Monday, October 11, 2010

இது வேற ஆட்டோகிராப்!


நம்ம பயபுள்ளைங்க எதுல ஒத்துமையா இருக்குதோ இல்லீயோ ஒரு விசயத்துல இல்ல ஒன்னுக்கு விசயத்தில் ஒத்துமையா இருப்பாய்ங்க... ஸ்கூலுக்கு போகும் பொழுது தலையில் புத்தகமட்டைய மாட்டிக்கிட்டு எவனாவது ரோட்டு ஓரமா ஒன்னுக்கு அடிக்க ஆரம்பிச்சா எல்லோரும் பக்கத்துல பக்கத்துல நின்னுக்கிட்டு சொய்ங்ங்ங்ங்ன்னு பம்பு செட்டை திறந்துவிட்டு விடுவானுங்க...

அப்படி ஒருநாள் ஸ்கூலுக்கு போகும் பொழுது ஆரம்பிச்ச விளையாட்டுதான் ஒன்னுக்கு அடிக்கும் பொழுது நம்ம பேரை எழுதுவது...இந்த விளையாட்டும் படிப்படியா டெவலப் ஆனதுன்னு நினனக்கிறேன்... சும்மா ஒன்னுக்கு சொய்ங்ங்ன்னு அடிக்காம அதுல வட்டம் போடுவது, அலைகள் போடுவது, அப்புறம் எவன் முக்கி முக்கி ரொம்ப தூரம் ஒன்னுக்கு அடிக்கிறான் என்ற விளையாட்டுகளின் அடுத்த கட்டமாகதான் இந்த பேர் எழுதும் விளையாட்டு வந்துச்சு.


இந்த விளையாட்டு ஆரம்பச்சதிலிருந்து தண்ணிய நிறையா குடிச்சிட்டு ஒன்னுக்கு போகாம அடக்கி வெச்சிக்கிட்டு ஊட்டுக்கு போகும் பொழுது பேர் எழுத ஆரம்பிப்போம். இதுலயும் நான் ஜெயிக்க முடிஞ்சது இல்ல... ஏன்னா சரவணவேல் என்கிற பேரை எழுத ஆரம்பிச்சி "ண" வில் ரெண்டு சுழி முடிக்கங்காட்டியும் டேங் காலி ஆகிடும் முக்கி முக்கி அடிச்சாலும் "ண" வை தாண்ட முடிஞ்சது இல்ல. அப்புறம் பேரை சுருக்கி சரவணன் என்றும் முயற்சி செய்து பார்த்தேன் சுழி போடும் பொழுதே டேங் காலி ஆகிடும்...இதுல எப்பவும் ராமு தான் ஜெயிப்பான். எந்த பிரச்சினையும் இல்ல வெறும் கோடுதான் "மு" வுக்கு மட்டும் கொஞ்சம் கஷ்டப்படனும் ஆனா சித்திரமும் கைபழக்கம் என்பதுபோல் பழக பழக் வந்துவிடும்.


இதுல முக்கியமா ஒவ்வொரு எழுத்து எழுதி முடிச்சதும் தம் கட்டி பம்பு செட்டை நிறுத்தி நகர்ந்து நின்னுதான் அடுத்த எழுத்த எழுத ஆரம்பிக்கனும் இல்லாட்டி பேர் எழுதும் பொழுது எல்லா எழுத்தும் ஜாயிண்ட் ஆயிடும். அதும் நம்ப பேரை எழுதும் பொழுது "ன்"க்கு புள்ளி வைக்க தம் கட்டி "ன"வுக்கு மேல சரியா குறி பார்த்து புள்ளி வைக்கனும். இது எல்லாம் சரியா வராதுன்னு பேரை இங்கிலீஸில் எழுதலாம் என்று முடிவு செஞ்சு என் பேரை சுருக்கி SVEL ஆக்கிய பிறகுதான் போட்டியில் ஈசியா ஜெயிக்க முடிஞ்சுது. சில சமயம் பேரு எழுதும் பொழுது ஓவரா ஆட்டி பக்கதுல இருக்கவன் மேல எல்லாம் பட்டு விடும்... சண்டையில் கிழியாத சட்டை எங்கே கிடைக்கும் என்பது மாதிரி போட்டின்னு வந்துட்டா இது எல்லாம் சகஜம் என்று போய்க்கிட்டே இருக்கனும்.


அப்புறம் ஒன் டேவை 20 20 ஆக்கியது போல அப்புறம் போட்டிய வேற மாதிரி மாத்தினோம்... மண் சுவத்துல எவன் போர்சா அடிச்சி செங்கல் தெரியவைக்கிறான் என்று போட்டி வைக்க ஆரம்பிச்சோம்... போற வழியில் இருக்கும் மண்சுவத்து வீட்டு சந்தில் நின்னு சொய்ய்ய்ய்ய்ய்ங்ன்னு அடிச்சு யாரு பெருசா செங்கல் தெரிய வைக்கிறாங்கன்னு நடக்கும் போட்டிய ஒரு பத்து நாள் கூட நடத்த முடியாம போச்சு...வீட்டுக்கு சொந்தகாரன் பார்த்து கம்பு எடுத்து அடிக்க வந்ததில் ராமு கீழே விழுத்து முட்டி பேர்ந்து போச்சு அதிலிருந்து அந்த விளையாட்டு நிறுத்தப்பட்டுவிட்டது.


அப்புறம் செடியில் இருக்கும் பழுத்த இலைய குறிபார்த்து அடிப்பது, பாஸா பெயிலா பூ மேல குறிபார்த்து அடிப்பதுன்னு பலவகையில் இந்த விளையாட்டு டெவலப் ஆனது. சில சமயம் முக்கி முக்கி அடிக்கிறோம் என்ற விளையாட்டில் அந்த பக்கம் போற ஆளுங்க மேல பட்டு திட்டுவாங்கியதும் உண்டு.அப்புறம் குழிப்பறிச்சு அதுல அடிச்சு குட்டி குட்டி குளம் ஏற்படுத்தி அப்பவே நாங்க முன்னோடியா இருந்திருக்கோம் என்று நினைச்சுப்பார்க்கும் பொழுது ரொம்ப பெருமையா இருக்கு:)))

40 comments:

வயாமா said...

pathivu super!!!!!
ramba nala kadai thorakkave illa

Unknown said...

இன்னும் உங்க குழு தொடர்ந்து போட்டி போட்டுக்கிட்டு இருக்கீங்களா? முயற்சியா விட்றாதீங்கப்பு.

லொள்ளு. இதுல பழைய நினைப்புதான் பேராண்டினுட்டு.

Unknown said...

சின்ன பள்ளிகொடம் படிக்கிறப்ப இப்படி ஒன்னுக்கு அடிக்கிற போட்டி இருக்கே இன்னமும் நெனச்சு நெனச்சு சிரிக்க வைக்கும் ...

Thamira said...

டேய்.. என்னாடா பெருமை இது. சை.!

அப்பாலிக்கா இந்த பதிவச்சுத்தி அமோனியா மருந்தடிச்சு வையி. ஈ, கொசுவெல்லாம் வந்துரப்போவுது.! :-))

கோவி.கண்ணன் said...

//அப்புறம் குழிப்பறிச்சு அதுல அடிச்சு குட்டி குட்டி குளம் ஏற்படுத்தி அப்பவே நாங்க முன்னோடியா இருந்திருக்கோம் என்று நினைச்சுப்பார்க்கும் பொழுது ரொம்ப பெருமையா இருக்கு:)))//

சிறுநீர் சேமிப்புத்திட்டம் எங்க தொடக்கப்பள்ளி இடைவேளையின் போது நடக்கும் :)

Subramanian Vallinayagam said...

ha ha super

subramanian vallinayagam
Banagalore

சென்ஷி said...

மூத்திர நாத்தம் பினாயில் ஊத்து கழுவு மாப்பி :))))

Prathap Kumar S. said...

ஆகா... இது எல்லா ஊர்லயும் நடக்கற கதைதானா? :))

எங்க ஸ்கூலுக்கு வெளில ஸ்கூல் பேரு எழுதிருக்கற போர்டுல உச்சா அடிச்சு "பார்றா ஸ்கூல்லயே சுத்தம் பண்ணிட்டேன்னு" பஞ்ச் டயலாக்கு அடிச்ச ஞாபகம் வந்துடுச்சு...
டாங்க்ஸ் குசும்பா...

நட்புடன் ஜமால் said...

நெம்ப சுத்தமா இருக்குறேன்னுட்டு இதெல்லாம் விளையாடமலே வந்தேச்சே

ச்சே ‘ஒன்னுக்கு’ போச்சே ...

Anonymous said...

நாம நினைக்கிற நேரத்துக்கு வர்லைன்னா செம டென்சனாயிடும்

ஆயில்யன் said...

/////நினைச்சுப்பார்க்கும் பொழுது ரொம்ப பெருமையா இருக்கு:)))

//

உங்களை நெனைச்சா எனக்கு நொம்ப்ப்ப பெருமையா இருக்குண்ணே !

A’ட்டோ கிராப் - எழுதினதுக்கு ஊர்லேர்ந்து ஆட்டோ எடுத்துக்கிட்டு வந்து பாராட்டு மழை பொழியவைக்கப்போறாங்க உங்க ப்ரெண்ட்ஸ் :):)

அரபுத்தமிழன் said...

எல்லாத்துலயும் நீங்க நம்பர் 'ஒண்ணு'ன்னு நிரூபிச்சிட்டீங்க :)

அரபுத்தமிழன் said...

இந்தப் பதிவுக்குக்குத்தான் இத்தன நாளா 'தம்' கட்டினீங்களா ?

Jackiesekar said...

குசும்பா செமையான கொசுவர்த்தி... ஒரே ஒரு பூண்டு செடியில் தினமும் ஒன்னுக்கு அடித்து அதை கருகவைப்போம்... அதை மட்டும் மிஸ்சிங் மத்தபடி ரொம்பநாளைக்கு அப்புறம் பள்ளி நினைவுகள்..

அதே போல் பர்சனல் கடிதத்தையும் ரசித்தேன்..


நன்றிகள்..

Vidya Poshak said...

According to physicists in Singapore, they have created the first paper battery that generates electricity from urine.
They maintain that this innovative battery will be the ideal power source for cheap, disposable healthcare test-kits for diseases such as diabetes.

All around the world scientists in research groups are attempting to design even smaller "biochips" that can test for a variety of diseases at once, and give instant results; and of course, be mass produced cheaply.

Until now no one has been able to solve the problem of finding a power source as small and as cheap to produce as the detection technology itself.

However now Dr Ki Bang Lee, and a research team at Singapore’s Institute of Bioengineering and Nanotechnology (IBN) have developed a paper battery that is small, cheap to make, and which ingeniously uses the bio-fluid being tested (e.g. urine) as the power source for the device doing the testing.

உண்மைத்தமிழன் said...

ச்சீ.. ச்சீய்... அவனா நீயி..?

கொஞ்ச நாளா பயபுள்ளையை காணோமேன்னு தேடினேன்.. என்னமோ ஏதாச்சோன்னு.. அதுக்கு இப்படித்தான் திரும்பி வந்து நிக்கணுமா..?

ஊருக்கு வா.. கருப்பணசாமி கோவில்ல மந்திரிச்சு விடுறேன்..!

Assouma Belhaj said...

Shappaaa....
Bad Boysppaa.

Thanks im N-joy by this post keep rocking
http://funage16.blogspot.com/

அகல்விளக்கு said...

ஏங்க மாம்சு....

இன்னுமா முழுபேர் எழுத முயற்சி பண்ணிகிட்டு இருக்கீங்க...

எப்படியோ... சீக்கிரமா வெற்றியடைய வாழ்த்துக்கள்ங்க...!!

வால்பையன் said...

ஆணாதிக்கம் தெரியுதே

வால்பையன் said...

இது மட்டும் தானா, இன்னும் இருக்கா!?

Unknown said...

ஒரு மாசம் முன்னாடி சொல்லிருந்த காமன்வெல்த்ல இந்த விளையாட சேர்த்துருக்கலாம். ஒரு தங்கம் போச்சே

ரவிஷா said...

இதெல்லாம் சரி! கை கழுவிப்பீங்களா?

Anonymous said...

ம்ம்ம்!!! அப்புறம்???

http://kuwaittamils.blogspot.com/2010/10/blog-post_12.html

DR.K.S.BALASUBRAMANIAN said...

''சித்திரமும் கைபழக்கம்''
மூத்திரமும்...........! ஹா...ஹா.

விஜி said...

அசோகரு ரேஞ்சுக்கு அப்பவே குசும்பரு இருந்திருக்காக :))

முழுசும் படிச்சுட்டு வரேன்

விஜி said...

ஒரு மாசம் லீவு போட்டு இதைதான் யோசிச்சீங்களா? :))

cheena (சீனா) said...

ஹேய் குசும்பா

இப்படி எல்லாம் கொசு வத்தி சுத்தி - நெனெச்சுப் பாக்கணுமாடா பேராண்டி - நானும் சுத்திப்பாத்தேன் - அய்யே

நல்வாழ்த்துகள் குசும்பா
நட்புடன் சீனா

மயாதி said...

குசும்பு !

கார்க்கிபவா said...

உங்கள பார்த்து யாரும் “ஒண்ணுக்கும் லாயக்கில்லைடா”ன்னு சொல்லவே முடியாது சகா..

கார்க்கிபவா said...

ஒண்ணுக்குன்னுதான் எழுதணும்.. “ஒன்னுக்கு” தப்பு..

சிறுநீர் என்பதால் சின்ன “ன” போட்டிங்களா பாஸ்?

மின்னுது மின்னல் said...

இதுக்கும் முன்னாடி ஒரு கொசுவர்த்தியில் நர்ஸ் ”தூக்கி” ”தூக்கி” பார்த்ததே அதுக்கும் எதுவும் சம்பந்தம் இல்லையே :)))

a said...

ஹையோ ஹையோ ...

அப்துல்மாலிக் said...

சிட்டிலே வாழுகின்ற மக்கா இது மாதிரி விளையாட்டு விளையாட முடியுமா #டவுட்டு#

மங்களூர் சிவா said...

:)))))

வடுவூர் குமார் said...

ஹா!ஹா!
குளம் கட்டி தண்ணீர் பஞ்சம் தீர்த்து வைத்த மகா பேரரசே!! வாழ்க உன் கொற்றம்.

நாமக்கல் சிபி said...

:))

KKPSK said...

:)
என்னதான் இருந்தாலும், இவ்வளவு லோக்கலா..உங்க பதிவு!
(@jakie) :()

Arun Nadesh said...

எங்க தல ஜாக்கி பதிவில் உங்க பின்னூட்டங்கள் பாத்தேன். இதெல்லாம் நல்லதுக்கில்ல.ஆமா சொல்லிட்டேன். பின்னாடி வருத்தப்படக் கூடாது.

வெங்கடேஸ் குமார் said...

'ஒன்னுக்கு' நூறு தடவ சிரிச்சேன் ,,,

வெங்கடேஸ் குமார் said...

'ஒன்னுக்கு' நூறு தடவ சிரிச்சேன் ,,,