Monday, November 16, 2009

ச்சீ ச்சீ ஊரா இது!

காலையில் எழுந்ததும் எல்லாம் கக்கூஸ் போறானுங்க, மாடு எல்லாம் இன்னும் பச்சையாகவே சாணிபோடுது, ரோடு எல்லாம் மோசமாக இருக்கு ச்சீ ச்சீ ஊரா இதுன்னு ரேஞ்சில் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு போனா பேசனுமாம். அப்பதான் புள்ள வெளிநாட்டில் வேலை பார்க்குதுன்னு ஒத்துப்பாங்களாம். இப்படிதான் எங்க சொந்தகார பயபுள்ள ஒன்னு அமெரிக்காவில் நல்ல வேலையில் இருந்துச்சு அது ஊருக்கு வந்த பொழுதுவீட்டுல ஏசி இருந்தும் வசதி பத்தவில்லை என்று திருவாரூரில் ஒரு ஹோட்டலில் ரூம் போட்டு தங்கி அது கொடுத்த அலபறை கொஞ்சம் நஞ்சம் இல்ல, இந்த முறை போனா ஊரில் வீட்டில்தான் தங்கி இருந்தான் என்னன்னு விசாரிச்சா ரிஷசனில் வேலை போய்விட்டதாம்.

சரி இதை விடுங்க நம்ம மேட்டருக்கு வருவோம்... நண்பர்களை சீண்டுவதில் இருக்கும் சுகமே சுகம் தான்.

சென்னை வந்ததும் போன் செய்டா வந்து பிக்கப் செஞ்சுக்கிறேன் என்று நண்பன் சொல்லி இருந்தான், சரி என்று இறங்கியதும் போன் செஞ்சேன் ஒரு 5 நிமிடத்தில் வந்துவிட்டான். ஏறி கொஞ்ச தூரம் போனதும் மச்சான் கொஞ்சம் ஏசியை ஆன் செய்யேன் ரொம்ப புழுக்கமா இருக்கு என்றேன், என்னமோ கெட்ட வார்த்தையில் திட்டியது போல் முறைச்சான், ஏன்டா நான் என்ன தப்பா சொல்லிட்டேன் என்று முறைக்கிற ஏசி ஒர்க் ஆவாதா என்றேன், டேய் ஒழுங்கு மரியாதையா வாயை மூடிக்கிட்டு வா இல்ல வாயிலேயே குத்து வாங்குவ என்றான், என்னடா இது இப்படி வன்முறையா பேசுற ஏசி போடமுடியும் இல்ல முடியாதுன்னு சொல்லு அதுக்கு எதுக்கு அடிப்பேன் உதைப்பேன் என்று சொல்லிக்கிட்டு என்றேன், ஓரம் கட்டி நிறுத்திவிட்டு இங்க இறங்கி வீட்டு அட்ரஸுக்கு ஆட்டோ புடிச்சு வா அப்பதான் நீ சரி வருவ என்றான், சரி ஆட்டோவிலாவது ஏசி இருக்குமா என்றேன்..%#$^$%$%^$^$@@$@@$@ திட்டிக்கொண்டேதிரும்ப பஜாஜ் பல்சரை ஸ்டார்ட் செஞ்சான்:)

மறுநாள் பஸ்ஸில் போகும் பொழுது மழை பேஞ்சு தண்ணி உள்ளே ஒழுகியது, அவனுக்கு போன் போட்டு ரெயின் கம்மிங் இன் சைட் பஸ் யா! இட்ஸ் டூ பேட் யா, நான் இப்ப என்ன செய்ய என்றேன், ங்கொய்யாலே அப்படியே பஸ்ஸில் இருந்து கீழே குதிச்சு சாவுடா என்றான். :((

பைக் எடுத்துக்கிட்டு கோயிலுக்கு போக சொன்னான், போகும் பொழுது ஹெல்மெட்டை கொடுத்து போட்டுக்க என்றான், கையில் ஹெல்மெட்டை வாங்கிக்கொண்டு அதை இப்படியும் அப்படியும் பார்த்தேன், டேய்............ ஒரு மயிறும் நீ கேட்காத கேட்ட அதாலேயே அடிவாங்குவ, இதுல ஏசி எல்லாம் இருக்காது வேண்டும் என்றால் போட்டுக்கிட்டு போ இல்ல போய் ட்ராப்பிக் போலீஸ் கிட்ட 200ரூபாய் பைன் கட்டு என்றான். ஓ ஒன்லி 15திர்ஹாம் பைன் தானா? இன் துபாய்ன்னு... ஆரம்பிக்கங்காட்டியும் அடிக்க வந்ததால் எஸ்கேப் ஆயிட்டேன்...

ஒருநாள் மதியம் சாப்பிட்டு விட்டு தட்டை வெச்சுக்கிட்டு மச்சான் டஸ்ட்பின் எங்க இருக்குடா என்றேன்.... ஹி ஹி திட்டியதை சொல்ல எனக்கு வெட்கமா இருக்கு.

ஊருக்கு கிளம்பும் பொழுது டேய் போன் செஞ்சு எத்தனை முறை கேட்டேன் என்னடா வேண்டும் என்னடா வேண்டும் என்று ஒன்னும் வேண்டாம் வேண்டாம் என்ற... என்றேன். இங்கயே எல்லாம் கிடைக்குதுடா அதான் வேண்டாம் என்றேன் என்றான். சரி அப்ப எனக்கு தெரியாம எடுத்து வெச்சுக்கிட்ட என்னோட ரெண்டு பழய ஜட்டிய கொடுத்துடுடா என்றேன்.... அதன் பிறகு சென்சார்.

நம்மை டரியள் ஆக்கியதையும் சொல்லனுமுல்ல...போன முறை ஊருக்கு போய் இருந்தப்ப வெச்சு இருந்த மோட்ரலா மொபைலை பார்த்துட்டு என்னடா துபாயில் இருந்து வர இன்னும் இந்த டப்பா மொபைல வெச்சுக்கிட்டு இருக்க ஒரு நல்ல மொபைலா வாங்க கூடாது என்று ஊர்ல இருக்கும் பயபுள்ளைங்க துக்கம் விசாரிக்க ஆரம்பிச்சுட்டுங்க. இந்த முறை வாங்கி இருந்த நோக்கியா E71யை பார்த்துட்டு, அங்க எல்லாம் சைனா மொபைல் யூஸ் செய்யலாமா? இங்க தடை செய்ய போறாங்களாம் என்றார்கள். இல்லடா பாரு இது சைனா மொபைல் இல்ல என்றேன் அட நோக்கியா மாதிரியே டூப்ளிகேட் மாடலா இது? கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்

பதிவர்கள் சந்திப்பு!
மழையினால் உலகபடம் பதிவர்களோடு பார்க்க இருந்தது ஒத்திவைக்கப்பட்டது,அதன்பிறகு ஊருக்கு கிளம்பும் முதல் நாள் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று நர்சிம்மை சந்திச்சேன்:), (நனாவுக்கு நனா), ஒரு செட் வடை சாப்பிட்டு சந்திப்பை முடிச்சோம், மொழி படத்தில் பிகரை பார்த்தா தலையில் பல்பு எரியனும் என்று சொல்வது போல் ஒருவர் தொடர்ந்து 4 முறைக்கு மேல் போன் செஞ்சு சந்திக்கனும் என்றால் மூக்கின் மேல் பல்பு எரியனும் என்று ஸ்ரீ ஸ்ரீ சுந்தரானந்த சுவாமிகள் சொல்லிக் கொடுத்ததுக்கு இனங்க, மூக்குக்கு மட்டும் ஹெல்மெட் கிடைக்குமா என்று தேடி கிடைக்காததால் வாங்கி போன சரக்கோடு தண்டோரா ஆபிஸுக்கு சென்றேன், அங்கு ரமேஷ்வைத்யா அண்ணன்,கேபிள் சங்கர் இருவரும் வந்தார்கள், பிறகு ஜாக்கி சேகர் வந்தார், இன்னொருவர் வந்தார்.

நான் வாங்கிக்கொண்டு போய் இருந்த சரக்கு ஒரிஜினலா என்று கேபிளும், தண்டோராவும் டெஸ்ட் செஞ்சார்கள் எனக்கு கொடுத்தார்கள் இல்லை பழக்கம் இல்லை என்றேன்,சரி டீ,காபியாவது குடிங்க என்றார்கள் இல்லை அதுவும் பழக்கம் இல்லை என்றேன், குடிச்சுக்கிட்டு இருந்த கிளாஸை கீழே வெச்சுட்டு இதையாவது குடிப்பீயா என்றார்கள் தண்ணியை காட்டி ம்ம்ம் என்றேன், மனசுக்குள்ளேயே திட்டி இருப்பார்கள்.

அப்படியே பேச்சு ஸ்பெல்லிங் மிஸ்டேக் செய்யும் பதிவர்கள் பக்கம் சென்றது, ஆஹா நமக்கு நேரம் சரி இல்லை போல என்று பம்மிக்கிட்டு இருந்தேன். ரமேஷ் வைத்யா ”ன்” போட வேண்டிய இடத்தில் shift அமுக்கி ”ண்” போடும் ஆட்களை உதைக்கனும் என்றார், ம்ம்கும் அப்படியே நீங்க உதைச்சுட்டாலும் வலிச்சுடும் என்றும் மனசுக்குள்ளே நினைச்சுக்கிட்டேன்.
அதன்பிறகு அங்கிருந்து கிளம்பி T.நகர் சென்று அருளானந்தம் மெஸ்ஸில் சாப்பிட்டோம். கேபிளார் ஸ்டேசன் வரை கொண்டு வந்து விட்டு சென்றார். அங்கிருந்து ஊருக்கு சென்றேன்.

60 comments:

said...

ன்பின் குசும்பன்

முதல் பகுதி... அக்மார்க் குசும்பு மார்க் பட்டாசு... :-) வெல்கம் பேக். அடுத்தமுறையாவது நாம சந்திப்போம் :-(

தோழமையுடன்
பைத்தியக்காரன்

said...

ஸாரி மக்கா, முதல் பின்னூட்டத்துல 'அ' விட்டுப் போச்சு :-)

said...

நங்கநல்லூர் வந்து விட்டு எனக்கு ஃபோன் செய்திருக்கலாமில்லை?

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

ஆரம்பிச்சிட்டார்ய்யா....ஆரம்பிச்சிட்டார்ய்யா...........

said...

பேக்கு டு தி ஆக்சனு....

வெல்கம் மாம்ஸ்...

said...

”பேக்கு டு தி ஆக்சனு....

வெல்கம் மாம்ஸ்...”

மாம்ஸு சரி பேக்கு, டு தி ஆக்சன்னா இங்க யாரை பேக்குன்னு சொல்றீங்க?

குசும்பரே இதெல்லாம் கேட்பதில்லையா?

said...

பதிவர்களைச் சந்திக்கப் போறப்போ சரக்கோட தான் போகணுமா? துபாய்ல ஏன் எனக்கு சரக்கு வாங்கி தரல?

said...

குசும்பணை நல்லா மிரட்டியிருக்காரு வைத்யா! :))

said...

// KVR said...

பதிவர்களைச் சந்திக்கப் போறப்போ சரக்கோட தான் போகணுமா? துபாய்ல ஏன் எனக்கு சரக்கு வாங்கி தரல?///

வரவர அண்ணாச்சியை கண்ட்ரோல் பண்ண ஆளில்லாம போயிருச்சுப்போல ஓவர் அலும்பு பண்ணிக்கிட்டு திரியிறாக! :)

said...

welcome back..

said...

right ...ritttu

said...

//மூக்குக்கு மட்டும் ஹெல்மெட் கிடைக்குமா என்று தேடி கிடைக்காததால்//
http://yerumbu.blogspot.com/2009/10/blog-post_14.html

இந்த மாதிரி மாஸ்க் ட்ரை பண்ணி பாருங்க

said...

சிங்கம் கிளம்பிச்சுருடோய்... இனி எத்தனை போரு தலை உருளும்னு தெரியலையே....

said...

அட.. வந்தாச்சா.. அடிச்சு ஆடுங்க..

said...

நல்ல குசும்பு, பைக்கில் ஏஸியா? நல்ல சிரிப்பை வரவழைத்தது.

// அப்படியே பேச்சு ஸ்பெல்லிங் மிஸ்டேக் செய்யும் பதிவர்கள் பக்கம் சென்றது,//
அப்ப நான் எல்லாம் சென்னை வந்தா சத்தம் இல்லாமல் திரும்பி வரவேண்டும் என நினைக்கின்றேன். நன்றி.

said...

வெல்கம் பேக்கு.! :-))

(நம்பளையெல்லாம் பாக்க வருவீங்களா? ஹூம்)

said...

அண்ணே.. நோக்கியா மாதிரியே இருக்குற அந்த சைனா டூப்ளிகேட் மாடல் மொபைல் எனக்கு ஒன்னு வாங்கி அனுப்புங்கண்ணே....
:P

said...

பைக் ஏசி..... சான்ஸே இல்லே. சூப்பர் சிரிப்பு.

உன்னால் தான் இப்படியெல்லாம் முடியும்.

வருக வருக...

said...

ஆனா உன் ஃபிரெண்டு இரண்டு பழைய ஜட்டியை எடுத்து வச்சிட்டாருன்னு சொன்னதெல்லாம் கொஞ்சம் ஓவர்....

இந்தியாவில் கிடைக்காத ஜட்டியா? மேலும் துபாயிலும் இந்திய ஜட்டிகள் தானே அதிகம் விக்குது!!

said...

// ரமேஷ் வைத்தியா //

அவர் பேர் ரமேஷ் வைத்யா - பேர்லேயே தப்பா? அவர்ட்டருந்து தப்பவே முடியாது.

said...

:))

said...

இதெல்லாம் கூட பரவால்ல..

பவர்கட்னா என்னன்னு கேட்ட பாரு மாமா? அதான் தாங்கிக்க முடியலை.. :(

Anonymous said...

பலே.. வாய் விட்டு சிரித்தேன்... அதுவும் சுவரில் காலால் உதைத்து உதைத்து சிரித்தேன்... பக்கத்து ரூம் பையன், அர் யூ ஓக்கேனு கேட்டான்.. சத்தியமா...

செம கலக்கல்...

said...

Welcome Back

said...

பைத்தியக்காரன் அண்ணாச்சி அ வை விட்டதுக்கு ரமேஷ் அண்ணன் ஒரு குத்து விட போறார் பாருங்க!:)

ஐயா நீங்க நங்கநல்லூரில் தான் இருக்கீங்க என்று தெரியாது, அங்கு இருந்ததே ஒரு நாள் தான், திருப்பதி போய்விட்டு திரும்ப வரும் பொழுது இருந்தேன்.மன்னிக்கவும்.


நன்றி இஸ்மத் அண்ணே

அகல்விளக்கு அண்ணாச்சி என்னை பேக்குன்னு சொன்னது நோட்டட்!:)

முரளி அவராவது ஒரு முறை சொல்லிட்டு விட்டுப்புட்டாருய்யா:) நீ ஸ்பீகர் கட்டி கூவுவீங்க போல:)

துபாயில் சரக்கு வயசுக்கு வந்தவங்களுக்குதான் வாங்கி தரனும் என்று ரூல்ஸ் இருக்கு, உங்களை மாதிரி குழந்தைபசங்களுக்கு நோ!:)

ஆமாம் ஆயிலு:)

நன்றி எறும்பு!

நன்றி கனாகாலம்

நன்றி பிரதாப்

நன்றி கையேடு

நன்றி பித்தனின்வாக்கு

நன்றி ஆதி, யோவ் ஆதி நான் வந்தது வியாழக்கிழமை காலை எப்படி ஒய் உங்களை சந்திக்கமுடியும்?

ஜெகதீசன் இருக்கட்டும் இருக்கட்டும் கவனிச்சுக்கிறேன்!

நன்றி மஞ்சூரார்!

அல்லோ வெயிலான் அண்ணாச்சி, ஒழுங்காதான் நான் எழுதி இருக்கேன், நீங்க படிக்கும் பொழுது தப்பா படிச்சு இருக்கீங்க அதனால அவரு உங்களைதான் குத்துவாரு!( எவ்வளோ தம் கட்டி குத்தினாலும் நமக்கு வலிக்காது ஜாலியா இருக்கும்)

:)) கோபி

மாமா இருந்தாலும் நீ மோசம் மாமா? கடைசி வரை பவர் கட் என்றால் என்னன்னு சொல்லாம இருந்துட்டு இங்க வந்து புலம்புற பாரு உன்னை என்ன செய்வது?

said...

வெல்கம் பேக். இனியன் வந்தாச்சு. இனிமேலாச்சும் பொறுப்பா நடந்து கொள்ளவும். குறிப்பாகக் கவிஞர்களைக் கலாய்க்காமல் இருக்கணும் :)

அனுஜன்யா

said...

பேக் டு பெவிலியன்?

வரவு நல் வரவாகுக‌

புது குழந்தை நல்லாயிருக்கா

said...

பவர் கட்??
அப்படின்னா என்ன?

said...

வெல்கம் பெக் புது அப்பா, இனி முன்ன மாதிரி குசும்பு பண்ண முடியாது, அதுக்கு புதுசா ஒரு ஆளு பொறந்திருக்குள்ள

said...

//அதன்பிறகு ஊருக்கு கிளம்பும் முதல் நாள் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று //

அட!
ஒரு ஆஞ்சநேயரே
ஆஞ்சநேயர் கோயிலுக்கு
சென்றிருக்கின்றதே!!

(அப்பாடா...ரொம்ப நாளைக்கப்புறம் கவிதை எழுதிட்டேன் )

:))

said...

வாய்யா வா... லீவு முடிஞ்சு வந்தவுடனே போட்டு தாக்கியாச்சா...

வெரி குட்.. வெரி குட்..

said...

//(அப்பாடா...ரொம்ப நாளைக்கப்புறம் கவிதை எழுதிட்டேன் )//

அண்ணே...

நீங்க எழுதினது கவிதையா இல்லையானு சொல்லவேண்டியவரு நீங்களே இல்ல. யூத் அனுஜன்யா. ம்க்கும் :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

said...

அருமை நண்பா!

said...

ஆமா ஆமா
ச்சீ ச்சீ ஊரா அது..?

::)))

:::))

said...

மச்சி,
பவர் கட் அப்டின்னா என்னான்னு உனக்கும் தெரியாதா?

நம்மள மாதிரி பவர் கட்னா என்னானு தெரியாதவங்களுக்காக நம்ம மாப்பி சஞ்செய் ஒரு பதிவு எழுதுனா தேவலாம்.

said...

ரைட்டு.ட்டு.டு.

said...

வெல்கம் பேக் - நோட் நோ "கு"

நான் பின்னூட்டம் போடலாம்னு நெனச்சு கீழ வந்தா அத ஜோஸஃப் பால்ராஜ் எழுதிட்டாரு.அதுக்கு ஒரு ரிப்பீட்டு.

said...

தல கலக்கல் பதிவு..:)

said...

அன்பின் குசும்பன்

கலக்கல் - சூப்பரா இருக்கு

ஆமா நாங்கல்லாம் அங்கெ இருந்தப்ப இட் வாஸ் ஜஸ்ட் டூ அண்ட் ஹாஃப் பவுண்ட் - தட்ஸால்

ம்ம்ம்ம்ம் - உனக்கு ஏசி கேக்குதா அதுவும் பஜாஜ் பல்ஸர்லே - ஒதெக்கணும்யா உன்னெ எல்லாம்

பய குட்டிக் குசும்பன் எப்படி இருக்கான்

நல்வாழ்த்துகள் அனைவருக்கும்

said...

ம்ம்ம்... பில்லியன் ரைடுக்கெல்லாம் ஏசி கேக்குதா? அடிக்காம விட்ட அந்த நண்பர் ரொம்ப நல்லவரு போல...

பையன் "ஸ்வீட்டன்" எப்பிடி இருக்கான்?

//குறிப்பாகக் கவிஞர்களைக் கலாய்க்காமல் இருக்கணும் // சந்தடி சாக்குல இப்பிடித்தான் ரிக்வெஸ்ட் போடுவாங்க.... கண்டுக்காம இருந்துடணும்.

said...

//
ஒருநாள் மதியம் சாப்பிட்டு விட்டு தட்டை வெச்சுக்கிட்டு மச்சான் டஸ்ட்பின் எங்க இருக்குடா என்றேன்...//


துபாய்ல எல்லாமே சிங்கிள் யூஸ் தான!

said...

//ரமேஷ் வைத்யா ”ன்” போட வேண்டிய இடத்தில் shift அமுக்கி ”ண்” போடும் ஆட்களை உதைக்கனும் என்றார், ம்ம்கும் அப்படியே நீங்க உதைச்சுட்டாலும் வலிச்சுடும் என்றும் மனசுக்குள்ளே நினைச்சுக்கிட்டேன்.//

அப்படியெல்லாம் நினைக்காதிங்க!
ஆளுக்கு ஃபுல்லா போன் வெயிட்!
ஒருக்கா முதுகுல விட்ட குத்து இன்னும் வலிக்குது!

said...

நன்றாக கவனிக்க, அது முதுகு, சத்தியமா மூக்கு இல்ல!

said...

//நங்கநல்லூர் வந்து விட்டு எனக்கு ஃபோன் செய்திருக்கலாமில்லை?//

அது நானாவுக்கு நானா!

பைத்தியகாரன் அண்ணன்(அவர் தான், மரியாதை நிமித்தமாக அண்ணன்)னை பார்க்க பைக்காரா செல்லுவார் குசும்பன்!

said...

=))

said...

நீங்க பல்சர்ல ஏசி கேட்டத ரசிச்சச் சிரித்தேன் :)

said...

//.. அட நோக்கியா மாதிரியே டூப்ளிகேட் மாடலா இது? ..//

ஹா.. ஹா..

Anonymous said...

பழைய ஜட்டிப் பதிவரே வர வர உங்கள் 'குசு'வுக்கு சாரி குசும்புக்கு அளவில்லாமல் போய் விட்டது

Anonymous said...

:)

said...

// பைத்தியக்காரன் said...
ஸாரி மக்கா, முதல் பின்னூட்டத்துல 'அ' விட்டுப் போச்சு :-)//

இது வேனுமுனே விட்ட மாதிரி இருக்கு... :)

"குசும்பரே" welcome back!!

said...

நானுந்தான் அமெரிக்காவுலேருந்து வாரேன். நமக்கு அப்பிடி ஒன்னும் தோணலயே.நான் ஒழுங்கு இல்லயோ?

ஆனாலும் படிச்சு ஒரே சிரிப்புதான்...
கலக்கீட்டீங்க சாமி...

said...

நன்றி முகிலினி, அவர் வந்து திரும்ப
ஒரு உதைவிடவில்லையா?:)

நன்றி ஷாகுல்

அனுஜன்யா, உங்க நேர்மை எனக்கு பிடிச்சு இருக்கு,
கவிஞர்களை கலாய்க்காதே, என்னை கலாய் என்று
மறைமுகமாக சொன்ன உங்க நேர்மை எனக்கு பிடிச்சு
இருக்கு.

நன்றி மங்களூர் மாப்பி!

நன்றி அபுஅஃப்ஸர், அனைவரும் நலம்.

ஜெகதீசன் சஞ்ய்க் கிட்ட எத்தனை முறையோ கேட்டேன்
பதிலே சொல்லவில்லை:(

யோகா, இப்படியே சொல்லி சொல்லி
என்னை பேக்அப் செஞ்சுடுவீங்க போல:)

அப்துல்லா அண்ணாச்சி உடம்புல
எல்லா பாகங்களும் நலமா?:)))

நன்றி இராகவன் அண்ணாச்சி!

பைத்தியக்காரன் அண்ணாச்சி யூத் அனுஜன்யாவுக்கும் கவிதைக்கும்
என்ன சம்மந்தம்? ஓ இப்ப எல்லாம் நடுவர்கள் அதை பற்றி ஒன்னுமே
தெரியாம இருப்பதுதான் பழக்கமோ?:))))

நன்றி மின்னல்:)

ஆமாம் சோசப்பு நான் எவ்வளோவோ கேட்டுவிட்டேன்
நீயும் கேளு:)

நன்றி நர்சிம்

நன்றி அறிவிலி

நன்றி வினோத்கெளதம்

நன்றி சீனா அய்யா, மகன் நலம் அய்யா!

நன்றி மகேஷ், எங்க அடிக்காம விட்டான், அடிவாங்கினாலும்
நாம வாய் குறையாதே! அனுஜன்யா அவருக்கு ரிக்வெஸ்ட்
போடல, கவிஞர்களுக்குதான் போட்டு இருக்கார்:)

வால் ஹி ஹி:) ரமேஷ் அண்ணன் அடிச்சு வலிச்சுதா?
இது நிஜமா?

நன்றி கலகலப்ரியா

நன்றி செந்தில்வேலன்

நன்றி பட்டிக்காட்டான்

நன்றி அனானி

நன்றி சின்ன அம்மிணி

நன்றி செந்தில் நாதன் அண்ணாச்சி

நன்றி அரங்கப்பெருமாள்

said...

டேபிளில் இருந்து குதிச்சு.. குதிச்சு..
சீலிங்ல தலைகீழா தொங்கி... தொங்கி...
மாடியில இருந்து டைவ் அடிச்சு.. டைவ் அடிச்சு..
மானிட்டர்ல மண்டைய முட்டிகிட்டு... முட்டிகிட்டு...

சிரிச்சேன் பாஸ்!!
(நெசமாத்தான் நம்புங்க...!)

said...

டேபிளில் இருந்து குதிச்சு.. குதிச்சு..
சீலிங்ல தலைகீழா தொங்கி... தொங்கி...
மாடியில இருந்து டைவ் அடிச்சு.. டைவ் அடிச்சு..
மானிட்டர்ல மண்டைய முட்டிகிட்டு... முட்டிகிட்டு...

சிரிச்சேன் பாஸ்!!
(நெசமாத்தான் நம்புங்க...!)

said...

\\சரி ஆட்டோவிலாவது ஏசி இருக்குமாஎன்றேன்..%#$^$%$%^$^$@@$@@$@ திட்டிக்கொண்டேதிரும்ப பஜாஜ் பல்சரை ஸ்டார்ட் செஞ்சான்:)//

குசும்பின் உச்ச கட்டம் இது தான் .

said...

welcome back.

மருமகனுக்கு பேரு என்ன வெச்சீங்க?
மஞ்சு நலமா??

said...

அலப்பறை தாங்க முடியலை. ஒரு தடவை ஏரோப்ளேன் ஏறிட்டா...
இன்னும் நிறைய அடிக்கனும்னு நினைச்சேன். அந்த ஸ்பெல்லிங் மிஸ்டேக் பத்தி படிச்சதுல இருந்து..வேண்டாம்..ஸ்டாப்

said...

கலையரசன் நன்றி

Romeoboy நன்றி

நன்றி புதுகைத் தென்றல் , பையனுக்கு இனியன் என்று பெயர் வைத்து
இருக்கிறோம்.

நன்றி பின்னோக்கி..

said...

கலக்கல் வாத்தியாரே!
கொஞ்சம் நம்ம கடை பக்கம் வந்து கருத்து சொல்லிட்டுப் போங்க
(அப்படி பார்க்காதீங்க! உங்களை invite பண்றதுக்காக கமெண்ட் போடலை....சொன்னா. நம்புங்க...........அவ்................ வ்!)

said...

:-))))