Wednesday, October 24, 2007

டமார்ன்னு மனைவியின் மனதை கவர சில டிப்ஸ்

நேற்று G பதிவில் கும்மி அடிக்கும் பொழுது என் கமெண்டுக்கு பதில் சொல்லி இருந்த திவ்யா என்பவர்கள் லிங்கை கிளிக் செஞ்சா
சில உபயோகமான சில டிப்ஸ் கண்ணில் பட்டது. சரி நம்ம பையன் ஒருத்தன் கல்யாணம் செய்து கஷ்டபடுகிறான் டிப்ஸ் கொடுக்கலாம் என்று அவனிடம் போன் போட்டு எலேய் இன்னைக்கு ஒரு உனக்காக உருப்படியான ஒரு விசயம் பிளாக்கில் படிச்சேன் டா? திவ்யா என்ற பதிவர் அருமையாக எழுதி இருக்கிறார்கள் என்றேன்.

பிளாக்கிலா? ன்னு நக்கலாக கேட்டான்?

ஏன்னா அவனிடம் முன்பு அய்யனார் பதிவின் லிங்கை கொடுத்து படின்னு சொல்லி இருந்தேன் அந்த கோபம் அவனுக்கு என் மேல்

நான் சொல்வதால் அவன் நம்பவில்லை அவனிடம் எலேய் உன் மனைவி மனைதை கவருவது எப்படின்னு உனக்கு சில டிப்ஸ் கொடுக்கிறேன் அது போல் செய் எல்லாம் சரி ஆகிடும் என்றேன். அரை குறையான மனதோடு மண்டையை ஆட்டினான். அவனிடம் சொன்ன முதல் டிப்ஸ் திவ்யா அவர்கள் எழுதி இருந்தது

டிப்ஸ் -1:ஒரு மனைவி தான் பேசும் போது'உம்' கொட்டுவதோடு மட்டும் அல்லாமல், " ஓ! அப்படியா", " ஆஹா! இப்படியா?" என்று உரையாடலில் பங்கு பெறுங்கள். உங்களின் இந்த ஈடுபாடு உங்கள் மனைவியை உற்சாகமடைய செய்யும். உங்கள் மனைவின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள், மனைவி பெரிதும் எதிர்பார்க்கும் அங்கீகாரம் இது.

இத அவனிடம் சொன்னேன் அவனும் ஆமான் டா நான் பாட்டுக்கு எப்ப பார்த்தாலும் லேப் டாப் தட்டிக்கிட்டே உம் போடுவேன் திட்டிட்டு போய் விடுவா, நீ சொல்வதிலும் உண்மை இருக்கு அது போலவே செய்துவிடுகிறேன் என்றான்.

ஒரு 2 மணி நேரம் கழித்து போன் மச்சான் கை என் கை ஒடிஞ்சு போன மாதிரி வலிக்குது டா வந்து ஆஸ்பிட்டல் கூட்டிட்டு போடான்னு சொன்னான் என்னா விசயம் என்று விசாரிச்சா?

இனி ஓவர் டூ ஹோம்:

மனைவி: என்னங்க?

நண்பன்: உம் (சொன்னபிறகு நான் சொன்னது நினைவுக்கு வர லேப் டாப்பை மூடி விட்டு) என்னம்மா?

மனைவி: ஊரில் எங்க அப்பா பாத்ரூமில் குளிக்கும் பொழுது....

நண்பன்: ஓ! அப்படியா?

மனைவி: என்ன அப்படியா எங்க அப்பா குளிக்க மாட்டாரா? ரொம்ப ஆச்சர்யமா கேட்குறீங்க? கீழ விழுந்து கையை முறிச்சிக்கிட்டாராம்.

நண்பன்: (ரெண்டாவதா என்ன சொல்ல சொல்லி இருக்கான் .ம்ம்ம்ம்ம்)ஆஹா!இப்படியா?

மனைவி: இல்ல எப்படின்னு நான் காட்டுறேன்...

இதான் டா நடந்துச்சு என்றான் :)

டிப்ஸ்-2
பூ கொடுத்து 'ஐஸ்' வைக்கும் காலம் மலையேறி விட்டது.மனைவிக்கு அவர்கள் விரும்பும் பொருளை [ உதாரனம்-: புடவை, நகை, அலங்கார பொருட்கள்......] கணவன் தன் மனைவிக்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி ' சர்பரைஸ்' ஆக கொடுத்தால் பூரித்து போவார்கள். மனைவியின் மனதை கொள்ளையடிக்க இது ஒரு முக்கியமான யுக்தி!!!

இதை சொன்னேன் செஞ்சிட்டா போச்சு என்று குஜாலா சென்றான்.
கொஞ்ச நேரத்தில் போன் மச்சான் நீ என் நண்பனா? எதிரியா? ஏன் இப்படி அடி வாங்க விடுகிறாய் என்றான்.

இனி ஓவர் டூ ஹோம்:

நண்பன்: டென் டொடடய்ங் (சமையல் வேலையாக இருக்கும் மனைவியிடம்) மீயுஜிக்கோடு உள்ளே போய் இருக்கான்.

மனைவி: என்ன மீயுஜிக் எல்லாம் பலமாக இருக்கு!

நண்பன்: என் கையில் என்ன இருக்கு கண்டுபிடி என்று (பின்னாடி கையை ஒளிய வெச்சிட்டு).

மனைவி: விளையாடாம சொல்லுங்க.

நண்பன்: திரும்ப மியூஜிக்கோடு டன் டடன் என்று பின்னாடி ஓளிய வெச்சு இருந்த புடவையை காட்ட..

மனைவி: என்ன இது?

நண்பன்: புடவை

மனைவி: அது தெரியுது! பீரோவில் மடிச்சி வெச்சிருந்த புடவையை ஏன் இப்ப எடுத்து வந்தீங்க?

நண்பன்: நான் சொன்னதை சொல்ல............அம்மான்னு அவன் கத்தும் சவுண்ட் உங்க காதில் விழுதா?

டிப்ஸ்-3: செயற்கைதனமாக , மற்றும் ஒப்புக்காக வர்னிப்பது, பாராட்டுவது போன்றவற்றை மனைவி விரும்புவதில்லை, அதை எளிதில் கண்டும் பிடித்து விடுவார்கள்........ஜாக்கிரதை] அதனால் மனைவியை மனதார பாராட்டுங்கள், ரசித்து வர்னியுங்கள்..

மனைவி: என்னங்க இந்த மேக்கபில் எப்படி இருக்கேன்.?

நண்பன்: பொய் சொன்னா எளிதில் கண்டு பிடித்துவிடுவார்கள் என்று சொல்லி இருக்கான்... சோ உண்மையாகவே வர்னித்துவிடலாம்.
உனக்கு என்னம்மா பவுடர் பூசின பன்னி குட்டி மாதிரி இருக்க...
நண்பன்:....................

மச்சான் என்னை ஹாஸ்பிட்டலில் சேர்த்து இருக்காங்க வாடா துனைக்கு.

டேய் இருடா இன்னும் மூனு டிப்ஸ் இருக்கு என்று நான் சொன்னதும் போனை கட் செஞ்சுட்டான் அதன் பிறகு போன் செஞ்சாலும் சுவிச் ஆப் என்று வருது...

பி.கு: கல்யாணம் ஆகி மனைவியுடன் இருக்கும் ஒரே அமீரக பதிவர் லொடுக்குக்கு இந்த பதிவு சமர்பனம்.

50 comments:

Anonymous said...

"டமார்ன்னு மனைவியின் மனதை கவர சில டிப்ஸ்"
yaar manaiviyai kavarnnu sollaliyee? lol

said...

ஃபுல் ஃபார்ம் ல இருக்கீங்க போல. . . . ?

மேனேஜர் மனதை கவர்வதெப்படி (வேலை செய்யாமல்) ன்னு டிப்ஸ் கொடுத்தா உருப்படியா இருக்கும்.

said...

அய்யா ராசா! கட்டின உன் மனைவியை தான்!!!

said...

அடப்பாவி.. இப்படி ஒரு அபத்தமான பொய்!!!!!

said...

நாந்தானே உங்களுக்கு ஒவ்வொரு டிப்ஸா போன்ல படிச்சு சொன்னேன்.. நீங்கதான் ஒன்னொன்னுக்கும் அடி வாங்கிட்டு "அடுத்து என்ன பண்றது?"ன்னு கேட்டீங்க....

said...

கல்யாணம் ஆகி மனைவியுடன் இருக்கும் ஒரே அமீரக பதிவர் லொடுக்குக்கு இந்த பதிவு சமர்பனம்.
இந்த ஒரே மட்டும் கொஞ்சம் முன்னாடி போட்டிருந்தீங்கனா....லொடுக்கு உங்க வீடுக்கு ஒட்டகத்தோடு ஆளு அனுப்பியிருப்பார். :-))
புரியவில்லை என்றால் "ஒரே" வேறு இடத்தில் போட்டு பார்க்கவும். :-))

said...

ஆனால் கடைசி வரைக்கும் எனக்கு புரியாத மேட்டர் என்னன்னா, எதுக்கு நான் அடுத்த டிப்ஸ் சொல்லும்போது போனை கட் பண்ணீங்க. அதுக்கப்புறம் உங்களுக்கு கால் பண்ணும்போதெல்லாம் "The number you are calling is currently not available"ன்னு வந்த்துச்சே? அது ஏன்?

Anonymous said...

பி.கு: கல்யாணம் ஆகி மனைவியுடன் இருக்கும் ஒரே அமீரக பதிவர் லொடுக்குக்கு இந்த பதிவு சமர்பனம்//hello enna ithu???irunthalum rombathaan overu......daily yaraiyavathu kalaaikkalainna thookkam waruthillaiya?????

said...

மை ஃபிரண்ட் ::. said...
நாந்தானே உங்களுக்கு ஒவ்வொரு டிப்ஸா போன்ல படிச்சு சொன்னேன்.. நீங்கதான் ஒன்னொன்னுக்கும் அடி வாங்கிட்டு "அடுத்து என்ன பண்றது?"ன்னு கேட்டீங்க....//

நான் கட்டகாலி பையன்:( (எங்க சைட் அப்படி சொன்னா கல்யாணம் ஆகாதவன் என்று அர்த்தம்)

said...

நானும் படிச்சேன்.....

Anonymous said...

:)))

anna divya tips sarithaan.But ungakita irunthu tips kettu follow pannina ippadithaan aagum.ellam serkai seriyillainu unga friend kita solli ungala cut panna sollidanum

said...

jaseela said...
பி.கு: கல்யாணம் ஆகி மனைவியுடன் இருக்கும் ஒரே அமீரக பதிவர் லொடுக்குக்கு இந்த பதிவு சமர்பனம்//hello enna ithu???irunthalum rombathaan overu......daily yaraiyavathu kalaaikkalainna thookkam waruthillaiya?????////

சிஸ்டர் சும்மா லொலாங்காட்டிக்கும் இதில் அடி வாங்கிய நண்பர் லொடுக்கு என்று சொன்னால்தான் தப்பு, சமர்பனம்தானே செஞ்சு இருக்கேன். நான் போன் செஞ்சு பேசிய நண்பர் வேறு...இவர் வேறு:)

Anonymous said...

//நான் கட்டகாலி பையன்:( (எங்க சைட் அப்படி சொன்னா கல்யாணம் ஆகாதவன் என்று அர்த்தம்)
///


ahhh...neega kalyanam aagi 2 pullaingaluku appa nu veliye pesikitaangale.athu ellam poiya anna :D

said...

TBCD said...
நானும் படிச்சேன்.....//

நல்லா இருய்யா:)

வடுவூர் குமார் said...
///லொடுக்கு உங்க வீடுக்கு ஒட்டகத்தோடு ஆளு அனுப்பியிருப்பார். :-))
புரியவில்லை என்றால் "ஒரே" வேறு இடத்தில் போட்டு பார்க்கவும். :-))///

அய்யா இப்பவே அனுப்பிட்டாங்க அவுங்க வீட்டில் இருந்து:(

said...

.:: மை ஃபிரண்ட் ::. said...
/// கால் பண்ணும்போதெல்லாம் "The number you are calling is currently not available"ன்னு வந்த்துச்சே? அது ஏன்?///

பீஸை புடுங்கிட்டாங்க:)

said...

துர்கா|thurgah said...
:)))

anna divya tips sarithaan.But ungakita irunthu tips kettu follow pannina ippadithaan aagum.ellam serkai seriyillainu unga friend kita solli ungala cut panna sollidanum///


ahhh...neega kalyanam aagi 2 pullaingaluku appa nu veliye pesikitaangale.athu ellam poiya anna :D//

அண்ணா அண்ணான்னு சொல்லியே இப்படி ஆப்பு வெக்கிறீயேம்மா இது நியாயமா?

said...

\\நேற்று G பதிவில் கும்மி அடிக்கும் பொழுது என் கமெண்டுக்கு பதில் சொல்லி இருந்த திவ்யா\\\

அண்ணே ஏதே தெரியாம பதில் சொல்லிட்டாங்க...விட்டுடுங்க ;)

said...

காமெடி கீமெடி பண்ணுறதுக்கு இன்னிக்கு நானா???

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!

said...

வெங்கட்ராமன் said...
//மேனேஜர் மனதை கவர்வதெப்படி (வேலை செய்யாமல்) ன்னு டிப்ஸ் கொடுத்தா உருப்படியா இருக்கும்.///

சொல்லிடுவோம்:)

said...

//
மனைவி: என்ன இது?
நண்பன்: புடவை
மனைவி: அது தெரியுது! பீரோவில் மடிச்சி வெச்சிருந்த புடவையை ஏன் இப்ப எடுத்து வந்தீங்க?
//
எப்படிய்யா உன் நண்பர் உன்னைய மாதிரியே புத்திசாலியா இருக்கார்???
:-))

said...

thalai...
nalla comedy...

said...

Superunga :))

said...

மீதி மூன்று ஐடியாவை யாரிடமாவது டெஸ்ட் செஞ்சு அடுத்த பதிவு எழுதலாமே?
( எல்லாம் முன்னெச்சரிக்கை தான்)

said...

Super.....

Anonymous said...

yaar manaiviyai kavarnnu sollaliyee?

enna anony... romba expert toa

appadiyae nammalaiyum konjam yosithal ippadi bad comment poda maateerkal...kalyanam aakalaiyaa..
athuthan.. aana appuram theriyum
yaar manaiviyai entu...

actually, kusumbar is a good comedy writer..good gentleman..
avar blog la poy ippadi ellaam thappa elutha vendam..
Kanmani Teacher padithal..peramba edukkum...

said...

குசும்பர் மாமா,
எங்களுக்கு விளங்குது. அவசரமா உங்களுக்கு ஒரு மாமி தேவை எண்டு. முயற்சியை கைவிடாதீர்கள் எல்லாம் நல்லதே நடக்கும். வாழ்த்துக்கள். (சீக்கிரத்தில மாமா என்னொரு மச்சாளை தயார்ப்படுத்துங்கோ)

said...

கோபிநாத் said...
அண்ணே ஏதே தெரியாம பதில் சொல்லிட்டாங்க...விட்டுடுங்க ;)//

தம்பி சொன்னா சரிதான்!!!

***********
லொடுக்கு said...
காமெடி கீமெடி பண்ணுறதுக்கு இன்னிக்கு நானா???

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!////

எங்கங்க உங்கள வெச்சு காமெடி செஞ்சு இருக்கேன், சாமிக்கு படையல் என்று சாமி முன்னாடி வெக்கிறேம் அது என்னா சாமியா சாப்பிடுது, அது போல உங்களுக்கு என்று போட்டேன் அதனால் அந்த நண்பன் நீங்கள் ஆகிவிடுமா? நீங்க எம்புட்டு அப்பாவி, சிஸ்டர் எம்புட்டு நல்லவங்க. உங்கள போய் கிண்டல் செய்வேனா?:(

******************

மங்களூர் சிவா said...

//
எப்படிய்யா உன் நண்பர் உன்னைய மாதிரியே புத்திசாலியா இருக்கார்???
:-))///

என்ன நண்பா சொல்லீங்க? சரியா புரியவில்லை நண்பா, நண்பா திரும்ப ஒருமுறை சொல்லுங்க நண்பா!!!
(இப்ப சொல்லுங்க நானும் நண்பனும் எப்படின்னு)
***********************
Sen said...
thalai...
nalla comedy...///

மிக்க நன்றி sen!

*************************
தேவ் | Dev said...
Superunga :))

மிக்க நன்றி தேவ்

************************

வித்யா said...
மீதி மூன்று ஐடியாவை யாரிடமாவது டெஸ்ட் செஞ்சு அடுத்த பதிவு எழுதலாமே?
( எல்லாம் முன்னெச்சரிக்கை தான்)///

எழுதிடலாம் :)ஆனா அடுத்த எலி யாருன்னு தெரியலையே!

**********************
J K said...
Super.....

நன்றி JK

**********************

Anonymous said...

எங்கங்க உங்கள வெச்சு காமெடி செஞ்சு இருக்கேன், சாமிக்கு படையல் என்று சாமி முன்னாடி வெக்கிறேம் அது என்னா சாமியா சாப்பிடுது, அது போல உங்களுக்கு என்று போட்டேன் அதனால் அந்த நண்பன் நீங்கள் ஆகிவிடுமா? நீங்க எம்புட்டு அப்பாவி, சிஸ்டர் எம்புட்டு நல்லவங்க. உங்கள போய் கிண்டல் செய்வேனா?//eppidippa ippidiellam?????eppaaaaaaaaaaaaa.......

said...

அந்த சூடான் பொண்ணு கிட்ட டிரைப்பண்ணி பாக்குறேன்னியே என்னா நடத்ததுனு சொல்லவே இல்லை :(

said...

நான் கட்டகாலி பையன்:( (எங்க சைட் அப்படி சொன்னா கல்யாணம் ஆகாதவன் என்று அர்த்தம்)
//

எத்தனை நாளைக்கு மூடி மறைக்க முடியும்..

உனக்கும் சூடான் பொண்ணுக்கும் 12-8-2007லில் நடந்த கல்யாணத்தை..???

அமிரக பதிவர்கள் வாயை திறக்காத மர்மம் என்ன..??

said...

:)

வந்த பிறகு அந்த கருமத்தை எல்லாம் பாத்துக்கலாம் என்ற ப்ரீயா விட்டேன் ராசா...

said...

ha... ha... nice comedy Kusumban... enjoyed a lot :)))

said...

இதனை நீங்களே சுய சுயபரிசோதனை செய்திட்டு மத்தவங்களுக்கு சொல்லணும் இப்படி அநியாமா மத்தவங்களை மாட்டி விடுறீங்களே..இது சரியில்லைப்பா... :)

said...

//வடுவூர் குமார் said...
கல்யாணம் ஆகி மனைவியுடன் இருக்கும் ஒரே அமீரக பதிவர் லொடுக்குக்கு இந்த பதிவு சமர்பனம்.
இந்த ஒரே மட்டும் கொஞ்சம் முன்னாடி போட்டிருந்தீங்கனா....லொடுக்கு உங்க வீடுக்கு ஒட்டகத்தோடு ஆளு அனுப்பியிருப்பார். :-))
புரியவில்லை என்றால் "ஒரே" வேறு இடத்தில் போட்டு பார்க்கவும். :-))
//

:)

said...

யோவ் குசும்பு.. கல்யாணத்துக்கப்பறம் எப்படி நிம்மதியா இருக்கிறதுன்னு(நடக்கிற கதயானுல்லாம் கேக்கப் படாது) நம்ம தோழி திவ்யா ஏதோ உதவிபதிவு போட்டுக்கினு இருக்காங்க..நீனு இப்பிடி கலாய்ச்சி அத கெடுத்து,எங்கிளோட பாவத்த கொட்டிக்க வேணாமுன்னு வேண்டிக்கிறேன்.ஹிஹி... மூனு கற்பனையும் ரொம்ப நல்லாயிருக்கு.. அப்படியே நம்ம ரிக்கோஸ்டயும் கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்கண்ணா.....ஹிஹி..
அன்புடன் உங்கள் ரசிகன்.

said...

ரொம்ப நாளுக்கப்புறம் கண்ணுல தண்ணி வர அளவுக்குச் சிரிச்சேன்யா!

தாங்க்ஸ் குசும்பா!

said...

உங்க பதிவுலேயே புடிச்ச பதிவு இதுதான்னு நினைக்கிறேன்

said...

\"பொய் சொன்னா எளிதில் கண்டு பிடித்துவிடுவார்கள் என்று சொல்லி இருக்கான்... சோ உண்மையாகவே வர்னித்துவிடலாம்.
உனக்கு என்னம்மா பவுடர் பூசின பன்னி குட்டி மாதிரி இருக்க\\

ரசித்து வரிணியுங்கள் ன்னு சொல்லிக் கொடுத்தா, உங்க 'உண்மை விளம்பி நண்பர் இப்படியா மனைவிவை வர்ணிப்பது..........சொதப்பிட்டார்!

செம காமெடியா எழுதியிருக்கிறீங்க குசும்பன்!

said...

// நாகை சிவா said...
வந்த பிறகு அந்த கருமத்தை எல்லாம் பாத்துக்கலாம் என்ற ப்ரீயா விட்டேன் ராசா...//

இது எல்லாம் டூ மச்...

அதென்ன குசும்பன் டமால்னு... இந்த டமால் எதுனால ஏற்பட்ட சத்தம்..:-)

said...

G3 சொல்லி இங்க வந்தேன்.. செம குசும்புங்கோ...

நல்லா ரசிச்சேன்...

மூஜிக்கோட சேலய குடுத்தது டாப்பு அதுக்கு அப்பால வாங்கினது ஆப்பு

said...

அப்பறம் மிஸ்டர்.குசும்பன் இப்போ ஒடம்பு கொஞ்சம் தேவலியா?
:)))))))))))))000

said...

hahahaha.. kalakkiputteenga... Divya ippaththaan re-entry koduththaanga.. athukkull umma kusumba kaattiputtiyale...

said...

மின்னுது மின்னல் said...
//எத்தனை நாளைக்கு மூடி மறைக்க முடியும்..

உனக்கும் சூடான் பொண்ணுக்கும் 12-8-2007லில் நடந்த கல்யாணத்தை..???

அமிரக பதிவர்கள் வாயை திறக்காத மர்மம் என்ன..??///

என்ன பெரிய மர்மம் போன வீக் எண்ட் உன்னை பார்க வந்த பொழுது உன் மனைவி செய்து கொடுத்த அல்வாவை சாப்பிட்டாங்க அப்படியே பாராட்ட வார்த்தை இல்லாம "வாயடைச்சு போய்ட்டாங்க"

அபி அப்பா பேப்பரில் எழுதிகாட்டியது "மின்னல் தியாகிய்யா"

said...

நாகை சிவா said...
:)

வந்த பிறகு அந்த கருமத்தை எல்லாம் பாத்துக்கலாம் என்ற ப்ரீயா விட்டேன் ராசா...///

புலி உங்களுக்கு மூனு கொக்கு கதை தெரியாதா.

வரு முன் காப்போம்:))


****************
இம்சை அரசி said...
ha... ha... nice comedy Kusumban... enjoyed a lot :)))


நன்றிங்க இம்சை அரசி:)

***********************

நிலவு நண்பன் said...
இதனை நீங்களே சுய சுயபரிசோதனை செய்திட்டு மத்தவங்களுக்கு சொல்லணும் இப்படி அநியாமா மத்தவங்களை மாட்டி விடுறீங்களே..இது சரியில்லைப்பா... :)


என்ன நிலவு நண்பன் உங்களை போல் அனுபவஸ்தர்கள் யாரும் வெளியே சொல்ல மாட்டேங்கிறீங்க என்ன செய்வது அதான் இப்படி:))))


*********************


ரசிகன் said...
யோவ் குசும்பு.. கல்யாணத்துக்கப்பறம் எப்படி நிம்மதியா இருக்கிறதுன்னுநம்ம தோழி திவ்யா ஏதோ உதவிபதிவு போட்டுக்கினு இருக்காங்க..நீனு இப்பிடி கலாய்ச்சி அத கெடுத்து,எங்கிளோட பாவத்த கொட்டிக்க வேணாமுன்னு வேண்டிக்கிறேன்.
/////

ரசிகன் நீங்க இம்புட்டு அப்பாவியா? அது என்ன உதவிபதிவா? அவ்வ்வ்வ்வ்

************************

said...

நாமக்கல் சிபி said...
ரொம்ப நாளுக்கப்புறம் கண்ணுல தண்ணி வர அளவுக்குச் சிரிச்சேன்யா!

தாங்க்ஸ் குசும்பா!///

எல்லாம் உங்கள் ஆசிர்வாதம் தள, நன்றி.

********************

delphine said...
நல்ல காமெடி சரவணா!
எப்ப உங்களுக்கு கல்யாணம் ஆச்சு? சொல்லவே இல்லையே!////////


அடுத்தமுறை நடக்கும் பொழுது சொல்லி விடுகிறேன்:)))

*********************

ILA(a)இளா said...
உங்க பதிவுலேயே புடிச்ச பதிவு இதுதான்னு நினைக்கிறேன்///


நன்றி இளா!!

************************


Divya said...
//ரசித்து வரிணியுங்கள் ன்னு சொல்லிக் கொடுத்தா, உங்க 'உண்மை விளம்பி நண்பர் இப்படியா மனைவிவை வர்ணிப்பது..........சொதப்பிட்டார்!

செம காமெடியா எழுதியிருக்கிறீங்க குசும்பன்!//


ரொம்ப நன்றிங்க திவ்யா:)

******************

said...

மங்கை said...
//அதென்ன குசும்பன் டமால்னு... இந்த டமால் எதுனால ஏற்பட்ட சத்தம்..:-)///

வாங்க மங்கை மிக்க நன்றி.
அந்த சத்தமா நம்ம நண்பர் அபி அப்பா அடி வாங்குகிறார் வீட்டில்:)

*************

Arunkumar said...
G3 சொல்லி இங்க வந்தேன்.. செம குசும்புங்கோ...

நல்லா ரசிச்சேன்...

மூஜிக்கோட சேலய குடுத்தது டாப்பு அதுக்கு அப்பால வாங்கினது ஆப்பு/////


ரொம்ப நன்றிங்க அருண் தங்கள் முதல் வருக்கைக்கு.

G3க்கும் நன்றியை சொல்லிடுங்க:)

***************

Arunkumar said...
அப்பறம் மிஸ்டர்.குசும்பன் இப்போ ஒடம்பு கொஞ்சம் தேவலியா?
:)))))))))))))///

எனக்கு என்னாங்க மிக்க நலமாக இருக்கிறேன், இன்னும் கல்யாணம் ஆகலீல்ல!!

********************

ஜி said...
hahahaha.. kalakkiputteenga... Divya ippaththaan re-entry koduththaanga.. athukkull umma kusumba kaattiputtiyale...///

வாங்க ஜி எல்லாம் உங்களால் அருளால் தான் நடந்தது. நீங்கதானே எல்லாத்துக்கும் காரணம்.:)))

said...

சான்ஸே இல்ல குசும்பா.. கலக்குறீங்க.. இதிலிருந்து ஒண்ணு தெரியுது.. உங்க அட்வைஸை ஃபாலோ பண்ணா ஆஸ்பிடல்தான் :)))

Anonymous said...

A片,A片,成人網站,成人影片,色情,情色網,情色,AV,AV女優,成人影城,成人,色情A片,日本AV,免費成人影片,成人影片,SEX,免費A片,A片下載,免費A片下載,做愛,情色A片,色情影片,H漫,A漫,18成人

a片,色情影片,情色電影,a片,色情,情色網,情色,av,av女優,成人影城,成人,色情a片,日本av,免費成人影片,成人影片,情色a片,sex,免費a片,a片下載,免費a片下載

情趣用品,情趣用品,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣

A片,A片,A片下載,做愛,成人電影,.18成人,日本A片,情色小說,情色電影,成人影城,自拍,情色論壇,成人論壇,情色貼圖,情色,免費A片,成人,成人網站,成人圖片,AV女優,成人光碟,色情,色情影片,免費A片下載,SEX,AV,色情網站,本土自拍,性愛,成人影片,情色文學,成人文章,成人圖片區,成人貼圖

情色,AV女優,UT聊天室,聊天室,A片,視訊聊天室

一夜情聊天室,一夜情,情色聊天室,情色,美女交友,交友,AIO交友愛情館,AIO,成人交友,愛情公寓,做愛影片,做愛,性愛,微風成人區,微風成人,嘟嘟成人網,成人影片,成人,成人貼圖,18成人,成人圖片區,成人圖片,成人影城,成人小說,成人文章,成人網站,成人論壇,情色貼圖,色情貼圖,色情A片,A片,色情小說,情色小說,情色文學,寄情築園小遊戲, 情色A片,色情影片,AV女優,AV,A漫,免費A片,A片下載

said...

கலக்கல். என்னை ரொம்ப நேரம் சிரிக்க வைத்த குசும்பன் அவர்களுக்கு நன்றி :)

said...

haa haa samayaa sirichen super