Monday, March 8, 2010

கார்ட்டூன்ஸ் 08-03-2010

"கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்"
அழகு நீ நடந்தால் நடையழகு அழகு! நீ சிரித்தால் சிரிப்பழகு அழகு!

இக்கட ரா ரா ரா ராமைய்யா, எட்டுக்குள்ள வாழ்கை இருக்கு ராமைய்யா
ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழி குட்டி வந்ததுன்னு யானை குஞ்சு
















நித்தியானந்தரின் தலைமறைவை அடுத்து புது மஹான் அவதரித்தார் இந்த பூமியில்...
எங்கு எல்லாம் தீவிரமான வாதம் தலை தூக்குதோ அங்கெல்லாம், இன்விட்டேசன் இல்லாமல் ஆஜர் ஆவான் இந்த மஹான். யார் அந்த மஹான்? புனை பெயர் கு வில் ஆரம்பித்து ன் என்று முடியும். நடுவில் சும்ப என்று மூன்று எழுது வரும். இவர் போட்டோவை தன் பிளாக்கில் போட்ட அப்துல்லாவுக்கு சினிமாவில் பாட சான்ஸ் வந்துச்சு.

இவர் பெயரை காலை தினமும் எழுந்ததும் மந்திரம் போல் உச்சரித்த முரளிக்கு, முக்காமல் முனகாமல் ஃபிரியா பிரியுது.

இவர் போட்டோவை பர்ஸில் வைத்திருந்த கார்த்தியின் பர்ஸை ஆட்டைய போட்ட பிக்பாக்கெட் திருடர்கள், திரும்ப வந்து கொடுத்தது மட்டும் இன்றி கார்த்தியின் கை செலவுக்கு பணமும் கொடுத்தார்கள். (பிச்சைக்கார பய உனக்கு எதுக்கு பர்ஸ் என்று திட்டி, நாலு மொக்கு மொக்கினது கணக்கில் வராது.) இப்படி பல பலன்கள்.

இதை படித்தது அலட்சியம் செய்த குமாரு கால் ஒடிஞ்சு குமரு ஆயிட்டான். நக்கலாக சிரிச்ச வாய் கோணிக்கிச்சு.
சிஸ்யை கோடிகள் அப்ளிகேசன் மட்டும் வரவேற்க்கப்படுகின்றன. புகைப்படம் இல்லாத அப்ளிகேசன் ரிஜெக்ட் செய்யப்படும்.
இப்படிக்கு
குசும்பானந்தா சுவாமிகள் ட்ரஸ்ட்வொர்த்தி ட்ரஸ்ட்
துபாய்

59 comments:

Sanjai Gandhi said...

//இவர் பெயரை காலை தினமும் எழுந்ததும் மந்திரம் போல் உச்சரித்த முரளிக்கு, முக்காமல் முனகாமல் ஃபிரியா பிரியுது. //

சிறு திருத்தம் : நான் ஸ்டாப்பா போகுதாம்..

Sanjai Gandhi said...

//யார் அந்த மஹான்? புனை பெயர் கு வில் ஆரம்பித்து ன் என்று முடியும்.//
நல்ல வேளை எழுத்துப் பிழை இல்லை

அகல்விளக்கு said...

ஹாஹாஹாஹா...

சூப்பரு மாம்ஸ்...
குறிப்பா சாருவும் நித்யாவும்...

Sanjai Gandhi said...

//இவர் போட்டோவை தன் பிளாக்கில் போட்ட அப்துல்லாவுக்கு சினிமாவில் பாட சான்ஸ் வந்துச்சு. //

அதனால தான் அந்தப் படம் ஊத்திக்கிச்சாம்..

pudugaithendral said...

புகைப்படம் இல்லாத அப்ளிகேசன் ரிஜெக்ட் செய்யப்படும்.//

:)))

Unknown said...

//சிஸ்யை கோடிகள் அப்ளிகேசன் மட்டும் வரவேற்க்கப்படுகின்றன//

சிஷ்ய கேடிகள் தான் வருவாங்க

Sanjai Gandhi said...

//இவர் போட்டோவை பர்ஸில் வைத்திருந்த கார்த்தியின் பர்ஸை ஆட்டைய போட்ட பிக்பாக்கெட் திருடர்கள்,//
பர்ஸ் பிரிச்சி பார்த்த உடனே செத்துப் போய்ட்டாங்களாம்

Sanjai Gandhi said...

//சிஸ்யை கோடிகள் அப்ளிகேசன் மட்டும் வரவேற்க்கப்படுகின்றன.//

மாம்ஸ்.. ரஞ்சிதான்னு ஒரு சிஷ்யை இப்போ ஆஷ்ரம் இல்லாம தவிச்சிட்டு இருக்காங்களாம்.. அடைக்கலம்.. சாரி.. அட்மிஷன் குடுக்க முடியுமா?

Sanjai Gandhi said...

//சிஸ்யை கோடிகள் அப்ளிகேசன் மட்டும் வரவேற்க்கப்படுகின்றன//

மாம்ஸ்.. கையோட மருந்து மாத்திரைகளும் கொண்டுவருனுமா அவங்க? நித்திக்கு போட்டியா வரனும்னா அதெல்லாம் ரொம்ப முக்கியம்..

Ananya Mahadevan said...

சூப்பர் போங்க!!! சிரிச்சு சிரிச்சு வயித்த வலிக்கிது!

Sanjai Gandhi said...

//சிஸ்யை கோடிகள் அப்ளிகேசன் மட்டும் வரவேற்க்கப்படுகின்றன. //

வயாகரா சப்ளையர்ஸ் யாரும் வரவேற்கப் படலையே மாம்ஸ்?

உண்மைத்தமிழன் said...

சிரிப்பா வருது டோய்..!

குசும்பா... உனக்கிருக்குற அறிவுக்கும், அழகுக்கும் குசும்பானந்தான்னு பேரை மாத்திக்கிட்டு நீயும் சாமியாரா போகலாம்..!

தரிசு said...

ஆமங்க்னா,ஏன்னா உங்க பேரே "குசு-ம்பன்", "குசு-ம்பு ஒன்லி" என்று தானே உள்ளது.அதனால நல்லாவே பிரியும். ஹி ஹி ஹி :) ....

Sanjai Gandhi said...

எது எப்டியோ மாம்ஸ்.. விடியோ ரிலிஸ் டிஸ்ட்ரிப்யூஷன் மட்டும் எனக்குத்தான் தரனும்.. டிஸ்ட்ரிப்யூஷன்ல நமக்கு 7 வருஷ எக்ஸ்பீரியன்ஸ்..

ஆயில்யன் said...

சென்ஷி :))))))))))))

பாஸ் வழக்கம்போல சூப்பரேய்ய்ய்!

குசும்பானந்தான்னு ஒரு ad போட்டோவும் போட்டிருக்கலாம்ல :)

இராகவன் நைஜிரியா said...

சூப்பர் கமெண்ட்...

அதிலும் நித்யானந்தா பற்றிய கமெண்ட்.. சூப்பரோ சூப்பர்..

நைஜிரியா கிளைக்கு தலைவரை நியமிச்சாச்சா?

பரிசல்காரன் said...

நித்யானந்தாவுக்கும் ஃபோட்டோதானா? வித்யாசமா அவருக்கு மட்டுமாவது வீடியோ கமெண்ட் போடு மாப்ள..

Romeoboy said...

ஹா ஹா ஹா கலக்கல்.

Athisha said...

நித்யானந்தர் அருளால முடி மொளைக்குதாம்..

எம்.எம்.அப்துல்லா said...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

குசும்பா... உனக்கிருக்குற
அறிவுக்கும், அழகுக்கும்

//

நாசமாப்போச்சு.

எம்.எம்.அப்துல்லா said...

//நைஜிரியா கிளைக்கு தலைவரை நியமிச்சாச்சா?

//

க்கும்.இதுக்கு மட்டும் கரெக்ட்டா வந்துருவீங்களே :))

Prathap Kumar S. said...

ஹீஹீஹீ... குசும்பானந்தர்னா... எனக்குவேறமாதிரி நினைக்கத்தோணுது..அவ்வ்வ்வ்

பெசொவி said...

//இவர் பெயரை காலை தினமும் எழுந்ததும் மந்திரம் போல் உச்சரித்த முரளிக்கு, முக்காமல் முனகாமல் ஃபிரியா பிரியுது. //

சிறு திருத்தம் : நான் ஸ்டாப்பா போகுதாம்..
//

சி.டி. வெளியிட்டப்புறம் தான அப்படி ஆகணும்.......சுவாமிஜி கொஞ்சம் மந்திரம் சொல்லுங்க!

////சிஸ்யை கோடிகள் அப்ளிகேசன் மட்டும் வரவேற்க்கப்படுகின்றன//

சிஷ்ய கேடிகள் தான் வருவாங்க
//

சிஷ்ய கேடிகள் மடத்திலேயே இருப்பாங்க....புதுசா வேண்டியதில்லை
(அது நிற்க, ஓரளவு கோடிகள் சேர்த்தப்புறம்தான் சிஷ்யைகோடிகள் வருவாங்க...........பாஸ்!)

////சிஸ்யை கோடிகள் அப்ளிகேசன் மட்டும் வரவேற்க்கப்படுகின்றன.//

மாம்ஸ்.. ரஞ்சிதான்னு ஒரு சிஷ்யை இப்போ ஆஷ்ரம் இல்லாம தவிச்சிட்டு இருக்காங்களாம்.. அடைக்கலம்.. சாரி.. அட்மிஷன் குடுக்க முடியுமா?
//
குசும்பானந்த சுவாமிக்கு செகண்ட் ஹாண்டா......மன்னிக்கவே முடியாது

////சிஸ்யை கோடிகள் அப்ளிகேசன் மட்டும் வரவேற்க்கப்படுகின்றன. //

வயாகரா சப்ளையர்ஸ் யாரும் வரவேற்கப் படலையே மாம்ஸ்?
//

ஒரு படத்தில சத்யராஜ் வடிவேலுவுக்கு கொடுப்பாரே......அந்த மாத்திரையை யாராவது தந்தா என்ன ஆவுறது? அதுனாலதான்.......

பெசொவி said...

அநேகமாக எல்லா பின்னூட்டங்களுக்கும் குசும்பானந்தாவின் சார்பாக நானே பதில் போட்டிருக்கிறேன்......எனவே, நான் அந்த மடத்தின் உதவித் தலைவர் என்பதை சுவாமிஜியின் சார்பாக நானே அறிவிக்கிறேன் (சஞ்சய் காந்தி அவர்களே, வீடியோ உரிமை பற்றி நாம அப்புறமா பேசலாம்)

பெசொவி said...

அநேகமாக எல்லா பின்னூட்டங்களுக்கும் குசும்பானந்தாவின் சார்பாக நானே பதில் போட்டிருக்கிறேன்......எனவே, நான் அந்த மடத்தின் உதவித் தலைவர் என்பதை சுவாமிஜியின் சார்பாக நானே அறிவிக்கிறேன் (சஞ்சய் காந்தி அவர்களே, வீடியோ உரிமை பற்றி நாம அப்புறமா பேசலாம்)

வரதராஜலு .பூ said...

ஒரே சிரிப்புதான் போங்க

பதிவும் சரி
கமெண்ட்சும் சரி

செம சிரிப்பு.

Anonymous said...

இத...இதத் தான் எதிர்பார்த்தோம்...கலக்கல் தல

gulf-tamilan said...

காமெண்ட்ஸ் போட்டவங்களுக்கு என்ன நடக்கும்? :)))

சாருஸ்ரீராஜ் said...

ஹா ஹா ஹா .. ரொம்ப நல்லா இருக்கு

வரதராஜலு .பூ said...

//gulf-tamilan said

காமெண்ட்ஸ் போட்டவங்களுக்கு என்ன நடக்கும்? :))) //

குசும்பானந்தா சொன்னது எல்லாமே நடக்கும்.

:)

கண்ணா.. said...

//இதை படித்தது அலட்சியம் செய்த குமாரு கால் ஒடிஞ்சு குமரு ஆயிட்டான். நக்கலாக சிரிச்ச வாய் கோணிக்கிச்சு//

கலக்கல் குசும்பன்...


நீங்கெல்லாம் பதிவ விட்டுட்டு பஸ்லயும் , டிவிட்டர்லயும் கும்மி அடிக்கறது நியாயமா?

பஸ்ல நீங்க , அண்ணாச்சி போன்றோரின் கும்மி அட்டகாசம்..

சுரேஷ் கண்ணன்லாம் இப்பிடி கும்மி அடிப்பாருன்னு பஸ்லதான் பார்த்தேன்...

எல்லாரும் அது போல பதிவிலும் பண்ணலாமே..... அண்ணாச்சி கடையை தொறந்து ரொம்ப நாள் ஆச்சு

மாதேவி said...

:)))))))

Iyappan Krishnan said...

ஹ்ம்ம்... குசும்பானந்த ஸ்வாமிகளே... சஞ்சய் காந்திக்கு ஒரு நல்ல வார்த்த சொல்லுங்க சாமி

சென்ஷி said...

:-)

அரங்கப்பெருமாள் said...

சூப்பர்...

Ashok D said...

//குசும்பா... உனக்கிருக்குற அறிவுக்கும், அழகுக்கும் குசும்பானந்தான்னு பேரை மாத்திக்கிட்டு //

உ.த. அண்ணே... இந்த குசும்பு தானே வேணாங்கிறது...

Ashok D said...

மொதொ நாலு சும்மா நச்சுன்னு கீதுபா..

லேகா said...

நித்யாவின் அறிய புகைப்படங்களை பகிர்ந்தமைக்கு நன்றி :-)))))))

பதிவு கிளாஸ் எப்போதும் போல!!

Chitra said...

சிரிச்சு முடியல. சூப்பர் நக்கல் தோரணம்!

உடன்பிறப்பு said...

எல்லாம் ஒரிஜினல் போட்டோவா போட்டு கார்ட்டூன்ஸ் என்று தலைப்பு வைத்து இருக்கிறீர்கள். மற்றபடி அவை நன்று

மங்களூர் சிவா said...

anony comments not allowed???
:((

மங்களூர் சிவா said...

:))))))))))))

பித்தனின் வாக்கு said...

வழக்கம் போல செம குசும்பு தலை. படங்களும் கருத்துக்களும் அருமை.

ஆனா இதுக்கு நான் உங்களை வன்மையாக கண்டிக்கின்றேன். எங்களின் அருமை ஆசான், பதிவுலகப் பிதாமகன், மூத்த குடி மகன் எங்களின் தானைத் தலை வால்ஸ் என்ற வால்பையனின் படம் மட்டும் போட்டு விட்டு, கமெண்ட்ஸ் போடாதுதால். உங்க பையன் பிறந்த பார்ட்டியுடன், ஒரு தண்டனைப் பார்ட்டியும் தரவேண்டும்.

நன்றி ஸ்ரீலஸ்ரீ. குசும்பானந்தா.... ஸ்ரீலஸ்ரீ. குசும்பானந்தாவிற்கு ஜெய்............

கார்க்கிபவா said...

ஜெய் குசும்பானந்தா..

தல உங்க படத்திலாவது சுனைனாவ “போடுங்க” தல

Sundar சுந்தர் said...

//குமாரு கால் ஒடிஞ்சு குமரு ஆயிட்டான்.//

ஹாஹாஹா

Vidhya Chandrasekaran said...

:))

Sri said...

நன்கு கவனிக்கவும். சஞ்சய்-க்கு இடதுபுறம் உள்ளவர் இலையில் சாப்பாடு உள்ளது, சஞ்சய் இலையில் கொஞ்சம் உள்ளது, அதற்கு அப்புறம் மூவர் இலையை மூடி வைத்து ஏக்கத்துடன் சஞ்சய் இல்லையை பார்ப்பது போல் இல்லை?

Srini

Santhosh said...

குசும்பா கலக்கல்..

//பர்ஸ் பிரிச்சி பார்த்த உடனே செத்துப் போய்ட்டாங்களாம்//
சஞ்ஜை.. ஹஹஹஹ..

Santhosh said...

//எது எப்டியோ மாம்ஸ்.. விடியோ ரிலிஸ் டிஸ்ட்ரிப்யூஷன் மட்டும் எனக்குத்தான் தரனும்.. டிஸ்ட்ரிப்யூஷன்ல நமக்கு 7 வருஷ எக்ஸ்பீரியன்ஸ்..//

நோ சஞ்ஜை.. நோ இந்த டீலிங்க எல்லாம் பஸ்ல முடிச்சாச்சி.. நாங்க அதை வாங்க பல வருஷமாச்சி.. அட்வான்ஸ் புக்கிங் கூட ஆரம்பிச்சாசி..

அப்துல்மாலிக் said...

குசும்பன் பாணியே தனிதான் யாரும் ஓவர்டேக் பண்னமுடியாது, முழுதும் ரசிச்சேன்

selventhiran said...

ட்ரஸ்ட்வொர்த்தி ட்ரஸ்ட் // haa execellent

Ferdin Joe said...

I join the trustworthy trust!

A Simple Man said...

kalakkals.. as usual.

pls visit http://iamverysimple.blogspot.com/
for daily predictions of IPL 2010 matches.
Thanks,
ASM

Thamira said...

இந்த முறை கமெண்ட்ஸை விட ஆஸ்ரம அறிவிப்பு கலக்கல். நிஜமாவே ஆரம்பிக்கலாம் பாஸ்.. நமக்குன்னு நாலு பேரு வராமயா போயிருவாங்க? என்ன சொல்றீங்க.?

"தாரிஸன் " said...

romba nallu iruku sir....
nijamka enaku siripu vanthathu..

Jaleela Kamal said...

கலக்கலான குசும்பு

ரசிகன் said...

//இவர் போட்டோவை பர்ஸில் வைத்திருந்த கார்த்தியின் பர்ஸை ஆட்டைய போட்ட பிக்பாக்கெட் திருடர்கள், திரும்ப வந்து கொடுத்தது மட்டும் இன்றி கார்த்தியின் கை செலவுக்கு பணமும் கொடுத்தார்கள். (பிச்சைக்கார பய உனக்கு எதுக்கு பர்ஸ் என்று திட்டி, நாலு மொக்கு மொக்கினது கணக்கில் வராது.) //


ஹா..ஹா...ஹா.... சிரிச்சு சிரிச்சு,.. ஆபிஸ்ல எல்லாரும் ஒரு மாதிரியா பாக்கறாங்க...:))))

Karthik Nagarajan said...

Aiyya,

At least vaarathukku oru entryyavadhu poda koodathaa? Romba overaa theriyalle?

geethappriyan said...

குசும்புண்ணே,
செம கலக்கல்,அந்த நித்யா,பயபுள்ள் எப்புடியெல்லாம் வாழ்ந்திருக்கு?ம்ம்ம்ம்ம்ம்ம்