டிஜிட்டெட் பிரிண்டிங்கில் இதுவரை இருந்த பிரச்சினை ஆப்செட் பிரிண்டிங்கில் உபயோகப்படுத்தும் பேப்பர்களை உபயோகப்படுத்த முடியாததுதான், உட்பிரிபேப்பர், ஐவெரி பேப்பர்களை மட்டுமே பயன்படுத்தமுடியும் அதுவும் அதிகப்பட்சம் 300gsm அப்படி பயன்படுத்தும் பொழுதும் முதல் ஒரு 100 பிரிண்ட் சரியான கலரிலும் அதன் பிறகு போகபோக கலர் மாறி மாறி வரும் , பின் கொஞ்ச நாட்கள் போய்விடும் இதுபோன்ற பிரச்சினைகள் Nexpress ல் இல்லை.
Nexpressல் 60gsm பேப்பர் முதல் 450 gsm பேப்பர் வரை உபயோப்படுத்த முடியும் ஆப்செட்டில் பயன்படுத்தும் அனைத்து வகையான பேப்பர்களையும் இதில் பயன்படுத்தமுடியும், இது டோனர் Based பிரிண்டிங் முறை என்றாலும் ஆப்செட்டுக்கு மிக அருகில் அதாவது 92%வரை குவாலிட்டி இருக்கிறது. ஒருவர் 10 பக்கம் கொண்ட புத்தகத்தை டிஜிட்டலில் செய்வது என்பது மிகவும் கடினம் ஏன் என்றால் டிஜிட்டெலில் front & back பிரிண்ட் செய்யும்பொழுது பிரிண்ட் இம்பிரசன் மாறும் அதாவது முதல் பக்கத்தில் பிரிண்டிங் 7.5mm தள்ளி ஆரம்பித்தது என்றால் பின் பக்கம் அதே பேப்பரில் பிரிண்ட்செய்யும் பொழுது 7.1mmலோ அல்லது 7.8mm லோ ஆரம்பிக்கும் ஆனால் இந்த Nexpressல் Reversible பெல்ட் டெக்னாலஜியால் முதல் பக்கத்தில் 7.53mm தள்ளி இம்ப்ரெசன் விழும் என்றால் பின் பக்கத்திலும் 7.53mm அதே இடத்தில் சரியாக இம்ப்ரெசன் ஆகும்.
அனைத்து டிஜிட்டெல் மெசின்களும் 4 கலரை கொண்டு இயங்குவதுதான் CMYK ஆனால் இதில் 5வதாக ஒரு கிளியர் இங் என்று சொல்லப்படும் ஒன்றால் வாட்டர் மாஸ்க் போன்ற பிரிண்டுகளும் பிரிண்ட் செய்யமுடியும்.
இந்த 5வது கலரின் பயன்கள்.
1)வாட்டர் மாஸ்க் போன்ற பிரிண்ட்டுகள் பிரிண்ட் செய்வது!
2)புரொடெக்சன் கோட் ஆகவும் இது பயன் படுகிறது தண்ணீர், விரல் அச்சு போன்றவற்றில் இருந்து காக்க இந்த 5வது கலர் ஆகிய கிளியர் இங் பயன்படுகிறது.கிளாஸி பினிசிங் கொடுக்கவும் இது பயன்படுகிறது, இந்த மெசினோடு கிளாசிங் யூனிட் என்று ஒரு இலவச இனைப்பும் கொடுக்கிறார்கள் 5வது இங் கோட்டிங்கொடுத்து இருந்தால் இதன் மூலம் முகம் பார்க்கும் அளவுக்கு பள பள பிரிண்டிங் ரெடி.
3) செக் புக்கில் இருக்கும் மேக்னடிக் பார் கோட் பிரிண்டிங்
4) டச் பீல் என்று சொல்லபடும் முறை, (ஒரு உருவத்தை பிரிண்ட் செய்தால் அதை தொட்டு என்ன உருவம் என்று உனரசெய்யும் முறை) ஆகியவையாகும்.
இவை அனைத்தையும் விட Variable Data பிரிண்டிங் எனப்படும் முறை இந்த மெசினில் பிரிண்ட் செய்யலாம். உதாரணத்துக்கு பள்ளிகூடத்தில் படிக்கும் மாணவர்களின் பெற்றோருக்கு அவர்கள் பெயர் போட்டு ஒரு லெட்டர் அனுப்பவேண்டும் என்று அந்த நிர்வாகம் நினைக்கிறது, 5000 பேருக்கு அனுப்பவேண்டிய லெட்டரை மட்டும் தனியாக பிரிண்ட்செய்துவிட்டு பின் பெயர் வரும் இடத்தில் தனியாக எழுத வேண்டும் அல்லது வேறு முறையை உபயோக்கிக வேண்டும் ஆனால் இதில் பெயர்கள் அடங்கிய டேட்டாபேஸ் பைலை எந்த இடத்தில் பெயர் வரவேண்டும் என்று சொல்லிவிட்டால் போது அழகாக அவர்கள் பெயர் அடங்கிய லெட்டர்ரெடி ஆகிவிடும் அது போல் தன் நிர்வாகத்தில் பணி புரியும் 10 ஆட்களுக்கு மாதாந்திர காலெண்டரில் இருக்கும் 12 பக்க படத்திலும் அவரவர் பெயர் போட்டுகொடுக்கவேண்டும் என்றாலும் இதில் சாத்தியம் மொத்தம் 10 காலெண்டர் பத்து பெயர்களிலும் ரெடி ஆகிவிடும்.
ஒருவர் தான் எழுதிய கவிதை தொகுப்பை ஒரு பத்து பேருக்கு புத்தக வடிவில் பிரிண்ட் செய்து கொடுக்கவேண்டும் என்று நினைக்கிறார் என்றால் அவரால் ஆப்செட்டில் பிரிண்ட் செய்யமுடியாது, 10 புத்தம் பிரிண்ட் செய்ய 50 புத்தகம் பிரிண்ட் செய்யும் அளவுக்கு முதலில் பேப்பர் வேஸ்ட் ஆகும், ஆனால் இதில் 5 புத்தகம் தான் வேண்டும் என்றாலும் அடுத்த 30 நிமிடங்களில் புத்தகம் ரெடி!
சாதரணமாக பிரிட்டிங்கில் உபயோக்கிக்கும் பேப்பர்களை உணவு பேக்கிங்குக்கு பயன்படுத்த கூடாது ஏன் என்றால் அதில் இருக்கும் நச்சுதன்மை ஆனால் இதில் பிரிண்ட் செய்தவைகளை தாரளமாக பயன்படுத்தலாம். இதுபோல் பல பயன்கள் இருக்கிறது இந்த Nexpressல் விலை கொஞ்சம் அதிகம் தான் நம் ஊர் காசுக்கு கிட்டதட்ட 4 கோடி வரும் ஆனால் மிகவும் தாரளமாக கொடுக்கலாம். நாங்கள் வாங்கி இருக்கும் முறையை பற்றி வெளியில் சொல்லமுடியாது யாருக்காவது விருப்பம் இருப்பின் மெயிலில் கேளுங்கள் எப்படி வாங்கவேண்டும் என்று சொல்கிறேன். U.A.E லேயே முதன் முதலாக வாங்கி இருக்கும் பெருமை என் கம்பெணிக்கு இருக்கிறது அதுபோல் இந்த மாடலுக்கு முன் மாடலான Nexpress 2000 இந்தியாவில் 4 இடத்தில் இருக்கிறது சென்னையிலும் ஒரு பிரபல தொழிலதிபரிடம் இருக்கிறது.
டிஸ்கி: பதிவர்கள் புத்தகம் ஏதும் எழுதிக்கிட்டு இருந்தால் அதை இதில் எளிதில் பிரிண்ட் செய்துவிடலாம்.
24 comments:
கண்டிப்பா மாங்கு மாங்ன்னு டைப் பண்ணீருப்பிங்க அதனால மீ த பர்ஸ்டு மட்டும்
ஏன்னா எனக்கு வேற ஒன்னும் தெரியாது!
செம காமடி! வி வி சி:-))
பாராட்டுக்கள். இது போன்ற உபயோகமான பல பதிவுகளைத் தரவேண்டும் இது என் விண்ணப்பம்
மீ த பர்ஸ்ட் போட முடியாத அளவுக்கு பொறுப்பான பதிவு எழுதியதற்கு எனது கடுமையான கண்டனம்
அருமை
துறை சார்நத பதிவு.
உபயோகமெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா விலையைக் கேட்டா கிறு கிறுங்குதே.
இது சாதாரண பிரிண்டிங் ப்ரஸ்க்கு உள்ளதா? செய்திப் பத்திரிக்கை போன்றவற்றின் உபயோகத்துக்கு உள்ளதா?
விலை அதிகம் என்றாலும் அது ஆரம்ப முதலீட்டு நிலையிலேயே. நிச்சையமாக மிகவும் பயனுள்ளது, முக்கியமாக குறைந்தளவு பிரதிகளை எடுக்க முடிவதும் customized பிரதிகள் எடுக்க முடிவதும் பலருக்கும் பயன்படும்.
இவ்வாறான துறைசார் பதிவுகளும் எழுதவும்... :)
அச்சுத்துறைக்கு பயனுள்ள வரவு!
வெங்கடேஷ்
http://thiratti.com
துபாயில் உங்க அலுவலகம் வந்த போது என்னிடம் காட்டினீர்களே...அந்த மிஷினா இது???
//நாங்கள் வாங்கி இருக்கும் முறையை பற்றி வெளியில் சொல்லமுடியாது யாருக்காவது விருப்பம் இருப்பின் மெயிலில் கேளுங்கள் எப்படி வாங்கவேண்டும் என்று சொல்கிறேன்.//
இங்க சொன்னா போலீஸ் புடிச்சுக்குமா?
துறை சார்நத பதிவு..நன்றி ;)
//சென்னையிலும் ஒரு பிரபல தொழிலதிபரிடம் இருக்கிறது.//
அப்துல்லா அண்ணேகிட்ட தானே??
எதிர்காலம் இதைப்போன்ற டிஜிட்டல் ப்ரிண்டிங் காலமாகத்தான் இருக்கும்.
நல்ல பதிவு சரவணா.
வடகரை வேலன் அண்ணாச்சிக்கு லிங்க் குடுக்கலாம்னு நெனைச்சுட்டே படிச்சே. வந்துட்டுப் போய்ட்டார் போலிருக்கே!
நல்ல பதிவு.நன்றி
-பரிசல்காரன்
Good Post... Very Intresting
இது மாதிரி பதிவுகெல்லாம் தலைப்பு ஆங்கிலத்திலும் கொடுக்கவும் !!!
நான் ஊருக்கு போகும் போது பிரிண்டிங் மெசின் ஒண்ணு இருக்கு எடுத்து கொண்டு போ. அங்க போயி வித்து ஆளுக்கு பாதினு சொன்னியே இந்த மிஷின் தானா..?
//வி வி சி/
விடிய விடிய சிரிச்சேன்?
மிகவும் உபயோகமான பதிவு.
நன்றி ஐயா.
சில சந்தேகங்கள்.
இதற்கான பராமரிப்பு செலவு ஒப்பீட்டளவில் என்ன மாதிரி? ஓப்செட் பிரிண்டுடன் ஒப்பிடும்போது?
consumables:
Toner Vs ink?
plate vs film?
sheet fed / reem?
servicing?
Heidelberg 5 colour டப்பா மெஷின் ஒண்டை வைச்சு ஓட்டிக் கொண்டிருக்கிறம்.
நல்ல வழி காட்டுங்கையா.
அட நீங்க அச்சுத்தொழிலா?
நான் முதல் முதலில் வேலை பார்த்த தொழில் அது.
ட்ரெடில் மிஷினில் தொடங்கி அகியாமா ஃபோர் கலர் வரை வேலை செய்திருக்கிறேன். கொசுவத்தி சுத்த வைத்து விட்டீர்கள்.
சென்னையில் இந்த மெஷின் எங்கே இருக்கிறது?
அனைவருக்கும் நன்றி, இதை எழுதி 3 மாதம் ஆனது எழுதியதும் வடகரை வேலன் அண்ணாச்சிக்கு அனுப்பினேன் அவர்தான் நினைவு வைத்து சில நாட்களுக்கு முன் அந்த பதிவை போடவில்லையா என்று கேட்டார் அவருக்காகதான் போட்டேன்!:)))
சுல்தான் பாய் இதில் 44x56cm வரைதான் பிரிண்ட் செய்யமுடியும் அதனால் இதில் செய்திதாள் எல்லாம் பிரிண்ட் செய்யமுடியாது!
அப்துல்லா அண்ணாச்சி அதே மெசின் தான்!
rahulan இதுக்கு 3 மில்லியன் காப்பி பிரிண்ட் செய்யும் வரை மெயிண்டெனஸ் அவர்களோடது, மெசின் வாங்கி இதோடு 6 மாதம் ஆகிறது ஒன்னும் பெருசாக செலவு வந்துவிடவில்லை, பிஸுசர் ஆயில், பியுஸர் வெப் என்று மாற்றவேண்டியது இருக்கும், ஒவ்வொரு 50,000 பிரிண்டிங்கின் பொழுது அதுதான். டெய்லி மெயிண்டென்ஸ் என்று சார்ஜர் கிளீன் செய்வது என்று கொஞ்சம் புதுகார் போல பார்த்துக்கனும்.
உங்களுக்கு ஆப்செட்டில் ஆகும் பிரிண்டிங் செலவை விட 40% கம்மியாக ஆகிறது, எங்களிடம் பிரஸ் டெக் ஆப்செட் மிசினும் இருக்கிறது ஆனால் இப்பொழு அதைவிட இதில் தான் அதிகம் பிரிண்ட் செய்கிறோம்!
(ஆப்செட் என்று வரும் மக்களுக்கு இதை காட்டினால் சரி என்கிறார்கள் விலையும் குறைவு என்பதால்).
**************************
இளயபல்லவன் நான் பேசிக்கா வெப் டிசைனர், இங்கு பிரிண்டிங் கம்பெணியில் டேமேஜராக இருக்கிறேன் பிஸினஸ் கார்ட் முதல் ஹோர்டிங்ஸ் பிரிண்ட் செய்யும் மெசின் வரை வைத்து இருக்கிறோம்.
தொழிலை மாத்திக்கிட்டேன்:))))
ஓ.. துறை சார்ந்த பதிவா.. முதல்லயே சொல்றதில்லையா? எதிர்பார்க்கவில்லையல்லவா? வேறெங்கேயோ வந்திட்டோமோன்னு ஒரு சின்ன சந்தேகம்..
அட... நீங்களும் ப்ரிண்டிங் துறையா? ரொம்ப இந்த்ரெஸ்டிங் இண்டஸ்ட்ரி. என் மாமாவும் சென்னைல ஆஃப்செட் ப்ரிண்டிங் துறை. நான் அட்வெர்டைசிங்ல இருந்ததலாயும், மாமா இந்த துறைல இருப்பதாலயும் இந்த துறை மேல ஒரு ஈர்ப்பு.
இந்த மெசின்ல லிமிடேசன்ஸ் நிறைய இருக்குன்னு படிச்சேன்.
நல்ல உபயோகமான பதிவுங்க.
Post a Comment