Sunday, September 16, 2007

20 20 உலககோப்பை ஏன் பார்க்கவேண்டும்?

ஹலோ சித்தப்புங்களா யார் யார் எல்லாம் 20 20 வேர்ல்ட் கப் மேட்ச் இதுவரை பார்க்கவில்லையோ அவுங்க எல்லாம் போய் அத பாருங்க! கிரிக்கெட் பிடிக்காதவங்களுக்கு கூட பிடிக்கும், கிரிக்கெட் இல்லீங்க மைதானத்தில் சிக்ஸர், அல்லது நான்கு அடிச்சா, சும்மா ஆடுறாங்க பாருங்க ஆட்டம் அந்த ஊரு பொண்ணுங்க, என்னமா ஆடுறாங்க!!!
வியாழன் இரவு 8 மணிக்கு ஆரம்பித்தது மேட்ச், ஆரம்பம் எப்பொழும் போல நம்ம ஆளுங்க சொதப்ப விக்கெட் விழுந்துக்கிட்டே இருந்தது, அட சிக்ஸ், நான்கு அடிச்சாதான் அவுங்க ஆட்டத்தை பார்கலாம் என்று நினைத்தால் விக்கெட் விழுந்தா கூட சும்மா கும்மு கும்முன்னு ஆடுதுங்க...சரி நம்ம பயபுள்ளைங்க அடிக்கதான் மாட்டேங்கிறானுங்க நல்லவேளை அவுட்டாவது ஆவுறானுங்களே என்று சமாதானம் ஆகிட்டேன்.

பின் பாக்கிஸ்த்தான் காரங்க அடி பிரிச்சு எடுத்தானுங்க, ரொம்ப சந்தோசமா இருந்தது, அதுவும் 19 ஓவர் நம்ம கொடை வள்ளல் அகர்கர் போட 17 ரன் அடிச்சானுங்க...

கடைசியா என்ன ஆச்சு நாம எடுத்த அதே 141 ரன்னையும் அவனுங்க எடுக்க மேட்ச் டை ஆனது!மேட்ச் டை ஆனால் பவுல் அவுல் முறையில் வெற்றி நிர்ணயம் செய்யபடும் என்றார்கள்.

அது என்னடா பவுல் அவுட் முறை என்று பார்த்தால், ஸ்டெம்புக்கு முன்னாடி பேட்ஸ் மேன் இல்லாம சும்மா பவுலிங் செஞ்சு ஸ்டெம்ப அடிக்கனும், முதலில் நம்ம சேவாக் கரெக்டா அடிச்சார்,பாக்கிஸ்தான் சைடில் ஒருவர் போட ஸ்டெம்பை விட்டு வெளியே போனது பால். அடுத்து நம்மஹர்பஜன் அவரும் சூப்பரா போட்டார், திரும்பவும் பாக்கிஸ்தான் சைட் வேஸ்ட் செஞ்சார்கள்,அடுத்து நம்ம ஊத்தப்பா போட்டு ஒரு சூப்பர் ஸ்டெப்பும் போட்டார். நன்றாக இருந்தது. பின் அப்ரிடி போடஅதுவும் வெளியே போனது.. ஸோ நாம் வெற்றி பெற்றோம்.

நீதி: இந்தியா வெற்றி அடையவேண்டும் என்றால் ஸ்டெம்புக்கு முன்னாடி ஆள் இருக்க கூடாது, இருந்தா அந்த பால் ஸ்டெம்பை அடிக்காது, ஏன்னா அது பேட்ஸ் மேனால் ஸ்டேடியத்துக்கு வெளியே அடிக்கபட்டு இருக்கும்.
டிஸ்கி: நம்ம பாஸ்ட் பவுலர் ஊரில் இல்லை இருந்திருந்தா நல்லா விளக்கமாக எழுதி இருப்பார். (மேட்ச பத்திதாங்க) அவரு இல்லாத குறைய போக்க ஏதோ நம் பங்குக்கு...

14 comments:

said...

ஆமாம்..இந்திய அணி ஆடுகிற அழகுக்கு...இந்த அம்மினிகளை பாக்கத் தான்..ஆட்டத்தைப் பார்க்க வேண்டும்...

இந்தியாவிலே..20-20 நடந்தா...ஸ்ரோயா, நயந்தாரா, திரிஷா, ஆடுவார்களா...

said...

"இந்தியாவிலே..20-20 நடந்தா...ஸ்ரோயா, நயந்தாரா, திரிஷா, ஆடுவார்களா..."

அவுங்க எல்லாம் நடிகைய்யா அவுங்க ஏன் கிரிக்கெட் ஆடனும்? ஹோ நீர் ஸ்டார் கிரிக்கெட்டை பத்தி சொல்றீங்களா? ஆடுவாங்க ஆடுவாங்க!!! (அப்பாடா ஒருவழியா தப்பிச்சாச்சு)

said...

ஹிம்...இன்னிக்கு ஊத்திக்கிருச்சு.... :)

said...

ஹிம்...இன்னிக்கு ஊத்திக்கிருச்சு.... :)

said...

இராம் said...
ஹிம்...இன்னிக்கு ஊத்திக்கிருச்சு.... :)

ஆமாம் தல:((((

said...

ஒன்னியும் சொல்றதுக்கில்ல. :(

said...

சூப்பர் 8-க்கு போயாச்சுல அதுவே போதும் நினைச்சுக்குங்க. :) ரொம்பல்லாம் எதிர்பாக்காம பேசாம நீங்க குறிப்பிட்ட ஆட்டத்தை மட்டுமே ரசிக்கவும்.

said...

//நீதி: இந்தியா வெற்றி அடையவேண்டும் என்றால் ஸ்டெம்புக்கு முன்னாடி ஆள் இருக்க கூடாது, இருந்தா அந்த பால் ஸ்டெம்பை அடிக்காது, ஏன்னா அது பேட்ஸ் மேனால் ஸ்டேடியத்துக்கு வெளியே அடிக்கபட்டு இருக்கும்.
//

ஹிஹி!

said...

நல்லா ஆடுராங்க ஆன சரியாவே காட்ட மாட்டேங்குறாங்க (பொண்ணுங்களை தான்)

//ஹிம்...இன்னிக்கு ஊத்திக்கிருச்சு.... :)//

நானும் வழக்கம் போல ஊத்திக்கிட்டேன் :-)

said...

:))

said...

காயத்ரி said...
ஒன்னியும் சொல்றதுக்கில்ல. :(


????????????????:)))))

Fast Bowler said...
சூப்பர் 8-க்கு போயாச்சுல அதுவே போதும் நினைச்சுக்குங்க. :) ரொம்பல்லாம் எதிர்பாக்காம பேசாம நீங்க குறிப்பிட்ட ஆட்டத்தை மட்டுமே ரசிக்கவும்.

நல்லா இருக்கீங்கலா, அப்படியே உங்க நண்பர் லொடுக்கையும் கேட்டேன் என்று சொல்லவும்...:)))

said...

ஆவி அம்மணி said...
//நீதி: இந்தியா வெற்றி அடையவேண்டும் என்றால் ஸ்டெம்புக்கு முன்னாடி ஆள் இருக்க கூடாது, இருந்தா அந்த பால் ஸ்டெம்பை அடிக்காது, ஏன்னா அது பேட்ஸ் மேனால் ஸ்டேடியத்துக்கு வெளியே அடிக்கபட்டு இருக்கும்.
//

ஹிஹி!

நிஜம்தானே அது!!!!

said...

வவ்வால் said...
"நானும் வழக்கம் போல ஊத்திக்கிட்டேன் :-)"

இப்படி எல்லாம் முடிவு எடுத்தா நீங்க டெய்லி குடிக்க வேண்டி வரும் ஆமா!!

said...

மேட்ச் பார்க்காத சந்தோஷத்தில் நாங்கள் இருக்கிறோம்.

:)))
சூப்பர் பதிவு.
குசும்பன்.