முதலில் A.R.ரஹ்மான் அவர்களுக்கு விருது கிடைத்த மகிழ்ச்சி இருந்தாலும் அதில் எனக்கு இருக்கு வருத்தம் அதைப்பற்றி பின்னாடி பார்க்கலாம் இந்த வாரம் நாம் படிக்க போகும் பல பதிவுகள் இப்படி இருக்கும்....
A.R. ரஹ்மானுக்கு உண்மையில் தகுதி இருக்கிறதா? ----> எதையும் ஆழ்ந்து நோக்கும் பதிவர்.
ஆஸ்கார் என்பது ஆங்கில படத்துக்கான விருது அதனால் தமிழில் நல்ல படம் வருமா------> புதிய கண்டுபிடிப்பாளர் ஐன்ஸ்டீன்
ஆஸ்கார் விருது வாங்கியதால் இந்தியா முன்னேறுமா?-----> மன்மோகன் சிங்க்கு அடுத்தபடியாக முன்னேற்றத்தை பற்றி கவலைபடும் உண்மை இந்தியன்
ஆஸ்கார் விருது ஏன் இளையராஜாவுக்கு கிடைக்கவில்லை----> இளையராஜா விசிறி
ஆஸ்கார் விருதுவினால் என்ன பயன்?-------> பட்ஜெட் பத்மராஜா.
இந்தியாவின் மானத்தை உலகலவில் ஏலம் போட்ட படத்துக்கு விருது!!! கொண்டாடு தமிழனமே----> புரச்சிகர தமிழ்சிந்தனையாளர்
ஸ்லம் டாக் மில்லினியரில் இருக்கும் இசை அபத்தங்கள்----> சிம்பொனி சிலம்பு
உலக அமைதிக்கு என்ன செய்தார் A.R. ரஹ்மான்?----> சமாதான கழுகு
தமிழன் அல்ல ரஹ்மான்---------> பிறப்பு,சாதியை மட்டுமே ஆராயும் பதிவர்
ஆஸ்கார் விருது வழங்கியதில் திம்மிகளின் அரசியல்---- திம்மி எதிர்பாளர்
A.R. ரஹ்மான் ஒரு ஆங்கிலேயே அடிவருடி-----> முன்போக்கு சிந்தனையாளர் முனுசாமி
***********************%%%%%%%%%%%%%%%%************************
A.R. ரஹ்மான் வாங்கியாச்சு ஆஸ்கார் கொண்டாடி மகிழ்வோம் வாங்க----> சக தோழர்கள்
ரஹ்மானிடம் 10 கேள்விகள்-----> பரிசல்காரன், படகுகாரன், கப்பல்காரன், கத்திகப்பல் காரன், நீர்மூழ்கி கப்பல்காரன்
சரி அவரு விருது வாங்கியதில் உனக்கு என்ன வருத்தம் என்று கேட்கிறீர்களா? முதல் ஆஸ்கார் விருது வாங்கியவர் என்று ஒரு சவுண்ட் மிக்சிங்க்கு விருதுவாங்கிய பூக்குட்டி பெயர் வந்துவிடுமே!. A.R. ரஹ்மான் பெயர் வராதே என்றுதான்:(((
இருந்தாலும் ஒருவிருதுக்கு இரண்டு கிடைச்சுடுச்சு அதுவரை சந்தோசமே.
62 comments:
இந்த வருத்தம் எனக்கும் இருந்தது...
இதுக்கு முன்னாடியே சத்யஜித்ரே வும் , பானு வும் ( காந்தி படம் 1982 காஸ்டியூம் டிசைனர் ) ஆஸ்கர் வாங்கிட்டாங்க தல..
ஆனா தமிழன் ஆஸ்கர் வாங்கும் போது கொஞ்சம் புல்லரிக்குதுல..
ஆஸ்கர் - இந்திய இசையில் ஆதிக்கம் செலுத்தும் மறுகாலனி ஆதிக்க சிந்தனாவாதிகளின், முதலாளித்துவ நாடுகளின் சிபாரிசு.
- இதையும் சேர்த்துக்கப்பா
:)
ஏ.ஆர்.ரஹ்மான் அந்த பெண்ணின் முத்தத்தை ஏற்று கொண்டது தமிழ் கலாச்சார சீர்கேட்டிற்க்கு வித்திடுமா ?
மருத்துவர் கோமதாஸ்.
குசும்பன் ஒரு தீர்க்கதரிசி!
//மட்டேமே ஆராயும் பதிவர்//
முன்போக்கு சிந்தனையாளர் முனுசாமி
கொண்டுவோம் வாங்க----> சக தோழர்க//
மிஸ்டேக்கை மட்டுமே தேடும் மிஸ்டர். ரைட்
ஆஸ்கார் விருது ஏன் இளையராஜாவுக்கு கிடைக்கவில்லை----> இளையராஜா விசிறி
யோவ்... எல்லாத்தையும் இப்பிடிப் போட்டு உடைச்சுட்டா அப்றம் நான் என்னத்தைத்தான் எளுதுறது?
:)
நீங்க சொன்னதுல பாதி ஏற்கனவே வந்துடுச்சுல்ல?
//ஆனா தமிழன் ஆஸ்கர் வாங்கும் போது கொஞ்சம் புல்லரிக்குதுல..//
ஆஸ்கர் மேடையில் ஒலித்த தமிழ் - 'எல்லா புகழும் இறைவனுக்கே'
போட்டுத் தாக்கிட்ட தல! ஒடம்பு பூரா ஃபுல் அரிக்குது!
“எல்லா புகழும் இறைவனுக்கே”! என்று பேசிய ரஹ்மானுக்கு கண்டனம். ஆஸ்கர்களை அவர் உடனே திருப்பித் தரவேண்டும், பகுத்தறிவு பகலவன் வீ(ண்)ரமணி கோரிக்கை.
//சரி அவரு விருது வாங்கியதில் உனக்கு என்ன வருத்தம் என்று கேட்கிறீர்களா? முதல் ஆஸ்கார் விருது வாங்கியவர் என்று ஒரு சவுண்ட் மிக்சிங்க்கு விருதுவாங்கிய பூக்குட்டி பெயர் வந்துவிடுமே!. A.R. ரஹ்மான் பெயர் வராதே என்றுதான்:(((
இருந்தாலும் ஒன்னுக்கு இரண்டு கிடைச்சுடுச்சு அதுவரை சந்தோசமே.//
ராசா குச்சும்பா.. ஒன்னியும் கவலை பட வேணாம்.. இந்திய மீடியாக்கள் எல்லாம் ரஹ்மான் ஜுரத்தில் நடுங்குகின்றன.. பூக்குட்டிக்கு 5% முக்கியத்துவமும் ரஹ்மானுக்கு 95% முக்கியத் துவமும் தருகிறார்கள்.
பூக்குட்டி மூவருள் ஒருவராக வாங்கி இருக்கிறார். ரஹ்மான் தனியாக இரண்டு வாங்கி இருக்கிறார்..
ஹய்யோ.. ஹய்யோ.. ஒலகம் தெரியாத புள்ளயா மாமா நீங்க.. ? :))
:-))
hey kusumbon,
This is amazing
:-))
அட இம்புட்டு பதிவெழுதலாம் போல!!!!
:))))))))))))
தீர்க்கதரிசி குசும்பன் வால்க!
ஏன் என் படங்களுக்கு எல்லாம் ஆஸ்கார் விருது தரல? இது ரஹ்மானின் சதி தான்.
நாயகனுக்கு ஆஸ்கர் தருவதாக சொன்னார்கள். ஆனால் கலைஞர் டிவியில் ஒளிபரப்புவதை விட ஆஸ்கர் பெரிதல்ல என்பதால் அதை மறுத்துவிட்டேன்.
ஸ்லம்டாகிற்கு ஆஸ்கர் கிடைக்க வேண்டும் என்பதால் தான் வில்லுவை போட்டிக்கு அனுப்பவில்லை..
//முனைவர் விஜய் said...
ஸ்லம்டாகிற்கு ஆஸ்கர் கிடைக்க வேண்டும் என்பதால் தான் வில்லுவை போட்டிக்கு அனுப்பவில்லை..//
அடேய் அரை மண்டையா .. அதான் வந்ததும் பொட்டிக்குள்ள போய்டிச்சே. அப்புரம் என்னதைட போட்டிக்கு அனுப்பறது?
தேவாவின் இசையை காப்பி அடித்து ஜெய் ஹோ பாட்டுக்கு ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார். அதற்கு போய் ஆஸ்கரா?
அதான் எனக்கு வெருப்பு
//A.R. ரஹ்மானுக்கு உண்மையில் தகுதி இருக்கிறதா? ----> எதையும் ஆழ்ந்து நோக்கும் பதிவர்.//
எதை ஆழ்ந்து நோக்கி இதை கேட்கிறாய்?
ரஹ்மானுக்கு ஆஸ்கர் ஒரு பார்ப்பணிய சதி
//ஆஸ்கார் என்பது ஆங்கில படத்துக்கான விருது அதனால் தமிழில் நல்ல படம் வருமா------> புதிய கண்டுபிடிப்பாளர் ஐன்ஸ்டீன்//
தமிழில் ஏராளமான ஆஸ்கார் படங்கள் வந்திருக்கின்றன. மெலும் விவரங்களுக்கு காண்டாக்ட் மிஸ்டர் ரவிச்சந்திரன்.
//ஆஸ்கார் விருது வாங்கியதால் இந்தியா முன்னேறுமா?-----> மன்மோகன் சிங்க்கு அடுத்தபடியாக முன்னேற்றத்தை பற்றி கவலைபடும் உண்மை இந்தியன்//
மன்மோகன் இருக்கும் வரை ஆஸ்கர் வாங்கினாலும் இந்தியா முன்னேறுமா?
குசும்பனுக்கு அடுத்தபடியாக மன்மோகனை திட்டும் துபாய்த் தமிழன்.
//ஆஸ்கார் விருது ஏன் இளையராஜாவுக்கு கிடைக்கவில்லை----> இளையராஜா விசிறி
//
அட்ரஸ் தெரியாம குரியர் திரும்ப போய்டிச்சாம்..
இந்த பாய்ண்டை நானும் சொன்னேன்.. ஆனா முதல் விருது வாங்கிய தமிழர்ன்னு இவரைச் சொல்லலாம். அப்படியும் இல்லீன்னா ரஹ்மான் என்ற பெயரில், முன்னே இரண்டெழுத்து இனிஷியல் கொண்ட முதல் ஆஸ்கர் வாங்கும் தமிழராகிய, இந்தியராகிய ஒருவர் என்றும் சொல்லலாம்,
எப்படியோ நம்மைப் புல்லரிக்க வைச்சுட்டார்ல ஏஆர் ஆர்!
//இந்த பாய்ண்டை நானும் சொன்னேன்.. ஆனா முதல் விருது வாங்கிய தமிழர்ன்னு இவரைச் சொல்லலாம். அப்படியும் இல்லீன்னா ரஹ்மான் என்ற பெயரில், முன்னே இரண்டெழுத்து இனிஷியல் கொண்ட முதல் ஆஸ்கர் வாங்கும் தமிழராகிய, இந்தியராகிய ஒருவர் என்றும் சொல்லலாம்,//
கிரிக்கெட் மேட்ச் சாதனைகளை படிக்காதிங்கன்னு சொன்னா கேட்டா தானே..
/ஆஸ்கார் விருதுவினால் என்ன பயன்?-------> பட்ஜெட் பத்மராஜா.//
ஓசியில டீ காப்பி, போண்டா பஜ்ஜி எல்லாம் சுட சுட தராங்களாம். வேற என்ன பயனை எதிர்பார்க்கிறீர்கள்?
//இந்தியாவின் மானத்தை உலகலவில் ஏலம் போட்ட படத்துக்கு விருது!!! கொண்டாடு தமிழனமே----> புரச்சிகர தமிழ்சிந்தனையாளர் //
ஆக.. இந்தியாவின் கோவணத்தை ஏலம் போட்டால் ஆஸ்கர் கிடைக்கும் என்ற உண்மை வெளி வந்திருக்கு. கொய்யால ஒன்னா ரெண்டா ? 8 விருதுகள்.
//இந்தியாவின் மானத்தை உலகலவில் ஏலம் போட்ட படத்துக்கு விருது!!! கொண்டாடு தமிழனமே----> புரச்சிகர தமிழ்சிந்தனையாளர் //
தமிழினம் தமிழீழத்தின் மானத்தைப் பற்றி மட்டுமே கவலைப் படாமல் எப்போதிருந்து இந்தியாவின் மானத்தை பற்றி எல்லாம் கவலைப் பட ஆரம்பிச்சது?
//ஸ்லம் டாக் மில்லினியரில் இருக்கும் இசை அபத்தங்கள்----> சிம்பொனி சிலம்பு//
ராசாவுக்கு ஆஸ்கர் விருது கிடைக்காத கடுப்பு தெரியுது..
//எப்படியோ நம்மைப் புல்லரிக்க வைச்சுட்டார்ல ஏஆர் ஆர்!
//
ஆமா பரிசலண்ணே. அந்த பாக்கு எப்ப போட்டாலும் வாசனையில் புல்லரிக்கும்னே. ஆனா இப்பல்லாம் ஏ.ஆர்.ஆர் பாக்கு கிடைக்கவே மாட்டேங்குதுண்ணே
//ரஹ்மானிடம் 10 கேள்விகள்-----> பரிசல்காரன், படகுகாரன், கப்பல்காரன், கத்திகப்பல் காரன், நீர்மூழ்கி கப்பல்காரன்//
இது எப்போ!!!
////ரஹ்மானிடம் 10 கேள்விகள்-----> பரிசல்காரன், படகுகாரன், கப்பல்காரன், கத்திகப்பல் காரன், நீர்மூழ்கி கப்பல்காரன்//
இது எப்போ!!!
//
ஹா...ஹா...ஹா
அடி ஆத்தீ...இவ்வளவு நாளா இதையெல்லாம் எங்க ராசா வச்சுருந்தே?!
படிக்கும்போதே உடம்பெல்லாம் புல்லரிக்குதே... :))
பதிவுக்கும் பின்னூட்டங்களுக்கும் ஒரு இஃகி!இஃகி!
அடுத்த பதிவு என்ன எழுதறதுன்னு சில பேருக்கு யோசிக்க வேலையில்லாம நீங்களே தலைப்பு எடுத்து கொடுத்திடீங்க :).இனி சூறாவளியா சுழன்றடிக்கப்போறாங்க பாருங்க.
ஹி ஹி ஹி
---
எனக்கு ஒரு சந்தேகம்
எம்.எஸ்.விக்கு ஏன் ஆஸ்கர் கிடைக்கவில்லை என்று ஏன் யாருமே எழுத மாட்டேன் என்கிறார்கள் ???
இளையராஜா எம்.எஸ்.வியை விட சிறந்த இசையமைப்பாளரா
:-))))
//தமிழில் ஏராளமான ஆஸ்கார் படங்கள் வந்திருக்கின்றன. மெலும் விவரங்களுக்கு காண்டாக்ட் மிஸ்டர் ரவிச்சந்திரன்.//
//தேவாவின் இசையை காப்பி அடித்து ஜெய் ஹோ பாட்டுக்கு ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார். அதற்கு போய் ஆஸ்கரா?
அதான் எனக்கு வெருப்பு//
:-))))
கிராக்ஜாக் நானில்லை, அனேகமாக இடிக்கு முன்னே வருமே அந்த பதிவரோ அல்லது 3 எழுத்து பதிவரோ தான்!
நான் அவன் இல்லை!
//கிராக்ஜாக் நானில்லை, அனேகமாக இடிக்கு முன்னே வருமே அந்த பதிவரோ அல்லது 3 எழுத்து பதிவரோ தான்!//
மின்னல் சரி! அதாரு 3 எழுத்து பதிவர்?
//எனக்கு ஒரு சந்தேகம்
எம்.எஸ்.விக்கு ஏன் ஆஸ்கர் கிடைக்கவில்லை என்று ஏன் யாருமே எழுத மாட்டேன் என்கிறார்கள் ???
இளையராஜா எம்.எஸ்.வியை விட சிறந்த இசையமைப்பாளரா//
எனக்கு கூடத்தான் கிடைக்கலை! நான் ஏதாச்சும் சவுண்டு விட்டனா?
டண்டனக்கா!
Vijaya T.Rajendar said....
Ayyo, Silambaattam padathukku thaan Oscar kidaikkumnu nenaichirunthaen. Yaaru Slumdog padathukku recommend pannadhu. Silambarasana pidikkadhavanga panna sadhi idhu. Oru Gaana..vo illa oru Kuthu paatukku A.R.Rahman..aala music poda mudiyumaa????????? Challenge!
கிராக்ஜாக் என்பது நானும் இல்லை!
அபி அப்பாவும் இல்லை!
இந்திய இசை அமைத்து பரினமளிக்கும் இளைய ராஜாவுக்கு இது மாதிரி எத்தனயோ ஆஸ்கர் விருது கொடுத்து இருக்கலாம் . அவருக்கு கொடுக்க மாட்டர்கள் . கமல் சொல்வது மாதிரி அமெரிக்க தரத்திற்கு அமெரிக்கரால் எட்க்கபடும் படத்திற்கு தான் விருது கொடுக்க தேர்ந்தெடுப்பார்கள் . இந்த படம் கூட இந்தியரால் எடுக்கப்பட்ட படம் அல்ல . ஆங்கில படம் . கதை மட்டும் இந்திய களம். எழில் மாறன் -பெங்களூர்
Super :-)
ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள்.
குசும்பனுக்கு இடுப்பில் கிள்ளிக் கொண்டே கு..சு..ம்..பு....
(மிஸஸ்.குசும்புக்கும் இதுதான் பழக்கம்னா... ஸாரிங்கோ!)
//அபி அப்பா said...
கிராக்ஜாக் நானில்லை, அனேகமாக இடிக்கு முன்னே வருமே அந்த பதிவரோ அல்லது 3 எழுத்து பதிவரோ தான்!
நான் அவன் இல்லை!//
அப்ரூவர் ஆகப்பார்க்கிறாரு குசும்பன்...விடாதீங்கோ
திரையியலின் அடிநாதத்தின் புரிதலின் விளைவாக உலக இசையின் தெரிந்துணர்வின் வெளிப்பாடாக ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் இந்திய இசையின் தொன்மையை அறிய வைக்கும் முயற்சியில் வெற்றி பெற்றாரா என்று நம் எல்லோரையும் சிந்திக்க வைத்ததில் அவருடைய முனைவான உழைப்பின் விளைவு வெளீயிடுகிறதோ என ஐயப்பட வைக்கிறது...
ஸ்..ஸ்..ஸ்...ஸ்.. அப்பா.....
முடியலையே...
மாம்ஸ் உங்களுக்கிருக்கிற அறிவுக்கு நீங்க எங்கேயோ இருக்கணும்..
இனி யாருமே பதிவு போட முடியாதுப்பா...:)
கலக்கல் மாம்ஸ்...
ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள்...!
பின்ன பிரச்சனை இங்க?
யார் கும்மினா அபிஅப்பா வந்து மின்னலையும் சென்ஷியையும் போட்டுக் குடுக்கிறாரோ , யார் கும்மினா சிபி வந்து கமுக்கமா கலாய்க்கிறாரோ அவன் தான் க்ராக்ஜாக்.. நான் தான் க்ராக்ஜாக்.
சந்தேகம் தீர்ந்ததா? :)
சந்தேகம் தீர்ந்ததா? :)
//
இப்ப தீர்ந்தது :)
சர்ச்சைகளை தாண்டி, இது உண்மையாகவே ஒரு சந்தோஷ தருணம்.
Please visit my blog: http://valibarsangam.wordpress.com & give me your support too
ரஹ்மானிடம் 10 கேள்விகள்-----> பரிசல்காரன், படகுகாரன், கப்பல்காரன், கத்திகப்பல் காரன், நீர்மூழ்கி கப்பல்காரன்
//
:)
::)))))
//ரஹ்மானிடம் 10 கேள்விகள்-----> பரிசல்காரன், படகுகாரன், கப்பல்காரன், கத்திகப்பல் காரன், நீர்மூழ்கி கப்பல்காரன்//
:)
கலக்கல் குசும்பரே...
கலக்கல்!
Post a Comment