Monday, October 15, 2007

பெண்ணீயம் பேசும் பெண்களே எங்க போனீங்க?

இயக்குனர் சாமி நடிகை பத்மபிரியாவை அடித்துவிட்டாராம், சரி என்ன இப்ப அதனால என்று நினைக்கிறீங்களா? எல்லோரும் அதை பற்றி பேசும் பொழுது

ஆ ஊன்னா பெண் விடுதலை பெண் அடிமை என்று கூச்சல் போடும் பெண்களும், நடிகைகளும் எங்கே போனாங்க? யார் அடிச்சா என்னா?
ஏன் அதை எதிர்த்து யாரும் குரல் கொடுக்கவில்லை?

யார் அடி வாங்கினா என்னா வாங்கா விட்டால் என்ன நம்மை யாரும் அடிக்காமல் இருந்தா சரி என்று நினைக்கும் பெண்களின் மனநிலையையே இது காட்டுவதாக எனக்கு தோன்றுகிறது. எங்கே இதுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் அடுத்த பட வாய்பு கிடைக்காமல் போய்விடுமோ என்கிற சுய நலம் ஒரு காரணமா?

நரி இடம் போனா என்னா வலம் போனா என்னா தன் மேல விழுந்து புடுங்காம இருந்தா சரி என்று நினைக்கும் மனோபாவம் தான் இதுக்கு காரணமா? அல்லது அவள் நடிகைதானே என்ற இளக்காரமா?

ஒரு போராட்டம் நடத்தி அடுத்தமுறை யாரவது அடிக்க கை ஓங்கும் பொழுது யோசிக்கும் படி செய்து இருக்க வேண்டாமா?

ஏன் ஏன் ஏன்?

டிஸ்கி: இந்த பதிவை குரு ஆசிப் அண்ணாச்சிக்கும் மோகன்தாஸுக்காகவும்!!!

25 comments:

said...

தலைவலி தனக்கு வராத வரையில் யாரும் அதைப் பற்றி கவலைபட மாட்டார்கள். ஆமாம் - ஏன் அடித்தாரென்று தெரியாமல் பேசலாமா

said...

cheena (சீனா) said...
தலைவலி தனக்கு வராத வரையில் யாரும் அதைப் பற்றி கவலைபட மாட்டார்கள். ஆமாம் - ஏன் அடித்தாரென்று தெரியாமல் பேசலாமா///

தங்கள் முதல் வருகைக்கு நன்றி..

ஒரு வயதுக்கு வந்த பெண்ணை அடிக்க அப்பாவே தயங்கும் பொழுது, பல பேர் முன்னாடி எப்படிங்க அடிக்கலாம்? காரணம் இருந்தால் அடித்தது நியாயம் ஆகுமா? சொல்லுங்க சீனா!!! இது நிஜமாக பெண்களுக்கு ஆதரவான போஸ்ட் அல்ல அவர்களின் சுயநலத்தை சொல்லவே!!!

said...

கம்பு கொடுத்து அடி வாங்க இன்னொரு ஆளு ரெடி சாமியோவ்!

said...

பினாத்தல் சுரேஷ் said...
கம்பு கொடுத்து அடி வாங்க இன்னொரு ஆளு ரெடி சாமியோவ்!///

டிஸ்கியில் ஒரு சின்ன திருத்தம் ஐடியா கொடுத்த பினாத்தலாருக்கு நன்றி...

திருத்திய பின் இப்படி வாசிக்கவும்:

டிஸ்கி: இந்த பதிவை குரு ஆசிப் அண்ணாச்சிக்கும் மோகன்தாஸுக்காகவும்!!!ஐடியா கொடுத்த பினாத்தலாருக்கு நன்றி...!!!

நாங்க எல்லாம் பிஸ் அடிக்கவே துனை இல்லாம போக மாட்டோம் அடி வாங்க மட்டும் தனியா போய்விடுவோமா? ஹி ஹி ஹி

said...

குசும்பா நான் டயர்டாகிட்டேன்.. ஜூஸ் தந்து என்னை எழுப்பி விட்டவும்.

said...

//
நாங்க எல்லாம் பிஸ் அடிக்கவே துனை இல்லாம போக மாட்டோம்
//
:-))))

said...

பூக்குட்டி said...
குசும்பா நான் டயர்டாகிட்டேன்.. ஜூஸ் தந்து என்னை எழுப்பி விட்டவும்.////

இந்தா பூக்குட்டி ஜூஸ் குடிச்சு விட்டு புலி குட்டி போல் புறப்"படு"

said...

குறைக்கிற நாய் கடிக்காது

Anonymous said...

பியூட்டி பாலருக்குத்தான். அதோ பாருங்க ! லேடீஸ் கிளப்பில வெட்டிப் பேசப் போறாங்க.

புள்ளிராஜா

said...

//இது நிஜமாக பெண்களுக்கு ஆதரவான போஸ்ட் அல்ல அவர்களின் சுயநலத்தை சொல்லவே!!!//

பத்மப்ரியாவுக்கு ஆதரவாகத் திரண்டு வராங்களோ இல்லியோ,
குசும்பனுக்கு எதிராகத் திரளப் போறாங்கப்பா! :-))

ஒரு பெண்ணை அடித்ததைக் கண்டிப்பது போல் கண்டித்து, ஒட்டு மொத்த பெண்களையும் 'சுயநலம்' என்று சொல்லால் அடித்த சுந்தரன், குசும்பன் பதிவுக்குச் சென்று போராடுவோம்! -னு ஒரு சவண்டு கேட்டுச்சே வீதியில்!

டிஸ்கியை இன்னொரு வாட்டி திருத்துங்க...குசும்பரே! :-)

said...

//"பெண்ணீயம் பேசும் பெண்களே எங்க போனீங்க?"//

அன்பு குசும்பனாருக்கு,

பல லட்சம் பணத்தை சம்பளமாக வாங்கிகொண்டு விளம்பரத்துக்காக சிறப்பாக நடித்துகாட்டிய பத்மபிரியா போன்றவர்களுக்கெல்லாம் எங்கள் போராட்ட தின்மையை வீண் அடிக்கமாட்டோம் எனவும், இப்பிடியாக பதிவு போட்டு பித்தளைகளில் பெரும்தலையாக உருவெடுக்க முயலும் உங்கள் பாசிச வேலைக்கு உதவி புரிய மாட்டோம்...."ன்னு ஏதாவது பின்னூட்டம் வந்தாலும் வரும்.... :)))
டிஸ்கியை எத்தனை தடவைதான் மாத்திக்கிட்டே இருக்க போறீங்களோ?? :))

said...

"kannabiran, RAVI SHANKAR (KRS) said...
///பத்மப்ரியாவுக்கு ஆதரவாகத் திரண்டு வராங்களோ இல்லியோ,
குசும்பனுக்கு எதிராகத் திரளப் போறாங்கப்பா! :-))///

வாங்க கண்ணபிரான் தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...சரி அதெல்லாம் இருக்கட்டும் எனக்கு எதிராக திரளப் போறாங்கப்பா என்று சொல்லிவிட்டு அப்படி என்னா உங்களுக்கு சந்தோசம், நீங்களுமா?
நல்லா இருங்க:))

***************
இராம்/Raam said...
//"பெண்ணீயம் பேசும் பெண்களே எங்க போனீங்க?"//
///பதிவு போட்டு பித்தளைகளில் பெரும்தலையாக உருவெடுக்க முயலும் உங்கள் பாசிச வேலைக்கு உதவி புரிய மாட்டோம்...."ன்னு ஏதாவது பின்னூட்டம் வந்தாலும் வரும்.... :)))///

ராம் இவ்வளோ சீக்கிரம் திருப்பி கொடுத்துவிடுவீங்கன்னு நினைக்கவில்லை!!!


ராம் மற்றும் கண்ணபிராணுக்காக: திருத்தபட்ட டிஸ்கி : பின்னூட்டம் மூலம் என்னை அடிவாங்க வைக்க முயற்ச்சிக்கும் நண்பர்கள் அனைவருக்கும்.

said...

தீபாவளி சமயம்ல துணி எடுக்க போய் இருப்பாங்க.. வந்துடுவாங்க இந்த மாதம் முடிவதற்குள் வந்த பின்ன இருக்குடி கச்சேரி.....

பட்டம் உறுதி... வெல்கம் டூ தி போர்ட்

said...

நாகை சிவா said...
//வந்த பின்ன இருக்குடி கச்சேரி.....///

கச்சேரியா? ஜாலி ஜாலி வசுந்துரா தாஸையும் கூப்பிடுங்களேன் ரொம்ப பிடிக்கும் அவுங்கள!!! முடிஞ்ச ஷகீராவையும் கூப்பிடுங்க கச்சேரி கலை கட்டும். என்ன நான் சொல்றது.

said...

குசும்பன்,

சமீபத்தில் ஒரு பேட்டியில் பத்மபிரியாவிடம் நிருபர்கள், ஒரு பெண்ணுக்கு எதிராக நடந்த இந்த விஷயத்திற்காக பெண்ணியம் மற்றும் பெண்கள் அமைப்புகள் உதவியைக் கேட்பீர்களா என்ற கேள்விக்கு.

இது ஒரு டைரக்டர் - நடிகை இடையேயான பிரச்சனை. இதை திசை திருப்பாதீர்கள் என்று கூறியிருந்தார் எங்க படிச்சேன்னு மறந்துடுச்சு - வயசாகுதோ?

மேட்டர் என்னான்னா அம்மணிக்கே பெண்ணிய அமைப்புக்கள் மீது நம்பிக்கை கிடையாது என்பது தான். அதனால நம்ம பப்பு இங்க வேகாதுன்னு பெண்ணீயம் பேசும் பெண்களும் மறைஞ்சிட்டாங்களாயிருக்கும்... ;)

Jokes apart, இராம் சொல்வதைப் போல எனக்கும் இது படத்தின் ப்ரமோஷனுக்காக பத்ம நடிகை கொடுத்த எக்ஸ்ட்ரா ஆக்டாகவே தெரிகிறது.

said...

எப்ப இருந்து சீரியசா ஆனீங்க?

said...

எனக்கு ஒரு ரகசிய தகவல் வந்தது. குசும்பன் உடம்பு முழுக்க இரும்பு தளவாடங்களால் மூடி இருப்பதாகா..

லொல்...லொல்..

said...

யோவ்...

ராதிகாவை பாரதிராஜா அடிச்சப்போ ஏன் பதிவு போடல...

:)

said...

மோகன்தாஸ் said...
குசும்பன்,

///Jokes apart, இராம் சொல்வதைப் போல எனக்கும் இது படத்தின் ப்ரமோஷனுக்காக பத்ம நடிகை கொடுத்த எக்ஸ்ட்ரா ஆக்டாகவே தெரிகிறது.///

ராம் என்னை கலாய்ச்சு இருக்காருங்க மோகன் தாஸ்:(((((

///////////////

பூக்குட்டி said...
எனக்கு ஒரு ரகசிய தகவல் வந்தது. குசும்பன் உடம்பு முழுக்க இரும்பு தளவாடங்களால் மூடி இருப்பதாகா..////

யாரு நானா அய்யோ அய்யோ எனக்குதான் அபி அப்பா இருக்காரே எங்க குரு அவரு மலை போல அவரதாண்டி யாரும் என்னை நெருங்க முடியாது...முடிஞ்சா மலைய உடைச்சிட்டு வர சொல்லுங்க பார்கலாம் யாராக இருந்தாலும்:)))

said...

சுகுணாதிவாகர் said...
எப்ப இருந்து சீரியசா ஆனீங்க?///

எப்ப நான் அய்யனார், கவிதாயினி பதிவை படிக்க ஆரம்பிச்சேனோ அப்பொழுதில் இருந்தே சீரியசாகதான் இருக்கேன்.:))))

said...

செந்தழல் ரவி said...
யோவ்...

ராதிகாவை பாரதிராஜா அடிச்சப்போ ஏன் பதிவு போடல...

:)///////////
யாரு அவரு? தி கிரேட் குட்டி காட்ஷில்லா மனோஜ் அப்பாவா?
அப்ப நான் அனானியா பதிவு போட்டேன் நீங்க படிக்கவில்லை:)))

said...

அடிச்சதுக்கு சாமி மன்னிப்பு கேட்டுட்டார்..அது சரி சாமி மேலயே பாலியல் புகார் சொன்ன பத்தமபிரியாவை என்ன செய்றது?

said...

சினிமா துறையில் இது போன்ற அவமானங்கள் பலப்பல. பத்மப்ரியாவுக்கு நேர்ந்து நமக்கு தெரிந்தது லட்சத்தில் ஒண்று. ஸ்டார் ஆட்டிஸ்டுகள் மற்ற கலைஞர்களை போட்டி மிதிப்பதும், மற்ற ஆர்டிஸ்டுகளும், சினிமா தொழிலாளர்களும் தினம் தினம் செத்து பிழைக்கிறார்கள். அவர்கள் பொறுமையாய் இருப்பதற்கு முதல் காரணம் வேறு வழியில்லை. இரண்டாவது அவர்களது பேச்சு எடுபடாது. மூன்றாவது மேலே வந்த பிறகு கவனித்துக் கொள்ளலாம் என்பதாகும்.

நான் ஒரு சில டி.வி. தொடர்களில் நடித்தேன். அதன் தாக்கத்தில் 'ஒரு வழிப்பாதை' என்ற சிறுகதையை கல்கியில் எழுதினேன். எனது வலைப்பூவில் (mrnatarajan.blogspot.com) உள்ளது.

பத்மப்ரியா அடி வாங்கியதை பற்றி பேசுகிறார்களே அவர் செய்த அலும்புகளை ஏன் யாரும் பேசவில்லை

said...

நிலவு நண்பன் said...
///அது சரி சாமி மேலயே பாலியல் புகார் சொன்ன பத்தமபிரியாவை என்ன செய்றது?///

நாம என்ன செய்யமுடியும்?:)))

said...

மெலட்டூர். இரா.நடராஜன் said...
சினிமா துறையில் இது போன்ற அவமானங்கள் பலப்பல. பத்மப்ரியாவுக்கு நேர்ந்து நமக்கு தெரிந்தது லட்சத்தில் ஒண்று. ///

நீங்கள் சொல்வது 100% உண்மை மெலட்டூர். இரா.நடராஜன். தங்கள் முதல் வருகைக்கு நன்றி.