Wednesday, August 4, 2010

மீண்டும் பத்திரிக்கையில் பெயர் மாற்ற மோசடி...

இந்த முறை ஏமாற்றப்பட்டது நான்:((

இதுக்கு முடிவு கட்ட போவது யார்?:((

ஐஸ்வர்யா ராய் அடித்த கல்யாணபத்திரிக்கையில் என் பெயருக்கு பதிலாக அபிஷேக் பட்ச்சன் பெயர் வந்த பொழுது எவ்வளோ மனசு கஷ்டமா இருந்தது தெரியுமா? இதை விவேக் ஓபராய் கூப்பிட்டு சொன்ன பொழுதுதான் தெரியவந்தது. நீங்கள் ஆசை ஆசையாக சைட் அடித்த பிகர் கல்யாண பத்திரிக்கையில் வேற ஒருவர் பெயர் வரும் பொழுது வரும் வலி..அதை அனுபவித்தால் தான் உங்களுக்கு புரியும், அட்லீஸ்ட் பத்திரிக்கையில் இந்த பிகரை குசும்பனிடம் இருந்து ஆட்டைய போட்டேன் என்று ஒருவரி சொல்லியிருந்தாலாவது பரவாயில்லை. ஒன்னுமே சொல்லாமல் என்னமோ சொந்தமாக தேத்தி கரெக்ட் செஞ்சு கல்யாணம் செய்வது போல் பத்திரிக்கை அடித்தது மட்டும் அல்லாமல், என் பெயரை வேறு இருட்டடிப்பு செய்துவிட்டார்கள். இத்தனைக்கும் அபிசேக் பட்சன் அடிக்கடி பேசுபவர்தான், அப்பொழுதுதாவது சொல்லியிருக்கலாம் உங்க பிகரை ஆட்டைய போட போறேன் என்று.

வேதனையோடு, தாடியோடு
குசும்பன்

பின்னூட்டங்கள்

1 to 25 பின்னூட்டங்கள்: கடுமையான கண்டனங்கள்

26) பல்வெட்டு said: இதுவரை யாரும் எந்த கல்யாணம் ஆன பிகரையும் சைட் அடிச்சது இல்லையா? இதுவரை யாரும் ஊசி போடும் நர்ஸை சைட் அடிச்சது இல்லையா? இதுவரை யாரும் கல்யாணம் ஆன நடிகையை ரசித்தது இல்லையா? அவர்கள் மட்டுமே இதுக்கு கண்டனம் தெரிவிக்கலாம்!!!


*********
ஜ்யோவ்ராம் சுந்தர் Sundar - ஊதாப்பூ said: முதல்லயே அபிஷேக் பச்சன் உங்ககிட்ட சொல்லியிருந்தா பரவாயில்லை. விவேக் கூப்பிட்டு சொன்ன பிறகுதான் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கு. அப்புறம் நல்லா மாட்டிகிட்ட பிறகு ஆமாம்னு ஒத்துக்கறாரு அபிஷேக். சே, என்ன மனுஷன். என்னுடைய கடுமையான கண்டனங்கள்


***********
கண்ணா K - அபிஷேக் பச்சன் படங்களை புறக்கணிப்போம்.....

ஜ்யோவ்ராம் சுந்தர் Sundar - ஜிக்கி said : இல்லை கண்ணா, புறக்கணிப்பெல்லாம் பெரிய விஷயம். அபிஷேக் உணர்ந்து திருந்திவிட்டாலே போதும்.


*************

ஜ்யோவ்ராம் சுந்தர் Sundar - ஏன், எல்லாரும் கடுமையான கண்டனங்கள்னே சொல்றாங்க. அப்ப லேசான, மந்தனமான கண்டனங்கள் எல்லாம்கூட இருக்கா?

************
கண்ணா K - அபிஷேக் பச்சன் said...
அண்ணே, அந்த இதழில் நன்றி -குசும்பன் என வரவேண்டியது,மிஸ் ஆகி விட்டது.அடுத்த இத்ழில் வரும்.நான் ஆசிரியரிடம் பேசி விடுகிறேன்.விடுபட்டமைக்கு வருந்துகிறேன்.அதே சமயம் நான் வேண்டுமென்றே செய்ததாக நினைக்க வேண்டாம்.நீங்கள் உரிமையாக ஃபோன் பண்ணியே கேட்கலாம்.


************
ஜ்யோவ்ராம் சுந்தர் Sundar - டாக்டர் க்ரூனோ said : அபிஷேக், நீங்கள் இதற்குமுன் திருமணம் செய்திருக்கிறீர்களா? அப்போது எல்லாம் அறிவித்துவிட்டுத்தான் செய்தீர்களா? சரி, குசும்பன் பெயரே பத்திரிகையில் இருந்தாலும், இது தெரியாமல் அவர் வேறு யாரையாவது திருமணம் செய்ய இருந்து அந்தப் பத்திரிகையிலும், குசும்பன் பெயர் போட்டே அடித்துவிட்டால், ஒரே சமயத்தில் இரண்டு இடத்தில் திருமணம் என்றால் குசும்பனை என்ன நினைத்துக் கொள்வார்கள். இது குறித்து நான் முன்னர் எழுதிய பதிவின் சுட்டி .................. இது இவ்வளவு வருடங்கள் சைட் அடித்த உங்களுக்குத் தெரியாது என்பதை நம்ப கஷ்டமாக இருக்கிறது.


************
குசும்பன் kusumbu - அலோ இரண்டாப்பு தமிழ்வாத்தியார் சுப்பையா இருக்காங்களா?

ஆமாம் சுப்பையாதான் பேசுறேன்

அய்யா நான் மும்பையில் இருந்து அபிசேக் பேசுறேன்.. நன்றி குசும்பன் என்று வரவேண்டிய இடத்தில் என் பெயர் வந்துட்டுய்யா..

அதை ஏன்யா என்கிட்ட சொல்ற...

ஆசிரியர் கிட்ட சொல்லிடுறேன் என்று பொதுவுல சொல்லிட்டேன் அதை காப்பாத்தனுமுல்ல ஐய்யா!


************
நடந்து முடிந்த பத்திரிக்கை பிரச்சினையும் என் தரப்பும்....
நேற்றிலிருந்து கண்டனத்தையும், காண்டத்தையும் தொடர்ந்து வழங்கி வரும் அனைவருக்கும் நன்றி. தலைவர் பொய் தமிழன் போல் நான் எலி அல்ல, சும்மா சும்மா திரும்ப அதே கமெண்டை காப்பி செய்து ஒவ்வொரு கமெண்டுக்கும் வேற வேற கலர் கொடுத்து வந்தது 50 பின்னூட்டம் என்றால் அதுக்கு 100 பின்னூட்டம் போட்டு விளக்கம்சொல்ல.. ஆகவே தனியா பதிவு போடுறேன்.

நான் நிறைய முறை சொல்லியிருக்கிறேன்... நான் காப்பி அடிச்சு பாஸ் செய்தவன் என்று, அதுக்காக அப்படியே புக்கில் இருப்பதை போல் படம் 1.1ல் இருப்பது போல் என்று எழுதியது இல்லை, அப்படி எழுதியிருந்தால் அதுக்கு பெயர் ஈ அடிச்சான் காப்பி, நானே சொந்தமாக படம் வரைந்து பாகம் குறிச்சிருக்கிறேன். என் எழுத்தில் வ.சே.சுவும், மா.பொ.சியும் கால் ஆட்டிக்கிட்டு படுத்திருப்பதை உத்து உத்து பார்த்து படிப்பவர்களுக்கு தெரியும்.

கல்யாண பத்திரிக்கை பத்தி பக்கம் பக்கமாக விளக்கம் கொடுக்கும் அபிசேக் ..ஒரு வார்த்தை அண்ணே உங்க சைட்டை நான் ஆட்டைய போடுகிறேன் என்று சொல்லியிருந்தா நான் வேண்டாம் என்றா சொல்லபோறேன்.

பலர் நான் மன்னிப்பேன் ..என்று என் மேல் உள்ள நம்பிக்கையில் சொல்லியிருக்கிறார்கள் . நான் ஒன்றும் சர்ச்சில் பாவ மன்னிப்பு வழங்கும் பாதர் அல்ல. என் குழந்தைக்கு பாதர்.

சிலர் சொல்கிறார்கள் இது பிரபலம் ஆக செய்யும் ட்ரண்ட் என்று, எல்லோருக்கும் சொல்கிறேன்..பிரபலம் என்றால் என்ன தெரியுமா? முக்காடு போட்டு ஜெயிலுக்கு அழைச்சிக்கிட்டு போனாலும் ஓடி வந்து போட்டோ எடுக்கிறானுங்க பாரு அப்ப சொல்லலாம் நீங்க பிரபலம் என்று.


மூனு மாதத்துக்கு ஒருமுறை டாய்ய்ய் நீதானே குசும்பன் என்று கெட்டப்பை மாத்தினாலும் சரியா கண்டுபிடிச்சு கொடுத்த கடனை கேட்கிறார்கள் அதை தவிர வேறு யாருக்கும் என்னை தெரிவது இல்லை.

ஒரு அட்டுபிகரை கரெக்ட் செய்ய குச்சிமிட்டாய், குருவி ரொட்டி, டீ அதோடு மட்டும் இல்லாமல் டூரிங்டாக்கிஸ் அழைச்சிக்கிட்டு போவது இடைவேளை நேரத்தில் முறுக்கு, கடலை மிட்டாய் என்று வாங்கி கொடுப்பது ஒருவாரம் போவதோடு செலவும் ஆகிறது.

இதே ஒரு உலகபிகரை கரெக்ட் செய்ய கப்பசினோ, பஸ்கின் ராபின்ஸ் ஐஸ்கிரிம் முதல் ஸ்டார்பக்ஸ் காப்பி வரை செலவு செய்யவேண்டியிருக்கு, மாயாஜால், சத்யம் என்று அழைச்சிக்கிட்டு செல்லும் பொழுது பர்ஸ் காலியாகிடுது, இப்படி எல்லாம் கஷ்டப்பட்டு கரெக்ட் செய்வதால் என்ன பலன்? அட பார்றா சூப்பர் பிகருன்னு நம் கூட வரும்பொழுது நாலு பேரு திரும்பி பார்த்தா நமக்கு ஒரு மெதப்பா இருக்கு. இதை தவிர இதில் சாதிக்க ஒன்னும் இல்ல. ஆனா ரொம்ப சுளுவா டக்குபுக்குன்னு யாரோ ஆட்டைய போட்டுவிட்டு நன்றின்னு என் பெயர் கூட போடாம இருப்பது எவ்வளோ கஷ்டமாக இருக்கு தெரியுமா?

இனி இந்த விசயத்தை பற்றி பேசவோ, பாட்டாக பாடவோ விரும்பவில்லை.
நன்றி வணக்கம்! இன்றுடன் இப்படம் கடைசி!

பீ ஹேப்பி!

73 comments:

said...

குசும்பன் ராக்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :)) #ஆங்ங்ங் கல்லு உடைக்குறாருன்னு அர்த்தம் :)))))))))))

said...

அபிஷேக்கிற்கு எங்களது வன்மையான கண்டனங்கள்!
# யார் கண்ணாலம் பண்ணினாலும் பந்தியில் அமர்வோர் சங்கம்

said...

:)

யோவ் அவருக்கு கராத்தே தெரியுமாம்

said...

//

ஜ்யோவ்ராம் சுந்தர் Sundar - ஜிக்கி said : இல்லை கண்ணா, புறக்கணிப்பெல்லாம் பெரிய விஷயம். அபிஷேக் உணர்ந்து திருந்திவிட்டாலே போதும்.
/
/

:))))))

haa haa haa

said...

@ கோவி,
குசும்பனை பயமுறுத்த வேண்டாம். 48 ஆண்டுகளாக பதிவு எழுதி, எல்லாரையும் மகிழ்வித்து வரும் குசும்பனை ஏமாற்றியது மாபெரும் தவறு தான். உடனடியாக சங்கத்தைக் கூட்டி நீதி கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்.

said...

//என் எழுத்தில் வ.சே.சுவும், மா.பொ.சியும் கால் ஆட்டிக்கிட்டு படுத்திருப்பதை உத்து உத்து பார்த்து படிப்பவர்களுக்கு தெரியும்/

:)))))))))))))

said...

//பிரபலம் என்றால் என்ன தெரியுமா? முக்காடு போட்டு ஜெயிலுக்கு அழைச்சிக்கிட்டு போனாலும் ஓடி வந்து போட்டோ எடுக்கிறானுங்க பாரு அப்ப சொல்லலாம் நீங்க பிரபலம் என்று.//

ultimate :))

really kusumban rockkkkkkkkkks :))

said...

ஸ்.......அப்பா......முடியலை! டிபிகல் குசும்பு!

said...

யாரும் அமிதாப்பச்சனுக்கு இது சம்மந்தமா ஈமெயிலோ அல்லது டிவிட் மெசேஜோ அனுப்பி வைக்கலையா குசும்பா?! :))

said...

////பல்வெட்டு said: இதுவரை யாரும் எந்த கல்யாணம் ஆன பிகரையும் சைட் அடிச்சது இல்லையா? இதுவரை யாரும் ஊசி போடும் நர்ஸை சைட் அடிச்சது இல்லையா? இதுவரை யாரும் கல்யாணம் ஆன நடிகையை ரசித்தது இல்லையா? அவர்கள் மட்டுமே இதுக்கு கண்டனம் தெரிவிக்கலாம்!!!///

இதுக்கு பெயர் தான் எதி வினை யோ?

said...

இதை பஸ்ஸில் இருந்து ஆட்டைய போட்டதும் இல்லாமல் நன்றி பஸ்ஸுனு சொல்லாததை வண்மையாக(நன்றி சுந்தர்ஜி) கண்டிக்கிறேன்

said...

இன்னும் இந்த பதிவுக்கு டிவிட்டரில் லிங்க் வரலை.. தமிழ் எழுத்து உலகம் செத்து மடிஞ்சி போச்சு.. என்ன ஒரு அநீதி இது.. :(

said...

அதை ஏன்யா என்கிட்ட சொல்ற...

ஆசிரியர் கிட்ட சொல்லிடுறேன் என்று பொதுவுல சொல்லிட்டேன் அதை காப்பாத்தனுமுல்ல ஐய்யா! /////

:))))))))))))))))))))))

said...

ரசித்தது இல்லையா? அவர்கள் மட்டுமே இதுக்கு கண்டனம் தெரிவிக்கலாம்!!!///

இதுக்கு பெயர் தான் எதி வினை யோ?
//

கூல் ஒத்துகிறோம் நீங்க யாரையும் சைட் அடிக்கலை :)

said...

//சும்மா சும்மா திரும்ப அதே கமெண்டை காப்பி செய்து ஒவ்வொரு கமெண்டுக்கும் வேற வேற கலர் கொடுத்து வந்தது 50 பின்னூட்டம் என்றால் அதுக்கு 100 பின்னூட்டம் போட்டு விளக்கம்சொல்ல..//

ஹாஹாஹா.. செம்மயா ஓட விடுறியே மச்சி ;))))

said...

பதிவின் சில இடங்களில் கலர் எழுத்து, போல்ட் லெட்டர்ஸ் எல்லாம் குறையுதே... ;-)

said...

:))))

said...

சூப்பர் டா !!!!!!!!!

said...

Super :)

said...

:)

said...

:))))))

பின்றியேப்பா..

said...

செந்தழல் ரவி said...
சூப்பர் டா !!!!!!!!
//

ஆஹா பகடி செய்தால் பிடிக்காதே
இந்த சூப்பருக்கு வேற அர்த்தம் இருக்குமோ # சந்தேகம்

said...

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...
:))))))

பின்றியேப்பா..
//

பஸ்ஸின் ஆக்ஸிலேட்டர் சாரி aggregator பாலபாரதி வந்தாச்சிடோய் :) # கவுத்தல்

said...

யெஸ்.பாலபாரதி
//


♠ = |||

:)

# சீக்ரெட் பேசுவோர் சங்கம் பாஸ் ஓவர் ஓவர்

said...

முடியலைங்க... செம கலாய்ப்பு....

said...

அபிஷேக்குக்கு எனது கடுமையான, மந்தமான, லேசான, வன்மையான, கடுக்முடுக்கான, நைஸான, காரமான, புளிப்பான, உப்புக்கரிப்பான கண்டனங்கள்!!!(இங்கே சிரிப்பான் போடக் கூடாதோ!?!)

said...

எத்தனை பத்திரிக்கைகளிலும் தன் பெயர் மிஸ் ஆனாலும் அலட்டிக்கொள்ளாத எங்கள் டிவிட்டர் சிங்கம் , வலையுலகின் மாடர்ன் ஜெஃப்ரி பாய்காட் உ.த(12345678) வை சீண்டுவதை பாராட்டுகின்றேன். உலக 8 கோடி மக்களும் காட்டிக்கொடுக்கும் ஒரே தமிழன் எங்கள் உண்மைத்தமிழன் (12345678)

இங்கனம்
உண்மைத்தமிழன் பேரவை
அம்மாப்பேட்டை

said...

டேய் மாப்ள இனியன், தினமும் 3 வேளை இந்தாள் வாய்ல ஒண்ணுக்கடிடா..

said...

ராஜா..

இன்னிக்கு ஜாக்கியா..?

நல்லாயிரு..!

said...

தம்பி சஞ்சய்..

உன் மாப்பு மேல எவ்ளோதான் கோபம் இருந்தாலும் இம்புட்டு விரோதம் ஆகாது..!

said...

:)))))))))))))))))))))))))))

said...

குசும்புக்கு அளவே இல்லைங்களாண்ணா???

said...

கலக்கல் தல ...

said...

பதிவின் சில இடங்களில் கலர் எழுத்து, போல்ட் லெட்டர்ஸ் எல்லாம் குறையுதே... ;-)//

அப்படி செஞ்சா அதுக்கு பேரு ஈ அடிச்சான் காப்பி

said...

தம்பி குசும்பா.... ஊருக்கு வருவ இல்லை அப்ப வச்சிக்கறேன் சேதியை...

said...

ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு மன்னிக்க... குசும்பனுக்கு கொண்டாட்டம்னு இப்பதான் கண்டுபிடிச்சேன்..

said...

சுஜாதாவும், பாலாகுமரானும் ஜாக்கிகுள்ள இருக்காங்க கூத்தாடி குசும்பனே வெளியே வா !!

said...

ஊரு ரெண்டு பட்டா
//

என்னது ஊருக்கு ரெண்டு பட்டா தானா ???

said...

தம்பி குசும்பா.... ஊருக்கு வருவ இல்லை அப்ப வச்சிக்கறேன் சேதியை..
//

இந்த கமாண்டையும் இதுக்கு கீழே உள்ள கமாண்டையும் சேர்த்து படிக்கும் போது குசும்பனுக்கு பெருசா கிடைக்கும் என்று நினைக்கிறேன் அந்த நாளுக்காக வெயிட்டிங் :)

said...

அடப்பாவிங்களா.. ஏர்போர்ட்ல ஆள் செட் பண்ணி வச்சி இருப்பது போல பில்டப் பண்ணறிங்க...

said...

என்னாது, ஐஸ்வர்யாராய்க்கு கல்யாணமா?அதுவும் அபிஷேக்கோடவா? என்ன அநியாயம் இது?

said...

அண்ணே!

நீங்க உண்மையிலேயே ஜொள்ளுபாண்டி தான், 15000 பிகர்கள் உங்களிடம் கடலை போடுவது பெரிய விசயம்! நீங்க மட்டும் ஒரு கடலை கம்பெனி ஆரம்பிச்சு சும்மா பிச்சிகிட்டு போகும்!, மல்லுவேட்டி மைனருக்கு கூட இவ்ளோ சேல்ஸ் இல்ல!

(அங்க ஓட்டுனது தான் ஸாரி போட்டது தான்)

said...

ஆயிலு நன்றி:) கராத்தே பிளாக் பெல்ட் கையாலேயே உடைப்பேன்:))

தமிழ் பிரியன், எல்லா பந்தியிலுமா இல்ல முதல் பந்தியில் மட்டுமா?

நன்றி மின்னல்

நன்றி கோவி, (என்னோட முதல் கமெண்டை பாருங்க)

நன்றி சென்ஷி:))

நன்றி கார்க்கி (சொக்கா வாங்கி போடு முன்டா பனியன் அசிங்கமா இருக்கு)

நன்றி பெயர் சொல்ல விருப்பமில்லை

நன்றி சீனிவாசன்

நன்றி காலப் பறவை

நன்றி செந்தழல் ரவி

நன்றி ராபின்

நன்றி ஜெகதீசன்

நன்றி யெஸ்.பா

நன்றி வெடிகுண்டு

நன்றி க.பாலாசி

நன்றி யோசிப்பவர்

நன்றி வினையூக்கி (உண்மை தமிழன் பேரவையா? அவ்வ்வ்வ்)

நன்றி சஞ்சு

நன்றி உ.த:)

நன்றி ரவிச்சந்திரன்

நன்றி தராசு

நன்றி நியோ

நன்றி ஜாக்கி அண்ணே இந்த பச்ச மண்ண அடிச்சா
சேகர் செத்துருவான்:)) கூத்தாடி, காத்தாடி என்னவேண்டும்
என்றாலும் சொல்லலாம் நோ பிராபிளம்:))

வெடிகுண்டு ஏன் யா ஏன்?

அறிவிலி ஆமாங்க :((

நன்றி வால்பையன் கடலை நிலக்கடலையா? இல்ல பொட்டுக்கடலையா?

said...

எல்லாம் சரி... உங்கள் கல்யாண பத்திரிக்கையில் உங்கள் மனைவி சார்பா ஐஸ்வர்யாவுக்கு நன்றி போட்டார்களா???????????

said...

குசும்பன் வாழ்க!

said...

அது சரி.. இந்த மேட்டர் ஐஸ் இக்கு தெரியுமா?

said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் Sundar - டாக்டர் க்ரூனோ said : அபிஷேக், நீங்கள் இதற்குமுன் திருமணம் செய்திருக்கிறீர்களா? அப்போது எல்லாம் அறிவித்துவிட்டுத்தான் செய்தீர்களா? சரி, குசும்பன் பெயரே பத்திரிகையில் இருந்தாலும், இது தெரியாமல் அவர் வேறு யாரையாவது திருமணம் செய்ய இருந்து அந்தப் பத்திரிகையிலும், குசும்பன் பெயர் போட்டே அடித்துவிட்டால், ஒரே சமயத்தில் இரண்டு இடத்தில் திருமணம் என்றால் குசும்பனை என்ன நினைத்துக் கொள்வார்கள். இது குறித்து நான் முன்னர் எழுதிய பதிவின் சுட்டி .................. இது இவ்வளவு வருடங்கள் சைட் அடித்த உங்களுக்குத் தெரியாது என்பதை நம்ப கஷ்டமாக இருக்கிறது.
//

ஹி ஹி ஹி

சூப்பரா செட் ஆகுது தலைவரே

said...

கலக்கல் தல ...

said...

பிரமாதம். வெகு நாட்களுக்கு பிறகு ரசித்து சிரித்து படித்த பதிவு.

said...

//குசும்பன் said...

நன்றி ஜாக்கி அண்ணே இந்த பச்ச மண்ண அடிச்சா சேகர் செத்துருவான்//

ஜாக்கி சேகர் அண்ணே இவர அடிச்சா நீங்க செத்துருவீங்களாமாம்....

எப்பிடில்லாம் மிரட்டுறாருய்யா.... இந்த கொலை மிரட்டலும் என் கடுமையான கண்டங்கள்...

said...

அன்பிற்கினிய நண்பரே..,

நான் தற்செயலாகத்தான் உங்கள் பதிவை பார்த்தேன்..,
அண்ணன் ஜாக்கிசேகர் மன பாரத்துடன் எழுதியவற்றை பகடி செய்கிறேன் பேர்வழி என்று நோகடிக்காமல் அவரையும் ரசிக்க வைத்த உங்களின் குசும்பு
நன்றாக உள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு நான் தனியே சிரித்தேன் - ஆனந்த விகடன் லூசுப்பையன் டச்.

நன்றி.,
ரமேஷ்.

said...
This comment has been removed by the author.
said...

sariyana kusumbu oye..

said...

ஷப்பா ஐஸ்வர்யா தப்பிவிட்டார். எந்திரன் விழாவில் தன்னுடைய பேச்சு முடிந்தபின்னர் ரஜனியை மறந்துதுபோல் ஐசும் விரைவில் ஒரு பிரஸ் மீட்டில் ஐ லவ் யூ குசும்பன் என சொல்வாரோ. #சந்தேகம்.

said...

குசும்பன்..
சூப்பர் கலாய்த்தல் தல..
மேட்டர் சூப்பரா பொருந்தியிருக்கு.
நெறய சிரிச்சேன்..

நானும் டாக்டர். புருனோ அளவுக்கு சம்பந்தப் பட்ட பதிவுகளில் எழுதினேன், என்னையும் கலாய்க்காம விட்டீங்களே - மீ தெ கிரேட் எஸ்கேப்ப்பூ

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

said...

//இத்தனைக்கும் அபிசேக் பட்சன் அடிக்கடி பேசுபவர்தான்,//

சரி அபிசேக் பச்சன் ஊமையாவா இருந்தார் :))

said...

:))))))))))))

said...

??????????????????????????????

எனது வலைபக்கத்தை காண அழைகின்றேன் http://ujiladevi.blogspot.com

said...

இதுக்கு பேர்தான் அக்மார்க் குசும்பு....

said...

ayyo appa kannula thanni ooththuthu sirichi sirichi

said...

குசும்பு குசும்பு (கவித கவித பாணியில் படிக்கவும்)

said...

இதை உன்னைவிட்டா வேற யாருமே எழுதமுடியாதுங்கறதுதான் உன்னோட ஸ்பெஷாலிட்டி நண்பா.

செமயா சிரிச்சேன்!

said...

அட்டகாசம் !!!! செமயா சிரிச்சேன்!
சிரிப்பை அடக்க முடியலை !!!!!!

:) :) :)


After a long time :) :) :)

Thanks குசும்பன்

said...

அட்டகாசம் !!!! செமயா சிரிச்சேன்!
சிரிப்பை அடக்க முடியலை !!!!!!

:) :) :)


After a long time :) :) :)

Thanks குசும்பன்

said...

silandhy உங்கள் கமெண்டுக்கு சிலர் ஆட்சேபனை தெரிவிச்சதால் நீக்கிவிட்டேன் மன்னிக்கவும்.

said...

//ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு மன்னிக்க...

//

கூத்தாடியான கோமாளிக்கு வாழ்த்துகள் :))

said...

குசும்பன் said...
silandhy உங்கள் கமெண்டுக்கு சிலர் ஆட்சேபனை தெரிவிச்சதால் நீக்கிவிட்டேன் மன்னிக்கவும்.
//

இதுஎன்ன சின்னபுள்ளதனமா இருக்கு

படத்துல அதுசரியில்லை இதுசரியில்லை என்று விமர்சிக்க உரிமை உள்ளது போல் பிளாக்கு எழுதுறவங்களை விமர்சிக்க உரிமையில்லையா??

அந்த பின்னுட்டத்தில் ஆபாச தாக்குதல் இல்லையே பின்ன ஏன்??

டமில் blog உலகம் நாசமா போய்கிடக்கு

said...

நகைச்சுவை பல்கலைக்கழகம் பாஸ் நீங்க....

said...

அன்பின் குசும்பன்

நகைச்சுவை - ம்ம்ம்ம் - ஜாக்கி நகைச்சுவையாகவே எடுத்துக் கொண்டது நன்று

நல்வாழ்த்துகள் ஜாக்கி - குசும்பன்
நட்புடன் சீனா

Anonymous said...

ஆஹா..செம மேட்டரு....குசும்பன் டிரேடு மார்க் ல சிரிச்சு சிரிச்சு வயித்து வலியே வந்துடுச்சு...

said...

அண்ணெ,கலக்கீட்டீங்க.துக்ளக் சத்யா,எஸ் வி சேகர் இவர்களின் அங்கத நடை உங்களுக்கு கை கூடி வருது.யார் மனசையும் புண் படுத்தாமல் படுத்தி எடுத்திருக்கிறீர்கள் அருமையான நையாண்டி.வாழ்த்துக்கள்

said...

சம்பந்தப்பட்ட ரெண்டு பேரும் ஜாலியா எடுத்துகிட்டு மன்னிச்சு விட்டுட்டாங்க போல? ஆரோக்கியமான விஷயம்.

குசும்பன் சொன்னா கோவம் வருமா என்ன.. சிரிப்புதான். வந்துச்சு :)

கலக்கு சரவணா...

said...

டேய் அடங்க மாட்டியா நீயி...