Sunday, July 18, 2010

உமாசங்கர் ஐ.ஏ.எஸ் -ஒரு நினைவு குறிப்பு


http://www.vinavu.com/2010/07/17/uma-shankar-ias/
நேற்று வினவின் இந்த போஸ்டை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தேன், தமிழ்மண நட்சத்திர வாரத்தில் கூட உமாசங்கரை பற்றி எழுதவேண்டும் என்று இருந்தேன் ஆனால் முடியாமல் போய்விட்டது.

"உமாசங்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டார் என்று தமிழக அரசால் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக்கு ஆளானார். அவர் மீது நடவடிக்கையும், விசாரணையும் ஏவிவிடப்பட்டது. தற்போது இதற்கு எதிராக உமாசங்கர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றிருக்கிறார். அதில்தான் அரசு கேபிள் டி.விக்காக தான் பரிந்துரைத்த விடயங்களுக்காக பழி வாங்கப்படுவதாக தெரிவித்திருக்கிறார்." இதுதான் உமா சங்கருக்கு பிரச்சினை.

உமாசங்கர் அதிமுக ஆட்சியின் சுடுகாட்டு கொட்டகை ஊழலை அம்பலபடுத்தியவர், இதற்காகவே பந்தாடப்பட்டவர். பின் ஆட்சி மாறியதும் கலைஞர் தன் சொந்த ஊரான திருவாரூர் மாவட்ட கலெக்டராக நியமித்து அழகு பார்த்தார், அதுவரை வேறு ஏதோ டம்மி போஸ்டிங்கில் இருந்தார். இவரை போல் எங்கள் ஊர் மக்கள் இன்று வரை ஒரு கலெக்டரை பார்த்தது இல்லை.


திருவாரூர் அருகே இருக்கும் குடவாசல் தாலுக்காவை சேர்ந்த திப்பணம்பேட்டை தான் சொந்த ஊர். எங்கள் பகுதி மக்களிடம்
தன்னோட செயல்பாடுகளால் மனதில் நீங்கா இடம்பிடித்தார். திருவாரூரில் ஒரு படம் 10 நாள் ஓடியது என்றால் அது மற்ற ஊர்களில் சூப்பர் டூப்பர் ஹிட் என்று அர்த்தம், அங்கிருக்கும் தைலமை, நடேஷ்,சோழா தியேட்டர்களில் அப்பொழுது அவர்கள் படம் ரிலீஸ் ஆகும் பொழுது வைத்ததுதான் விலை, அதில் ஒரு வசதி எல்லா டிக்கெட்டும் ஒரே விலைதான். எங்கு இடம் கிடைக்குதோ அங்கு சென்று உட்காந்துவிடலாம். விலை அதிகமாக விற்பதை நிறுத்த சொல்லி பார்த்தார் உமாசங்கர், தியேட்டர் அதிபர்கள் கேட்கவில்லை, ஒரு நாள் விஜயகாந்த் படம் ரிலீஸ் என்று நினைக்கிறேன்.. மாறுவேடத்தில் சென்றார் டிக்கெட் வாங்கிய கையோடு விலை அதிகம் விற்ற குற்றத்துக்காக தைலமை தியேட்டரை பூட்டி சீல் வைத்தார். திருவாரூரே அதிர்ந்தது புதுபடம் ரிலீஸின் பொழுது தியேட்டரை சீல் வைப்பதா என்றும் அனைத்து தியேட்டர் நிர்வாகிகளும் சேர்ந்து தியேட்டரை மூடிவிட்டு ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டினார்கள், உமாசங்கரை மாற்று என்று. அடுத்த சில தினங்களில் உமா சங்கரை மாத்த கூடாது என்று சங்கருக்கு ஆதரவாக போஸ்டர்கள்.


குடவாசல் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் குடவாசலில் வசிப்பவர் அங்கேயே அவருடைய கிளினிக் வெச்சிருந்தார், அருகில் இருக்கும் அரசு ஆஸ்பத்திரிக்கு கையெழுத்து போட போவதோடு சரி, யாரையும் கவனிப்பது இல்லை புகார் சென்றது உமா சங்கருக்கு, ஒரு நாள் காலை அய்யா வயிறு வலி என்று கைலி துண்டோடு அரசு ஆஸ்பத்திரியில் நின்றார், டாக்டர் அங்கு இல்லை, டாக்டர் வீட்டுக்கு சென்று கூப்பிட்டார் டாக்டர் இங்கேயே வைத்தியம் பார்த்துக்க சொன்னார், அதே இடத்தில் டாக்டருக்கு சஸ்பெண்ட் உத்தரவு வழக்கிவிட்டு முதல்வன் அர்ஜூன் ஸ்டைலில் சென்றார் கைலி துண்டோடு வந்திருந்த உமாசங்கர்.

இப்படி மாறுவேடத்தில் பல இடங்களுக்கு சென்று திருவாரூர் மக்களுக்கு பல நன்மைகள் செய்தார், திருவாரூர் மக்களுக்கு இருக்கும் கெட்ட பழக்கங்களில் ஒன்று வைக்கோலை ரோட்டில் காயப்போடுவது, போகும் வரும் பஸ் அதில் ஏறி போர் அடித்த மாதிரி ஆகிடும் ஆகவே அப்படி போடுவார்கள், பல பஸ்,லாரிகளில் வைக்கோல் சிக்கி பாதி வழியில் நின்று விடுவதாலும், அதனால் விபத்துகள் ஏற்பட்டதாலும் ரோட்டில் இனி அப்படி ஏதும் காயப்போடக்கூடாது என்று அப்படி போட்டால் அபராதம் என்று ரூல்ஸ் போட்டார். பெரும்பான்மையானோர் கேட்டார்கள். அது உமாசங்கர் என்ற ஒரு நல்லவர் சொன்னார் என்ற ஒரே காரணத்துக்காக.

உமாசங்கர் கலெக்ட்டராக இருந்த சமயம் திருவாரூர் பகுதியில் பல நல திட்டங்களை செய்தார் அவை அனைத்தும் முதல்வன் பட அர்ஜுன் செயல்பாடுகள் மாதிரியே இருக்கும்(படம் அப்பொழுது ரிலீஸ் ஆகவில்லை), கலெக்டருக்கு தனி அலுவலகம் வர ஏற்பாடு செய்ததும் அவர்தான் என்று நினைவு அதை முன் மாதிரியாக வைத்துதான் அனைத்து கலெக்ட்டர் அலுவலங்களும் மாறின. ஒவ்வொரு வாரமும் மக்கள் குறை கேட்கும் நாள், அடுத்த ஒருவாரத்துக்குள் அந்த குறை நிறைவேற்றப்படும். யாராலும் எளிதில் சந்திக்ககூடிய கலெக்டராக இருந்தார்.

12வது வகுப்பிலும் கல்லூரியிலும் என்றோ செத்துபோன போர்ட்டான், பேசிக் கம்பியூட்டர் பாட திட்டங்களை மாற்றனும் என்றும் கோரிக்கை வைத்தார். ஏழை மாணவர்களுக்கு மேற்கல்வி படிக்க பல சலுகைகள் வாங்கி தந்தார். அன்றைய தேதியில் ஏதும் ஒரு குறை என்றால் உமாசங்கரிடம் மனு கொடுத்தால் போதும் அது நிறைவேறிவிடும் என்று மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தார். திருவாரூரில் இருந்து மாற்றல் ஆக கூடாது என்று மக்கள் சார்பாக பல போராட்டங்கள் நடந்தது.

உமாசங்கருக்கு அன்று அ.தி.மு.க ஊழலுக்கு பதில் இன்று தி.மு.கவின் ஊழல்,ஆட்சிதான் வேற ஆனால் நல்ல மனிதரும் ஊழலும் அப்படியேதான் இருக்கிறது.

எத்தனை தடைகள் வந்தாலும் அதில் இருந்து மீண்டுவரவேண்டும்.

43 comments:

said...

thanks , newer news for us about Udayachandiran sir

said...

நானும் அவரைப் பற்றி கேள்விபட்டு இருக்கிறேன்.

நம்மள மாதிரி நல்லவங்களுக்குத்தான் எத்தனை சோதனை.

said...

3

said...

//சி.வேல் said...
thanks , newer news for us about Udayachandiran sir
//

உதயசந்திரன் இல்லீங்கோ அவரு உமாசங்கர்

said...

குசும்பா ,
இது போல் நிறைய பேர் இருக்கிறார்கள்..,Mr.GAGAN DEEP SINGH BEDI ,Mr.RADHAKRISHNAN,Mr.IRAYAIANBU,Mr.UDHAYACHANDRAN...இவர்கள் எல்லாம் இபோழுது எங்கே என்று தெரியவில்லை ....குட் போஸ்ட் Mr.குசும்பா

said...

நல்ல ஞாபக சக்தி உங்களிடம் இருக்கிறது.

said...

அன்பின் குசும்பா

உண்மை - நல்லவர்கள் உயர் பதவிகளில் இருப்பது நாட்டுக்கு நல்லது.

நல்வாழ்த்துகள் இனியன் மற்றும் குசும்பன்
நட்புடன் சீனா

said...

நல்லதொரு பதிவு. இவரைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். இது போல நல்ல அதிகாரிகள் பந்தாடப்படுவதுதான் மிகவும் வேதனை.

said...

உமா சங்கர் குறித்து நான் எழுதிய ஒரு பதிவு
http://www.maraneri.com/2008/06/ias.html

ரொம்ப சிம்பிள் ஆன ஆளு மச்சி. நல்லவய்ங்களுக்கு தான் காலமே இல்லைல.

Anonymous said...

கோவைல கூட நிரஞ்சன் மார்டி ன்னு ஒரு கமிஷனர் கார்ப்பரேஷன் இருந்தார் 80கள்ல. தூக்கி எங்கியோ போட்டுட்டாங்க

said...

மாநில‌ தேர்த‌ல் எப்ப‌ வ‌ருது???
ந‌ம்ம‌ கையில‌ அது ம‌ட்டும் தான் இருக்கு.

said...

நல்லா எழுதியிருக்கீங்க.அரசியல் கழிசடைகளை அகற்றுவதற்கும்,பின் தள்ளுவதற்கும் இந்த மாதிரி அறிமுகங்கள்,ஆக்கபூர்வமானவர்களின் பிரபலம் அவசியம்.வாழ்த்துக்கள்.

said...

எங்க ஊருல பர்ஸ்ட்டு சப்-கலெக்டரா இருந்தவரு பாஸ் ஹீரோ ரேஞ்சுக்கு ஊரே கொண்டாடினுச்சு

சப்-கலெக்ட்ரன்னா எவ்ளோ பவர் இருக்குன்னு தன் அதிரடி நடவடிக்கைகளால் காமிச்சவரு!

நல்லவங்களுக்கு நிறைய கொடுப்பான் ஆனா கைவிடமாட்டான் பாஸ் நல்லதே நடக்கும் !

said...

அவரை குறித்து ஒரு குற்றச்சாட்டு ஒரு பதிவில் படித்தேன், அது குறித்து உங்கள் கருது என்ன;

அவர் குடும்பத்தில் அனைவரும் கிறித்துவ மதத்தை பின்பற்றுவர்கள் (அவர் பெற்றோர், சகோதரர்கள்) , சான்றிதழ்களில் கிறித்துவ மதம் என்றே உள்ளது, அனால் இவர் மட்டும் ஹிந்து தாழ்த்தப்பட சாதியினர் பிரிவின் கீழ் கலூரி இடம், இந்திய ஆட்சி மன்ற தேர்வில் இடம் போன்றவை பெற்று தான் இந்த பதவிக்கு வந்துள்ளார் என்று.

இது உண்மையா அல்லது வதந்தியா.

said...

இப்பொழுது நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்.. நேர்மையாக இருக்கும் ஒரு மனிதன், அரசு கொடுக்கும் எட்டணா கூலியை வைத்து கொண்டு, அரச குடும்பங்களையும் எதிர்க்க வேண்டும், அவனது வாழ்க்கையயும் ஓட்ட வேண்டும் என்றால்..முடிவில்லாத இந்த நீண்ட பயணம் ஒரு சலிப்பை தராதா?

said...

மறந்துவிட்டேன்..பகிர்வுக்கு நன்றி

said...

//ராம்ஜி_யாஹூ said...
அவரை குறித்து ஒரு குற்றச்சாட்டு ஒரு பதிவில் படித்தேன், அது குறித்து உங்கள் கருது என்ன;

அவர் குடும்பத்தில் அனைவரும் கிறித்துவ மதத்தை பின்பற்றுவர்கள் (அவர் பெற்றோர், சகோதரர்கள்) , சான்றிதழ்களில் கிறித்துவ மதம் என்றே உள்ளது, அனால் இவர் மட்டும் ஹிந்து தாழ்த்தப்பட சாதியினர் பிரிவின் கீழ் கலூரி இடம், இந்திய ஆட்சி மன்ற தேர்வில் இடம் போன்றவை பெற்று தான் இந்த பதவிக்கு வந்துள்ளார் என்று.//

எனக்குத் தெரிந்து பல அரசு அதிகாரிகள்/அலுவலர்கள் அப்படித் தான் செயல்பட்டு வருகிறார்கள். ஆனால், ரிஷிமூலம், நதிமூலம் பார்க்க கூடாது என்பது போல், உமாசங்கர் அவர்களின் சீரிய பணிகளை நேரில் கண்டவன் என்ற முறையில் நான் அவரை நிறையவே வாழ்த்துகிறேன்.

@ குசும்பன் - உண்மையாக உழைப்பவருக்கு பல அரசுகள் இப்படித்தான் சோதனை தருகின்றன :(

said...

மிக நல்ல பகிர்வு குசும்பன்.

நேர்மையான அதிகாரிகள் பந்தாடப்படுவது வேதனையளிக்கிறது. இந்தக் குற்றச்சாட்டிலிருந்து திரு.உமா சங்கர் நிச்சயம் மீண்டு வருவார்.

said...

சி.வேல் இவர் பெயர் உமாசங்கர்

நான் தமிழன் நன்றி

நன்றி பனங்காட்டு நரி

நன்றி அமைதி அப்பா

நன்றி சீனா

நன்றி மஞ்சூரார்

நன்றி சோசப்பு

நன்றி சின்ன அம்மிணி

நன்றி வடுவூர் குமார் அண்ணாச்சி,
இந்த முறை இலவச டீவிடி பிளேயர்
கொடுத்தா பிரச்சினை முடிஞ்சிடபோவுது:))

நன்றி ராஜ நடராஜன்

நன்றி ஆயில் புது தகவல்

நன்றி ராம்ஜி யாஹூ, அவரை பற்றிய
குற்றச்சாட்டு வருமானத்துக்கு அதிகமா
சொத்து சேர்த்தது என்பதுதான்:) இந்த
ஜாதி மதம் எல்லாம் அவரோட கொள்கை
சார்ந்த விசயம் அவருக்கு பிடித்ததில் இருந்துட்டு போகட்டுமே நமக்கு என்ன?

நன்றி ராகின்

நன்றி பெயர் சொல்ல விரும்பமில்லை

said...

அடடே நீங்க நம்ம ஊரா?

இவர் எல்காட் நிறுவன தலைவராக இருந்த போது தான், சென்னை, சிறுசேரி "சிப்காட் ஐடி பார்க்" கட்டப் பட்டுள்ளது.

தற்போது, தகவல் தொழில்நுட்ப சாலை என்று அழைக்கப்படும், பழைய மகாபலிபுரம் சாலையை அழகுபடுத்தியது இவரின் சீரிய முயற்சி!

எல்லாம் சோதனை..

said...

ஒரு முறை ஒரு எம் எல் ஏ ஒரு அதிகாரியைக் கடுமையாகப் பேசினார்.
உடனே முதல்வர் " தம்பி! அதிகாரிகளிடம் மரியாதையாகப் பேச வேண்டும்! அவர் நினைத்தால் எம் எல் ஏ ஆகிவிட முடியும்! நீ தலைகீழாக முயன்றாலும் ஐ ஏ எஸ் ஆக முடியாது " என்றார்.
அவர் அறிஞர் அண்ணா !
அதிகாரிகள் அவர்கள் மரியாதையை அவர்களாகவே கெடுத்துக் கொண்டார்கள், பல வழிகளில்.

said...

நல்லதுக்கு காலமில்லை.

(லிங்க் கொடுத்ததோடு மட்டுமில்லாமல். கடைசியில் அவரின் தற்போதையை பிரச்சனையும் சொல்லியிருந்தால் அதன் தாக்கம் நன்றாக இருக்கும்)

said...

இவர் எல்காட் இல் இருக்கும் பொது மாணவர்களுக்கு என்று ஒரு திட்டத்தின் மூலம் லேப்டாப் சந்தையில் கிடைக்கும் விலையைவிட குறைவாக கொடுத்தார்கள்.மேலும் அரவாணிகளுக்கு கணினி பயிற்சி அளித்தனர்.ஓபன் source லினக்ஸ் பயிற்சி கூட கொடுத்தனர்...

said...

என்னை மிகவும் கவர்ந்த கலக்டர் திருவாரூர் கலக்டர் உமா சங்கர். அவரை பற்றி வணக்கம் தமிழகத்தில் பார்த்த போது தான் தெரிந்து கொண்டேன். இதைப் போன்ற கலக்டர்கள் எல்லா ஊருக்கும் வர வேண்டும் என்று ஆசை கொள்வேன். அன்று என் அப்பா வாங்கும் குமுதத்தில் வந்த அவருடைய பேட்டியை ஒரு வரி விடாமல் படித்தேன். என் நண்பர்களிடத்தில் உமா சங்கரை பற்றி சொல்லி மாறு வேடத்தில் வந்து பல இடங்களில் ஆப்பு வைக்கிறார் என்று பெருமையாக சொல்வேன். ஆனால் அவர் திருவாரூரில் இருந்ததால் தான் இவ்வளவும்செய்ய முடிந்தது என்று ஒரு செய்தி என் காதில் விலவே எல்லாம் அன்று இருந்த கலைஞர் கொடுத்த தெம்பில் தான் என்று புரிந்து கொண்டேன். திருவாரூக்கு போஸ்டிங்க் போட்ட உடனே உமா சங்கர் போட்ட முதல் சட்டம், நான் திருவாரூரை முதல் மாவட்டமாக கொண்டு வருகிறேன்,ஆனால் அதில் எந்த அரசியல் தலயீடும் இருக்க கூடாது, அதைப் போல் என்னை வேறு பகுதிக்கு மாற்றக் கூடாது என்று உரிமையை கலைஞரிடம் பெற்ற பிறகே இத்தனை நடவடிக்கைகளையும் எடுக்க முடிந்தது. அதிலும் ஒரு ஆதிக்க சக்தி துணை கொண்டு தான் செயல்படுத்த முடியும் என்று மீண்டும் ஜனநாயகம் நிரூபித்து இருக்கிறது.

said...

மாணவர்களுக்காக மடிக்கணினிகளை கொள்முதல் செய்யும் சமயத்தில் ஒருமுறை எல்காட் அலுவலகம் சென்றிருந்தேன். Dell, Acer, IBM போன்ற பல்வேறு நிறுவனங்களில் இருந்து Sales Executives வந்திருந்தார்கள்.

ஒவ்வொருவரையும் தங்கள் நிறுவன லேப்டாப்பின் மேல் ஏறி நடக்கச் சொல்லி வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். இவர் கேட்கும் features அவர்களின் எந்த மாடலிலும் இருக்காது. இருந்தாலும் அதிகமாக கொள்முதல் செய்ய இருப்பதால், இதையெல்லாம் சேருங்களேன் என்பார். அலறுவார்கள்! ஆனால், விட மாட்டார். தனது பணியையும், அதன் வலிமையையும் அந்தளவுக்கு நேசிப்பவர்.

பொது மக்களின் பணம் ஒரு பைசாக் கூட விரயம் ஆகி விடக்கூடாது என்று அவர் எடுத்துக்கொண்ட அக்கறை, காய்கறிக் கடையில் அக்கறையுடன் நல்ல காய்கறிகளை தேர்ந்தெடுத்து அதை பேரம் பேசி வாங்கும் நமது வீட்டு தாய்மார்கள் நடந்து கொள்வதைவிடத் தீவிரமானது.

இப்பொழுது நான் கலந்துகொண்ட செம்மொழி மாநாட்டிலும் எல்காட்டின் பங்கு மிக முக்கியமாக பேசப்பட்டது.

அப்போது எல்காட்டைச் சேர்ந்த அதிகாரிகளுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அவர்கள் உமாசங்கரைத் தான் இன்னும் தனது ஆதர்ச வழிகாட்டியாகக் கருதுவதாக தெரிவித்தார்கள். ஆனால், அவர்தான் இதுவரை இவர்களை அதிகமாக வேலை வாங்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரியுமாம். அப்படியிருந்தும் அவர்தான் இவர்களுக்கு ஹீரோ.

ஆட்சிகள் மாறும். காட்சிகளும் மாறும். எதற்கும் பங்கம் வராது.

We will wait for Umashankar’s turn soon.

said...
This comment has been removed by the author.
said...

சிறப்பானதொரு பகிர்வு. மனதில் நிற்கும். ஆனால் இப்படி ஒரு செய்தியை முன்வைத்து எழுதப்படும் இடுகைகளில் அந்தச்செய்திகளின் சுருக்கத்தையும் சொல்லிவிட்டீர்களானால் புரிதலுக்கு வசதியாக இருக்கும். ஆங்காங்கே தேடியலைய வேண்டாம்.

said...

உமா சங்கர் போல பத்து பேர் நாட்டுல இருந்தா நாடு முன்னேறும், பொம்பள கருணாநிதி ஜெயலலிதாவும், ஆம்பள ஜெயாலலிதா கருணாநிதி யும் இந்த நாட்டுல இருந்தா நாடே சீரழியவே செய்யும். என்ன பண்ணுறது சிரங்கு வந்துரிச்சு சொரிஞ்சு தானே ஆவணும்.

said...

நாமக்கல் கலெக்டர் தேவசகாயம் கூட ரொம்ப நல்லவருன்னு கேள்வி !! நிறைய அதிரடி ஆக்ஷன் எடுக்கறார் போல !!

said...

உமாசங்கர் சந்திக்கும் அரசியல் பிரச்சனைகளை ஒரு முறை நாளேடு ஒன்றில் படித்தேன்.
நல்லவர்களுக்கு காலம் இல்லை என்று இருந்து விடக்கூடாது. அவர்களுடன் துணை நிற்கவேண்டும்.

said...

Yes.He is a man of action with excellent.I heard a lot of good things about him!But as usual the politicians are stronger than Mr.Uma shankar.what to do? we have to understand that we are living in Tamilnadu! and not CANADA!

said...

இன்னும் ஒரு செய்தி...2000ம் ஆண்டு மத்தியில் தமிழகத்தில் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையின் வடிவமைப்பில் அவருக்கு பெரும் பங்கு உண்டு. இது சம்பந்தமாக அவருடன் நான் ஒருநாள் திருவாரூரில் அமர்ந்திருக்கிறேன். அவரைப்போலவே மிகவும் நேர்மையான இன்னும் ஒரு கலெக்டர் இருந்தார்..இப்போது எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை..அவர் .சந்திரகாந்த்.பி.காம்ப்ளே. (இருவரும் ஒரே பேட்ச் என்று சொன்னார்)

said...

//இப்படி ஒரு செய்தியை முன்வைத்து எழுதப்படும் இடுகைகளில் அந்தச்செய்திகளின் சுருக்கத்தையும் சொல்லிவிட்டீர்களானால் புரிதலுக்கு வசதியாக இருக்கும். ஆங்காங்கே தேடியலைய வேண்டாம்///

ஆதி

இது குசும்பன் பதிவு. உ.த. பதிவு இல்ல‌
நல்லா கேக்குறீங்க டீடெய்லு

Anonymous said...

நெகிழ்ச்சியான பதிவு.உண்மைக்கு உயிர் கிடைக்கட்டும்

Anonymous said...

நெகிழ்ச்சியான பதிவு.உண்மைக்கு உயிர் கிடைக்கட்டும்

said...

மக்களுக்காக உண்மையாக உழைக்கும் அதிகாரிகளை பாராட்ட வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். இதோடு இந்த கடமை முடிந்துவிடவில்லை. மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு எதிராக நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதுதான் இப்போது நம்முன் உள்ள வினா?

தேர்தலின்போது வேட்பாளர்களிடம் கைநீட்டி பணம் வாங்கும் வாக்காளர்கள் இதற்காக என்னசெய்து விடப்போகிறார்கள்? என்ன ஆணவமே ஆட்சியாளர்களை ஆட்டம்போடவைக்கிறது.

said...

தேவையான நேரத்தில், அவசியமான பகிர்வு

||newer news for us about Udayachandiran sir||

உதயச்சந்திரனும் நிகரான அதிகாரிதான், இரண்டு மாவட்டங்களிலும் மிகமிக குறுகியகாலமே பணியாற்ற அனுமதிக்கப்பட்டார்

said...

நீங்கள் வடிவேலுக்கு நன்றி சொல்ல வேண்டும். இது போன்ற பல நல்ல பதிவுகளை இணைத்து
அணைவரைக்கும் செல்லும் அளவிற்கு உழைத்துக் கொண்டுருக்கிறார்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள கைலி கட்டிக்கொண்டு அவர் செய்த சேவைகள் அப்பொழுதே நண்பர்கள்
பலரும் வந்து சொன்னார்கள். இதைப் போலவே கூட்டிறவு பால் அங்காடியில் நடந்த
ஊழலை அதிகாலை வேளையில் சாலையில் அமர்ந்து குறிப்பிட்ட நபருக்காக காத்து இருந்து
கண்டுபிடித்த ஒரு கதையும் உண்டு. பார்த்த நபரே இங்கு வந்து பகிர்ந்து கொண்டு ஆச்சரியப்
பட்டார்.

இன்றுவரையிலும் தீராத ஆச்சரியம். பத்திரிக்கைகளுக்கு அரசாங்கத்தால் எத்தனையோ நிர்ப்பந்தம்
இருக்கலாம். ஆனால் இது போன்ற விசயங்களுக்குப் பின்னாலும் முன்னாலும் உள்ள விடங்களை
ஏன் கண்டும் காணாமல் இருக்கிறார்கள் என்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது.

பதிவுலகம் ஒன்று இல்லாவிட்டால் இது கூட மறக்கப்பட்ட விசயமாகத்தான் இருக்கும்.

தெளிவான நடை. உங்கள் உழைப்புக்கும் அக்கறைக்கும் நன்றி.

said...

// ஒரு ஆதிக்க சக்தி துணை கொண்டு தான் செயல்படுத்த முடியும் என்று மீண்டும் ஜனநாயகம் நிரூபித்து இருக்கிறது.//

அபு ஒரேஅடியா அப்படி சொல்லமுடியாதுங்க
இப்போ இருக்க நம்ம நாமக்கல் கலக்டர் சகாயம்.அவர் சாதனைகள் பத்தி தெரியும் தானங்க கலக்டர் ஆகும் முன்பே பெப்ஸி கம்பெனிக்கே சீல் வெச்சவர்

// உதயச்சந்திரனும் நிகரான அதிகாரிதான், இரண்டு மாவட்டங்களிலும் மிகமிக குறுகியகாலமே பணியாற்ற அனுமதிக்கப்பட்டார் //

இவர மாத்துன ஆள் இப்போ காணம போயிட்டார் :-))

said...

முஹம்மது ஹிஷாம்
உமா சங்கர் உண்மையில் நேர்மையான அதிகாரி மயிலாடுதுறையில் சப் கலக்டர் ராக
இருந்த பொழுது தன்னுடைய நேர்மையான நடவடிக்கையால் எங்கள் பகுதி மக்களின்
மனதில் இடம்பிடித்தவர்.
அவர் மற்ற இடங்களுக்கு மாற்றல் ஆகி போனோலும் அவர் எங்கே இருக்கிறார் என்று
செய்தி தாள்களை பார்த்து கொள்வோம்

இதனை படிக்கும் பொழுது மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது.
இது போல நல்ல
அதிகாரிகளை ஊக்க படுத்தாமல் இந்த அரசியல் பன்னிகள் கேவலத்தான் படுத்துகின்றன.

முஹம்மது ஹிஷாம்

said...

நானும் அவருடைய நடவடிக்கைகளை நேரில் பார்த்துள்ளேன்.அவர் மயிலாடுதுறை சப்கலக்டராக இருந்த பொளுது எங்கள் ஊரில்(எலந்தங்குடி)கடைதெருவில் ஆக்கிரமிப்பை அகற்ருவதற்க்கு வந்தார் உள்ளுர் ஆட்கள் வேலை செய்வதர்க்கு தயங்கினார்கள் அவரே இறங்கி வேலைசெய்தார் பின்னர் ஆட்கள் வேலை செய்தார்கள்.

said...

நன்றி சாந்தப்பன் ஆமாங்க திருவாரூ பக்கம்.

நன்றி தமிழன், டயனோசரை படத்தில் பார்ப்பது
போல், இதுமாதிரி செய்திகளை காதால் தான்
கேட்டுக்க முடியும்.

நன்றி அக்பர் (மாற்றிவிட்டேன், சின்ன குறிப்பு கொடுத்து இருக்கிறேன்)

நன்றி தரிசு

நன்றி ராஜகிரி, ஆனந்தவிகடனில் ஒரு முறை பேட்டி வந்தது.

நன்றி நாகராஜன் நல்ல தகவல்.

நன்றி ஆதி, மாற்றிவிட்டேன்.

நன்றி பொற்கோ

நன்றி பிரதீபா

நன்றி கார்த்திக்

நன்றி sheik.mukthar

நன்றி சுரேகா, தாங்கள் சந்திக்காத ஆட்களே
இல்லை என்று நினைக்கிறேன். சூப்பர்.

நன்றி சிவகாசி மாப்பிள்ளை

நன்றி ஆர்.கே சதீஷ்குமார்

நன்றி seeprabagaran

நன்றி ஈரோடு கதிர்

நன்றி ஜோதிஜி, அது யார் வடிவேல்?
என்ன செய்கிறார்?

நன்றி கார்த்திக்

நன்றிLIYAKKATH

நன்றி haji mohamed

said...

உங்கள் ஆதரவை இதில் தெரிவியுங்கள்

PROTECT HONEST IAS OFFICER of INDIA and TAMILNADU

Campaign to save democracy and Justice for Umashankar IAS