Sunday, February 8, 2009

இன்றைய அரசு மருத்துவமனையும் அதன் போட்டோவும்!!!

அரசு மருத்துவமனை என்றால் நமக்கு உடனே நினைவுக்கு மட்டும் இன்றி மூக்குக்கும்வருவது அதன் பினாயில் நெடியும், சுகாதரமற்ற பராமரிப்பும்தான். எல்லோரிடமும் இருக்கும் ஒரு நினைப்பு காய்ச்சல் வந்து அங்கு போனால் அதோடு வயிற்றுப்போக்கையும் வாங்கி வரவேண்டும் அல்லது ஒரு நோய்க்கு சிகிச்சை எடுக்கபோனால் அதோடு இலவச இனைப்பும் வரும் என்ற பயம். இவை அனைத்தும் உங்கள் மனதில் இருக்குமானால் இனி அதை அழித்துவிடுங்கள்.

சென்னையில் சென்ட்ரலில் இருக்கும் அரசு மருத்துவமனையின் புதிய கட்டிடத்தில் இருக்கும் பொதுக் கழிப்பறைகூட அத்தனை சுத்தம். சமீபத்தில் அம்மாவுக்கு உடல் நிலை சரி இல்லாமல் திருச்சியில் காவேரி என்ற மருத்துவமனையின் பின் புலம் தெரியாமல் அங்கு கொண்டு போய் சேர்த்து ஒரு 10 நாட்கள் அங்கு இருந்து அவர்களிடம் இருக்கும் அத்தனை புதியமெசினுக்கும் கப்பம் கட்டிவிட்டு கடைசியாக ரிசல்ட் வந்தது “நுரையீரல் புற்று நோய்” என்று, மேலும் உறுதி படுத்த இன்னும் மீச்சம் மீதி இருக்கும் மெசின்களுக்கும் வேலை வைக்க எண்ணியவர்களிடம் சண்டை போட்டுக்கொண்டு அங்கிருந்து கிளம்பி, அப்பாவின் நண்பரும் சமீபத்தில் பத்மஸ்ரீ பட்டம் வாங்கிய டாக்டர். சிவராமன் என்பவர் மூலம் அரசு மருத்துவமனையில் சேருங்கள் மீதியை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றதால் அங்கு கொண்டு போய் சேர்த்தார்கள்.
(பொங்கலுக்காக நெக்லஸ் மற்றும் வித விதமான ஆபரனங்களோடு மருத்துவமனையின் முகப்பு )

அங்கு சென்ற பிறகுதான் தெரிகிறது அங்கு இல்லாத வசதியே இல்லை, எத்தனை எத்தனை விதமான பிரிவுகள் எத்தனை எத்தனைவிதமான தொழில்நுட்ப உபகரணங்கள், அங்கு அம்மாவுடன் 20 நாட்கள் இருந்தேன், பின் அங்கு ஒரு முறைக்கு இரு முறை செய்த டெஸ்டில் கேன்சர் இல்லை என்று வந்தது. பின் நுரையீரலில் சுற்றி நிரம்பி இருக்கும் தண்ணியை வெளியேற்ற சிகிச்சை மேற்க்கொள்ளப்பட்டது. 6 மணி நேரத்துக்கு ஒரு முறை நான்கு ஊசிகள் போட வேண்டும்காலை 6 மணிக்கு ஒன்று, மதியம் 12 மணிக்கு ஒன்று, மாலை 6 மணிக்கு ஒன்று, பின் இரவு 12 மணிக்கு ஒன்றுஇருந்த 20 நாட்களிளும் ஒரு நாள் கூட 12.01க்கோ அல்லது 6.01க்கோ ஊசி போட்டது இல்லை மணி சரியாக 12 நெருங்கும் வேலையில் கூப்பிடாமலேயே தானாக வந்து ஊசி போட்டுவிட்டு செல்வார்கள் அந்த செவிலியர்கள்.
அதுபோல் முன்பு எல்லாத்துக்கும் வழங்கப்பட்டு வந்த த/அ என்ற வெள்ளை மாத்திரை இல்லாமல் பெரிய கம்பெணிகளில்தரமான மாத்திரையே வழங்கப்படுகிறது. எங்கு தேடினாலும் கிடைக்காத வாடகையில் ஒரு சிங்கிள் பெட் ஏ/சி ரூம், ரூ600வாடகையிலும் இரு பெட் போடப்பட்ட அறை ரூ 300 க்கும் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு 4 முறையாவது சுத்தம் செய்கிறார்கள், மூக்கை துளைக்கும் மருந்து நெடி இல்லை.
மருத்துவர்களும் சரி, செவிலியர்களும் சரி மிகவும் கனிவோடும் அதே சமயம் அக்கரையோடும் இருந்ததால் அங்கு இருந்த வரைஅம்மா மிகவும் நிம்மதியாகவே இருந்தார்கள்.

மிடில் கிளாஸ் மக்கள் பலரும் தன் சொத்தை விற்று மருத்தும் செய்யதற்கு பதில் அரசு மருத்துவமனையில் இலவசமாக மருத்துவம்பார்த்துக்கொண்டு பின் உங்களால் முடிந்த அளவுக்கு அந்த துறைக்கு சில உதவிகளை செய்துவிட்டு வாருங்கள்!
********************************************************************
அங்கு இருந்த ஒவ்வொரு நாளும் எத்தனை விதமான காதலர்களால் மருத்துவமனை நிரம்பி வழிகிறது தெரியுமா? அங்கு இருந்த 20 நாட்களும் வித விதமான காதலர்களால் மருத்துவமனை நிரம்பி வழிவதை கண்டேன், சக்கரை வியாதியினால் இரு கால்களை இழந்த கணவனை தன் முதுகில் தூக்கி கொண்டு வந்த மனைவி, 50 வயதில் சிறு நீரகப்பிரச்சினையினால் கணவரின் மூத்திரபையை கையோடும் கணவனைதோளில் கைப்போட்டு அழைத்து சென்ற அம்மா, மனைவியின் புற்று நோய்க்கு சிகிச்சைக்காக காத்து கிடக்கும் கணவன், புது தாலியோடு கணவனின் அடிப்பட்ட காலுக்கு அருகிலேயே உட்காந்து இருந்த புது மனைவி என்று எத்தனை எத்தனைவிதமான காதலர்கள். பந்தம் என்பதை தாண்டி அதில் இருக்கும் அன்பை உணர்ந்தால் மட்டுமே அவர்களை புரிந்துக்கொள்ளமுடியும்.
***************************************************************************
நம் சக வலைப்பதிவர் டாக்டர் புருனோ அங்குதான் வேலைப்பார்க்கிறார், மூன்று முறை வந்து அம்மாவை பார்த்துவிட்டு பேசிக்கொண்டு இருந்து விட்டு சென்றார்,பேசிக்கொண்டு இருந்த பொழுது ஒரு முறை சொன்னார் நாளை 24 மணி நேர டூட்டி இப்பொழுதான் முடிந்தது என்று, சும்மா ஒரு சேரில் உட்காந்துக்கிட்டு 8 மணி நேரம்பொட்டி தட்டிட்டு வீட்டுக்கு போய் ஒரு லாரி கல்லை உடைத்ததை போல் பில்டப் கொடுக்கும் நம்மை போல் ஆட்கள் எல்லாம் இது போன்றவர்களிடம் கத்துக்கவேண்டியது நிறைய இருக்கிறது. அரசு மருத்துவமனையில் 8 மணி நேர வேலை என்றாலே எத்தனை சிரமம் அதிலும் 24 மணி நேர டூட்டி முடிந்து கொஞ்சமும் சோர்வு இல்லாமல் முகத்தில் புன்னகையோடு சேவைசெய்யும் இவரை போன்ற மருத்துவர்கள் பலர் அங்கு இருப்பதால் தான் அங்கு காதலர்கள் நிம்மதியோடு இருக்கமுடிகிறது.

அங்கு இருக்கும் சில குறைகள்.

1) டெஸ்ட் கொடுக்க பின் அதன் ரிசல்டை வாங்க என்று நோயாளியோடு வந்தவர்தான் அலைய வேண்டும், சில வயதான பெரியவர்கள் அல்லது யாரும் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்?
2) புது பிளாக்கில் இருக்கும் சுத்தமும் சுகாதாரமும் பழைய மருத்துவமனையில் இல்லை.
3) பல பேர் வந்து போகும் இடம் என்பதால் தளத்துக்கு தளம் செக்யூரிட்டி கேமிரா இல்லாதது ஒரு குறை.

47 comments:

said...

//இருந்த ஒவ்வொரு நாளும் எத்தனை விதமான காதலர்களால் மருத்துவமனை நிரம்பி வழிகிறது தெரியுமா? அங்கு இருந்த 20 நாட்களும் வித விதமான காதலர்களால் மருத்துவமனை நிரம்பி வழிவதை கண்டேன், சக்கரை வியாதியினால் இரு கால்களை இழந்த கணவனை தன் முதுகில் தூக்கி கொண்டு வந்த மனைவி, 50 வயதில் சிறு நீரகப்பிரச்சினையினால் கணவரின் மூத்திரபையை கையோடும் கணவனைதோளில் கைப்போட்டு அழைத்து சென்ற அம்மா, மனைவியின் புற்று நோய்க்கு சிகிச்சைக்காக காத்து கிடக்கும் கணவன், புது தாலியோடு கணவனின் அடிப்பட்ட காலுக்கு அருகிலேயே உட்காந்து இருந்த புது மனைவி என்று எத்தனை எத்தனைவிதமான காதலர்கள். பந்தம் என்பதை தாண்டி அதில் இருக்கும் அன்பை உணர்ந்தால் மட்டுமே அவர்களை புரிந்துக்கொள்ளமுடியும்//


பாசிட்டிவான பார்வை இருப்பவங்க தான் இதை கவனிக்க முடியும். இல்லைன்னா ஹாஸ்பிடலில் துயரங்கள் தான் முன்னிலையில் தெரியும்.

அருமை குசும்பா. :)

said...

இன்னைக்கு சளிக்கு ட்ரீட்மெண்ட் எடுக்கனும்னா கூட ரெண்டு டாக்டர்கிட்ட க்ராஸ் செக் பண்ணியே ஆகனும் போல இருக்கு :(.

பேமிலி டாக்டர்ன்னு உன்மையிலேயே நம்ம மேல அக்கறை உள்ள ஒரு டாக்டராச்சும் இல்லைன்னா அந்த க்ராஸ் செக்கிங்கும் கூட கஷ்டம்தான்...

திருச்சி ஹாஸ்பிடல்காரங்க சொன்னதை நம்பி ட்ரீட்மெண்டோ அல்லது வீட்டுக்கோ கூட்டிகிட்டு வந்திருந்தா என்ன ஆவது? கஷ்டம்டா சாமி.

said...

அரசு பொது மருத்துவமணை இந்த அளவிற்கு இருப்பது மகிழ்ச்சியே..குறைகள் குறைவுதான்.. அம்மா எப்படி இருக்காங்க தல??

said...

ஆச்சர்யமா இருக்கு குசும்பன்.. நல்ல தகவல்கள் நன்றி.. அம்மா நலம் என்று நம்புகிறேன்.

said...
This comment has been removed by the author.
Anonymous said...

In Out Patients Block, A Social Welfare Organization called "SEVAS" Volunteers guiding the patients every day.

Illiterate People are guided with care. Good to see humanity still live.

said...

குசும்பன் said...
நந்து பார்வை அது இதுன்னு என்னெண்ணவோ சொல்றீங்க நம்ம பார்வைய பத்தி தெரிஞ்சுமா?:)))

திருச்சி ஹாஸ்பிட்டல் காரனுங்க சொன்னதை நம்பி வந்திருந்தால் ஒன்னுமே செஞ்சு இருக்கமுடியாது!

****************************
வாங்க நர்சிம் தல, அம்மா இப்பொழுது நலமோடு இருக்கிறார்கள்.

***************************
ஆமாம் வெண்பூ எனக்கும் மிகுந்த ஆச்சர்யம், அத்தனை வசதிகள் + சுத்தமும்
****************************
நன்றி பாண்டியன், தினம் காலை டாக்டர்கள் வருவதுக்கு முன்பே
“SEVAS" அமைப்பினர் வந்து படிப்பறிவு இல்லாத மக்களுக்கு எங்கு எங்கு செல்லனும் யாரை பார்க்கனும், என்ன டெஸ்ட் எழுதி கொடுத்து இருக்கிறார்கள், அதுக்கு என்ன செய்யவவேண்டும் என்று மிகவும் கனிவோடு சொல்கிறார்கள்!

said...

அரசு பொது மருத்துவமணை இந்த அளவிற்கு இருப்பது மகிழ்ச்சியே..குறைகள் குறைவுதான்.. அம்மா எப்படி இருக்காங்க தல??

said...

மதுரை அரசு மருத்துவமனையிலும்,
சென்னை ஸ்டேன்லி மருத்துவமனையிலும் எனக்கு நிறைய பரிச்சியம் உண்டு!
அரசாங்க மருத்துவமனைகள் சிறப்பாக தான் செயல்படுகிறது, ஒரு சில கடைநிலை ஊழியர்கள் தான் கடுமையாக நடந்து கொள்கிறார்கள்

said...

//டெஸ்ட் கொடுக்க பின் அதன் ரிசல்டை வாங்க என்று நோயாளியோடு வந்தவர்தான் அலைய வேண்டும், சில வயதான பெரியவர்கள் அல்லது யாரும் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்?//

அப்படியல்ல அந்தை சிட்டையை கொண்டு போய் யார் வேண்டுமானாலும் வாங்கலாம், நான் நிறைய பேருக்கு வாங்கி கொடுத்திருக்கிறேன்

said...

பாராட்டுதல்களுக்கு நன்றி நண்பர்களே....

//பாசிட்டிவான பார்வை இருப்பவங்க தான் இதை கவனிக்க முடியும். இல்லைன்னா ஹாஸ்பிடலில் துயரங்கள் தான் முன்னிலையில் தெரியும்.//

உண்மையிலும் உண்மை...

said...

//புது பிளாக்கில் இருக்கும் சுத்தமும் சுகாதாரமும் பழைய மருத்துவமனையில் இல்லை.//

இதற்கு காரணம் நாமே!
சுத்தமான இடத்தில் குப்பை போட தயங்கும் நாம், குப்பை கிடக்கும் இடத்தை சுத்தம் செய்யாமல் மேலும் குப்பை போடுகிறோம்.

said...

//பல பேர் வந்து போகும் இடம் என்பதால் தளத்துக்கு தளம் செக்யூரிட்டி கேமிரா இல்லாதது ஒரு குறை.//

நம்ம மேல ஒரு நம்பிக்கை தான்!

மற்றொரு விசயம் அரசு மருத்துவமனை என்றாலே விளிம்பு நிலை மனிதர்களுக்கானது என்று ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் தீவிரவாதிகளின் குறி மேல்தட்டு மக்கள் தானே!

said...

படிக்கவே சந்தோஷமாக இருக்கிறது குசும்பன். நம்ம ஊர்லேயும் உலக தரத்தில் ஒரு அரசு மருத்துவமனை.

//ஆனால் தீவிரவாதிகளின் குறி மேல்தட்டு மக்கள் தானே!//

அப்படியா வால்பையன்??????

said...

ஆமாம் குசும்பா! நானும் அந்த ஹாஸ்பிட்டல் பத்தி கேள்விப்பட்டேன்! நல்ல ஹாஸ்பிட்டலாம். நல்ல சுத்தமாம்.

ஆனா மாயவரம் பக்கம் போனா பெரிய ஆஸ்பத்திரி பக்கம் போயிடாதே. அந்தன கோரம்!

said...

கேட்கவே சந்தோஷமா இருக்குப்பா!

தொடரட்டும் :)

said...

//“நுரையீரல் புற்று நோய்” //

இந்த செய்தியை முதன்முதலில் கேள்விப்பட்டவன் நாந்தான். நாளை நீங்கள் இந்தியா வரும் போது உங்களிடம் எப்படி சொல்வது??? எப்படி எதிர் கொள்வது என்று ஒரு 24 மணி நேரம் நா பட்டப்பாடு எனக்குத்தான்யா தெரியும். அம்மா மிகவும் நலமோடு இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி :))

said...

டாக்டர்கள் மட்டும் செல்ல ஒரு லிப்ட்டு வச்சுருக்காங்க...அதில் டாக்டரைத் தவிர எல்லாரும் போறாங்களே!!! அதப் பத்தி ஒன்னும் சொல்லல :)))

said...

ஓ இன்னும் பல இடங்களிலும் வசதியும் முன்னேற்றமும் வரட்டும்..எல்லாரும் அனுபவிக்கும் படி...

அம்மா நலம்தானே..?

Anonymous said...

பாராட்ட வேண்டிய விஷயத்தை பாராட்டும் உன் குணம் பாராட்டப்படவேண்டிய ஒன்று குசும்பா.

புருணோ போன்ற மருத்துவர்களால்தான் ஏழைகள் ஓரளவு சுவாசிக்க முடிகிறது.PHC அனப்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிபவர்கள் படும் சிரமம் மிக அதிகம். ஆனால் அவர்கள் பணிக்கான பாராட்டு அவர்களுக்குக் கிடைப்பதில்லை.

said...

இதே போல பராமரிபபு காலம் பூரா தொடர்ந்தால் நன்றாக இருக்கும்.
அம்மா நன்றாக இருக்கிறார்களா?

said...

//1) டெஸ்ட் கொடுக்க பின் அதன் ரிசல்டை வாங்க என்று நோயாளியோடு வந்தவர்தான் அலைய வேண்டும், சில வயதான பெரியவர்கள் அல்லது யாரும் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்?//

மருத்துவமனை கணினிமயமாக்கப்பட்டபின்னர் பரிசோதனை முடிவுகளை அந்தந்த பிரிவு கணினியிலேயே பார்த்துக்கொள்ள வசதி வந்து விடும்

//2) புது பிளாக்கில் இருக்கும் சுத்தமும் சுகாதாரமும் பழைய மருத்துவமனையில் இல்லை.//

சரி செய்து விடுவார்கள் என்று நம்புகிறோம்

//3) பல பேர் வந்து போகும் இடம் என்பதால் தளத்துக்கு தளம் செக்யூரிட்டி கேமிரா இல்லாதது ஒரு குறை.//

பாதுகாப்பிற்கு ஒளிப்பதிவு கருவி மட்டும் போதுமா. அதை பார்க்க ஆட்கள் வேண்டுமே. அப்படி என்றால் எத்தனை பேர் வேண்டும். ஒருவர் 8 மணி நேரம் வேலை என்றால் மொத்தம் எத்தனை பணி அமர்த்தப்பட வேண்டும்.

அவ்வளவு பேரை இந்த வேலை பார்க்க கூறுவதற்கு பதில் பரிசோதனை முடிவுகளை வாங்கி வர சொல்லலாம் :) :)

said...

///இருந்த ஒவ்வொரு நாளும் எத்தனை விதமான காதலர்களால் மருத்துவமனை நிரம்பி வழிகிறது தெரியுமா? அங்கு இருந்த 20 நாட்களும் வித விதமான காதலர்களால் மருத்துவமனை நிரம்பி வழிவதை கண்டேன், சக்கரை வியாதியினால் இரு கால்களை இழந்த கணவனை தன் முதுகில் தூக்கி கொண்டு வந்த மனைவி, 50 வயதில் சிறு நீரகப்பிரச்சினையினால் கணவரின் மூத்திரபையை கையோடும் கணவனைதோளில் கைப்போட்டு அழைத்து சென்ற அம்மா, மனைவியின் புற்று நோய்க்கு சிகிச்சைக்காக காத்து கிடக்கும் கணவன், புது தாலியோடு கணவனின் அடிப்பட்ட காலுக்கு அருகிலேயே உட்காந்து இருந்த புது மனைவி என்று எத்தனை எத்தனைவிதமான காதலர்கள். பந்தம் என்பதை தாண்டி அதில் இருக்கும் அன்பை உணர்ந்தால் மட்டுமே அவர்களை புரிந்துக்கொள்ளமுடியும்//

நந்து சொன்னதை கன்னாபின்னாவென வழிமொழிகிறேன்!!!!!

said...

//PHC அனப்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிபவர்கள் படும் சிரமம் மிக அதிகம். ஆனால் அவர்கள் பணிக்கான பாராட்டு அவர்களுக்குக் கிடைப்பதில்லை.//

சில சிரமங்களை இங்கே பாருங்கள்

1. ஆரம்ப சுகாதார நிலையமும் பணிகளும்
2. சாமிக்கு ஆடுவெட்டுவது இப்படித்தான்.

3. சார். .. குளுக்கோஸ் போடுங்க....

said...

நமது நாட்டில் கூட அரசு மருத்துவமனை இத்தனை நன்றாக பராமரிக்கப்படுகிறது என கேட்கும்போது மனதுக்கு ஆனந்தமாகத்தான் இருக்கிறது. உண்மையிலேயே கலாம் கனவு கண்ட 21ம் நூற்றாண்டை நோக்கிய பயணம் தொடங்கி விட்டதோ. வாழ்க!

அம்மா எப்படி இருக்கிறார்கள் என்று சொல்லப்பா.

எங்க மாமாவுக்கு இரைப்பை புற்று நோய் என்று திருச்சியில் ப்ரைவேட் மருத்துவமனையில் போய் சிரமப்படுகிறார். அங்கு சென்னைக்கு அனுப்பிப் பார்க்கலாமா?

said...

அம்மா இப்போ எப்படி இருக்காங்க?. அரசு மருத்துவமனை பற்றி நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளீர்கள்

said...

அரசு மருத்துவமனையின் நிலை உண்மையில் மிகுந்த மகிழ்ச்சி தருவதாய் உள்ளது. நீடித்திருக்கவும்.. அரசின் பிற நிறுவனங்களிலும் இந்த ஒழுக்கம் பரவவும் பேராசைப்படுகிறேன்.

said...

அரசு தரப்பு பதில்கள் :-

உங்கள் கருத்து எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது . இத்தூய்மையை நாங்கள் கடைபிடிப்போம் .


1) // டெஸ்ட் கொடுக்க பின் அதன் ரிசல்டை வாங்க என்று நோயாளியோடு வந்தவர்தான் அலைய வேண்டும், சில வயதான பெரியவர்கள் அல்லது யாரும் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? //

அதற்க்கு வால்பையன் கூறிய முறையையும் கையாளலாம் அல்லது அதெற்கென தனி செவிலியர்கள் நியமிக்க பரிசீலனை செய்கிறோம்.


2) // புது பிளாக்கில் இருக்கும் சுத்தமும் சுகாதாரமும் பழைய மருத்துவமனையில் இல்லை.


நிதி நெருக்கடி காரணமாக மேற்கொள்ளமுடியவில்லை ... ஆகையால் கஜானாவை நிரப்புவதற்காக பெரும்புள்ளிகள் ( அரசியல்வியாதிகள்) வீட்டிக்கு சிறப்பு லஞ்ச ஒழிப்பு பறக்கு படையை ஏவிவிட்டிருக்கிறோம் .. ரயில் போல தாமதமானாலும் படை இலக்கை எட்டிவிடும் ...... ஆகையால் கஜானா நிரம்பியவுடன் பக்காவாக அதற்கான வேலைகளை முடிக்கிவிடுவோம் .....




3) // பல பேர் வந்து போகும் இடம் என்பதால் தளத்துக்கு தளம் செக்யூரிட்டி கேமிரா இல்லாதது ஒரு குறை. //


இதற்காக சத்யம் , மேடாஸ் போன்ற தலை சிறந்த கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடந்துகொண்டுள்ளோம் ... விரைவில் சுமூக தீர்வை எட்டுவோம் .....


4) மற்றும நீங்கள் இது போன்ற அரசியல் மற்றும பொதுப் ( குறிப்பாக தி.மு.கா வை) பிரச்சனைகளை அடிக்கடி கிளறிவிட்டு குசும்புத்தனம் பன்னுவதால் அடுத்த தேர்தலில் வலுக்கட்டாயமாக தி.மு.கா வில் ஒரு சீட் கொடுத்து , ஆயிரம் விளக்கு தொகுதியில் உங்களை நிக்கவைத்து .. ஒரு ஓட்டிற்கு ருபாய் 5000 என நிதி ஒதுக்கி
உங்களை கள்ள ஓட்டு குத்தியாவது ஜெய்க்கவைத்து ..... உங்களை உன்டுஇல்லையென ஆகுவதென எங்கள் குடும்ப கமிட்டியில் தீமானம் நிறைவேற்றப்பட்டுள்ளது ............



இங்ஙனம் ,

தமிழக அரசு.

said...

டாக்டர் புரூனோவுக்கு மனமுவுந்த நன்றிகள், பணி தொடர வாழ்த்துகள்.!

said...

உன் அம்மாவின் நலனுக்கு எங்கள் அனைவரின் பிரார்த்தனைகள்.

மருத்துவர் புருனோ மற்றும் சக மருத்துவர்களின் பணி உண்மையிலேயே மகத்துவமானதுதான். நம்முடைய 'வேலை' பற்றி சொன்னதும் மிகச்சரி. மோகன் கந்தசாமி ஒருமுறை மருத்துவர் புருனோ அவர்களை ஒரு பேட்டி எடுத்து, அது விகடன்/குமுதம் போன்ற பெரிய பத்திரிகைகளில் வரவேண்டும். பொதுமக்களுக்கு பொது மருத்துவமனைகளின் தரம்/சேவை பற்றி புரிய வரும்.

சீரியசான பதிவானாலும், நல்ல பதிவு.

அனுஜன்யா

said...

//தாமிரா said...
அரசு மருத்துவமனையின் நிலை உண்மையில் மிகுந்த மகிழ்ச்சி தருவதாய் உள்ளது. நீடித்திருக்கவும்.. அரசின் பிற நிறுவனங்களிலும் இந்த ஒழுக்கம் பரவவும் பேராசைப்படுகிறேன்.

//

ரிப்பீட்டே.....

said...

அரசு சுகாதார துறைக்கு ஊட்டச் சத்து கொடுத்தற்கு நன்றி.அம்மாவுக்கும் டாக்டர் புருனோவுக்கும் வணக்கங்கள்.

said...

I would like to share a humble opinion about this hospital which is one of the best this government has done.
Quite a lot of money is spend to beautify this hospital building.. for example the light decorations during the pongal as captured in your photograph. What is the use of spending on decorations where no one is benefitted.The money spend on these unnecessary expanses could have been wisely used to procure more life saving medicines or to install a much needed medical equipments or better still to increase the number of beds which I think is a better option.
Another point is, the construction of the very building..,I feel the money spent on all those extra fittings specially the raised up entrance is uncalled for. The building need not be an architectural marvel. Those extra money could well be utilised o
get the state of the art medical equipments.
This is the thought I have been keeping to myself for all these days. When I read your blog about this hospital I decided to share my thoughts also.

said...

மருத்துவர் மருத்துவமனை என்றாலே
மனிதநேயமற்ற,பணம் பிடுங்கும் பிசாசுகள் என்ற உணர்வு மக்களிடம் இருக்கும் நிலையில் இந்த்ப் பதிவு ஆறுதல் அளிக்கின்றது.
அரசும்,அரசு மருத்துவ மனையில் உள்ள சில மருத்துவர்களும் மனித நேயத்துடன் பணியாற்றுவது மிகவும் பாராட்ட வேண்டியது.
இன்னும் நிறைய தேவைகள் உள்ள போதும்,வேலை செய்யும் நேரம்,நோயாளிகளின் எண்ணிக்கை மிகுதி போன்றவற்றிலும் சென்னைப் பொது மருத்துவ நரம்பியல் துறை போன்று ஈடுபாட்டுடன் உழைக்கும் மருத்துவர்களைச் சந்தித்த போது பெரும் ஆறுதலாக இருந்தது.
அவர்களை மனதாரப் பாராட்டுவது நம் கடமை.

said...

தாயாரின் நலத்தை பேணி காக்கவும்.

said...

நல்ல தகவல்கள் நன்றி..

நலம் என்று நம்புகிறேன்.

said...

//சும்மா ஒரு சேரில் உட்காந்துக்கிட்டு 8 மணி நேரம்பொட்டி தட்டிட்டு வீட்டுக்கு போய் ஒரு லாரி கல்லை உடைத்ததை போல் பில்டப் கொடுக்கும் நம்மை போல் ஆட்கள் எல்லாம் இது போன்றவர்களிடம் கத்துக்கவேண்டியது நிறைய இருக்கிறது.
//
டாக்டர் புருனோ மனதார பாராட்டப்பட வேண்டியவர் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. அதற்காக இன்னொரு வர்க்கத்தினரை மட்டம் தட்ட வேண்டும் என்ற அவசியமில்லை. அது ஒரு நல்ல அணுகுமுறை ஆகாது :-(

நேர்மையாக / கடுமையாக உழைப்பவர்கள் எல்லாத் துறைகளிலும் இருக்கிறார்கள்.

said...

ஆஸ்பத்திரி பெயரை சொல்ல வில்லையே .ஏன் என்றால் வெளிவுரில் இருந்து வருபவர்களுக்கு எப்படி தெரியும் ?முடிந்தால் ஆஸ்பத்திரி பெயரை குறிப்பிடவும் ...நன்றி

Anonymous said...

வெளிநாட்டு மருத்துவ மனைகளில் தன்னார்வத் தொண்டு செய்பவர்கள் அரசு,தனியார் என்று அனைத்து மருத்துவ மனைகளிலும் நிறைய இருப்பார்கள்.பள்ளி மாணவர்கள் கட்டாயம் குறிப்பிட்ட மணி அளவில் தொண்டு செய்திருக்க வேண்டும்.
எந்த வேலையென்றாலும் புன் முருவலுடன் அனைவரும் செய்வதைப் பார்க்கலாம்.
நாமும் நிறைய பேர் நிறைய நேரத்தை வீணடிப்பதற்குப் பதில் இவ்வாறு செய்து மன நிறைவு பெறலாம்.

said...

So it is abundantly clear, that if the govt wants to run a clean hospital they can run.
Why are'nt the other hospitals being run in this way?

And its very true about student volunteering. The school encourages them, and rewards them appropridately with credits to their scores.
Not just in hospitals, students work in all kinds of environments like schools, libraries, and few other places. This helps the Organization, as well as the schools, as the students gain to see the real life first hand.

said...

//ஆஸ்பத்திரி பெயரை சொல்ல வில்லையே .ஏன் என்றால் வெளிவுரில் இருந்து வருபவர்களுக்கு எப்படி தெரியும் ?முடிந்தால் ஆஸ்பத்திரி பெயரை குறிப்பிடவும் ...நன்றி//

அரசு பொது மருத்துவமனை, சென்னை

(சென்னை செண்ட்ரல் தொடர்வண்டி நிலையத்திற்கு எதிர்புறம் இருப்பது தான்)

said...

//So it is abundantly clear, that if the govt wants to run a clean hospital they can run.
Why are'nt the other hospitals being run in this way? //

//2) புது பிளாக்கில் இருக்கும் சுத்தமும் சுகாதாரமும் பழைய மருத்துவமனையில் இல்லை.//

இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை :) ?? , ஆனால் ஒரு செய்தியை மட்டும் கூறுகிறேன் !!

---
இங்கு பிணியாளர்களிடமிருந்து பெறப்படும் அறைக்காண கட்டணம் மூலம் தனியாக துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

மேலும் துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவதால் சங்கம் எதுவும் கிடையாது
---

said...

VERY NICE...MUST CONTINUE THE SAME ENVIRONMENT IN COMING DAYS, ITS POSSIBLE IN OUR HANDS. WE MUST KEEP CLEAN HOSPITAL LIKE OUR HOME.
HOW IS MOTHER.. TAKE CARE OF HER HEALTH.

said...

நல்ல வேளை , உடனே சென்னை போனீங்க!
அம்மா நல்லா இருக்காங்களா?

said...

//சுத்தமான இடத்தில் குப்பை போட தயங்கும் நாம், குப்பை கிடக்கும் இடத்தை சுத்தம் செய்யாமல் மேலும் குப்பை போடுகிறோம்.//

--ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்

said...

அரசு மருத்துவமனை என்றாலே பதறி ஓடுபவர்களுக்கு இருக்கும் பயத்தை உங்கள் பதிவு நிச்சயம் நீக்கும்.பயனுள்ள பதிவு.
அம்மா நலம் என்பதில் மகிழ்ச்சி :-).

said...

Nice to know about "Govt Hospital" in Chennai. I believe we expect the same service for ever and everywhere. Thanks for sharing your positive thoughts.