Wednesday, November 5, 2008

டரியல் டக்ளஸ்---5-11-2008

கட்டணம் செலுத்தாத மின் இணைப்பைத் துண்டிக்க சட்டத்தில்அதிகாரம் உள்ளதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விளக்கம்அளித்துள்ளது--- ஆணையத்தின் செயலர் பாலசுப்பிரமணியன்.

டரியல் டக்ளஸ்: ஒழுங்காக மின்சாரமே கொடுக்காத உங்களுக்கு எதை துண்டிப்பது???

ஈழத் தமிழர் பிரச்சினைக்காக பேசுவது குற்றம் என்றால் என்னையும் கைது செய்யலாம்--- பாரதிராஜா

டரியல் டக்ளஸ்: நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்.

புதுவை தலைமை ஜூடிசியம் மாஜிஸ்திரேட்டாக பொங்கியப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.

டரியல் டக்ளஸ்: அநியாயத்தை கண்டா ரொம்ப பொங்கிடுவாரோ!!!

அ.தி.மு.க மற்றும் தி.மு.கவோடு கூட்டணி கிடையாது- சரத்குமார்

டரியல் டக்ளஸ்: என்னங்க இப்படி சொல்லீட்டீங்க இத கேட்டு அம்மாவும், ஐயாவும் சாப்பிடாமதூங்க முடியாம தவிக்கிறாங்க, கொஞ்சம் மறுபரிசீலனை செய்யுங்க!

நான் இங்கே புறப்பட்டு வந்த பொழுதுகால் இடறி அதன் காரணமாக வலது காலில்எட்டு அங்குல நீளத்திற்கும் இரண்டு அங்குலஅகலத்துக்கும் காயம் ஏற்பட்டது!

டரியல் டக்ளஸ்: நல்லா சொல்றாங்கய்யா டீட்டெயிலு...கோவி.கண்ணனுக்கு போட்டியாக! (இவரு சொன்ன டீட்டெயிலு)

இப்படி சொன்னாலும் சொல்வார்கள்

ஜெ.ஜெ: தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க நான் காலையில் விமானத்தில் ஏறும் பொழுதே படிக்கட்டில் ஸ்லிப் ஆகும்படி செய்தது என்னை கொல்லபார்த்தது விடுதலைபுலிகள் தான். இது உளவு துறைக்கும் தெரியும்!

சு.சாமி: விமான படிக்கட்டில் விளக்கெண்ணெய தடவிதான் ஜெ.ஜெவை கீழ விழவைத்து கொல்ல முயற்சி செய்தார்கள், படிக்கட்டில் எண்ணெய் தடவியதன் வீடியோ ஆதாரம் என்னிடம் இருக்கிறது.

வைகோ: என்னை கைது செய்து சிறையில் அடைத்து, பின் சகோதரி ஸ்லிப் ஆகும் படி செய்தது எல்லாம் திட்டம்மிட்ட சதி, என்னை கைது செய்ததை விட சகோதரிக்கு அருகில் இருந்து சகோதரியை கவனிச்சுக்க முடியவில்லையே என்ற வருத்தம் தான் என்னை கொல்கிறது!

37 comments:

said...

நான் தான் பர்ஸ்ட்

said...

நல்ல கமெண்ட்ஸ் குசும்பா.. ஆனா இன்னிக்கு கொஞ்சம் நையாண்டி கம்மியா இருக்குற மாதிரி ஃபீல்..

said...

மத்ததெல்லாம் நெக்ஸ்ட்

said...

நல்ல காமெடி

said...

அம்மாவைப் பற்றிய கமெண்ட்களுக்கு உங்களை வன்மையாக கண்டிக்கிறோம்.

said...

இனி தமிழ்த்தாய். தங்கத்தாரகை, சமூக நீதி காத்த வீராங்கணை(இந்த பட்டத்தை கொடுத்த ஆளைத் தான் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தேடிக்கிட்டு இருக்கோம்) அம்மா அவர்கள் வாழ்க!

said...

வாழ்க அம்மாவின் புகழ்! ஒழிக திம்மிகள்!

said...

அம்மான்னா சும்மாவா?

said...

அம்மா வழுக்கியதில் சர்வதேச சதி உள்ளது.. இதற்கு ETA(Euskadi Ta Askatasuna ) என்ற தீவிரவாத அமைப்பும், அல் கொய்தாவும் தான் காரணம் என தமிழ் தலைவர் கி.வீரமணி முன்னர் தெரிவித்திருந்தார்.

said...

வீடியோ டீட்டெயில்ஸ் முழுசா சொல்லுங்க. அழகிரி, எண்ணெய் பாட்டில் வாங்கி வந்து கொடுத்தது, அதை ஸ்டாலின் திறந்து கனிமொழியிடம் தந்தது, அவர் அதை படிக்கட்டில் கொட்டி மொழுகியது இதெயெல்லாம் மறந்தா எப்டி?

said...

ஆட்சி மாறாமயா போயிரும்..ஹூம்?
அப்ப ஒபாமா கூட கூட்டணி போட்டாச்சும் உங்கள புடிக்காமயா போயிருவம்? அப்ப வச்சிக்கிறோம்..

said...

//டரியல் டக்ளஸ்: நல்லா சொல்றாங்கய்யா டீட்டெயிலு...கோவி.கண்ணனுக்கு போட்டியாக! (இவரு சொன்ன டீட்டெயிலு)//

மறுக்காச் சொல்லேய்ய்ய்ய்ய்

said...

:)

said...

தமிழ் பிரியன் said...
\\
அம்மா வழுக்கியதில் சர்வதேச சதி உள்ளது.. இதற்கு ETA(Euskadi Ta Askatasuna ) என்ற தீவிரவாத அமைப்பும், அல் கொய்தாவும் தான் காரணம் என தமிழ் தலைவர் கி.வீரமணி முன்னர் தெரிவித்திருந்தார்.
\\

வர வர இந்தாளு போடற கமென்ட்ஸ் புரியவே மாட்டேங்குது...:)


அது என்ன பெயரண்ணே...:)

said...

பின்னாடி முன்றும் ஜெ,சு.சாமி,வைகோ மேட்டர் ஜூப்பர்

said...

சூப்பர் :)

said...

//ஒழுங்காக மின்சாரமே கொடுக்காத உங்களுக்கு எதை துண்டிப்பது???//

இதை படிக்கும்போது இதுதான் நினைவுக்கு வந்தது...

விளம்பரம் எழுதச்சொன்னா ஒருத்தன் இப்படி எழுதினானாம் -- "இங்கே சிறுனீர் கழிப்பவர்கள் துண்டிக்கப்படுவார்கள்" -- த க்கு பதிலா து.... :-))

said...

//
விளம்பரம் எழுதச்சொன்னா ஒருத்தன் இப்படி எழுதினானாம் -- "இங்கே சிறுனீர் கழிப்பவர்கள் துண்டிக்கப்படுவார்கள்" //

சூப்பரோ சூப்பர்!

said...

அட்டகாசம் ;))

said...

:))))))))))))))

Anonymous said...

வால்பையன் said...

நான் தான் பர்ஸ்ட்
//

ஆமா ரொம்ப முக்கியம்

டரியலுக்கு கருத்து சொல்லுய்யானா எஸ்கேபா...!!!

Anonymous said...

மங்களூர் சிவா said...

:))))))))))))))
//


ஏய் இங்க பார்றா...!!!
இப்ப எல்லாம் சிரிப்பான் மட்டும் தான் போட முடியுதா தல

Anonymous said...

வெண்பூ said...

நல்ல கமெண்ட்ஸ் குசும்பா..
//

சரி
//


ஆனா
//

என்ன ஆனா ஆவன்னா..??

//
இன்னிக்கு கொஞ்சம் நையாண்டி கம்மியா இருக்குற மாதிரி ஃபீல்..

//

அடிவாங்க வைக்கிறதிலயே குறியா இருங்க :)

Anonymous said...

வால்பையன் said...

மத்ததெல்லாம் நெக்ஸ்ட்
//

குசுமபனை வைச்சி காமெடி கிமெடி பன்னலையே..:)

Anonymous said...

தமிழ் பிரியன் said...

அம்மாவைப் பற்றிய கமெண்ட்களுக்கு உங்களை வன்மையாக கண்டிக்கிறோம்.
//

ஆஹா மாட்டிட்டாருய்யா மாட்டிட்டாரு

குண்டு வைக்க ஆளு சிக்கிட்டாய்யா சிக்கிட்டான்

நெக்ஸ்ட் அங்கதான் ஒசமா பதிவுல சாரி ஒபமா பதிவுல

said...

ரசித்தேன்

said...

வெண்பூ :நல்ல கமெண்ட்ஸ் குசும்பா.. ஆனா இன்னிக்கு கொஞ்சம் நையாண்டி கம்மியா இருக்குற மாதிரி ஃபீல்..//

அப்பிடியே ரிப்பீட்டுக்கு ஆபோஸிட்.! இன்னிக்கு எல்லாமே பிரமாதம். குறிப்பா முதல் இரண்டும் டாப் ஒண்ணு.!

said...

//வீடியோ டீட்டெயில்ஸ் முழுசா சொல்லுங்க. அழகிரி, எண்ணெய் பாட்டில் வாங்கி வந்து கொடுத்தது, அதை ஸ்டாலின் திறந்து கனிமொழியிடம் தந்தது, அவர் அதை படிக்கட்டில் கொட்டி மொழுகியது இதெயெல்லாம் மறந்தா எப்டி?//

லக்கிக்கிட்ட போட்டுக் கொடுக்கறேன் இருங்க...

தல, பர்ஸ் கிடைசாச்சு இல்ல. அப்புறம் என்ன?

said...

ஹிஹி.. கலக்கல் மாம்ஸ் :)

said...

டரியல் டக்ளஸ்: ஒழுங்காக மின்சாரமே கொடுக்காத உங்களுக்கு எதை துண்டிப்பது???

கை , கால் எல்லாம் துண்டிக்க வேணாம். பாவம் பொழச்சி போகட்டும்.

said...

//ஈழத் தமிழர் பிரச்சினைக்காக பேசுவது குற்றம் என்றால் என்னையும் கைது செய்யலாம்--- பாரதிராஜா//

அது சரி.. தெற்கத்தி பொண்ணு கொடுக்கும் தைரியம்.. போல்ஸ்கார் ஒன்னுக்கு போக சீட்ட விட்டு எழுந்தத கேள்விபட்டதுக்கே கோபலபுரம் வூட்டு கேட்டில் குப்புற விழுந்த வீரனல்லவா.. எல்லாம் பேசுவார்.. :)

said...

//அ.தி.மு.க மற்றும் தி.மு.கவோடு கூட்டணி கிடையாது- சரத்குமார்//

தனித்து ஆட்சி அமைக்கும் சிங்கம் கூட்டணி வைக்காதுன்னு எங்களுக்கு தெரியாதா என்ன? :))

(ராமதாஸ் பார்ட் 3.. இப்போ இப்டி தான் சொவீங்க.. அப்புறம் மத்தில கூட்டு மாநிலத்துல பொறியல்னு சொல்வீங்க... அப்புறம் ஒத்த கருத்து ரெட்டை கருத்து உள்ளவங்க கூட கூட்டுன்னு சொல்வீங்க..)
( ரா.பார்ட் 2 = விசயகாந்த்)

Anonymous said...

super coments.

said...

காரம் பத்தல:)

said...

அருமையான கமெண்ட்ஸ்.அம்மாவைப் பற்றிய கமெண்ட்ஸ் சூப்பர் தொடரட்டும் உங்கள் குசும்புகள்.
நன்றி

said...

பாராதிராஜாவுக்கு போட்ட கமெண்ட் அல்ட்டிமேட்.. :) :) [வி.வி.சி] . விழுந்து விழுந்து சிரித்தேன்..

said...

ச்சின்னப்பையன் போட்ட கமெண்டும் :) :)