Sunday, October 24, 2010

ஒரு பதிவரின் பேட்டி- பின்விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பல்ல!டிஸ்கி1 : ஜிடாக்கில் வாசகர் கடிதம் அனுப்பி போட்டோ டூன்ஸ் போட்டு ரொம்ப நாள் ஆச்சுன்னு பதிவு எழுத சொன்ன வாசகர் அப்துல்லாவுக்கு இந்த பதிவு.

(டேய் சாட்டில் அவர் சொன்னது வாசகர் கடிதம் என்றால் எவனும் தப்பிதவறி SMS அனுப்பினா என்னடா சொல்லுவ? ஹி ஹி அது வாசகர் அனுப்பிய தந்தின்னு சொல்லுவோமுல்ல)

*****************
டிஸ்கி: முதலிலேயே சொல்லிவிடுகிறேன் பேட்டியை படித்தபின்பு வரப்போகும் எதிர்பதிவுகளுக்கு கம்பெனி பொறுப்பல்ல...

கேள்வி: நீங்கள் பத்தாவதில் வாங்கிய மார்க் எத்தனை?
பதில்: யோவ் என்ன கேள்வி இது? பதிவரை பேட்டி எடுக்க வந்துட்டு மார்க் எத்தனை என்று
எல்லாம் கேட்டுக்கிட்டு..

கேள்வி: டென்சன் ஆகாதீங்க 10வதில் வாங்கிய மார்க்கை வெச்சிதான் நீங்க லோக்கலா, STDயா?இல்ல ISDயான்னு முடிவு செய்வோம்...ப்ளீஸ் பதில் சொல்லுங்க.
பதில்: பத்தாவதுல ஜஸ்ட் பாஸ், 12வதுல பெயில்...

கேள்வி: ஆஹா அப்ப நீங்க படு லோக்கலாக இருப்பீங்கபோலயிருக்கே...
நீங்க ஏதும் மெடல் வாங்கியிருக்கீங்களா?
பதில்: ஆங் போன முறை நடந்த ஒலிம்பிக்கில் கோல்ட் மெடலும் இந்த முறை நடந்த காமன்வெல்த்தில் 5 கோல்ட் மெடலும் வாங்கியிருக்கேன்...நல்லா கேட்கிறய்யா கேள்வி.

கேள்வி: இல்ல சார் உங்களுக்கு தெரியாமலே உங்களுக்குள் திறமை இருந்திருக்கும் அதை யூஸ் செஞ்சு ஏதும் வாங்கியிருப்பிங்க யோசிச்சி பாருங்க...
பதில்: ஆங் இப்ப நினைவு வருது...5 வது படிக்கும் பொழுது என் கூட படிச்ச பொண்ணு குண்டு கவிதா அது என்னை போடா கருப்பாண்டின்னு சொல்லிட்டுன்னு அதை அடி அடின்னு அடிச்சு கீழ தள்ளி போட்டு கும்மு கும்முன்னு கும்மி கன்னத்தில் கடிச்சி வெச்சிட்டேன்.அதுக்காக எங்க கிளாஸ் சார் ராம் என்னை அடி அடின்னு அடிச்சு என் சிலேட்டில் இனி நான் யாரிடமும் சண்டை போட மாட்டேன் என்று எழுதி அதுல ஒரு சணல் கட்டி என் கழுத்தில் மாட்டி கிளாஸ் ரூமுக்கு வெளியில் நிக்க வெச்சாரு...அல்லாரும் ரொம்ப பெருமையா பார்த்துக்கிட்டு போனாங்க.


கேள்வி: நீங்க மெடல் வாங்கிய கதை போதும், ஏதும் கப்பு வாங்கியிருக்கீங்களா? பதில்: எழுதிய எல்லா செமஸ்டரிலும் கப்பு வாங்காம இருந்ததே இல்ல, ஆங்கிலத்தில் கப்பு கன்பார்ம்...

கேள்வி: என்னது ஆங்கிலத்தில் கப்பு வாங்குனீங்களா? அப்படி கப்பு வாங்கிய நீங்களா, ஒரு வெளிநாட்டு கம்பெனியில் வேலை செய்கிறீர்கள்? எப்படி இந்த மாற்றம்? எப்படி முடிந்தது?
பதில்: என்னய்யா இது எல்லாம் ஒரு மேட்டரா? முன்னாடி எல்லாம் அவிங்க இங்கிலீஸில் பேசினா நான் அங்கிருந்து நைசா ஓடிவிடுவேன்... பார்த்தேன் எவ்வளோ நாள்தான் ஓடுவதுன்னு திருப்பி இங்கிலீஸில் பேச ஆரம்பிச்சேன், நான் பேசுற இங்கிலீஸை பார்த்து அவன் அவன் கல்ல கண்ட நாய் மாதிரி ஓட ஆரம்பிச்சிட்டாய்ங்க.

கேள்வி: உங்களுக்கு வரும் வாசகர் கடிதங்கள் பற்றி?
பதில்: *$#@#@#%%$^**^&^^$%$$##

கேள்வி: என்ன சார் இப்படி திட்டுறீங்க...
பதில்:பேட்டி எடுக்கவே ஆள் இல்லாம என்னை நானே பேட்டி எடுத்துக்கிட்டு இருக்கேன் இப்ப வந்து வாசகர் கடிதம் அது இதுன்னுக்கிட்டு...

44 comments:

said...

இன்னைக்கி எத்தனிபேர் என்னையத் திட்டப்போறாய்ங்களோ?!?

said...

பேட்டி எடுக்க ஆள் இல்லைன்னு கவலையா? எச்சூஸ் மி,, நான் வேணா? :))

said...

//
எம்.எம்.அப்துல்லா said...
இன்னைக்கி எத்தனிபேர் என்னையத் திட்டப்போறாய்ங்களோ?!?
//

பின்ன‌ உங்க‌ள‌ கொஞ்சுவாங்க‌ளா? குசும்ப‌ன் சும்மாவே சாமியாடுற‌வ‌ரு, நீங்க‌ போயி உடுக்கை அடிச்சா? :))))

said...

அல்லோ மிஸ்டர் வாசகர், என் வாசகரை நான் திட்ட விட்டுவிடுவேனா?:))

@விஜி//எச்சூஸ் மி,, நான் வேணா? :))
//

நீங்க வேணா!:))) நான் அப்புறம் ஒரு மாசம் பதிவுலகை விட்டு லாங் லீவில் போக வேண்டிவரும்.இப்பவே அப்படிதான் இருக்கேன் என்பது அடுத்த விசயம்...:))

said...

// விஜி said...
பேட்டி எடுக்க ஆள் இல்லைன்னு கவலையா? எச்சூஸ் மி,, நான் வேணா? :))

//

அக்கா எப்பவும் தொழில் தர்மத்தை மீறக்கூடாது. எடுத்த பேட்டிய கலாய்க்கிறது மட்டும்தான் நம்ம டூட்டி. ஒகே :)))

said...

:) கல்மாதி கார்ட்டூன் டக்கரூ :)

said...

10 ஆவது மார்க் வைத்து எப்படி முடிவு செய்வீங்க..நாமெல்லாம் சின்ன பிள்ளையா இருக்கும் போது எடுத்த மார்க்குப்பா அது...

said...

குசும்பா இப்பத்தான் கொஞ்சம் ஆறிப்போய் கிடக்கு திரும்பவும் பெட்ரோல் ஊத்தனுமா?? எனிவே நல்லாருந்துச்சு...:)))

said...

டெஸ்ட்

said...

//விஜி said...
பேட்டி எடுக்க ஆள் இல்லைன்னு கவலையா? எச்சூஸ் மி,, நான் வேணா? :)//

என்னை பேட்டி எடுக்க முடியுமா? என்னிடம் எடுக்கும் பேட்டி மிக மிக சிறப்பானதாக இருக்கும். :)

said...

அல்ல்லோ யாரு, மாமாவா? ராங் நம்பர்.!

said...

:)

said...

Nice cartoons...

said...

அண்ணே நான் பத்தாவதே படிக்கல, அப்ப நான் லோக்கலா, எஸ் டி டியா!?

said...

:):))))

said...

ஹிஹி... மாம்ஸ் எல்லா கமெண்டுசுமே ஜூப்பரு.. :))

//வாசகர் அப்துல்லாவுக்கு//

யோவ்.. இந்த மாதிரி சில்லறை டிக்கெட்டுங்க எல்லாம் உங்க வாசகர்களா? அப்போ நாங்க எல்லாம் என்னவாம்?

said...

ரொம்ப நாளாச்சு டிஸ்கி நானும் போட்டுக்கிறேன்.

ஆமா!நீங்க நல்லாவே நல்லவரா?கொட்டாவி கெட்டவரா?

ஒண்ணு குளிர வைக்கிறீங்க இல்ல சூடாவே ஆவி புடிக்கிறீங்க:)

said...

//ஒண்ணு குளிர வைக்கிறீங்க இல்ல சூடாவே ஆவி புடிக்கிறீங்க//


இந்த ஆவியில் இட்லி வேகவைக்க முடியுமா!?

said...

கமெண்ட் எல்லாம் அருமை.
பேட்டிதான் கலக்குது.... வயிற்றை.
ஏன்???????

said...

//இந்த ஆவியில் இட்லி வேகவைக்க முடியுமா!?//

வால்பையன்!இந்த ஆவியில் முடியுமான்னு குசும்பனைத்தான் கேட்கணும்.ஆனால் ஆ வி யக் கொழுத்தினா இட்லி வேகும்:)

said...

aha........

said...

//என் கூட படிச்ச பொண்ணு குண்டு கவிதா அது என்னை போடா கருப்பாண்டின்னு சொல்லிட்டுன்னு அதை அடி அடின்னு அடிச்சு கீழ தள்ளி போட்டு கும்மு கும்முன்னு கும்மி கன்னத்தில் கடிச்சி வெச்சிட்டேன்.அதுக்காக எங்க கிளாஸ் சார் ராம் என்னை அடி அடின்னு அடிச்சு என் சிலேட்டில் இனி நான் யாரிடமும் சண்டை போட மாட்டேன் என்று எழுதி அதுல ஒரு சணல் கட்டி என் கழுத்தில் மாட்டி கிளாஸ் ரூமுக்கு வெளியில் நிக்க வெச்சாரு...அல்லாரும் ரொம்ப பெருமையா பார்த்துக்கிட்டு போனாங்க.//

உங்களுக்கும் எனக்கும் நடந்த தனிப்பிரச்சனையெல்லாம் இப்படி புனைவாக மாத்தி திருச்சி திருச்சி எழுதறதை நான் வன்மையா கண்டிச்சிக்கிறேன்...

said...

மச்சி, ஒரு வாசகர் கடிதம் எழுதி குடுடா, அப்டியே உனக்கு அனுப்பிடுறேன். இத படிச்சதும் வாசகர் கடிதம் எழுதணும் போல இருந்துச்சு, ஆனா எனக்கு அதெல்லாம் எழுத தெரியலைடா. நான் என்ன அவ்ளோ பெரிய எழுத்தாளனா வாசகர் கடிதமெல்லாம் எழுதிக்கிற அளவுக்கு??
அதான் நீயே ஒன்னு எழுதி அனுப்பு, என் மெயில்ல இருந்து அனுப்பிடுறேன். சரியா ?

said...

டியர் நாயே நல்லா இருக்கியா?
ஒழுங்கா எழுதுறீயா
உன் பதிவு அருமை
ஆஹா
ஓஹோ
சூப்பர்

இப்படிக்கு,
உன் அன்பை மறவா நண்பண் சோசப்.

said...

ஓய்..

நெனைச்ச அளவு ஒரு வில்லங்கத்தையும் காணோமே.. இதுக்குதான் இத்தனி பில்டப்பா?

ஹும்..!

said...

எனக்கு மேல இருக்கற சோசப்போட வாசகர் கடிதம் டாப்பு!!

said...

அன்பு நண்பர் குசும்பன் அவர்களுக்கு,

உங்கள் பதிவுகள் அனைத்தையும் விடாமல் படித்து வருகிறேன். நான் துபாயில் வசித்து வருகிறேன். இது போன்று உங்கள் பதிவுகளில் தற்போது எழுத்துப்பிழைகள் வருவதில்லை. எனக்கென்னவோ சிலர் போல பெரிய பதிவர் ஆக மாட்டீர்களோ என பயமாக இருக்கிறது. தயவுசெய்து நீங்கள் பத்தாவதில் எடுத்த மார்க்குடன் எழுத்துப்பிழைகளோடு எழுதவும்.

என்றும் தங்கள் அன்புள்ள,
சுபைர்

said...

சுபைர் கம்மென்ட் சூப்பர்

said...

*$#@#@#%%$^**^&^^$%$$##


naanga onnum puthusaa ungalai thitturathaa thappaa eduththukkaatheenga bro, ithu unga sollu thaan, he he he . varthaingirathu boomarang maathiri naama sonnahu namakeathaan thirumbi varumm

said...

மண்டபத்துல யாராவது எழுதினதா? குசும்பு டச் இல்லையே... 'சப்'புனு இருக்கு...

said...

//கும்முன்னு கும்மி கன்னத்தில் கடிச்சி வெச்சிட்டேன்.//

கருமம்.. இதை இப்பத்தான் கவனிச்சேன்.. சத்தியமா இந்த குண்டு கவிதா நான் இல்லை..நான் இல்லை.. நான் இல்லை..

said...

பாஸ்!! பேட்டீ சூப்பர்!!

கடைசியா திட்டினீங்களே..அது இங்கிலீஷ் கெட்ட வார்த்தையா? தமிழ் கெட்ட வார்த்தையா?

வெளக்குங்க எசமான் வெளக்குங்க!!

said...

Dear Mr. Kusumban,

I used to visit your blogs at least twice in a week. I remember that some blogger had written about the bachelors (Muthirkannangal) especially the guys working in Saudi / Dubai having problem while getting marriage. I forgot the link.. could you please let me know the link, because I am working in Saudi Arabia and getting married in April 2011

Raj

said...

வாசகர் கடிதம் எழுதிய அப்துல்லா ஒழிக...ஒழிக

said...

முதல் படம் கலக்கல் ..!!
அப்புறம் பதிவர் கேள்விபதில்ல என்னமோ உள்குத்து இருக்குற மாதிரி தெரியுது ..!!
ஹி ஹி ஹி .. வந்ததுக்கு எதாவது நல்லது பண்ணணும்ல .!

said...

செம தூள் வாத்தியாரே

said...

ப.செல்வக்குமார் said...

முதல் படம் கலக்கல் ..!!
அப்புறம் பதிவர் கேள்விபதில்ல என்னமோ உள்குத்து இருக்குற மாதிரி தெரியுது ..!!
ஹி ஹி ஹி .. வந்ததுக்கு எதாவது நல்லது பண்ணணும்ல .!

யோவ் செல்வா, நாரதர் வேலையை இன்னும் விடலையா?

said...

இண்ட்லியில் இணைக்கலையே,ஒரு வேளை பிரபல பதிவர்க்கு அதெல்லாம் தேவை இல்லையோ?

said...

நீங்க ஏன் என் பிளாக் பக்கம் வர்றதே இல்லை?

said...

நன்றி ஆயில்யன்

நன்றி அமுதா

நன்றி நாஞ்சில்

நன்றி Game

நன்றி ஆதி

நன்றி சிவசங்கர்

நன்றி அன்பரசன்

நன்றி வால்பையன் லோக்கலுக்கும் லோக்கல்

நன்றி அப்துல்மாலிக்

நன்றி மாமா, நீ எல்லாம் வாசகர் இல்லை மாமா
தானே தலைவர்கள்.

நன்றி ராஜ நடராஜன் நான் எப்பொழுதும் போல் தான் இருக்கிறேன்:)))

நன்றி சுல்தான் பாய்

நன்றி வழிப்போக்கன்

நன்றி கவிதா

நன்றி சோசப்பு, உன் வாசகர் கடிதத்தை கல்வெட்டி செதுக்க
ஆர்டர் கொடுத்திருக்கிறேன்.

நன்றி பரிசல் நீங்க ஏன் வில்லங்கமா நினைக்கிறீங்க?:))
//எனக்கு மேல இருக்கற சோசப்போட//
எஸ்.வி.சேகர் காமெடிதான் நினைவுக்கு வருது:))

அன்பு நண்பர் சுபைருக்கு தாங்க வசித்து வரும் இடம் துபாய் அல்ல,
அது அபுதாபி இதுபோல் போலி முகவரியோடு கடுதாசி போடாதீங்க.

நன்றி காலப் பறவை

நன்றி சுவேத்தா

நன்றி வினு

நன்றி மகேஷ் கொஞ்சம் டச்சு விட்டு போச்சு:))

நன்றி ரங்கன்...தமிழ்தான் செந்தமிழ்:))

ராஜ் நன்றி, நீங்கள் கேட்பது போல் பதிவை படித்த நினைவு இல்லை.
நானும் எழுதிய நினைவு இல்லை. திருமணம் முடிங்க ஒன்னும் பிரச்சினை இல்லை.

நன்றி கண்ணா

கண்ணா, என் வாசகரை அவமரியாதை செய்த உனக்கு நன்றி கிடையாது.
ஸ்பெசல் நன்றி:))

நன்றி செல்வக்குமார் உள்குத்துல்லாம் எதுவும் இல்லை ஜாலிதான்.

நன்றி செந்தில்குமார், அதுக்கு ஒரு பெரிய கதை இருக்கு பிறகு சொல்கிறேன்.:)))

said...

//அன்பு நண்பர் சுபைருக்கு தாங்க வசித்து வரும் இடம் துபாய் அல்ல,
அது அபுதாபி இதுபோல் போலி முகவரியோடு கடுதாசி போடாதீங்க.//

அவனவன் போலியா கடுதாசியே போடுறான்... உன் கண்றாவிக்கு போலி முகவரி கொடுத்தா என்ன கொறைஞ்சிடப்போவுது???

said...

//அன்பு நண்பர் சுபைருக்கு தாங்க வசித்து வரும் இடம் துபாய் அல்ல,
அது அபுதாபி இதுபோல் போலி முகவரியோடு கடுதாசி போடாதீங்க.//

அவனவன் போலியா கடுதாசியே போடுறான்... உன் கண்றாவிக்கு போலி முகவரி கொடுத்தா என்ன கொறைஞ்சிடப்போவுது???

said...
This comment has been removed by the author.
said...

ஹாஹாஹா.... :)

தரையில் உருண்டு புரண்டு சிரிக்கிறது - ROFL :) :) :)