 மார்க நான் வாங்கினேன்.

இருந்தாலும் முன்பு நான் சிபியிடம் சொன்னதை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன்
சிபி கேட்டார் எப்படிய்யா பார்த்து எழுதும் பொழுது தப்பு வரும் என்று...அதற்க்கு நான் சொன்னேன் சனி பகவான் உச்சத்துல இருந்தா ஜெராக்ஸ் எடுத்து குடுத்தா கூட தப்புவரும் என்று..


இதன் நன்மைகள்

முன்பு கண்னை மூடிக்கொண்டு ஒரு பதிலை தொடும் முறை இருந்துவந்தது அதில் நிறைய bugs இருப்பதால் அதற்க்குமாற்றாக இந்த முறை, கண்னை மூடி கொண்டு தொடும் முறையில் தவறாக கேள்வியையே தொடும் வாய்ப்பு அதிகம்அது போல் முதல் கேள்விக்கு அடுத்த கேள்விக்கான பதிலை தொடும் வாய்ப்பும் அதிகம் ஆகையால் இது அதிகமுறை சோதனைக்கு உட்படுத்த பட்டு அதில் நான் வெற்றியும்(????) பெற்றதால் உங்களிடம் சொல்கிறேன்.

9 comments:

said...

ஆஹா! முத்து முத்தான யோசனைகள்!

வருங்கால மாணவக் கண்மணிகளே!

இவரது யோசனைகளைத் தவறாது பின்பற்றி வாழ்வில் வெற்றி பெறுங்கள்!

(எங்களுக்கெல்லாம் உம்மைப் போல சொல்லிக் கொடுக்க ஆளு கிடைக்காம போயிட்டாங்க, என்ன பண்ணுறது வருங்கால சந்ததிக்காச்சும் பயன்படட்டும்)

said...

நான் ஒரு உண்மைய சொன்னா
எல்லாம் நம்பவா போறீங்க
ஹாவேர்ட்ஸ் பல்கலைகழகத்தில்
என்னை சிறப்பு லெக்சரரா பணியாற்ற
அழைத்தார்கள்...மறுத்துவிட்டேன்
ஏன் தெரியுமா? உங்களை எல்லாம்
சந்தோச படுத்திபார்பதை விட வேற என்ன சந்தோசம் இருக்க முடியும்.

Anonymous said...

தலீவா, போன தபா அப்டித்தான் செஞ்சேன். ஆனா எல்லா கொஸ்டினுக்கும் பதில் எழுதிட்டு ரிவைஸ் பண்ணும்போதுதான் வேற வேற ஆன்சர் வன்ச்சு. இன்னாபா பண்றதுன்னு தெரில. அப்டியே லூஸ்ல விட்டேன் மாமே.

said...

"எங்களுக்கெல்லாம் உம்மைப் போல சொல்லிக் கொடுக்க ஆளு கிடைக்காம போயிட்டாங்க, என்ன பண்ணுறது வருங்கால சந்ததிக்காச்சும் பயன்படட்டும்"

உங்க பிள்ளைங்கள என்கிட்ட டியூசன்
சேர்த்துவிடுங்க அப்புறம் பாருங்க அவுங்க
ரேஞ்ச..

said...

"தலீவா, போன தபா அப்டித்தான் செஞ்சேன். ஆனா எல்லா கொஸ்டினுக்கும் பதில் எழுதிட்டு ரிவைஸ் பண்ணும்போதுதான் வேற வேற ஆன்சர் வன்ச்சு."


முதல்ல நம்ம மேல நமக்கே நம்பிக்கை வேணும்
நாம் சரியாதான் செய்வோம் என்று... தப்பா எழுதி இருபோம்
என்கிற பயத்துல இருக்குறவன் தான்யா ரிவைஸ் பண்ணுவான்
நாம எல்லாம் ஆண்டவன் மேல பாரத்த போட்டு எழுதுரவனுங்க
நம்மள எப்படி ஆண்டவன் கைவிடுவான்.

அது சரி அது எப்படி உங்களுக்கு மட்டும் ரிவைஸ் பண்ண
டைம் கிடைச்சுது...நீங்க எங்கயோ தப்பு செஞ்சு இருக்கீங்க
நெக்ஸ்ட் டைம் போகும் பொழுது என் கிட்ட கன்ஸல்ட்
பண்ணுங்க....

said...

கொஸ்டின் பேப்பர் செட் பண்ற ஆளுன்ற முறையிலே சொல்றேன்.

குசும்பன் மெத்தட் வொர்க் ஆனாலும் ஆகும், ஜாதகம் சரியில்லைன்னா சுழிச்சுகிட்டும் போகும். கரெக்டா தப்பா செலக்ட் பண்ணீங்கன்னா?

இதுக்கு ஒரே பதிலையே எல்லா கேல்விக்கும் தேர்ந்தெடுக்கறது பெட்டர். 25% சான்ஸ் இருக்கு.

அதிலையும், மூணாவது ஆப்ஷன் செலக்ட் செய்தால் 50%க்கு மேலே சான்ஸ் இருக்கு. கத்துகுட்டிங்க கொஸ்டின் செட் பண்ணா சி லேதான் சரியான விடையை பெரும்பாலும் வைப்பாங்களாம்.

said...

வாங்க பினாத்தலார் உங்க வருகைக்கு நன்றி.

பாருங்கப்பா கொஸ்டின் பேப்பர் செட் பண்ணுற ஆளே
சொல்லிட்டார் குசும்பன் மெத்தட் ஒர்கவுட் ஆனாலும்
ஆகும் என்று...

said...

குசும்பன் சார், ஏதோ நுழைவுத்தேர்வு இல்லைன்றதால உங்களோட இந்த அரிய கண்டுபிடிப்பெல்லாம் ஒன்னும் வீணாயிடாது. எல்லா வீணாப்போன கம்பெனிகளும் 3 வருடத்துக்கு குறைவான அனுபவமுள்ளவங்களை தேர்ந்தெடுக்க இன்னமும் இப்படி அப்ஜெக்டிவ் டைப் கேள்விகளுள்ள எழுத்துத் தேர்வைத்தான் நம்பி இருக்காங்க. அதுனால பலப்பல பேரோட வாழ்க்கைல ஒளியேத்தி வச்சிருக்கீங்களாக்கும் நீங்க.

said...

வாங்க லெஷ்மி மேடம் தங்கள் வருகைக்கு நன்றி.

லக்ஷ்மி said... "பலப்பல பேரோட வாழ்க்கைல ஒளியேத்தி வச்சிருக்கீங்களாக்கும் நீங்க. "

"பலப்பல பேரோட வாழ்க்கைல ஒளியேத்தி வச்சிருக்கீங்களாக்கும் நீங்க. "
இன்னும் நிறையபேர் வாழ்கையில் அரிக்கேன் லைட், மெழுக்கு வத்தி, ஊதுபத்தி எல்லாம்
ஏத்துறதுக்கு என்றே பொதுவாழக்கைக்கு வந்து இருக்கேன்.
உங்களை போன்றேர் ஆசிர்வாதத்தால் எல்லாம் நல்ல படியாக
நடக்கும் என்று நம்புகிறேன்.