Monday, June 25, 2007

அடிச்சிட்டேன் 50

இதோ வெற்றிகரமாக 50 பதிவுகள் போட்டு முடித்துவிட்டேன், எத்தனை பதிவுகள்உங்களை சிரிக்கவைத்தன என்று தெரியவில்லை, இருந்தாலும் உங்களை சிரிக்கவைத்து இருக்கும் என்றநம்பிக்கையில் அடுத்து அடுத்து பதிவு போட்டு இதோ இன்று 50 பதிவை போட்டு முடித்து இருக்கிறேன்.

எனக்கு நீங்கள் கொடுத்த ஊக்கம் தான் குறுகிய காலத்தில் 50 பதிவு போடவைத்தது... நீங்கள் யாரும் கண்டுக்காமல்போய் இருந்திருந்தால் சீசீ இந்த பழம் புளிக்கும் என்று ஓடி போய் இருப்பேன் (தப்பு செய்துவிட்டமே என்று வருந்துவதுதெரிகிறது).

குசும்பன் என்று ஒருவன் காமெடியாக எழுதுகிறான் என்று பலபேரிடம் சத்தம் போடாமல் சொல்லி என் பதிவிற்க்கு வரசெய்த சிபி அவர்களுக்கும் தானாக வந்து உதவி செய்த பொண்ஸ் அக்காவிற்க்கும் நன்றி.

அன்பான அய்யனார்(நேர்ல பார்க்கும் பொழுது அடிக்காம இருக்கனும்ல அதுக்குதான்), அடாவடியான தம்பி, குஜாலான மின்னல்,ஜாலியான சந்தோஷ் என்று குறுகிய காலத்திற்க்குள் ஒரு நல்ல நட்பு வட்டத்தை தந்த தமிழ் மணத்திற்க்கு நன்றி...

மேலும் தொடந்து என் பதிவுக்கு வருகை தரும்
வெங்கட்ராமன்
siva
காயத்ரி
அய்யனார்
துர்கா
மின்னுது மின்னல்
இராம்
பொன்ஸ்~~Poorna
CVR
கண்மணி
ஜி
சந்தோஷ்
அபி அப்பா
மை ஃபிரண்ட்
தம்பி
Sathia
G3
செல்வேந்திரன்
நந்தா
குட்டிபிசாசு
பினாத்தல்
சுரேஷ்
லக்ஷ்மி
tbr.joseph
நளாயினி
பாலபாரதி

அனைவருக்கும் நன்றி, நன்றி,நன்றி...

37 comments:

said...

உக்காந்து யோசிப்பாங்க கேள்விப்பட்டிருக்கேன். இங்க பார்றா உக்காந்து லிஸ்ட் எடுத்திருகாரு.

said...

சீக்கிரம் 90 அடிக்க வாழ்த்துக்கள்.

அப்புறம்.

யோவ் அய்ஸ்
கிடேசன் பார்க் ட்ரீட் ஸ்பான்சர் பண்ண ஆள் கிடைச்சிட்டான்யா!

said...

அல் அய்ன் மின்னல்! எங்கிருந்தாலும் கராமா அருகில் உள்ள கும்மி பந்தலுக்கு வரவும்.

தம்பி தற்கொலைப்படை said...

அமைதியே உருவான தம்பியை அடாவடி என்று வருணித்த உம்மை என்ன செய்வது?

said...

குசும்பன் சீக்கிரமே செஞ்சுரி அடிக்க வாழ்த்துக்கள்.

siva said...

வாழ்த்துக்கள் குசும்பன். கண்டிப்பாக சீக்கிரமே செஞ்சுரி அடிப்பீர்கள் என்பதால் அதற்கும் சேர்த்தே வாழ்த்துக்கள்.

said...

தம்பி said...
அல் அய்ன் மின்னல்! எங்கிருந்தாலும் கராமா அருகில் உள்ள கும்மி பந்தலுக்கு வரவும்.
//

கூப்பிட்டிங்களா
:)

எல்லாம் உண்டுதானே..!!!!

said...

50 ஆச்சா?

வாழ்த்துக்கள் குசும்பன்!

//குசும்பன் என்று ஒருவன் காமெடியாக எழுதுகிறான் என்று பலபேரிடம் சத்தம் போடாமல் சொல்லி என் பதிவிற்க்கு வரசெய்த சிபி அவர்களுக்கும் தானாக வந்து உதவி செய்த பொண்ஸ் அக்காவிற்க்கும் நன்றி//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........!

திறமை எங்கிருந்தாலும் தானாகவே தெரியவரும்!

மின்னல் said...

//குசும்பன் என்று ஒருவன் காமெடியாக எழுதுகிறான் என்று பலபேரிடம் சத்தம் போடாமல் சொல்லி என் பதிவிற்க்கு வரசெய்த சிபி அவர்களுக்கும் தானாக வந்து உதவி செய்த பொண்ஸ் அக்காவிற்க்கும் நன்றி//

இப்படியெல்லாம் சொல்லீட்டா நீங்களும் சிபியும் வேற வேற ஆள்னு நாங்க நம்பிடுவமா?

சாம்பு said...

ஏன்? மின்னல் மட்டும் என்னவாம்?
எனக்கு மூணு பேருமே ஒண்ணுதான்னு ஒரு டவுட் இருக்கு!

ரெகுலர் கஸ்டமர் said...

என்னோட பேரு எங்கய்யா?

பின்னூட்ட பினைக்கைதி said...

எங்களை உடனே ரிலீஸ் செய்யாவிட்டால் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்படும்

பின்னூட்ட போராளி said...

எங்களை எல்லாம் எப்ப வெளிய விடுவீங்க? உள்ள ஒரே புழுக்கமா இருக்குய்யா

said...

சாம்பு said...
ஏன்? மின்னல் மட்டும் என்னவாம்?
எனக்கு மூணு பேருமே ஒண்ணுதான்னு ஒரு டவுட் இருக்கு!
//

இன்னுமா என்னைய நம்புரீங்க...?

said...

பாவி.. எல்லாரயும் போட்டு தாளிச்சிட்டு இப்ப நன்றி வேற.. நீ பொழச்சுக்குவே ராசா!

said...

வாழ்த்துக்கள் குசும்பன்!!
உங்கள் பா.பா.ச vs வா.வா.ச பதிவு நான் மிகவும் விரும்பி படித்தது!!! :-)
உங்கள் நகைச்சுவையால் மேலும் மேலும் எங்களை சிரிக்க வைக்க வாழ்த்துக்கள்!! ;-)

said...

50 பத்தாது! சீக்கிரமே இன்னும் பெரிய பெரிய "நம்(ண்)பர்களாக அடிக்க வாழ்த்துக்கள். ;-)

said...

நந்தா said...
உக்காந்து யோசிப்பாங்க கேள்விப்பட்டிருக்கேன். இங்க பார்றா உக்காந்து லிஸ்ட் எடுத்திருகாரு.

:)

said...

தம்பி said...
"சீக்கிரம் 90 அடிக்க வாழ்த்துக்கள்."

நிறைய நண்பர்கள் சொல்லி பார்த்துவிட்டார்கள் முடியவில்லை...

"யோவ் அய்ஸ்
கிடேசன் பார்க் ட்ரீட் ஸ்பான்சர் பண்ண ஆள் கிடைச்சிட்டான்யா!"

அப்படின்னா? இன்னா? ஒன்னும் புரியலயே!!!

said...

வெங்கட்ராமன் said...
குசும்பன் சீக்கிரமே செஞ்சுரி அடிக்க வாழ்த்துக்கள்.
siva said...
வாழ்த்துக்கள் குசும்பன். கண்டிப்பாக சீக்கிரமே செஞ்சுரி அடிப்பீர்கள் என்பதால் அதற்கும் சேர்த்தே வாழ்த்துக்கள்.


நன்றி சிவா, நன்றி வெங்கட்ராமன்

said...

மின்னுது மின்னல் said...
"எல்லாம் உண்டுதானே..!!!! "

எல்லாம் எல்லாரும் "உண்டு"

said...

நாமக்கல் சிபி said...
"50 ஆச்சா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........!

திறமை எங்கிருந்தாலும் தானாகவே தெரியவரும்! "

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........!

said...

காயத்ரி said...
பாவி.. எல்லாரயும் போட்டு தாளிச்சிட்டு இப்ப நன்றி வேற.. நீ பொழச்சுக்குவே ராசா!

காயத்ரி உங்க கீ போர்டுல "அ" வும் "ப்" உம் வேலை செய்யல போல

அப்பாவி என்று வரவேண்டும்...

அது சரி நீங்க என்ன சாம்பாரா தாளிக்க..

said...

CVR said...
வாழ்த்துக்கள் குசும்பன்!!
உங்கள் பா.பா.ச vs வா.வா.ச பதிவு நான் மிகவும் விரும்பி படித்தது!!! :-)
உங்கள் நகைச்சுவையால் மேலும் மேலும் எங்களை சிரிக்க வைக்க வாழ்த்துக்கள்!! ;-)

அனைவரும்(????) சொல்லும் பொழுது இதையும்... ஜாலி கவிதை திருவிழாவும் நன்றாக இருந்ததாக சொல்கிறார்கள் ..மிக்க நன்றி தங்கள் வாழ்த்துக்கு

said...

.:: மை ஃபிரண்ட் ::. said...
50 பத்தாது! சீக்கிரமே இன்னும் பெரிய பெரிய "நம்(ண்)பர்களாக அடிக்க வாழ்த்துக்கள். ;-)

அம்மணி நம்மள அடிக்க கவுஜர்ஸ் கூட்டணி அமைத்து ஆள் எல்லாம் செட் செய்துவிட்டார்கள் நானும் மலேசியாவில் இருக்கிற ரகசியத்தை சொல்லி விடாதீர்கள்

said...

குசும்பா இம்முட்டு பாசக்கார பயலா நீயீயீயீயீயீயீயீயீ (போதும்பா கைவலிக்குது)....50க்கு வாழ்த்துக்கள் இதே மாதிரி 5000, 50000 அப்படின்னு கலக்க வாழ்த்துக்கள்.

said...

ஒருநாள் பிரஸ்சோடையும் கலரோடையும் உங்களை திரத்தின ஞாபகம். கவனிக்க வேணும் ஆளை என நேரம் பாத்த இருந்தேன். இன்று தான் நேரம் காலம் கனிஞ்சு வந்திருக்கு.

said...

நளாயினி said...
"ஒருநாள் பிரஸ்சோடையும் கலரோடையும் உங்களை துரத்தின ஞாபகம். கவனிக்க வேணும் ஆளை என நேரம் பாத்த இருந்தேன். இன்று தான் நேரம் காலம் கனிஞ்சு வந்திருக்கு."

ஆமாம் நீங்க வரஞ்ச ஓவியத்த நக்கல் அடிச்சதுக்கு அடிக்க துரத்தினீங்க..
அப்ப எஸ்கேப்...

said...

அட அதுக்குள்ள அம்பதா.. கலக்கறீங்க போங்க.. மேலும் பல சதங்கள் அடிக்க வாழ்த்துக்கள். கிண்டலாக எழுதுவதற்கு ஒரு திறமை வேண்டும் அதுவும யாரும் புண்படாத வகையில் எழுத.. தொடருங்கள்

said...

Sathia said...
"கிண்டலாக எழுதுவதற்கு ஒரு திறமை வேண்டும் அதுவும யாரும் புண்படாத வகையில் எழுத.. தொடருங்கள் "

நன்றி சத்யா!!! மிகுந்த எச்சரிக்கையுடன் தான் ஒவ்வொரு பதிவும் போடுகிறேன், சில சமயம் சம்பந்த பட்ட நபர்களுக்கு மெயில் அனுப்பி அனுமதித்த பின் தான் போஸ்ட் செய்கிறேன்...

கவலைப் படுபவன் said...

//நன்றி சத்யா!!! மிகுந்த எச்சரிக்கையுடன் தான் ஒவ்வொரு பதிவும் போடுகிறேன், சில சமயம் சம்பந்த பட்ட நபர்களுக்கு மெயில் அனுப்பி அனுமதித்த பின் தான் போஸ்ட் செய்கிறேன்...//

சும்மாவா பின்னே!

இல்லாட்டி எங்கிருந்து வருதுன்னு தெரியாம ஆப்பை வாங்கி மாட்டிகிட்டு வலிக்குதுன்னு சொன்னா முடியுமா?

said...

எலே வந்துட்டமுல
இனி அதுரும் பாரு...

said...

நல்லா இரும்லே!

said...

அப்படிப்போடுராசா அரிவாள.....அப்பு ஐம்பது 50000000....ஆக வாழ்த்துக்கள்

said...

வாழ்த்து(க்)கள் குசும்ஸ்!

said...

வாழ்த்துக்கள், குசும்பா.. கலக்குங்க.

said...

You write very well.